![]() |
| பன்னாட்டு திக்குவாய் விழிப்புணர்வு நாள் |
A positive thought is the first step to victory.
நல்ல சிந்தனையே வெற்றியின் முதல் படி ஆகும்.
இரண்டொழுக்க பண்புகள் :
1.இரக்கமில்லாத மனமும், இயற்கையை அழிக்கும் நாடும் கெடும்.
2.எனவே இல்லாதவர்களுக்கு இரங்குவேன், இயற்கை வளத்தை ஒரு நாளும் அழிக்க மாட்டேன்
பொன்மொழி :
அறிவை தேடுங்கள். அது நம்மை ஆற்றல் உடையவனாக ஆக்குகிறது. அறிவு, தனிமையில் நமது தோழன்; இன்பத்திற்கு வழிகாட்டி; துன்பத்திலோ ஆதரவாளர் - விநோபா
பொது அறிவு :
01.மனித உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் ஆயுட்காலம் எவ்வளவு?
100 - 120 நாட்கள்
100-120 days
02. தனிநபர் ஒருவர் கணக்கு தொடங்க இயலாத வங்கி எது?
இந்திய ரிசர்வ் வங்கி
Indian Reserve Bank
English words :
Delight-pleasure,
defend -protect
தமிழ் இலக்கணம்:
அறிவியல் களஞ்சியம் :
குழந்தை பிறக்கும்பொழுது அதன் உடலில் 300 எலும்புகள் இருக்கும். ஆனால் வளர்ந்து பெரியவனானதும் மொத்தம் 206 எலும்புகளே இருக்கும்.
நமது உடல் எடையில் 14% எலும்புகளால் ஆனது.
அக்டோபர் 22
நீதிக்கதை
ரோமாபுரியில் ஓர் அடிமை தன் முதலாளியை விட்டுத் தப்பிக் காட்டுக்குள் ஓடிவிட்டான். அவன் காட்டில் இருந்தபோது, ஒரு சிங்கம் நொண்டிக் கொண்டே அவன் பக்கத்தில் வந்து காலைத் தூக்கிக் காட்டியது.
அடிமை கொஞ்சமும் பயப்படாமல், அதன் காலைப் பிடித்துப் பார்த்தான். அதில் ஒரு முள் தைத்து இருந்தது. அதைப் பிடுங்கி, எறிந்து காலைத் தடவிக் கொடுத்தான். வலி நீங்கிய சிங்கம் காட்டுக்குள் ஓடி மறைந்தது.
சிறிது காலத்துக்குப் பிறகு, காட்டிலிருந்த அந்த அடிமையைப் பிடித்து, அக்கால வழக்கப்படி அவனுக்கு மரண தண்டனை கொடுத்தார்கள்.
ஒரு சிங்கத்தைப் பல நாட்கள் பட்டினி போட்டு, மரண தண்டனைக்குள்ளானவன் மீது அதை ஏவி விட்டு, அவனைக் கொல்வதுதான் அக்காலத்தில் மரண தண்டனை நிறைவேற்றும் முறையாக இருந்தது.
அதே போல, அந்த அடிமை மீது சிங்கத்தை ஏவினார்கள். சிங்கம் வேகமாக அவனை நோக்கிப் பாய்ந்து வந்தது. அவனருகில் வந்ததும் சற்றே தயங்கி நின்று அவனை உற்றுப் பார்த்தது.
முன்னொரு காலத்தில் தன் காலில் குத்திய முள்ளை எடுத்துவிட்டவன்தான் அவன் என்பதை அறிந்ததும், நாய் போல நின்று விட்டது. அடிமையும் அந்தச் சிங்கத்தை அடையாளம் கண்டுகொண்டு அதைத் தடவிக் கொடுத்தான்.
இந்தக் காட்சியைக் கண்டதும் அரசனும் அங்கு கூடியிருந்த மக்களும் ஆச்சரியப்பட்டனர்.
சிங்கம் ஏன் அவனை அடித்துக் கொல்லவில்லை என்ற விவரத்தை அந்த அடிமை எல்லோருக்கும் சொன்னான்.
இதைக் கேட்டு ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்த அரசன், அந்த அடிமையை விடுதலை செய்து, சிங்கத்தையும் காட்டில் கொண்டுபோய் விட்டுவிடுமாறு உத்தரவிட்டான்.
நீதி :
ஒருவர் செய்த உதவியை எப்பொழுதும் மறக்க கூடாது.
இன்றைய செய்திகள்

No comments:
Post a Comment