Sunday, July 5, 2026

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 06.07.26


   




திருக்குறள்: 

பால் :  பொருட்பால்          

 இயல் : அரசியல்   

அதிகாரம்:45    பெரியாரைத் துணைக்கோடல்

குறள் எண்:443

குறள்: 

அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்.  

பொருள்:

  பெரியோரையே விரும்பித் தமக்குரிய சுற்றத்தினராகப் பெற்றுக் கொள்ளுதல், பெறுதற்கரிய பேறுகளுள் எல்லாம் அரிதான பெரும்பேறு ஆகும்.

பழமொழி :

After a dinner sleep a while

உண்ட களைப்பு தொண்டருக்கும் உண்டு

இரண்டொழுக்க பண்புகள் :.

1.போதும் என்னும் மனமே பொன் செய்யும் மருந்து என்பதால், எனக்கு இருப்பது போதும் என்று இருப்பேன்.

 2. என் ஆசிரியரையும் பெற்றோரையும் கஷ்டப்படுத்தும் எந்த காரியத்தையும் செய்ய மாட்டேன்.

பொன்மொழி : 

வீழ்வது தோல்வியல்ல; வீழ்ந்தே கிடப்பதுதான் தோல்வி.

Thought for the Day :

Success is not final; failure is not fatal. It is the courage to continue that counts.

பொது அறிவு : 

1. சிவகாசி நகரத்தை ""குட்டி ஜப்பான்"" என அழைத்தவர் யார்? 

ஜவஹர்லால் நேரு. 

2. தமிழ்நாட்டில் வற்றாத ஜீவ நதி என்றழைக்கப்படும் ஆறு எது? 

தாமிரபரணி.

English words :

 Construct – Build, கட்டமை

Examine – Inspect, ஆராய்

புவியியலும் சுற்றுசூழலும் :

பூமியில் 7 கண்டங்களும் 5 பெருங்கடல்களும் உள்ளன.உலகின் மிகக் குளிரான கண்டம் – அண்டார்டிகா.

NMMS :

MAT 

பொருந்தாத ஒன்றைக் கண்டுபிடி. 

 (1) (7,13)

 (2) (13,23)

 (3) (31,37) 

 (4) (81,83) 

 விடை: (4) (81,83)

நீதிக்கதை

நீதி கதை: "திருமண விழாவில் கிடைத்த பாடம்"

ஒரு கிராமத்தில் இம்ரான் என்ற சிறுவன் வாழ்ந்து வந்தான். ஒருநாள், அவன் தனது குடும்பத்துடன் உறவினர் திருமணத்திற்கு சென்றான்.

திருமண மண்டபத்தில் வயதான தாத்தா, பாட்டிகள் பலர் நின்றுகொண்டிருந்தனர். ஆனால், இம்ரான் அவர்களைக் கவனிக்காமல், காலியாக இருந்த நாற்காலியில் அமர்ந்து கைப்பேசியில் விளையாடிக் கொண்டிருந்தான்.

அதைப் பார்த்த அவனுடைய அக்கா ஹஸ்னா, "இம்ரான், பெரியவர்கள் நிற்கிறார்கள். நாம் எழுந்து அவர்களுக்கு இடம் கொடுப்பது மரியாதை," என்று கூறினாள்.

உடனே இம்ரான் எழுந்து தனது இருக்கையை ஒரு தாத்தாவுக்கு கொடுத்தான். தாத்தா புன்னகையுடன், "நல்ல பழக்கம்தான் மனிதனை உயர்த்தும். நீ நல்ல பிள்ளையாக வளர்வாய்," என்று ஆசீர்வதித்தார்.

அந்த ஆசீர்வாதத்தைக் கேட்ட இம்ரான் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். அன்று முதல் எங்கு சென்றாலும் பெரியவர்களை மரியாதையுடன் நடத்தவும், அவர்களுக்கு முதலில் இடம் கொடுக்கவும் பழகினான்.

நீதி:

"பெரியவர்களை மரியாதையுடன் நடத்தினால், அவர்களின் ஆசீர்வாதம் நம் வாழ்க்கையை வளமாக்கும்." 

இன்றைய செய்திகள்

06.07.2026

*_தலைப்புச் செய்திகள்_*

🗒️மின்சார அளவீடு  கணக்கு  எடுக்கும் ஊழியர்களுக்கு செல்போன் வாங்க ரூ.10ஆயிரம் வழங்கப்படும் - தமிழக அரசு அறிவிப்பு.

🗒️கீழடியை தொடர்ந்து கரிவலம்வந்தநல்லூரில் பூமிக்கு அடியில் கிடைத்த பழந்தமிழர் நகரம்
சுமார் 13 அடி நீளம் 13 அடி அகலம் கொண்ட சதுர வடிவ கிணற்று சுவரை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

🗒️எல்நினோ எச்சரிக்கை: பெங்களூருவில் குடிநீர் பயன்பாட்டிற்கு கட்டுப்பாடுகள் விதிப்பு.

 *விளையாட்டுச் செய்திகள்*

🏀விம்பிள்டன் டென்னிஸ்: மேடிசன் கீஸ் வெற்றி
அமெரிக்காவின் அமெண்டா அனிசிமோவா, சக நாட்டு வீராங்கனையான மேடிசன் கீஸ் உடன் மோதினார் .

Today's Headlines


🗒️ Tamil Nadu Government announces ₹10,000 for electricity meter readers to purchase mobile phones.

🗒️ Ancient Tamil settlement discovered at Karivalamvanthanallur after Keezhadi. Researchers have unearthed a square-shaped well structure measuring approximately 13 feet in length and 13 feet in width, indicating the presence of an ancient Tamil urban settlement beneath the ground.

🗒️ El Niño alert: Restrictions imposed on drinking water usage in Bengaluru.

Sports News

🏀 Wimbledon Tennis: Madison Keys wins. America's Amanda Anisimova faced fellow American Madison Keys, with Madison Keys emerging victorious.

Covai women ICT_போதிமரம்

Thursday, July 2, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 03.07.2026

சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்




திருக்குறள்: 

 பால் :  பொருட்பால்          

 இயல் : அரசியல்   

அதிகாரம்:45    பெரியாரைத் துணைக்கோடல்

குறள் எண்:442

குறள்: 

உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்.  

பொருள்:

வந்துள்ள துன்பத்தைப் போக்கி, மேலும் துன்பம் நேராமல் காக்கவல்ல பெரியோர்களைத் துணையாகக் கொள்ள வேண்டும்  

பழமொழி :

A young calf knows no fear.

இளங்கன்று பயமறியாது.

இரண்டொழுக்க பண்புகள் :.

1) ஊக்கமுடன் உழைத்தால் ஆக்கம் தானாக வரும். எனவே எனது செயல்களை ஆக்கமுடன் செய்வேன் . 

2) முயன்றால் பட்டாம்பூச்சி முயலாவிட்டால் கம்பளிப்பூச்சி. எனவே சோர்ந்து போகாமல் தொடர்ந்து முயற்சி செய்வேன்.

பொன்மொழி : 

அறிவே மனிதனின் மிகப்பெரிய சக்தி.

Thought for the Day :

Small aim is a crime; have great aim.

பொது அறிவு : 

1. மூன்றாம் பாலின நல வாரியத்தை நிறுவிய முதல் மாநிலம் எது?

தமிழ்நாடு

2. வட்டப்பாறை நீர்வீழ்ச்சி அமைந்துள்ள மாவட்டம் எது? 

கன்னியாகுமரி

English words :

1. Enhance – Improve, மேம்படுத்து.

2. Reduce – Decrease, குறைத்தல்

புவியியலும் சுற்றுசூழலும் :

நம் ஒவ்வொருவரின் அடிப்படை கடமைகள் (Fundamental Duties)

* தேசியக் கொடியை மதித்தல்

* சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல்

* பொதுச் சொத்துக்களைப் பாதுகாத்தல் ஆகும்.

NMMS :

SAT - Social science


ஷாகு என்றால் _____________ என்று பொருள்.                      

(1) போர் முறை              

 (2) நேர்மையானவர்                            

(3) வரி முறை                              

 (4) அஷ்டபிரதான்                                      

விடை:  (2) நேர்மையானவர்

ஜூலை 03

சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்

  • 2008 ஆம் ஆண்டில், இத்தாலியில் உள்ள சுற்றுச்சூழல் அமைப்புகளின் குழு, ரெஸெரோவின் தலைமையில், பிளாஸ்டிக் பைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், உலகளாவிய பிரச்சாரத்தைத் தொடங்கவும் முடிவு செய்தது.
  • சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான வலுவான வழக்கறிஞரான, புகழ்பெற்ற பாதுகாவலர் சர் டேவிட் அட்டன்பரோவின் பிறந்தநாளை ஒட்டி, ஜூலை 3-ஆம் தேதி, முதல் சர்வதேச பிளாஸ்டிக் பை இல்லாத நாளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
  • ஆரம்ப நிகழ்வு வெற்றிகரமாக இருந்தது, முதன்மையாக இத்தாலியில் பிளாஸ்டிக் பைகள் இல்லாத மாற்றுகளை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தியது.

நீதிக்கதை

ராகுல் மற்றும் கோகுல்

ஒரு பள்ளியில்  ராகுல் மற்றும் கோகுல் என்ற இரட்டையர்கள் படித்துக் கொண்டிருந்தனர்.

பள்ளி முடிந்ததும், ராகுல் தினமும் மைதானத்தில் ஓடி விளையாடுவான். கபடி, ஓட்டப்பந்தயம், கயிறு தாண்டுதல் போன்ற விளையாட்டுகளில் ஆர்வமாக பங்கேற்பான்.

ஆனால் கோகுல், பள்ளி முடிந்ததும் வீட்டுக்குச் சென்று கைப்பேசியில் விளையாடிக் கொண்டே இருப்பான். வெளியே சென்று விளையாட அவனுக்கு விருப்பம் இல்லை.

சில மாதங்கள் கழித்து பள்ளியில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. ராகுல் எல்லாப் போட்டிகளிலும் உற்சாகமாக கலந்து கொண்டு பல பரிசுகளை வென்றான். அவன் எப்போதும் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தான்.

கோகுல் மட்டும் சிறிது நேரம் ஓடியவுடன் சோர்வடைந்தான். அப்போது உடற்கல்வி ஆசிரியர், "தினமும் சிறிது நேரம் விளையாடினால் உடல் வலிமையும், நல்ல ஆரோக்கியமும், மன உற்சாகமும் கிடைக்கும்," என்று கூறினார்.

அந்த நாளிலிருந்து கோகுலும் தினமும் நண்பர்களுடன் வெளியில் சென்று விளையாடத் தொடங்கினான். சில வாரங்களிலேயே அவனும் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் மாறினான்.

நீதி: தினமும் விளையாடுவது உடலுக்கு ஆரோக்கியத்தையும், மனதுக்கு மகிழ்ச்சியையும் தரும்.

இன்றைய செய்திகள்

03.07.2026

🗒️துணை மருத்துவ படிப்புகளுக்கான கட்டண விவரம் வெளியீடு
டிப்ளமோ பார்மசி அரசு ஒதுக்கீட்டிற்கு ரூ.25 ஆயிரமும், நிர்வாக ஒதுக்கீட்டிற்கு ரூ.50 ஆயிரமும் கட்டணம் நிர்ணயிக்கப்
பட்டுள்ளது.

🗒️ஓமன், குவைத் நாடுகளுக்கு ஏர் இந்தியா விமான சேவை மீண்டும் தொடக்கம்.

🗒️ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.5 ஆக பதிவு
இந்திய நேரப்படி இரவு 11:27 மணிக்கு, 173 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது.

 *விளையாட்டுச் செய்திகள்* 

🏀  சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் 100 சிக்சர்களை பூர்த்தி செய்த 5-வது இந்தியர் அபிஷேக் சர்மா ஆவார்.

🏀கிரிக்கெட்
இலங்கையில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது இந்திய அணி.

Today's Headlines

🗒️ Fee details released for Allied Health Courses. The fee has been fixed at ₹25,000 for Diploma in Pharmacy under the Government Quota and ₹50,000 under the Management Quota.

🗒️ Air India resumes flight services to Oman and Kuwait.

🗒️ Earthquake strikes Afghanistan; magnitude 5.5 recorded
The earthquake occurred at 11:27 PM (IST) at a depth of 173 km.

🏀 Sports News

🏀 Cricket: Abhishek Sharma has become the 5th Indian cricketer to complete 100 sixes in T20 International cricket.

🏀 Cricket: The Indian team is in Sri Lanka to participate in a two-match Test series.

Covai women ICT_போதிமரம்

 

Wednesday, July 1, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.07.2026




திருக்குறள்: 

பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:45 பெரியாரைத் துணைக்கோடல்

குறள் எண்:441

குறள்:

அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்.

பொருள்:

அறத்தின் தன்மைகளை அறிந்து முதிர்ந்த அறிவுடையவரது நட்பினை, கொள்ளும் திறன் அறிந்து ஆராய்ந்து பெற்றுக் கொள்ளல் வேண்டும்

பழமொழி :

A thief knows a thief.

பாம்பின் கால் பாம்பறியும்.

இரண்டொழுக்க பண்புகள் :.

1) ஊக்கமுடன் உழைத்தால் ஆக்கம் தானாக வரும். எனவே எனது செயல்களை ஆக்கமுடன் செய்வேன் . 

2) முயன்றால் பட்டாம்பூச்சி முயலாவிட்டால் கம்பளிப்பூச்சி. எனவே சோர்ந்து போகாமல் தொடர்ந்து முயற்சி செய்வேன்.

பொன்மொழி : 

தன்னம்பிக்கையும் கடின உழைப்பும் வெற்றியின் இரு சிறகுகள்.

Thought for the Day :

Excellence is a continuous process and not an accident.

பொது அறிவு : 

1. உடல் உறுப்பு தானத்தில் முதன்மையான மாநிலம் எது? 

தமிழ்நாடு. 

2. தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் (SIPCOT) நிறுவப்பட்ட ஆண்டு எது? 

1971

English words :

Substantiate – Prove, நிரூபி.

Transform – Change completely, முழுமையாக மாற்று.

புவியியலும் சுற்றுசூழலும் :

"நமது அடிப்படை உரிமைகள் (Fundamental Rights)

சமத்துவ உரிமை

சுதந்திர உரிமை

மத சுதந்திரத்திற்கான உரிமை

கலாச்சார மற்றும் கல்வி உரிமை
அரசியலமைப்புக்குட்பட்டு தீர்வு காணும் உரிமை போன்றவை ஆகும்."

NMMS :

SAT - SOCIAL

சரியான இணையைத் தேர்ந்தெடு. 

(1) மன்சப்தாரி முறை - அக்பர் (

2) ஜப்தி முறை - ஔரங்கசீப் 

(3) துசுக் - இ - பாபரி - கட்டிடக் கலை (

4) இரண்டாம் பானிபட் போர் - 1526. 

விடை : (1) மன்சப்தாரி முறை - அக்பர்

ஜூலை 02

உலக விளையாட்டுத் துறை செய்தியாளர்கள் தினம்

சாதி, மதம், இனம், நாடு, மொழி எல்லாவற்றையம் கடந்து மக்களை விளையாட்டால் ஒன்று சேர்க்கும் பணியைச் செய்யும் விளையாட்டு பத்திரிகையாளர்களை கவுரவிக்கும் நாள் இன்று.

நீதிக்கதை

 "துளி துளியாக வந்த செல்வம்"


ஒரு சிறிய கிராமத்தில் இரண்டு விவசாயிகள் வாழ்ந்தனர். ஒருவரின் பெயர் சபரி, மற்றொருவரின் பெயர் கிரி. சபரி தனது வீட்டின் கூரையிலிருந்து வரும் மழைநீரை ஒரு பெரிய தொட்டியில் சேமித்தார். கிரி, "மழைநீர் எப்போதும் வரும், அதை ஏன் இவ்வளவு செலவு செய்து, தொட்டி கட்டி சேமிக்க வேண்டும் ?" என்று சிரித்தார். 

சில மாதங்களுக்குப் பிறகு கடும் வறட்சி ஏற்பட்டது. கிணறுகள் வற்றின. குடிநீருக்குக் கூட மக்கள் சிரமப்பட்டனர்.


அப்போது சபரி சேமித்திருந்த மழைநீரைத் தனது குடும்பத்திற்கும், அண்டை வீட்டாருக்கும், தனது பயிர்களுக்கும் பயன்படுத்தினார். கிரி வயலுக்கு தண்ணீர் இல்லாமல் பயிர்கள் வாடின. அப்போது கிரி தனது தவறை உணர்ந்து, "அடுத்த மழைக்காலம் முதல் நானும் மழைநீரைச் சேமிப்பேன்" என்று உறுதி எடுத்தார்.


நீதி:

"மழைநீரைச் சேமிப்போம்; நாளைய தண்ணீர் பற்றாக்குறையைத் தவிர்ப்போம்.”

இன்றைய செய்திகள்

02.07.2026

🗒️சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு; 4, 5-ம் தேதிகளில் நடைப்பெற உள்ள தேர்வுகளில் 2.29 லட்சம் ஆசிரியர்கள் எழுத உள்ளார்கள்.

🗒️ஜப்பான் பிரதமர் இந்தியாவில் 3 நாள் சுற்றுப்பயணம்; வர்த்தகம், முதலீடு தொடர்பாக ஆலோசனை.

🗒️ரோப்​பிய நாடு​களான போலந்​து, ஜெர்​மனி, சுவிட்​சர்​லாந்​து, பிரான்​ஸ், டென்​மார்க் நாடு​களில் கடும் வெயில் கொளுத்தி வருகிறது. அனல் காற்று வீசுவ​தால் கடந்த 21-ம் தேதி முதல் தற்​போது வரை 1,300 பேர் உயி​ரிழந்​துள்​ளனர் என உலக சுகா​தார அமைப்பு தெரி​வித்​துள்​ளது.

 விளையாட்டுச் செய்திகள் 

🏀இந்திய ஜூனியர் ஆக்கி அணியில் கோவில்பட்டி வீரர்
இது தமிழக ஆக்கி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

🏀விம்பிள்டன் டென்னிஸ்: அரினா சபலென்கா வெற்றி.

Today's Headlines

🗒️ All arrangements have been completed for the Special Teacher Eligibility Test. The examination will be held on the 4th and 5th, with 229,000 teachers expected to appear.

🗒️ The Prime Minister of Japan has begun a three-day visit to India to hold discussions on trade and investment.

🗒️ A severe heatwave continues across the European countries of Poland, Germany, Switzerland, France, and Denmark. According to the World Health Organization (WHO), 1,300 people have died since the 21st due to extreme heat and hot winds.

🏀 Sports News

🏀 A player from Kovilpatti has been selected for the Indian Junior Hockey Team. This has brought great joy to hockey fans across Tamil Nadu.

🏀 Wimbledon Tennis: Aryna Sabalenka secured a victory.

Covai women ICT_போதிமரம்

 

Tuesday, June 30, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01.07.2026

 

கல்பனா சாவ்லா




திருக்குறள்: 

பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:44 குற்றங்கூறாமை

குறள் எண்:440

குறள்:
காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல்.

பொருள்:

தமது விருப்பத்தைப் பகைவர் அறிந்து கொள்ள முடியாமல் நிறைவேற்றுபவரிடம் அந்தப் பகைவரின் எண்ணம் பலிக்காமற் போய்விடும் .

பழமொழி :

A little string will tie a little bird

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

இரண்டொழுக்க பண்புகள் :.

1) ஊக்கமுடன் உழைத்தால் ஆக்கம் தானாக வரும். எனவே எனது செயல்களை ஆக்கமுடன் செய்வேன் . 

2) முயன்றால் பட்டாம்பூச்சி முயலாவிட்டால் கம்பளிப்பூச்சி. எனவே சோர்ந்து போகாமல் தொடர்ந்து முயற்சி செய்வேன்.

பொன்மொழி : 

வெற்றி பெறுவதற்கு முன் தோல்வியை சந்திக்கத் தயார் ஆகுங்கள்.

Thought for the Day :

If you want to shine like the sun, first burn like the sun.

பொது அறிவு : 

1. தமிழ்நாட்டில் அதிகமாக மாங்குரோவ் காடுகள் காணப்படும் மாவட்டம் எது? 

கடலூர். 

2. தமிழ்நாடு எத்தனை கி.மீ கடற்கரை பகுதியைக் கொண்டிருக்கிறது? 

1076 கி.மீ.

English words :

Implement – Execute, செயல்படுத்து.

Negotiate – Discuss to reach agreement, பேச்சுவார்த்தை நடத்து.

புவியியலும் சுற்றுசூழலும் :

நாடுகள் (Countries)
ஒரு நாடு என்பது தனித்த அரசாங்கம் கொண்ட அரசியல் பிரதேசம்.
உலகில் தற்போது சுமார் 195 நாடுகள் உள்ளன (193 ஐ.நா. உறுப்பினர் நாடுகள் + 2 பார்வையாளர் நாடுகள்).
ஒவ்வொரு நாட்டிற்கும் தனித்த கொடி, தலைநகர், மொழி மற்றும் கலாச்சாரம் உள்ளது.

NMMS :

SAT - SOCIAL SCIENCE

பாண்டிய அரசர்களின் படைத்தளபதிகளின் பட்டங்கள் 

(1) மாறன் - எயினன் 

(2) மாறன் - ஆதித்தன் 

(3) சாத்தன் - கணபதி 

(4) மூர்த்தி - எயினன் 

விடை: மாறன் - ஆதித்தன்

ஜூலை 01

தேசிய மருத்துவர்கள் தினம் (National Doctors' Day

பிதான் சந்திர ராய்


இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சூலை திங்கள் முதல் தேதியை தேசிய மருத்துவர்கள் நாளாகக் கொண்டாடுகின்றனர். 1991 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.

வரலாற்று புகழ்மிக்க மருத்துவரும் மேற்கு வங்காளத்தின் இரண்டாவது முதலமைச்சருமான மருத்துவர் பிதான் சந்திர ராய் நினைவாக தேசிய மருத்துவர்கள் நாள் கொண்டாடப்படுகிறது. 1882 சூலை திங்கள் முதல் தேதி பிறந்த அவர், சரியாக 80 ஆண்டுகள் கழித்து அதே தேதியில் மறைந்தார். இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதை 4, பிப்ரவரி 1961 ஆம் ஆண்டு பெற்றார். இவரின் நினைவாகவும், மருத்துவர்களின் சேவையை பாராட்டவும் இந்நாளானது இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.சமூகம் மற்றும் தனிமனிதருக்கு மருத்துவர்கள் செய்யும் சேவையை அங்கீரிக்க உருவாக்கப்பட்டதே தேசிய மருத்துவர்கள் தினம் (National Doctors' Day) ஆகும்.


கல்பனா சாவ்லா அவர்களின் பிறந்தநாள்

  • விண்வெளிக்கு பயணம் செய்த இந்தியாவின் முதல் பெண்மணி என்ற பெருமைக்குரிய கல்பனா சாவ்லா இந்த நாட்டில் உள்ள அனைத்து பெண்களுக்கும் பெரிய உதாரணமாக உள்ளவர். ஒரு சாதாரணப் பள்ளியில் படித்து, பலர் வியக்கும்படி தன் கனவுகளை நினைவாக்கி பலருக்கும் எடுத்துகாட்டாக இருந்து வாழ்ந்துக் காட்டியவர்.
  • சாதனைகள்:

    • நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தினால் அவரது சிறப்புமிகு சேவைக்காக நினைவுப் பதக்கம் வழங்கப்பட்டது.
    • இந்திய மாணவர்கள் சங்கத்தால் அவரின் பெயரில் “கல்பனா சாவ்லா மெமோரியல் ஸ்காலர்சிப்பும்” வழங்கப்படுகின்றது.
    • அவரின் புகழின் உச்சகட்டமாக 2001-ம் ஆண்டு விண்வெளியில் கண்டுபிடிக்கப்பட்ட சிறுகோளிற்கு கல்பனா சாவ்லாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    விண்வெளிப் பயணம்:

    • விமானம் மற்றும் கிளைடர்களை 1988-ல் மற்றவர்களுக்கு பயணிக்க கற்று கொடுப்பதற்கான சான்றிதழ் மற்றும் அவர் பயணிப்பதற்கான உரிமத்தை பெற்றார் விண்வெளி வீரர் பயிற்சி குழுவில் 1995-ல் நாசா சென்றார்.
    • கல்பனாவின் முதல் விண்வெளிப் பயணம் 1997-ம் ஆண்டு நவம்பர் 19-ம் தேதி நடைபெற்றது. பூமியை சுமார் 252 முறை சுற்றி விண்கலத்தில் 10 மில்லியன் தொலைவு பயணம் செய்தார்.
    • இவரின் இரண்டாவது விண்வெளிப் பயணம் 2003-ம் ஆண்டு நிகழ்ந்தது. கொலம்பியா விண்கலம் கல்பனா சாவ்லாவுடன் ஏழு பேர் பயணித்தனர். விண்வெளியில் தனது ஆராய்ச்சிகளை முடிப்பதற்கு பதினாறு நாட்கள் ஆனது.
    • விண்வெளியில் பயணம் செய்த முதல் பெண்மணி என்ற பெருமையை பெற்றார்.

நீதிக்கதை

ஒரு நாள் காலையில் சேவலானது மரத்தின் மீது அமர்ந்து பலமுறைக் கூவிக் கொண்டே இருந்தது. சேவல் கூவும் சத்தத்தைக் கேட்ட நரி சேவல் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தது. நரியோ மிகுந்தப் பசியுடன் இருந்ததால் அந்த சேவலை பிடித்து சாப்பிட ஆசை ஏற்பட்டது. ஆனால் சேவலோ மரத்தின் மீது இருந்ததால் நரியால் மரத்தில் ஏறிப்பிடிக்க முடியவில்லை. 

சேவலைப் பார்த்து, சகோதரனே!, வணக்கம். உனக்கு ஒரு நல்ல செய்தி. இனி பறவைகளுக்கும், மிருகங்களுக்கும் சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டுவிட்டது. நீ கொஞ்சம் கீழே வந்தால் இதை பற்றித் தெளிவாக பேசுவோம் என்றது. நரியின் தந்திரப் பேச்சைச் சேவல் புரிந்து கொண்டு தூரத்தில் எதையோ பார்ப்பதைப் போல் தலையைத் தூக்கிப் பார்த்தது. 

அதைக் கண்ட நரி, என்ன சகோதரா!, எதையோ அடிக்கடி எட்டிப் பார்க்கிறாயே. அங்கே என்ன இருக்கிறது? என்று கேட்டது. அதற்குச் சேவல், அங்கே சில வேட்டை நாய்கள் வருவது மாதிரி தெரிகிறது. வேட்டை நாய்கள் தானா என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்றது. வேட்டை நாய்கள் என்றதும் நரி வேகவேகமாக சரி, சரி நான் அப்புறமாக வந்து உன்னிடம் பேசுகிறேன் என்று கூறி கிளம்பியது. 

சேவல், அருமை சகோதரா, போகாதே, நான் இப்பொழுதே கீழே இறங்கி வருகிறேன். ஏன் நாய்களைக் கண்டு பயப்படுகிறாய்? இப்பொழுது தானே நீ சொன்னாய், எல்லோருக்கும் இடையே சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது என்று கேட்டது சேவல். அதற்கு நரி அந்த ஒப்பந்தத்தைப் பற்றி நிறைய பேர் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். ஒருவேளை அந்த நாய்களுக்குத் தெரியாமல் இருந்தால், என் நிலைமை என்னவாகும்? அதனால் நான் போகிறேன் என்று சொல்லிவிட்டு நரி ஒரே ஓட்டமாக ஓடி காட்டுக்குள் மறைந்தது. சேவல் யாரை ஏமாற்றப் பார்த்தாய், உன்னுடைய கெட்டிக்காரத் தனமானப் பொய்கள் என்னிடம் பலிக்காது என்று கூறி சிரித்தது. 


நீதி :

அடுத்தவரை ஏமாற்ற நினைத்தால் நாம்தான் ஏமாறுவோம்.

இன்றைய செய்திகள்

01.07.2026

🗒️ சிறப்பாக பணியாற்றிய கலெக்டர்கள், காவல்துறை அதிகாரிகளுக்கு விருதுகள் வழங்கியனார் முதல் அமைச்சர் ஜோசப் விஜய்.

🗒️ஜூலை 1 முதல் ஆதாரில் மின்னஞ்சல் முகவரியை இலவசமாக புதுப்பிக்கலாம். பொதுமக்களின் டிஜிட்டல் தேவைகளை எளிதாக்கும் வகையில், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

🗒️ராணுவத்தின் புதிய தலைமை தளபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார் தீரஜ் சேத்.

🗒️பரதநாட்டியத்தில் ராபா உலக சாதனை புத்தகத்தில்  இடம்பிடித்த  6 வயது சிறுமி ரஜீவன் கம்சத்வனி.

 விளையாட்டுச் செய்திகள் 

🏀ஆசிய விளையாட்டு போட்டி: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அறிவிப்பு. ஆசிய விளையாட்டு போட்டிகள் ஜப்பானில் நடைபெற உள்ளது.

Today's Headlines

🗒️ Chief Minister Joseph Vijay presented awards to Collectors and Police officers for their outstanding service.

🗒️ From July 1, Aadhaar holders can update their email address free of cost. The Unique Identification Authority of India (UIDAI) has announced this initiative to make digital services more convenient for the public.

🗒️ Dheeraj Seth has assumed charge as the new Chief of the Army.

🗒️ Six-year-old Rajeevan Kamsathvani has secured a place in the RABA World Records for excellence in Bharatanatyam.

Sports News

🏀 Asian Games: The Indian Women's Cricket Team has been announced for the upcoming Asian Games, which will be held in Japan.

Covai women ICT_போதிமரம்