Thursday, December 23, 2021

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 24.12.21

 திருக்குறள் :

பால்:பொருட்பால்

இயல்: அரணியல்

அதிகாரம்: நாடு

குறள் எண் : 734

குறள்:
உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு.

பொருள்:
மிகுந்த பசியும், நீங்காத நோயும், வெளியில் இருந்து வந்து தாக்கும் பகையும் இல்லாத நாடுதான் சிறந்த நாடு எனப் பாராட்டப்படும்.

பழமொழி :

Early sow, early now


பருவத்தே பயிர் செய்

இரண்டொழுக்க பண்புகள் :

1. காடழிந்தால் மழை கெடும் எனவே இயற்கை போற்றி பாதுகாப்பேன். 

2. மழை அழிந்தால் விவசாயம் கெடும், விவசாயம் கெட்டால் உணவு அழியும். எனவே விவசாயம் பேணி பாதுகாப்பேன்

பொன்மொழி :

இறக்கத்தான் பிறந்தோம். வாழும் வரை இரக்கத்தோடு இருப்போம்.

அன்பு சொற்களில் அல்ல; வாழ்க்கையில் வடிவம் பெறுகின்றது

_______அன்னை தெரேசா



பொது அறிவு :

1.தேசிய திட்டக் குழுவின் தலைவர் யார்? 

பிரதமர். 

2. தீப்பற்றாத மரம் எது? 

செம்மரம்.

English words & meanings :

Additional Assistance - கூடுதல் உதவி, 

Adventure Sports - சாகச விளையாட்டு

ஆரோக்ய வாழ்வு :

வெள்ளரிக்காயை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் அதிலுள்ள சுண்ணாம்புச்சத்து ரத்தக்குழாய்களைத் தளர்த்தி,உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.

கணினி யுகம் :

Ctrl + Shift + 9 - Unhide the rows. 

Ctrl + 9 - Hide the selected rows

டிசம்பர் 24

 ஈ. வெ. இராமசாமி அவர்களின் நினைவுநாள்




பெரியார் என்று பரவலாக அறியப்படும் ஈ. வெ. இராமசாமி (இயற்பெயர்: ஈ. வெ. இராமசாமி[1] , ஆங்கில மொழி: E.V. Ramasamyசெப்டம்பர் 171879 - திசம்பர் 241973) சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதியை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர். தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் திராவிடர் கழகத்தினைத் தோற்றுவித்தவர்.[2] இவருடைய சுயமரியாதை இயக்கமும்பகுத்தறிவுவாதமும் மிகவும் புகழ்பெற்றது. இவர் வசதியான, முற்பட்ட சாதியாகக் கருதப்பட்ட நாயக்கர் என்ற சமூகத்தில் பிறந்திருந்தும், சாதிக் கொடுமை, தீண்டாமைமூடநம்பிக்கைவர்ணாஸ்ரம தர்மம் கடைப்பிடிக்கும் பார்ப்பனியம், பெண்களைத் தாழ்வாகக் கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து மக்களுக்காகக் குரல் கொடுத்தார்.இம்மனநிலை வளரக் காரணமானவை மக்களிடையே இருக்கும் மூடநம்பிக்கையும், அந்த மூடநம்பிக்கைக்குக் காரணமாக இருக்கும் கடவுள் நம்பிக்கையும், கடவுள் பெயரால் உருவான சமயங்களும் தான் என்பதைக் கருத்தில் கொண்டு ஈ. வெ. ரா, தீவிர இறைமறுப்பாளாராக இருந்தார். இந்திய ஆரியர்களால், தென்னிந்தியாவின் பழம்பெருமை வாய்ந்த திராவிடர்கள் பார்ப்பனரல்லாதார் என்ற ஒரு காரணத்தினால் புறக்கணிக்கப்படுவதையும், அவர்களால் திராவிடர்களின் வாழ்வுச் சுரண்டப்படுவதையும் இராமசாமி எதிர்த்தார். அவர் தமிழ்ச் சமூகத்திற்காகச் செய்த புரட்சிகரமான செயல்கள், மண்டிக்கிடந்த சாதிய வேறுபாடுகளைக் குறிப்பிடத்தக்க வகையில் அகற்றியது. தமிழ் எழுத்துகளின் சீரமைவுக்கு இராமசாமி குறிப்பிடத்தக்கப் பங்காற்றியுள்ளார்.


எம். ஜி. ஆர்  அவர்களின் நினைவுநாள்



எம். ஜி. ஆர் என்ற பெயரில் புகழ் பெற்ற, மருதூர் கோபாலன் மேனன் இராமச்சந்திரன் (எம். ஜி. இராமச்சந்திரன், சனவரி 17, 1917 – திசம்பர் 24, 1987), தமிழ்த் திரைப்பட நடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டின் தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சராகவும் இருந்தவர்.

எம். ஜி. சக்கரபாணிக்குத் தம்பியான இவர், தொடக்க காலத்தில் நாடகங்களில் நடித்தார்.[1] காந்தியடிகளின் கருத்துகளால் ஈர்க்கப்பெற்று இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார்.[2] 1936 இல் சதிலீலாவதி என்ற திரைப்படம் மூலம் தமிழக திரைத்துறையில் அறிமுகமாகி, கதாநாயகனாக மாறிய பிறகு, அறிஞர் அண்ணாவின் அரசியல் கருத்துகளில் ஈர்க்கப்பெற்று திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். அண்ணாவின் மறைவுக்குப்பிறகு, கருணாநிதியால் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி, தேர்தலில் நின்று தொடர்ந்து மூன்று முறை தமிழகத்தில் வெற்றிபெற்று முதலமைச்சரானார்.

நீதிக்கதை

அன்பை வெளிப்படுத்தும் விதம்

ஒரு நாள் வகுப்பறையில் ஆசிரியை மாணவர்களிடம், அன்பை வெளிப்படுத்தும் எதையும் கொண்டு வாருங்கள் என்று கூறி நான்கு மாணவிகளை அனுப்பினார். திரும்பி வந்த மாணவிகளில் ஒரு மாணவியின் கைகளில் மலர் இருந்தது. இன்னொரு மாணவியிடம் வண்ணத்துப் பூச்சி இருந்தது. மற்றொரு மாணவியிடம் ஒரு குஞ்சுப்பறவை இருந்தது. 

நான்கு மாணவிகளில் முதலில் கிளம்பிப்போன மாணவி கடைசியில் வெறும் கையுடன் திரும்பி வந்தாள். ஆசிரியை அந்த மாணவியிடம் நீ ஏன் எதையும் கொண்டு வரவில்லை என்று கேட்டார்.

அதற்கு அந்த மாணவி, நானும் மலரைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. செடியிலேயே இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன். வண்ணத்துப் பூச்சியைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. சுதந்திரமாய்ப் பறக்கட்டும் என்று விட்டுவிட்டேன். குஞ்சுப் பறவையைப் பார்த்தேன். தாய்ப்பறவை தேடுமென்று விட்டுவிட்டேன் என்று பதில் கூறினாள். 

மாணவி கூறிய பதிலைக் கேட்டவுடன் ஆசிரியை அந்த மாணவியை அணைத்துக் கொண்டார். அன்பு என்றால் இது தான். ஒன்றுமே கொடுக்க வேண்டாம். எதையுமே பறிக்காமல் இருந்தால் அதுவே போதும் என்றார்.

இன்றைய செய்திகள்

24.12.21

◆மஞ்சப்பை அவமானம் அல்ல; சுற்றுச்சூழலுக்கு ஏற்றது. தமிழகத்தில் பிஸாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று முதல்வர் வலியுறுத்தல்.

◆வேலூரில் இருந்து 50 கி.மீ. மேற்கு-வடமேற்கு பகுதியில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. 

◆காய்கறி விலை முதல் பொருளாதார நிலை வரையிலான தகவல்களுடன் அரசின் முக்கிய திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளை தெரிந்துக் கொள்ளும் வகையில் ’முதலமைச்சர் தகவல் பலகை’யை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.

◆டிசம்பர் 25 முதல் ஜனவரி 2 வரை பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை: பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தகவல்.

◆தேசிய நெடுஞ்சாலைகளில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

◆பூஸ்டர் டோஸ்களால் மட்டும் கரோனா பெருந்தொற்றை ஒழித்துவிட முடியாது; தடுப்பூசி சமநிலை வேண்டும்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை.

◆ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: தென்கொரிய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

◆புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ்- தெலுங்கு டைட்டன்ஸ் ஆட்டம் 'டை'.

Today's Headlines

 🌸The yellow bag is not a shame;  Suitable for the environment.  Chief Minister's insistence on the complete abolition of the use of plastics in Tamil Nadu.

 🌸 There was a mild earthquake in the west-northwest region, a place 50 km from Vellore 

 🌸Chief Minister M K Stalin inaugurated the 'Chief Minister's Information Board' to keep abreast of important government programs and announcements, including information on vegetable prices and economic status.

 🌸 Half-yearly leave for school students from December 25 to January 2: Information from the Minister of School Education.

🌸 Central Road Transport and Highways Minister Nitin Gadkari have said that steps are being taken to set up charging stations for electric vehicles on national highways.

 🌸 Booster doses alone cannot eliminate corona infection;  Vaccine should be in balance -  warning by World Health Organization

 🌸Asian Champions Trophy Hockey: South Korean team won the title.

 🌸Pro Kabaddi League: Tamil Talawas- Telugu Titans Game 'Tie'.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Wednesday, December 22, 2021

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 23.12.21

திருக்குறள் :

பால்:பொருட்பால்

இயல்: அரணியல்

அதிகாரம்: நாடு

குறள் எண்: 732

குறள்:
பெரும்பொருளாற் பெட்டக்க தாகி அருங்கேட்டால்
ஆற்ற விளைவது நாடு

பொருள்:
பொருள் வளம் நிறைந்ததாகவும், பிறர் போற்றத் தக்கதாகவும், கேடற்றதாகவும், நல்ல விளைச்சல் கொண்டதாகவும் அமைவதே சிறந்த நாடாகும்.

பழமொழி :

Beware of him that telleth tales.

 புறங்கூறி திரிபவனிடம் எச்சரிக்கையாக இரு .

இரண்டொழுக்க பண்புகள் :

1. காடழிந்தால் மழை கெடும் எனவே இயற்கை போற்றி பாதுகாப்பேன். 

2. மழை அழிந்தால் விவசாயம் கெடும், விவசாயம் கெட்டால் உணவு அழியும். எனவே விவசாயம் பேணி பாதுகாப்பேன்

பொன்மொழி :

அனைத்தையும் பொறுப்பவளாக இருக்கும் பூமிதேவியைப் போன்று, நீங்களும் பொறுமையுடன் இருந்தால் உலகமே உங்கள் காலடியில் அமரும்....விவேகானந்தர்

பொது அறிவு :

1. இந்தியாவில் முதல் வங்கி தொடங்கப்பட்ட ஆண்டு எது? 

1806. 

2.சாலை போக்குவரத்து சட்டம் எந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது? 

1989.

English words & meanings :

Acid Test - கடுஞ்சோதனை, 

Acrophobia - அதிக உயரம் குறித்த பயம் 

ஆரோக்ய வாழ்வு :

பாகற்காய் சுவாச கோளாறுகள் ஏற்படுவதை தவிர்க்கும்.கல்லீரலை வலுப்படுத்தும்.நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். பருக்கள் வருவதை தடுக்கும்.




கணினி யுகம் :

MS excel short keys: 

Ctrl + Shift + 0 - Unhide the columns.

 Ctrl + 0 - Hide the selected columns


நீதிக்கதை


மூன்று புதிர்!

ஒரு ஊரில் இரண்டு சகோதரர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவன் பரம ஏழை. மற்றொருவன் பணக்காரன். பணக்காரனிடம் அவன் தம்பியாகிய ஏழை ஒரு பசுவைக் கேட்டான். அண்ணன் பசுவைக் கொடுப்பதற்கு முன், என் நிலத்தில் நீ தினமும் வந்து ஓராண்டு உழைக்க வேண்டும்! என்றான். அவனும் ஒத்துக் கொண்டான். 

பசுவை வாங்கிக் கொண்ட இளையவன், தான் ஒத்துக்கொண்டது போல் அண்ணன் நிலத்தில் ஓராண்டு முழுவதும் உழைத்தான். ஓராண்டு முடிந்தது. தம்பி அண்ணனிடம் வேலைக்குச் செல்லவில்லை. மறுநாளே பசுவை திருப்பிக் கேட்டான் அண்ணன். ஓராண்டு உன் நிலத்தில் உழைத்தேன் அல்லவா பசு எனக்குத்தான்! என்றான். மூத்தவன், ஓராண்டு காலம் நீ என் பசுவிடம் பால் கறந்து பலனை அனுபவித்தாய் அல்லவா? அதனால் இரண்டிற்கும் சரியாகிவிட்டது! என்றான். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரும் ஒரு பிரபுவிடம் சென்றனர்.

வழக்கை விசாரித்த பிரபு, அவர்கள் இருவருக்கும் மூன்று புதிர்களைக் கொடுத்து, இதற்குச் சரியான பதில்களை யார் சொல்கிறீர்களோ அவர்களுக்குத்தான் பசு! என்று கூறி புதிரைச் சொன்னார். முதல் புதிர், மனிதனுடைய வயிற்றை நிரப்புவது எது? இரண்டாவது புதிர், மனிதனுக்கு மிக மகிழ்ச்சியைத் தருவது எது? மூன்றாவது புதிர், அதிக விரைவாகச் செல்வது எது? இந்த மூன்று புதிர்களுக்கும் நாளை விடை கூறுங்கள் என்றார். இருவரும் வீட்டிற்கு வந்து மூளையைக் குழப்பி சிந்தித்தனர்.

மறுநாள் காலை பிரபுவைச் சந்தித்தனர். மூத்தவனைப் பிரபு அழைத்து, என் புதிருக்கு விடை சொல் என்றார். மேன்மை தங்கிய பிரபு அவர்களே! ஒரு மனிதனுடைய வயிற்றை நிரப்புவது எது என்று கேட்டீர்கள். அதற்குச் சரியான விடை பன்றிக்கறி. கொழுத்த பன்றிக் கறியைச் சாப்பிட்டால் வயிறு நிரம்பும். பல மணி நேரம் பசிக்காது. இரண்டாவது, மனிதனுக்கு மகிழ்ச்சியைத் தருவது எது என்று கேட்டீர்கள். அதற்கு விடை பணம். பணம் பெட்டி நிறைய இருக்கும்போது எவ்வளவு மகிழ்ச்சி ஏற்படுகிறது தெரியுமா? பணம் குறையக் குறைய மகிழ்ச்சியும் குறையும்.

மூன்றாவதாக, அதிவிரைவாகச் செல்வது எது என்று கேட்டீர்கள். அதுற்குச் சரியான விடை வேட்டை நாய். வேட்டை நாய்கள் விரைவாக ஓடி முயல்களைக்கூட பிடித்து விடுகின்றன என்று சொல்லிவிட்டு பிரபுவைப் பார்த்து, பசு எனக்குத்தானே! என்று கேட்டான். முட்டாளே! நீ சொன்ன அனைத்தும் அபத்தமான பதில்கள்! என்றார் பிரபு. 

பிரபு! இளையவனை அழைத்தார். புதிருக்கு விடை சொல் என்றார். பிரபு! நம் வயிற்றை நிரப்புவது பூமி. பூமி தாயிடம்தான் நாம் உண்ணும் தானியங்களும், கிழங்குகளும் கிடைக்கின்றன. அந்த உணவால்தான் விலங்குகளும், பறவைகளும், வாழ்கின்றன. இரண்டாவதாக ஒரு மனிதனுக்கு அதிக மகிழ்ச்சி தருவது தூக்கம். தூக்கத்திற்காக விலையுயர்ந்த செல்வத்தையும் மனிதன் விட்டுவிடுவான்.

மூன்றாவது, அதிவிரைவாகச் செல்வது நமது சிந்தனை ஓட்டம். அது நாம் விரும்பியபோது விரும்பிய இடத்தில் கொண்டு போய்ச்சேர்க்கும்! இவையே சரியான விடைகள். இந்தப் பசு உனக்கே! என்று சொல்லி பசுவை இளையவனுக்கு கொடுத்தார். 

நீதி :
அறிவால் அனைத்தையும் வெல்லலாம்.

இன்றைய செய்திகள்

23.12.21


◆தமிழகத்தில் முதல் முறையாக, உதகை மலைப்பாதை நெடுஞ்சாலையில் நிலச்சரிவுகள் மற்றும் மண் சரிவைத் தடுக்க பசுமை தொழில்நுட்ப முறையான மண் உறுதிப்படுத்தும் திட்டம் தொடக்கம்.


◆பள்ளிகளில் மாணவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய ஆலோசனைக் குழுக்களை ஏற்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

◆தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்படாததால் புதிய தேர்வுக்கான அறிவிப்பு எப்போது வெளியாகும் என இடைநிலை ஆசிரியர் பயிற்சியை முடித்தவர்களும் பிஎட் பட்டதாரிகளும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

◆முதல்வரின் விரிவான மருத்துவக்காப்பீட்டுத் திட்டப் பயனாளிக்கான குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72ஆயிரத்தில் இருந்து, ரூ.1.20 லட்சமாக உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

◆நடுவானில் பாதையை மாற்றிச் சென்று தாக்கும்திறன் கொண்ட ‘பிரலே‘ ஏவுகணை: ஒடிசா மாநிலத்தில் உள்ள டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் மையத்தில் இருந்து  வெற்றிகரமாக சோதனை.

◆டெல்லியில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவு கரோனா பாதிப்பு எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.

◆மியான்மரின் கச்சின் மாகாணத்தில் உள்ள பச்சைக் கற்கள் சுரங்கத்தில்  ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 100 பேரைக் காணவில்லை. இதுவரை ஒருவர் உயிரிழந்ததுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

◆2021ம் ஆண்டில் மட்டும் கரோனா வைரஸால் 33 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் உலகளவில் உயிரிழந்துள்ளனர், 2022ம் ஆண்டில் கரோனாவுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் தெரிவித்துள்ளார்.


◆ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: வெண்கலம் வென்றது இந்தியா.

◆விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டி: அரைஇறுதிக்கு தகுதி பெற்றது சவுராஷ்டிரா.
Today's Headlines

🌸 The Launching of Green Technology System for Soil Stabilization Project is started in Udagai Hill ways at Tamil Nadu for the first time in  to prevent landslides and soilslides 


 🌸 The Department of School Education has ordered that advisory committees should be set up to ensure the safety of students in schools.

🌸 Intermediate teacher trainees and B.Ed graduates are eagerly awaiting the announcement of the new examination as no teacher eligibility test has been conducted in Tamil Nadu for the last 2 years.

 🌸The annual family income of the beneficiary of the Chief Minister's Comprehensive Medicare Scheme has been increased from Rs. 72,000 to Rs. 1.20 lakhs.

 🌸 Intermittent intercontinental ballistic missile is tested successfully from Dr. ABJ Abdul Kalam missile centre in Orissa .

🌸 The number of corona infections in Delhi has also increased to a level not seen in the last 6 months as the number of the number of Corona infections also has started to increase.

 🌸100 people missing after landslide at a greenstones mine in Myanmar's Kutch province.  One person has been reported dead so far.

 🌸More than 33 million people worldwide were killed by  corona virus in 2021 alone, and Tetras Adanam, president of the World Health Organization, announced that we have to bring an end to corona by 2022.


 🌸Asian Champions Trophy Hockey: India won bronze.

 🌸 Vijay Hazare Cup Cricket: Saurashtra qualifies for semi-finals.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Tuesday, December 21, 2021

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 22.12.21

திருக்குறள் :

பால்:பொருட்பால்

இயல்: அரணியல்

அதிகாரம்: நாடு

குறள் எண் : 731

குறள்:
தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வருஞ் சேர்வது நாடு

பொருள்:
செழிப்புக் குறையாத விளைபொருள்களும், சிறந்த பெருமக்களும், செல்வத்தைத் தீயவழியில் செலவிடாதவர்களும் அமையப்பெற்றதே நல்ல நாடாகும்.

பழமொழி :

A clean hand wants no washing

பொன் குடத்துக்கு பொட்டு வேண்டுமா?

இரண்டொழுக்க பண்புகள் :

1. காடழிந்தால் மழை கெடும் எனவே இயற்கை போற்றி பாதுகாப்பேன். 

2. மழை அழிந்தால் விவசாயம் கெடும், விவசாயம் கெட்டால் உணவு அழியும். எனவே விவசாயம் பேணி பாதுகாப்பேன்

பொன்மொழி :

வெற்றிபெறுவதற்கு நிறைந்த விடா முயற்சியையும், பெரும் மனஉறுதியையும் நீங்கள்பெற்றிருக்க வேண்டும். விடா முயற்சி பெற்றவன், சமுத்திரத்தையே குடித்துவிடுவான், எனது சங்கல்ப்பத்தால் மலைகள் நொறுங்கி விழுந்தாகவேண்டும்___விவேகானந்தர்

பொது அறிவு :

1. ஏழு தீவுகளின் நகரம் எது? 

மும்பை. 

2. நான்கு அறைகளுடன் கூடிய வயிறு உடைய விலங்கு எது? 

மான்.

English words & meanings :

Academic Achievement - கல்வி சாதனை, 

Academic Performance - கல்வி செயல் திறன்

ஆரோக்ய வாழ்வு :

முந்திரிப் பருப்புஇரத்த அழுத்தத்தை குறைக்கும் .பித்தக்கற்களை தவிர்க்கும் வலுவான பற்கள், ஈறுகள் மற்றும் எழும்புகள் அமைய உதவும்.

கணினி யுகம் :


Play and pause a video: Press the spacebar or the K key on your keyboard to play and pause a video.

Tip

Holding down either of these keys also plays the video in slow motion.

Jump to the start of a video

Pressing the 0 (zero) key on your keyboard will jump to the beginning of a video. The Home key also works for jumping to the start of a video.


டிசம்பர் 22


தேசிய கணித தினம் 




தேசிய கணித தினம் (National Mathematics Day) இந்தியாவில், டிசம்பர் 22 ஆம் நாள் தேசிய கணித தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய கணித தினம் 26 பிப்ரவரி 2012 அன்று சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழாக் கலையரங்கத்தில் நடைபெற்ற சீனிவாச ராமானுசனின் 125 வது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் தொடக்க விழாவில் இந்தியப் பிரதம மந்திரி டாக்டர் மன்மோகன் சிங் அவர்களால் பிரகடனம் செய்யப்பட்டது.[1]

இந்தியக் கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜன் 1887 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி பிறந்தார். 1920 ஏப்ரல் 26 இல் இறந்தார். இந்திய தேசிய கணிதவியலாளரான கணித மேதை சீனிவாச இராமானுசன் அவர்கள் கணிதத்துறைக்குப் பங்காற்றியமைக்காக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 22 ஆம் நாள் தேசிய கணித தினமாகக் கொண்டாடப்படுகிறது. 2012 ஆம் ஆண்டு தேசிய கணித ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.


சீனிவாச இராமானுஜன் அவர்களின் பிறந்தநாள்






சீனிவாச இராமானுஜன் (Srinivasa Ramanujan, டிசம்பர் 22, 1887 – ஏப்ரல் 26, 1920) இந்தியாவில் தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் கோட்டை பகுதியில் பிறந்த கணித அறிஞர். இராமானுசர் 33 அகவை முடியும் முன்னரே இறந்துவிட்டார். இவர் சிறு வயதிலேயே யாருடைய உதவியும் இல்லாமல் மிக மிக வியப்பூட்டும் விதத்தில் கணிதத்தின் மிக அடிப்படையான ஆழ் உண்மைகளைக் கண்டுணர்ந்தார். 1914-ஆம் ஆண்டுக்கும், 1918-ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் மூவாயிரத்திற்கும் அதிகமான புதுக் கணிதத் தேற்றங்களைக் கண்டுபிடித்தார். எண்களின் பண்புகளைப் பற்றிய எண் கோட்பாடுகளிலும்செறிவெண் கோட்பாடுகளிலும் இவர் கண்டுபிடித்துக் கூறிய ஆழ் உண்மைகள் இன்று அடிப்படை இயற்பியற் துறை முதல் மின்தொடர்புப் பொறியியல் துறை வரை பல துறைகளில் உயர்மட்டங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இராமானுசன் அவர்கள் பெயரால் 1997 இல் The Ramanujan Journal என்னும் கணித ஆய்விதழ் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.

நீதிக்கதை

நன்மை தீமை இரண்டையும் ஏற்றுக்கொள்

ஒரு வயதான விவசாயி தன் வயலில் பாடுபட்டு உழைத்து அதில் வரும் சொற்பமான வருமானத்தில் வாழ்ந்துகொண்டிருந்தார். ஒரு நாள் அவர் வளர்த்து வந்த குதிரை காணாமல் போய்விட்டது. தகவலைக் கேள்விப்பட்ட அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் என்ன ஒரு துரதிர்ஷட நிலை? என்று பரிதாபமாக விசாரித்தனர். அவர்களின் ஆறுதலுக்கு விவசாயி மௌனமாக இருக்கலாம் என்று பதிலளித்தார்.

அடுத்த நாள் தொலைந்துப்போன அவருடைய குதிரை தன்னுடன் மூன்று குதிரைகளை அழைத்து வந்தது. இதை ஆச்சர்யமாக பார்த்த அக்கம் பக்கத்தினர், நீ ரொம்ப அதிர்ஷ்டசாலி, இப்பொழுது நான்கு குதிரை உனக்கு கிடைச்சிடுச்சு என்றனர். தனக்குக் கிடைத்த அதிர்ஷ்டத்தைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் மறுபடியும் இருக்கலாம் என்று கூறினார் விவசாயி. 

ஒரு வாரத்துக்குப் பிறகு, விவசாயியின் மகன் குதிரையை வேகமாக ஓட்டிச்சென்று தவறுதலாக கீழே விழுந்து காலை உடைத்துக்கொண்டான். இப்பொழுது அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், விவசாயிடம், உனக்கு ஒரு நல்லது நடந்தால், அடுத்து ஒரு கெட்டது நடக்குதே. உன் பையன் எழுந்து நடக்க பத்து மாதத்திற்கும்மேல் ஆகும் போல இருக்கிறதே, ரொம்ப கஷ்டமான நிலைமை என்று கூறி ஆதங்கப்பட்டனர். அப்போழுதும் அந்த விவசாயி பெரிதாக வருந்தாமல் இருக்கலாம் என்று அதே பதிலைக் கூறினார்.

ஒரே வாரத்தில் அந்த நாட்டில் போர் வந்துவிட்டது. வீட்டில் இருக்கும் எல்லா இளைஞர்களும் கட்டாயம் போரில் கலந்துகொள்ள வேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது. வீடு வீடாக ராணுவத்தினர் புகுந்து இளைஞர்களை அழைத்துச் சென்றனர். ஆனால், அந்த ஏழை விவசாயியின் மகனுக்குக் கால் உடைந்து இருந்ததால் அவனை மட்டும் அழைத்துச் செல்லவில்லை. இதைக் கண்டு ஊர் மக்கள் அந்த விவசாயியின் அதிர்ஷ்டத்தைக் கண்டு புகழ்ந்தனர். இப்போதும் அந்த விவசாயி இருக்கலாம் என்று கூறினார்.

அந்த விவசாயி ஒவ்வொருமுறையும் கூறும் பதிலைக் கேட்டுக் கொண்டிருந்த அவருடைய நண்பர், அந்த விவசாயியைப் பார்த்து, உனக்கு நல்லது நடந்தாலும், கெட்டது நடந்தாலும் இருக்கலாம் இருக்கலாம் என்றே சொல்கிறாயே ஏன்? என்று கேட்டார்.

அதற்கு அந்த விவசாயி நல்லது, கெட்டது இரண்டும் நாணயத்தின் இருபக்கங்கள். யாருக்கும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். சுகம், துக்கம் இவை இரண்டும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை என்பதை உணர்ந்தாலே போதுமானது என்றார்.

இன்றைய செய்திகள்

22.12.21

◆கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் மீது இலங்கையில் கிருமி நாசினி பீய்ச்சி அடித்து மனித உரிமை மீறல் நடந்துள்ளதாக தேசிய மீனவர் பேரவை குற்றம் சாட்டியுள்ளது.

◆டிசம்பர் 26-ல் கோவையில் நடைபெறும் விழாவில் கவிஞர் விக்ரமாதித்யனுக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கி கவுரவிக்கப்பட உள்ளதாக விழாக் குழுவினர் தெரிவித்தனர்.

◆வடகிழக்கு பருவமழை நீடித்ததால் உதகையில் தாமதமாக பொழியும் உறைபனி: கடும் குளிரால் பொதுமக்கள் அவதி; கருகும் தாவரங்கள்.

◆2020-21-ம் நிதியாண்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை மூலம் மத்திய அரசு 4,55,069 கோடியும்,விற்பனை மற்றும் மதிப்பு கூட்டு வரியாக தமிழகம் 17,063 கோடியும் வசூல் செய்துள்ளது.

◆கரோனா தடுப்பில் இந்தியாவின் பங்களிப்பு அதிகம்: உலக சுகாதார அமைப்பு புகழாரம்.

◆அமெரிக்காவில் கடந்த வாரம் கரோனாவில் பாதிக்கப்பட்டவர்களில் 73 சதவீதம் பேருக்கு ஒமைக்ரான் இருப்பது தெரியவந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஒமைக்ரான் வைரஸ் பரவல் 6 மடங்குஅதிகரித்துள்ளதாக அமெரிக்க நோய்த்தடுப்பு மற்றும் பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது.


◆ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: அரையிறுதியில் இந்தியா-ஜப்பான் மோதல்.

◆உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி: இந்திய வீரர் ஸ்ரீஹரி நடராஜ் புதிய சாதனை.

◆உலக பேட்மிண்டன் கூட்டமைப்பின் தடகள ஆணைய உறுப்பினராக பிவி சிந்து நியமிக்கப்பட்டுள்ளார்.

Today's Headlines

🌸 The National Fisheries Council has accused Sri Lanka of spraying disinfectant on the arrested Tamil Nadu fisherman as a violation of human rights. 

 🌸 Lyricist Vikramaditya will be honored with the Vishnupuram Award at a function to be held in Coimbatore on December 26 announced by the function committee

🌸Delayed frost in Udagai due to prolonged northeast monsoon: Public suffering from severe cold also can see the withering of plants 

🌸During the financial year 2020-21, the Central Government collected Rs. 4,55,069 crore from petrol and diesel sales and Rs. 17,063 crore from sales and value-added tax.

 🌸 India's contribution to corona prevention is high: World Health Organization praised India 

 🌸In the United States last week, 73 percent of corona victims were diagnosed with omega.  The U.S. Centers for Disease Control and Prevention says the spread of the omega-3 virus has increased six times in the past week alone.


🌸 Asian Champions Cup Hockey: India-Japan clash in the semi-finals.

 🌸 World Swimming Championship: Indian athlete Srihari Nataraj sets a new record.

 🌸P V Sindhu has been appointed as a member of the Athletics Commission of the World Badminton Federation.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்