திருக்குறள் :
பால்:பொருட்பால்
இயல்: அமைச்சியல்
அதிகாரம்: அவை அஞ்சாமை
குறள் எண்: 728
குறள்:
பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்
நன்கு செலச்சொல்லா தார்
பொருள்:
அறிவுடையோர் நிறைந்த அவையில், அவர்கள் மனத்தில் பதியும் அளவுக்குக் கருத்துக்களைச் சொல்ல இயலாவிடின், என்னதான் நூல்களைக் கற்றிருந்தாலும் பயன் இல்லை.
பழமொழி :
.All are not thieves , that dogs bark at.
சந்தேகத்துக்கு உரியவர்கள் எல்லாம் குற்றவாளிகள் அல்ல.
இரண்டொழுக்க பண்புகள் :
1. காடழிந்தால் மழை கெடும் எனவே இயற்கை போற்றி பாதுகாப்பேன்.
2. மழை அழிந்தால் விவசாயம் கெடும், விவசாயம் கெட்டால் உணவு அழியும். எனவே விவசாயம் பேணி பாதுகாப்பேன்
பொன்மொழி :
ஊக்கத்துடன் உழை ஆக்கம் தேடி வரும்
பொது அறிவு :
1. வெள்ளி அதிகமாக கிடைக்கும் மாநிலம் எது?
ராஜஸ்தான்..
2. இந்தியாவின் மிகப்பெரிய நீர்பாசன கால்வாய் எது?
சாரதா கால்வாய்.
English words & meanings :
Hit the books - go to bed, படுக்க செல்லுதல்,
in touch - in contact, தொடர்பில் இருத்தல்
ஆரோக்ய வாழ்வு :
கொழுப்பை கரைப்பதில் கொள்ளுக்கு முதலிடம் உடலிலுள்ள தேவையற்ற தண்ணீரை கொள்ளு எடுத்து விடும் கொள்ளு தண்ணீர் ரத்தத்தை சுத்திகரிப்பதுடன் உடலிலுள்ள நச்சுத் தன்மைகளை எல்லாம் எடுத்து விடும்.
கணினி யுகம் :
Youtube keyboard shortkeys: Change video playback speed
To decrease the playback speed of a video, hold down the Shift and press the , (comma) key.
To increase the playback speed of a video, hold down the Shift and press the . (period) key.
To decrease the playback speed of a video, hold down the Shift and press the , (comma) key.
To increase the playback speed of a video, hold down the Shift and press the . (period) key.
நீதிக்கதை
பொம்மைகள்
ரகு வண்ணத்தாள்களில் சின்ன சின்னதாய் குருவி, கிளி, வாத்து, மயில் என்று பொம்மைகள் செய்து கொண்டிருந்தான். வீட்டிற்குள் நுழைந்த வரதன் மகன் கத்திரியும், தாளுமாக இருந்த கோலத்தைப் பார்த்து மயிர்கால்கள் குத்திட்டு நின்றன. கோபம் தலைக்கு ஏறியது.
படிடா என்றால் படிக்க மாட்டேன் என்கிறாய். எப்பொழுது பார்த்தாலும் கிளியும், வாத்துமா செய்து வீடு முழுவதும் குப்பை போடுவது தான் மிச்சம். ஒரு பைசாவிற்குகூட பிரயோஜனம் இருக்கிறதா? இப்படி இருந்தா எப்படிடா பிழைக்கப் போகிறாய். நாலுபேரைப் போல் நல்லா படிக்கணும், நாளை வேலைக்குப் போக வேண்டும் என்கிற எண்ணமே வராதாடா என்று கோபமாக கத்தியவர்.
ரகு முதுகில் இரண்டு அடி போட்டார். செய்து வைத்திருந்த பொம்மைகளை காலால் எட்டி உதைத்தார்.
ரகுவுக்கு தன்னை அடிக்கும் போது கூட வலிக்கவில்லை. ஆனால் பொம்மைகளை உதைத்தது மனதில் வலித்தது. கலை நயமாக தான் வடித்த பொம்மைகளைப் பார்த்து பாராட்ட வேண்டாம். இப்படி எட்டி உதைக்காமல் இருந்திருக்கலாமே என்று எண்ணி அழுதான் ரகு. தோட்டத்தில் துணிகளை துவைத்து காயப் போட்டுவிட்டு வந்த சீலா, ஏண்டா ரகு அழுகிறாய் எனப்பதறியபடி உள்ளே வந்தாள். பொம்மைகள் சிதறிக் கிடப்பதையும் தன கணவர் துணி மாற்றிக் கொண்டு இருப்பதையும் பார்த்த மேகலா நிலைமையை புரிந்து கொண்டாள். ரகுவை சமாதானப்படுத்திவிட்டு, கீழே சிதறிக்கிடந்த பொம்மை தாள்களை எடுத்து ஒழுங்குபடுத்தினாள் மேகலா.
அந்த சம்பவத்திற்கு பின் ரகுவரன் மனதில் ஒரு வைராக்கியம் வந்து விட்டது. இந்த பொம்மைகளை வைத்து ஏதாவது செய்து சாதிக்க வேண்டும் என்று. அவனுக்கு பக்க துணையாக இருந்தாள் அன்னை மேகலா. காலங்கள் கடந்தன. ஆண்டுகள் பல தாண்டியது ஒரு நாள் சென்னையில் நீண்ட வரிசையில் மக்கள் கூட்டம். புதுமையான ஓவியக்கண்காட்சியை காண்பதற்குதான் இவ்வளவு கூட்டம், பார்த்தவர்கள் எல்லாம் பரவசப்பட்டார்கள். பூங்கா, கோவில், மசூதி, தேவாலயம், மலை, மலர்க்காடு இப்படி எண்ணிலடங்கா கண்ணைக் கவரும் இயற்கையாகவே அமைந்தது போன்ற ஓவியங்கள் பொம்மைகளால் அமைக்கப்பட்டு கண்ணாடிப் பெட்டிக்குள் அழகாக காட்சி அளித்தது. நல்ல விலைக்கு விற்பனையும் ஆனது.
ரகுவை மட்டும் பாராட்டவில்லை. அவன் பெற்றோரையும் பாராட்டினார்கள். அவன் தந்தையின் மனமோ, கூனிக் குறுகிப் போனது தன் தவறை எண்ணி. அவர் உணர்வுகளை உணர்ந்து கொண்டான் ரகு.
அப்பா என்று அழைத்தான். தன் உணர்வுகளில் இருந்து மீண்டு வந்த வரதன், என்ன என்பது போல் பார்த்தார். பக்கத்தில் வந்த ரகு இந்த அளவிற்கு நான் வளர காரணமே எனது அப்பா, அம்மாவின் ஒத்துழைப்பு தான் என்று பேட்டி கொடுத்தான். அந்த வார்த்தைகளைக் கேட்ட வரதன் நெகிழ்ந்து போனார். படிப்பு மட்டும் உயர்வுக்கு காரணமில்லை. குழந்தைகள் எதை விரும்புகிறார்களோ அந்த துறையில் ஊக்கப்படுத்தினால் அந்த துறையில் அவர்கள் சாதனையாளர்கள் ஆவார்கள் என்றார் வரதன்.
காற்று உள்ள போதே தூற்றிக்கொள் வாழ்த்துகள் என கைகுலுக்கி விடைபெற்றார் பேட்டி எடுத்த நண்பர்.
இன்றைய செய்திகள்
20.12.21
◆பாண்டி மெரினா கடற்கரையில் மணல் சிற்பம் உருவாக்கும் போட்டி இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான குழந்தைகள் ஆர்வமுடன் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
◆மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகட்டிடங்களின் தரம் குறித்து ஆய்வு செய்து இம்மாத இறுதிக்குள் அறிக்கை அளிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
◆சுகாதாரத்தில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிகளை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்பட உள்ள முன்மாதிரி கிராம விருதுக்கு கிராமங்களை தேர்வு செய்ய குழுவை அமைத்து, விருதுத்தொகைக்கான நிதியையும் ஒதுக்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
◆கடந்த 5 ஆண்டுகளில் முப்படைகளைச் சேர்ந்த 15 ஹெலிகாப்டர்கள் விபத்துகளில் சிக்கியுள்ளன என்றும், இதில் 31 பேர்இறந்துள்ளனர் என்றும் மத்தியபாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அஜய் பட் தெரிவித்துள்ளார்.
◆உலக அளவில் 3 நாட்களில் ஒன்றரை மடங்கு ஒமைக்ரான் தொற்று அதிகரித்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பு (டபிள்யூஎச்ஓ) எச்சரிக்கை விடுத்துள்ளது.
◆விருதுநகர் மாவட்ட விளையாட்ட ரங்கில் மண்பானை மீது நின்றபடி சிலம்பம் சுற்றி 100 மாணவர்கள் சாதனை படைத்தனர்.
◆உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன்: முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி வரலாறு படைத்தார் இந்திய வீரர் ஸ்ரீகாந்த்.
◆இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக கே.எல்.ராகுல் நியமனம்.
Today's Headlines








Prepared by
Covai women ICT_போதிமரம்
No comments:
Post a Comment