Friday, April 29, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 30.04.22

   திருக்குறள் :

பால்: பொருட்பால்

அதிகாரம்: மருந்து

குறள் 942:

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின். 

பொருள் - உண்ட உணவு செரிப்பதற்கான கால இடைவெளி தந்து, உணவு அருந்துகிறவர்களின் உடலுக்கு வேறு மருந்தே தேவையில்லை. முன் உண்ட உணவு செரித்த தன்மை ஆராய்ந்து போற்றியப் பிறகு தக்க அளவு உண்டால், உடம்பிற்கு மருந்து என ஒன்று வேண்டியதில்லை.


பழமொழி :

Everything comes to him who waits. 

காக்கத் தெரிந்தவனுக்கு காரியம் கைகூடும். 

இரண்டொழுக்க பண்புகள் :

1. முயற்சி பயிற்சி இரண்டும் பாதியில் விட மாட்டேன். தொடங்குவதில் இல்லை வெற்றி தொடர் தில் தான். 

2. சாதாரண மாணவனையும் சாதனையாளராக மாற்றுவது முயற்சியும் பயிற்சியுமே

பொன்மொழி :

எவன் ஒருவன் தன் அறிவின் அகந்தையால் பிறரை அவமதிக்கிறானோ, அவன் மந்த புத்தியுடையவன்!

பொது அறிவு :

1. தமிழ்நாட்டின் பின்னலாடை நகரம் எது??

 திருப்பூர்

2. தமிழ்நாட்டின் மலைகளின் இளவரசி என்றழைக்கப்படுவது எது?

 கொடைக்கானல்.

English words & meanings :

talon - a long sharp curved nail on the feet of some birds like eagle, கழுகு போன்ற சில வகைப் பறவைகளின்பாதங்களில் உள்ளகூர்நகம், 

tattered - old and torn, பழையதும் கிழிந்து போனதுமான

ஆரோக்ய வாழ்வு :

கருப்பட்டி ரத்தத்தை சுத்திகரித்து உடலுக்கு சுறுசுறுப்பைக் கொடுக்கும். மேலும் மேனி பளபளப்பு பெறும். கருப்பட்டியில் சுண்ணாம்பைக் கலந்து சாப்பிட்டால் உடல் சுத்தம் அடையும்குழந்தைகள் முதல் பெரியவர் வரை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நமது உடலுக்கு தேவையான கால்சியம் இதில்  கிடைக்கிறது.
காபியில் சர்ச்சரைக்கு பதில் கருப்பட்டியை சேர்த்து குடித்தால், நமது உடலுக்கு சுண்ணாம்புச் சத்தும் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாக கிடைக்கிறது. மேலும் இதனை சர்க்கரை நோயாளிகளும் குடிக்கலாம்.
 

சுக்கு கருப்பட்டி பெண்களின் கர்ப்பப்பைக்கு மிகவும் ஏற்றது. சுக்கு, மிளகு கலந்து கருப்பட்டியை குழந்தை பெற்ற பெண்கள் சாப்பிட்டால் பால் நன்றாக சுரக்கும். அந்தத் தாய்ப்பாலைக் குடிக்கும் குழந்தைகளுக்கு நல்ல ஊட்டச்சத்துக்கள் கிடைக்கப்  பெறும்

கணினி யுகம் :

Alt + right arrow - Forward. 

Alt + home - Home

நீதிக்கதை

அடிமையானக் குதிரை

ஒரு குதிரைக்கும், கலைமானுக்கும் இடையில் சிறு பகை ஏற்பட்டதால் அக்கலைமானை ஒழித்துக் கட்ட எண்ணியக் குதிரை ஒரு மனிதனின் உதவியை நாடியது. அதன் வேண்டுகோளை ஏற்ற மனிதன் குதிரைக்குச் சேணமும், கடிவாளமும் போட்டான். அதன் மீது சவாரி செய்து கலைமானை விரட்டிப் பிடித்துக் கொன்றான். 

தனது பகைவன் ஒழிந்ததைக் கண்டு மகிழ்ந்த குதிரைக் கனைத்தது. தன் எதிரியை ஒழித்த மனிதனுக்கு நன்றி கூறியது. தன் கடிவாளத்தை நீக்கித் தன்னை விடுவிக்கும்படி வேண்டியது. 

குதிரையே, உன்னை விடுவிப்பதா! அது முடியவே முடியாது. நான் வசதியாகச் சவாரி செய்ய நீ எனக்கு மிகவும் பயன்படுவாய். ஆகையால் உன்னை விடுவிக்கவே மாட்டேன் என்று கூறிச் சிரித்தான். 

அன்று முதல் குதிரை, மனிதனுக்கு அடிமையாக இருக்கிறது. குதிரையின் வஞ்சம் தீர்ந்தது. ஆனால் அது தன் சுதந்திரத்தினை இழந்து அடிமையாகவே இருக்க வேண்டியதாயிற்று. 

நீதி :
பிறருக்கு கேடு நினைப்பவன் நிச்சயம் கெட்டுப்போவான்.

இன்றைய செய்திகள்

30.04.22

இலங்கைத் தமிழர்களுக்கு உணவுகள் அனுப்பிவைக்க அனுமதித்து உத்தரவிடுங்கள்: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.

நடப்பாண்டில் 4,308 காலி மருத்துவப் பணயிடங்களை நிரப்ப நடவடிக்கை:  தமிழக அரசு தகவல்.

மே மாதம் தொடக்கத்திலேயே நாட்டின் பல பகுதிகளில் வெப்ப அலை வீசும் எனவும், பல மாநிலங்களில் வரலாறு காணாத அளவுக்கு வெப்பநிலை உயரும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம்  தகவல்.


உக்ரைனில் ஐ.நா. தலைவர் ஆய்வு செய்த பகுதிக்கு அருகே ரஷ்யா ராக்கெட் தாக்குதல்: 10 பேர் காயம்; குவியும் கண்டனங்கள்.


ஆசிய பேட்மிண்டன் போட்டி: பி.வி.சிந்து அரையிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்.

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ்.

Today's Headlines

Allow us and give permission to send food  to Sri Lankan Tamils: Chief Minister Stalin wrote to Prime Minister Modi.

 Steps are taken to fill 4,308 vacant medical posts in the current year:Information by Government of Tamil Nadu .

 The Indian Meteorological Department has forecast heat waves in many parts of the country in early May and also some parts may suffer record temperatures 

 The place near  UN Secretary visited on Ukraine  Russia fired rocket: 10 injured;   Condemnations from all over the world .

 Asian Badminton Tournament: PV Sindhu advances to semi-finals.

 All-rounder Ben Stokes has been announced as the new captain of the England Test cricket team.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Thursday, April 28, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 29.04.22

  திருக்குறள் :

பா‌ல் : பொருட் பால், 

இயல் : நட்பியல், 

அதிகாரம் : சூது, 

குறள் : 936. 

அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும்
முகடியான் மூடப்பட் டார்.

பொருள்:அகநிறைவு அடையாமல் துன்பத்தில் நிலைப்பார்கள் சூது என்ற முட்டாள்தனத்தில் முழ்கியவர்கள்.

பழமொழி :

Eagle do not breed doves.

புலிக்குப் பிறந்தது பூனையாகாது.

இரண்டொழுக்க பண்புகள் :

1. முயற்சி பயிற்சி இரண்டும் பாதியில் விட மாட்டேன். தொடங்குவதில் இல்லை வெற்றி தொடர் தில் தான். 

2. சாதாரண மாணவனையும் சாதனையாளராக மாற்றுவது முயற்சியும் பயிற்சியுமே

பொன்மொழி :

நல்லவர்களுடன் நட்பு கொள்ளுங்கள். நல்லறிவு தரும் நுால்களைப் படியுங்கள்._____இறையன்பு IAS

பொது அறிவு :

1. இந்தியாவின் கலிபோர்னியா எனப்படும் மாநிலம் எது? 

பஞ்சாப். 

2. கலாச்சாரத்தின் தலைநகரம் என்றழைக்கப்படுவது எது? 

தஞ்சாவூர்.

English words & meanings :

sarong - long piece of material folded around the body, உடலைச் சுற்றி அணிந்துகொள்ளும் நீண்ட துணி வகை., 

scanty - too small in size or amount.தேவைக்குப் பற்றாத

ஆரோக்ய வாழ்வு :

சங்கரா மீன் வெள்ளை இரத்த அணுக்களின் செயல்பாட்டை உடலில் அதிகரிக்கிறது மற்றும் தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்ய இது தேவைப்படுகிறது. இது ஒரு சிறந்த ஆக்சிஜனேற்றியாக முடக்குவாதம், புற்றுநோய், மற்றும் இதய நோய்களுக்கு, வழிவகுக்கும். டிஎன்ஏ பாதிப்பை தடுக்கிறது, உடலை ஆரோக்கியத்துடன் வைத்திருக்க உதவுகிறது.

கணினி யுகம் :

Ctrl + + - Zoom In. 

Ctrl + - - Zoom Out.

ஏப்ரல் 29


பாரதிதாசன் அவர்களின் பிறந்நாள்




பாரதிதாசன் (Bharathidasanஏப்ரல் 291891 - ஏப்ரல் 211964பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து, பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் 'கனகசுப்புரத்தினம்' ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால், 'பாரதிதாசன்' என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார். பாரதிதாசன், தம் எழுச்சி மிக்க எழுத்துகளால், புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் பரவலாக அழைக்கப்படுபவர். இவர் குயில் என்னும் (கவிதை வடிவில்) ஒரு திங்களிதழை நடத்தி வந்தார். தமிழ்மொழி மீது பற்றுக் கொண்டவராக இருந்த பாரதிதாசன், அவரது மானசீக குருவாகப் சுப்ரமணிய பாரதியாரைக் கருதினார். அவரது பாடலைத் தனது நண்பனின் திருமண நிகழ்வின் போது பாடிய அவர், பாரதியாரை நேரில் சந்திக்கவும் செய்தார். பாரதியிடமிருந்து பாராட்டுகள் பெற்றதோடு மட்டுமல்லாமல், அவரது நட்பும் கிடைத்தது அவருக்கு. அன்றுமுதல், அவர் தனது இயற் பெயரான கனகசுப்புரத்தினம் என்பதைப் ‘பாரதிதாசன்’ என்று மாற்றிக் கொண்டார்.

நீதிக்கதை

கடமையே வெற்றி தரும்

ஒரு குரு நாதருக்கு வயதாகி விட்டதால் அவரால் வேலை செய்ய முடியவில்லை. சீடர்களை அழைத்து எனக்கு பிறகு நம் ஆசிரமத்தைக் கவனிக்க தகுதியானவர் யாரோ அவரை நியமிக்க உள்ளேன். இன்று முதல் உங்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் உன்னிப்பாக கவனிப்பேன் சிறந்த ஒருவரை தலைவராக அறிவிப்பேன் என்றார்.

தலைவராகும் ஆசையில் எல்லா சீடர்களும் கடுமையாக உழைத்தனர். குரு நாதரின் தேவையறிந்து நிறைவேற்றினர். ஒரு முடிவுக்கு வந்தவராக குரு நாதர் சீடர்களை ஒன்று கூட்டினார். வயதில் இளைய சீடனைக் காட்டி இவரே நம் மடத்தின் புதிய தலைவர் என அறிவித்தார். மற்றவர்கள் அதிர்ந்தனர்.

குரு நாதரே இவனை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் என்பது புரியவில்லை. குறிப்பிட்டுச் சொல்லும் விதத்தில் எந்த சாதனையும் இவர் செய்யவில்லையே என்றனர். அது தான் அவரது நற்குணமே நீங்கள் பதவிக்காகத் தான் என்னைக் கவனித்தீர்கள். இவரோ எப்போதும் போல் இயல்பாக இருந்தார். பதவிக்காக அலையும் பண்பு இவரிடம் இல்லை. என்னிடம் தேவையற்ற நெருக்கத்தை உண்டாக்கிக் கொள்ளவில்லை. அவரது கடமையில் மட்டும் கவனம் செலுத்தியதால் பொறுப்பை ஒப்படைத்தேன். கடமை என்னும் மூன்றெழுத்தே வெற்றி தரும் என்றார் குரு நாதர்.

இன்றைய செய்திகள்

29.04.22

💢பதிவுத்துறையில் கடந்த ஆண்டைவிட ரூ.3,270 கோடி கூடுதல் வருவாய்: தமிழக அரசு தகவல்.

💢அரசு மருத்துவமனைகளில் தீ தடுப்பு கட்டமைப்புகளை உருவாக்க ரூ.114 கோடி ஒதுக்கி சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

💢கோவை வேளாண் பல்கலை.,யில் இந்தாண்டு முதல் தமிழ்வழிக் கல்வி பாடத்திட்டம்: முதல்வர் ஸ்டாலின் அறிமுகம்.

💢கரோனா முழுவதும் நீங்காததால் எச்சரிக்கையாக இருங்கள்: மாநிலங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்.

💢பெல்ஜியம் சாக்லேட் மூலம் பரவும் 'சால்மோனெல்லா நோய்':  லண்டனில் 151 குழந்தைகளுக்கு  நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 9 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி .

💢ஜூன் 23-ல் தொடங்குகிறது டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி- அட்டவணை வெளியீடு.

💢ஆசிய பேட்மிண்டன் போட்டி: பி.வி.சிந்து காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்.

💢ஆசிய கோப்பை ஹாக்கி: தொடக்க ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் மோதல்.

Today's Headlines

💢In Registrary Department this year's income is Rs. 3,270 crores more information by the TN government.

💢Tamilnadu Health Department allotted 114 crores to build fire-resisting infrastructure in hospitals

💢From this year onwards the Coimbatore Agriculture University will start Tamil Medium Syllabus also.

💢There is no complete eradication of Corona, so be careful and cautious. PM advises the states

💢In Belgium the disease Salmonella is spreading through Chocolate. In London, 151 children got affected and 9 children were admitted to the hospital.

💢TNPL cricket match starts on June 23 - the fixtures are released.

💢Asian Cup Hockey - opening match between India and Pakistan.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Wednesday, April 27, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 28.04.22

 திருக்குறள் :

பா‌ல் : பொருட் பால், 

இயல் : நட்பியல், 

அதிகாரம் : சூது, 

குறள் : 934

சிறுமை பலசெய்து சீரழக்கும் சூதின்
வறுமை தருவதொன்று இல். 

பொருள் :

 பல துன்பங்களுக்கு ஆளாக்கி, புகழைப் கெடுத்த, வறுமையிலும் ஆழ்த்துவதற்குச் சூதாட்டத்தைப் போன்ற தீமையான செயல் வேறொன்றும் இல்லை.

பழமொழி :

Don't bite more than you can chew.

விரலுக்குத் தகுந்த வீக்கம் வேண்டும்

இரண்டொழுக்க பண்புகள் :

1. முயற்சி பயிற்சி இரண்டும் பாதியில் விட மாட்டேன். தொடங்குவதில் இல்லை வெற்றி தொடர் தில் தான். 

2. சாதாரண மாணவனையும் சாதனையாளராக மாற்றுவது முயற்சியும் பயிற்சியுமே

பொன்மொழி :

எல்லாருக்கும் மதிப்பளிப்பதோடு, அவர்களின் வாழ்வில் குறுக்கிடாமல் இருப்பதே சிறந்த நாகரிகம்______பேரா .சாலமன் பாப்பையா

பொது அறிவு :

1. இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது? 

ஞானபீட விருது. 

2. இந்தியாவில் தேசிய ரசாயன பரிசோதனைச் சாலை எங்கு அமைந்துள்ளது? 

பாட்னா.

English words & meanings :

Reel - a round object where we can store the wire or film role, கம்பி, சினிமா பட சுருள் ஆகியவற்றை சுற்றி வைக்க பயன்படும் வட்ட வடிவ பொருள். 

Rift - a crack in the rock, பாறையில் ஏற்படும் பிளவு

ஆரோக்ய வாழ்வு :

செம்பருத்தி பூ இதய நோய் அணுகாமல் தடுக்கும் அற்புதமான டானிக். செம்பருத்தி பூவைப் பசுமையாகவோ, காய வைத்து பொடி செய்தோ வைத்துக் கொண்டு, பாலில் கலந்து காலை, மாலை வேளைகளில் குடித்து வர இதய பலவீனம் தீரும்.உடல் சூடு காரணமாக பலருக்கு வாய்புண், வயிற்றுப்புண் உண்டாகும். அவர்கள் தினம் 10 பூவின் இதழ்களை மென்று சாப்பிட்டால் புண்கள் ஆறும். ஒரு மாதகாலம் தொடர்ந்து சாப்பிட்டு வரவேண்டும்.செம்பருத்தி பூ குளிர்ச்சி பொருந்தியது. சருமத்திற்கு இதமும், சுகமும் அளித்து ரத்தத்தை சுத்தம் செய்து உடலை பளபளப்பாக்கும.
செம்பருத்தி பூக்களை அரைத்து தலையில் தடவி ஊற வைத்துக் குளிக்க தலைப் பேன்கள் குறையும். 10 செம்பருத்திப் பூ இதழ்களை நீரில் இட்டு காய்ச்சி  குடித்து வர சிறு நீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் குணமாகு

கணினி யுகம் :

Page up - Move up one screen at a time. 

Page down - Move down one screen at a time.

ஏப்ரல் 28


தொழிலாளர் நினைவு நாள் (Workers' Memorial Day,)




தொழிலாளர் நினைவு நாள் (Workers' Memorial DayInternational Workers' Memorial Day) அல்லது இறந்தோர் மற்றும் காயமடைந்தோருக்கான பன்னாட்டு நினைவு நாள் (International Commemoration Day (ICD) for Dead and Injured) ஆண்டுதோறும் ஏப்ரல் 28 ஆம் நாள் உலகெங்கும் தமது பணியின் போது கொல்லப்பட்டு, காயமடைந்து, உடல் ஊனமுற்ற தொழிலாளர்கள் நினைவுகூரப்படுகின்றனர்.[1]

இது வேலை தொடர்பான விபத்துகள், நோய்கள் என்பவற்றின் விளைவுகள் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும்; தொழில்சார்ந்த பாதுகாப்பு, நலம் ஆகியவை தொடர்பான விடயங்களை நாடுகள் மட்டத்திலும் அனைத்துலக மட்டத்திலும் செயல்திட்டங்களில் இடம்பெறச் செய்வதற்காகவும்; தொழில்சார் பாதுகாப்பு, நலம் போன்றவற்றை மேம்படுத்துவது தொடர்பான நாடுகளின் முயற்சிகளுக்கு உதவுவதற்குமே இந்நாள் அறிவிக்கப்பட்டது.

நீதிக்கதை

சாதுவின் நற்குணம்

ஆற்றில் படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் பயணித்த இளைஞர்கள் சிலர் அந்த படகில் பயணம் செய்துகொண்டிருந்த சாது ஒருவரைக் கேலி செய்தனர். விளையாட்டு அளவுக்கு மீறியதால் சாது எச்சரிக்கும் நோக்கில் பார்த்தார். இதைக் கண்ட இளைஞன் ஒருவன் கோபமாக உழைக்கப் பயந்த சோம்பேறி மனிதனான உனக்கு எதற்கு கோபம்? என்று சொல்லி அடிப்பதற்கு வந்தான். சாதுவின் கண்கள் கலங்கின.

அப்போது வானில் அசரீரி கேட்டது, என் அருமை சாதுவே! நீ கட்டளையிட்டால் இந்த படகையே கவிழ்த்து விடுவேன்! என்றது அசரீரீ. இதைக் கேட்டதும் இளைஞர்கள் வாயடைத்து போயினர். ஆனால் சாதுவோ, இளைஞர்களே கவலைப்படாதீர்கள். அசரீரி சொன்னது போல, நான் எதுவும் நடக்க விடமாட்டேன் என்று சொல்லி ஆறுதல் அளித்தார்.

பிறகு கைகளை குவித்து, கடவுளே எல்லோரையும் காப்பாற்ற வேண்டிய நீயா இப்படி கேட்பது? ஏதும் செய்வதாக இருந்தால் இவர்களின் புத்தியை நல்வழிப்படுத்து. படகைக் கவிழ்த்து விடுவதால் யாருக்கும் பயன் இல்லை! என்று பிரார்த்தித்து வேண்டினார்.

அப்போது வானில் மீண்டும் அசரீரி ஒலித்தது. சாதுவே! மிக்க மகிழ்ச்சி. உன்னைச் சோதிக்கவே அப்படி சொன்னேன். உன் நல்ல உள்ளத்தை மற்றவர்களும் புரிந்து கொள்ள வேண்டும் அல்லவா? உனக்கு எப்போதும் என் அருள் உண்டு. இது போன்ற செயலில் ஈடுபடாத நல்ல புத்தியை இவர்களுக்கு அளித்தேன் என்றது. சாதுக்களுக்கு கடவுளின் கருணை எப்போதும் உண்டு என்பதை உணர்ந்த இளைஞர்கள் திருந்தி வாழத் துவங்கினர்.

நீதி :
ஒருவரையும் ஏளனமாக பேசக்கூடாது.

இன்றைய செய்திகள்

28.04.22

💢மணிமண்டபங்களில் போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் அமர்ந்து படிக்கும் வசதி: செய்தி, அச்சு துறையின் 22 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

💢அரசு சட்டக் கல்லூரிகளில் முதுநிலை பட்டப்படிப்பு: தமிழக சட்டத்துறையின் அறிவிப்பு.

 💢பேரறிவாளன் விடுதலை விவகாரம் கவர்னர் தனிப்பட்ட முடிவு எடுக்க அதிகாரமில்லை: சுப்ரீம் கோர்ட் உறுதி.

💢தொடர்ந்து உயரும் வெப்பநிலையால் டெல்லிக்கு மஞ்சள் அலெர்ட் - வானிலை மையம் அறிவிப்பு.

 💢கிழக்கு உக்ரைன் நகரங்களை நோக்கி நகரும் ரஷிய துருப்புக்கள்.

💢ஆசிய பேட்மிண்டன் போட்டி: இந்திய ஜோடி 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்.

Today's Headlines

 💢Facility for students preparing for competitive examinations in the halls: 22 announcements from the Department of News and Printing.

 💢Masters Degree in Government Law Colleges: 8 Important Announcements of the Tamil Nadu Law Department.

   💢The Supreme Court has no jurisdiction over the personal decision of the Governor on the issue of the release of Perarivalan.

 💢Yellow Alert for Delhi due to continuous rising temperatures - Weather Center announcement.

 💢 Russian troops moving towards cities in eastern Ukraine.

 💢Asian Badminton Tournament: Indian pair advance to 2nd round.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்