Thursday, March 30, 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 31.03.2023

      திருக்குறள் :


பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்: அழுக்காறாமை

குறள் எண்: 166
கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉ மின்றிக் கெடும்.


பொருள்:
உதவியாக ஒருவருக்குக் கொடுக்கப்படுவதைப் பார்த்துப் பொறாமை கொண்டால் அந்தத் தீய குணம், அவனை மட்டுமின்றி அவனைச் சார்ந்திருப்போரையும் உணவுக்கும், உடைக்கும்கூட வழியில்லாமல் ஆக்கிவிடும்.

பழமொழி :

First impression is the best impression


முதல் அபிப்பிராயமே சிறந்த அபிப்பிராயம்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. என் வாழ்வில் எப்போதும் நேர்மையான முறையில் காரியங்கள் செய்ய முயல்வேன்.

2. என் நண்பர்கள் நேர்மையற்ற காரியங்கள் செய்ய அழைத்தால் நிச்சயம் துணை போக மாட்டேன்

பொன்மொழி :

பல செயல்கள் சில நேரங்களில் மகிழ்ச்சியைக் கொடுக்காது. ஆனால் செயலின்றி மகிழ்ச்சியில்லை.

பொது அறிவு :

1. உலகில் அதிகமாக காணப்படும் உயிரின வகை எது? 

 பூச்சிகள்.

 2. மின் தீயை அணைக்கப் பயன்படுவது எது? 

 கார்பன் டெட்ரா குளோரைடு.

English words & meanings :

 mantis - an insect looks like as it is praying, noun. மான்டிஸ். பெயர்ச் சொல்

ஆரோக்ய வாழ்வு :

ஒரு வேகவைத்த முட்டையில் இருந்து 0.6 மைக்ரோகிராம் அளவுக்கு வைட்டமின் பிி12 கிடைக்கும். குறிப்பாக முட்டையின் மஞ்சள் கருவில் தான் வைட்டமின் பி12 இருக்கிறது என்பதால் முட்டையை மஞ்சள் கருவுடன் சேர்த்து சாப்பிட வேண்டும்.

அதோடு வைட்டமின்களும் புரதச்சத்தும் சேர்த்து கிடைக்கும். அதனால் தினசரி உணவில் வேகவைத்த முட்டையைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

கணினி யுகம்

Shift + Ins - Paste the selected item. Home - Takes the user to the start of the current line


மார்ச் 31


ஜெசி" ஓவென்ஸ்  




ஜேம்ஸ் கிளீவ்லன்ட் "ஜெசி" ஓவென்ஸ் (James Cleveland "Jesse" Owens, செப்டம்பர் 121913-மார்ச் 311980) ஓர் அமெரிக்க தடகள ஆட்டக்காரர் ஆவார். 1936 பெர்லின் ஒலிம்பிக்கில், ஹிட்லர் உயர்த்திப் பிடித்த 'ஆர்ய மேன்மை’ சித்தாந்தத்தை உடைத்தெறிந்ததில் ஜெஸ்ஸி ஓவன்ஸ் பங்கு முக்கியமானது. அந்த ஒலிம்பிக்கில் 100 மீ, 200 மீ, 4*100 தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதலில் தங்கம் வென்று, ஹிட்லரை திகைக்க வைத்தார். ஒரே ஒலிம்பிக் போட்டியில் நான்கு தங்கப்பதக்கங்களை வென்ற முதல் அமெரிக்கர் என்ற பெருமையும் அவருக்கு கிட்டியது.

ஹிட்லரின் சித்தாத்தம் ஒன்றை மூக்குடையச் செய்து தோலின் நிறத்தால் மட்டுமே ஓர் இனம் இன்னொரு இனத்தை விட சிறந்ததாகி விட முடியாது என்பதை உலகுக்கு நிரூபித்துக் காட்டிய ஒரு அதிசய விளையாட்டு வீரரைப் பற்றித் தெரிந்துகொள்ளவிருக்கிறோம். ஆரிய இனமே உலகில் மிகச்சிறந்த இனம், வெள்ளைத்தோல் உடையர்வர்கள்தான் எதிலும் சிறக்க முடியும் என்ற ஹிட்லரின் அபத்தமான நம்பிக்கையை தவிடு பொடியாக்கிய அந்த வரலாற்று நாயகரின் பெயர் ஜெசி ஓவன்ஸ்.

நீதிக்கதை

கதை :

ஒரு நதியில் முதலை தன் துணைவியாருடன் வாழ்ந்து வந்தது. நதிக்கரையோரம் ஒரு குரங்கு வாழ்ந்து வந்தது. முதலையும் குரங்கும் நண்பர்களாக வாழ்ந்து வந்தனர். ஒரு நாள் பெண் முதலை ஆண் முதலையிடம் தன் ஆசையை தெரிவித்தது. எனக்கு ரொம்ப நாளாக குரங்கின் இதயத்தை சாப்பிட வேண்டும் என்று ஆசை, தங்களால் கொண்டுவரமுடியுமா? என கேட்டது. 


ஆண்முதலை  என்ன செய்வதென்று யோசித்தது. திடீரென ஒரு யோசனை வந்தது, சரி நான் கொண்டுவருகிறேன் என சம்மதித்தது. நம் குரங்கு நண்பனை வீட்டிற்கு விருந்துக்கு அழைப்போம். அவனும் வருவான் அவனை கொன்று இதயத்தை சாப்பிடு என கூறியது. பெண் முதலைக்கோ கொண்டாட்டம். அடுத்த நாள் ஆண் முதலை குரங்கு நண்பனை விருந்துக்கு அழைத்தது. குரங்கும் சம்மதித்து முதலையின் முதுகில் ஏறி அமர்ந்ததும் முதலை புறப்பட்டது. 


நடு ஆற்றில் சென்று கொண்டிருக்கும் போது ஆண் முதலை கூறியது நான் உன்னை என்ன செய்ய போகிறேன் தெரியுமான்னு கேட்டது. அப்பாவி குரங்கும் விருந்துக்கு தானே அழைத்தாய் என்றது. 


முதலை சொன்னது, அதான் இல்லை என்னோட மனைவி குரங்கின் இதயம் சாப்பிட ஆசைபட்டா, அதுக்காக தான் உன்னை அழைத்து செல்கிறேன் என கூறியது.  குரங்கிற்கு சற்று அதிர்ச்சியாக இருந்தது. 


சற்று யோசித்த குரங்கு, அடடா என்ன நண்பா இதை முன்னாடியே சொல்லகூடாதா? நேற்று நான் என் இதயத்தை எடுத்து காயபோட்டேன் அது அங்கேயே மரத்தில் இருப்பதாக கூறியது. 


முதலையும் அப்படியா வா திரும்பி போய் எடுத்துகொண்டு வரலாம் என திரும்பவும் கரைக்கு வந்து விட்டது. தப்பித்த குரங்கு முதலையிடம் கூறியது, முட்டாள் முதலையே நீயெல்லாம் ஒரு நண்பன் என்னையே கொல்லப்பார்கிறாயா? என்று சொல்லிட்டு மரத்தின் மேல் ஏறி சென்றது. 


நீதி :

நமக்கு ஒரு இடத்தில் துன்பம் ஏற்படப்போகிறது என முன்னதாகவே தெரிந்தால், அந்த துன்பம் தன்னை வந்தடைவதற்கு முன்னால் சிந்தித்து அதிலிருந்து விடுபட வேண்டும்.

இன்றைய செய்திகள்

31.03. 2023

* 3,414 ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களின் பணப் பலன்களுக்காக ரூ.1031.32 கோடி நிதி: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு.

* நலிந்த நிலையில் உள்ள சென்னையை சேர்ந்த முன்னாள் விளையாட்டு வீரர்கள், ஓய்வூதிய உதவிக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

* தமிழகத்தின் பின்தங்கிய கிராமங்களில் ‘டெலி மெடிசின்’ மூலம் உயர் மருத்துவ சேவை: பொது சுகாதாரத் துறை இயக்குநர் தகவல்.

* தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்.

* உக்ரைன், சீனாவில் இருந்து கரோனாவால் திரும்பிய இறுதியாண்டு மருத்துவ மாணவர்கள் தேர்வு எழுத அனுமதி: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனுத்தாக்கல்.

* உளவு பார்த்ததாக கூறி அமெரிக்க பத்திரிகையாளரை கைது செய்த ரஷ்யா.

*  பிரான்ஸில் ஓய்வு பெறும் வயதை 62-ல் இருந்து 64 ஆக உயர்ந்தும் அதிபர் மக்ரோனின் சீர்திருத்த திட்டத்திற்கு எதிராக மக்கள் நடத்தும் போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

* 10 அணிகள் பங்கேற்கும் 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

* ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை பி.வி. சிந்து 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்.

* மியாமி ஓபன் டென்னிஸ்: ஜெசிகா பெகுலா, ரைபகினா ஆகியோர் அரைஇறுதிக்கு முன்னேற்றம்.

Today's Headlines

* Rs 1031.32 crore fund for cash benefits of 3,414 retired transport employees: Chief Minister Stalin orders.

 * The District Collector has announced that former athletes from Chennai who are in a debilitating condition can apply for pension assistance.

*  Higher Medical Service through 'Tele Medicine' in Underprivileged Villages of Tamil Nadu: Director of Public Health Information.

 * Chance of rain in Tamil Nadu for 4 days: Chennai Meteorological Department information.

 * Final year medical students who returned from Ukraine, China due to Corona are allowed to take the exam: Central Government's reply in the Supreme Court.

 * Russia Arrests American Journalist for Spying

 * Violence broke out in France against President Macron's reform plan to raise the retirement age from 62 to 64.

*  The 16th IPL will feature 10 teams.  The cricket matches will start at 7.30 pm tonight.

* Spain Masters Badminton: Indian player P.V.  Sindh advances to 2nd round.

 * Miami Open Tennis: Jessica Pegula, Rybakina advance to semifinals
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Wednesday, March 29, 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 30.03.2023

     திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்: அழுக்காறாமை

குறள் எண் : 165
அழுக்கா றுடையார்க் கதுசாலும் ஒன்னார்
வழுக்கியுங் கேடீன் பது.

பொருள்:
பொறாமைக் குணம் கொண்டவர்களுக்கு அவர்களை வீழ்த்த வேறு பகையே வேண்டா அந்தக் குணமே அவர்களை வீழ்த்தி விடும்

பழமொழி :

Better be sure than sorry
வருந்துவதைவிட உறுதியாய் இருப்பது மேல்.


இரண்டொழுக்க பண்புகள் :

1. என் வாழ்வில் எப்போதும் நேர்மையான முறையில் காரியங்கள் செய்ய முயல்வேன்.

2. என் நண்பர்கள் நேர்மையற்ற காரியங்கள் செய்ய அழைத்தால் நிச்சயம் துணை போக மாட்டேன்

பொன்மொழி :

தவறுகள் அல்லது தோல்விகள் என்று எதுவுமில்லை, பாடங்கள் மட்டுமே உள்ளன.திருத்திக் கொண்டு வாழ்வில் வெற்றியை காணவேண்டும்.

பொது அறிவு :

1. கறுப்புச்சட்டம் என்று அழைக்கப்பட்டது எது?

 ரௌலட் சட்டம் . 

 2. இந்தியாவின் நைல் நதி எனப்படுவது எது? 

 கங்கை.

English words & meanings :

 leaners - people who are not fat and thin. My father is a leaner. மெலிந்து ஆரோக்கிய உடல் கொண்டவர். பெயரடை

ஆரோக்ய வாழ்வு :

அசைவ உணவுகளில் வைட்டமின் பி12 அதிகமாக இருக்கிறது. ஆனாலும் கொழுப்புச்சத்து அதிகமில்லாத லீன் மீட் வகைகளை தேர்வு செய்வது நல்லது.

கடல் உணவுகள், ஆட்டிறைச்சி, சிக்கன் உள்ளிட்டவற்றில் வைட்டமின் பி12 அதிகம். உடலில் ஏற்படும் வைடட்டமின் பி12 பற்றாக்குறை ஆபத்தைக் குறைப்பதோடு இதில் போதிய அளவு புரதச்சத்து, ஜிங்க், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் ஆகியவை இருக்கின்றன. இது கார்டியோ வாஸ்குலர் நோய்கள் உள்ளிட்டவற்றை தடுக்க உதவும்

கணினி யுகம்

Ctrl + Del - Cut selected item. Ctrl + Ins - Copy the selected item


மார்ச் 30


வின்செண்ட் வான்கா  அவர்களின் பிறந்தநாள் 




வின்சென்ட் வில்லியம் வான் கோ அல்லது வின்செண்ட் வான்கா (இடச்சு: [ˈvɪnsɛnt ˈʋɪləm vɑn ˈɣɔx] (About this soundகேட்க); (Vincent Van Gogh, மார்ச் 30, 1853 - சூலை 29|, 1890) ஒரு டச்சு பின்-உணர்வுப்பதிவுவாத ஓவியர். இவரது ஓவியங்களில் சில உலகின் மிகவும் அறியப்பட்டவையும் புகழ் பெற்றவையும் அதிகம் விலையுள்ளவையுமான ஓவியங்களுள் அடங்கும். ஒரு தசாப்தத்தில் 860 எண்ணெய் ஓவியங்கள் உட்பட, வெறும் 2,100 கலைப்படைப்புகளை உருவாக்கியவர். பிரான்சில் வாழ்ந்த கடைசி இரண்டு ஆண்டுகளில் அவர் இறந்துவிட்டார். வறுமை மனநோய் போன்றவற்றால் துன்புற்று அவரது வாழ்வு 37 வயதில் தற்கொலையில் முடிந்தது..

இவரது பெரும்பாலான ஓவியங்கள் இவரது வாணாளின் கடைசி இரு ஆண்டுகளில் வரையப்பட்டவையே. இவர் உயிருடன் இருந்த காலத்தில் இவரின் கலையை யாரும் மதிக்கவில்லை. தான் வாழ்ந்த காலத்தில் இவரால் தனது ஓவியங்களுள் ஒன்றை மட்டுமெ விற்க முடிந்தது. இன்றோ நவீன ஓவியத்தின் செல்வாக்கு வாய்ந்தவராக இவர் கருதப்படுகிறார். வான்கா 30 வயது வரை எந்த ஓவியமும் வரைந்ததில்லை.

நீதிக்கதை

வேடன் ஒருவன் விஷம் தோய்த்த அம்பை கொண்டு மான் கூட்டத்தின் மீது எய்தினான். அம்பு குறிதவறிப் பக்கத்தில் இருந்த மரத்தில் பட்டு நாளடைவில் மரம் காய்ந்துவிட்டது. 


அம்மரத்தின் பொந்தில் நீண்ட நாட்களாக வசித்து வந்த கிளி அதை கண்டு வருந்தினாலும் அந்த மரத்தைவிட்டு போகவில்லை. 


அக்கிளியின் அன்பைக் கண்டு தெய்வம் மனித உருவில் வந்து மரத்தைவிட்டு விலகாமலிருக்க கிளியிடம் காரணம் கேட்டது. அதற்கு கிளி எல்லா வகையிலும் சிறந்த குணம் கொண்ட இந்த மரத்தில்தான் நான் பிறந்து வளர்ந்தேன். இளமை பருவத்தில் இந்த மரம் தான் பாதுகாப்பை கொடுத்தது இப்போது காய்ந்துவிட்டது என்று விலகிசெல்வது எவ்வளவு மோசமான செயல். அதனால் நான் அதை செய்ய இயலவில்லை என்றது. 


கிளியின் பரிவை கண்ட தெய்வம் உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்றது, அதற்கு அந்த கிளி இந்த மரம் மீண்டும் பூத்து குலுங்க வேண்டும் என்று வரம் கேட்டது. 


இந்த கிளியை போல நாமும் நண்பர்கள் துன்பத்தில் பங்கு கொள்ளவேண்டும். அவர்கள் துயர் துடைக்க வழிவகுக்க வேண்டும் அதுதான் நல்ல நட்பாகும். 


நீதி :

தனது நண்பர்களின் துன்பங்களில் பங்கு கொள்ள வேண்டும்.

இன்றைய செய்திகள்

30.03. 2023

* 2022-23-ஆம் ஆண்டில் 6.61 லட்சம் புதிய ஓட்டுநர் உரிமங்கள் வழங்கல்: தமிழக அரசு தகவல்.

* ரூ.44 கோடியில் சென்னை குடிநீர் பணிகள், 8 மாவட்டங்களில் புதிய தடுப்பணைகள்: நீர்வளத் துறையின் 12 அறிவிப்புகள்  வெளியீடு.

* கரூரில் காவிரி ஆற்றில் சட்டவிரோத மணல் குவாரி தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு.

* நாட்டில் கரோனா வைரஸின் புதிய திரிபான எக்ஸ்பிபி1 வைரஸ் பரவி வருகிறது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரியவித்துள்ளது.

* இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் பறக்கும் டாக்ஸிகள் பொதுப் பயன்பாட்டுக்கு வரும்என்று மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தெரிவித்துள்ளார்.

* பாகிஸ்தானில் கரன்சி மதிப்பு சரிந்ததால், உயிர்காக்கும் மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

* தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20: 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது வெஸ்ட் இண்டீஸ்.

* இந்திய தடகள சம்மேளனம் சார்பில் நடைபெற்ற  'இந்திய கிராண்ட்பிரி2'  தடகள சாம்பியன்ஷிப் போட்டியில்  தமிழக வீராங்கனை அர்ச்சனா இரட்டை தங்கத்தை கைப்பற்றினார்.

* தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர்: தமிழக வீரர் சத்யன் ஞானசேகரன் 2-வது முறையாக சாம்பியன்.

Today's Headlines

* 6.61 lakh new driving licenses to be issued in 2022-23: Tamil Nadu Govt.

 * Chennai drinking water works at Rs 44 crore, new barrages in 8 districts: 12 notifications issued by water resources department.

*  High Court orders submission of inspection report on illegal sand mining in Cauvery river at Karur.

* The Union Ministry of Health has informed that a new strain of Corona virus XPB1 virus is spreading in the country.

 * Union Aviation Minister Jyotiraditya Scindia has said that flying taxis will be in public use in India within the next 5 years.

 * A devaluation of the currency has led to a shortage of life-saving medicines in Pakistan.

 * T20 vs South Africa: West Indies won the series by 7 runs.

 * Tamil Nadu player Archana won the double gold in the 'Indian Grand Prix 2' athletics championship organized by the Athletics Federation of India.

 * National Table Tennis Championship Series: Tamil Nadu's Sathyan Gnanasekaran got champion for the 2nd time.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Tuesday, March 28, 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 29.03.2023

    திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்: அழுக்காறாமை

குறள் எண் : 164
அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக் கறிந்து.

பொருள்:
தீய வழியில் சென்றால் துன்பம் ஏற்படுமென்பதை அறிந்தவர்கள் பொறாமையினால் தீச்செயல்களில் ஈடுபடமாட்டார்கள்

பழமொழி :

People who live in glass houses should not throw stones.

கண்ணாடி மாளிகையில் இருந்துகொண்டு கல் எறியக்கூடாது.

இரண்டொழுக்க பண்புகள் :

1. என் வாழ்வில் எப்போதும் நேர்மையான முறையில் காரியங்கள் செய்ய முயல்வேன்.

2. என் நண்பர்கள் நேர்மையற்ற காரியங்கள் செய்ய அழைத்தால் நிச்சயம் துணை போக மாட்டேன்

பொன்மொழி :

ஒவ்வொருவர் சொல்லுக்கும் சிந்தித்துக் கொண்டிருந்தால் நீங்கள் சாதிக்க முடியாது. செயல்பாட்டில் இறங்க வேண்டும்.

பொது அறிவு :

1. இந்திய மறுமலர்ச்சியின் விடிவெள்ளி எனப்படுபவர் யார்? 

 ராஜாராம் மோகன் ராய். 

 2. சிலம்புச்செல்வர் எனப்படுபவர் யார் ?

 ம .பொ. சிவஞானம்.

English words & meanings :

 laudable - worthy of high praise. adjective. Einstein's ideas are laudable. புகழப்படத்தக்க. பெயரடைச் சொல்

ஆரோக்ய வாழ்வு :

கடல் உணவுகளில் மீன், இறால், நண்டு வகைகளை எடுத்துக் கொள்ளும் அளவுக்கு சிப்பி உணவுகளை பெரும்பாலும் எடுத்துக் கொள்வதில்லை.

ஆனால் சிப்பி உணவுகளில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. குறிப்பாக அதிகப்படியாக புரதச்சத்து, இரும்புச்சத்து, ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் மற்றும் வைட்டமின் பி12 நிறைந்திருக்கின்றது.




கணினி யுகம்

Alt + F - File menu options in the current program. Alt + E - Edits options in the current program

நீதிக்கதை

ஒரு நாள் ஒரு காட்டுப் பகுதியில் கழுதை ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. கழுதையை கவனித்த ஓநாய் ஒன்று அதை அடித்துத் தின்னும் நோக்கத்துடன் அதன் மீது பாய்ந்தது. தனக்கு வந்த ஆபத்தைக் கண்டு பயந்தது கழுதை. 


ஓநாயை எதிர்த்து சண்டை போடுவது கஷ்டம். அதனால் ஏதாவது ஒரு தந்திரம் செய்து தான் சமாளிக்க வேண்டும் என கழுதை தீர்மானித்தது. 


ஓநாயின் பாய்ச்சலின் போது சற்று விலகிக் கொண்டு, ஓநாயாரே, உம்முடைய வலிமையின் முன்னால் நான் எம்மாத்திரம், நான் இன்று உமக்கு இரையாகப் போவது உறுதி. இதை யாராலும் தடுக்க முடியாது. நானும் உமக்கு இரையாகத் தயாராக இருக்கிறேன். அதற்கு முன்னால் நான் சொல்லக் கூடிய விஷயத்தைத் தயவு செய்து கேட்க வேண்டும் என வேண்டிக் கொண்டது. 


நீ என்ன சொல்ல விரும்பினாய். சொல்வதை சீக்கிரம் சொல் என உறுமியது ஓநாய். ஓநாயாரே என் காலில் பெரிய முள் ஒன்று குத்தி விட்டது. முள்ளை எடுக்க நான் எவ்வளவோ முயற்சி செய்தும் முடியவில்லை. 


காலில் முள் உள்ள நிலையில் நீ என்னை அடித்துச் சாப்பிட்டால் அந்த முள் உன் தொண்டையில் மாட்டிக் கொள்ளும். அது உமக்குக் கடுமையான வேதனையைத் தருவதுடன் உன் உயிரையும் வாங்கி விடும். அதற்கு தயவு கூர்ந்து முதலில் என் காலில் இருக்கும் முள்ளை எடுத்துவிடு. அதற்குப் பிறகு நீ என்னை அடித்துத் தின்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என கழுதை கூறிற்று. 


ஏமாந்த ஓநாய் ஒத்துக் கொண்டது. கழுதை தனது பின்னங் கால்களைத் திருப்பிக் காண்பித்து, ஓநாய் கழுதையின் பின்னங்கால்களில் முள் இருக்கிறதா என தேடும் வேலையில், அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கழுதை பின்னங் கால்களால் ஓநாயைப் பலமாக உதைத்தது. 


கழுதையின் உதை தாங்காமல் ஓநாய் துடிதுடித்து சரிந்தது. அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு கழுதை வேகமாக ஓடி தப்பித்துக் கொண்டது. 


நீதி :

கிடைக்கும் சந்தர்ப்பத்தை சரியாக செயல்படுத்திக் கொள்ள வேண்டும்.

இன்றைய செய்திகள்

29.03. 2023


* இ-சேவை மையங்களில் விரைவில் 600 வகையான சேவைகள் வழங்கப்படும் என்று தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

* மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம்,  1 கோடி குடும்பத் தலைவிகள் பயன்பெறுவார்கள். மாதம் ரூ.1,000 உதவித் தொகை அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

* அனைத்து ஆய்வகங்களும் கரோனா பரிசோதனை விவரங்களை ஐசிஎம்ஆர் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்: மத்திய அரசு அறிவுறுத்தல்.

* இந்தியாவில் 27 கோடி பேர் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளதாகவும், பத்து மாநிலங்களில் மூன்றில் ஒருவர் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்வதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

* “சிறுவர்கள் பள்ளிக்குச் செல்வதை பார்க்கும்போது மனம் உடைகிறது” - ஆப்கன் சிறுமிகளின் துயரக் குரல்.

* ஐரோப்பிய கால்பந்து தகுதி சுற்று: இங்கிலாந்து, போர்ச்சுகல் 2-வது வெற்றி.

* இந்தூர் ஆடுகளத்தின் மீதான நடவடிக்கையை தளர்த்தியது ஐ.சி.சி.

Today's Headlines

* Information Technology Minister Mano Thangaraj has said that sooner, 600 types of services will be provided in e-service centers.

 * 1 Crore female heads will be benefited through the Women's Entitlement Scheme.  Chief Minister M.K.Stalin has announced in the assembly that Rs.1,000 monthly assistance will be paid directly into their bank accounts.

 * All laboratories to upload details of corona tests on ICMR website said by Central Govt.

*  According to the central government, 27 crore people in India live below the poverty line and one in three out of ten states live below the poverty line.

 * “It breaks my heart to see boys go to school” - sad voice of Afghani girls.

 * European Football Qualifiers: England, Portugal  won 5 the match for second time .

 * ICC eases crackdown on Indore pitch
 Prepared by

Covai women ICT_போதிமரம்