Thursday, July 2, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 03.07.2026

சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்




திருக்குறள்: 

 பால் :  பொருட்பால்          

 இயல் : அரசியல்   

அதிகாரம்:45    பெரியாரைத் துணைக்கோடல்

குறள் எண்:442

குறள்: 

உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்.  

பொருள்:

வந்துள்ள துன்பத்தைப் போக்கி, மேலும் துன்பம் நேராமல் காக்கவல்ல பெரியோர்களைத் துணையாகக் கொள்ள வேண்டும்  

பழமொழி :

A young calf knows no fear.

இளங்கன்று பயமறியாது.

இரண்டொழுக்க பண்புகள் :.

1) ஊக்கமுடன் உழைத்தால் ஆக்கம் தானாக வரும். எனவே எனது செயல்களை ஆக்கமுடன் செய்வேன் . 

2) முயன்றால் பட்டாம்பூச்சி முயலாவிட்டால் கம்பளிப்பூச்சி. எனவே சோர்ந்து போகாமல் தொடர்ந்து முயற்சி செய்வேன்.

பொன்மொழி : 

அறிவே மனிதனின் மிகப்பெரிய சக்தி.

Thought for the Day :

Small aim is a crime; have great aim.

பொது அறிவு : 

1. மூன்றாம் பாலின நல வாரியத்தை நிறுவிய முதல் மாநிலம் எது?

தமிழ்நாடு

2. வட்டப்பாறை நீர்வீழ்ச்சி அமைந்துள்ள மாவட்டம் எது? 

கன்னியாகுமரி

English words :

1. Enhance – Improve, மேம்படுத்து.

2. Reduce – Decrease, குறைத்தல்

புவியியலும் சுற்றுசூழலும் :

நம் ஒவ்வொருவரின் அடிப்படை கடமைகள் (Fundamental Duties)

* தேசியக் கொடியை மதித்தல்

* சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல்

* பொதுச் சொத்துக்களைப் பாதுகாத்தல் ஆகும்.

NMMS :

SAT - Social science


ஷாகு என்றால் _____________ என்று பொருள்.                      

(1) போர் முறை              

 (2) நேர்மையானவர்                            

(3) வரி முறை                              

 (4) அஷ்டபிரதான்                                      

விடை:  (2) நேர்மையானவர்

ஜூலை 03

சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்

  • 2008 ஆம் ஆண்டில், இத்தாலியில் உள்ள சுற்றுச்சூழல் அமைப்புகளின் குழு, ரெஸெரோவின் தலைமையில், பிளாஸ்டிக் பைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், உலகளாவிய பிரச்சாரத்தைத் தொடங்கவும் முடிவு செய்தது.
  • சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான வலுவான வழக்கறிஞரான, புகழ்பெற்ற பாதுகாவலர் சர் டேவிட் அட்டன்பரோவின் பிறந்தநாளை ஒட்டி, ஜூலை 3-ஆம் தேதி, முதல் சர்வதேச பிளாஸ்டிக் பை இல்லாத நாளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
  • ஆரம்ப நிகழ்வு வெற்றிகரமாக இருந்தது, முதன்மையாக இத்தாலியில் பிளாஸ்டிக் பைகள் இல்லாத மாற்றுகளை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தியது.

நீதிக்கதை

ராகுல் மற்றும் கோகுல்

ஒரு பள்ளியில்  ராகுல் மற்றும் கோகுல் என்ற இரட்டையர்கள் படித்துக் கொண்டிருந்தனர்.

பள்ளி முடிந்ததும், ராகுல் தினமும் மைதானத்தில் ஓடி விளையாடுவான். கபடி, ஓட்டப்பந்தயம், கயிறு தாண்டுதல் போன்ற விளையாட்டுகளில் ஆர்வமாக பங்கேற்பான்.

ஆனால் கோகுல், பள்ளி முடிந்ததும் வீட்டுக்குச் சென்று கைப்பேசியில் விளையாடிக் கொண்டே இருப்பான். வெளியே சென்று விளையாட அவனுக்கு விருப்பம் இல்லை.

சில மாதங்கள் கழித்து பள்ளியில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. ராகுல் எல்லாப் போட்டிகளிலும் உற்சாகமாக கலந்து கொண்டு பல பரிசுகளை வென்றான். அவன் எப்போதும் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தான்.

கோகுல் மட்டும் சிறிது நேரம் ஓடியவுடன் சோர்வடைந்தான். அப்போது உடற்கல்வி ஆசிரியர், "தினமும் சிறிது நேரம் விளையாடினால் உடல் வலிமையும், நல்ல ஆரோக்கியமும், மன உற்சாகமும் கிடைக்கும்," என்று கூறினார்.

அந்த நாளிலிருந்து கோகுலும் தினமும் நண்பர்களுடன் வெளியில் சென்று விளையாடத் தொடங்கினான். சில வாரங்களிலேயே அவனும் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் மாறினான்.

நீதி: தினமும் விளையாடுவது உடலுக்கு ஆரோக்கியத்தையும், மனதுக்கு மகிழ்ச்சியையும் தரும்.

இன்றைய செய்திகள்

03.07.2026

🗒️துணை மருத்துவ படிப்புகளுக்கான கட்டண விவரம் வெளியீடு
டிப்ளமோ பார்மசி அரசு ஒதுக்கீட்டிற்கு ரூ.25 ஆயிரமும், நிர்வாக ஒதுக்கீட்டிற்கு ரூ.50 ஆயிரமும் கட்டணம் நிர்ணயிக்கப்
பட்டுள்ளது.

🗒️ஓமன், குவைத் நாடுகளுக்கு ஏர் இந்தியா விமான சேவை மீண்டும் தொடக்கம்.

🗒️ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.5 ஆக பதிவு
இந்திய நேரப்படி இரவு 11:27 மணிக்கு, 173 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது.

 *விளையாட்டுச் செய்திகள்* 

🏀  சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் 100 சிக்சர்களை பூர்த்தி செய்த 5-வது இந்தியர் அபிஷேக் சர்மா ஆவார்.

🏀கிரிக்கெட்
இலங்கையில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது இந்திய அணி.

Today's Headlines

🗒️ Fee details released for Allied Health Courses. The fee has been fixed at ₹25,000 for Diploma in Pharmacy under the Government Quota and ₹50,000 under the Management Quota.

🗒️ Air India resumes flight services to Oman and Kuwait.

🗒️ Earthquake strikes Afghanistan; magnitude 5.5 recorded
The earthquake occurred at 11:27 PM (IST) at a depth of 173 km.

🏀 Sports News

🏀 Cricket: Abhishek Sharma has become the 5th Indian cricketer to complete 100 sixes in T20 International cricket.

🏀 Cricket: The Indian team is in Sri Lanka to participate in a two-match Test series.

Covai women ICT_போதிமரம்

 

Wednesday, July 1, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.07.2026




திருக்குறள்: 

பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:45 பெரியாரைத் துணைக்கோடல்

குறள் எண்:441

குறள்:

அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்.

பொருள்:

அறத்தின் தன்மைகளை அறிந்து முதிர்ந்த அறிவுடையவரது நட்பினை, கொள்ளும் திறன் அறிந்து ஆராய்ந்து பெற்றுக் கொள்ளல் வேண்டும்

பழமொழி :

A thief knows a thief.

பாம்பின் கால் பாம்பறியும்.

இரண்டொழுக்க பண்புகள் :.

1) ஊக்கமுடன் உழைத்தால் ஆக்கம் தானாக வரும். எனவே எனது செயல்களை ஆக்கமுடன் செய்வேன் . 

2) முயன்றால் பட்டாம்பூச்சி முயலாவிட்டால் கம்பளிப்பூச்சி. எனவே சோர்ந்து போகாமல் தொடர்ந்து முயற்சி செய்வேன்.

பொன்மொழி : 

தன்னம்பிக்கையும் கடின உழைப்பும் வெற்றியின் இரு சிறகுகள்.

Thought for the Day :

Excellence is a continuous process and not an accident.

பொது அறிவு : 

1. உடல் உறுப்பு தானத்தில் முதன்மையான மாநிலம் எது? 

தமிழ்நாடு. 

2. தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் (SIPCOT) நிறுவப்பட்ட ஆண்டு எது? 

1971

English words :

Substantiate – Prove, நிரூபி.

Transform – Change completely, முழுமையாக மாற்று.

புவியியலும் சுற்றுசூழலும் :

"நமது அடிப்படை உரிமைகள் (Fundamental Rights)

சமத்துவ உரிமை

சுதந்திர உரிமை

மத சுதந்திரத்திற்கான உரிமை

கலாச்சார மற்றும் கல்வி உரிமை
அரசியலமைப்புக்குட்பட்டு தீர்வு காணும் உரிமை போன்றவை ஆகும்."

NMMS :

SAT - SOCIAL

சரியான இணையைத் தேர்ந்தெடு. 

(1) மன்சப்தாரி முறை - அக்பர் (

2) ஜப்தி முறை - ஔரங்கசீப் 

(3) துசுக் - இ - பாபரி - கட்டிடக் கலை (

4) இரண்டாம் பானிபட் போர் - 1526. 

விடை : (1) மன்சப்தாரி முறை - அக்பர்

ஜூலை 02

உலக விளையாட்டுத் துறை செய்தியாளர்கள் தினம்

சாதி, மதம், இனம், நாடு, மொழி எல்லாவற்றையம் கடந்து மக்களை விளையாட்டால் ஒன்று சேர்க்கும் பணியைச் செய்யும் விளையாட்டு பத்திரிகையாளர்களை கவுரவிக்கும் நாள் இன்று.

நீதிக்கதை

 "துளி துளியாக வந்த செல்வம்"


ஒரு சிறிய கிராமத்தில் இரண்டு விவசாயிகள் வாழ்ந்தனர். ஒருவரின் பெயர் சபரி, மற்றொருவரின் பெயர் கிரி. சபரி தனது வீட்டின் கூரையிலிருந்து வரும் மழைநீரை ஒரு பெரிய தொட்டியில் சேமித்தார். கிரி, "மழைநீர் எப்போதும் வரும், அதை ஏன் இவ்வளவு செலவு செய்து, தொட்டி கட்டி சேமிக்க வேண்டும் ?" என்று சிரித்தார். 

சில மாதங்களுக்குப் பிறகு கடும் வறட்சி ஏற்பட்டது. கிணறுகள் வற்றின. குடிநீருக்குக் கூட மக்கள் சிரமப்பட்டனர்.


அப்போது சபரி சேமித்திருந்த மழைநீரைத் தனது குடும்பத்திற்கும், அண்டை வீட்டாருக்கும், தனது பயிர்களுக்கும் பயன்படுத்தினார். கிரி வயலுக்கு தண்ணீர் இல்லாமல் பயிர்கள் வாடின. அப்போது கிரி தனது தவறை உணர்ந்து, "அடுத்த மழைக்காலம் முதல் நானும் மழைநீரைச் சேமிப்பேன்" என்று உறுதி எடுத்தார்.


நீதி:

"மழைநீரைச் சேமிப்போம்; நாளைய தண்ணீர் பற்றாக்குறையைத் தவிர்ப்போம்.”

இன்றைய செய்திகள்

02.07.2026

🗒️சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு; 4, 5-ம் தேதிகளில் நடைப்பெற உள்ள தேர்வுகளில் 2.29 லட்சம் ஆசிரியர்கள் எழுத உள்ளார்கள்.

🗒️ஜப்பான் பிரதமர் இந்தியாவில் 3 நாள் சுற்றுப்பயணம்; வர்த்தகம், முதலீடு தொடர்பாக ஆலோசனை.

🗒️ரோப்​பிய நாடு​களான போலந்​து, ஜெர்​மனி, சுவிட்​சர்​லாந்​து, பிரான்​ஸ், டென்​மார்க் நாடு​களில் கடும் வெயில் கொளுத்தி வருகிறது. அனல் காற்று வீசுவ​தால் கடந்த 21-ம் தேதி முதல் தற்​போது வரை 1,300 பேர் உயி​ரிழந்​துள்​ளனர் என உலக சுகா​தார அமைப்பு தெரி​வித்​துள்​ளது.

 விளையாட்டுச் செய்திகள் 

🏀இந்திய ஜூனியர் ஆக்கி அணியில் கோவில்பட்டி வீரர்
இது தமிழக ஆக்கி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

🏀விம்பிள்டன் டென்னிஸ்: அரினா சபலென்கா வெற்றி.

Today's Headlines

🗒️ All arrangements have been completed for the Special Teacher Eligibility Test. The examination will be held on the 4th and 5th, with 229,000 teachers expected to appear.

🗒️ The Prime Minister of Japan has begun a three-day visit to India to hold discussions on trade and investment.

🗒️ A severe heatwave continues across the European countries of Poland, Germany, Switzerland, France, and Denmark. According to the World Health Organization (WHO), 1,300 people have died since the 21st due to extreme heat and hot winds.

🏀 Sports News

🏀 A player from Kovilpatti has been selected for the Indian Junior Hockey Team. This has brought great joy to hockey fans across Tamil Nadu.

🏀 Wimbledon Tennis: Aryna Sabalenka secured a victory.

Covai women ICT_போதிமரம்