![]() |
புரட்சியாளர் சேகுவேரா |
Hardwork turns dreams into reality.
கடின உழைப்பை கனவுகளை நனவாக்கும்.
இரண்டொழுக்க பண்புகள் :
1.மின்சாரம் போன்ற எரி பொருட்கள் வீணாக்காமல் சிக்கனமாக உபயோகிப்பேன்.
2.சூரிய சக்தியை பயன்படுத்த முயற்சிப்பேன்.
பொன்மொழி :
நீ கடவுளின் குழந்தை என்பதால் உனக்கு என்ன நடந்தாலும் அதைவிட நீ உயர்ந்தவன் சிறந்தவன் என்ற மன உறுதி வேண்டும் - டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம்
பொது அறிவு :
01.மிகக் குறுகிய காலம் அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகித்தவர் யார்?
02. எரிமலைகள் அதிகம் உள்ள நாடு எது?
English words :
tear up – rip into pieces,ஒரு பொருளை சிறிய துண்டுகளாகக் கிழிப்பது
தமிழ் இலக்கணம் :
அறிவியல் களஞ்சியம் :
எறும்புகள் ராணுவ வீரர்களைப் போல எப்போதும் சாரிசாரியாக ஊர்ந்து செல்வதன் மூல ரகசியம் ஃபெரமோன் என்ற வேதிப்பொருள்தான். அந்தக் கோட்டை தவறவிட்டால், வழி தெரியாமல் போய்விடும்.எறும்புகள் போடும் இந்த ஃபெரமோன் பாதை எப்போதும் வளைந்து வளைந்துதான் இருக்கும். இடையே சில இடங்களில் நீர் சொட்டிக்கொண்டிருப்பது போன்ற சிறுசிறு ஆபத்துகள் இருந்தாலும் கூட, உணவு கிடைத்துவிட்டால் எறும்புக் கூட்டம் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாது.இதை நீங்கள் நேரில் பார்க்கும்போது கவனித்திருக்கலாம்.
அக்டோபர் 09
சே குவேரா அவர்களின் நினைவுநாள்
சே குவேரா (Che Guevara) என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா (Ernesto Guevara de la Serna) (14 சூன் 1928 – 9 அக்டோபர் 1967) அர்ஜென்டீனாவை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் (கொங்கோ உட்பட) புரட்சிகளில் பங்குபெற்ற போராளி எனப்பல முகங்களைக் கொண்டவர்.
உலக அஞ்சல் தினம்
உலக அஞ்சல் தினம் (World Post Day) அக்டோபர் 9 இல் சர்வதேச ரீதியில் நினைவு கொள்ளப்படுகிறது. அக்டோபர் 9, 1874இல் சுவிட்சர்லாந்திலுள்ள பேர்ன் நகரில் சர்வதேச அஞ்சல் ஒன்றியம் நிறுவப்பட்ட தினமே சர்வதேச அஞ்சல் தினமாகக் கொள்ளப்படுகிறது. மொத்தம் 150 மேற்பட்ட நாடுகளில் இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 1969 ஆம் ஆண்டு ஜப்பான் டோக்கியோவில் நடந்த அனைத்துலக அஞ்சல் ஒன்றிய கூட்டத்தில் இந்த தினம் குறித்து முடிவெடுத்து கடைபிடிக்கப்படுகிறது.
நீதிக்கதை
செய்யும் தொழிலே தெய்வம் .
ஒரு பெரிய நகரத்தில் இருந்த பெரிய கம்பெனி முன்பிருந்த கடையில் ஒரு பெரியவர் சமோசா விற்றுக் கொண்டிருந்தார். அந்த வட்டாரத்தில் அவரின் கடை மிகப் பிரபலம். ஒரு நாள் அந்த கம்பெனி மேனேஜர் கடைக்கு வந்து சாப்பிட்டுக் கொண்டே, நீங்க நல்லா நிர்வாகம் பண்றீங்க. தொழிலை நல்லா வளர்த்திருக்கீங்க, இதுவே என்னைப் போல பெரிய கம்பெனியில் நீங்க வேலையில் இருந்திருந்தால் நீங்களும் என்னைப்போல பெரிய அளவு முன்னேறியிருக்கலாம் என்றார் கிண்டலாக .
பெரியவர் புன்னகைத்துவிட்டு, இல்லை ஐயா . நான் உங்களை விட நன்றாகவே முன்னேறியிருக்கிறேன். பத்து வருஷத்துக்கு முன் நான் இந்த கூடையில் சமோசா விற்றபோது நீங்கள் இந்த கம்பெனியில் வேலைக்கு சேர்ந்திருந்தீங்க. அப்பொழுது என் வருமானம் மாதம் இரண்டாயிரம் ரூபாய். உங்கள் வருமானம் மாதம் இருபதாயிரம்.
நீங்கள் இப்பொழுது இந்த கம்பெனியில் மேனேஜர் ஆகி விட்டீர்கள். மாதம் இரண்டு லட்சம் சம்பளம் வாங்குகிறீர்கள். இப்பொழுது எனக்கு சொந்தமாக இந்த கடை இருக்கிறது. எனக்கு நல்ல பேர் இருக்கு. நாளை என் வாரிசுகளுக்கு இந்த தொழிலை நான் தர முடியும். அவர்கள் என்னைப்போல இல்லாமல் நேரடியாக முதலாளியாக வந்து கடையை முன்னேற்றத்திற்கு கொண்டு வந்தால் போதும் .
ஆனால் உங்களுக்கு அப்படியில்லை. உங்கள் பதவியை உங்கள் மகனுக்கு அப்படியே தர முடியாது. உங்களின் இத்தனை வருட உழைப்பின் பலன் உங்கள் முதலாளியின் மகனுக்குத்தான் போகும். உங்கள் மகன் மீண்டும் பூஜ்ஜியத்தில் இருந்து துவங்க வேண்டும். நீங்கள் அனுபவித்த அவ்வளவு கஷ்டத்தையும் அவனும் அனுபவிப்பான். உங்கள் மகன் உங்களைப் போல மேனேஜர் ஆகும்போது, என் மகன் எந்த நிலையில் இருப்பான் என்று நீங்களே எண்ணிப் பாருங்க என்றார். ஒருவேளை என் மகனிடம் வேலைக்கு வந்தாலும் வரலாம் என்றார்.
மேனேஜர் சமோசாவுக்கு பணத்தைக் கொடுத்துவிட்டு மௌனமாகச் சென்று விட்டார்.
நீதி : செய்யும் தொழிலைக் கொண்டு யாரையும் குறைவாக மதிப்பிடக் கூடாது.
இன்றைய செய்திகள்
No comments:
Post a Comment