![]() |
கவிஞர் புலமைப்பித்தன் |
Success tastes sweeter after struggle.
போராட்டத்திற்குப் பிறகு பெறும் வெற்றி மிகவும் இனிப்பாக இருக்கும்.
இரண்டொழுக்க பண்புகள் :
1.மின்சாரம் போன்ற எரி பொருட்கள் வீணாக்காமல் சிக்கனமாக உபயோகிப்பேன்.
2.சூரிய சக்தியை பயன்படுத்த முயற்சிப்பேன்.
பொன்மொழி :
என்றும் நினைவில் கொள்.மனிதனாகப் பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது - கார்ல் மார்க்ஸ்
பொது அறிவு :
01. நமது உடலின் ஆக்சிஜன் படகு என்று அழைக்கப்படுவது எது?
ஹீமோகுளோபின்(Hemoglobin)
02. இந்தியாவில் செம்பு அதிகம் கிடைக்கும் மாநிலம் எது?
ராஜஸ்தான்(Rajasthan )
English words :
Take up - start a hobby or something: ஏதோ ஒரு காரியம் அல்லது ஒரு பொழுது போக்கு அம்சம் தொடங்குதல்
தமிழ் இலக்கணம்
ஒற்றெழுத்து விதிகள் என்பவை தமிழில் இரண்டு சொற்கள் இணையும்போது சில வல்லின மெய்கள் (க், ச், த், ப்) மிகுந்து வரும் அல்லது இயல்பாக இருக்கும் என்னும் இலக்கண விதியாகும்.
1.நிலைமொழியில் உயிர்: முதல் சொல்லின் இறுதியில் உயிர் எழுத்து வந்து, இரண்டாம் சொல்லின் முதலில் 'க', 'ச', 'த', 'ப' வந்தால், வல்லினம் மிகுந்து வரும்.
எ.கா: பள்ளி + கூடம் = பள்ளிக்கூடம்
அறிவியல் களஞ்சியம் :
புவி வெப்பத்தை அதிகரிக்க வைக்கும் பசுமை இல்ல வாயுக்களில் முக்கியமானது மீத்தேன். இது பசுக்களின் சாணத்தில் இருந்து அதிகளவில் வெளிவருகிறது. சுவீடன் நாட்டு விவசாய பல்கலையைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பசுஞ்சாணத்தில் 'ஆஸ்பராகாப்சிஸ் டாக்ஸ்ஃபோர்மிஸ்' எனும் சிவப்பு நிறப்பாசியைச் சேர்ப்பதன் வாயிலாக, அதிலிருந்து உற்பத்தி ஆகும் மீத்தேனை, 44 சதவீத அளவுக்குக் குறைக்க முடியும் என்று கண்டுபிடித்துள்ளனர்.
அக்டோபர் 06
நீதிக்கதை
குரு சொன்ன அறிவுரை
ஒரு நாட்டின் மன்னர் தனது மகனை குருகுலத்திற்கு கல்வி கற்க அனுப்பி வைத்தார். அவனும் குருகுலத்தில் மன்னர் மகன் என்ற அகந்தையை விடுத்து அனைத்து சீடர்களுடனும் ஒற்றுமையாக பழகி வந்தான். குரு சொல்லும் அனைத்து கட்டளைகளையும் மிகுந்த பணிவுடன் செய்து வந்தான். இப்படியே குருகுலத்தில் பல ஆண்டுகளாக கல்வி பயின்று வந்தான். ஒரு நாள் கல்வி பயின்று முடித்து தன்னுடைய அரண்மனைக்கு செல்ல வேண்டிய நாள் வந்தது.
மன்னரின் மகன் குருகுலத்தில் இருந்து விடைபெற்று தன் நாட்டிற்கு செல்லும் முன் குருவிடம் ஆசீர்வாதம் வாங்க சென்றான். அப்போது மன்னரின் மகனைப் பார்த்து, குரு, நீ முறம் மாதிரி இரு! சல்லடை மாதிரி இருக்காதே!! என்று அறிவுரை கூறினார். மன்னனின் மகனும், சரி சுவாமி! நான் முறமாகவே இருக்கிறேன் என்றான்.
இதன் பொருள் என்னவென்று மன்னனுக்கு புரியவில்லை. தன் மகனிடம் கேட்டார் மன்னர். அதற்கு அவருடைய மகன், சல்லடை, நல்ல விஷயங்களை எல்லாம் கீழே தள்ளிவிட்டு, தேவையில்லாத கழிவுகளையும், கல்லையும் மண்ணையும் தான் வைத்துக் கொள்ளும். ஆனால் முறமோ, பதர், கல், மண் போன்றவற்றைக் கீழேத் தள்ளிவிட்டு நல்ல விஷயங்களை மட்டும் தக்க வைத்துக் கொள்ளும். இது தான் குரு சொன்ன அறிவுரை என்று கூறினான். குரு கூறிய அறிவுரைப்படியே மன்னரின் மகன் கடைப்பிடிக்கலானான்.
நீதி :
நல்ல விஷயங்களை மட்டும் மனதில் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.
இன்றைய செய்திகள்
No comments:
Post a Comment