![]() |
தேசிய விமானப்படை தினம் |
Knowledge is wealth no thief can steal.
அறிவு, திருடனாலும் திருட முடியாத செல்வம்.
இரண்டொழுக்க பண்புகள் :
1.மின்சாரம் போன்ற எரி பொருட்கள் வீணாக்காமல் சிக்கனமாக உபயோகிப்பேன்.
2.சூரிய சக்தியை பயன்படுத்த முயற்சிப்பேன்.
பொன்மொழி :
ஒரு குறிக்கோளை அடையும் முயற்சியில்தான் மகிமை உள்ளது. அந்த குறிக்கோளை அடைவதில் இல்லை. எனவே, முயற்சி செய்யுங்கள் - மகாத்மா காந்தி
பொது அறிவு :
01.தேசிய நூலக தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
ஆகஸ்ட் 12 (August 12)
02.""இசைக் கருவிகளின் ராணி' என்று அழைக்கப்படும் கருவி எது?
வீணை (Veenai)
English words :
tear down – demolish, இடித்துத் தள்ளுதல்
தமிழ் இலக்கணம் :
அறிவியல் களஞ்சியம் :
எறும்புகளுக்குக் கண்கள் கூட ரொம்பத் தெளிவாகத் தெரியாது. ஆனால் மோப்ப உணர்வு அதிகம். இது மட்டுமில்லாமல் ஓரிடத்தில் உணவு இருப்பதைப் பார்க்கும் முதல் எறும்பு, அத்துகளின் அருகே சென்று தன் தலையில் உள்ள ஆண்டெனா போன்ற உறுப்பால் அதைத் தொட்டுப் பார்க்கிறது. அதன் பிறகு அங்கிருந்து திரும்பிச்செல்லும்போது உடலின் பின்பகுதியிலிருந்து ஃபெரமோன் என்ற வேதிப்பொருளைத் தரையில் கோடுபோல இட்டுக்கொண்டே செல்கிறது. இந்தக்கோடு அதன் கூடு வரை நீளும். இதை மோப்பம் பிடிக்கும் மற்ற எறும்புகளும் அந்தத் தடத்தை பின்பற்றிச் சென்று, உணவு இருக்கும் இடத்தை விரைவாகச் சென்றடைந்து விடுகின்றன.
அக்டோபர் 08
நீதிக்கதை
ஏன் வந்தாய்?
அடர்ந்த காட்டில் ஓர் அத்தி மரம் இருந்தது. அந்த மரம் மிகவும் அடர்த்தியாயிருந்தது. அந்த மரத்திலிருந்த பொந்து ஒன்றில், நாகம் ஒன்று வசித்து வந்தது. மற்றொரு பொந்தில், கழுகு ஒன்று வசித்து வந்தது. இரண்டுமே, மிகவும் வயது முதிர்ந்தவை. வெளியே சென்று உணவை தேட முடியாத நிலை. அதனால், அம்மரத்தில் வசித்த மற்ற பறவைகள், தங்களுக்குக் கிடைத்த உணவில் சிறு பங்கை தினமும் கொடுத்து வந்தன.
அந்த பறவைகள் கொடுக்கும் உணவை மட்டுமே உண்டு வாழ்ந்து வந்தன. ஒருநாள், பூனை ஒன்று அந்தப் பக்கமாக வந்தது. அப்போது அம்மரத்திலிருந்த பறவைகளின் கூட்டிலிருந்து அப்பறவைக் குஞ்சுகளின், கீச் கீச் என்று சத்தம் கேட்டது. ஆகா! இங்கே நமக்கு நிறைய உணவு கிடைக்கும் போலிருக்கிறதே! என்று எண்ணியது பூனை. உடனே, மெது மெதுவாக மரத்தில் ஏறி, பறவை குஞ்சுகள் என்ன செய்கின்றன என்று பார்த்தது பூனை. பூனையை கண்ட அக்குஞ்சுகள் பயந்துபோய், சத்தமாக கூச்சலிட்டன.
ஏன் இப்படிக் கூச்சல் போடுகிறீர்கள்? என்று கேட்டுக்கொண்டே கழுகு, தன் பொந்திலிருந்து எட்டிப் பார்த்தது. கழுகு மரத்தின் அருகில் பூனை வந்து கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டது. என்னைப் பார்த்து இக்குஞ்சுகள் எல்லாம் இப்படி பயந்து கத்துகின்றனவே! நீங்களாவது தைரியம் சொல்லக் கூடாதா? என்று கேட்டுக்கொண்டே கழுகின் பக்கம் வந்து, வணக்கம் செய்தது பூனை.
நீ யார்? என்று கேட்டுக் கொண்டே, தன் கண்களை இடுக்கிக் கொண்டு அதைப் பார்த்தது கழுகு. நான் செவியன் என்னும் பூனை. உங்களிடமெல்லாம் நட்புகொள்ள வந்தேன் என்றது பூனை. ஓடு! ஓடு! இங்கு நிற்காதே! இல்லையேல், உன் உயிருக்கே ஆபத்து நேரும் என்று பயமுறுத்தியது கழுகு.
ஏன் இப்படிச் சொல்கிறீர்கள். என்னைப் பற்றி தெரிந்துகொண்டு பேசுங்கள். ஒருவனை பார்த்தவுடனேயே தீர்மானித்துவிடக் கூடாது. அவைகள் நடத்தையைப் பார்த்தே தீர்மானிக்க வேண்டும் என்றது பூனை. நீ ஏன் இங்கு வந்தாய்... நட்புகொள்ள வந்தாயா? உண்மையைச் சொல்? என்று சற்று கோபத்துடன் கேட்டது கழுகு. நான், கங்கா நதியில் நாள்தோறும் குளித்துவிட்டு விரதம் இருந்து வருகிறேன். தாங்கள் மிகுந்த தர்மவான் என்று மற்ற பறவைகள் பேசிக் கொண்டது என் காதில் விழுந்தது. வயது முதிர்ந்த சான்றோரிடமே தருமம் கேட்க வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. அதனால்தான், இப்போது உங்களைத் தேடி வந்தேன் என்றது அந்த பூனை.
அது சரி! நீ மாமிசப் பிரியனாயிற்றே! அதிலும், கொன்று சாப்பிட அஞ்சமாட்டாயே! என்றது கழுகு. அதுமாதிரியான செயல்களையெல்லாம் விட்டுவிட்டேன். நான் காட்டிலுள்ள காய், கனி, கிழங்குகளையே சாப்பிட்டு வருகிறேன் நான்! என்றது பூனை. கழுகுக்கு, அப்பூனையின் மேல் நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது. சரி, அப்படியென்றால் நீ இங்கு தங்கிக் கொள்ளலாம் என்று அனுமதி கொடுத்துவிட்டது கழுகு. பூனை தன் கைவரிசையைக் காட்டத் தொடங்கிவிட்டது. அதன் உள்நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டது. நாளடைவில் அப்பூனை, அங்கிருந்த பறவைக் குஞ்சுகளை கொன்று சாப்பிடத் தொடங்கியது.
என்ன இது! நாள்தோறும் நம் குஞ்சுகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறதே நம்முடைய கூட்டில்! என அந்தந்த பறவைகளும் ஆழ்ந்து யோசிக்கத் தொடங்கின. இதையறிந்த பூனை, சில நாட்களில் அங்கிருந்து ஓடிப்போய்விட்டது. அதுகண்ட பறவைகள், அப்பூனை தங்கியிருந்த கழுகின் மரப்பொந்தை வந்து பார்த்தன. என்ன கொடுமை! அங்கு தம் குஞ்சுகளின் எலும்புகளும், சிறகுகளும் இருப்பதைக் கண்டன. கடுங்கோபம் கொண்டன. துரோகி! இந்தக் கழுகுதான் குஞ்சுகளையெல்லாம் கொன்று சாப்பிட்டு இருக்கிறது என்று கோபப்பட்டு, அப்பறவைகளனைத்தும், அக்கழுகின் மேல் பாய்ந்து கொத்திக் கொன்றன.
நீதி :
ஒருவனுடைய குணத்தைப்பற்றி தெரிந்து கொள்ளாமல் நட்பு கொள்ளக்கூடாது.
இன்றைய செய்திகள்
No comments:
Post a Comment