Saturday, March 21, 2020

MICE TEST - 22.03.20

**மைத்துளி வணக்கம்*"



**MICE TEST:95**


1.தமிழ்நாட்டில் புதியதாக கால்நடை மருத்துவ கல்லூரி எங்கு துவங்கப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவிக்கப்ட்டுள்ளது ?

A.சிவகங்கை
B.கள்ளக்குறிச்சி
C.தேனி
D.ஆண்டிபட்டி

2.பபாசி அமைப்பு ( தென்னிந்­திய புத்­தக விற்பனையாளர்  மற்றும் பதிப்பாளர் சங்கம்) வழங்கும் 2020–ம் ஆண்டுக்­கான  “கலை­ஞர் பொற்கிழி ",  விருது நாவல் பிரிவில்  யாருக்கு வழங்கப்பட இருக்கிறது ?

A.பொன்னீலன்
B.பெருமாள் முருகன்
C.ஜெயமோகன்
D.பூமணி

3. " I am also digital" என்ற தலைப்பில் , டிஜிட்டல் கல்வியறிவு குறித்த ஒரு திட்டத்தை    அறிமுகம் செய்த மாநிலம் எது ?

A.தமிழ்நாடு
B.கேரளா
C.பீகார்
D.தெலுங்கானா

4.அண்மையில் வெளியிடப்பட்ட  “ Adventures of Daredevil Democrat” என்ற நூல் , எந்த முதலமைச்சரின் கதையை விவரிக்கிறது?

A.ஜெயலலிதா
B.மு.கருணாநிதி
C.பிஜு பட்நாயக்
D.Y.S.ராஜசேகர ரெட்டி

5.எந்த பிராந்திய கிரிக்கெட் அணி தனது முதல் ரஞ்சி கோப்பையை வென்றுள்ளது ?

A.மும்பை அணி
B.கர்நாடக அணி
C.வங்க அணி
D.சௌராஷ்டிரா அணி

6.சமீபத்தில் காலமான ஜோகிந்தர் சிங் சைனி பின்வரும் எந்த விளையாட்டை சேர்ந்தவர்?

A.கிரிக்கெட்
B.கபடி
C.ஹாக்கி
D.தடகளம்

7.இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவராக தேர்வுசெய்யப்பட்டுள்ளவர்?

A.எம்.எஸ்.கே.பிரசாத்
B.சுனில் ஜோஷி
C.ராபின் சிங்
D.தோனி

8.நெல் ஜெயராமனின் நினைவை போற்றும் வகையில், எங்கு பாரம்பரிய நெல் &பாதுகாப்பு மையம் அமைக்கப்படவுள்ளது ?

A.நீடாமங்கலம்
B.கீரமங்கலம்
C.தஞ்சாவூர்
D.கும்பகோணம்

9.உத்தரகாண்ட் மாநிலத்தின் கோடைகால தலைநகராக அறிவிக்கபட்டுள்ள நகரம்?

A.ஜோஷிமத் (Joshimath)
B.ரிஷிகேஷ் (Rishikesh)
C.நைனிடால் (Nainital)
D.கைர்ஷைன் (Gairsain)


10. இந்தியாவின் முதல் பெண் மாலுமி யார் ?

A.ரேஷ்மா நிலோஃபர்.
B.பாவனா காந்த்
C.ஷிவாங்கி
D.அஸ்லி ஹாசன்

11.சர்வதேச மகிழ்ச்சி நாள் எந்த தேதியில் அனுசரிக்கப்பட்டது?

A.மார்ச் 19
B.மார்ச் 20
C.மார்ச் 21
D.மார்ச் 22

12.கீழடி அகழ்வாய்வு பற்றிய அறிக்கை எத்தனை மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளன?

A.24
B.12
C.34
D.9

13.இந்திய அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி சார்பாக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல் திருநங்கை யார் ?

A.பிரியா
B.ரியா
C.ராதிகா
 D.ரேவதி

14. இங்கிலாந்தில் நடைபெறும் கவுன்டி கிரிக்கெட் போட்டியில் பங்குபெற ஒப்பந்தம் செய்யப்பட்ட முதல் இந்தியர்?

A)கவாஸ்கர்
B) ரவிசாஸ்த்ரி
C)டிராவிட்
D).சச்சின்

15. கீழ்க்காணும் மருத்துவக்கல்லூரி மருத்துவமணையில் நூறு கோடியில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ மையம் அமைய உள்ள மருத்துவமணை எது?

A). காஞ்சிபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை

 B). செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை

C). வேலூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை

D) திருச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை

16. கீழ்காண்பவைகளில் எது தவறு?

A).தூக்கிலிடுவதற்கு பயன்படும் மணிலா கயிறுகள் பிஹாரில் உள்ள பக்ஸர் சிறையில் மட்டுமே தயாரிக்கப்படுகிறது.

B). தொடக்க காலத்தில் இந்தியாவில் தூக்கிலிடப் பயன்படும் கயிறுகள் பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலாவில் தயாரிக்கப்பட்டு வந்தது.

C). 1984 ல் இருந்து பிஹாரில் தயாரிக்கப்டுகிறது.

D).18 அடி நீளம் கொண்ட கயிற்றின் விலை ரூபாய் 21201.

17.Who will host G 20 summit in 2020?

A.Germany
B. France
C. Saudi Arabia
D.Spain

18.Which Indian singer tested positive for COVID 19 infection?

A. Neha Kakkar
B. Neethi Mohan
C. Kanikka kapoor
D. Palak Muchhal

19.The union defence ministry has signed a contract with which nations weapon industries?

A. Israel
B. America
C. France
D. Germany

20.Which country built fastest supercomputer to hunt for corono virus vaccine?

A. America
B. China
C.Italy
D.Spain


இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய லிங்க்......
_________________________________________________________________________



நேற்றைய சரியான விடைகள்

Ans for MT:94
1. b) ஆதித்ய பம்சாய்
2. d) நியூசிலாந்து
3. c) ஒலிம்பிக் தீபம்சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது என்பது தவறு. ஒலிம்பிக் தீபம் ஜப்பானிடம் ஒப்படைக்கப்பட்டது.
4. d) களிமண் ( பிரெஞ்சு ஒபன் போட்டிகளில் மட்டுமே களிமண் மைதானம் பயன்படுத்தப்படுகிறது.)
5. a) கால்பந்து
6. d) நிருபமா தத் ( தமிழில் மொழிபெயர்த்தவர் கமலாலயன்)
7. a) ராஜஸ்தான்

நேற்று சரியான விடைகளை பதிவிட்டவர்கள்


ஹோலிகிராஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திருச்சி

1. R.சந்தியா ஜோசப்பின், 8-ஆம் வகுப்பு (6/7)
2. P.தனுஷியா, 8-ஆம் வகுப்பு, (6/7)

அரசு மேல்நிலைப் பள்ளி, இளையந்தாவடிவிளை, கன்னியாகுமரி

1. S.N.சுதர்ஷினி, 8-ஆம் வகுப்பு, (6/7)



அனைவருக்கும் வாழ்த்துக்கள் இன்று 20 கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு உத்தரவினால் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டிய சூழ்நிலையில் மாணவர்களே உங்கள் குடும்பத்தினர் அனைவரையும் இதில் பங்கேற்க செய்யுங்கள். உங்கள் உறவினர்களுக்கும் இதை பகிருங்கள். எல்லாருமாக சேர்ந்து இருபது கேள்விகளுக்கும் விடைகளை கண்டுபிடியுங்கள். மேலும் சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய உணவு பொருட்களை அதிகமாக உண்ணுங்கள். முடிந்த அளவு வெளியில் செல்வதை தவிருங்கள். எதையும் விளையாட்டாக எடுத்துக்கொள்ள வேண்டாம். நம் அனைவரின் நலமே நமக்கு முக்கியம். எனவே ஒருவர் கூட பாதிப்படையாதவாறு விழிப்புணர்வோடும்,  கட்டுப்பாட்டோடும் இருக்க வேண்டியது நம் அனைவரின் கடமை. எனவே அரசிற்கும் ஒத்துழைத்து முடிந்த அளவு வெளியில் செல்லாமல் அவரவர்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment