Sunday, July 27, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.07.2025

உலகக் கல்லீரல் அழற்சி நாள்

 






திருக்குறள்: 

குறள் 161: 

ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத் 
தழுக்கா றிலாத இயல்பு. 

விளக்க உரை: 

ஒருவன் தன் நெஞ்சில் பொறாமை இல்லாமல் வாழும் இயல்பைத் தனக்கு உரிய ஒழுக்க நெறியாகக் கொண்டு போற்ற வேண்டும்.

பழமொழி :

Mistakes are the proof that you are trying. 

தவறுகள் உழைப்பை காட்டும் அடையாளங்காள்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. இயற்கை வளங்கள் கடவுள் நமக்கு அளித்த கொடை.


2. எனவே அவற்றை பேணிப் பாதுகாப்பேன்.

பொன்மொழி :

பொறாமை ஒரு புலி போன்றது . இரையை மட்டுமல்ல , பொறாமை கொள்பவருடைய இதயத்தையும் கிழித்து விடும் - மைக்கேல் பீர்

பொது அறிவு : 

01.பாலாறு எங்கே உற்பத்தி ஆகிறது?

நந்தி மலை- கர்நாடகா
Nandi Hills- Karnataka

02. சுருக்கெழுத்து முறையை கண்டுபிடித்தவர் யார்?

சர் ஐசக் பிட்மேன்
Sir Isaac Bitman

English words :

glint – to shine with small bright flashes of light. பளிச்சென்று மின்னுதல்

Grammar Tips: 

 Magical E

Letter V  will never come at the end of a word. To finish the word, we have to add E at the end like HavE, PavE, LovE, cavE.

அறிவியல் களஞ்சியம் :

 எறும்புகளுக்குக் கண்கள் கூட ரொம்பத் தெளிவாகத் தெரியாது. ஆனால் மோப்ப உணர்வு அதிகம். இது மட்டுமில்லாமல் ஓரிடத்தில் உணவு இருப்பதைப் பார்க்கும் முதல் எறும்பு, அத்துகளின் அருகே சென்று தன் தலையில் உள்ள ஆண்டெனா போன்ற உறுப்பால் அதைத் தொட்டுப் பார்க்கிறது. அதன் பிறகு அங்கிருந்து திரும்பிச்செல்லும்போது உடலின் பின்பகுதியிலிருந்து ஃபெரமோன் என்ற வேதிப்பொருளைத் தரையில் கோடுபோல இட்டுக்கொண்டே செல்கிறது. இந்தக்கோடு அதன் கூடு வரை நீளும். இதை மோப்பம் பிடிக்கும் மற்ற எறும்புகளும் அந்தத் தடத்தை பின்பற்றிச் சென்று, உணவு இருக்கும் இடத்தை விரைவாகச் சென்றடைந்து விடுகின்றன.

ஜூலை 28

உலக இயற்கை வளம் பாதுகாப்பு நாள்

உலக இயற்கை வளம் பாதுகாப்பு நாள் (World Nature Conservation Day) ஒவ்வோர் ஆண்டும் சூலை 28 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.

உலகிலுள்ள இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்காக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கம் 1948ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. உலகத்தில் ஏற்பட்டிருக்கும் சூழல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், அதனால் ஏற்படும் சவால்களை உலகம் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. ஆகவே இயற்கையை நாம் பாதுகாத்தால், இயற்கை நம்மைப் பாதுகாக்கும் என்கிற நோக்கில் இந்நாள் கொண்டாடப்படுகிறது.



உலகக் கல்லீரல் அழற்சி நாள்


உலகக் கல்லீரல் அழற்சி நாள் (World Hepatitis Day), ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 28 ஆம் நாள் அனுசரிக்கப்படுகிறது.கல்லீரல் அழற்சி நோய்களுக்கான அறிகுறிகள், தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகளைப் பற்றிய விழிப்புணர்வை உலக மக்களிடையே ஏற்படுத்தும் நோக்கத்தோடு இந்த நாள் உலக சுகாதார அமைப்பால் (WHO) ஏற்படுத்தப்பட்டது

நீதிக்கதை

 நரியின் சமயோசித புத்தி

ஒரு அடர்ந்த காட்டில் சிங்கம் ஒரு கூட்டம் சேர்த்தது. எல்லா மிருகமும் வந்தது. முதலில் ஒரு குரங்கைக் கூப்பிட்டு, என் உடம்பை முகர்ந்து பார் எப்படி இருக்கு? ன்னு சொல் என்றது சிங்கம். குரங்கு வந்து முகர்ந்து பார்த்துவிட்டு வாசனை நல்லா இல்லீங்க கொஞ்சம் மோசமாத்தான் இருக்குன்னு சொல்லியது. 

சிங்கம் கோபமடைந்து என் உடம்பையா அப்படிச் சொல்றேன்னு ஓங்கி ஒரு அறை விட்டுது. குரங்கு கீழே விழுந்துவிட்டது. அடுத்து ஒரு கரடியைக் கூப்பிட்டு. நீ வா வந்து பார்த்து சொல்லு என்றது. கரடி அந்தக் குரங்கைப் பார்த்துக்கிட்டே வந்தது. 

சிங்கத்தை முகர்ந்து பார்த்தது ஆகா! ரோஜாப்பூ வாசனை! ன்னு சொல்லுச்சு. பொய்யா சொல்றே? ன்னு ஓங்கி ஒரு அறை விட்டது. அதுவும் கீழே விழுந்தது. அடுத்தப்படியா ஒரு நரியைக் கூப்பிட்டு. நீதான் சரியாச் சொல்லுவ! நீ வந்து சொல்லு என்றது. 

நரி குரங்கையும் கரடியையும் பார்த்துக்கிட்டே வந்தது. சிங்கத்தை முகர்ந்து பார்த்து மன்னிக்கணும் தலைவா, எனக்கு மூணு நாளா ஜலதோஷம்! என்று சொல்லி நரித் தந்திரமாக தப்பிக்கொண்டது. 

நீதி :

நரியைப்போன்ற சமயோசித அறிவு எல்லா மனிதர்களுக்கும் இருத்தல் வேண்டும்.


இன்றைய செய்திகள்

28.07.2025

⭐மேட்டூர் அணையில் இருந்து 1 லட்சம் கன அடி தண்ணீர் திறக்க வாய்ப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

⭐தெரு நாய்களை கருணை கொலை செய்யலாம் - தமிழ்நாடு அரசு அனுமதி

⭐தொடர் கனமழை - ஒகேனக்கல் ஆற்றுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

⭐ஜனநாயக ரீதியில் குடவோலை முறை ஆட்சி செய்தவர்கள் சோழர்கள் - பிரதமர் மோடி பெருமிதம்

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀 இங்கிலாந்து   இந்தியா  இடையிலான டெஸ்ட் தொடரில் 
90 ரன்னில் அவுட்டாகி சதத்தை தவறவிட்ட கே.எல்.ராகுல்

🏀இங்கிலாந்து   இந்தியா  இடையிலான டெஸ்ட் தொடரில் சதம் விளாசி அவுட்டானார் கேப்டன் கில்.


Today's Headlines

⭐1 lakh cubic feet of water are likely to be released from Mettur Dam, so
A flood warning is given to the coastal people. 

⭐ The Tamil Nadu government allows street dogs can be euthanized.

⭐ Water flow increases in Hogenakkal Falls due to  Continuous heavy rains. 

⭐Prime Minister Modi has proudly mentioned that the Chola Empire was the one that ruled democratically under the Kudavolai system.

 SPORTS NEWS 

🏀 KL Rahul missed his century by losing his wicket in the 90th run in the England-India Test series. 

🏀 Captain Gill scored a century in the England-India Test series.



Covai women ICT_போதிமரம்

Thursday, July 24, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 25.07.2025

ஜிம் கார்பெட்






திருக்குறள்: 

குறள் 155: 

ஒறுத்தாரை யொன்றாக வையாரே வைப்பர் 
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து. 

விளக்கம்: 

தீங்கு செய்தவரைப் பொறுக்காமல் வருத்தினவரை உலகத்தார் ஒரு பொருளாக மதியார்; ஆனால், பொறுத்தவரைப் பொன்போல் மனத்துள் வைத்து மதிப்பர்.

பழமொழி :

Dreams don't work, unless you do. 

உழைப்பில்லாமல் கனவுகள் பலிக்காது.

இரண்டொழுக்க பண்புகள் :

1.எனது பள்ளியின் வளர்ச்சிக்கான பணிகளில் எனது பெற்றோர்களும் ஈடுபட வலியுறுத்துவேன்.

2.ஊர் கூடி செய்யும் செயல்கள் அதிக நன்மை பயக்கும் என்பதால் அனைவரோடு சேர்ந்து எங்கள் பள்ளியின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன்

பொன்மொழி :

கடும் உழைப்பிற்குப் பின் நல்ல பலன் கிடைக்கும் என்ற எண்ணமே வெற்றின் ரகசியம் --- -- பி.வி.சிந்து

பொது அறிவு : 

01. தேசிய பால்வள ஆராய்ச்சி நிறுவனம் எங்கு உள்ளது?

கர்னால்-ஹரியானா
Karnal, Haryana

02. அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகளை பிரிக்கும் கால்வாயின் பெயர் என்ன?
பத்து டிகிரி கால்வாய்
The ten-degree canal

English words :

allotment –an amount of something that is allowed to have.ஒதுக்கீடு

Grammar Tips: 

 When to use 'im' as a prefix 
Im-" is generally used before words starting with "m", "p", or "b"
Ex. immature, impossible, impartial

அறிவியல் களஞ்சியம் :

 பெட்ரோல் நிலையங்களில் செல்பேசியைப் பயன்படுத்தினால், அதிலிருந்து வெளியேறும் வெப்பத்தின் மூலம் விரைவாக, பெட்ரோலில் தீ பிடித்து எரியும்! அதனால் பெட்ரோல் நிலையங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் அங்கெல்லாம் செல் பேசியை இயக்கக் கூடாதென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 25

ஜிம் கார்பெட் அவர்களின் பிறந்தநாள்


புகழ்பெற்ற புலி வேட்டைக்காரரான ஜிம் கார்பெட் (ஜூலை 25, 1875- ஏப்ரல் 19, 1955) இமயமலைத் தொடரில் உள்ள குமாவுன் மலையில் அமைந்துள்ள கோடைவாழிடமான நைனித்தாலில் பிறந்தவர். ஆங்கில மரபினர். இயற்கையைப் பேணுவதில் ஆர்வம் மிகக்கொண்டிருந்தவர். புலிகள் மற்றும் சிறுத்தைப்புலிகள் பற்றிய இவரது நூல்களுக்காகப் புகழ்பெற்றவர்.

நீதிக்கதை

தவளையும் எருதும்

ஒரு காட்டுக்கு பக்கத்துல இருக்குற குட்டைல நிறைய தவளைகள் வாழ்ந்துகிட்டு வந்துச்சுங்க ,அந்த குட்டை பக்கம் எந்த மிருகங்களும் அவ்வளவா வராது,அதனால மத்த மிருகங்கள் இருக்கிறதே அந்த தவளைகளுக்கு தெரியாது.

அந்த தவளைகள்ல ஒரு தவளை மட்டும் ரொம்ப பெருசா இருந்துச்சு ,அந்த தவளை எப்பவும் தன்ன ரொம்ப பலசாலின்னு காமிச்சிக்க விரும்பும் ,பக்கத்துல எதாவது தட்டான் பூச்சி வந்தா கூட தன்னோட வாய பலூன் மாதிரி ஊதி டப்புனு சத்தம் கொடுத்து பூச்சிகளை விரட்டும்.

ஒருநாள் அந்த குட்டை பக்கம் ஒரு எருது வந்துச்சு ,

உடனே அங்க இருந்த தட்டான் பூச்சிகள் எல்லாம் அந்த தவளைகிட்ட வந்து சொல்லுச்சுங்க இங்க பாத்தியா உன்ன விட மிகப்பெரிய மிருகம் ஒன்னு வந்திருக்கு ,உன்னோட பலத்த அந்த எருதுகிட்ட காமி போனு சொல்லுச்சுங்க.

உடனே கோபமான தவளை அந்த எருதுக்கு முன்னாடி போய் நின்னுச்சு ,அந்த எருதுக்கு இந்த சின்ன தவளை ஒரு பொருட்டாவே இல்ல.

அது அதுபாட்டுக்கு பக்கத்துல இருக்குற புல்ல மேஞ்சுக்கிட்டு இருந்துச்சு ,இத பாத்த தவளை எப்பயும்போல வாய பலூன் மாதிரி ஊதி சத்தம் கொடுத்துச்சு ,அந்த சத்தமும் எருத ஒன்றும் செய்யலைனு தெரிஞ்சதும்,

வாய நல்லா குவிச்சு ஊதிக்கிட்டே இருந்துச்சு ஒரு கட்டத்துல அதோட வலிமை அடங்கி டப்புனு தவளையோட உடம்பு வெடிச்சி போச்சு ,தான்கிற அகங்காரத்தோட இருந்த தவளை அப்படியே செத்துப்போச்சு .

நீதி தன் நிலை மிஞ்சி பெருமை கொண்டால் அழிவு


இன்றைய செய்திகள்

25.07.2025

⭐அரசுத் தொடக்கப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 3.94 லட்சமாக அதிகரிப்பு – அமைச்சர் அன்பில் மகேஸ் பெருமிதம்.

⭐இந்தியாவில் இணைய குற்றத்தின் மூலம் கடந்த 2024-ஆம் ஆண்டில் மட்டும் ரூபாய் 22,845.73 கோடியை மக்கள் இழந்துள்ளனர்.

⭐கேரளாவில் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு- 8 மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை.

⭐ நாட்டுக்கே வழிகாட்டும் வகையில் புதிய திட்டங்களை நிறைவேற்றி முன்னணி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என நாடாளுமன்றத்தில் ஒன்றிய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி பாராட்டியுள்ளார்தனிநபர் வருமானத்தில் தமிழ்நாடு இந்தியாவில் 2வது இடம் பெற்றுள்ளது.தேசிய அளவிலான தனி நபர் வருமானம் ரூ.1.14 லட்சம் என்பதை விட தமிழ்நாடு ரூ.1.96 லட்சமாக உயர்ந்துள்ளது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀 இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள்- டி20 தொடர் அட்டவணை வெளியீடு.

🏀ENG vs IND டெஸ்ட் போட்டியில் காயமடைந்த ரிஷப் பண்டிற்கு எலும்பு முறிவு.


Today's Headlines

⭐ Tamil Nadu Educational Minister Anbil Mahesh proudly announced that Enrollment in government primary schools has increased to 3.94 lakh in this academic year.

⭐ Indian people lost Rs 22,845.73 crore due to cybercrime in 2024 alone.

⭐ In Kerala, a Government Warning has been issued for 8 districts for Heavy rainy days.

⭐ As Tamil Nadu has been ranked 2nd in Indian Revenue, it is considered the leading state among Indian states. Per Capita Income for our Nation is 1.14 lakhs, but Tamil Nadu surpassed this as its Per Capita Income is 1.96 lakhs –information and praise by Union Minister Pankaj Chowdri.

 SPORTS NEWS 

🏀 England vs. India's ODI-T20 series schedule released

 🏀Rishabh Pant, injured in the England vs India Test match, suffers a fracture


Covai women ICT_போதிமரம்

Wednesday, July 23, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 24.07.2025

யஷ் பால் 

    






திருக்குறள்: 

குறள் 153: 

இன்மையு ளின்மை விருந்தொரால் வன்மையுள் 
வன்மை மடவார்ப் பொறை. 

விளக்கம்: 

வறுமையுள் வறுமை, விருந்தினரைப் போற்றாமல் நீக்குதல்; வல்லமையுள் வல்லமை என்பது அறிவிலார் தீங்கு செய்தலைப் பொறுத்தலாகும்.

பழமொழி :

A goal without a plan is just a wish. 

திட்டமில்லாத இலக்கு வெறும் ஆசையே.

இரண்டொழுக்க பண்புகள் :

1.எனது பள்ளியின் வளர்ச்சிக்கான பணிகளில் எனது பெற்றோர்களும் ஈடுபட வலியுறுத்துவேன்.

2.ஊர் கூடி செய்யும் செயல்கள் அதிக நன்மை பயக்கும் என்பதால் அனைவரோடு சேர்ந்து எங்கள் பள்ளியின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன்

பொன்மொழி :

மாற்றம் இல்லாமல் முன்னேற்றம் சாத்தியமற்றது .மேலும் மனதை மாற்ற முடியாதவர்கள் எதையும் மாற்ற முடியாது - பெர்னாட்ஷா

பொது அறிவு : 

01.ஓவிய மேதை பாப்லோ பிக்காசோ எந்த நாட்டைச் சேர்ந்தவர்?

ஸ்பெயின்(Spain)

02. உலகில் முதன் முதலில் மிதக்கும் அணு உலையை உருவாக்கிய நாடு எது? அதன் பெயர் என்ன?

ரஷ்யா (அகாடமிக் லோமோனோசோவ்)
Russia(Akademik Lomonosov)

English words :

violate – to break a rule or agreement,ஒரு சட்டம், விதி, ஓர் ஒப்பந்தம் முதலியவற்றை மீறுதல்

Grammar Tips: 

 Usage of from and since 
"From" marks the beginning of a period, action, or event. 

"Since" indicates a point in time from which something continues up to the present.
Ex:
"The store is open from 9 am to 5 pm." 

"She has been working here since 2020."

அறிவியல் களஞ்சியம் :

 செல்பேசியிலிருந்து கதிர்வீச்சுகள் வெளியேறுகின்றன. அக்கதிர்வீச்சுகளிலிருந்து நிறைய நோய்கள் உடலில் குடியேறுகின்றன. அவை:- தோலில் தடிப்புகள் உண்டாதல் - தலைமுடி கொட்டுதல் - மூளையில் உள்ள நரம்புச் செல்கள் பாதிப்படைதல் - இரத்த நாளங்கள் அழிதல் - தைராயிடு சுரப்பிகள் கெடுதல் - தொற்று நோய்த் தாக்குதல் -‘லுக்கேமியா’, ‘லிம்போமா’ போன்ற புற்று நோய்கள் ஏற்படுதல் - இன்னும், லிம்போசைட் செல்களின் எண்ணிக்கை குறைதல் போன்றவை!

ஜூலை 24

யஷ் பால் அவர்களின் நினைவுநாள்

யஷ் பால் (Yash Pal, 26 நவம்பர் 1926 - 24 சூலை 2017) இந்திய அறிவியலாளர் ஆவார்.இவர் விண்வெளிக் கதிர்களைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டார். இவர் முதலில் டாட்டா அடிப்படை ஆராய்ச்சிக் கழகத்தில் பணியைத் தொடங்கி, பின்னர் இந்திய அரசின் பல்கலைக்கழக மானியக் குழுவில் தலைமைப் பொறுப்பிலும் இருந்துள்ளார்.

அறிவியலின் வளர்ச்சிக்கு பாடுபட்டதற்காக, ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் இவருக்கு கலிங்கா விருதை வழங்கிச் சிறப்பித்தது.

இந்திய அரசின் பத்ம பூசண் விருதை 1976ஆம் ஆண்டில் பெற்றார்.

2013ஆம் ஆண்டில், பத்ம விபூசண் விருதைப் பெற்றார்.

நீதிக்கதை

 உதவாத நண்பர்கள் 

ஒரு காட்டுல நிறைய மிருகங்கள் வாழ்ந்துகிட்டு இருந்துச்சு ,அதுல ஒரு முயல் குட்டிக்கு நிறைய நண்பர்கள் இருந்தாங்க

எப்பவும் அந்த முயல்குட்டி அதோட நண்பர்கள் கூடவே இருக்கும் ,என்ன நிகழ்ச்சி நடந்தாலும் தன்னோட நண்பர்கள் கிட்டயே நேரத்தை செலவிடும்.

ஒருநாள் அந்த காட்டுக்கு ஒரு வேட்டைக்கார கும்பல் வந்துச்சு ,அவுங்க நிறைய வேட்டை நாய்கள் வச்சிருந்தாங்க ,

அந்த நாய்கள் எல்லாம் மிருகங்களை தொரத்தி வேட்டைக்காரங்க பிடிக்க உதவி செஞ்சுகிட்டு இருந்துச்சுங்க

கொஞ்ச நேரத்துக்கு அப்புறமா இந்த முயல் குட்டிய அந்த வேட்டை நாய்கள் பாத்துடுச்சுங்க.உடனே அந்த நாய்கள் எல்லாம் முயலை தொரத்த ஆரம்பிச்சதுங்க

உடனே அந்த முயல் தன்னோட மான் நண்பர்கிட்ட ஓடிப்போயி என்ன காப்பாத்துங்க மான் நண்பரேனு சொல்லுச்சு ,அதுக்கு மான்குட்டி என்னால முடியாதுனு சொல்லிடுச்சு

அடுத்ததா பக்கத்துல இருந்த குரங்கு நண்பர் கிட்ட போயி காப்பாத்த சொல்லுச்சு ,அதுக்கு குரங்கும் என்னால முடியாதுனு சொல்லிடுச்சு

அடுத்து கரடி நண்பர்கிட்ட போயி காப்பாத்த சொல்லுச்சு ,அதுவும் என்னால முடியாதுனு சொல்லிடுச்சு.

அதுக்கு அப்புறமாத்தான் முயலுக்கு தோணுச்சு ஒரு ஆபத்துனு வரும்போது தன்னோட நிலைமையை தான்தான் சரி பண்ணிக்கிடனும் இன்னொருத்தர நம்பக்கூடாதுனு தோணுச்சு

உடனே பக்கத்துல இருக்குற அடர்ந்த புதற்குள்ள போயி,ஆடாம அசையாம உக்காந்துகிட்டு இருந்துச்சு ,அந்த வேட்டை நாய்கள் கொஞ்ச நேரம் தேடிட்டு போயிடுச்சுங்க

அதுக்கு அப்புறமா நண்பர்களை பொழுது போக்குக்கு மட்டும் வச்சுக்கிட்டு ,முழுமையா நம்புறதை விட்டுட்டு ரொம்ப நாள் வாழ்ந்துச்சு அந்த முயல் .

நீதி –தன் கையே தனக்கு உதவி

இன்றைய செய்திகள்

24.07.2025

⭐MBBS, BDS மருத்துவப்படிப்பு-விண்ணப்பங்களை திருத்தி சமர்ப்பிக்க கால அவகாசம்

⭐வங்காளதேச விமான விபத்து-மருத்துவர்கள் குழுவை அனுப்பிய இந்தியா

⭐புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடங்கியது

⭐அமெரிக்கா-ஜப்பான் இடையே மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம்: டிரம்ப் அறிவிப்பு

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀சீன ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் பி.வி.சிந்து வெற்றி

🏀ENG vs IND 4th Test
இங்கிலாந்தில் 1000 ரன்களுக்கு மேல் அடித்து சாதனைப் பட்டியலில் இணைந்த கே.எல். ராகுல்


Today's Headlines

⭐Deadline to revise and submit  the applications  for MBBS, BDS Medical Courses is extended 

⭐ India sent our medical team and doctors to Bangladesh for an Air Crash accident.

⭐ Preparations for election to choose new vice president began 

⭐Trump announced the biggest trade deal between America and Japan.

 SPORTS NEWS 

🏀China Open Badminton: PV Sindhu won in the first round

 🏀ENG vs IND 4th Test: KL Rahul joins record list by scoring over 1000 runs in England.


Covai women ICT_போதிமரம்

Tuesday, July 22, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 23.07.2025

பால கங்காதர திலகர்







திருக்குறள்: 

குறள் 151: 

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை 
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.   

 விளக்கம்:

 தன்னை வெட்டுவோரையும் விழாமல் தாங்குகின்ற நிலம் போல், தம்மை இகழ்வாரையும் பொறுப்பதே தலையான பண்பாகும்.

பழமொழி :

The expert in anything was once a beginner.

 ஒவ்வொரு  நிபுணரும், ஒரு காலத்தில் புதியவர் தான்.

இரண்டொழுக்க பண்புகள் :

1.எனது பள்ளியின் வளர்ச்சிக்கான பணிகளில் எனது பெற்றோர்களும் ஈடுபட வலியுறுத்துவேன்.

2.ஊர் கூடி செய்யும் செயல்கள் அதிக நன்மை பயக்கும் என்பதால் அனைவரோடு சேர்ந்து எங்கள் பள்ளியின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன்

பொன்மொழி :

நீ நடந்து போக பாதை இல்லையே என்று வருத்தப்படாதே நீ நடந்தால் அதுவே புதிய பாதை-  அடால்ஃப் ஹிட்லர்

பொது அறிவு : 

01.இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள எல்லைக்கோட்டின் பெயர் என்ன?

                ராட்க்ளிஃப்  கோடு 

( Radcliffe  Line )

02. இந்தியாவில் இலக்கியத்திற்கான நோபல் பரிசை முதன் முதலில் பெற்றவர் யார்? 

                 ரவீந்திரநாத் தாகூர்

 (Rabindranath Tagore)

English words :

vigilant – careful and looking out for danger.ஆபத்து குறித்து எச்சரிக்கையாயிருக்கிற.

Grammar Tips: 

√  How long - used to talk about time. 

 Example: how long does it take to reach Delhi ?                   

√  How far - used to talk about distance.

 Example : How far is Chennai from Coimbatore?

அறிவியல் களஞ்சியம் :

 செல் பேசியிலிருந்து வெளியேறும் மின்காந்த கதிர்வீச்சு செவிமடுக்கும் போதெல்லாம், காதையொட்டி அமைந்துள்ள திசுக்களை நசுக்கிவிடுகிறது.  இதனால் கேட்கும் திறனைக் ‘காது’ மெதுவாக இழந்துவிடுகிறது.  செல்பேசியும், வானொலி போன்ற ஓர் ஒலிபரப்புச் சாதனமே.  இவற்றிலிருந்து வெளியேறும் கதிர்வீச்சை கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தைகள் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.  பதினாறு வயதுக்குக் குறைந்த சிறுவர்கள் அதிக நேரம் செல்பேசியைப் பயன்படுததும்போது பாதிப்பு பன்மடங்கு பெருகும்,  படிக்கும் நேரமும் பாதியாய் குறையும்.

ஜூலை 23

பால கங்காதர திலகர் அவர்களின் பிறந்தநாள்



பால கங்காதர திலகர் (Bal Gangadhar Tilak, மராத்தி: बाळ गंगाधर टिळक, பால கங்காதர திலகர்) 23 சூலை 1856 –1 ஆகத்து 1920 (அகவை 64), ஒரு இந்தியத் "தேசியவாதியும்", "சமூக சீர்திருத்தவாதியும்", விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். இந்திய விடுதலை இயக்கத்தின் முதல் மக்கள் ஆதரவு பெற்ற தலைவரும் இவரே. இவரது பெயருடன் கௌரவப் பட்டமான "லோகமான்ய" என்பதையும் சேர்த்து அழைப்பதுண்டு. இந்தியாவுக்கு முதன் முதலில் தன்னாட்சி கோரியவர்களுள் திலகரும் ஒருவர். தன்னாட்சி எனது பிறப்புரிமை அதனை நான் பெறுவேன் என்னும் இவரது புகழ் பெற்ற கூற்று இன்றும் இந்தியாவில் நினைவுகூரப்படுகிறது. முதன் முதலில் மக்களிடையே சுதந்திரம் பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியவர் ஆவார். மக்களிடையே அவருக்கு மிகுந்த செல்வாக்கு இருந்தது. 

நீதிக்கதை

 ஆந்தையும் அன்னமும்

ஒரு காட்டு பகுதியில நிறைய பறவை கூட்டம் வாழ்ந்துகிட்டு வந்துச்சு,ஒருநாள் ஓடைக்கு பக்கத்துல ஒரு அன்னப்பறவை கூட்டம் வந்துகிட்டு இருந்துச்சு ,அதுங்களோட அரசன் பின்னாடி எல்லா அன்ன பறவைகளும் வரிசையா வந்துகிட்டு இருந்துச்சுங்க

இத தூரத்துல இருந்து ஒரு ஆந்தை பாத்துச்சு ,அடடா இந்த அன்னப்பறவை அரசர் எவ்வளவு கம்பீரமா இருக்காரு ,நம்மளும் ஒரு நாள் நம்ம கூட்டத்துக்கு அரசரா மாறணும்னு நினைச்சது

ஒருநாள் அந்த அன்னப்பறவையோட அரசர் தனிமையில இருந்துச்சு ,அப்ப அங்க வந்த ஆந்தை அவர்கூட பேசுச்சு

நல்லா பேசுன ஆந்தைக்கும் அன்னப்பறவை அரசருக்கும் நட்பு உண்டாச்சு,

அன்னப்பறவை தன்னோட கூட்டத்தை பத்தியும் தன்னோட ஆட்சிய பத்தியும் நிறைய பேசும் ,ஆனா ஆந்தை தன்னோட வாழ்க்க பத்தி எதுவும்  சொல்லாது

ஒருநாள் காட்டுக்கு பக்கத்துல ஒரு போர் நடந்துச்சு ,அந்த போர் படைகள் இருக்குற பாசறைக்கு பக்கத்துல பறந்து போச்சு ஆந்தை

அப்பத்தான் அந்த படை எங்கயோ கிளம்ப தயாராகிட்டு இருந்துச்சு ,அப்ப ஆந்தை எதேச்சையா கூவுச்சு ,ஆந்தையோட சத்தத்தை கேட்ட படை வீரர்கள் ,அபச குணமா இருக்குனு படைய நாளைக்கு நகர்த்திக்கிடலாம்னு அங்கேயே தங்கிட்டாங்க

இத பாத்த ஆந்தை அடடா என்னோட குரலுக்கு இவ்வளவு மவுசானு நினைச்சிகிடுச்சு ,மறுநாளும் படை புறப்புடுற நேரத்துல கத்த ஆரம்பிச்சது ,அன்னைக்கும் படையை நகர்த்தாம விட்டுட்டாங்க

இத பாத்த ஆந்தைக்கு ஒரு யோசனை வந்துச்சு ,தன்னோட நண்பரான அன்ன ராஜாகிட்ட தம்பட்டம் அடிக்க ஒரு விஷயம் கிடைச்சுடுச்சுனு நினச்சு அவர்கிட்ட வந்துச்சு.

அரசரே,நானும் இப்ப ஒரு படைக்கு அரசரா மாறிட்டேன் ,என்னால ஒரு படையவே கட்டுப்படுத்த முடியும்னு சொல்லுச்சு ,ஓ அப்படியா ஆந்தையாரேனு ஆச்சார்ய பட்டுச்சு அன்னப்பறவை.

மறுநாள் அன்ன பறவை அரசரை கூட்டிகிட்டு படை இருக்குற இடத்துக்கு வந்துச்சு ஆந்தை ,அங்க வந்த உடனே அன்ன பறவை அரசருக்கு தெரிஞ்சிடுச்சு ,ஆந்தை ஏதோ தப்பு செய்துன்னு.

பாருங்க தயாரா இருக்குற இந்த படை நான் சொன்ன உடனே கலைஞ்சு போயிடும்னு சொல்லிட்டு ,படை இருக்குற பக்கம் பறக்க ஆரம்பிச்சது ஆந்தை ,இன்னைக்கும் ஆந்தை அபசகுனமா கத்திட கூடாதுனு காத்துகிட்டு இருந்த ஒரு போர் வீரன் ஒரு ஈட்டிய எடுத்து ஆந்தை மேல வீசினான்

அந்த ஆந்தை அங்கேயே அடிபட்டு செத்து போச்சு .

நீதி : வீண் பெருமை படு குழியில் தள்ளி விடும்.

இன்றைய செய்திகள்

23.07.2025

 ⭐சென்னையில் உள்ள 11,760 மழைநீர் வடிகால்களில் 1,034 கி.மீ. பகுதி தூர்வாரப்பட்டுள்ளது. 600 சேதமடைந்த கால்வாய்கள் சீரமைக்கப்பட்டு, 201 குளங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

⭐இந்தியா முழுவதும் உள்ள 766 மருத்துவ கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிக்க ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 900 பேர் அனுமதிக்க பட்டுள்ளனர்.

⭐வங்காளதேசத்தில் பள்ளி மீது போர் விமானம் விழுந்து விபத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக உயர்வு

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀 ஒருநாள் போட்டியில் பேட்டிங் தரவரிசையில் இந்தியாவின் தீப்தி சர்மா 10 இடங்கள் முன்னேறினார்.
இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா முதல் இடத்தில் நீடிக்கிறார்.

Today's Headlines: 

⭐In Chennai,Out of 11,760 stormwater drainage  1,034 km. of the area has been desilted. 600 damaged canals have been repaired and 201 Pools have been renovated.

⭐One lakh 15 thousand 900 students have been admitted to study MBBS in 766 medical colleges across India. 

⭐Toll rises to 27 after fighter jet crashes into school in Bangladesh

 *SPORTS NEWS* 

🏀 India's Deepti Sharma moves up 10 places in ODI batting rankings. 
India's Smriti Mandhana remains at number one.

Covai women ICT_போதிமரம்