Thursday, July 24, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 25.07.2025

ஜிம் கார்பெட்






திருக்குறள்: 

குறள் 155: 

ஒறுத்தாரை யொன்றாக வையாரே வைப்பர் 
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து. 

விளக்கம்: 

தீங்கு செய்தவரைப் பொறுக்காமல் வருத்தினவரை உலகத்தார் ஒரு பொருளாக மதியார்; ஆனால், பொறுத்தவரைப் பொன்போல் மனத்துள் வைத்து மதிப்பர்.

பழமொழி :

Dreams don't work, unless you do. 

உழைப்பில்லாமல் கனவுகள் பலிக்காது.

இரண்டொழுக்க பண்புகள் :

1.எனது பள்ளியின் வளர்ச்சிக்கான பணிகளில் எனது பெற்றோர்களும் ஈடுபட வலியுறுத்துவேன்.

2.ஊர் கூடி செய்யும் செயல்கள் அதிக நன்மை பயக்கும் என்பதால் அனைவரோடு சேர்ந்து எங்கள் பள்ளியின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன்

பொன்மொழி :

கடும் உழைப்பிற்குப் பின் நல்ல பலன் கிடைக்கும் என்ற எண்ணமே வெற்றின் ரகசியம் --- -- பி.வி.சிந்து

பொது அறிவு : 

01. தேசிய பால்வள ஆராய்ச்சி நிறுவனம் எங்கு உள்ளது?

கர்னால்-ஹரியானா
Karnal, Haryana

02. அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகளை பிரிக்கும் கால்வாயின் பெயர் என்ன?
பத்து டிகிரி கால்வாய்
The ten-degree canal

English words :

allotment –an amount of something that is allowed to have.ஒதுக்கீடு

Grammar Tips: 

 When to use 'im' as a prefix 
Im-" is generally used before words starting with "m", "p", or "b"
Ex. immature, impossible, impartial

அறிவியல் களஞ்சியம் :

 பெட்ரோல் நிலையங்களில் செல்பேசியைப் பயன்படுத்தினால், அதிலிருந்து வெளியேறும் வெப்பத்தின் மூலம் விரைவாக, பெட்ரோலில் தீ பிடித்து எரியும்! அதனால் பெட்ரோல் நிலையங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் அங்கெல்லாம் செல் பேசியை இயக்கக் கூடாதென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 25

ஜிம் கார்பெட் அவர்களின் பிறந்தநாள்


புகழ்பெற்ற புலி வேட்டைக்காரரான ஜிம் கார்பெட் (ஜூலை 25, 1875- ஏப்ரல் 19, 1955) இமயமலைத் தொடரில் உள்ள குமாவுன் மலையில் அமைந்துள்ள கோடைவாழிடமான நைனித்தாலில் பிறந்தவர். ஆங்கில மரபினர். இயற்கையைப் பேணுவதில் ஆர்வம் மிகக்கொண்டிருந்தவர். புலிகள் மற்றும் சிறுத்தைப்புலிகள் பற்றிய இவரது நூல்களுக்காகப் புகழ்பெற்றவர்.

நீதிக்கதை

தவளையும் எருதும்

ஒரு காட்டுக்கு பக்கத்துல இருக்குற குட்டைல நிறைய தவளைகள் வாழ்ந்துகிட்டு வந்துச்சுங்க ,அந்த குட்டை பக்கம் எந்த மிருகங்களும் அவ்வளவா வராது,அதனால மத்த மிருகங்கள் இருக்கிறதே அந்த தவளைகளுக்கு தெரியாது.

அந்த தவளைகள்ல ஒரு தவளை மட்டும் ரொம்ப பெருசா இருந்துச்சு ,அந்த தவளை எப்பவும் தன்ன ரொம்ப பலசாலின்னு காமிச்சிக்க விரும்பும் ,பக்கத்துல எதாவது தட்டான் பூச்சி வந்தா கூட தன்னோட வாய பலூன் மாதிரி ஊதி டப்புனு சத்தம் கொடுத்து பூச்சிகளை விரட்டும்.

ஒருநாள் அந்த குட்டை பக்கம் ஒரு எருது வந்துச்சு ,

உடனே அங்க இருந்த தட்டான் பூச்சிகள் எல்லாம் அந்த தவளைகிட்ட வந்து சொல்லுச்சுங்க இங்க பாத்தியா உன்ன விட மிகப்பெரிய மிருகம் ஒன்னு வந்திருக்கு ,உன்னோட பலத்த அந்த எருதுகிட்ட காமி போனு சொல்லுச்சுங்க.

உடனே கோபமான தவளை அந்த எருதுக்கு முன்னாடி போய் நின்னுச்சு ,அந்த எருதுக்கு இந்த சின்ன தவளை ஒரு பொருட்டாவே இல்ல.

அது அதுபாட்டுக்கு பக்கத்துல இருக்குற புல்ல மேஞ்சுக்கிட்டு இருந்துச்சு ,இத பாத்த தவளை எப்பயும்போல வாய பலூன் மாதிரி ஊதி சத்தம் கொடுத்துச்சு ,அந்த சத்தமும் எருத ஒன்றும் செய்யலைனு தெரிஞ்சதும்,

வாய நல்லா குவிச்சு ஊதிக்கிட்டே இருந்துச்சு ஒரு கட்டத்துல அதோட வலிமை அடங்கி டப்புனு தவளையோட உடம்பு வெடிச்சி போச்சு ,தான்கிற அகங்காரத்தோட இருந்த தவளை அப்படியே செத்துப்போச்சு .

நீதி தன் நிலை மிஞ்சி பெருமை கொண்டால் அழிவு


இன்றைய செய்திகள்

25.07.2025

⭐அரசுத் தொடக்கப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 3.94 லட்சமாக அதிகரிப்பு – அமைச்சர் அன்பில் மகேஸ் பெருமிதம்.

⭐இந்தியாவில் இணைய குற்றத்தின் மூலம் கடந்த 2024-ஆம் ஆண்டில் மட்டும் ரூபாய் 22,845.73 கோடியை மக்கள் இழந்துள்ளனர்.

⭐கேரளாவில் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு- 8 மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை.

⭐ நாட்டுக்கே வழிகாட்டும் வகையில் புதிய திட்டங்களை நிறைவேற்றி முன்னணி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என நாடாளுமன்றத்தில் ஒன்றிய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி பாராட்டியுள்ளார்தனிநபர் வருமானத்தில் தமிழ்நாடு இந்தியாவில் 2வது இடம் பெற்றுள்ளது.தேசிய அளவிலான தனி நபர் வருமானம் ரூ.1.14 லட்சம் என்பதை விட தமிழ்நாடு ரூ.1.96 லட்சமாக உயர்ந்துள்ளது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀 இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள்- டி20 தொடர் அட்டவணை வெளியீடு.

🏀ENG vs IND டெஸ்ட் போட்டியில் காயமடைந்த ரிஷப் பண்டிற்கு எலும்பு முறிவு.


Today's Headlines

⭐ Tamil Nadu Educational Minister Anbil Mahesh proudly announced that Enrollment in government primary schools has increased to 3.94 lakh in this academic year.

⭐ Indian people lost Rs 22,845.73 crore due to cybercrime in 2024 alone.

⭐ In Kerala, a Government Warning has been issued for 8 districts for Heavy rainy days.

⭐ As Tamil Nadu has been ranked 2nd in Indian Revenue, it is considered the leading state among Indian states. Per Capita Income for our Nation is 1.14 lakhs, but Tamil Nadu surpassed this as its Per Capita Income is 1.96 lakhs –information and praise by Union Minister Pankaj Chowdri.

 SPORTS NEWS 

🏀 England vs. India's ODI-T20 series schedule released

 🏀Rishabh Pant, injured in the England vs India Test match, suffers a fracture


Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment