Tuesday, July 15, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 16.07.2025

தன்ராஜ் பிள்ளை

  






திருக்குறள்: 

குறள் 106: 
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க 
துன்பத்துள் துப்பாயார் நட்பு. 

விளக்கம் : உன் துன்பத்துள் துணையாக நின்றவரின் நட்பை விடாதே; அறிவு ஒழுக்கங்களில் குற்றம் இல்லாதவரின் நட்பை மறந்து விடாதே.

பழமொழி :

Knowledge grows when shared. 

அறிவு பகிர்ந்தால் தான் பெரிதாகும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. வாழ்க்கையில் ஒரு செயலை ஆரம்பிப்பதற்கு முன், எவ்வாறு செய்து முடிக்க போகிறோம் என்று திட்டமிடுதல் மிக அவசியம். 

2. எனவே எந்த செயலையும் செய்யும் முன் திட்டமிடுவேன், செயல்படுவன்.

பொன்மொழி :

கட்டளை இட விரும்புபவர் முதலில் கீழ்படிவதற்கு கற்றுக்கொள்ள வேண்டும் - அரிஸ்டாட்டில்

பொது அறிவு : 

01.வந்தே மாதரம் என்ற சொல் எந்த புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது?

ஆனந்த மடம் - எழுதியவர்-
பக்கிம் சந்தர் சட்டர்ஜி
Ananthmath- Author-
Bankim chandra chattopadhyay

02. மிசோரம் மாநிலத்தின் தலைநகரம் எது?

ஐஷோல்( Aizawl)

English words :

isle - an island, தீவு.‌ 

Aisle - a passageway between rows of seats, இருக்கை நீள்வரிசைகளுக்கு இடையில் உள்ள வழி.

Grammar Tips: 

 How to identify silent letters ?

 C

Often silent in the combination 'sc' (e.g., scissors, muscle) or before 'k' or 'q' (e.g., acquire, acquiesce).

அறிவியல் களஞ்சியம் :

 மனித உடலில் மிகப்பெரிய உறுப்பு எதுவென்றால், அது சருமம் தான். வளர்ந்த ஒரு ஆணின் சருமத்தின் பரப்பளவு 20 சதுர அடி இருக்கும். இதுவே பெண் என்றால் 17 சதுர அடி இருக்கும். ஒவ்வொரு இரவிலும் தூங்கும் பொழுது, உடல் சுமார் 8 மில்லி மீட்டர் வளர்ச்சி அடைகிறது. பகலில் இந்த உடல் வளர்ச்சி சுருங்கி விடும். உட்காரும் பொழுதும், நிற்கும் பொழுதும், முதுகில் உள்ள குறுத்தெலும்புகள் அழுத்தப்பட்டு சுருக்கம் ஏற்படுகிறது. தூங்கும் பொழுது அழுத்தம் இல்லாததால் நீண்டு வளர்கிறது.

ஜூலை 16

தன்ராஜ் பிள்ளை அவர்களின் பிறந்தநாள்

நாகலிங்கம்பிள்ளை தன்ராஜ் பிள்ளை (பிறப்பு - சூலை 16. 1968, புனே) இந்தியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற ஹாக்கி விளையாட்டு வீரர் ஆவார். இவர் இந்திய அணியின் தலைவராகவும் இருந்துள்ளார். இவர் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெற்றவர். 1998ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய போட்டிகளில் தன்ராஜ் பிள்ளை தலைமையிலான இந்திய அணி பங்கேற்றது. இந்தத் தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றது. அந்த ஆசிய போட்டிகளில் அதிக கோல் அடித்த வீரர் என்ற பெருமையை தன்ராஜ் பிள்ளை பெற்றார். அத்துடன் 32 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிய போட்டிகளில் இந்திய ஹாக்கி அணி தங்கம் வெல்ல முக்கிய காரணமாக அமைந்தார். அதற்கு முன்பாக 1966ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய போட்டிகளில் இந்திய அணி தங்கம் வென்றது. இவை தவிர 2002ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில் அதிக கோல் அடித்த வீரர் என்ற பட்டத்தையும் இவர் பெற்றார். 

நீதிக்கதை

 பட்டாணி

ஒரு நாள் ஒரு மூதாட்டி மண் அடுப்பில் வைத்து சமையல் செய்து கொண்டிருந்தாள். அவள் அடுப்பில் வைத்திருந்த தண்ணீர் கொதித்ததால் அதற்குள் சில காய்கறிகளை போட்டாள். அப்போது பட்டாணி அந்தப் சட்டியிலிருந்து வெளியே குதித்து வந்து, “என்னை வேக வைக்கவேண்டாம். என்னை சமைக்கவேண்டாம்” என்று கத்தியது.

“மூதாட்டியோ நீ மரியாதையாக பழையபடி சட்டிக்குள் போகிறாயா? இல்லை உன்னை நசுக்கட்டுமா?” என்றாள்.

ஆனால் மூதாட்டியின் உத்தரவை பட்டாணி கேட்கவில்லை. அங்கிருந்து வேகமாக ஓட்டம் பிடித்தது. அப்போது “நில் நில் ஓடாதே’ உன்னுடன் நானும் வருகிறேன்” என்று இன்னொரு குரல் கேட்டது. பட்டாணி திரும்பிப் பார்த்தது, அப்படிக் கத்தியது என்று சொன்னது எரிந்து கொண்டிருந்த ஒரு துண்டு நிலக்கரி.

“அடுப்பிற்குள் இருந்தால் எனக்கு மூச்சு முட்டுகிறது. அதனால் நானும் உன்னுடன் வெளியுலகைப் பார்க்க வருகிறேன்” என்றது, நிலக்கரி.

“என்ன வெளியுலகைப் பார்க்கப் போகிறாயா?. அப்படியென்றால் என்னையும் உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள்”. என்றது கீழே கிடந்த வைக்கோல் ஒன்று.

“சரி, வா போகலாம்” என்று நிலக்கரியும் பட்டாணியும்? வைக்கோலை தங்களுடன் கூட்டு சேர்த்துக் கொண்டன.

மூன்றும் சேர்ந்து நடந்தபோது சாலையின் ஓரிடத்தில் விரிசல் விட்டிருந்தது. அந்த இடத்தில் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது.

“இனி நாம் தொடர்ந்து செல்ல முடியாது. அதனால் நான் அடுப்பிற்கே போய் விடுகிறேன்” என்றது, நிலக்கரி.

“அப்படியென்றால் நானும் அடுப்பில் எரியும் சட்டிக்குள் போய் விடுவேன்” என்றது பட்டாணி.

“நண்பர்களே சோர்ந்து விடாதீர்கள். நான் இந்த பாலத்திற்கு (விரிசல்) இணைப்பாக இருக்கிறேன். நீங்கள் இருவரும் என்மீது ஏறி நடந்து மறுபக்கம் போய்விடலாம்” என்று நம்பிக்கைïட்டியது, வைக்கோல்.

முதலில் பட்டாணி, வைக்கோல் மீது ஏறி விரிசலின் மறுபக்கத்தை அடைந்தது. ஆனால் எரிந்து கொண்டிருந்த நிலக்கரி, வைக்கோல் மீது ஏறியதும் அது தீப்பிடித்துக் கொண்டது. இதனால் இரண்டும் சேர்ந்து தண்ணீருக்குள் விழுந்தன.

“ஷ்..ஷ்..ஷ்…”தன் மீது எரிந்து கொண்டிருந்த நெருப்பு அணைந்ததும் நிலக்கரி பெருமூச்சு விட்டது.

அந்த வினோத சத்தத்தைக் கேட்ட பட்டாணி சிரிக்க ஆரம்பித்தது. தொடர்ந்து அது பலமாகச் சிரித்ததால் வெடித்து சிதறி அதிலிருந்த ஒவ்வொரு பட்டாணியும் ஓட ஆரம்பித்தன.

அந்தப் பட்டாணிகள் அனைத்தும் ஒரு தையல்கடையை நோக்கிச் சென்றன. தையல்காரரிடம் தயவு செய்து எங்களை ஒன்றாக வைத்து தைத்து விடுங்கள் என்று கேட்டுக் கொண்டன.

தையல்காரரும் பட்டாணிகளின் வேண்டுகோளை ஏற்று ஒரு தடித்த நூல் கொண்டு தைத்து விட்டார்.

இதனால் தான் அன்று முதல் பட்டாணியை நாம் உரிப்பதற்கு அதன் மேல் தோலில் நூல் போல் உள்ள பகுதியை உரிக்கவேண்டியிருக்கிறது

இன்றைய செய்திகள்

16.07.2025

⭐ பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு 45 நாட்களுக்குள் தீர்வு காண தமிழக அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது.

⭐மணிப்பூரில் பதுக்கி வைக்கப்பட்ட வெடிபொருள்கள், ஆயுதங்கள் பறிமுதல்.

⭐விண்வெளி நிலையத்தில் இருந்து வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினார் சுபான்ஷு சுக்லா.

⭐துருக்கியுடன் 40 ஆண்டுகளாக தனி நாடு கோரி போரிட்டு வந்த ஈராக்கிய குர்திஷ் அமைப்பினர் தங்கள் ஆயுதங்களை கைவிட்டு, அமைதிக்கான முயற்சி எடுத்துள்ளனர்.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀 இந்திய ஆடவர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

🏀 இந்திய மகளிர் அணியும் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.


Today's Headlines

☘ The Tamil Nadu government has taken steps to resolve the public petitions within 45 days.

 ☘ Confiscation of ammunition and weapons in Manipur.

☘ Subhanshu Shukla has successfully returned to Earth from the Space Station. 

☘The Iraqi Kurdish organizations, who have been fighting for a separate country for 40 years, have abandoned their weapons and trying to make peace. 

🏀 Sports News 🏀 The Indian men are touring the UK and playing in a five -match Test series.

 🏀 The Indian women's team is also touring the UK and playing the match.

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment