Wednesday, August 6, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -07.08.2025

கலைஞர் மு. கருணாநிதி

   






திருக்குறள்: 

குறள் 165: 

அழுக்கா றுடையார்க் கதுசாலும் ஒன்னார் 
வழுக்கியுங் கேடீன் பது. 

விளக்க உரை: 
பொறாமை உடை‌யவர்க்கு வேறு பகை வேண்டா. அஃது ஒன்றே போதும், பகைவர் தீங்கு செய்யத் தவறினாலும் தவறாது கேட்டைத் தருவது அது.

பழமொழி :

Knowledge shared is knowledge doubled. 

பகிரப்பட்ட அறிவு இரட்டிப்பு அறிவாகும்

இரண்டொழுக்க பண்புகள் :

1.எல்லோருக்கும் உதவி செய்வது உன்னதமான வாழ்க்கை.

2.எனவே என்னால் இயன்ற அளவு உதவி செய்வேன்.

பொன்மொழி :

தவறுகளை பார்க்காதே அதற்கான தீர்வுகளை கண்டு பிடி 

   ஹென்றி ஃபோர்ட்

பொது அறிவு : 


01.முத்துப்பேட்டை சதுப்பு நிலக்காடு தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் உள்ளது?

திருவாரூர்(Thiruvarur)

02. இந்தியாவில் முதல் விலங்குகளுக்கான மேம்பால வழித்தட திட்டம் எங்கு தொடங்கப்பட்டுள்ளது?

ரணதம்போர் புலிகள் காப்பகம்
Ranthambore Tiger Reserve.

English words :

recant - Publically renounce or withdraw one's faith, மற்றவர்களுக்கு முன் தனது மத நம்பிக்கையை மறுத்தல்

Grammar Tips: 

 Continuation of the silent letter 

"e" at the end of a word: 

The "e" is often silent and can affect the pronunciation of the vowel before it.
(e.g., "cake", "make", "hope"). 

"P" before "s" is silent. Psychology, pseudo.

அறிவியல் களஞ்சியம் :

குடற்காய்ச்சல் (Typhoid) தடுப்புச்சத்து நீரை (Vaccine), சர் அலமோர்த் ரைட் (Sir Almorth Wright) (1861-1947) என்ற பிரிட்டிஷ் அறிவியலார் நோய்களை உண்டாக்கும் நுண் உறுப்பமைதியுடைய உயிரான நோய் நுண்மங்களைத் தனிச்சிறப்பாக ஆய்ந்து, அந்த நச்சுக்காய்ச்சலை எதிர்த்துத் தடைக்காப்புச் (immunity) செய்யக் கண்டுபிடித்தார். 

ஆகஸ்ட் 07

இரவீந்தரநாத் தாகூர் அவர்களின் நினைவுநாள்

இரவீந்தரநாத் தாகூர்






இரவீந்தரநாத் தாகூர் (Rabindranath Tagore) வங்காள மொழி: রবীন্দ্রনাথ ঠাকুর, மே 7, 1861- ஆகஸ்ட் 7, 1941) புகழ் பெற்ற வங்காள பல்துறையறிஞர் ஆவார். 19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலும் இவர் வங்காள இலக்கியம் மற்றும் இசை வடிவத்தில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்தார். மேலும் இந்தியக் கலைகளிலும் மாற்றங்களைக் கொண்டு வந்தார். இவர் கீதாஞ்சலி எனும் கவிதைத் தொகுப்பின் ஆசிரியர் ஆவார்.  இந்த கவிதைத் தொகுப்பிற்காக இவர் 1913-ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசினைப் பெற்றார். இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர் இவரேயாவார். மேலும் ஐரோப்பியர் அல்லாத ஒருவர் இந்த விருதைப் பெறுவதும் இதுவே முதல் முறையாகும்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் நினைவுநாள்

முத்துவேல் கருணாநிதி (M. Karunanidhi, சூன் 3, 1924 - ஆகத்து 7, 2018) இந்திய அரசியல்வாதிகளுள் ஒருவர். தமிழக முதல்வராக ஐந்துமுறை பதவிவகித்தவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும் 1969 முதல் 2018 வரை பதவி வகித்துள்ளார். 1969,1971,1989,1996,2006 என ஐந்து முறை தமிழக முதலமைச்சராகப் பணியாற்றினார். கருணாநிதி, தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர்.
கை ரிக்ஷா ஒழிப்புத்திட்டம், பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுத்திட்டம், எல்லா மாவட்டங்களிலும் அரசு மருத்துவமனைகள், கலை அறிவியல் கல்லூரிகள் பல பல்கலைக்கழகங்கள் எனப் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தியவர்.

இடஒதுக்கீடு கொள்கையை நடைமுறைப்படுத்தி, 50 விழுக்காட்டில் 30 விழுக்காடு பிற்படுத்தப் பட்டோருக்கும், 20 விழுக்காடு மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கும், 18 விழுக்காடு தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கும், 3 விழுக்காடு அருந்ததியருக்கும், 3.5 விழுக்காடு இஸ்லாமியருக்கும், 1 விழுக்காடு மலைவாழ் மக்களுக்கும் அளித்து அனைத்து சமூகத்திலும் அடித்தட்டு மக்கள் கல்வி, வேலை வாய்ப்புகளை உறுதி செய்ததனால் மானுட மேம்பாட்டுக் குறியீட்டில் இந்திய மாநிலங்களிலேயே தமிழ்நாடு மூன்றாம் இடத்தில் உள்ளது.

நீர்ப்பாசனம், மின்சாரம், வேளாண்மை, தொழிலாளர் நலன், நிலச் சீர்த்திருத்தம் ஆகிய துறைகளில் மேம்பாட்டுத் திட்டங்களை வளர்த்ததால் தமிழ்நாடு உணவு தானிய உற்பத்தியில் பல சாதனைகளைப் படைத்து வருகிறது. சாலை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியதாலும், தொழில் துறை முதலீடுகளை ஈர்ப்பதற்கு கலைஞரின் ஆட்சிக்காலங்களில் செயல் திட்டங்களை அறிமுகப்படுத்தியதாலும் தமிழகம் தொழில் துறையிலும் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் ஒரு சீரான வளர்ச்சியை பெற்றிருக்கிறது.

நீதிக்கதை

 அன்பின் மதிப்பு

அக்பர் என்கிற அரசன் ஒருவன் நோய்வாய்ப்பட்டு, பல நாட்களாகப் படுத்தப்படுக்கையாகக் கிடந்தான். அவனைப் பார்க்க தினமும் பல பிரமுகர்கள் வந்துகொண்டிருந்தனர். 

அப்போது, ஒரு விவசாயி தன்னைத் தடுத்த காவலாளிகளையும் பொருட்படுத்தாமல், மன்னனின் படுக்கையருகே சென்றான். அவனது கலைந்த தலைமுடியும், ஆடையில் படிந்திருந்த தூசியும் அவன் தன் கிராமத்திலிருந்து வெகுதூரம் நடந்து வந்திருக்கிறான் என்பதை அக்பர் அறிந்து கொண்டார்.

அவன் மன்னனிடம், அரசே உங்கள் உடல்நிலை சரியாக வேண்டுமென்று எங்கள் ஊர் மாரியம்மனுக்குப் பொங்கல் வைத்து அந்தப் பிரசாதத்தைக் கொண்டு வந்திருக்கிறேன் ஏற்றுக்கொள்ளுங்கள் என்றான். 

அவன் பிரசாதத்தை வெளியே எடுத்ததும் அது கெட்டுப்போயிருந்தது. அரசனோ, பிரசாதத்தைப் பெற்றுக்கொண்டு, தன் கழுத்தில் இருந்த முத்துமாலையைக் கழற்றி அந்த விவசாயிக்கு பரிசாகக் கொடுத்து அனுப்பினான். 

மன்னனுக்கு வேண்டிய பிரமுகர் ஒருவர், அரசே, கெட்டுப்போன பொங்கலுக்கா முத்து மாலை பரிசு? என்று கேட்டார். மன்னனோ, அது கெட்டிருந்தாலும் அந்த பிரசாதத்தை நான் சாப்பிட்டுக் குணமடைய வேண்டும் என்று கள்ளங்கபடமற்ற மனதுடன் தன் கிராமத்திலிருந்து ஒரு வாரம் நடந்து வந்திருக்கிறான். 

அவனது அன்பு உண்மையானது. உண்மையான அன்புக்கு மதிப்பு மிக அதிகம். நான் அளித்த முத்துமாலை கூட அவனது அன்புக்கு ஈடாகாது என்று கூறினான். 

நீதி :
நமது அன்பு உண்மையாக இருந்தால், கடவுளே கையைக் கட்டிக் கொண்டு, நமக்கு சேவை புரிய வந்து நிற்பார்.

இன்றைய செய்திகள்

07.08.2025

⭐தொழில் வளர்ச்சி பரவல் அதிகமுள்ள மாநிலமாகவும், வாகனம், எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி அதிகமுள்ள மாநிலமாகவும் தமிழ்நாடு திகழ்கிறது.

⭐முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை நீர்மட்டம்- 5 மாவட்டங்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

⭐ தமிழ்நாட்டில் காவல் உதவி ஆய்வாளர்களால் நிர்வகிக்கப்பட்டு வந்த 424 காவல் நிலையங்களில் 280 காவல் நிலையங்களை ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் நிலையங்களாக தரம் உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

⭐ உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தரகாஷி மாவட்டத்தில் உள்ள தரலியில் ஏற்பட்ட மேகவெடிப்பினால் ஏற்பட்ட நிலச்சரிவு & கீர் கங்கா ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில், குடியிருப்புகள், பொதுமக்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀கிராண்ட் மாஸ்டர்ஸ் 2025 சதுரங்கப் போட்டி   ஆகஸ்ட் 7 இன்று முதல் தொடங்குகிறது.

🏀கிரிக்கெட்-இந்தியாவின் புதிய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜுக்கு பெரும் ஆதரவு கிடைக்கிறது


Today's Headlines

🌟Tamil Nadu is the highest state in terms of the spread of industry, and with the highest number of vehicles and electronics exports. 

🌟Vaigai Dam, which reaches its full capacity with the resources. A flood alert has been given by collectors for 5 districts.

🌟 The Tamil Nadu government has improved the quality of 280 police stations,  supervised by inspectors, out of the 424 police stations managed by the police assistant inspectors.

🌟A landslide caused by a cloudburst in Dharali in Uttarkashi district of Uttarakhand and flash floods in the Khir Ganga river have swept away homes and civilians.

🏀 Sports News 

🏀 The 2025 Chess Tournament begins today on 7th August. 

🏀Mohammed Siraj got  great support as India's new fast bowler

Covai women ICT_போதிமரம்

Tuesday, August 5, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -06.08.2025

சர் அலெக்ஸாண்டர் ஃபிளெமிங்

  






திருக்குறள்: 

குறள் 161: 
ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத் 
தழுக்கா றிலாத இயல்பு.       

விளக்க உரை: 
ஒருவன் தன் நெஞ்சில் பொறாமை இல்லாமல் வாழும் இயல்பைத் தனக்கு உரிய ஒழுக்க நெறியாகக் கொண்டு போற்ற வேண்டும்.

பழமொழி :

Every day is a new beginning. 

ஒவ்வொரு நாளும் ஒரு புதிய துவக்கம்.

இரண்டொழுக்க பண்புகள் :

1.எல்லோருக்கும் உதவி செய்வது உன்னதமான வாழ்க்கை.

2.எனவே என்னால் இயன்ற அளவு உதவி செய்வேன்.

பொன்மொழி :

புதுமை படைக்கும் ஆற்றலே தலைவரையும் பின்பற்றுவோரையும் வேறுபடுத்தி காட்டுகிறது.

     ஸ்டீவ் ஜாப்ஸ்

பொது அறிவு : 

01.உலகின் மிக நீண்ட எல்லை கோடு எந்த இரு நாடுகளுக்கு இடையே உள்ளது?

கனடா மற்றும் அமெரிக்க
ஐக்கிய நாடுகள்
Canada and United states of America

02. உயிரற்ற குளிர் பாலைவனம் என்று அழைக்கப்படும் கிரகம் எது?

செவ்வாய் (Mars)

English words :

genuine – real; true. மெய்யான,போலியல்லாத

Grammar Tips: 

 Identifying silent letter patterns. 

b" is silent after "m": 

The "b" is usually silent (e.g., "comb", "thumb", "climb"). 

gh" after a vowel: 

The "gh" is often silent after a vowel (e.g., "thought", "though", "night").

அறிவியல் களஞ்சியம் :

 வெசலியஸ் ஸ்பெயின் நாட்டு மாமன்னர் ஐந்தாம் சார்லஸுக்கும் (Emperor Charles v) அவர் மகன் அரசர் இரண்டாம் பிலிப்புக்கும் (King Philip II) அரண்மனை மருந்தியல் நிபுணராக இருந்தார். மனித உடலைக் கூறு கூறாக்கிப் பகுத்தாய்வதற்காக (dissections) உடல்களை வலிந்து பற்றிக் கேள்விமுறைத் தேர்வு ஆய்வு செய்ததால் அவருடைய புகழ். அவருடைய உயிரைக் காப்பாற்ற முடியாமல் பழிக்கப்பட்டுக் கொல்லுமாறு ஆணைக்குட்படுத்தியது

ஆகஸ்ட் 06

சர் அலெக்ஸாண்டர் ஃபிளெமிங் (Sir Alexander Fleming) (ஆகஸ்ட் 6, 1881 – மார்ச் 11, 1955) நுண்ணுயிர் கொல்லியான சிதைநொதியைக் கண்டுபிடித்தவர். மேலும், நுண்ணுயிர் கொல்லியான பெனிசிலினை பெனிசிலியம் நொடேடம் (Penicillium notatum) என்ற பூஞ்சையிலிருந்து பிரித்தெடுத்தார்.

உலகம் அறிந்துள்ள மருத்துவ முன்னேற்றங்களுள் பெனிசிலின் கண்டுபிடிப்பு தனிச்சிறப்பு வாய்ந்தது. பெனிசிலின் காலத்திற்கு முன் பிரசவத்தில் பெண்கள் இறப்பதும், பிறந்தபின் குழந்தைகள் இறப்பதும் சர்வ சாதாரணம். லேசான சிராய்ப்புகளும் கீறல்களும் கூட மரணத்திற்கு இட்டுச் சென்றன. ஒரு நுண்ணுயிரை வைத்து இன்னொன்றைக் கொல்லமுடிகிற பெனிஸிலின் போன்ற நச்சுமுறி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் பல நோய்களிலிருந்து மனிதர்களைக் காப்பாற்ற முடிந்தது. பெனிசிலினைக் கண்டு பிடித்து நவீன நச்சுமுறி மருந்துகள் யுகத்தைத் தொடங்கிவைத்த பெருமைக்குரிய விஞ்ஞானிதான் அலெக்ஸாண்டர் ஃப்பௌமிங். பெனிசிலின் உலகெங்கிலும் உள்ள 20 கோடி மக்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளது என்கிறது ஒரு மதிப்பீடு.

1928 -ஆம் ஆண்டில் நுண்ணுயிர்கள் வளர்க்கப்பட்ட ஒரு தட்டை நோக்கிய போது, லைசோசைம் அதுவரை செய்திராத ஒரு செயலைக் காளான் செய்திருந்ததைத் தற்செயலாகக் கண்டார். கொப்புளங்கள், கட்டிகள், மூக்கு, தொண்டை, தோல் இவற்றில் ஏற்படும் தொற்றுநோய்களை வரவழைக்கும் ஸ்டாபைலொகாக்கி எனப்படும் கிருமிகளைக் காளான் அழித்திருந்தது. அது மட்டுமல்ல, அந்தக் காளானின் சாரம் வெள்ளை அணுக்களை அழிக்கவில்லை என்றும், வேறு திசுக்களைப் பாதிக்கவில்லை என்றும் சோதித்துத் தெரிந்து கொண்டார். காளானில் பரவிய அப்பொருளுக்கு ‘பெனிசிலின்’ எனப் பெயரிட்டார் ஃப்ளெமிங். ஆனால் பெனிசிலினைப் பெரிய அளவில் அப்போது உற்பத்தி செய்ய இயலவில்லை. ஹோவர்டு ஃப்ளோரே, எர்னஸ்ட் செயின் ஆகியோர் அடங்கிய ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகக் குழுவினர் 14 ஆண்டுகள் கழித்து அதைச் சாதித்தனர். பெனிசிலின் ஒவ்வாமை உடையவர்களுக்கு வேறு பாதுகாப்பான நச்சுக்கொல்லி மருந்துகளைக் கண்டுபிடிப்பதிலும் அக்குழுவினர் வெற்றியடைந்தனர்.

நீதிக்கதை

 கைமேல் பலன் கிடைத்தது

அரசன் ஒருவன் சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவனாக இருந்தான். அரண்மணை ஜோதிடர் இந்த நம்பிக்கை மேல் குளிர்க்காய்ந்து கொண்டிருந்தார். ஒரு நாள் ஜோதிடர் அரசே, அதிகாலை எழுந்தவுடன் இரண்டு காக்கைகளை ஒன்றாகப் பார்த்தால் நாள் சிறக்கும் என்றார். மன்னன் சேவகனை அழைத்து காலையில் எங்கேயாவது இரண்டு காக்கைகள் தென்பட்டால் சொல் என்று கட்டளையிட்டான். சேவகன் தினமும் பொழுது விடியும் முன்பே தெருவிற்கு சென்றுவிடுவான். 

ஒரு நாள் அரண்மனைக்குப் பக்கத்துத் தெருவில் இரண்டு காக்கைகள் ஒன்றாக அமர்ந்திருப்பதைக் கண்டான். அடடா! நல்ல சகுனம், இன்று மன்னர் நமக்கு நிச்சயம் பதவி உயர்வு கொடுப்பார் என்று மகிழ்ச்சியுடன் மன்னரிடம் சென்று விபரம் சொன்னான். இதைக் கேட்ட மன்னன் சேவகனுடன் அந்த இடத்திற்கு சென்றான். அதற்குள் ஒரு காக்கை போய்விட்டது. மன்னனுக்கு மூக்கின் மேல் கோபம் வந்து விட்டது. தளபதியை அழைத்து இந்தப் பொறுப்பற்ற சேவகனுக்குப் பத்து கசையடி கொடு என்று உத்தரவிட்டான். 

சேவகன் சிரிக்க ஆரம்பித்தான். மன்னனுக்கு கோபம் அதிகமானது. ஏன் சிரிக்கிறாய் என்று சொல்லாவிட்டால் இன்னமும் பத்து கசையடி என்று உறுமினான். சேவகன் சொன்னான். மகா மன்னரே! இன்று நான் மட்டும்தான் அதிகாலையில் இரட்டைக் காக்கைகளைப் பார்த்தேன். கை மேல் பலன் கிடைத்து விட்டது அல்லவா? என்றான். மன்னருக்கு அப்போதுதான் சகுனம் பார்ப்பது தவறு என்று உரைத்தது.

இன்றைய செய்திகள்

06.08.2025

⭐கிளாம்பாக்கத்தில் ரூ.18 கோடியில் 3 மாடிகளுடன் காவல் நிலையம் - மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

⭐மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை நீட்டிக்க முடிவு: மாநிலங்களவையில் தீர்மானம் நிறைவேற்றம்

⭐அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு முறையால் இந்தியாவின் ஆடை தயாரிப்புத் துறையில் 20 லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம் எழுந்துள்ளது

⭐டாடா குழுமம் வசமிருக்கும் பிரிட்டனைச் சேர்ந்த ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் முதல் இந்திய CEO-வாக தமிழரான P.B.பாலாஜி நியமனம்.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀இந்தியாவும் இங்கிலாந்தும்  5வது டெஸ்டில் சமநிலையில் உள்ளன: ஓவலில் வரலாறு படைக்கப்பட்டது.

🏀இந்திய ஆண்கள் கால்பந்துக்கான புதிய மேலாளராக காலித் ஜமீல் பொறுப்பேற்றார்


Today's Headlines

⭐ Chief Minister MK Stalin has inaugurated the Kilambakkam Police Station, which has three floors and is worth Rs. 18 crore.

⭐  Rajya Sabha Resolution passed about the decision to extend President's rule in Manipur state 

⭐New US tax regime threatens to put 2 million people jobless in India's garment sector  

⭐Tata Group-owned Jaguar Land Rover in Britain appoints Tamil P.B. Balaji as the first Indian CEO.

 SPORTS NEWS 

🏀 India and England draw in 5th Test: History made at The Oval stadium.

🏀New manager for Indian men's football: Khalid Jameel took charge.

Covai women ICT_போதிமரம்

Monday, August 4, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -05.08.2025

நீல் ஆல்டன் ஆம்ஸ்ட்ராங்

 






திருக்குறள்: 

குறள் 214: 

ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் 
செத்தாருள் வைக்கப் படும். 

விளக்க உரை: 

உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவுபவனே உயிரோடு வாழ்பவன். உதவாதவன் இருந்தாலும் இறந்தவனாகவே எண்ணப்படுவான்.

பழமொழி :

You reap what you sow.

நீ எதை விதைத்தாயோ அதையே அறுவடையாகப் பெறுவாய்.

இரண்டொழுக்க பண்புகள் :

1.எல்லோருக்கும் உதவி செய்வது உன்னதமான வாழ்க்கை.

2.எனவே என்னால் இயன்ற அளவு உதவி செய்வேன்.

பொன்மொழி :

அன்பில்லா வாழ்க்கை என்பது பூக்கள் அல்லது பழம் இல்லாத மரத்தை போன்றது.

* கலில் ஜிப்ரான்*

பொது அறிவு : 

01. நியூ இந்தியா என்ற பத்திரிக்கையை தொடங்கியவர் யார்

Dr.அன்னிபெசன்ட் அம்மையார்
Dr.Annie Besant.

02. உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது என்ன?

65 வயது

English words :

authentic – to understand that the given object or idea is real or genuine. மெய்யானதாக அல்லது போலியல்லாததாக அறியப்பட்ட

Grammar Tips: 

 Why a university but not an university?

The word "university" is pronounced with a "yoo" sound at the beginning, which is a consonant sound, rather than a vowel sound like "oo" in "umbrella".

அறிவியல் களஞ்சியம் :

 1543-ஆம் ஆண்டில் வெசலியஸ் மனித உடலின் அமைப்புப் பற்றிய மிக முக்கியமான நூலான டி யுமானி கார்போரிஸ் வெப்ரிகா (De Humani Corporis Fabrica) என்பதனை வெளியிட்டார். உயிரியல் ஓர் அறிவியலாக வளர்வதற்கான முன்னறிவிப்பைத் தெரிவித்த இந்த நூல், தசைகளின் பிரிவுகளுக்கான டைட்டியனின் (titian) மாணவர் ஜோன் ஸ்டீபன் வேன்கால்கார் (Jan Stephen van calcar) என்பவரால் வரையப்பட்ட வரைபடங்களைக் கொண்டுள்ளது.

ஆகஸ்ட் 05

நீல் ஆல்டன் ஆம்ஸ்ட்ராங்  அவர்களின் பிறந்தநாள்


நீல் ஆல்டன் ஆம்ஸ்ட்ராங் (Neil Armstrong, நீல் ஆம்ஸ்ட்ரோங், ஆகத்து 5, 1930 – ஆகத்து 25, 2012) ஓர் அமெரிக்க விண்வெளி வீரரும் சந்திரனில் தரையிறங்கிய முதல் மனிதரும் ஆவார். அத்தோடு இவர் வான்வெளிப் பொறியியலாளர், கப்பல்படை விமானி, வெள்ளோட்ட விமானி, மற்றும் பல்கலைக்கழகப் பேராசியர் போன்ற பதவிகளையும் வகித்துள்ளார். ஆம்ஸ்ட்ராங், விண்வெளி வீரராக வருவதற்கு முன்னர் ஐக்கிய அமெரிக்கக் கடற்படையில் அதிகாரியாக இருந்து கொரியப் போரில் பணியாற்றினார். போருக்குப் பின்னர் பெர்டூ பல்கலைக்கழகத்தில் தனது இளங்கலைப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டு தேசிய வானூர்தியியல் ஆலோசனை செயற்குழுவின் அதிவேக விமானம் நிலையத்தில் வெள்ளோட்ட விமானியாகப் பணி புரிந்தார். தேசிய வானூர்தியியல் ஆலோசனை செயற்குழுவே தற்பொழுது டிரைடன் விமான ஆராய்ச்சி மையம் என்று அழைக்கப்படுகின்றது. 

நீதிக்கதை

 வாய்மையே வெல்லும்

ஒரு ஊரில் கஞ்சன் ஒருவன் இருந்தான். அவன் மிகவும் கஞ்சமாக செலவு செய்வான். யாருக்கும் உதவி செய்யாதவன், அவனுக்கு ஒரு நாள் அவன் வீட்டுத் தோட்டத்தில் உள்ள வேப்பமரத்திற்கு அடியில் புதையல் இருப்பது போல கனவு வந்தது. 

தூக்கத்திலிருந்து கஞ்சன் எழுந்து புதையலை எடுக்க நினைத்தான். பகலில் சென்றால் பிறருக்கு தெரிந்துவிடும் என்று நினைத்து இரவில் புதையலை எடுக்க சென்றான். அப்போது, அங்கிருந்த நல்ல பாம்பு ஒன்று அவனைக் கடித்துவிட்டது. விஷம் ஏறியது. விஷக்கடி மந்திரவாதியிடம் ஓடினான் கஞ்சன். அவர் தன்னிடம் வரும் நோயாளிக்கு மந்திரம் சொல்லியே நோயைக் குணமாக்குவார். 

பூரான் கடிக்கு - 5 ரூபாய், தேள் கடிக்கு - 10 ரூபாய், பாம்பு கடிக்கு - 25 ரூபாய் 

உனக்கு என்ன கடித்தது என்றார் மந்திரவாதி. அந்த நேரத்தில் கஞ்சன் எந்த கடியானாலும் ஒரே மந்திரம் தானே சொல்லப் போகிறார் என்று நினைத்து பாம்பு கடித்தது என்று சொல்லி அதிக காசு கொடுக்க வேண்டும் என்று கஞ்சமாக யோசித்து பூரான் கடித்து விட்டது என்று பொய் கூறினான். 

மந்திரவாதி பூரான்கடி மந்திரத்தை சொல்ல, பயன் இல்லை. மீண்டும் வைத்தியரே எனக்கு தேள் கடித்து விட்டது என்றான். மந்திரவாதி தேள்கடி மந்திரத்தை சொன்னார், இப்போதும் எந்த பயனும் இல்லை. 

பயந்து போன கஞ்சன் மெதுவாக, பா, பா பாம்பு கடித்தது என்றான். அவன் சொல்லி முடிப்பதற்குள் விஷம் தலைக்கு ஏறி இறந்து விட்டான். 

நீதி :

அளவுக்கு மீறின கஞ்சம் உயிரினை எடுக்கும்.

இன்றைய செய்திகள்

05.08.2025

⭐மின்சார கார்கள் உற்பத்தியில் தமிழ்நாடு முன்னணி மு.க.ஸ்டாலின் பெருமிதம்.

⭐தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களுக்கு 4 புதிய திட்டங்கள்- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

⭐ஹிமாச்சலப் பிரதேச மாநிலம் குலு மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, மலானா-1 நீர்மின் திட்டத்தில் உள்ள காஃபர் அணை திடீரென இடிந்து விழுந்தது. மேலும் 383 சாலைகள் மூடப்பட்டு உள்ளன.

⭐இஸ்ரேல் தாக்குதலுக்குப் பிறகு உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலை அமைத்தது ஈரான்.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்.

🏀லண்டன் ஓவல் டெஸ்டில் இந்தியா த்ரில் வெற்றி: தொடரை 2-2 என சமன் செய்தது.


Today's Headlines

⭐ Chief Minister MK Stalin has delivered a speech about Tamil Nadu leading in electric car production.

⭐ Chief Minister MK Stalin has announced 4 new projects for Thoothukudi and Nellai districts.

⭐In Himachal Pradesh, Kullu district, 383 roads closed, and  the Kafar Dam of the Malana-1 Hydropower project collapsed due to heavy rains.

⭐Iran forms the Supreme National Security Council (SNSC) after the Israeli attack.

 SPORTS NEWS 

 🏀Pakistan beats West Indies to clinch T20 series.

 🏀India recorded a thrilling Test victory at the London Oval and leveled the series 2-2


Covai women ICT_போதிமரம்

Sunday, August 3, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 04.08.2025

பராக் உசைன் ஒபாமா

    






திருக்குறள்: 

குறள் 212: 

தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு 
வேளாண்மை செய்தற் பொருட்டு         

விளக்க உரை: 

ஒப்புரவாளன் தன்னால் இயன்ற முயற்சி செய்து சேர்த்த பொருள் எல்லாம் தக்கவர்க்கு உதவி செய்வதற்கே ஆகும்.

பழமொழி :

The roots of education are bitter,but the fruit is sweet. 

கல்வியின் வேர்கள் கசப்பானவை, ஆனால் அதன் பழம் இனிப்பாகும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1.எல்லோருக்கும் உதவி செய்வது உன்னதமான வாழ்க்கை.

2.எனவே என்னால் இயன்ற அளவு உதவி செய்வேன்.

பொன்மொழி :

இந்த உலகில் நம் கண்ணுக்குத் தெரியும் மனிதர்களை நேசிக்கத் தெரியாவிட்டால், கண்ணுக்குத் தெரியாத கடவுளின் மீது அன்பு செலுத்தி எந்த பயனும் இல்லை - அன்னை தெரசா

பொது அறிவு : 

01.தும்பா ராக்கெட் ஏவுதளம் எங்கு உள்ளது?

திருவனந்தபுரம்- கேரளா
Trivandrum- Kerala

02.இந்தியாவிற்கு வந்த முதல் அமெரிக்க ஜனாதிபதி யார்? 

டி. ஐசன் ஹோவர்-1959
D. Eisenhower -1959

English words :

sector - a part of an area or country or of a large group of people.ஒரு நாட்டின் அல்லது ஒரு பெருங் குழுவின் கிளைப்பகுதி.

Grammar Tips :

Difference between time and period 


Time can be general

Ex: "The meeting is at 2 PM."(No point of ending)

The period is more specific and defined. 

Ex: "The rainy period lasted for a month."(Both beginning and end)

அறிவியல் களஞ்சியம் :

 அன்டிரியஸ் வெசலியஸ் (Andreas Vesalius) (1514-64) என்பவர் தாம் தற்கால உடலுறுப்பியல் (Modern anatomy) பற்றி அடிக்கல் இட்டு ஆய்வு தொடங்கியவர். மருத்துவக் குடும்பத்தில் பிரஸ்ஸலில் (Brussels) பிறந்தவரானார். ஐரோப்பாவிலுள்ள மிகப் பெரிய மருத்துவ மையங்களுள் ஒன்றான இத்தாலியில் (Italy) உள்ள பதுஆ (Padua) வில் தன் 23 ஆம் வயதில் உடலுறுப்பியல் பேராசிரியரானார்.

ஆகஸ்ட் 04

பராக் உசைன் ஒபாமா  அவர்களின் பிறந்தநாள்

பராக் உசைன் ஒபாமா (Barack Hussein Obama, பிறப்பு: ஆகத்து 4, 1961), அமெரிக்க அரசியல்வாதியும், ஐக்கிய அமெரிக்காவின் 44வது அரசுத்தலைவரும் ஆவார். 2008 அரசுத்தலைவர் தேர்தலில் மக்களாட்சிக் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.நவம்பர் 6, 2012 அன்று நடந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக நின்ற மிட் ராம்னியை தோற்கடித்து மீண்டும் அதிபர் ஆனார்.அதிபராவதற்கு முன் இவர் அமெரிக்க நாடாளுமன்ற மேலவையில் (செனட்) இலினொய் மாநிலத்தின் சார்பில் இளைய உறுப்பினராகப் பணியாற்றினார். அமெரிக்க வரலாற்றில் ஆப்பிரிக்க அமெரிக்க இனத்தைச் சேர்ந்த முதலாவது குடியரசுத் தலைவர் என்ற பெருமையும், மற்றும் செனட் அவையின் உறுப்பினரான ஐந்தாவது ஆப்பிரிக்க-அமெரிக்க இனத்தவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.

நீதிக்கதை

 வல்லவர் யார்?


ஒரு நாள் எறும்பு தரையில் மெல்ல ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. அப்போது பூரான் அதன் அருகே வந்தது. நண்பா! நான் வருவதைக் கூடக் கவனிக்காமல் எங்கே சென்று கொண்டிருக்கிறாய்? என்று கேட்டது. எறும்பு பூரான் நண்பா! உன்னைக் கவனித்துக் கொண்டிருந்தால் என் கடமையை நான் சரிவரச் செய்ய முடியாதே என்று சொன்னது. அப்படியென்ன முக்கியமான கடமை? என்று பூரான் கேட்டது. 


மழைக்காலத்திற்குத் தேவையான உணவை வெயில் காலத்திலேயே தேடிச் சேர்த்து வைப்பது என் கடமை என்றது எறும்பு. உன்னிடம் பேசிக்கொண்டிருந்தால் என் கடமையைச் செய்ய முடியாது என்று கூறி எறும்பு சென்றுவிட்டது. பூரானுக்கு எறும்பின் மேல் வருத்தம். அதனால் எறும்பை மட்டம் தட்டியே தீர வேண்டும் என்று நினைத்துக்கொண்டது. 

அடுத்த நாள் எறும்பு வரும் வழியில் நின்று எறும்பே, கடமையை சரிவரச் செய்வதால் மட்டும் நீ வல்லவனாக முடியாது!. உன்னால் என்னைப்போல வேகமாக ஊர்ந்து வர முடியுமா? அப்படி வந்தால் நீ என்னை விட வல்லவன் என்று ஒத்துக்கொள்கிறேன் என்றது. அதற்கு எறும்பு மிக அமைதியுடன் பூரானே, உன் அளவுக்கு வேகமாக என்னால் ஊர முடியாது. அந்த தைரியத்தில் நீ பேசுகிறாய். ஆனால், நான் செய்யும் சில காரியங்களை உன்னாலும் செய்ய முடியாது. அதனால் யார் வலியவன் என்ற பரிட்சையெல்லாம் வேண்டாம் என்று திரும்பவும் கூறியது. பூரானோ அப்படி என்ன சாகசத்தை நீ செய்வாய் என்று கேட்டது. 


எறும்பு பூரானை ஒரு தண்ணீர் தொட்டியின் மேல் அமர்ந்து வேடிக்கை பார்க்கச் சொல்லிவிட்டு, கரையின் அருகில் இருந்த ஒரு துரும்பில் ஏறி தண்ணிரில் விழுந்து அந்த துரும்பைப் பிடித்துக்கொண்டு தண்ணீரில் மிதந்தது. பூரானைப் பார்த்து உன்னால் இப்படிச் செய்து காட்ட முடியுமா? என்று கேட்டது. பூரான் அப்போதுதான் தனது தவறினை உணர்ந்தது. பின்பு, பூரான் எறும்பிடம் மன்னிப்புக் கேட்டு சிறந்த நண்பனாகத் திகழ்ந்து வந்தது. 


நீதி :

எல்லோருக்கும் சில வல்லமைகளும் சில இயலாமைகளும் இயற்கையிலேயே உண்டு.


இன்றைய செய்திகள்

04.08.2025

⭐பொறியியல் கல்லூரிகள்: முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கும் தேதி அறிவிப்பு.

⭐விமானத்தின் உள்ளே சக பயணியை தாக்கிய நபருக்கு இண்டிகோ விமானத்தில் வாழ்நாள் பயணத் தடை.

⭐ஜம்மு - காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை ராணுவ வீரர் காயம்.

⭐இந்தோனேசியாவில் அடுத்தடுத்து வெடித்து சிதறிய எரிமலை

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணி கடைசி பந்தில்  வெற்றி

🏀ஆசிய கோப்பை டி20 தொடர்: துபாயில் மோதும் இந்தியா பாகிஸ்தான்


Today's Headlines

⭐Engineering Colleges: First Year Classes Commencement Date Announced.

⭐Lifetime  Ban in the IndiGo Flight for Man Who Attacked Fellow Passenger Inside the IndiGo Flight.

⭐ In Jammu and Kashmir,3 terrorists were shot and killed, and a soldier was injured.

⭐In Indonesia, there is a successive volcanic eruption.

 SPORTS NEWS 

🏀 2nd T20I vs Pakistan: West Indies won on the last ball 

🏀Asia Cup T20I Series: India vs Pakistan in Dubai


Covai women ICT_போதிமரம்