Wednesday, July 16, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 17.07.2025


    






திருக்குறள்: 

திருக்குறள்: 96

அதிகாரம் - இல்லறவியல்

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை 
நாடி இனிய சொலின்.       
         
பொருள்: பிறருக்கு நன்மை தரும் இனிய சொற்களைப் பேசினால், தீயவை அகன்று, அறநெறி தழைத்து வளரும்.


பழமொழி :

Dont fear mistakes - they're stepping stones. 

தவறுகளுக்காக பயப்படாதே-அவை முன்னேற்றத்தின் படிகள்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. வாழ்க்கையில் ஒரு செயலை ஆரம்பிப்பதற்கு முன், எவ்வாறு செய்து முடிக்க போகிறோம் என்று திட்டமிடுதல் மிக அவசியம். 

2. எனவே எந்த செயலையும் செய்யும் முன் திட்டமிடுவேன், செயல்படுவன்.

பொன்மொழி :

நுணுக்கமான திட்டமிடலுடன் கூடிய ஒரு நல்ல ஆசிரியர், தன்னைப் பயிற்றுவிப்பதற்கும் ,மாணவர்கள் அறிவைப் பெறுவதற்கும் தயார் படுத்துகிறார்- அப்துல் கலாம்

பொது அறிவு : 

01.இந்தியாவில் விவசாயிகள் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

டிசம்பர் 23 ( December 23)

02. இந்திய ஏவுகணை தொழில்நுட்பத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?

டாக்டர். A. P. J.அப்துல் கலாம்
Dr. A. P. J. Abdul kalam

English words :

Fair - an exhibition or a type of entertainment,களியாட்ட நிகழ்ச்சி, Fair - treating each person equally,நியாயமான,நியாயமாக. Fair is a homograph. Same spelling but different meaning

Grammar Tips: 

 G:

Often silent before 'n' (e.g., sign, foreign) or m (e.g., phlegm, diaphragm). 

H:

Often silent at the beginning of a word before a vowel (e.g., hour, honest) or in combinations like 'gh' (e.g., ghost, though).

அறிவியல் களஞ்சியம் :

 சராசரியாக உடலில் 50 லட்சம் ரோமங்கள் இருக்கும். உடலில் கருத்த ரோமமுடையவர்களுக்கு சற்று கூடுதலாக இருக்கும். உள்ளங்கை, உள்ளங்கால் விரல்களில் உட்புறம் ஆகிய இடங்களில் மட்டுமே ரோமம் வளர்வதில்லை.

ஜூலை 17

சர்வதேச நீதிக்கான உலக தினம் (World Day for International Justice)

1998 ஆம் ஆண்டு ரோம் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஜூலை 17 ஆம் தேதி சர்வதேச நீதிக்கான உலக தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) நிறுவப்பட்டது. உலகின் ஒவ்வொரு பகுதியையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கிட்டத்தட்ட 80 நாடுகள் 1998 முதல் இந்த ஒப்பந்தத்தை அங்கீகரித்துள்ளன. 1998 முதல் சுமார் 139 நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

உலக எமோஜி தினம் (World Emoji Day)

அவற்றின் பரவலான பயன்பாடு மற்றும் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, எமோஜிகளைக் கொண்டாட ஒரு பிரத்யேக நாளைக் கொண்டிருப்பது பொருத்தமானது. ஜூலை 17 ஆம் தேதி உலக எமோஜி தினமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது - நமது உரையாடல்களை உயிர்ப்பிக்கும் படச்சித்திரங்களை நினைவுகூரும் ஒரு மகிழ்ச்சியான சந்தர்ப்பம்.

நீதிக்கதை

 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே

நற்பகல் நேரம், மத்தியான வெயில் கொளுத்திக்கொண்டிருந்தது.மரத்தடியில் ஒருவன் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தான்.

அந்த வழியாக வந்த விறகுவெட்டி அவனைப்பார்த்தான். “கடுமையான உழைப்பாளியாக இருக்க வேண்டும் உழைத்த களைப்பால்தான் இந்த வெயிலிலும் இப்படிஉறங்குகிறான்.” என நினைத்துக்கொண்டே சென்றான்.

அடுத்ததாக திருடன் ஒருவன் அந்த வழியாக வந்தான்  “இரவு முழுவதும் கண்விழித்து திருடி இருப்பான் போல தெரிகிறது அதனால்தான் இந்த சுட்டெரிக்கும் வெயிலிலும் அடித்துப்போட்டதுபோல் தூங்குகிறான் “ என நினைத்துக்கொண்டே சென்றான்.

சிறிது நேரத்தில் துறவி ஒருவர் வந்தார். “இந்த நண்பகலில் இப்படி உறங்கும் இவர் முற்றும் துறந்த ஞானியாகத்தான் இருக்க வேண்டும் வேறுயாரால் இத்தகைய செயலை செய்ய முடியும்” என அவரை வணங்கிவிட்டு சென்றார்.

இன்றைய செய்திகள்

17.07.2025

⭐சட்டவிரோத மணல்குவாரிகள் மீது கடும் நடவடிக்கை- உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

⭐ஜூலை 30-ல் மருத்துவ கலந்தாய்வு தொடக்கம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு.

⭐ 8 இடங்களில் புதிதாக சிறிய துறைமுகங்கள் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀லார்ட்ஸ் டெஸ்டில் சதம்: ஐசிசி பேட்ஸ்மேன் தரவரிசையில் மீண்டும் முதலிடம் பிடித்தார் இந்திய வீரர் ஜோ ரூட்.

🏀ஒலிம்பிக்கில் 2028, ஜூலை 12 முதல் கிரிக்கெட் போட்டிகள் தொடங்க உள்ளது. 2028 ஜூலை 20 மற்றும் 29ம் தேதிகளில் பதக்கத்துக்கான போட்டிகள் நடைபெறுகிறது.

Today's Headlines

⭐Madurai Branch of the High Court takes strict action against illegal sand quarries
 
⭐Minister M. Subramanian announced that Medical counseling will begin on July 30.

⭐The Tamil Nadu government plans to set up new small ports at eight locations.

 SPORTS NEWS 

🏀Hundred in Lord's Test: Indian player Joe Root regains top spot in ICC batsman rankings.

🏀Cricket matches at the Olympics are set to begin on July 12, 2028. The matches for medals will be held on July 20 and 29, 2028

Covai women ICT_போதிமரம்

Tuesday, July 15, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 16.07.2025

தன்ராஜ் பிள்ளை

  






திருக்குறள்: 

குறள் 106: 
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க 
துன்பத்துள் துப்பாயார் நட்பு. 

விளக்கம் : உன் துன்பத்துள் துணையாக நின்றவரின் நட்பை விடாதே; அறிவு ஒழுக்கங்களில் குற்றம் இல்லாதவரின் நட்பை மறந்து விடாதே.

பழமொழி :

Knowledge grows when shared. 

அறிவு பகிர்ந்தால் தான் பெரிதாகும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. வாழ்க்கையில் ஒரு செயலை ஆரம்பிப்பதற்கு முன், எவ்வாறு செய்து முடிக்க போகிறோம் என்று திட்டமிடுதல் மிக அவசியம். 

2. எனவே எந்த செயலையும் செய்யும் முன் திட்டமிடுவேன், செயல்படுவன்.

பொன்மொழி :

கட்டளை இட விரும்புபவர் முதலில் கீழ்படிவதற்கு கற்றுக்கொள்ள வேண்டும் - அரிஸ்டாட்டில்

பொது அறிவு : 

01.வந்தே மாதரம் என்ற சொல் எந்த புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது?

ஆனந்த மடம் - எழுதியவர்-
பக்கிம் சந்தர் சட்டர்ஜி
Ananthmath- Author-
Bankim chandra chattopadhyay

02. மிசோரம் மாநிலத்தின் தலைநகரம் எது?

ஐஷோல்( Aizawl)

English words :

isle - an island, தீவு.‌ 

Aisle - a passageway between rows of seats, இருக்கை நீள்வரிசைகளுக்கு இடையில் உள்ள வழி.

Grammar Tips: 

 How to identify silent letters ?

 C

Often silent in the combination 'sc' (e.g., scissors, muscle) or before 'k' or 'q' (e.g., acquire, acquiesce).

அறிவியல் களஞ்சியம் :

 மனித உடலில் மிகப்பெரிய உறுப்பு எதுவென்றால், அது சருமம் தான். வளர்ந்த ஒரு ஆணின் சருமத்தின் பரப்பளவு 20 சதுர அடி இருக்கும். இதுவே பெண் என்றால் 17 சதுர அடி இருக்கும். ஒவ்வொரு இரவிலும் தூங்கும் பொழுது, உடல் சுமார் 8 மில்லி மீட்டர் வளர்ச்சி அடைகிறது. பகலில் இந்த உடல் வளர்ச்சி சுருங்கி விடும். உட்காரும் பொழுதும், நிற்கும் பொழுதும், முதுகில் உள்ள குறுத்தெலும்புகள் அழுத்தப்பட்டு சுருக்கம் ஏற்படுகிறது. தூங்கும் பொழுது அழுத்தம் இல்லாததால் நீண்டு வளர்கிறது.

ஜூலை 16

தன்ராஜ் பிள்ளை அவர்களின் பிறந்தநாள்

நாகலிங்கம்பிள்ளை தன்ராஜ் பிள்ளை (பிறப்பு - சூலை 16. 1968, புனே) இந்தியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற ஹாக்கி விளையாட்டு வீரர் ஆவார். இவர் இந்திய அணியின் தலைவராகவும் இருந்துள்ளார். இவர் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெற்றவர். 1998ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய போட்டிகளில் தன்ராஜ் பிள்ளை தலைமையிலான இந்திய அணி பங்கேற்றது. இந்தத் தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றது. அந்த ஆசிய போட்டிகளில் அதிக கோல் அடித்த வீரர் என்ற பெருமையை தன்ராஜ் பிள்ளை பெற்றார். அத்துடன் 32 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிய போட்டிகளில் இந்திய ஹாக்கி அணி தங்கம் வெல்ல முக்கிய காரணமாக அமைந்தார். அதற்கு முன்பாக 1966ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய போட்டிகளில் இந்திய அணி தங்கம் வென்றது. இவை தவிர 2002ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில் அதிக கோல் அடித்த வீரர் என்ற பட்டத்தையும் இவர் பெற்றார். 

நீதிக்கதை

 பட்டாணி

ஒரு நாள் ஒரு மூதாட்டி மண் அடுப்பில் வைத்து சமையல் செய்து கொண்டிருந்தாள். அவள் அடுப்பில் வைத்திருந்த தண்ணீர் கொதித்ததால் அதற்குள் சில காய்கறிகளை போட்டாள். அப்போது பட்டாணி அந்தப் சட்டியிலிருந்து வெளியே குதித்து வந்து, “என்னை வேக வைக்கவேண்டாம். என்னை சமைக்கவேண்டாம்” என்று கத்தியது.

“மூதாட்டியோ நீ மரியாதையாக பழையபடி சட்டிக்குள் போகிறாயா? இல்லை உன்னை நசுக்கட்டுமா?” என்றாள்.

ஆனால் மூதாட்டியின் உத்தரவை பட்டாணி கேட்கவில்லை. அங்கிருந்து வேகமாக ஓட்டம் பிடித்தது. அப்போது “நில் நில் ஓடாதே’ உன்னுடன் நானும் வருகிறேன்” என்று இன்னொரு குரல் கேட்டது. பட்டாணி திரும்பிப் பார்த்தது, அப்படிக் கத்தியது என்று சொன்னது எரிந்து கொண்டிருந்த ஒரு துண்டு நிலக்கரி.

“அடுப்பிற்குள் இருந்தால் எனக்கு மூச்சு முட்டுகிறது. அதனால் நானும் உன்னுடன் வெளியுலகைப் பார்க்க வருகிறேன்” என்றது, நிலக்கரி.

“என்ன வெளியுலகைப் பார்க்கப் போகிறாயா?. அப்படியென்றால் என்னையும் உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள்”. என்றது கீழே கிடந்த வைக்கோல் ஒன்று.

“சரி, வா போகலாம்” என்று நிலக்கரியும் பட்டாணியும்? வைக்கோலை தங்களுடன் கூட்டு சேர்த்துக் கொண்டன.

மூன்றும் சேர்ந்து நடந்தபோது சாலையின் ஓரிடத்தில் விரிசல் விட்டிருந்தது. அந்த இடத்தில் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது.

“இனி நாம் தொடர்ந்து செல்ல முடியாது. அதனால் நான் அடுப்பிற்கே போய் விடுகிறேன்” என்றது, நிலக்கரி.

“அப்படியென்றால் நானும் அடுப்பில் எரியும் சட்டிக்குள் போய் விடுவேன்” என்றது பட்டாணி.

“நண்பர்களே சோர்ந்து விடாதீர்கள். நான் இந்த பாலத்திற்கு (விரிசல்) இணைப்பாக இருக்கிறேன். நீங்கள் இருவரும் என்மீது ஏறி நடந்து மறுபக்கம் போய்விடலாம்” என்று நம்பிக்கைïட்டியது, வைக்கோல்.

முதலில் பட்டாணி, வைக்கோல் மீது ஏறி விரிசலின் மறுபக்கத்தை அடைந்தது. ஆனால் எரிந்து கொண்டிருந்த நிலக்கரி, வைக்கோல் மீது ஏறியதும் அது தீப்பிடித்துக் கொண்டது. இதனால் இரண்டும் சேர்ந்து தண்ணீருக்குள் விழுந்தன.

“ஷ்..ஷ்..ஷ்…”தன் மீது எரிந்து கொண்டிருந்த நெருப்பு அணைந்ததும் நிலக்கரி பெருமூச்சு விட்டது.

அந்த வினோத சத்தத்தைக் கேட்ட பட்டாணி சிரிக்க ஆரம்பித்தது. தொடர்ந்து அது பலமாகச் சிரித்ததால் வெடித்து சிதறி அதிலிருந்த ஒவ்வொரு பட்டாணியும் ஓட ஆரம்பித்தன.

அந்தப் பட்டாணிகள் அனைத்தும் ஒரு தையல்கடையை நோக்கிச் சென்றன. தையல்காரரிடம் தயவு செய்து எங்களை ஒன்றாக வைத்து தைத்து விடுங்கள் என்று கேட்டுக் கொண்டன.

தையல்காரரும் பட்டாணிகளின் வேண்டுகோளை ஏற்று ஒரு தடித்த நூல் கொண்டு தைத்து விட்டார்.

இதனால் தான் அன்று முதல் பட்டாணியை நாம் உரிப்பதற்கு அதன் மேல் தோலில் நூல் போல் உள்ள பகுதியை உரிக்கவேண்டியிருக்கிறது

இன்றைய செய்திகள்

16.07.2025

⭐ பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு 45 நாட்களுக்குள் தீர்வு காண தமிழக அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது.

⭐மணிப்பூரில் பதுக்கி வைக்கப்பட்ட வெடிபொருள்கள், ஆயுதங்கள் பறிமுதல்.

⭐விண்வெளி நிலையத்தில் இருந்து வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினார் சுபான்ஷு சுக்லா.

⭐துருக்கியுடன் 40 ஆண்டுகளாக தனி நாடு கோரி போரிட்டு வந்த ஈராக்கிய குர்திஷ் அமைப்பினர் தங்கள் ஆயுதங்களை கைவிட்டு, அமைதிக்கான முயற்சி எடுத்துள்ளனர்.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀 இந்திய ஆடவர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

🏀 இந்திய மகளிர் அணியும் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.


Today's Headlines

☘ The Tamil Nadu government has taken steps to resolve the public petitions within 45 days.

 ☘ Confiscation of ammunition and weapons in Manipur.

☘ Subhanshu Shukla has successfully returned to Earth from the Space Station. 

☘The Iraqi Kurdish organizations, who have been fighting for a separate country for 40 years, have abandoned their weapons and trying to make peace. 

🏀 Sports News 🏀 The Indian men are touring the UK and playing in a five -match Test series.

 🏀 The Indian women's team is also touring the UK and playing the match.

Covai women ICT_போதிமரம்

Monday, July 14, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 15.07.2025

கர்மவீரர் காமராசர்

  






திருக்குறள்: 

குறள் 103: 
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் 
நன்மை கடலின் பெரிது. 

விளக்கம்: இன்ன பயன் கிடைக்கும் என்றுஆராயாமல் ஒருவன் செய்த உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால் அதன் நன்மை கடலைவிட பெரியதாகும் .

பழமொழி :

Great things never come from comfort zone. 

நிம்மதியான சூழ்நிலையிலிருந்து பெரியவை உருவாகாது.

இரண்டொழுக்க பண்புகள் :

1. வாழ்க்கையில் ஒரு செயலை ஆரம்பிப்பதற்கு முன், எவ்வாறு செய்து முடிக்க போகிறோம் என்று திட்டமிடுதல் மிக அவசியம். 

2. எனவே எந்த செயலையும் செய்யும் முன் திட்டமிடுவேன், செயல்படுவன்.

பொன்மொழி :

எதுவும் என்றைக்கும் நிலைத்து இருக்காது 

       - ஸ்டீபன் ஹாக்கிங்


பொது அறிவு : 


01. காமராஜரின் அரசியல் குரு யார்?


சத்தியமூர்த்தி
Sathyamoorthi

02. காமராசர் பெற்ற மிக உயரிய விருது எது?

பாரத ரத்னா-1976
Bharat Ratna - 1976

English words :

Altogether – completely.
மொத்தமாக. முழுவதும்.

all together – all in one place, அனைவரும் ஒரே இடத்தில் கூடுவது

Grammar Tips: 

 How to identify silent letters ?

Common Silent Letter Combinations:
B:
Often silent after 'm' (e.g., comb, climb, thumb) or before 't' (e.g., doubt, subtle).

அறிவியல் களஞ்சியம் :

 ஒருவரது வாழ்நாளில் இதயம் சுமார் 200 கோடி தடவை துடிக்கிறது. அப் பொழுது 50 கோடி லிட்டர் ரத்தத்தை உடலுக்குள் பாய்ச்சு கிறது. உறங்கும் போதும் கூட மணிக்கு 340 லிட்டர் ரத்தத்தை பாய்ச்சுகிறது. வளர்ச்சி அடைந்த ஒரு ஆண் ஓய்வில் இருக்கும் போது அவனது நாடித்துடிப்பு நிமிடத்துக்கு 70 முதல் 72 வரை இருக்கும். அதுவே முழுமையாக வளர்ந்த பெண் என்றால் 78 முதல் 82 வரை அவளது நாடித்துடிப்பு இருக்கும். கடுமையான உடல்பயிற்சி செய்யும் போது இது 200 வரை உயரும். நாடித்துடிப்பு என்பது இதயத்தின் துடிப்பு என்பதையே குறிக்கிறது.

ஜூலை 15

காமராசர்  அவர்களின் பிறந்த நாள்


காமராசர் (காமராஜர்) (K. Kamaraj, 15 சூலை 1903 - 2 அக்டோபர் 1975) இவர் 1954 ஆம் ஆண்டு அப்போதைய சென்னை மாநில முதலமைச்சர் ஆவார். இவர் ஒன்பது ஆண்டுகள் சென்னை மாநில முதல்வராகப் பதவி வகித்தார். தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். காமராசர் எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர். இவரை, தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, பெருந்தலைவர் என்றெல்லாம் புகழ்வர். இவர் "கருப்பு காந்தி" என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார். காமராசரின் மறைவுக்கு பின், 1976 இல் இந்திய அரசு இவருக்குப் பாரத ரத்னா விருது வழங்கியது. மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு, மதுரை காமராசர் பல்கலைக்கழகம் என்றும், சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கு காமராசர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

நீதிக்கதை

 எறும்பு தின்னது


சித்தனூரில் இனிப்பு கடை ஒன்று இருந்தது. சிறுவர்கள் அந்தக் கடையில் இனிப்பு வாங்கிச் சாப்பிடுவர். அந்தக் கடைக்கார கிழவனுக்கு, சிறுவர்களைக் கண்டால் பிடிக்காது. அவர்கள் மீது எரிந்து விழுவான். அவர்களால் ஏதேனும் வேலை ஆக வேண்டி இருந்தால் அவர்களை அழைப்பான்.

“இந்த வேலையை முடியுங்கள்; இனிப்பு தருகிறேன்’ என்பான். அவர்கள் அதைச் செய்து முடித்ததும் இனிப்பு தர மாட்டான். மாறாக, அவர்களை விரட்டி விடுவான். இதனால், சிறுவர்களுக்கு அவனைக் கண்டாலே பிடிக்காது. நண்பகல் நேரத்தில், கடைக்குள் படுத்துத் தூங்குவான். சிறுவனாக இருந்த அவன் மகன், அப்போதுதான் கடையைப் பார்த்துக் கொள்வான். ஒருமுறை அந்தக் கடைக்காரன் மண்பாண்டம் செய்பவர்களிடம் சென்றான்.

“”பலகாரங்கள் வைப்பதற்காக வாய் அகன்ற பானைகள் முப்பது செய்ய வேண்டும். எப்போது செய்து தருவீர்கள்?” என்று கேட்டான்.

“”ஒரு வாரத்தில் தயாராகி விடும்,” என்றனர்.

குறிப்பிட்ட நாள் வந்தது. அந்தப் பானைகளைக் கடைக்குள் எடுத்து வர வேண்டுமே… என்ன செய்வது என்று சிந்தித்தான் கடைக்காரன். வழக்கம் போலச் சிறுவர்களை ஏமாற்றுவோம் என்று நினைத்தான்.

சிறுவர்களை அழைத்த அவன், “”மண்பாண்டம் செய்பவர்களிடம் முப்பது பானைகள் உள்ளன. அவற்றைக் கவனமாக எடுத்து வர வேண்டும். எடுத்து வருகிறீர்களா?” என்று கேட்டான்.

“”அப்படி நாங்கள் எடுத்து வந்தால் எல்லாருக்கும் நிறைய இனிப்பு தருவீர்களா?” என்று கேட்டான் அவர்களில் ஒருவன்.

“”கொண்டு வாருங்கள். பிறகு பார்க்கலாம்,” என்றான் கடைக்காரன்.

“”நிறைய இனிப்பு கிடைக்கப் போகிறது,” என்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர் சிறுவர்கள்.

ஒவ்வொரு பானையாக அவர்கள் கடைக்குக் கொண்டு வந்தனர். எல்லாப் பானைகளும் வந்து சேர்ந்தன.

“”எங்களுக்குத் தருவதாகச் சொன்ன இனிப்பைத் தாருங்கள். நாங்கள் சாப்பிட்டுக் கொண்டே செல்கிறோம்,” என்றனர் சிறுவர்கள்.

“”நான் எப்போது உங்களுக்கு இனிப்பு தருவதாகச் சொன்னேன். நீங்கள் கேட்டதற்கு, கொண்டு வாருங்கள் பிறகு பார்க்கலாம் என்றுதானே சொன்னேன். இப்போதும் அதையேதான் சொல்கிறேன். பிறகு பார்க்கலாம்,” என்று அவர்களை விரட்டினான் கடைக்காரன்.

தாங்கள் ஏமாந்து விட்டதை எண்ணிப் புலம்பியப்படியே அங்கிருந்து சென்றனர் சிறுவர்கள்.

அந்த வழியாக வந்த கோபால், “”ஏன் அழுது கொண்டே செல்கிறீர்கள்?” என்று கேட்டார்.

“”கோபால் மாமா! அந்த இனிப்புக் கடைக்காரர் எங்களை ஏமாற்றிவிட்டார்,” என்று நடந்ததை எல்லாம் சிறுவர்கள் கூறினர்.

“”கவலை வேண்டாம்! உங்களுக்குக் கிடைக்க வேண்டிய இனிப்பிற்கு அதிகமாகவே கொண்டு வருகிறேன். நீங்கள் யாரும் அந்தக் கடைக்குள் வரக் கூடாது. வெளியே நில்லுங்கள்,” என்ற கோபால் கடைக்குள் நுழைந்தார்.

அப்போது கடைக்காரனின் மகன்தான் கடையைக் கவனித்துக் கொண்டிருந்தான். உள்ளே இருந்த அறைக்குள் கடைக்காரன் தூங்கிக் கொண்டிருந்தான்.

இவனை எளிதாக ஏமாற்றலாம் என்று நினைத்த கோபால், இனிப்புப் பாத்திரத்திற்குள் கையை விட்டான். இனிப்புகளை எடுத்துச் சாப்பிட்டான். இதைப் பார்த்த சிறுவன், “” என்ன இனிப்பை எடுத்து சாப்பிடுகிறாய்? பணம் தராமல் எதையும் தொடக்கூடாது,” என்று கத்தினான்.

“”தம்பி! உன் தந்தைக்கு என்னை நன்றாகத் தெரியும். நான் இப்படி இனிப்பை சாப்பிடுவதை அவர் பொருட்படுத்தமாட்டார். என் பெயர் எறும்பு. நீ வேண்டுமானால் அவரிடம் இனிப்பை நான் சாப்பிடுவதாகச் சொல். அவர் ஒன்றும் சொல்ல மாட்டார்,” என்றான் கோபால்.

“”அப்பா! கடைக்குள் எறும்பு வந்துள்ளது. நான் சொல்லியும் கேளாமல் இனிப்பை எடுத்துச் சாப்பிடுகிறது,” என்று கத்தினான் சிறுவன்.

தூக்கம் கலைந்ததால், எரிச்சல் அடைந்த கடைக்காரன், “”மகனே! எறும்பு வந்தால் விரட்டு… இல்லையேல் அதை அப்படியே விட்டுவிடு. எறும்பைச் சமாளிக்க உன்னால் முடியாதா?” என்று கத்தினான்.

இதைக் கேட்ட கோபால் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான். “இனிப்பு நிறைந்திருந்த ஒரு பாத்திரத்தைத் தூக்கினான். சிறுவர் களுக்கு வழங்க இதுபோதும்’ என்று நினைத்து அங்கிருந்து புறப்பட்டான்.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவன், “”அப்பா நிறைய இனிப்புகளை எறும்பு எடுத்துச் செல்கிறது. பணம் ஏதும் தர வில்லை,” என்று கத்தினான்.

இதைக் கேட்ட கடைக்காரன் கோபம் கொண்டான்.

“”என் தூக்கத்தைக் கெடுக்காதே என்று எத்தனை முறை சொல்வது? நான் எழுந்து வந்தால் உன் தோலை உரித்து விடுவேன். எறும்பு இனிப்பை எடுத்துச் செல்வதற்காக, யாராவது கவலைப்படுவார்களா? போனால் போகட்டும் எவ்வளவு இனிப்பை எடுத்துச் சென்றுவிடப் போகிறது. பேசாமல் இரு,” என்று கத்தினான்.

இனிப்புப் பாத்திரத்துடன் வெளியே வந்தான் கோபால். அங்கிருந்த சிறுவர்களுக்கு ஒன்றுக்கு இரண்டாக இனிப்புகளைத் தந்தான். அவர்களும் மகிழ்ச்சியாகச் சாப்பிட்டனர்.

“”உங்களை ஏமாற்ற முயன்ற கடைக்காரனை நன்றாக ஏமாற்றி விட்டேன்,” என்ற கோபால் அங்கிருந்து புறப்பட்டான்.

தூக்கம் கலைந்து எழுந்த கிழவன், விஷயம் அறிந்ததும் குய்யோ, முய்யோ என கத்தினான். யார் அந்த எறும்பு என்று தெரியாமல் நொந்து போனான்.

இன்றைய செய்திகள்

15.07.2025

⭐இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்கியது.

⭐நிபந்தனைகளை பூர்த்தி செய்யாத 141 கல்லூரிகளுக்கு நோட்டீஸ்: அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி.

⭐திருவள்ளூர் அருகே சரக்கு ரெயில் தீப்பிடித்து விபத்து- 17 மணி நேரத்திற்கு பின்பு ரெயில்கள் இயக்கம்.

⭐பூமிக்கு திரும்ப தயாராகும் டிராகன் விண்கலம்; சுபான்சு சுக்லா இன்று பூமிக்கு திரும்புகிறார்.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀லார்ட்ஸ் டெஸ்டில் அதிக முறை போல்டாக்கி இந்தியா சாதனை.

🏀FIFA க்ளப் உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை முதல்முறையாக வென்றது செல்சி.


Today's Headlines

✏ General category counseling for undergraduate engineering courses has begun. 

✏ Anna University takes action against 141 colleges that do not meet the criteria given 

✏Goods train catches fire near Thiruvallur- Trains resume their shuttle after 17 hours. 

✏ Dragon spacecraft preparing to return to Earth: Subhanshu Shukla returns to Earth today. 

 SPORTS NEWS 

🏀Cricket - India bagged  more wickets in Lord's Test and made record 

🏀Chelsea win FIFA Club Football World Cup for the first time


Covai women ICT_போதிமரம்

Sunday, July 13, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 14.07.2025

எம். எஸ். விஸ்வநாதன்

    






திருக்குறள்: 

குறள் 102: 

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் 
ஞாலத்தின் மாணப் பெரிது 

விளக்கம்: உற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும், அதன் தன்மையை அறிந்தால் உலகைவிட மிகப் பெரிதாகும்.

பழமொழி :

The more you learn, the more you grow.

அதிகம் கற்றால், அதிகம் வளர முடியும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. வாழ்க்கையில் ஒரு செயலை ஆரம்பிப்பதற்கு முன், எவ்வாறு செய்து முடிக்க போகிறோம் என்று திட்டமிடுதல் மிக அவசியம். 

2. எனவே எந்த செயலையும் செய்யும் முன் திட்டமிடுவேன், செயல்படுவன்.

பொன்மொழி :

தோல்விகளுக்கு இடையில் தான் வெற்றிகள் மறைந்திருக்கின்றன அதனால் தோல்விகளைக் கண்டு அஞ்சாதே - ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

பொது அறிவு : 

01அமிர்தசரஸ் பொற்கோவில் யாரால் கட்டப்பட்டது?

குரு ராம் தாஸ் (Guru Ram das)

02. சில்கா ஏரி எந்த மாநிலத்தில் உள்ளது?
ஒடிசா (Odisa )

English words :

queue –a line of people waiting for something to do,காத்திருப்பு வரிசை. queue is a silent word. it means even after removed all the last four letters it pronounces the same

Grammar Tips: 

 W is a simply powerful 
When 'a' comes near W usual sounds will change and it gives special sound /o/

* Ward 
* Want
* Warm 
* Wall
* Watch

அறிவியல் களஞ்சியம் :

 ஒரு மனிதனின் 25 வயதில் முழுவளர்ச்சி பெற்றுவிடுகிறான். 40 வயதுக்கு மேல் வளர்ச்சி நின்றுவிடுவது மட்டுமல்லாமல் மெதுவாக குறையவும் தொடங்கும். 10 ஆண்டுகளுக்கு 4/10 அங்குலம் என்ற அளவில் உயரம் குறைய தொடங்கும். இது குறுத்தெலும் புகள் காய்ந்து போவதால் தான் நேர்கிறது. நாம் பகலை விட இரவில் தான் அதிகம் வளர்கிறோம். குழந்தைகள் கோடை காலத்தில் மழைகாலத்தை விட வேகமாக வளர்கிறார்கள்.

ஜூலை 14

எம். எஸ். விஸ்வநாதன் அவர்களின் நினைவுநாள்

மனயங்கத்து சுப்பிரமணியன் விசுவநாதன் அல்லது எம். எஸ். விஸ்வநாதன் (M. S. Viswanathan), அல்லது பொதுவாக எம்எஸ்வி, (24 சூன் 1928 – 14 சூலை 2015) தமிழ்த் திரைப்படவுலகில் புகழ்பெற்று விளங்கிய இசையமைப்பாளர் ஆவார். இவர் கேரளாவின் பாலக்காட்டுக்கு அருகில் எலப்புள்ளி என்ற கிராமத்தில் 1928ம் ஆண்டு  பிறந்தார். இவரின் தந்தை சுப்பிரமணியன் தாய் நாராயண குட்டியம்மாள் (நானிக்குட்டி)[1]. விசுவநாதன் 1953 ஆம் ஆண்டில் வெளிவந்த ம. கோ. இராமச்சந்திரனின் ஜெனோவா திரைப்படத்தில் வெளிவந்த நான்கு பாடல்களுக்கு முதன் முதலாக இசையமைத்தார். தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் சுமார் 1700 திரைப்படங்களுக்கு இசையமைத்தார். தெலுங்கு, இந்தி மொழிப் படங்களுக்கும் இசையமைத்திருந்தார்.

நீதிக்கதை

 தேவதை

மாலைப்பொழுது வானத்துக்கு மஞ்சள் கலந்த இளஞ்சிவப்பு நிறத்தைக் கொடுத்து திரும்ப வாங்கிய வண்ணம் கதிரவன் மேற்குத் தொடர்ச்சி மலைக்குள் புகுந்து கொண்டிருக்கிறது.

ஆறாம் வகுப்புப் படிக்கும் கணேஷ் பள்ளியில் இருந்து வந்தவுடன் புத்தகப்பையை இறக்கிவிட்டு அடுப்படியில் கண்ணாடி டப்பாவில் போட்டு வைத்திருந்த பொரிகடலையை இரண்டு வாய் அள்ளிப்போட்டுக் கொண்டு தெருவின் முற்றத்தில் விளையாடப் போய்விட்டான்.

இருள் ஆக்ரமித்துக் கொண்டிருக்கிறது.

ஏய்…கணேஷ்! விளையாடியது போதும், வந்து படிடா” என்று அம்மா கூவ, ஓடிவந்தான்.

“போய் கை, கால் அலம்பிட்டு மாடி மேலே போயி படி”

கணேஷ் நெடுநேரம் மும்முரமாகப் படித்துக்கொண்டிருந்தான்.

“கணேஷ் நேரமாயிடுச்சு. சாப்பிட்டு தாத்தா கூடப் போய்ப்படு. காலையில் படிக்கலாம்” என்றாள் அம்மா.

சாப்பிட்டுவிட்டு தாத்தாவுடன் படுத்தான். தூக்கம் வரவில்லை. “தாத்தா ஒரு கதை சொல்லுங்க தாத்தா” என்றான்.

பேரக்குழந்தை கேட்கிறதே என்று தாத்தாவும் கதை கூற ஆரம்பித்தார்:

ஒரு ஊர்ல ஒரு ராஜா. அவரு ஆட்சியில மாதம் மும்மாரி பொழிந்தது. அந்த ராஜாவுக்கு மீனான்னு ஒரு ராஜகுமாரி. தேவதை போல கொள்ளை அழகு. குருகுலத்துல நல்லா பாடம் படிச்சும் வீர, தீர வித்தைகளை கத்துகிட்டும் இருந்தது. அழகும் அறிவும் இணைந்த பொக்கிஷம் என்று நாட்டு மக்கள் இளவரசியைப் புகழ்ந்தார்கள்.

மீனாவுக்காகவே வனம் போன்ற அழகுடன் அரண்மனைக்குப் பக்கத்தில் நந்தவனம் அமைத்துக் கொடுத்தார் ராஜா. மாதம் ஒரு தடவை அரண்மனையை விட்டு வெளியே வரும் மீனா, நந்தவனம் வந்து உலவிவிட்டுப் போவாள்.

அந்த ஊர் மக்கள் எல்லாம் மகிழ்ச்சியா இருக்கிற நேரத்துல அந்த ஊருக்குள்ள ஒரு வேதாளம் புகுந்தது. அந்த வேதாளம் ராத்திரி நேரம் ஊருக்குள் வந்து கல்யாணம் ஆகாத பொண்ணுங்க யாரு வந்தாலும் அடிச்சி ரத்தம் குடிச்சு கொன்னு போட்டுடும். கல்யாணம் ஆகாத பெண்களை விட்டுட்டு வேற யாரையும் தொடுறதும் இல்லை. கண்ணுக்குத் தட்டுப்படறதும் இல்லை.

இந்த விஷயம் ராஜாவுக்குத் தெரிஞ்சி, வேதாளத்தைக் கொல்ல ஆட்களை அனுப்பினார். ஆனாலும் அதைக் கொல்ல முடியவில்லை. ராஜா குழம்பிப் போய் சோர்வாக இருந்தார்.

ராஜாவின் மனக்கவலையை மீனா அறிந்தாள்.

ஒரு நாள் ராஜகுமாரி ரொம்ப தைரியமாக ராத்திரி நேரம் அரண்மனைப் பின்பக்க வாசல் வழியா வேதாளத்தைப் பார்க்க கிளம்பினாள். கொஞ்சதூரம் போயி ஊரைக் கடந்ததும் வெள்ளிக்கொலுசை மாட்டி “ஜலக் ஜலக்” -னு சத்தம் வர்ற மாதிரி நடக்க ஆரம்பிச்சா.

உடனே பக்கத்துல இருக்குற ஒரு மரத்துல இருந்த அந்த வேதாளம் பாய்ந்து வந்து நின்றது. ராஜகுமாரி மீனாவுக்கு அதைப் பார்த்ததும் பயமாகிவிட்டது. இருந்தாலும் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு வேதாளத்தைப் பார்க்காத மாதிரி உட்கார்ந்திருந்தாள்.

அந்த நேரம் ராஜகுமாரியின் கண்ணைப் பார்த்த வேதாளம் மின்னல் தாக்கின மாதிரி தடுமாறியது. அதே வேளையில் ராஜகு‘ரி சுதாரித்தபடி, தனது இடுப்பில் இருந்த கத்தியைத் தூக்கி வேதாளத்தின் நெஞ்சில் எறிந்தாள். வேதாளத்தின் நெஞ்சு பிளந்து ரத்தம் பீறிட்டது.

வேதாளம் சாகப்போற நேரத்துல ராஜகுமாரியை கூப்பிட்டுச் சொன்னது, “தேவியாரே! நான் வேதாளம் இல்லை. பக்கத்து நாட்டு அரக்க வம்சத்தவன். உங்கள் ஊரில் செல்வச் செழிப்போடு மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதை சீர்குலைக்க எங்கள் ராஜாவால் வேதாளம் வேஷம் போட்டு அனுப்பப்பட்டவன் நான்” என்று சொன்னான். இதைச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவன் உயிர் பிரிந்தது.

நாடே ராஜகுமாரியைப் புகழ்ந்தது. வீரத்திருமகள்னு அவளை முடிசூட்டி இளவரசி ஆக்கினார்கள்.

“என்னடா பேரப்புள்ள அந்த ராஜகுமாரி மாதிரி நீயும் நல்லா படிச்சி வீரமா, நல்ல தைரியத்தோடு, எதுக்கும் பயப்படாம இருக்கணும் என்ன!” என்று தாத்தா கேட்க, “கொர்…கொர்” என்ற குறட்டையுடன் கணேஷ் தூங்கிக் கொண்டிருந்தான்.

விடியற்காலை ஐந்து மணிக்கு படிப்பதற்காக கணேஷை எழுப்பி விட்டார். கணேஷூம் எழுந்து முகம் கழுவிவிட்டு வந்து புத்தகத்தை எடுத்தவாறு தாத்தாவிடம் கேட்டான்:

“என்ன தாத்தா! ராத்திரி நீங்க ஏதோ ராஜா, ராஜகுமாரி, வேதாளம்னு சொன்னீங்க. ஆனா எனக்கு முழுக்கதையும் ஏன் சொல்லலை?” என்று கேட்டான்.

தாத்தா கலகலவென்று சிரித்து விட்டார்.

இன்றைய செய்திகள்

14.07.2025

⭐கேரள மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் வானிலை மையம் எச்சரிக்கை 

⭐மாநிலங்களவையின் நியமன எம்.பி.க்களாக 4 பேரை நியமித்தார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு

⭐அமெரிக்காவில் குற்றச்செயலில் ஈடுபட்ட காலிஸ்தான் தீவிரவாதி உள்பட 8 இந்திய வம்சாவளியினர் கைது

🏀விளையாட்டுச் செய்திகள்

🏀வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் 225 ரன்னில் சுருண்ட ஆஸ்திரேலியா

🏀முதல் இன்னிங்சில் 9-வது முறையாக 2 அணிகளும் ஒரே ஸ்கோர் - இந்தியா படைத்த மற்றொரு சாதனை


Today's Headlines

✏ Meteorological Department warns Kerala fishermen to not to venture into the sea 

✏Our President Honorable Draupadi Murmu appoints 4 persons as nominated MPs of the State Assembly

✏8 Indian-origin people arrested in US, including Khalistan terrorist involved in crime

 SPORTS NEWS 

🏀Cricket -Australia all out for 225 in 3rd Test against West Indies 

🏀 India has sets another record as both teams score same point in first innings for the 9th time

Covai women ICT_போதிமரம்