Wednesday, March 5, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 06.03.2025

  

வலந்தீனா  தெரெசுக்கோவா

 






திருக்குறள்: 

பால்: பொருட்பால்

 அதிகாரம்: சான்றாண்மை

 குறள்எண்:983

அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையோடு
ஐந்துசால்பு ஊன்றிய தூண்.

பொருள்:
அன்புடைமை. நாணம், பொதுநலம், இரக்கம், வாய்மை ஐந்தும் குனநிறைவு என்ற கட்டடத்தின் தூண்களாகும்.

பழமொழி :

செயல்கள் தேவை; சொற்களல்ல.

Wanted deeds only, not words.

இரண்டொழுக்க பண்புகள் :   

 பெற்றோர் எனக்கு நன்மை நடப்பதையே விரும்புவர் எனவே அவர்களின் சொல் கேட்டு நடப்பேன்.                     

 *பெரியவர்கள் தமது அனுபவத்தையே அறிவுரையாக தருவார்கள் எனவே பெரியவர்களின் அறிவுரையை கேட்டு நடப்பேன் .

பொன்மொழி :

எந்த மனிதனும் எனக்கு கீழானவன் அல்ல, அதுபோல, எவரும் எவருக்கும் மேலானவனும் அல்ல, மனிதர்கள் அனைவரும் சமம்.---தந்தை பெரியார்

பொது அறிவு : 

1. உலகின் முதல் கணினி வைரஸை உருவாக்கிய நாடு எது? 

விடை:  பாகிஸ்தான்.    

2. இந்தியாவின் இளைய பிரதமர் யார்?

 விடை: ராஜீவ் காந்தி 

English words & meanings :

 Railway station.     -     தொடர்வண்டி நிலையம்

Zoo.      -    விலங்குகள் பூங்கா

வேளாண்மையும் வாழ்வும் : 

 விவசாய உற்பத்தியில் அதிகப்படியான நீர், கனமழை முதல் அதிகப்படியான நீர்ப்பாசனம் வரை, பயிர் வளர்ச்சி மற்றும் உற்பத்தித்திறனைக் குறைக்கும், அத்துடன் கட்டிடங்கள்/கட்டமைப்புகளை சேதப்படுத்தும்.

மார்ச் 06

வலந்தீனா விளாடிமீரொவ்னா தெரெசுக்கோவா அவர்களின் பிறந்தநாள்


வலந்தீனா விளாடிமீரொவ்னா தெரெசுக்கோவா என்பவர் சோவியத் ஒன்றியத்தின் ஓய்வுபெற்ற விண்வெளி வீராங்கனையும் முதற்தடவையாக விண்வெளிக்குச் சென்ற பெண்ணும் ஆவார். இவர் வசுத்தோக்கு 6 விண்கலத்தில் 1963 சூன் 16 அன்று விண்வெளிக்குச் சென்று அங்கு மூன்று நாள்களுக்குச் சற்றுக் குறைவாகத் தங்கியிருந்து வெற்றிகரமாகத் திரும்பினார்.

1961ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தைச் சேர்ந்த யூரி ககாரின் மண்ணிலிருந்து விண்ணுக்குச் சென்ற முதல் மாந்தர் என்ற பெருமையைப் பெற்றார். அவருக்கு அடுத்தபடியாகப் பெண் ஒருவரை விண்ணுக்கு அனுப்ப சோவியத்து ஒன்றியம் முடிவு செய்தது. இந்த அறிவிப்பை கேட்டதும் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் குவிந்தன. இறுதிக் கட்டமாக நான்கு பெண்கள் மட்டுமே தெரிவு செய்யப்பட்டனர். மிகக்கடினமான பயிற்சிகளுக்குப் பிறகு 25 வயதான வலண்டீனா தெரெசுக்கோவா தெரிவு செய்யப்பட்டார்.

சூன் 19ஆம் நாள் விண்கலம் பூமிநோக்கிப் பாய்ந்து வந்தபோது, தரையிறங்கும் முன்பே பாராசூட்டில் இருந்து குதித்து, பாதுகாப்பாக இறங்கினார்‘சோவியத் ஒன்றியத்தின் வீராங்கனை’ என்ற பதக்கத்துடன் ‘இலெனின் விருது’என பல்வேறு விருதுகள் குவிந்தன.

நீதிக்கதை

 நாளைய உணவு


சில வெள்ளாடுகளும், செம்ம்றி ஆடுகளும் தன் குட்டிகளுடன் புல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது செம்மறி ஆட்டுக்குட்டிகள் நுனிக் கொழுந்துகளாகப் பார்த்து மேய்ந்து கொண்டிருந்தன. அதைக்கண்ட வெள்ளாடு, “என் அருமை செம்மறிக்குட்டிகளே, இப்படி நுனிக்கொழுந்தாக மேய்ந்தால் நாளை நமக்கு உணவு கிடைக்காது. 

அதனால் கூடுமானவரை, நுனிக்கொழுந்தைக் கடிக்காதிர்கள். இன்று ஒருவருக்கு மட்டுமே உணவாகும் அது, தழைத்து வளர்ந்தால் நாளை நம் அனைவருக்கும் உணவாகும்” என்றது.


அதைக்கேட்ட செம்மறி ஆடு, நீ உன் வேலையைப்பார். என் குட்டிகளுக்கு எது இஷ்டமோ, அதைத்தான் உண்ணும். நீ ஒன்றும் அதைச்சாப்பிடு, இதைச்சாப்பிடாதே என கட்டளையிட வேண்டாம்” என்றது காட்டமாய்.இந்தக்காலத்தில் நல்லதைச் சொன்னால் யார்த்தான் கேட்கிறார்கள்...என நொந்தபடியே தன் குட்டிகள் நுனிக் கொழுந்தை கடிக்கவிடாமல் கவனமாய் பார்த்துக்கொண்டது வெள்ளாடு.


சில நாட்கள் சென்றன. செம்மறி ஆடுகள் மேய்ந்த இடத்தில்  ஒரு இலை தழைக்கூட காணவில்லை. நுனிக்கொழுந்து கடிபட்ட செடிகள் தழைக்க நாளாகும் அல்லவா? அனால், வெள்ளாடுகள் மேய்ந்த இடங்களில் பசுமை தெரிந்தது. நுனிக்கொழுந்துகள் காக்கப்பட்டதால், இப்பொழுது அவைகள் சாப்பிடும் பக்குவத்தில் தழைத்து வளர்ந்திருந்தன.


வெள்ளாடுகள் வழக்கம்போல் எந்தத் தடையுமியின்றி மேயத்தொடங்கின. ஆனால், செம்மறி ஆடுகள் செய்வது அறியாது திகைத்து நின்றன.


‘அடுத்தவர் பேச்சைக் கேட்பதா...?’ என நினைத்த செம்மறி ஆடுகள், தங்களுடைய அடங்காத குணத்தால் இப்பொழுது திண்டாடுவதை உணர்ந்தன. அருகில் கிடைத்த உணவை பாதுகாக்கத் தெரியாததால், அவைகள் வேறு இடம் தேடிச் சென்றன.


‘இன்றைக்கு நிறைய உணவு கிடைக்கிறது என்பதற்காக, அவற்றை வீணாக்கக் கூடாது. அது நம்முடைய நாளைய உணவாகக் கூட இருக்கலாம்’ என்பதை செம்மறி ஆடுகள் உணர்ந்து கொண்டன.

இன்றைய செய்திகள்

06.03.2025

* வரும் கோடைக்காலத்தில் தினசரி மின்தேவை 22 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 10 சதவீதம் அதிகம் ஆகும்.

* போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு பணப்பலன் வழங்க ரூ.265 கோடியை குறுகிய காலக் கடனாக போக்குவரத்துக் கழகங்களுக்கு தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

* இந்தியாவிலிருந்து விசா வேண்டி விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை கடந்த 2024-ம் ஆண்டில் 67.5 லட்சத்தைத் தொட்டுள்ளது.

* இந்தியா, சீனா, பிரேசில், மெக்சிகோ, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா விதிக்க இருக்கும் பரஸ்பர வரி விகிதம் ஏப்ரல் 2ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க கூட்டு காங்கிரஸில் அறிவித்தார்.

* ICC சாம்பியன்ஸ் டிராபி: தென் ஆப்பிரிக்காவை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி இறுதி போட்டியில் இந்தியாவை எதிர்த்து விளையாட உள்ளது.


Today's Headlines

* India's daily electricity demand is expected to increase to 22,000 megawatts this summer, a 10% rise from last year.¹

* The Tamil Nadu government has allocated ₹265 crores as a short-term loan to transport corporations to provide pension benefits to retired transport employees.

* India has seen a significant surge in visa applications, with over 67.5 lakh applications received in 2024 alone.

* The United States has announced plans to impose reciprocal tax rates on several countries, including India, China, Brazil, Mexico, and Canada, starting from April 2

* ICC Champions Trophy: New Zealand, defeated South Africa by 50 runs, will play with  India in the final.

Covai women ICT_போதிமரம்

Tuesday, March 4, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.03.2025

   







திருக்குறள்: 

பால்: பொருட்பால்.           

அதிகாரம்: சான்றாண்மை

குறள் எண்:982

 குணநலம் சான்றோர் நலனே; பிறநலம்
 எந்நலத்து உள்ளதூஉம் அன்று.

பொருள்:
சான்றோர்கள் சிறப்பு குணநலமே; மற்ற சிறப்பு எவ்வகை நன்மையும் தராது.

பழமொழி :

சூழ்நிலை மனிதனை உருவாக்குகிறது.

A man is affected by his environment.

இரண்டொழுக்க பண்புகள் :   

 பெற்றோர் எனக்கு நன்மை நடப்பதையே விரும்புவர் எனவே அவர்களின் சொல் கேட்டு நடப்பேன்.                     

 *பெரியவர்கள் தமது அனுபவத்தையே அறிவுரையாக தருவார்கள் எனவே பெரியவர்களின் அறிவுரையை கேட்டு நடப்பேன் .

பொன்மொழி :

என்னை யார் தோற்கடித்தது என்று கோபத்துடன் பார்த்தேன், வேறு யாரும் இல்லை கோபம் தான் என்னைத் தோற்கடித்தது.---ஹிட்லர்

பொது அறிவு : 

1. பொட்டாஷ் படிகாரம் ஒரு


விடை: இரட்டை உப்புகள்


2. குளிர் தொழில்நுட்பம் மூலம் எவ்வளவு குறைந்த வெப்பநிலையை உருவாக்க முடியும்?


விடை: 123 K 

English words & meanings :

Temple.      -   கோவில்

Theater.     -     திரையரங்கம் 

வேளாண்மையும் வாழ்வும் : 

அதிகப்படியான நீர் தாவர வேர்கள் மற்றும் மண்ணில் நச்சு சேர்மங்கள் குவிவதற்கும் வழிவகுக்கும். 

நீதிக்கதை

 ஓர் ஊரில் பெரிய பண்ணையார் ஒருவர் இருந்தார். அந்த ஊரில் இருந்த பெரும்பாலான நிலங்கள் அவருக்குத் தான் சொந்தம்.


அவரிடம் முனியன் என்ற உழவன் வேலை பார்த்து வந்தான். அவனுக்குக் குடிசை ஒன்றும் சிறிதளவு நிலமும் இருந்தன.


பண்ணையாரிடம் வந்த அவன், ” ஐயா! எல்லா நிலத்திலும் உழுது விதை நட்டு விட்டார்கள். என் நிலம் மட்டும் தான் வெறுமனே உள்ளது. நீங்கள் சிறிது தானியம் தாருங்கள். என் நிலத்திலும் விதைத்து விடுகிறேன்” என்றான்.


” என் நிலத்திலேயே உழுது பயிரிடு. சொந்தமாகப் பயிரிட வேண்டாம்" என்று கோபத்துடன் சொன்னார் அவர்.

சோகத்துடன் வீடு திரும்பினான் அவன். 


தன் மனைவியிடம், ” நாம் வளம் பெறுவது பண்ணையாருக்குப் பிடிக்கவிலலை. தானியம் தர மறுத்து விட்டார். நீயும் நம் குழந்தைகளும் எப்போதும் போலப் பட்டினி கிடக்க வேண்டியதுதான். இதுதான் நம் தலைவிதி” என்று வருத்தத்துடன் கூறினான்.அவர்கள் குடிசையில் குருவி ஒன்று கூடு கட்டியது.


இதைப் பார்த்த அவன் மனைவி ” நம் குடிசை புயலுக்கும் மழைக்கும் எப்பொழுது விழுமோ என்று நாம் அஞ்சுகிறோம். இங்கு வந்து குருவி கூடு கட்டுகிறது பாருங்கள்” என்று கணவனிடம் சொன்னாள்.” பாவம்! வாய் பேச முடியாத உயிர் அது. நிலைமை புரிந்தவுடன் அதுவே இங்கிருந்து போய்விடும். நாம் அதற்குத் தொல்லை செய்ய வேண்டாம்” என்றான் அவன். கூட்டில் அந்தக் குருவி நான்கு முட்டைகள் இட்டது. நான்கும் குஞ்சுகளாயின.


திடீரென்று அந்தக் குருவிக் கூட்டுக்குள் ஒரு பாம்பு நுழைந்தது. குருவிக் குஞ்சுகளைப் பிடித்துச் சாப்பிடத் தொடங்கியது. அவை அலறின.


அங்கு வந்த உழவன் பாம்பை அடித்துக் கொன்றான். அதற்குள் அது மூன்று குஞ்சுகளைத் தின்று விட்டது. தரையில் விழுந்த ஒரு குஞ்சு மட்டும் உயிரோடு இருந்தது.


அதை அன்போடு எடுத்தான். அவன். அதன் கால் உடைந்திருப்பதைக் கண்டு அதற்குக் கட்டுப் போட்டான். அதை மீண்டும் கூட்டில் வைத்தான். வேளா வேளைக்கு உணவு தந்தான்.சில நாட்களில் அந்தக் குருவியின் கால்கள் சரியாயின. அங்கிருந்து அது பறந்து சென்றது. உழவனும் குடும்பத்தினரும் வறுமையில் வாடினார்கள்.


” இப்படியே அரை வயிறு சாப்பிட்டு எவ்வளவு காலம் வாழ்வது? நமக்கு விடிவே கிடையாதா?” என்றாள் மனைவி.

அப்பொழுது அவர்கள் வீட்டுக் கதவை யாரோ தட்டும் ஓசை கேட்டது. கதவை திறந்தான் அவன்.


அவன் வளர்த்த குருவி வெளியே இருந்தது. அதன் வாயில் ஒரு விதை இருந்தது. அதை அவன் கையில் வைத்தது. ” இதை உன் வீட்டுத் தோட்டத்தில் நடு” என்று சொல்லிவிட்டுப் பறந்தது அது.


குருவி சொன்னபடியே  விதையை நட்டான் அவன்.மறுநாள் காலையில் அங்கே  பெரிய பூசணிக் காய் காய்த்து இருந்தது . இதைப் பார்த்து வியப்பு அடைந்தான் அவன்.


தோட்டத்தில் இருந்த பூசணிக் காயை வீட்டிற்குள் கொண்டு வந்தான். அதை இரண்டு துண்டாக வெட்டினான்.

என்ன வியப்பு! அதனுள் இருந்து விதவிதமான உணவுப் பொருள்கள் வந்தன. சுவையான அவற்றை எல்லோரும் மகிழ்ச்சியாக உண்டனர். மீண்டும் அந்தப் பூசணிக் காயை ஒன்று சேர்த்தனர். பழையபடி அது முழுப் பூசணிக் காய் ஆனது.


மகிழ்ச்சி அடைந்த அவன், ” இது மந்திரப் பூசணிக் காய். நமக்கு உணவு தேவைப்படும் போது பிளந்தால் உணவு கிடைக்கும். மீண்டும் சேர்த்து விட்டால் பழையபடி ஆகி விடும். இனி நமக்கு உணவுப் பஞ்சமே இல்லை” என்றான்.

” 

அதன் பிறகு அவனும் மனைவியும், குழந்தைகளும் நல்ல உணவு உண்டனர்.  அவர்களது உழைப்பால் நல்ல ஆடைகளை அணிந்தனர். மிகப் பெரிய வீடு ஒன்றைக் கட்டத் தொடங்கினார்கள்.


நீதி :  பிறருக்கு நீங்கள் உதவ முன் வந்தால்,கடவுள் உங்களுக்கு உதவ  முன் வருவார்.

இன்றைய செய்திகள்

05.03.2025

* விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதற்கு எதிராக வழக்கு: நடவடிக்கைக்கு ஐகோர்ட் உத்தரவு.

* ரயில்கள், ரயில் நிலையங்களில் பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், கூடுதல் காவலர்கள் நியமனம், சிசிடிவி கண்காணிப்பு என பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க தமிழக ரயில்வே காவல் துறை திட்டம்.

* பார்வை குறைபாடு உடையவர்கள் நீதிபதியாக தகுதியானவர்கள்தான்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.

* சீனாவில் 10 லட்சம் டன் தோரியம் கண்டுபிடிப்பு: 60,000 ஆண்டுகளுக்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.

* பிராக் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டி: 5 சுற்றுகள் முடிவில் இந்திய வீரர்கள் முதலிடம்.

* இந்தியாவில் முதல்முறையாக நடைபெற உள்ள உலக பாரா தடகள கிராண்ட்பிரிக்ஸ் போட்டிகளில் 20 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்பார்கள்.

* ICC சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய அணியை அபாரமாக வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

Today's Headlines

1. Case filed against converting agricultural lands into residential plots: High Court orders action.

2. To ensure women's safety in trains and stations, Tamil Nadu Railway Police plans to deploy additional personnel and install CCTV cameras.

3. Supreme Court rules that visually impaired individuals are eligible to become judges.

4. China discovers 1 million tons of thorium, which can generate electricity for 60,000 years.

5. Indian chess players lead in the Braintree Masters International Chess Tournament after 5 rounds.

6. The World Para Athletics Grand Prix, to be held in India for the first time, will feature athletes from 20 countries.

7. In the semi finals of ICC Champions Trophy, Indian cricket team had a great victory against Australia and entered onto finals.

Covai women ICT_போதிமரம்

Monday, March 3, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 04.03.2025

 


  






திருக்குறள்: 

பால்: பொருட்பால்

அதிகாரம்: சான்றாண்மை

குறள் எண்:981.

கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.

பொருள்:
தம் கடமைகள் அறிந்து, குண நிறைவு கொண்டவர்க்கு நல்ல முயற்சிகள் எல்லாம் கடமைகள் என்பர்

பழமொழி :

சுறுசுறுப்பு வெற்றி தரும் .

Briskness will bring success.

இரண்டொழுக்க பண்புகள் :   

 பெற்றோர் எனக்கு நன்மை நடப்பதையே விரும்புவர் எனவே அவர்களின் சொல் கேட்டு நடப்பேன்.                     

 *பெரியவர்கள் தமது அனுபவத்தையே அறிவுரையாக தருவார்கள் எனவே பெரியவர்களின் அறிவுரையை கேட்டு நடப்பேன் .

பொன்மொழி :

தன் மீது விழும் ஒவ்வொரு அடியும் தன்னை சிற்பமாக்கும் என்று கல்லுக்கு தெரியாது.---ஐன்ஸ்டீன்

பொது அறிவு : 

1. மனிதனின் நுரையீரலில் எவ்வளவு காற்று பைகள் உள்ளன? 

விடை: 300 மில்லியன் 

2. மூளையில் உள்ள சாம்பல் நிறப் பகுதியில் எவ்வளவு நீர் உள்ளது? 

விடை: 85%

English words & meanings :

 Street     -      தெரு
 
Swimming pool     -      நீச்சல் குளம்

வேளாண்மையும் வாழ்வும் : 

 அதிகப்படியான நீர் தாவரங்களின் வேர்களுக்கு இடையே ஆக்ஸிஜன் பரிமாற்றத்தைத் தடுக்கிறது மற்றும் இயற்கையில் உள்ள பிற முக்கிய செயல்முறைகளைத் தடுக்கிறது

மார்ச் 04

 தேசிய தொழிலாளர்கள் பாதுகாப்பு தினம்


தேசிய தொழிலாளர்கள் பாதுகாப்பு தினம் என்ற பெயரில் இந்தியாவில் தொழிலாளர்கள் பாதுகாப்பு தினம் மார்ச் 4ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.தேசிய அளவிலான பாதுகாப்புக்குழு அமைப்பு 1966இல் தொழிலாளர் நல அமைச்சகத்தால் நிறுவப்பட்டது.

பிறகு 1971ஆம் ஆண்டு மார்ச் 4ஆம் தேதி தேசிய பாதுகாப்பு கவுன்சில் உருவாக்கப்பட்டது. மும்பையை தலைமையகமாகக் கொண்டு அனைத்து மாநிலத்திலும் இதன் பிரிவுகள் செயல்படுகின்றன.

தொழிலாளர்கள் விபத்துகளின்றி பணிபுரிந்திடவும், பாதுகாப்பு உணர்வுடனும், உடல்நலன் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் பணி செய்திட வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவே அனைத்து தொழிற்சாலைகளிலும் இத்தினம் கொண்டாடப்படுகிறது.


நீதிக்கதை

ஒற்றுமையே வலிமை 


ஒரு நாள், கையில் உள்ள ஐந்து விரல்களுக்குள் எந்த விரல் முக்கியமானது என்ற பிரச்சினை உண்டாயிற்று.


கட்டை விரல், “நான் தான் முக்கியம், என் உதவி எல்லோருக்கும் தேவை” என்று பெருமையுடன் கூறியது.


அடுத்த விரல், “என்னைக் கொண்டே எல்லோரும் சுட்டிக் காட்டுவதால், எனக்கு ஆள்கட்டி விரல் என்று பெருமை உண்டு” என்று கூறியது.


நடுவிரலுக்கு மிகவும் கோபம், “எல்லோரையும் விட நானே உயரமானவன்” என்று இறுமாப்புடன் கூறியது.


நான்காவது விரல் அமைதியாக, “உங்களில் எவருக்கும் இல்லாத பெருமை எனக்கு மட்டுமே உண்டு. தங்க மோதிரத்தையோ வைரமோதிரத்தையோ என்மீது போடுவதால், மோதிர விரல்” என்ற மதிப்பு எனக்கே உண்டு” என்று அமைதியாகக் கூறியது. 


ஐந்தாவது விரலான சுண்டு விரல், “வணக்கம் என்று சொல்லி ஒருவரை வணங்கினாலும், அல்லது கடவுளை வணங்கினாலும், எப்போதும் நான்தான் முதலில் நிற்கிறேன். நீங்கள் நால்வரும் எனக்குப் பின்னே அல்லவா நிற்கிறீர்கள்?” என்று கூறியது.


பிரச்சினை முடிவாகவில்லை.


அப்பொழுது, ஒருவன், லட்டு லட்டு என்று கூறிக் கொண்டு வந்தான் 


எல்லா விரல்களும் ஒன்று சேர்ந்து அவனிடம் லட்டை வாங்கிக் கொண்டன.


அப்பொழுது கை, "ஒரு லட்டை பெறவே நீங்கள் ஐந்து பேரும் ஒன்று சேர வேண்டியுள்ளது. உங்களுக்குள் சண்டையிட்டு உங்கள் பலத்தை இழந்து விடாதீர்கள்"என்று கூறியது.


நீதி:ஒற்றுமையே  பலம்


இன்றைய செய்திகள்

04.03.2025

* தென்தமிழகத்தில் இருந்து வரும் பேருந்துகள் இனி கிளாம்பக்கம் வரை மட்டுமே இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

* தமிழக சட்டப்​பேர​வை​யில் வரும் 14-ம் தேதி பட்ஜெட் தாக்​கலின் போதே முதல் முறையாக பொருளாதார ஆய்வு அறிக்கை சமர்ப்​பிக்​கப்​பட​வுள்​ளது.

* மத்திய பல்கலைக்​கழகங்​களில் இளநிலை படிப்பு​களில் சேரு​வதற்கான க்யூட் தேர்வு கணினி வழியில் மே 8-ல் தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை நடைபெற உள்ளதாக என்டிஏ அறிவித்​துள்ளது.

* ஹைதராபாத் பல்கலைக்கழகம் சார்பில் ஐ.டி. ஊழியர்களின் உடல்நலம் குறித்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.  இதில் 80 சதவீதம் பேருக்கு கொழுப்பு கல்லீரல் நோய் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

* அமெரிக்​கா​வின் புளு கோஸ்ட் விண்​கலம் வெற்றிகரமாக நிலவில்  தரையிறங்கி உள்ளது.

* பிராக் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டி: இந்திய வீரர்கள் பிரக்ஞானந்தா, அரவிந்த் முன்னிலை.

* சிலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி: இந்தியாவின் ரித்விக் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.

Today's Headlines

* Buses coming from southern Tamil Nadu will now operate only up to Koyambedu, as announced by the Transport Department.

* The Economic Survey Report will be presented for the first time on February 14, along with the budget, in the Tamil Nadu Legislative Assembly.

* The CUET exam for undergraduate admissions in central universities will be held from May 8 to June 1.

* A study by Hyderabad University found that 80% of IT employees suffer from fatty liver disease.

* The US Blue Ghost lunar lander successfully landed on the moon.

* Indian chess players Praggnanandhaa and Aravindh are performing well in the Braintree Masters International Chess Tournament.

* India's Ritwik pair won the championship title in the Chile Open International Tennis Tournament.


Covai women ICT_போதிமரம்

Sunday, March 2, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 03.03.2025

 







திருக்குறள்: 

பால்:பொருட்பால்

 அதிகாரம்: பெருமை 

குறள் எண்:980

 அற்றம் மறைக்கும் பெருமை; சிறுமைதான்
 குற்றமே கூறி விடும்.

பொருள்:
பெருந்தன்மையுடையோர் பிறர் குற்றம் மறைத்து பேசுவர், குற்றமே கூறுதல் சிறுமையின் இயல்பு.

பழமொழி :

சுழலும் உலகம் அனைத்தையும் சுழற்றுகிறது.

The spinning world makes every thing rotate.

இரண்டொழுக்க பண்புகள் :   

 பெற்றோர் எனக்கு நன்மை நடப்பதையே விரும்புவர் எனவே அவர்களின் சொல் கேட்டு நடப்பேன்.                     

 *பெரியவர்கள் தமது அனுபவத்தையே அறிவுரையாக தருவார்கள் எனவே பெரியவர்களின் அறிவுரையை கேட்டு நடப்பேன் .

பொன்மொழி :

தளராத இதயம் உள்ளவனுக்கு இவ்வுலகில் முடியாதது எதுவுமே இல்லை.

பொது அறிவு : 

1. போபாப் மரம் எத்தனை லிட்டர் தண்ணீர் சேமிக்கும்? 

விடை:  1,20,000 லிட்டர்.       

2. உலகின் முதல் 6G  சாதனத்தை வெளியிட்ட நாடு எது? 

விடை:  ஜப்பான்

English words & meanings :

 Restaurant.   -     உணவகம்

 School.     -       பள்ளி

வேளாண்மையும் வாழ்வும் : 

 நீர் குறைவது மட்டும் அல்ல தவறான இடங்களில் அதிகப்படியான நீர் இருப்பதும் சுற்றுச்சூழல் அமைப்புகள், மக்கள், சொத்துக்கள் மற்றும் உள்கட்டமைப்பை ஆபத்தில் ஆழ்த்துகிறது.

மார்ச் 03

உலகக் காட்டுயிர் நாள்

உலகக் காட்டுயிர் நாள் (World Wildlife Day) அருகிவரும் காட்டு விலங்குகள் மற்றும், தாவரயினங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கமாக, ஒவ்வொரு ஆண்டும், மார்ச் 3 இல் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. 2013, டிசம்பர் 20 அன்று, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் (UNGA) 68 ஆவது அமர்வில் “காட்டு விலங்குகள், மற்றும் தாவரங்கள் அருகிவரும் உயிரினங்களின் சர்வதேச வர்த்தக சாசனம்” (CITES) மூலம் இந்நாளை உலகக் காட்டுயிர் நாளாக தாய்லாந்தினால் முன்மொழியப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இம்முயற்சியில் சர்வதேச கவனத்தை ஈர்க்கும் பொருட்டு திரைப்பட விழா, விழிப்புணர்வு கருதரங்கங்களை ஐ. நா நடத்திவருகிறது.

நீதிக்கதை

 ஒருநாள் காலையில் நாட்டின் ரா‌ஜா ஊரை முழுவதுமாக சுற்றிப் பார்க்க தனது குதிரையில் சவாரி செய்தார்.  பொழுது சாய்ந்தது.


இரவு நேரம் என்பதால் குதிரையை விட்டு இறங்கி அருகிலுள்ள ஆப்பிள் மரத்தடியில் உறங்க ஆரம்பித்தார்.ராஜாவிற்கு பசி அதிகரிக்க, நல்உணவு வேண்டும் என்று கடவுளை வேண்டினார். 

உடனே அந்த மரத்திலிருந்த பழம் ஒன்று கிளையிலிருந்து உதிர்ந்தது. அப்போது தான் ராஜாவிற்கு நாம் இருப்பது ஆப்பிள் மரத்தடியில் என்று நினைவுக்கு வந்தது கடவுள் 

தன் பசியைப் போக்க ஆப்பிளை கொடுத்துள்ளார் என்று நினைத்தவாறு நன்றி கடவுளே என்று தன் நன்றியை கடவுளிடம் தெரிவித்தார்.கீழே விழுந்த ஆப்பிள் பழத்தையும்  கையில் எடுத்து மண்ணை வாயில் ஊதி சுத்தம் செய்துவிட்டு சாப்பிட்டார். 


அப்போதும்  ராஜாவிற்கு பசி அதிகரிக்க மேலும் சில ஆப்பிள்களை ராஜா 

மரத்தின்மீது ஏறிப் பறித்து உண்டு தனது பசியைப் போக்கினார்.பூதம் ஏதேனும் இங்கு  இரவில் வருமோ என்று பயந்தார். உடனே அவருக்கு காய்ச்சல் வந்தது.  இரவு முழுவதும் தூங்காமல் 

பயத்துடன் மறுநாள்  காலையில் அரண்மனையை நோக்கித் தன் பயணத்தை மேற்கொண்டார்.


"எண்ணம் போல் வாழ்க்கை"என்பதுபோல் ராஜா உணவு வேண்டும் என்று நல்லதாக நேர்மறையாக நினைத்ததால் இந்த பிரபஞ்சம்  பழத்தை தந்து  உதவியது. பின்பு அவர் பூதத்தைப் பற்றி  எதிர்மறை எண்ணம் கொண்டதால் காய்ச்சல் வந்தது. 


நீதி:எண்ணம் போல் வாழ்க்கை நல்லதை நினைத்தால் நல்லதே நடக்கும்.

இன்றைய செய்திகள்

03.03.2025

* தமிழ்நாட்டில் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. பொதுத்தேர்வினை 8,21,057 மாணவ, மாணவியர்கள் எழுத உள்ளனர்.

* தமிழகத்தில் இன்று முதல் மார்ச் 6 ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2 – 3° செல்சியஸ்  இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதிக்கு பிறகு பிறந்தவர்கள் பாஸ்போர்ட் விண்ணப்பத்துடன் பிறப்பு சான்றிதழை இணைக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

* அமெரிக்க அதிபர் ட்ரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையிலான சந்திப்பு கடும் வாக்குவாதத்தில் முடிவடைந்தது. உக்ரைன் பிரச்சினைக்கு தீர்வு காண அமெரிக்கா மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.

* உலக செஸ் தரவரிசையில் 3-வது இடத்துக்கு முன்னேறினார் குகேஷ்.

* துபாய் ஓபன் டென்னிஸ் போட்டி: கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் சாம்பியன் பட்டம் பெற்றார்.

Today's Headlines

* The 12th grade general election begins today in Tamil Nadu. There are 8,21,057 students  going to write the general election.

* The maximum temperature in Tamil Nadu is likely to be 2 - 3 ° C more in some places by Chennai Metrological Department 

* It is mandatory for those who born after October 1, 2023, to connect the birth certificate with the passport application.

* The meeting between US President Trump and Ukrainian President Jelanxi ended in a heated argument. The US's attempt to solve the Ukraine issue ended in failure.

* Kukesh advanced to 3rd place in the World Chess Ranking.

* Dubai Open Tennis Tournament Greece player Sitciboss won the championship title

Covai women ICT_போதிமரம்