அதிகாரம்: சான்றாண்மை
குறள் எண்:981.
கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.
பொருள்:
தம் கடமைகள் அறிந்து, குண நிறைவு கொண்டவர்க்கு நல்ல முயற்சிகள் எல்லாம் கடமைகள் என்பர்
சுறுசுறுப்பு வெற்றி தரும் .
Briskness will bring success.
இரண்டொழுக்க பண்புகள் :
* பெற்றோர் எனக்கு நன்மை நடப்பதையே விரும்புவர் எனவே அவர்களின் சொல் கேட்டு நடப்பேன்.
*பெரியவர்கள் தமது அனுபவத்தையே அறிவுரையாக தருவார்கள் எனவே பெரியவர்களின் அறிவுரையை கேட்டு நடப்பேன் .
பொன்மொழி :
தன் மீது விழும் ஒவ்வொரு அடியும் தன்னை சிற்பமாக்கும் என்று கல்லுக்கு தெரியாது.---ஐன்ஸ்டீன்
பொது அறிவு :
1. மனிதனின் நுரையீரலில் எவ்வளவு காற்று பைகள் உள்ளன?
விடை: 300 மில்லியன்
2. மூளையில் உள்ள சாம்பல் நிறப் பகுதியில் எவ்வளவு நீர் உள்ளது?
விடை: 85%
English words & meanings :
வேளாண்மையும் வாழ்வும் :
அதிகப்படியான நீர் தாவரங்களின் வேர்களுக்கு இடையே ஆக்ஸிஜன் பரிமாற்றத்தைத் தடுக்கிறது மற்றும் இயற்கையில் உள்ள பிற முக்கிய செயல்முறைகளைத் தடுக்கிறது
மார்ச் 04
தேசிய தொழிலாளர்கள் பாதுகாப்பு தினம்
தேசிய தொழிலாளர்கள் பாதுகாப்பு தினம் என்ற பெயரில் இந்தியாவில் தொழிலாளர்கள் பாதுகாப்பு தினம் மார்ச் 4ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.தேசிய அளவிலான பாதுகாப்புக்குழு அமைப்பு 1966இல் தொழிலாளர் நல அமைச்சகத்தால் நிறுவப்பட்டது.
பிறகு 1971ஆம் ஆண்டு மார்ச் 4ஆம் தேதி தேசிய பாதுகாப்பு கவுன்சில் உருவாக்கப்பட்டது. மும்பையை தலைமையகமாகக் கொண்டு அனைத்து மாநிலத்திலும் இதன் பிரிவுகள் செயல்படுகின்றன.
தொழிலாளர்கள் விபத்துகளின்றி பணிபுரிந்திடவும், பாதுகாப்பு உணர்வுடனும், உடல்நலன் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் பணி செய்திட வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவே அனைத்து தொழிற்சாலைகளிலும் இத்தினம் கொண்டாடப்படுகிறது.
நீதிக்கதை
ஒற்றுமையே வலிமை
ஒரு நாள், கையில் உள்ள ஐந்து விரல்களுக்குள் எந்த விரல் முக்கியமானது என்ற பிரச்சினை உண்டாயிற்று.
கட்டை விரல், “நான் தான் முக்கியம், என் உதவி எல்லோருக்கும் தேவை” என்று பெருமையுடன் கூறியது.
அடுத்த விரல், “என்னைக் கொண்டே எல்லோரும் சுட்டிக் காட்டுவதால், எனக்கு ஆள்கட்டி விரல் என்று பெருமை உண்டு” என்று கூறியது.
நடுவிரலுக்கு மிகவும் கோபம், “எல்லோரையும் விட நானே உயரமானவன்” என்று இறுமாப்புடன் கூறியது.
நான்காவது விரல் அமைதியாக, “உங்களில் எவருக்கும் இல்லாத பெருமை எனக்கு மட்டுமே உண்டு. தங்க மோதிரத்தையோ வைரமோதிரத்தையோ என்மீது போடுவதால், மோதிர விரல்” என்ற மதிப்பு எனக்கே உண்டு” என்று அமைதியாகக் கூறியது.
ஐந்தாவது விரலான சுண்டு விரல், “வணக்கம் என்று சொல்லி ஒருவரை வணங்கினாலும், அல்லது கடவுளை வணங்கினாலும், எப்போதும் நான்தான் முதலில் நிற்கிறேன். நீங்கள் நால்வரும் எனக்குப் பின்னே அல்லவா நிற்கிறீர்கள்?” என்று கூறியது.
பிரச்சினை முடிவாகவில்லை.
அப்பொழுது, ஒருவன், லட்டு லட்டு என்று கூறிக் கொண்டு வந்தான்
எல்லா விரல்களும் ஒன்று சேர்ந்து அவனிடம் லட்டை வாங்கிக் கொண்டன.
அப்பொழுது கை, "ஒரு லட்டை பெறவே நீங்கள் ஐந்து பேரும் ஒன்று சேர வேண்டியுள்ளது. உங்களுக்குள் சண்டையிட்டு உங்கள் பலத்தை இழந்து விடாதீர்கள்"என்று கூறியது.
நீதி:ஒற்றுமையே பலம்
இன்றைய செய்திகள்
No comments:
Post a Comment