Tuesday, November 17, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 18.11.2026




திருக்குறள்: 

 பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:55.செங்கோன்மை

குறள் எண்:542

குறள்:

வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழுங் குடி.

பொருள்:

உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை நம்பி வாழ்கின்றன, அதுபோல் குடிமக்கள் எல்லாம் அரசனுடைய செங்கோலை நோக்கி வாழ்கின்றனர்.

பழமொழி :

Walls have ears.

சுவற்றுக்கும் காது உண்டு.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. நம் உடலையும் மனதையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நம் செயல்களும் நல்ல செயல்களாக அமையும் . 

 2. பள்ளிக்குத் தினமும் சரியான நேரத்திற்கு வருவேன்; நேரந்தவறாமையை என் வாழ்வில் கடைப்பிடிப்பேன்.

பொன்மொழி : 

தாய்மண்ணின் மீதும் உரிமையின் மீதும் கொண்ட பற்றும் துணிவும் வரலாற்றில் நிலையான இடத்தைப் பெற்றுத் தரும்!

Thought for the Day :

Courage and commitment to one's land and rights create a lasting place in history.

பொது அறிவு : 

1. முரசு புயலுக்கு பெயர் வழங்கிய நாடு எது? 

இந்தியா. 

2 . புயல் உருவாக முக்கிய காரணம் என்ன? 

 கடல் பகுதியில் உருவாகும் குறைந்த காற்றழுத்தம். 

English words :

1. Lenient - கருணையுள்ள - Tolerant

2. Vivid - தெளிவான - Bright

புவியியலும் சுற்றுசூழலும் :

மன்னார் வளைகுடா கடல்சார் தேசிய பூங்கா: தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் இடையே 21 தீவுகளை உள்ளடக்கிய இந்தியாவின் முக்கிய கடல்சார் தேசிய பூங்காவாகும். கடல் பசு (Dugong) மற்றும் பவளப்பாறைகளுக்கு இது புகழ்பெற்றது.

7. கோடியக்கரை வனவிலங்கு மற்றும் பறவைகள் சரணாலயம்: நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள கடற்கரை வனப்பகுதியாகும். இங்கு வெளிமான்கள் (Blackbuck) மற்றும் புலம்பெயர்ந்து வரும் பறவைகள் அதிகம் காணப்படும்.

NMMS :

MAT 

மீனா, “அவள் என் தாயின் ஒரே மகளின் மகள்” என்கிறார். அந்தப் பெண் மீனாவுக்கு என்ன உறவு?

A. Sister / சகோதரி 

B. Daughter / மகள் 

C. Niece / சகோதர மகள் 

D. Mother / தாய்

விடை: B) மகள்

நவம்பர் 18

வ. உ. சி அவர்களின் நினைவுநாள்

வ. உ. சி என்றழைக்கப்படும் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை (V. O. Chidambaram Pillai, செப்டம்பர் 5 1872 – நவம்பர் 18 1936) ஒரு இந்தியா விடுதலைப் போராட்ட வீரர். பிரித்தானியக் கப்பல்களுக்குப் போட்டியாக முதல் உள்நாட்டு இந்திய கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர். இவர் தொடங்கிய சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே கடல்வழிப் போக்குவரத்தை மேற்கொண்டது. பிரித்தானிய அரசால் தேசத்துரோகியாகக் குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். அவரது வழக்கறிஞர் உரிமமும் பறிக்கப்பட்டது.

நீதிக்கதை

 மொபைல் விளையாட்டின் மோகமும் உடல்நலப் பாதிப்பும்

ஒரு அழகான கிராமத்தில் அருண் என்ற சிறுவன் வாழ்ந்து வந்தான். அவன் படிப்பிலும் விளையாட்டிலும் மிகவும் ஆர்வமாக இருந்தான். பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்ததும் நண்பர்களுடன் வெளியே விளையாடுவது அவனுடைய வழக்கம்.

ஒருநாள் அவனுடைய நண்பன் ஒரு புதிய மொபைல் விளையாட்டை அறிமுகப்படுத்தினான். ஆரம்பத்தில் பொழுதுபோக்கிற்காகச் சிறிது நேரம் விளையாடிய அருண், நாளடைவில் அந்த விளையாட்டிற்கு அடிமையானான்.

காலையில் எழுந்தவுடன் மொபைல், சாப்பிடும்போது மொபை ல், தூங்கச்செல்லும் முன்பும் மொபை ல் என்று அவனுடைய வாழ்க்கையே மாறிவிட்டது.

இதனால் அவனுக்குப் பல பிரச்சினைகள் ஏற்பட்டன. * நீண்ட நேரம் திரையைப் பார்த்ததால் கண்களில் சோர்வும் எரிச்சலும் ஏற்பட்டது.

* சரியான நேரத்தில் தூங்காததால் காலையில் எழுந்திருக்க முடியவில்லை .

* வெளியில் விளையாடுவதை நிறுத்தியதால் உடல் சுறுசுறுப்பு குறைந்தது.

* படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் மதிப்பெண்களும் குறைந்தன.

* எப்போதும் விளையாட்டைப் பற்றியே சிந்தித்ததால் குடும்பத்தினருடன் பேசுவதற்குக்கூட நேரமில்லாமல் போனது.

இதையெல்லாம் கவனித்த அவனுடைய தாத்தா ஒருநாள் அவனை அழைத்து,

"அருண்! மொபைல் என்பது நமக்குப் பயன்பட வேண்டிய ஒரு கருவி. ஆனால் நாம் மொபைலுக்குப் பயன்படும் மனிதர்களாக மாறிவிடக்கூடாது. விளையாட்டு மகிழ்ச்சிக்காக இருக்க வேண்டும்; அது நம் ஆரோக்கியத்தையும் வாழ்க்கையையும் பாதிக்கக் கூடாது!" என்றார்.

தாத்தாவின் வார்த்தைகள் அருணின் மனதில் ஆழமாகப் பதிந்தன.

அன்றிலிருந்து அவன் மொபைல் விளையாடும் நேரத்தைக் குறைத்து, குடும்பத்தினருடன் நேரம் செலவிடவும், நண்பர்களுடன் வெளியில் விளையாடவும், படிப்பில் கவனம் செலுத்தவும் தொடங்கினான்.

சில நாட்களிலேயே அவனுடைய தூக்கமும் படிப்பில் கவனமும் மேம்பட்டன.

மீண்டும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்குத் திரும்பினான்.

### 🌟 நீதிக்கருத்து

"அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு. மொபைல் விளையாட்டுகளை அளவோடு பயன்படுத்துவோம்; உடல்நலத்தையும் மனநலத்தையும் பாதுகாப்போம்!"

நினைவில் கொள்வோம்:

* மொபைலை விட மைதான விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்போம்.

* போதுமான தூக்கம் பெறுவோம்.

* கண்களுக்கும் உடலுக்கும் ஓய்வு கொடுப்போம்.

* தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவோம்; அதற்கு அடிமையாக மாட்டோம்!

இன்றைய செய்திகள்

18.11.2026

🗒️சென்னை, மதுரை, கோயம்புத்தூர், கடலூர் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகியப் பகுதிகளில் எரிசக்தி செயல்திறன் உதவி மையங்கள் அரசு சார்பில் அமைக்க உள்ளனர்.

🗒️கடந்த மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 12 சதவீதமாக உயர்ந்துள்ளது.

🗒️டிரம்ப் அரசு கொண்டு வந்த விசா விதிகளை ரத்து செய்த அமெரிக்க நீதிமன்றம்.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏃🏻‍♀️ உலக இளையோர் டேபிள் டென்னிஸ் போட்டியில் சென்னை வீரர் தங்கம் வென்றார். 

🏃🏻‍♀️ஒலிம்பிக் பதக்க வீராங்கனைக்கு அடுத்த அங்கீகாரம், சர்வதேச அமைப்பில் இடம்பிடித்த மனு பாக்கர்.

Today's Headlines

🗒️ The government plans to set up Energy Efficiency Help Centres in Chennai, Madurai, Coimbatore, Cuddalore and Tiruchirappalli.

🗒️ Wholesale inflation increased to 12% last month.

🗒️ A US court cancelled the visa rules introduced by the Trump government.

🏀 Sports News

🏃🏻‍♀️ A Chennai player won a gold medal at the World Youth Table Tennis Championship.

🏃🏻‍♀️ Olympic medal winner Manu Bhaker has received another honour by becoming a member of an international organisation.

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment