Sunday, September 6, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.09.2026

   




திருக்குறள்: 

 பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:49.காலம் அறிதல்

குறள் எண்:488

குறள்:

செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை.

பொருள்:

பகைவர்க்கு அழிவுகாலம் வரும்வரை அவரைக் கண்டால் பணிக; அழிவுகாலம் வரும்போது தடை இன்றி அழிந்தபோவர்.

பழமொழி :

No Pains ; No Gains.

உழைப்பின்றி ஊதியம் இல்லை.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. பள்ளியில் நடைபெறும் போட்டிகளில் எனது தனித்திறமையை வெளிப்படுத்துவேன். 

2. என்னுடன் போட்டியிடும் மாணவர்கள் வெற்றி பெற்றால் அவர்களை வாழ்த்தி ஊக்குவிப்பேன்.

பொன்மொழி : 

“கனவு காணும் இளைஞன் ஒரு படி முன்னேறுகிறான்; திறனை வளர்க்கும் இளைஞன் இலக்கை அடைகிறான்.”

Thought for the Day :

“Skills turn ideas into action and dreams into reality.”

பொது அறிவு : 

1. 200 ரூபாய் நோட்டிற்குப் பின்புறம் அச்சிடப்பட்டுள்ள படம் எது? 

 சாஞ்சி ஸ்தூபி (மத்திய பிரதேசம்) .

2. 100 ரூபாய் நோட்டிற்கு பின்புறம் அச்சிடப்பட்டுள்ள படம் எது? 

 ராணி கி வாவ் (குஜராத்)  

English words :

1. Resourceful – Finds clever ways to solve problems, சமயோசித புத்தி உடையவர்.

2. Punctilious – Great attention to detail and correct behavior, நேர்த்தியான ஒழுக்கமுடையவர்.

புவியியலும் சுற்றுசூழலும் :

மலைகள்
தமிழ்நாட்டில் மேற்கு மற்றும் வடமேற்குப் பகுதிகளில் மலைத்தொடர்கள் காணப்படுகின்றன.
முக்கிய மலைத்தொடர்கள்:
மேற்கு தொடர்ச்சி மலை
கிழக்கு தொடர்ச்சி மலை
நீலகிரி மலை
சேர்வராயன் மலை
கல்வராயன் மலை
கொல்லிமலை
ஜவ்வாது மலை
ஏலகிரி மலை ஆகும்

NMMS :

MAT 

விதைத் தாவரங்களின் சரியான வரிசையைத் தேர்ந்தெடு. வகுப்பு------>துணை வகுப்பு---------> வரிசை. 

 (1) தலாமிஃபுளோரே-------> பாலிபெட்டலே-------> டைகாட்டிலிடனே

 (2) டைகாட்டிலிடனே-------> பாலிபெட்டலே-----------> தலாமிஃபுளோரே

 (3) பாலிபெட்டலே---------> டைகாட்டிலிடனே---------> தலாமிஃபுளோரே 

 (4) பாலிபெட்டலே --------> தலாமிஃபுளோரே-------------> டைகாட்டிலிடனே 

 விடை: (2) டைகாட்டிலிடனே-------------> பாலிபெட்டலே-------------> தலாமிஃபுளோரே

நீதிக்கதை

 “பெரிய இலக்கு”

ஒரு கிராமத்தில் சூர்யா என்ற சிறுவன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு எதிர்காலத்தில் ஒரு பெரிய சாதனை செய்ய வே ண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் அந்த இலக்கை நினைத்தாலே , “இவ்வளவு பெரிய இலக்கை எப்படி அடைவது?” என்று கவலைப்பட்டான்.

ஒருநாள் அவன் ஆசிரியரிடம் தனது கவலையைச் சொன்னான்.

ஆசிரியர் ஒரு சிறிய விதையை க் காட்டி,

“இந்த விதை இன்று ஒரு பெரிய மரமாகிவிடுமா?” என்று கே ட்டார்.

“இல்லை ஆசிரியரே ,” என்றான் சூர்யா.

“அப்படித்தான் பெரிய இலக்கும். ஒரே நாளில் வெற்றியை எதிர்பார்க்காமல், தினமும் சிறிது சிறிதாக உழைத்தால் பெரிய இலக்கையும் அடையலாம்.” என்றார் ஆசிரியர்.

அன்றிலிருந்து சூர்யா தனது இலக்கைச் சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து, தினமும் விடாமுயற்சியுடன் உழைக்கத் தொடங்கினான். தோல்விகள் வந்தபோதும் மனம் தளராமல் மீண்டும் முயன்றான்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, அவன் கனவு நனவானது.

அப்போது சூர்யாவுக்கு ஆசிரியரின் வார்த்தைகள் நினைவுக்கு வந்தன:

“பெரிய இலக்கை நினைத்து பயப்படாதே ; அதை அடைய ஒவ்வொரு நாளும் ஒரு சிறிய அடியை எடுத்து வை .”

🌸 நீதி: பெரிய இலக்கை அடைய  பொறுமையுடனும் திட்டமிட்ட முறையிலும் தொடர்ந்து உழைக்க வேண்டும். விடாமுயற்சி இருந்தால் கனவும் நனவாகும்.

இன்றைய செய்திகள்

07.09.2026

🗒️புதுதில்லியில் நடைபெற உள்ள பிரிக்ஸ் உச்சிமாநாடு காரணமாக, செப்டம்பர் 12 அன்று நடைபெறவிருந்த 57வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

🗒️விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை.. 10 நாட்களில் 4,000 டன் வெங்காயம் விற்பனை செய்த்தாக மத்திய அரசு தகவல். 

🗒️நவம்பர் 27' சர்வதேச குழந்தை திருமண ஒழிப்பு தினமாக ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.
 
*விளையாட்டுச் செய்திகள்*

🏀சீன மாஸ்டர்ஸ் சூப்பர் 750 சர்வதேச பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்றனர்

Today's Headlines

🗒️ Due to the BRICS Summit in New Delhi, the 57th GST Council meeting, which was planned for September 12, has been postponed.

🗒️ Steps to control price rise: The Central Government said that 4,000 tonnes of onions were sold in 10 days.

🗒️ The United Nations has declared November 27 as the International Day for the Elimination of Child Marriage.

🏀 Sports News

🏀 India’s Satwik Sairaj Rankireddy and Chirag Shetty won the championship title in the China Masters Super 750 International Badminton Tournament.

Covai women ICT_போதிமரம்

Wednesday, September 2, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 03.09.2026




திருக்குறள்: 

 பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:49.காலம் அறிதல்

குறள் எண்:487

குறள்:

பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.

பொருள்:

அறிவுடையவர், பகைவர் கெடுதல் செய்ய அந்தக்கணமே தன் சினத்தை வெளியே காட்டார்கள்; தகுந்த காலத்தை எதிர்பார்த்து உள்ளத்தில் மட்டுமே சினம் கொள்வார்கள்

பழமொழி :

No man can serve two masters

ஆற்றிலே ஒருகால் ; சேற்றிலே ஒரு கால் வைக்காதே.

இரண்டொழுக்க பண்புகள் :.

 1. ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.

 2. எனவே அறிவைப் பாதிக்கும் வகையில் ஆத்திரப் படமாட்டேன்.

பொன்மொழி : 

“இளையோரின் தனித்திறமைதான் நாட்டின் மறைந்திருக்கும் பெரும் செல்வம்.”

Thought for the Day :

“The best investment a young person can make is in learning useful skills.”

பொது அறிவு : 

1.புதிய 2000 ரூபாய் நோட்டிற்கு பின்புறம் அச்சிடப்பட்டுள்ள படம் எது? 

 மங்கள்யான்

2.புதிய 500 ரூபாய் நோட்டில் பின்புறம் அச்சிடப்பட்டுள்ள படம் எது? 

 ரெட் ஃபோர்ட் ( டில்லி) . 

English words :

1. Candid – Truthful and straightforward, வெளிப்படையானவர்.

2. Magnanimous – Very generous and forgiving, பெருந்தன்மையானவர்

புவியியலும் சுற்றுசூழலும் :

"விவசாயத்திற்கு முக்கியத்துவம்
இந்திய கிராமங்களின் முதன்மையான தொழிலான விவசாயத்தை மேம்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்."

NMMS :

SAT 

பின்வரும் நிகழ்வுகளைக் காலக் கிரமப்படி வரிசைப்படுத்துக. 

 (i) ஆம்பூர் போர்

 (ii) பிளாசிப் போர் 

 (iii) வந்தவாசிப் போர்

 (iv) பெரும் புரட்சி

 (1) (i), (ii), (iii), (iv) 

 (2) (i), (iv), (iii) , (ii) 

 (3) (iii), (ii), (i), (iv) 

 (4) (iii), (iv), (i), (ii) 

 விடை: (1) (i), (ii), (iii), (iv)

செப்டம்பர் 03

சாக்சி மாலிக் அவர்களின் பிறந்தநாள்

சாக்சி மாலிக் (Sakshi Malik, செப்டம்பர் 3, 1992) இந்திய மற்போர் வீராங்கனையாவார்.[இவர் கிளாஸ்கோவில் நடந்த 2014 பொதுநலவாய விளையாட்டுக்களில் பெண்கள் கட்டற்றவகை மற்போர் 58 கிலோ வகுப்பில் இந்தியா சார்பாக பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்றார்.2014இல் தாஷ்கந்தில் நடந்த உலக மற்போர் போட்டிகளிலும் 60 கிலோ வகுப்பில் பங்கேற்றார்.2016 ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தின் 58 கிலோ எடைப் பிரிவில், கிர்கிஸ்தான் வீராங்கனை ஐசுலு டைனிபிகோவா உடன் மோதி 8-5 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று சாக்சி வெண்கலப் பதக்கம் வென்றார்.

நீதிக்கதை

 “சிறிது ஓய்வு… நிறைய வெற்றி!”

ஒரு சிறிய ஊரில் விக்னேஷ் என்ற மாணவன் வாழ்ந்து வந்தான். அவன் படிப்பில் மிகவும் ஆர்வமுள்ளவன். தேர்வில் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்று தினமும் இடை விடாமல் படித்துக்கொண்டே இருந்தான்.

“இன்னும் கொஞ்சம் படிக்க வேண்டும்… ஓய்வு எடுத்தால் நேரம் வீணாகிவிடும்!” என்று நினைத்து, விளையாடுவதையும் நண்பர்களுடன் பேசுவதையும் தவிர்த்தான்.

சில நாட்களில் அவனுக்கு படித்தது எதுவும் சரியாக நினைவில் நிற்கவில்லை .

சிறிய விஷயங்களுக்குக்கூட எரிச்சல் ஏற்பட்டது. இதைக் கவனித்த ஆசிரியர் அவனை அழைத்து,

“விக்னேஷ், மனதுக்கும் உடலைப் போலவே ஓய்வு தே வை . தொடர்ந்து படிப்பது மட்டும் வெற்றியைத் தராது. சிறிது நேரம் ஓய்வெ டுத்து, இயற்கை யை ரசித்து, பிடித்த விஷயங்களைச் செய்வதும் அவசியம்,” என்றார்.

அன்று மாலை விக்னேஷ் புத்தகங்களை மூடிவிட்டு சிறிது நேரம் வெளியே சென்று நடந்தான். நண்பர்களுடன் விளை யாடினான். வீட்டிற்கு வந்துஅமை தியாக இரவு உணவு சாப்பிட்டு, சரியான நேரத்தில் தூங்கினான்.

மறுநாள் காலை அவன் மனம் புத்துணர்ச்சியாக இருந்தது. படித்த பாடங்கள் எளிதாக நினைவுக்கு வந்தன. அப்போது அவனுக்கு ஒரு உண்மை புரிந்தது:

“ஓய்வு என்பது நேரத்தை வீணாக்குவது அல்ல; மீண்டும் சிறப்பாக செயல்படுவதற்கான தயாரிப்பு.” அதன்பிறகு விக்னேஷ் படிப்புக்கும் ஓய்வுக்கும் சரியான நேரத்தை ஒதுக்கி, மகிழ்ச்சியாகப் படிக்கத் தொடங்கினான்.

🌸 நீதி:

அதிகமாக கவலைப்படாமல், தேவையான நேரத்தில் ஓய்வு எடுத்தால் மனம் புத்துணர்ச்சி பெறும். மன அமைதியுடன் செயல்படும்போது வெற்றியும் எளிதாக கிடை க்கும்.

இன்றைய செய்திகள்

03.09.2026

🗒️சென்னை மெட்ரோவில் அதிகரிக்கும் பயணிகள் கூட்டம் காரணமாக  28 புதிய ரெயில்கள் வாங்க இரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

🗒️ஜி.எஸ்.எல்.வி. எப்-17 மாதிரி ராக்கெட் வைத்து சிறப்பு பூஜை வைத்து இஸ்ரோ விஞ்ஞானிகள் தரிசனம் செய்தனர்.

🗒️ரூ.1.25 கோடி நன்கொடை... வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீனாவின்  ஒலிம்பிக் சாம்பியன் ஜெங் கின்வென்
 உதவிக்கரம் நீட்டியுள்ளார்.
 
*விளையாட்டுச் செய்திகள்* 

🏀21-வது தேசிய யூத் தடகள சாம்பியன்ஷிப் 2026 போட்டி லூதியானாவில் நடைபெற்று வருகிறது.

🏀100 மீட்டரில் புதிய வரலாறு... ஒரே நாளில் இருமுறை தேசிய சாதனையை தகர்த்த தமிழக வீரர் நீல் சாம்ராஜ்

Today's Headlines

🗒️ Due to the increasing number of passengers on the Chennai Metro, the railway administration plans to buy 28 new trains.

🗒️ ISRO scientists performed a special puja and prayer with a model of the GSLV-F17 rocket.

🗒️ ₹1.25 crore donation: Chinese Olympic champion Zheng Qinwen has extended a helping hand to people affected by the floods.

Sports News

🏀 The 21st National Youth Athletics Championship 2026 is being held in Ludhiana.

🏀 New record in the 100 metres: Tamil Nadu athlete Neel Samraj broke the national record twice in the same day, creating history.

Covai women ICT_போதிமரம்

Tuesday, September 1, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.09.2026

    




திருக்குறள்: 

 பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:49.காலம் அறிதல்

குறள் எண்:486

குறள்:

ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து.  

பொருள்:

ஏற்ற காலம் பார்த்து ஆற்றல் மிக்கவன் காத்திருப்பது சண்டையிடும் ஆட்டுக்கடா, தன் பகைமீது பாய்வதற்காகப் பின்வாங்குவது போன்றதாகும்.

பழமொழி :

An old man's sayings are seldom untrue.

மூத்தோர் சொல் பொய்ப்பது அரிது.

இரண்டொழுக்க பண்புகள் :.

 1. ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.

 2. எனவே அறிவைப் பாதிக்கும் வகையில் ஆத்திரப் படமாட்டேன்.

பொன்மொழி : 

“திறமையைத் தேடு, பயிற்சி செய், பகிர்ந்து கொள்; உலகம் உன் திறனை அறியும்.”

Thought for the Day :

“Learn, practise, improve, and let your skills speak for you.”

பொது அறிவு : 

1. தென்னிந்தியாவின் வெனிஸ் என்றழைக்கப்படுவது எது? 

 ஆலப்புழா

2.தென்னிந்தியாவின் நயகரா என்றழைக்கப்படுவது எது? 

 ஒகேனக்கல்

English words :

1. Diplomatic – Handles sensitive matters tactfully, சாதுரியமாக கையாள்பவர்.


2. Adaptable – Adjusts easily to new conditions, சூழலுக்கு ஏற்ப மாற்றிக்கொள்பவர்k

புவியியலும் சுற்றுசூழலும் :

தமிழ்நாட்டின் பரப்பளவு சுமார் 1,30,058 சதுர கி.மீ ஆகும்.
பரப்பளவில் இந்தியாவில் தமிழ்நாடு 10-வது இடத்தில் உள்ளது.மலைகள்
தமிழ்நாட்டில் மேற்கு மற்றும் வடமேற்குப் பகுதிகளில் மலைத்தொடர்கள்

NMMS :

MAT 

கல்வி நிலையங்களை பராமரிப்பவர்களுக்காக. வழங்கப்பட் நிலங்கள் ____________________ ஆகும்.

 (1) சாலபோகம் 

 (2) தேவதானம்

 (3) பிரம்மதேயம்

 (4)பள்ளிச் சந்தம் 

 விடை: (1) சாலபோகம்

செப்டம்பர் 02

உலகத் தேங்காய் நாள் (world coconut day) செப்டம்பர் 2 ஆம் நாளன்று கொண்டாடப்படுகிறது.[1] 1998ஆம் ஆண்டு வியட்நாமில் நடைபெற்ற இந்தோனேசியாவின் ஜகார்த்தாவைத் தலைமையகமாகக் கொண்ட ஆசிய பசிபிக் தெங்கு குழும மாநாட்டில் செப்டம்பர் 2 ஆம் தேதி உலக தேங்காய் நாளாக அறிவிக்கப்பட்டது.[2]

வறுமைக் குறைப்பில் உயிர்நாடியாக விளங்குகின்ற தெங்குப் பயிரின் முக்கியத்துவம் தொடர்பாக மக்களிடையே அதிக விழிப்புணர்வினை ஏற்படுத்துவதனை நோக்கமாகக் கொண்டு இந்நாள் அறிவிக்கப்பட்டது

நீதிக்கதை

 “நட்பைத் தேர்ந்தெடுத்த நிவின்”

ஒரு சிறிய ஊரில் நிவின் என்ற மாணவன் வாழ்ந்து வந்தான். அவன் படிப்பிலும், ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கினான். அவனுக்கு சில நண்பர்கள் இருந்தனர்.

அவர்களில் விஷால் என்ற நண்பன் எப்போதும் பள்ளி வேலைகளைத் தவிர்ப்பதும், ஆசிரியர்களுக்குத் தெரியாமல் குறும்புகள் செய்வதும் வழக்கமாக இருந்தது.

“நிவின், இன்று வீட்டுப்பாடம் செய்ய வேண்டாம். வா, வெளியே விளையாடலாம்!” என்று விஷால் அடிக்கடி அழைப்பான்.

முதலில் நிவின் மறுத்தான். ஆனால் தினமும் நண்பனின் பேச்சைக் கேட்டதால், அவனும் படிப்பில் கவனம் செலுத்தாமல் போனான். தேர்வில் அவன் மதிப்பெண்களும் குறைந்தன.

இதைக் கவனித்த ஆசிரியர் நிவினை அழைத்து, “நிவின், நாம் யாருடன் பழகுகிறோமோ, அவர்களின் பழக்கங்கள் நம்மை யும் பாதிக்கலாம். நல்ல நண்பன் நம்மை முன்னேற்றுவான்; தவறான நண்பன் நம்மை பின்னுக்கு இழுப்பான்,” என்று அறிவுரை கூறினார்.

நிவினுக்கு தனது தவறு புரிந்தது. அவன் விஷாலிடம் சென்று,

“நாம் இருவரும் நல்ல விஷயங்களைச் செய்து முன்னேறுவோம். தவறான பழக்கங்களை விட்டுவிடுவோம்,” என்றான்.

விஷாலும் தனது தவறை உணர்ந்து, நிவினுடன் சேர்ந்து படிப்பிலும் நல்ல செயல்களிலும் கவனம் செலுத்தத் தொடங்கினான்.

இன்றைய செய்திகள்

02.09.2026

⭐ தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் கோயம்புத்தூரில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்ட டிஜிட்டல் நிதி மையம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

⭐ உக்ரைன்-ரஷ்யா போரில், ஏராளமான ஏவுகணைகளை நேட்டோ நாடுகள் உக்ரைனுக்கு கொடுத்து விட்டதால் தற்போது நேட்டோ நாடுகளிடம் குறைவான அளவில்தான் ஏவுகணைகள் இருக்கின்றன.

⭐திபெத் - நேபாளம் எல்லை பகுதியில் உள்ள சுமார் 25 லட்சம் கன மீட்டர் தண்ணீர் தேங்கியிருந்த இயற்கை தடுப்பு ஏரி உடைந்து தண்ணீர் வெளியேறி வருவதால், அப்பகுதியில் புதிய வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.

விளையாட்டு செய்திகள்

🏀 லயோனல் மெஸ்ஸி, சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் அர்ஜென்டினா அணிக்காக அவர் விளையாடிய புகழ்பெற்ற 20 ஆண்டுகால சர்வதேச கால்பந்து பயணம் நிறைவுக்கு வருகிறது.

Today's Headlines

*Head lines:*         

 ⭐ The Tamil Nadu government has announced that a large Digital Finance Centre will be built in Coimbatore at a cost of ₹400 crore to take Tamil Nadu’s industrial growth to the next level.

⭐ In the Russia-Ukraine war, NATO countries have given many missiles to Ukraine. So, NATO countries now have fewer missiles available.

⭐ A natural reservoir near the Tibet-Nepal border, which held about 2.5 million cubic metres of water, has broken. Water is flowing out, creating a new flood danger in the area.

*Sports news*

🏀Lionel Messi has announced his retirement from international football. This brings an end to his legendary 20-year international football journey with the Argentina national team.

Covai women ICT_போதிமரம்