Monday, November 24, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 25.11.2025

பிடல் காஸ்ட்ரோ







திருக்குறள்: 

குறள் 236: 

தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார் 
தோன்றலின் தோன்றாமை நன்று 

விளக்க உரை: 

ஒரு துறையில் முற்பட்டுத் தோன்றுவதானால் புகழோடு தோன்ற வேண்டும், அத்தகைய சிறப்பு இல்லாதவர் அங்குத் தோன்றுவதைவிடத் தோன்றாமலிருப்பதே நல்லது.

பழமொழி :

Pain is the teacher of courage. 

வலி தான் தைரியத்தின் ஆசிரியன்.

இரண்டொழுக்க பண்புகள் :

1.கல்வி கற்பது பணம் சம்பாதிக்க மட்டும் அல்ல, அறிவை வளர்க்கவும் தான்.

2.எனவே படித்து எனது அறிவை வளர்த்துக் கொள்வேன்.

பொன்மொழி :

உங்கள் எதிரிகளிடமும் நீங்கள் அன்பு காட்டுங்கள் .ஏனென்றால், அவர்கள் உங்களை தவறுகளை சுட்டிக்காட்டி நீங்கள் திருந்துவதற்கு வழி ஏற்படுத்துகிறார்கள். பெஞ்சமின் பிராங்கிளின்

பொது அறிவு : 

01.இந்தியாவின் பாரத ரத்னா விருதைப் பெற்ற முதல் பெண்மணி யார்?

இந்திரா காந்தி 1971
Indiragandhi-1971

02. பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை முதன் முதலில் வழங்கிய நாடு எது?

நியுசிலாந்து 1893
New zealand - 1893

English words :

audacious -  bold and daring

tranquil-peaceful and calm

தமிழ் இலக்கணம்: 

 ‘ர’& 'ற' கரம்
1.மெய்யெழுத்தை தொடர்ந்து இடையின ர வராது
எ.கா. 
நின்ரது 
முன்னின்ரு
தவறாக எழுதப் பட்டுள்ளது 
2. ஆனால் வல்லின ற‌ மெய்யெழுத்துக்கு பின்னர் வரும்
எ.கா –நின்றது
முன்னின்று

அறிவியல் களஞ்சியம் :

 அறிவியல் வரலாற்றில் இதுவரை மரபணு மாற்ற CRISPR-Cas9 தொழில்நுட்பம், பல விலங்குகள், தாவரங்கள் ஏன் பாக்டீரியா மீது கூட பயன்படுத்தப்பட்டுள்ளது. முதல்முறையாக ஜெர்மனியில் உள்ள பெய்ரூட் பல்கலை, சிலந்திகள் மீது பயன்படுத்தி உள்ளது. மரபணு மாற்றப்பட்ட சிலந்தி ஒளிர்கின்ற சிவப்பு நிற வலையைப் பின்னுகிறது. சிலந்திகளின் வலை நுால் பல துறைகளில் பயன்படுகிறது.

நவம்பர் 25

பிடல் காஸ்ட்ரோ அவர்களின் நினைவுநாள்


பிடல் காஸ்ட்ரோ (Fidel Alejandro Castro Ruz, (எசுப்பானியம்: [fiˈðel ˈkastro], ஆகஸ்ட் 13, 1926 - நவம்பர் 25, 2016) கியூபாவை சேர்ந்த பொதுவுடைமைப் புரட்சியாளரும் பொதுவுடைமை அரசியல்வாதியும் ஆவார். கியூபாவில் 1959 இல் புரட்சியை வழிநடத்தி புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டாவின் அரசை வீழ்த்தி தலைமை அமைச்சர் பொறுப்பை ஏற்ற காஸ்ட்ரோ ,1959 முதல் 1976 வரை கியூபாவின் பிரதமராகவும், 1976 முதல் 2008 வரை ஜனாதிபதியாகவும் பொறுப்பு வகித்தார்.கூபாவின் பொதுவுடைமைக் கட்சியின் முதல் செயலாளராக 1965 இல் பதவியேற்ற இவர் கூபாவை ஒற்றைக் கட்சி சமூகவுடைமைக் குடியரசாக்கினார். 49 ஆண்டுகள் கியூபாவை ஆண்ட காஸ்ட்ரோ பிப்ரவரி 24 2008 அன்று பதவியிலிருந்து விலகினார். உலகத்தில் நீண்ட காலத்துக்கு தலைமைப் பொறுப்பில் இருந்த தலைவர் காஸ்ட்ரோ மட்டுமே. பன்னாட்டளவில், காஸ்ட்ரோ 1979-ல் இருந்து 1983 வரை மற்றும் 2006 முதல் 2008 வரை, அணி சேரா இயக்கத்தின் பொதுச் செயலாளராக இருந்துள்ளார்.[2]

அமெரிக்காவில் இருந்து 93 மைல் தொலைவில் இருந்தாலும் கியூபாவை ஒரு சோசலிச நாடாகப் பேணிய பெருமை இவரைச் சாரும். இதைவிட ருசியா-அமெரிக்க பனிப்போர் நடந்த வேளையில் இவர் ருசியாவிற்குச் சாதகமாகப் பல பணிகளைச் செய்தார்.

பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு நாள்

பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு நாள் (International Day for the Elimination of Violence against Women) ஆண்டுதோறும் நவம்பர் 25 ஆம் நாள் அன்று உலகெங்கணும் கொண்டாடப்பட்டு வரும் ஒரு சிறப்பு நாள் ஆகும்.

உலகளாவிய ரீதியில் பெண்கள் இன்று பல விதமான வன்முறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை வெளி உலகிற்கு காட்டி அதற்கான நியாயமான தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்காக சர்வதேச மகளிர் தினம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினம் ஆகியன முன்வைக்கப்படுகின்றன.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 1999 டிசம்பர் 17 ஆம் நாள் கூடிய போது ஆண்டு தோறும் நவம்பர் 25 ஆம் நாளை பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினமாகப் பிரகடனம் செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றியது. இத்தீர்மானம் ஐக்கிய நாடுகள் அவையின் 54/ 134. இலக்க பிரேரணையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

நீதிக்கதை

கழுதையின் தன்னம்பிக்கை


ஒரு விவசாயி வளர்த்து வந்த வயதான பொதி சுமக்கும் கழுதை ஒன்று தவறி அவன் தோட்டத்தில் உள்ள வறண்ட கிணற்றில் விழுந்துவிடுகிறது. உள்ளே விழுந்த கழுதை அலறிக்கொண்டே இருந்தது. அதை எப்படி கிணற்றிலிருந்து வெளியேற்றி காப்பாற்றுவது என்று அவன் விடிய விடிய யோசித்தும் ஒரு யோசனையும் புலப்படவில்லை. 


காப்பாற்ற எடுக்கும் எந்த முயற்சியும் அந்த கழுதையின் விலையை விட அதிகம் செலவு பிடிக்ககூடியதாக இருந்தது. அந்த கிணறு எப்படியும் மூடப்பட வேண்டிய ஒன்று. தவிர அது மிகவும் வயதான கழுதை என்பதால் அதை காப்பாற்றுவது வீண்வேலை என்று முடிவு செய்த அவன், கழுதையுடன் அப்படியே அந்த கிணற்றை மூடிவிடுவது என்று முடிவு செய்தான். 


அக்கம் பக்கத்தினரை உதவிக்கு கூப்பிட அனைவரும் திரண்டனர். சற்று அருகில் இருந்த ஒரு மண் திட்டிலிருந்து மண்ணை மண்வெட்டியில் அள்ளி கொண்டு வந்து அந்த கிணற்றில் அனைவரும் போட ஆரம்பித்தனர். கழுதை நடப்பதை உணர்ந்து தற்போது மரண பயத்தில் அலறியது. ஆனால் அதன் அலறலை எவரும் சட்டை செய்யவில்லை. இவர்கள் தொடர்ந்து மண்ணை அள்ளி அள்ளி கொட்ட கொஞ்சம் நேரம் கழித்து அதன் அலறல் சத்தம் அடங்கிவிட்டது. 


ஒரு பத்து நிமிடம் மண்ணை அள்ளி கொட்டியவுடன் கிணற்றுக்குள்ளே விவசாயி எட்டிப் பார்க்க, அவன் பார்த்த காட்சி அவனை வியப்பிலாழ்த்தியது. ஒவ்வொரு முறையும் மண்ணை கொட்டும்போது, கழுதை தனது உடலை ஒரு முறை உதறிவிட்டு, மண்ணை கீழே தள்ளி, அந்த மண்ணின் மீதே நின்று வந்தது. 


இப்படியே பல அடிகள் அது மேலே வந்திருந்தது. இவர்கள் மேலும் மேலும் மண்ணை போட போட கழுதை தனது முயற்சியை கைவிடாது, உடலை உதறி உதறி மண்ணை கீழே தள்ளி தள்ளி அதன் மீது ஏறி நின்று வந்தது. 


கழுதையின் இடைவிடாத இந்த முயற்சியால் அனைவரும் வியக்கும் வண்ணம் ஒரு வழியாக கிணற்றின் விளிம்பிற்கே வந்துவிட்டது. 


விளிம்பை எட்டியவுடன் மகிழ்ச்சியில் கனைத்த கழுதை ஒரே ஓட்டமாக ஓடி தோட்டத்திற்குள் சென்று மறைந்தது. 


வாழ்க்கை பல சந்தர்ப்பங்களில் இப்படித் தான் நம்மை படுகுழியில் தள்ளிக் குப்பைகளையும், மண்ணையும் நம் மீது கொட்டி நம்மை சமாதி கட்ட பார்க்கும். ஆனால் நாம் தான் இந்த கழுதை போல தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் கொண்டு, அவற்றை உதறித் தள்ளி மேலே வரவேண்டும். 


நம்மை நோக்கி வீசப்படும் ஒவ்வொரு கல்லையும் சாமர்த்தியமாக பிடித்து படிக்கற்களாக்கிக் கொள்ளவேண்டும், எத்தனை பெரிய குழியில் நீங்கள் விழுந்தாலும். இத்தோடு நம் கதை முடிந்தது என்று கருதாமல் விடாமுயற்சி என்ற ஒன்றைக் கொண்டு நீங்கள் நிச்சயம் மேலே வரலாம். 

இன்றைய செய்திகள்

25.11.2025

⭐தமிழகத்தில் செயல்படும் அனைத்து உணவகங்களிலும் (சிறிய தேநீர் கடைகளிலிருந்து பெரிய ரெஸ்டாரண்ட்கள் வரை) சமையல் பணிகளிலும், உணவு பரிமாறும் பணிகளிலும் ஈடுபடும் ஊழியர்கள் கட்டாயமாக குடல் காய்ச்சல் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.

⭐ 'ஆபரேஷன் சைஹாக் நடவடிக்கை மூலம் சைபர் குற்றங்களில் ஈடுபட்டு , பொது மக்களிடம் ரூ.254 கோடிக்கு மேல் மோசடி செய்த 42 பேரை டெல்லி போலீஸார் கைது செய்துள்ளனர்.

⭐பாகிஸ்தானின் முக்கிய நகரங்களில் ஒன்றான கராச்சியில் மின்வெட்டு காரணமாக பம்பிங் ஸ்டேஷன்கள் செயல்படாததால் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀மகளிர் உலக கோப்பை கபடி: இந்திய அணி சாம்பியன்
இறுதிப்போட்டியில் இந்தியா - சீன தைபே அணிகள் மோதின.
பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா, சீன தைபே அணியை வீழ்த்தியது.

Today's Headlines

⭐ Tamil Nadu Food Safety Department has ordered that the employees involved in cooking and serving food in all the restaurants operating in Tamil Nadu (from small tea shops to big restaurants) must get the enteric flu vaccine compulsorily.

⭐ By 'Operation Cyhawk', 42 people who have been involved in cyber crimes and extorted more than Rs 254 crore from the public were arrested by Delhi Police for fraud.

Karachi, one of Pakistan's major cities, has experienced severe water shortages due to power cuts, and the pumping stations are not working.

🏀 Sports news

🏀Women's World Cup Kabaddi: Team India is the champion
India and Chinese Taipei teams clashed in the final.
India beat Chinese Taipei in a thrilling match.

Covai women ICT_போதிமரம்

Sunday, November 23, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 24.11.2025

அருந்ததி ராய்







திருக்குறள்: 

குறள் 524: 

சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான் 
பெற்றத்தால் பெற்ற பயன் 

விளக்க உரை: 

சுற்றத்தாரால்‌ சுற்றப்படும்படியாக அவர்களைத்‌ தழுவி அன்பாக வாழ்தல்‌ ஒருவன்‌ செல்வத்தைப்‌ பெற்றதனால்‌ பெற்ற பயனாகும்‌.

பழமொழி :

After every fall,rise taller. 

விழுவதுவதெல்லாம் உயரமாக எழுவதற்கே.

இரண்டொழுக்க பண்புகள் :

1.கல்வி கற்பது பணம் சம்பாதிக்க மட்டும் அல்ல, அறிவை வளர்க்கவும் தான்.

2.எனவே படித்து எனது அறிவை வளர்த்துக் கொள்வேன்.

பொன்மொழி :

நல்லதை செய்தால் நல்லவை நடக்கும் .தீயவை செய்தால் தீமையே நடக்கும் அனைவரிடமும் அன்பு செலுத்தினால் உயர்நிலை கிடைக்கும். - புத்தர்

பொது அறிவு : 

01.மூங்கில் அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலம் எது?

அஸ்ஸாம் மற்றும் 

மத்தியப் பிரதேசம்

Assam  and  Madhyapradesh

02.தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படும் நாள்.?

ஜனவரி 25 -January 25

English words :

jest-joke

perceptive - having a keen understanding

தமிழ் இலக்கணம்: 

 இன்று ர, ற வேறுபாடு குறித்து அறிவோம் 
1. தூய தமிழ் மொழியில் ர,ற இரண்டும் முதல் எழுத்தாக வராது. 
2. அரங்கன் என்று தான் எழுத வேண்டும் ஆனால் வாசிப்பது ரங்கன் என்று வாசிக்க வேண்டும் 
3. ற் இறுதி எழுத்தாக வார்த்தைகளில் வராது.
4. ற் அருகில் மெய்யெழுத்துகள் வராது 
எ.கா. கொற்கை, சிற்பி

அறிவியல் களஞ்சியம் :

 மூளையில் குருதி ஓட்டத்தைக் கண்காணிப்பது சுலபமல்ல. அஞ்சல்தலை அளவே உள்ள ஒரு புதிய கருவியை அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலை வடிவமைத்துள்ளது. மூளையில் அல்ட்ரா சவுண்ட் தொழில்நுட்பம் வாயிலாக இந்தக் கருவி ரத்த ஓட்டத்தை அறிய உதவுகிறது.

நவம்பர் 24

அருந்ததி ராய்  அவர்களின் பிறந்தநாள்


சுசானா அருந்ததி ராய் (பி. நவம்பர் 241961) ஓர் இந்திய எழுத்தாளர் ஆவார்.

இவரது பல படைப்புகளில் சமுதாயத்திலுள்ள பெண் அடிமைத்தனம் , குழந்தைத் தொழிலாளர் பிரச்சனை , அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகள் முதலியவற்றை விமர்சனத்துக்கு உட்படுத்தினார். மேதா பட்கர் தொடங்கிய நர்மதா பச்சாவோ அந்தோலன் (en:Narmada Bachao Andolan) என்ற அமைப்பில் தீவிரமாக பங்கு கொண்டார். 
  1. 1997 ஆம் ஆண்டு தனது முதல் புதினமான த காட் ஆப் ஸ்மால் திங்ஸ்க்கு புக்கர் பரிசு பெற்றார். புக்கர் பரிசு வென்ற முதல் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.
  2. 2003ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்படவிருந்த சாகித்ய அகாதமி பரிசை இவர் மறுத்து விட்டார்.
  3. மே 2004-ல் சிட்னி அமைதிப் பரிசையும் வென்றார்.
  4. 2015 ஆம் ஆண்டுக்கான அம்பேத்கர் சுடர் விருது பெற்றிருக்கிறார்.

நீதிக்கதை

 ஒரு மூதாட்டியின் கதை


வயது முதிர்ந்த மூதாட்டி ஒருத்தி உணவு விடுதி நடத்திவந்தாள். காலையில் அவள் விடுதியில் கிடைக்கும் அப்பம் மிகமிகச் சுவையானதாக இருக்கும். அந்த விடுதிக்கு வரும் அனைவரும் அதனை விரும்பிக் கேட்டுவாங்கி உண்பர். அப்பத்துக்குச் சர்க்கரையும் பாலும் துணைப் பொருள்களாக அளிப்பாள். 

ஒரு சமயம் சர்க்கரை விலை சற்றுக் கூடியது. அப்பத்திற்குப் பெறுகிற விலைக்குச் சர்க்கரை கொடுப்பது அம்மூதாட்டிக்குச் சற்றுச் சிரமமாக இருந்தது. அதிகவிலை கொடுத்துச் சர்க்கரை வாங்கினாலும், அப்பத்தின் விலையைக் கூட்ட அவள் விரும்பவில்லை. எனவே, அப்பத்திற்குச் சர்க்கரை இல்லை எனக் கூற விரும்பினாள். 

கடைக்கு வழக்கமாக வந்து சாப்பிடும் ஒருவரை அழைத்து. அப்பத்துக்குச் சர்க்கரை இல்லை என அறிவிப்பு அட்டை ஒன்றை எழுதிவரச் சொன்னாள். அவர் அதன் அடிப்படையில் இன்று முதல் அப்பத்துக்குச் சர்க்கரை இல்லை என ஓர் அறிவிப்பு அட்டை எழுதி வந்தார். அம்மூதாட்டி அதனைக் கடையில் தொங்கவிட்டாள். 

காலையில் சாப்பிடவந்த ஒருவர் ஓர் அப்பம் வாங்கிச் சாப்பிட்டார். சர்க்கரை இல்லாமலே சாப்பிட்டார். இரண்டாவதாக ஒர் அப்பம் கேட்டார். அவள் இரண்டாவது அப்பம் கொடுத்தாள். அவர் அம்மா! அப்பத்துக்கு சர்க்கரைக் கொடு எனக் கேட்டார். 

அம்மூதாட்டி அறிவிப்புப் பலகையைப் பார்த்தீர்களா?” என்று கேட்டாள். அப்பம் வாங்கியவர் பார்த்தேன்! படித்தேன்! அதன் பிறகுதான் சர்க்கரை கேட்டேன் என்று கூறினார். 

அதைப் படித்துவிட்டுமா கேட்கிறீர்? என்றாள் அம்மூதாட்டி. 

ஆமாம்... அறிவிப்பு அட்டையில் என்ன எழுதி இருக்கிறது? இன்று முதல் அப்பத்துக்குச் சர்க்கரை இல்லை என்றுதானே எழுதியிருக்கிறது. இரண்டாவது அப்பத்துக்குத்தானே நான் சர்க்கரை கேட்கிறேன் என்றார். 

ஐயா! அப்படியா பொருள் கொள்கிறீர்கள்? சரி! உங்களுக்கு இன்று சர்க்கரை கொடுத்து விடுகிறேன். நாளை அறிவிப்பு அட்டையில் எழுதியிருப்பதை மாற்றி விடுகிறேன் என்று கூறினாள். 

அறிவிப்பு அட்டை எழுதியவரை அழைத்தாள். ஐயா, அறிவிப்பு அட்டையில் அப்பத்துக்கு இன்றுமுதல் சர்க்கரை இல்லை என எழுதிவிடுங்கள் என்றாள். அந்த நாள் முதல் அப்பத்துக்குச் சர்க்கரை இன்றி விற்கத் தொடங்கினாள். காலைச் சிற்றுண்டிச் சிக்கல் இவ்வாறு தீர்ந்தது. 

பகலுணவு வழங்குவதில் ஒரு புதிய சிக்கல் ஏற்பட்டது. 

அன்று மதியம் வழிப்போக்கன் ஒருவன் அந்த உணவு விடுதிக்குள் நுழைந்தான். மூதாட்டியிடம் ஐந்து பணம் கொடுத்துவிட்டு அம்மா, எனக்கு அதிகமான பசியாக இருக்கிறது. எலுமிச்சங்காய் அளவு சோறாவது எனக்குச் சீக்கிரமாகப் போடு என்றான். 

மூதாட்டி நீ கேட்டபடியே எலுமிச்சங்காய் அளவு சோறு போடுகிறேன் என்று கூறினாள். 

ஒரு வாழை இலையை விரித்து, தண்ணீர் தெளித்து. எலுமிச்சங்காய் அளவு சாதம் மட்டும் உருட்டி அவன் இலையில் போட்டாள். 

அதைப் பார்த்ததும் வழிப்போக்கன், இது எப்படி என் வயிற்றுக்குப் போதும்? வயிற்றுப் பசிக்குத்தானே சோறு சாப்பிடுகிறோம்? என்றான். 

நீ கேட்டபடி எலுமிச்சங்காய் அளவு சோறு போட்டுவிட்டேன். விரும்பினால் சாப்பிடு! இல்லையானால் எழுந்து போ! என்று சொன்னாள். 

அப்படியா? எனக்கு இது வேண்டாம். நான் கொடுத்த ஐந்து பணத்தைத் திருப்பிக் கொடு, நான் போகிறேன் என்றான் வழிப்போக்கன். 

உணவு விடுதிக்கு உரியவள் ஐந்து பணத்தைத் திருப்பிக்கொடுக்க மறுத்துவிட்டாள். 

வழிப்போக்கன் மரியாதை ராமனைத் தேடிச் சென்றான். நீதிபதியான மரியாதை ராமனிடம் நடந்ததைக் கூறி முறையிட்டான். நீதிபதி உணவு விடுதி நடத்தி வந்த மூதாட்டிக்கு ஆள் அனுப்பி அழைத்துவரச் செய்தார். 

விடுதிக்குச் சொந்தக்காரியான அம்மூதாட்டி நீதிபதியின் முன் நின்று, ஐயா! வழிப்போக்கன் கேட்டபடி, அவன் கொடுத்த பணத்திற்குச் சோறு போட்டுவிட்டேன் என்று கூறினாள். அத்தோடு தான் இலையில் உருட்டிப் போட்ட எலுமிச்சங்காய் அளவு சோற்று உருண்டையையும் சாட்சியமாக எடுத்துக் காட்டினாள். 

அதை எல்லாம் தெரிந்துகொண்ட பிறகு, நீதிபதி மரியாதை ராமன் புன்னகை தவழ, அம்மா! நீ என்ன ஒப்புக்கொண்டாய்? எலுமிச்சங்காய் அளவு சோறு போடுவதாகத்தானே ஒப்புக்கொண்டாய்? நீ போட்ட இந்த சோற்றுப் பருக்கை ஒன்றே ஒன்றாவது இருக்கிறதா பார்! ஆகவே, வழிப்போக்கன் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடு! அல்லது எலுமிச்சங்காய் அளவு பருமன் உள்ள ஒரு சோற்றுப் பருக்கையையாவது போடு என்று தீர்ப்பு வழங்கினார். 

சொல்லின் நுணுக்கத்தை உணர்ந்த உணவு விடுதிக்கு உரிமைக்காரியான மூதாட்டி அந்த அளவு பருமனாகும் சோற்றுக்கு உரிய அரிசிக்கு நான் எங்கே போவேன்? என்று கூறி, வழிப்போக்கன் கொடுத்த ஐந்து பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டு நீதிக்கு அடிபணிந்து நடந்தாள்!

இன்றைய செய்திகள்

24.11.2025

⭐யமுனை நதி மாசுபாடு - டெல்லி அரசின் நடவடிக்கைகள் அதிர்ச்சி அளிக்கிறது - டெல்லி உயர்நீதிமன்றம் அதிருப்தி

⭐உத்தரகாண்டில் அரசுப் பள்ளி அருகே 20 கிலோ எடையுள்ள 161 ஜெலட்டின் குச்சி வெடிபொருட்கள் பறிமுதல்

⭐கனமழை எச்சரிக்கை- 4 மாவட்ட நிர்வாகத்திற்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀 பார்வையற்றோருக்கான முதல் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை இந்தியா, நேபாளத்தை இறுதிப் போட்டியில் வீழ்த்தி சாத்தியமாக்கியது.

🏀  ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி தொடர் சென்னையில் வருகிற 28-ந்தேதி முதல் டிசம்பர் 10-ந்தேதி வரை நடக்கிறது.

Today's Headlines

⭐ Actions taken by Delhi Government to reduce pollution in  Yamuna River is shocking –  Delhi High Court was  dissatisfied.

⭐ 161 gelatin stick explosives weighing 20 kg seized near a government school in Uttarakhand.

⭐Heavy rain warning government declared an important announcement  to the 4 district administrations. very heavy rain is likely to occur in Thoothukudi, Tenkasi, Nellai and Kumari districts.

 *SPORTS NEWS* 

🏀 India has won the first ever Women's T20 World Cup for the visually impaired. This historic victory was made  by India defeating Nepal in the final.

🏀 The Junior World Cup Hockey series to be held in Chennai, from the 28th to the 10th of December.

Covai women ICT_போதிமரம்

Thursday, November 20, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 21.11.2025

சர்.சி.வி. இராமன்







திருக்குறள்: 

குறள் 522: 

விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா 
ஆக்கம் பலவுந் தரும்.

விளக்க உரை: 

அன்பு நீங்காத சுற்றம் ஒருவனுக்குக் கிடைத்தால், அது மேன்மேலும் வளர்ச்சி குறையாத ஆக்கம் பலவற்றையும் அவனுக்குக் கொடுக்கும்.

பழமொழி :

There is no elevator to success; you have to take the stairs. 

வெற்றிக்குப் பக்கவழி இல்லை. ஒவ்வொரு படியையும் ஏற வேண்டும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1.அறிவே மனிதனின் ஆயுதம் என்பதை நான் அறிவேன்.


2.எனவே மற்றவர்கள் என்ன சொன்னாலும் எனது பகுத்தறிவு கொண்டு முடிவெடுப்பேன்.

பொன்மொழி :

எல்லா உயிரிடமும் அன்பாக இரு .அன்பே உயிரின் இயல்பு. அனைவரிடமும் அன்புடன் பழகு - மகாவீரர்

பொது அறிவு : 

01. "உள்ளாட்சி அமைப்பின் தந்தை” என அழைக்கப்படுபவர் யார்.?

ரிப்பன் பிரபு

02.மக்களாட்சி(Democracy) எனும் சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது.?

கிரேக்கம்

English words :

i.e, in other words

e.g, for example

தமிழ் இலக்கணம்: 

 வாழ்த்துக்கள் என்று எழுதுவது தவறு. வாழ்த்துகள் என்று எழுதுவதே சரி. ஏனெனில் 3 மெய்யெழுத்துக்கள் ஒரே வார்த்தையில் சேர்ந்து வராது.

நச்சென்று பேசினான் என்று சொல்வது தவறு. ஏனெனில் நச்சு என்றால் நஞ்சு என்று பொருள் படும். எனவே நறுக்கென்று பேசினான் என்று சொல்வதே சரி.

நவம்பர் 21

சர் சந்திரசேகர வெங்கட ராமன் அவர்களின் நினைவுநாள்


சர் சந்திரசேகர வெங்கட ராமன் (Chandrasekhara Venkata Raman) (நவம்பர் 7, 1888 - நவம்பர் 21, 1970) பெரும் புகழ் நாட்டிய இந்திய அறிவியல் அறிஞர் ஆவார். இவர் 1930ல் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசைப் பெற்றார். ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை இவர் கண்டுபிடித்தார். இப்படிச் சிதறும் ஒளியின் அலைநீள மாற்றத்திற்கு இராமன் விளைவு (Raman Effect) என்று பெயர். இக்கண்டுபிடிப்புக்குத் தான் இவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது. இக்கண்டுபிடிப்பு இன்று பொருள்களின் பல விதமான பண்புகளைக் கண்டறிய (பொருளுக்கு கேடு ஏதும் நேராமலும்) மிகவும் பயனுடையதும் உலகில் புகழ் பெற்றதும் ஆகும்

உலகத் தொலைக்காட்சி நாள் 

உலகத் தொலைக்காட்சி நாள் (World Television Day) உலகெங்கும் ஆண்டுதோறும் நவம்பர் 21 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.

நவம்பர் 21, 1996-ஆம் ஆண்டு நடைபெற்ற அனைத்துலகத் தொலைகாட்சிக் கருத்தரங்கத்தின் பரிந்துரையின் பேரில் ஐக்கிய நாடுகள் அவை நவம்பர் 21 ஆம் நாளை உலகத் தொலைக்காட்சி நாளாக அறிவித்தது. இக்கருத்தரங்கில் உலகில் தொலைக்காட்சியின் கூடிய முக்கியத்துவம் பற்றி கலந்துரையாடப்பட்டது. உலக நாடுகள் அமைதி, பாதுகாப்பு, பொருளாதாரம், சமூக மாற்றங்கள் மற்றும் தமது கலை, கலாசார தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தமக்கிடையே பரிமாறிக் கொள்ள இந்நாள் சிறப்பான நாளாகக் கருதப்பட்டது. இதன்படி முதல் தொலைக்காட்சி நாள் 1997-ம் ஆண்டு கொண்டாடப்பட்டது.

நீதிக்கதை

 நல் ஒழுக்கம் நம்மை காக்கும்


நல்லூரில் பரத் என்ற ஒரு சிறுவன் இருந்தான் அவன் நல்ல பையன் ஆனால் அவனிடம் சில குறைபாடுகள் இருந்தன அவன் சோம்பேறி.  தன்னிடத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதில்லை. சாப்பிட்ட பொருட்களை அங்கங்கே போட்டு விடுவான். கடலை சாப்பிட்டால் கடலை தோல் அவன் காலடியில் இருக்கும். ஆப்பிள் அல்லது திராட்சை சாப்பிட்டால் அப்பழங்களின் விதைகள் அங்கே கிடக்கும். வாழைப்பழம் சாப்பிட்டால் வாழைப்பழத் தோலை அப்படியே போட்டு விடுவான். பெற்றோர் எவ்வளவு அறிவுறுத்தியும் குப்பைகளை குப்பை தொட்டியில்  போடுவதில்லை. பெற்றோர்கள் பலமுறை சொல்லியும் தன் இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதில்லை. தான் இருந்த இடத்திலேயே போட்டு விடுவான். பெற்றோர் அன்பாக சொல்லிப் பார்த்தார்கள், திட்டி பார்த்தார்கள் அடித்தும் பார்த்தார்கள் ஆனாலும் அவன் திருந்துவதாக இல்லை அவனே ஒரு நாள் அடிபட்டு திருந்துவான் என்று சொல்லி பெற்றோர் அப்படியே விட்டு விட்டார்கள். ஒரு நாள் அவன் தன் வீட்டு திண்ணையில் அமர்ந்து வாழைப்பழம் சாப்பிட்டு விட்டு எப்பொழுதும் போல் வாழைப்பழத் தோலை தெருவில் போட்டான். அப்பொழுது அவன்  அம்மா அவனை கூப்பிட்டு சத்தம் போட்டு யாராவது அதில் நடந்தால் வழிக்கி விழுந்து விடுவார்கள் என்றார்கள். யாராவது தானே விழுவார்கள் என்று சொல்லி பதில் சொல்லிவிட்டு அவன் வீட்டுக்குள் போய் விட்டான். வீட்டுக்குள் போய் இரண்டு நிமிடம் கழித்து அவனுடைய நண்பன் தெருவில் நின்று பரத் வருகிறாயா நாம் விளையாட போகலாம் என்று கூப்பிட்டான். இவன் வேகமாக நண்பனுடன் செல்ல ஓடி வந்தான். இவன்  போட்ட  வாழைப்பழ தோல் அங்கேயே இருந்தது. அதன் மீது காலை வைத்து   வழிக்கு கீழே விழுந்தான்.  தலையிலும் முதுகிலும் நல்ல அடிபட்டுவிட்டது. அதன் பிறகு அவனை மருத்துவரிடம் அழைத்து சென்று ஊசி போட்டு காயங்களுக்கு மருந்து போட்டு மாத்திரைகள் எல்லாம் அவனுக்கு கொடுத்து அவன் சரி ஆவதற்கு பத்து நாட்களுக்கும் மேலாக  ஆகிவிட்டது.  அவனுடைய அம்மா சொன்னார்கள் நீ அந்த வாழைப்பழத் தோலை எடுத்து குப்பை கூடையில் போட்டிருந்தால் இன்று உனக்கு இவ்வளவு கஷ்டமா?    முதுகில் நல்ல அடி.  நீ பள்ளி செல்வதற்கு இன்னும் பத்து நாட்களுக்கு மேல் ஆகும் என்று டாக்டர் சொல்லிவிட்டார் என்று கூறினார்கள்.‌  இப்பொழுது பரத்  தன் தவறை உணர்ந்து கொண்டான். இப்பொழுது எல்லாம் பரத் சுறு சுறு பரத்தாக சுத்த பரத்தாக மாறிவிட்டான்.

நீதி: முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் 

பெற்றோருக்கு கீழ் படியும் போது நாம் வாழ்வில் மேல் படிக்கு செல்வோம்

இன்றைய செய்திகள்

21.11.2025

⭐ கியூஆர் குறியீடுகள் -  ரெயில் நிலைய உணவகங்கள் மற்றும் கடைகளில் இடம்பெற்றிருக்கும்.உணவு பொருட்கள் தரமில்லாவிட்டால் கியூஆர் குறியீடு மூலம் புகார் செய்யலாம்.

⭐கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் குளிர்சாதன சேமிப்பு கிடங்குகள்- மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

⭐பீகார் முதலமைச்சராக 10-வது முறையாக பதவி ஏற்றார் நிதிஷ்குமார்.

⭐டாங்கி எதிர்ப்பு ஏவுகணை-பீரங்கி குண்டுகள்: இந்தியாவுக்கு ரூ.823 கோடி ஆயுதங்கள் விற்பனை-அமெரிக்கா அறிவிப்பு.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்க்கான ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அணியில் மூன்றாவது பழங்குடி வீரராக டாகெட் இடம் பெற்றுள்ளார்.

Today's Headlines

⭐QR codes are installed in Railway station restaurants and shops. If the food items are of poor quality, you can complain through the QR code.

⭐M.K.Stalin inaugurates refrigerated Goods storage warehouses in the Koyambedu market complex.

⭐Nitish Kumar took oath as the Chief Minister of Bihar for the 10th time.

⭐Anti-tank missiles-artillery shells. Rs. 823 crore arms sale to India-US announcement

 SPORTS NEWS 

🏀Australia squad announced for first Test against England. Daggett becomes the third Aboriginal player in Australia's squad.

Covai women ICT_போதிமரம்

Wednesday, November 19, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 20.11.2025

திப்பு சுல்தான்







திருக்குறள்: 

குறள் 358: 

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ் 
செம்பொருள் காண்ப தறிவு 

விளக்க உரை: 

பிறவித்துன்பத்திற்கு காரணமான அறியாமை நீங்குமாறு முக்தி எனும் சிறந்த நிலைக்குக் காரணமான செம் பொருளைக் காண்பதே மெய்யுணர்வு.

பழமொழி :

Great achievements require hard work. 

பெரிய சாதனைகள் கடின உழைப்பில் தான் உண்டாகும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1.அறிவே மனிதனின் ஆயுதம் என்பதை நான் அறிவேன்.


2.எனவே மற்றவர்கள் என்ன சொன்னாலும் எனது பகுத்தறிவு கொண்டு முடிவெடுப்பேன்.

பொன்மொழி :

ஒரு முள் குத்திய அனுபவம் வாழ்க்கை முழுவதற்குமான எச்சரிக்கை. -ஜேம்ஸ் ரஸ்ஸல் லோவல்

பொது அறிவு : 

01.இந்திய அரசியலமைப்பின் முகப்புரையை "அடையாள அட்டை" என்று கூறியவர் யார்?

திரு. N.A. பால்கிவாலா
Thiru.N. A.Palkhivala

2.இந்தியாவில் மாணவர் சேர்க்கையின் அடிப்படையில் மிகப்பெரிய பல்கலைக்கழகம் எது?

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம்
Indira Gandhi National Open University (IGNOU)


English words :

incredible-impossible to believe, industrious, hard-working, and productive

தமிழ் இலக்கணம்: 

 'ந' வரும் இடம் எழுதும் முறை. 'ந' வை தந்நகரம் என்று கூறுவர். காரணம் ந் என்ற ஒற்றெழுத்தை தொடர்ந்து வரக் கூடிய மெய்யெழுத்து த வர்க்கமாக தான் இருக்கும். 
எ.டு. வெந்தயம், பந்து, பந்தயம்.

நவம்பர் 20

திப்பு சுல்தான் அவர்களின் பிறந்தநாள்... 

திப்பு சுல்தான் (நவம்பர் 20, 1750, தேவனஹள்ளி – மே 4, 1799, ஸ்ரீரங்கப்பட்டணம்), மைசூரின் புலியென அழைக்கப்பட்டவர். 1782 ஆம் ஆண்டிலிருந்து 1799 ஆம் ஆண்டுவரை மைசூரின் அரசை ஆண்டவர். திப்பு சுல்தான் ஹைதர் அலியின் இரண்டாம் தாரமான ஃவாதிமாவின் மகனாவார். பிரித்தானியப் படைகளுடனான இரண்டாம் ஆங்கில-மைசூர்ப் போரில் ஹைதர் அலி வெற்றி பெறுவதற்கு உறுதுணையாகவிருந்த திப்பு தனது தந்தையின் மரணத்திற்குப் பின்னர் மைசூரின் மன்னரானார். ஆங்கிலேயர்களை இந்தியாவை விட்டு அகற்றுவதற்காகப் பிரான்சின் மாவீரன் நெப்போலியனுடன் பேச்சுவார்த்தைகூட நடத்தினார்.மூன்றாம் மற்றும் நான்காம் ஆங்கில-மைசூர்ப் போர்களில் பிரித்தானிய அரசினாலும் அதன் கூட்டுப் படைகளினாலும் தோற்கடிக்கப்பட்டார். மே 4, 1799 ஆம் ஆண்டு தனது ஆட்சித் தலைநகரமான ஸ்ரீரங்கப்பட்டினத்தில் போரின்போது இறந்தார்.

நீதிக்கதை

கந்தசாமி திருநின்றவூரில் பல ஆண்டுகளாக ஒரு ஜவுளிக்கடை நடத்தி வந்தார். கடைத்தெருவில் அவருடைய ஒரு ஜவுளிக்கடை மட்டுமே இருந்ததால், நகரத்து மக்கள் அவரது கடையிலிருந்தே துணிமணிகள் வாங்கி வந்தனர். கந்தசாமி வியாபாரத்தை சிறப்பாக செய்து ஏராளமாக செல்வம் சேர்த்தார். 

ஒருநாள் அதே கடைத்தெருவில் அவருக்குப் போட்டியாக மாணிக்கம் என்ற வெளியூர் இளைஞன் ஜவுளிக்கடையைத் திறந்தான். இளைஞர்களையும், பெண்களையும் கவரும் படி புதிய வகை துணிகளை அவன் விற்பனை செய்ததால், மக்கள் அங்கு குவிந்தனர். கந்தசாமியின் வியாபாரம் மந்தமாகியது. 

மாணிக்கத்தின் மீது பொறாமை கொண்ட கந்தசாமி, அவன் வியாபாரத்தைத் தடுப்பதற்காக, விலை உயர்ந்த நவீன துணிமணிகளை இறக்குமதி செய்தார். கடையையும் பெரிதாக்கி, கண்கவரும் வகையில் அலங்காரம் செய்தார். சினிமா கலைஞர்களை வரவழைத்து தன் கடைக்கு விளம்பரம் செய்தார். இதனால் அவரது சொத்துக்கள் பெருமளவில் கரைந்தன. ஆனாலும் குறைந்த லாபத்தில் அதிக விற்பனை என்ற கொள்கையைக் கொண்டிருந்த மாணிக்கத்தின் கடையில் தான் அதிகமாக வியாபாரம் நடந்தது. 

இதைக் கண்டு கொதித்த கந்தசாமி வேறு வழியின்றி மிகக் குறைந்த லாபத்துக்கு துணிகளை விற்க முன்வந்தார். பல லட்ச ரூபாய் செலவுகளோடு விற்பனையை கணக்கிட்டுப் பார்த்தால், கடைசியில் நஷ்டம் தான் மிஞ்சியது. உடனே மாணிக்கத்தின் மீது பொறாமை கண்மூடித்தனமாக அதிகரிக்க, அவர் தன் சிந்திக்கும் திறனை இழந்தார். மாணிக்கத்தின் கடைக்கு தீ வைக்க, ஒரு கூலிப் படையை ஏவினார். 

ஒருநாள் இரவு மாணிக்கத்தின் கடை தீப்பிடித்து எரிந்தது. அங்கிருந்த துணிமணிகள், பணம் என அனைத்தும் சாம்பலான பின்தான் கந்தசாமியின் மனது நிம்மதி அடைந்தது. ஆனால் மாணிக்கம் கொடுத்த புகாரின் பேரில் தீவிர விசாரணை நடத்திய காவல் துறையினர், தீ வைத்த கூலிப் படையினரை கைது செய்து விசாரித்தனர். அவர்கள் கந்தசாமியைக் காட்டிக் கொடுத்ததால், அவர் சிறையிலடைக்கப்பட்டார். கந்தசாமியின் கடை சீல் வைக்கப்பட்டது. 

மாணிக்கம் தன் கடையை காப்பீடு செய்திருந்ததால், இழப்புத் தொகை கிடைத்தது, மீண்டும் வியாபாரத்தைத் தொடர்ந்தான். பொறாமையால் அறிவுக்கண் மூடப்பட்டு தீய வழியில் சென்று வெற்றி பெற நினைத்தால், கடைசியில் பெரும் துன்பத்தையே சந்திக்க நேரிடும். 

நீதி :

பொறாமை தன்னிடம் உள்ள சொத்தையும் சேர்த்து அழித்துவிடும்.

இன்றைய செய்திகள்

20.11.2025

⭐விவசாயத்திற்கு உதவி புரிய அரசாங்கம் அனைத்து வழிகளையும் திறந்துவிட்டுள்ளது. இந்தியா இயற்கை விவசாயத்தில் உலக அளவிலான மையப் புள்ளியாக மாறி வருகிறது- பிரதமர் மோடி.

⭐உக்ரைன் மீது ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் ரஷியா சராமாரி தாக்குதல்: 10 பேர் பலி.

⭐ செங்கல்பட்டு-காஞ்சிபுரம் தேசிய நெடுஞ்சாலை (NH132B) மற்றும் காஞ்சிபுரம்-திருத்தணி மாநில நெடுஞ்சாலை (SH58) ஆகிய இரண்டு சாலைகளும் 4 அல்லது 6 வழித்தடங்களாக விரிவாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀ஒருநாள் பேட்டர் தரவரிசை: 22நாட்களுக்குள் ரோகித் சர்மாவின் முதல் இடத்தை பறித்த நியூசிலாந்து வீரர் டாரில் மிட்செல்.  ரோகித் சர்மா 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டார். 3-வது இடத்தில் ஆப்கானிஸ்தான் வீரர் சத்ரான் உள்ளார்.

Today's Headlines

⭐The government has opened all avenues to help agriculture. 
* India is becoming a global hub for organic farming - Prime Minister Modi.

⭐ The Tamil Nadu government is planning to expand both the Chengalpattu-Kanchipuram National Highway (NH132B) and the Kanchipuram-Thirutthani State Highway (SH58) to 4 or 6 lanes.

⭐Russia launches missile and drone attacks on Ukraine, and 10 civilians were killed.

 SPORTS NEWS 

🏀One Day Batsman Rankings: New Zealander Daryl Mitchell dethroned Rohit Sharma to become the World's top  No. 1 batsman in 22 Days. Rohit Sharma has slipped to 2nd place. Afghanistan's Zadran is in 3rd place.

Covai women ICT_போதிமரம்