Tuesday, December 17, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 18.12.2024

ஜெ. ஜெ. தாம்சன்

    






திருக்குறள்: 

"பால்: பொருட்பால்

அதிகாரம்: சூது

குறள் எண்:937

பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
 கழகத்துக் காலை புகின்.

பொருள்:
சூதாடுமிடத்தில் ஒருவனுடைய காலம் கழியுமானால், அது அவனுடைய பழைமையாய் வந்த செல்வத்தையும் இயல்பான நற்பண்பையும் கெடுக்கும்."

பழமொழி :

வைகறைத் துயில் எழு.    

Rise at dawn..

இரண்டொழுக்க பண்புகள் :  

  *இரவில் அதிக நேரம் கண் விழிக்காமல் விரைவாக தூங்கி அதிகாலையில் எழுவேன்.

*தினமும் அதிகாலையில் உடற்பயிற்சி மேற்கொள்வேன்.

பொன்மொழி :

நம்பிக்கை போன்ற சிறந்த மருந்து வேறு எதுவுமில்லை--- ஒரிசற் மார்டென்

பொது அறிவு : 

1. அதிக மக்கள் அடர்த்தியை கொண்ட கண்டம் எது?

விடை: ஐரோப்பா

2. உலகின் மிக நீளமான மலை எது?

விடை: அந்தீஸ் மலை

English words & meanings :

 Gardening.      -     தோட்டக்கலை

Hunting.   -          வேட்டையாடுதல்

வேளாண்மையும் வாழ்வும் : 

 வர்த்தக மற்றும் மேம்பாட்டிற்கான ஐக்கிய நாடுகள் அறிக்கை 24 ஆப்பிரிக்க நாடுகளில் 114 விவசாயத் திட்டங்களை மதிப்பீடு செய்தது. ""இரண்டு மடங்குக்கும் அதிகமான விளைச்சல்கள் கரிம முறைப்படியானவை அல்லது, அதற்கு மிக நெருக்கமான முறைமைகளைப் பயன்படுத்தியவை"" என்று இது கண்டறிந்தது."

டிசம்பர் 18

ஜெ.ஜெ. தாம்சன்  அவர்களின் பிறந்தநாள்

ஜெ.ஜெ. தாம்சன்(Joseph John Thomson) என்று பொதுவாக அறியப்படுகின்ற சர் ஜோசப் ஜான் தாம்சன்(டிசம்பர் 18, 1856 - ஆகஸ்ட் 30, 1940)அணுவின் அடிப்படைப் பொருளான மின்னணு எனப்படும் எலக்ட்ரானைக் கண்டுபிடித்த ஆங்கில இயற்பியலார் ஆவார். இவர் மின்சாரவியல், காந்தவியல், ஐசோடோப்புகள் குறித்து ஆய்வுகள் செய்தவர். 'நவீன அணு இயற்பியலின் தந்தை' எனப் போற்றப்படுபவர். நிறை நிறமாலையைக் கண்டறிந்தவர்.இயற்பியல் பேராசிரியராக விளங்கியது மட்டுமல்லாமல் தனது ஆய்வுகளுக்காக 'ஆதம்சு பரிசு' மற்றும் 1906 -ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு ஆகியவற்றைப் பெற்றவர்.



நா.பார்த்தசாரதி  அவர்களின் பிறந்தநாள்

நா.பார்த்தசாரதி (Na. Parthasarathy, டிசம்பர் 18, 1932 - டிசம்பர் 13, 1987) புகழ் பெற்ற தமிழ் நெடுங்கதை எழுத்தாளர் ஆவார். தீரன், அரவிந்தன், மணிவண்ணன், பொன்முடி, வளவன், கடலழகன், இளம்பூரணன், செங்குளம் வீரசிங்கக் கவிராயர் ஆகிய புனைப்பெயர்களிலும் அறியப்படும் இவர் தீபம் என்ற இலக்கிய இதழை நடத்தி வந்ததால் 'தீபம்' நா.பார்த்தசாரதி என்றும் அழைக்கப்படுகிறார். பெரும்பாலும் இவருடைய கதைகள் சமகால சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்கப் போராடும் கொள்கைப் பிடிப்புள்ள கதைமாந்தர்களைப் பற்றியதாய் அமைந்துள்ளது. இவருடைய புகழ் பெற்ற நெடுங்கதைகளான குறிஞ்சி மலர் மற்றும் பொன் விலங்கு தொலைக்காட்சித் தொடர்களாகவும் வந்துள்ளன. சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.இவர் எழுதிய "சாயங்கால மேகங்கள்" எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 1983 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நாவல் வகைப்பாட்டில் முதல் பரிசு பெற்றிருக்கிறது. இவர் 93 நூல்களை எழுதியிருக்கிறார்

நீதிக்கதை

 உண்மையான நண்பன் 


ஒரு நாட்டின் அரசரிடம் பெரிய யானை ஒன்று இருந்தது. அது எப்ப பார்த்தாலும் சேட்டை பண்ணிக்கொண்டே இருக்கும். ஒரு நாள் சேவகர்கள் அந்த யானைக்கு சாப்பாடு கொடுக்கும் போது அந்த யானை அதை சாப்பிடாமல் அழுது கொண்டே இருந்தது.


“இந்த யானைக்கு என்னதான் ஆச்சு இன்றைக்கு குளிக்கவும் இல்லை சாப்பிடவும் இல்லை அழுது கொண்டே இருக்கிறது” என்று சேவகர்கள் தங்களிடையே பேசிக்கொண்டு இருந்தார்கள்.


அவர்கள் அரசனிடம் சென்று, “அரசே யானை இன்று குளிக்கவும் இல்லை, சாப்பிடவும் இல்லை எப்போ பார்த்தாலும் அழுது கொண்டே இருக்கிறது. அதற்கு உடல்நிலை சரியில்லாமல் போய் இருக்குமோ” என்று எங்களுக்கு சந்தேகமாக உள்ளது என்று கூறினார்கள்.


உடனே அரசர், அமைச்சரிடம் என்ன பிரச்சனை என்று சென்று பார்க்க கட்டளையிட்டார். அமைச்சரும் யானையுடன் சென்று,” உனக்கு என்ன ஆச்சு ஏன் சோகமாக இருக்கிறாய்” என்று கேட்டார்.


அதற்கு யானை எந்த பதிலும் கூறாமல் அழுது கொண்டே இருந்தது. அப்போது அமைச்சர் சேவகர்களிடம், “இந்த யானையின் தினசரி வாழ்க்கை முறையில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டுள்ளதா” என்று கேட்டார்.அதற்கு சேவகர்கள் அப்படி எல்லாம் இல்லை. 


ஆனால் கொஞ்ச நாட்களுக்கு முன்பு நாய்க்குட்டி ஒன்று இந்த யானையிடம் மிகவும் நட்பாக பழகியது.


இந்த ஊரில் உள்ள ஒருவர் பார்த்துக்கொண்டு அந்த நாய் குட்டியை விலைக்கு கேட்டார், நாங்களும் அவரிடம் அந்த நாய்க்குட்டியை விற்றுவிட்டோம் என்று கூறினார்கள். அமைச்சர் தான் கேட்டவை அனைத்தும் அரசரிடம் சென்று கூறினார்.


அமைச்சர், அரசரிடம் “அந்த நாய்க்குட்டி மீண்டும் திரும்பி வந்தால், இந்த யானை பழையபடி மாறிவிடும்” என்று கூறினார். அப்போது அரசர் அந்த நாய்க்குட்டியை கொண்டு வர கட்டளையிட்டார். சேவகர்கள் ஊர் மக்களிடம் சென்று அரசர் கட்டளை பிறப்பித்துள்ளதை கூறினார்கள்.


“யார் அந்த நாய்க்குட்டியை கொண்டு சென்றார்களோ அவர்கள் இன்றைக்கு அந்த நாய்க்குட்டியை மீண்டும் அரசரிடம் கொண்டு ஒப்படைக்க வேண்டும்,” என்று சொன்னார்கள்.


இதைக் கேட்ட அந்த நபர்  அந்த நாய் குட்டியை மீண்டும் கொண்டு வந்து அரசவையில் ஒப்படைத்தார். அந்த நாய்க்குட்டியை பார்த்த யானை மிகவும்  மகிழ்ச்சி அடைந்தது. மீண்டும் அந்த யானையும் நாய்க்குட்டியும் நண்பர்களாக இருந்தனர்.

இன்றைய செய்திகள்

18.12.2024

* தமிழகத்தில் பைக் டாக்சி இயங்க தடையில்லை என தமிழக அரசு அறிவிப்பு - தொழிலாளர்கள் மகிழ்ச்சி.

* தமிழகத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில், கட்டிடம், மனைப்பிரிவுகளுக்கு அனுமதி வழங்குவதற்கான கட்டணங்களை தனித்தனியாக நிர்ணயித்து ஊரக வளர்ச்சித் துறை அறிவித்துள்ளது.

* போதைப் பொருட்களுக்கு எதிராக தேசிய செயல்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

* அமெரிக்காவின் சட்டவிரோத அடக்குமுறையை ஏற்றுக்கொள்ள முடியாது என சீனா தெரிவித்துள்ளது.

* புரோ கபடி லீக்: புனேரி பால்டன் அணியை வீழ்த்தி பாட்னா பைரேட்ஸ் வெற்றி.

* நியூசிலாந்து முன்னணி வீரரான டிம் சவுதி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.

Today's Headlines

* Tamil Nadu government announces that there is no ban on bike taxis in Tamil Nadu - workers are happy.

* The Rural Development Department has announced separate fees for granting permission for buildings and plots in rural panchayats in Tamil Nadu.

* The Union Ministry of Social Justice and Empowerment has formulated a national action plan against drugs.

* China has said that it cannot accept the illegal oppression of the United States.

* Pro Kabaddi League: Patna Pirates win by defeating Puneri Baldwin.

* New Zealand leading player Tim Southee has retired from international Test cricket.

Covai women ICT_போதிமரம்

Monday, December 16, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 17.12.2024

 

இசைக்கருவிகளின் ராணி

  






திருக்குறள்: 

பால்பால்: பொருட்பால்

அதிகாரம் :சூது

குறள் எண்:936

அகடுஆரார் அல்லல் உழப்பர் சூதுஎன்னும்
முகடியால் மூடப்பட் டார்.

பொருள்:

சூது என்று சொல்லப்படும் மூதேவியால் விழுங்கப் பட்டவர், வயிறு நிறைய உணவும் உண்ணாதவராகிப் பல துன்பப்பட்டு வருந்துவர்.

பழமொழி :

வைத்தியன் மருந்திலும் கைமருந்தே நலம். 

Domestic medicine is preferable to that of a physician.

இரண்டொழுக்க பண்புகள் :  

  *இரவில் அதிக நேரம் கண் விழிக்காமல் விரைவாக தூங்கி அதிகாலையில் எழுவேன்.

*தினமும் அதிகாலையில் உடற்பயிற்சி மேற்கொள்வேன்.

பொன்மொழி :

திட்டமிடாத செயல் துடுப்பில்லாத படகுக்கு ஒப்பானது--- ஜவஹர்லால் நேரு

பொது அறிவு : 

1. இசைக்கருவிகளின் ராணி என அழைக்கப்படும் கருவி எது? 

விடை: வயலின். 

2. பழுக்கும் பழங்களுடன் தொடர்புடைய வாயு எது? 

விடை: எத்திலீன்.

English words & meanings :

 Drawingபடம் வரைதல், 

Fishingமீன் பிடித்தல்

வேளாண்மையும் வாழ்வும் : 

 வர்த்தகம் மற்றும் மேம்பாட்டுக்கான ஐக்கிய நாடுகள் மாநாடு தனது அறிக்கையில்"ஆப்பிரிக்காவில், பெரும்பான்மையான பாரம்பரிய உற்பத்தி அமைப்புக்களை விட கரிம விவசாயம் உணவுப் பாதுகாப்பிற்கு மேலும் உகந்ததாக இருக்கும்

டிசம்பர் 17

ஓய்வூதியர் நாள்

ஓய்வூதியர் நாள் (Pensioners’ Day), இந்தியாவில் ஆண்டு தோறும் டிசம்பர் 17 ஆம் நாளன்று கொண்டாடப்படுகிறது. டிசம்பர் 171982-ஆம் நாளில், இந்திய உச்ச நீதிமன்றம்ஓய்வூதியம் குறித்து வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினை நினைவுகூரும் வகையில் இந்நாள் ஒவ்வொரு ஆண்டும் ஓய்வூதியர்களால் இந்தியாவில் கொண்டாடப்படுகிறது

நீதிக்கதை

 மந்திர மரம்


ஒரு கிராமத்தில் அண்ணன் தம்பி இருவர் வாழ்ந்து வந்தனர். அவர்கள் விறகு வெட்டி சந்தையில் விற்று வந்தனர். அண்ணன்காரன் மிகவும் முரட்டுத்தனமாக இருந்தான். ஆனால் தம்பிக்காரன் அண்ணன் சொல்வதை எல்லாம் கேட்டு அதன்படி கீழ்ப்படிந்து நடந்தான்.


ஒருநாள் அண்ணன்காரன் காட்டிற்கு விறகு வெட்டச் சென்றான். வரிசையில் விறகுகளை வெட்டி வரும்போது அங்கே ஒரு மந்திர மரம் இருந்தது. அது மந்திர மரம் என்று தெரியாமல் அவன் அதன் மேல் ஏறி அதன் கிளைகளை வெட்ட ஆரம்பித்தான். 


 அப்போது அந்த மரம் அவனிடம் பேசியது, “ஐயா தயவு செய்து என் கிளைகளை வெட்டாதீர், அதற்கு பதிலாக நான் உங்களுக்கு தங்க மாம்பழம் தருகிறேன்” என்றது.


அண்ணன்காரன் தங்க மாம்பழமா! என்று ஆச்சரியத்துடன் அந்த மரம் சொன்னதற்கு சம்மதித்தான். அந்த மரமும் அவனுக்கு சில தங்க மாம்பழங்களை கொடுத்தது. அவன் அதை பார்த்து கோபத்துடன் “எனக்கு இன்னும் நிறைய மாம்பழங்கள் வேண்டும், இல்லை என்றால் உன் கிளைகளை நான் வெட்டி தங்க மாம்பழத்தை எடுத்துக் கொள்வேன்” என்றான். 


அந்த மரம் கோபத்தில் தன் வேர்களை எல்லாம் சேர்த்து அவனை மரத்தோடு கட்டிப்போட்டது. அவனால் அதிலிருந்து அசையவே முடியவில்லை. சூரியனும் மறைய ஆரம்பித்தது, அண்ணன்காரன் எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மரத்திடம் தான் செய்தது அனைத்தும் தவறு தான் தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சினான்.


அதற்கு அந்த மரம், “நானும் என் கிளைகளை வெட்ட வேண்டாம் என்று கெஞ்சினேன் நீ என்னை விட்டாயா” என்று கேட்டது.  இவ்வளவு நேரமாகியும் அண்ணனை காணவில்லையே என்ற பயத்தில் தம்பி அண்ணனை தேடி காட்டுக்குள் சென்றான்.


அண்ணன் மரத்தில் வேர்களால் கட்டப்பட்டு இருப்பதை பார்த்து தம்பி மிகவும் ஆச்சரியப்பட்டான். அண்ணனை அதில் இருந்து விடுவிக்க ரொம்ப முயற்சி பண்ணினான். அப்போது அண்ணன் சொன்னான், “நான் மிகவும் பெரிய தவறு பண்ணிட்டேன் இந்த மரம் கிட்ட ரொம்ப முரட்டு தனமா நடந்துகிட்டேன், அதனால இந்த மரம் என்னை சும்மா விடாது. அது மட்டும் இல்ல உன்னையும் நான் ரொம்ப கஷ்ட படுத்திட்டேன்.” என்று அவன் தன் தம்பியிடம் தான் செய்த அனைத்து தவறுகளுக்கும் மன்னிப்பு கேட்டான்.


அந்த மரமும்  செய்த தவறை உணர்ந்து மனம் மாறியதற்காக அவனை விடுவிக்க சம்மதித்தது. அந்த மரம் அவர்களுக்குத் தேவையான தங்கம் மாம்பழத்தை அளித்தது. அதன் பிறகு அண்ணன் தம்பி இருவரும் ஒருவருக்கு ஒருவர் பாசத்துடனும் ஒற்றுமையுடனும் வாழ்ந்து வந்தனர்.

இன்றைய செய்திகள்

17.12.2024

* தமிழகத்தில் ஃபெஞ்சல் புயல் மற்றும் வடகிழக்குப் பருவமழையால் இதுவரை 6,30,621 ஹெக்டேர் பரப்பளவில் பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது என்று வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

* அமுதா, அபூர்வா, காகர்லா உஷா உள்பட 5 ஐஏஎஸ் அதிகாரிகள், கூடுதல் தலைமைச் செயலர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

* நாடாளு​மன்​றத்​தில் ‘ஒரே நாடு, ஒரே தேர்​தல்’ மசோதா தாக்கல் செய்​யப்​படுவதை மத்திய அரசு தள்ளி​வைத்​துள்ளது.

* மயோட் தீவை சூறையாடிய சிடோ புயல். 1,000 பேர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

* இந்தியாவில் அடுத்த ஆண்டு உலக தடகளப் போட்டி நடைபெறவுள்ளது என்று இந்திய தடகள சம்மேளனம் அறிவித்துள்ளது.

* மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி : இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

Today's Headlines

* Agriculture Minister M.R.K. Panneerselvam has said that 6,30,621 crops have been damaged in Tamil Nadu due to Cyclone Fenchal and the northeast monsoon.

* 5 IAS officers including Amudha, Apurva, and Kakarla Usha have been promoted to Additional Chief Secretaries.

* The Central Government has postponed the presentation of the ‘One Nation, One Election’ Bill in the State Assembly.

* Cyclone Sido ravaged the island of Mayotte. It is feared that 1,000 people may have died.

* The Athletics Federation of India has announced that the World Athletics Championships will be held in India next year.

* Women's Junior Asia Cup Hockey Tournament: Indian team wins the championship title. Internal

Covai women ICT_போதிமரம்



Sunday, December 15, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 16.12.2024

  

வெற்றி நாள்

 






திருக்குறள்: 

"பால்: பொருட்பால்

 அதிகாரம் :சூது

 குறள் எண்:935

கவறும் கழகமும் கையும் தருக்கி
 இவறியார் இல்லாகி யார்.

பொருள்:சூதாடு
கருவியும். ஆடும் இடமும், கைத்திறமையும் மதித்துக் கைவிடாதவர், (எல்லாப் பொருள் உடையவராக இருந்தும்) இல்லாதவர் ஆய்விடுவர்."

பழமொழி :

வைரத்தை வைரம் கொண்டே அறுக்க வேண்டும்.   

A diamond must be cut with a diamond.

இரண்டொழுக்க பண்புகள் :  

  *இரவில் அதிக நேரம் கண் விழிக்காமல் விரைவாக தூங்கி அதிகாலையில் எழுவேன்.

*தினமும் அதிகாலையில் உடற்பயிற்சி மேற்கொள்வேன்.

பொன்மொழி :

வெற்றியாளர் ஒரு போதும் இழப்பதில்லை,  ஒன்று வெல்கிறார் அல்லது கற்கிறார் ---மகாத்மா காந்தி

பொது அறிவு : 

1. பிளாஸ்டிக் தயாரிப்பில் எந்த நாடு முதலிடம் வகிக்கிறது? 

விடை :  ஜெர்மனி.    

2. மின்னியலின் தந்தை என்று வர்ணிக்கப்படுபவர் யார்?  

விடை: நிக்கோலா டெஸ்லா 

English words & meanings :

 Cooking.  -   சமைத்தல்

Dancing.   -    நடனம்

வேளாண்மையும் வாழ்வும் : 

 உட்செலுத்தும் பொருட்களுக்கான செலவு குறைவதாலும், நுகர்வோர் கரிமப் பொருட்களுக்காக கொடுக்கும் கூடுதல் விலையாலும், கரிம விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்கப் பெறுகிறது.

டிசம்பர் 16

வெற்றி நாள்


வெற்றி நாள் (இந்தி: विजय दिवस Eng- Victory Day) 1971ல் இந்தியா வங்கதேச முக்திவாகினியுடன் இணைந்து இந்திய-பாகிஸ்தான் போர், 1971 இல் பெற்ற வெற்றியின் நினைவாக ஒவ்வோர் ஆண்டும் திசம்பர் 16 அன்று கொண்டாடப்படுகிறது.

1971 இல் நடந்த இந்திய-பாகிஸ்தான் போரின் விளைவாக பாகிஸ்தான் இராணுவம் தானாக முன்வந்து நிபந்தனையற்ற சரணாகதி அடைந்தது. கிழக்குப் பாகிஸ்தான் வங்காளதேசம் என்ற தனி நாடாக உருவானது. தங்களின் தோல்விக்குப் பின்னர் டாக்காவில் ரமணா குதிரைப் பந்தைய மைதானத்தில் 93,000 பாகிஸ்தான் வீரர்கள் ஜெனரல் அமீர் அப்துல்லாகான் நியாஸி தலைமையில் இந்தியாவின் லெப்டினெண்ட் ஜெனரல் ஜெகத்சிங் சிங் அரோரா, தலைமையிலான கூட்டணிப் படைகளிடம் சரணடைந்தனர். இப்போரில் உயிர் நீத்த தங்கள் நாட்டு வீரர்களின் தியாகத்திற்கு அஞ்சலி செலுத்தும்விதமாக ஆண்டுதோறும் இந்தியா முழுவதும் வெற்றி நாள் அனுசரிக்கப்படுகிறது.

நீதிக்கதை

 சிட்டுக்குருவியும் காகமும் 


ஒரு காட்டில் சிட்டுக்குருவி ஒன்று வசித்து வந்தது. அது யாரிடமும் எளிதாக பழகாது, எப்போதும் அமைதியாக தான் உண்டு தன் வேலை உண்டு என்று வாழ்ந்து கொண்டு இருந்தது. அதற்கு சுயமாக யோசித்து  முடிவெடுக்கவும் தெரியாது. ஒரு நாள் காகம் ஒன்று அந்தச் சிட்டுக்குருவியிடம் கேட்டது,”சிட்டுக்குருவியே, நீ என்னுடன் நண்பனாக இருப்பாயா?” என்று. அந்த சிட்டுக்குருவியும் சரி என்று சொல்லி அந்த காகத்துடன் பழக ஆரம்பித்தது.


அப்போது சிட்டுக்குருவியிடம் மற்ற  பறவைகள்  கூறினார்கள், “சிட்டுக்குருவியே நீ காகத்துடன் பழகாதே, நிச்சயம் ஒருநாள் உனக்கு ஏதாவது பிரச்சனையை அந்த காகம் கொண்டு தரும்” என்றார்கள். ஆனால் சிட்டுக்குருவி அவர்கள் பேச்சுக்கு செவி கொடுக்காமல் காகத்துடன் நட்பாக பழக ஆரம்பித்தது. நாட்கள் கடந்தன அப்போது ஒரு நாள் காகம் சிட்டுக்குருவியிடம் கேட்டது, “நண்பா நாங்கள் வெளியே செல்கிறோம் நீ எங்களுடன் வருகிறாயா?” என்று. சிட்டுக்குருவியும் சரி நானும் வருகிறேன் என்று அந்த காகங்களுடன் சென்றது.


அந்த காகங்கள் அருகில் இருந்த ஒரு சோழ வயலில் புகுந்து அங்கு இருந்த அனைத்து சோள வகைகளை கொத்தி திங்க ஆரம்பித்தன. ஆனால் இந்த சிட்டுக்குருவியோ அமைதியாக ஒரு மரத்தில் அமர்ந்திருந்து. இந்த காகங்கள் சோளம் உண்ணுவதை பார்த்துக் கொண்டிருந்தது. அப்போது திடீரென்று அந்த விவசாய நிலத்தின் உரிமையாளர் ஓடி வந்தார், கையில் கம்போடு வந்து இந்த காகங்களை விரட்டினார்.



இந்தக் காகங்களும் பயத்தில் பறந்தன, அந்த காகங்கள் சிட்டுக்குருவியை தனியாக அங்கு விட்டு கொண்டு பறந்து சென்றன. ஆனால் சிட்டுக்குருவியோ மரத்தில் அமர்ந்து என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தது. அப்போது அந்த விவசாயி சிட்டுக்குருவியை நோக்கி கம்பை எடுத்து  சிட்டுக்குருவியை அடித்தார். சிட்டுக்குருவியும் கீழே விழுந்தது. அப்போதுதான் சிட்டுக்குருவி உணர்ந்தது, மற்ற பறவைகள் சொன்னதை நான் கேட்காமல் போனது என்னுடைய தவறுதான் என்று எண்ணி வருந்தியது. 


 நீதி : பிறர் நம் நன்மைக்காக கூறும் அறிவுரையை  கேட்க வேண்டும்.

இன்றைய செய்திகள்

16.12.2024

* அரசு பேருந்துகளுக்கு தகுதிச்சான்று வழங்குவதில் உரிய கவனம் செலுத்த வேண்டும் என போக்குவரத்து ஆணையருக்கு மாநில தலைமை தகவல் ஆணையர் உத்தரவு.

* பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு நிறுத்தப்பட்ட புக் பைண்டிங் பயிற்சி உட்பட மேலும் புதிதாக 7 பயிற்சிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்.

* நாடு முழுவதும் நடைபெற்ற லோக் அதாலத் மூலம் ஒரே நாளில் 1.45 கோடி வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன. இதில் ரூ.7 ஆயிரம் கோடி பணபட்டுவாடா நடைபெற்றுள்ளதாக தகவல்.

* ஒரே இரவில் 37 உக்ரைன் டிரோன்களை அழித்த ரஷிய ராணுவம்.

* ஐ.எஸ்.எல்.கால்பந்து: கேரள அணியை வீழ்த்தி மோகன் பகான் வெற்றி.

* இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்; 2ம் நாள் முடிவில் நியூசிலாந்து 340 ரன்கள் முன்னிலை.

Today's Headlines

* The state Chief Information Commissioner has directed the Transport Commissioner to pay due attention to issuing qualification certificates to government buses.

* The Tamil Nadu government informed the High Court that 7 more new training courses, including the discontinued bookbinding training for the visually impaired, will be started soon.

* 1.45 crore cases were closed in a single day through Lok Adalats held across the country. It is reported that Rs. 7 thousand crores of money was paid out of this.

* Russian army destroyed 37 Ukrainian drones in a single night.

* ISL football: Mohun Bagan defeats Kerala team.

* 3rd Test against England; New Zealand leads by 340 runs at the end of the 2nd day.
Covai women ICT_போதிமரம்

Thursday, December 12, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -- 13.12.2024

 

தமிழக செஸ் வீரர் குகேஷ்


     






திருக்குறள்: 

"பால்: பொருட்பால்

 அதிகாரம்: சூது

 குறள் எண்:934

 சிறுமை பலசெய்து சீர்அழிக்கும் சூதின்
 வறுமை தருவதுஒன்று இல்.

பொருள்: ஒருவனுக்குத் துன்பம் பலவற்றையும் உண்டாக்கி அவனுடைய புகழைக் கெடுக்கின்ற சூதைப்போல் வறுமை தருவது வேறொன்றும் இல்லை."

பழமொழி :

Humility often gains more than pride

அடக்கம் ஆயிரம் பொன் தரும்.

இரண்டொழுக்க பண்புகள் :  

 *நான் எந்த உயிரினத்தையும் துன்புறுத்த மாட்டேன். 

*என்னால் இயன்ற அளவு எனது வீட்டிலும் பள்ளியிலும் செடிகள் வளர்ப்பேன்.

பொன்மொழி :

உலக வரலாற்றை படிப்பதை விட,உலகில் வரலாறு படைப்பதை இனிமை---- ஜவஹர்லால் நேரு

பொது அறிவு : 

1. வெள்ளை நிற ரத்தம் உள்ள உயிரினம் எது? 

விடை:  கரப்பான் பூச்சி.          

  2. எலும்புக்கூடு இல்லாத உயிரினம் எது? 

விடை:  ஜெல்லி மீன்

English words & meanings :

 Bowling.      -       பந்து வீச்சு

 Chess.       -         சதுரங்கம்

டிசம்பர் 13

நா.பார்த்தசாரதி அவர்களின் நினைவுநாள்

நா.பார்த்தசாரதி (டிசம்பர் 18, 1932 - டிசம்பர் 13, 1987) புகழ் பெற்ற தமிழ் நெடுங்கதை எழுத்தாளர் ஆவார். தீரன், அரவிந்தன், மணிவண்ணன், பொன்முடி, வளவன், கடலழகன், இளம்பூரணன், செங்குளம் வீரசிங்கக் கவிராயர் ஆகிய புனைப்பெயர்களிலும் அறியப்படும் இவர் தீபம் என்ற இலக்கிய இதழை நடத்தி வந்ததால் 'தீபம்' நா.பார்த்தசாரதி என்றும் அழைக்கப்படுகிறார். பெரும்பாலும் இவருடைய கதைகள் சமகால சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்கப் போராடும் கொள்கைப் பிடிப்புள்ள கதைமாந்தர்களைப் பற்றியதாய் அமைந்துள்ளது. இவருடைய புகழ் பெற்ற நெடுங்கதைகளான குறிஞ்சி மலர் மற்றும் பொன் விலங்கு தொலைக்காட்சித் தொடர்களாகவும் வந்துள்ளன. சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.இவர் எழுதிய "சாயங்கால மேகங்கள்" எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 1983 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நாவல் வகைப்பாட்டில் முதல் பரிசு பெற்றிருக்கிறது. இவர் 93 நூல்களை எழுதியிருக்கிறார்.

நீதிக்கதை

 பாட முயன்ற கழுதை 


ஒரு காலத்தில் ஒரு காட்டில் முரட்டுக் கழுதை ஒன்று வசித்து வந்தது. அதற்கு நண்பர்கள் இல்லாததால் அது தனியே அலைந்து கொண்டிருந்தது. ஒரு நாள் அந்த வழியே ஒரு நரி வந்தது. 


கழுதையைக் கண்டவுடன் அதன் அருகே சென்று, “என்ன செய்தி ? ஏன் கவலையாய் இருக்கிறாய், தோழனே ?” என்று கேட்டது.


“எனக்கு நண்பர்களே கிடையாது. நான் தனியாக வாழ்ந்து வருகிறேன், ” என்று வருத்தத்தோடு கழுதை பதிலளித்தது. 


” நல்லது, கவலைப்படாதே. இன்றிலிருந்து நான் உனக்கு நண்பனாக இருப்பேன், ” என்று கழுதைக்கு ஆறுதல் கூறியது நரி. அன்றிலிருந்து கழுதையும் நரியும் நல்ல நண்பர்களானார்கள்.ஒரு பின்மாலைப் பொழுதில்,  நடந்து காட்டின் எல்லையை அடைந்தனர்.


அங்கு, ஒரு கிராமப் பகுதி காணப்பட்டது. மரங்கள் நிறைந்த ஒரு தோட்டம் தென்பட்டது. அதில் பழங்கள் கொத்துக் கொத்தாகப் பழுத்துத் தொங்கிக் கொண்டிருந்தன. 


ஆகா! அருமையான ருசியுள்ள பழங்கள் அவை! அவற்றில் சிலவற்றை நாம் சாப்பிடலாமா ? ” என்று கழுதை கேட்டது. 


 “சரி, நாம் பழங்களைச் சாப்பிடலாம். ஆனால், நாம் சிறிதும் சத்தம் செய்யாமல் இந்த வேலையைச் செய்ய வேண்டும்,” என்று எச்சரித்தது நரி. அவை தோட்டத்திற்குள் சென்றன; சிறிதும் சத்தம் செய்யாமல் பழங்களை உண்ணத் தொடங்கின.


இரண்டும் தேவையான அளவு திருப்தியாக உண்டதற்குப் பிறகு, மிகுந்த மகிழ்ச்சியோடு ஒரு மரத்தடியில் இளைப்பாறிக் கொண்டிருந்தன.


“மிகவும் சுவையான பழங்களை உண்டு மகிழ்ச்சியாக இருக்கிறோம். ஆனால், இந்த இனிமையான சூழலில் இப்போது ஒரே ஒரு குறைதான் உள்ளது என்றது கழுதை.


“அது என்ன ?” என்று நரி கேட்டது. “இசை இல்லாததுதான் குறையாக உள்ளது. ஏன், அதை நீ உணரவில்லையா ? ” என்று சற்று வியப்புடன் கேட்டது கழுதை.


“நமக்கு எங்கிருந்து இசை கிடைக்கப் போகிறது ?,” என்று கேட்ட நரிக்கு, “நான் ஒரு சிறந்த பாடகன் என்று உனக்குத் தெரியாதா ?” என்று கழுதை கேட்டது. 


இதைக் கேட்ட நரி மிகவும் கவலை அடைந்தது. “மறந்து விடாதே, நண்பா ! நாம் இப்போது ஒரு தோட்டத்தில் இருக்கிறோம்.

தோட்டக்காரன் நம் குரலைக் கேட்டால் நமக்குப் பிரச்சினை ஏற்படும். ,” என்று நரி கழுதைக்கு அறிவுரை கூறியது. 


தன்னுடைய நல்ல அறிவுரையை அந்தக் கழுதை ஏற்க மறுப்பதை  உணர்ந்து கொண்ட நரி அங்கிருந்து நகர்ந்தது.


கழுதை, தலையை உயர்த்தி, அண்ணாந்து பார்த்தவாறு பெரிய குரலில் கத்தத் தொடங்கியது. இந்தச் சத்தத்தைக் கேட்டுத் தோட்டக்காரனும் மற்ற விவசாயிகளும் அந்த இடத்திற்கு விரைந்து வந்தனர். கழிகளால் அக்கழுதையை அடித்தனர்.


அப்போது அங்கே வந்த நரி 

“உண்மையான நண்பனின் நல்ல அறிவுரையைக் கேட்காவிட்டால் இப்படித்தான் நடக்கும்,"என்று கூறியது.


நீதி : நல்லதை கேட்டால் நன்மை; மறுத்தால் தீமை.

இன்றைய செய்திகள்

13.12.2024

* வரலாறு படைத்த தமிழக வீரர் குகேஷ்: டிங் லிரனை வீழ்த்தி இளம் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை  வென்றார்.

* டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

* வைக்கத்தில் புனரமைக்கப்பட்ட  பெரியார் நினைவகத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

* ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் வலுவிழந்து விடும், ஆனாலும் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.

Today's Headlines

* Tamil Nadu player Kukesh creates history: Defeats Ding Liran to win the Young World Chess Championship title.

* TNPSC Group 2, 2A exam results have been released.

* Chief Minister Stalin inaugurated the renovated Periyar Memorial in Vaikom yesterday.

* The deep depression will weaken in the next 12 hours, but the Meteorological Department has announced that the rain will continue.

Covai women ICT_போதிமரம்