Monday, March 25, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 26.03.2024

  

இசை மேதை பீத்தோவன்




திருக்குறள்: 

"பால்: பொருட்பால். இயல்: அரசியல். 
அதிகாரம்: இறைமாட்சி.

குறள்:384

அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மானம் உடைய தரசு.

விளக்கம்:

ஆட்சி முறைக்கு உரிய அறத்தில் தவறாமல் அறமல்லாதவற்றை நீக்கி வீரத்தில் குறைபடாத மானத்தை உடையவனே சிறந்த அரசன் ஆவான்.


பழமொழி :

Self help is the best help

தன் கையே தனக்கு உதவி

இரண்டொழுக்க பண்புகள் :

 1.முயற்சியும், தொடர் பயிற்சியும்   வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை நான் அறிவேன்.     
                                            
  2.எனவே நான் ஒவ்வொரு நாளும் தேர்விற்காக கடுமையாக முயற்சி செய்து படிப்பேன்

பொன்மொழி :

கல்வி என்பது ஆற்றில் எதிர்நீச்சல் போடுவது
போன்றது. முன்னேறிக்கொண்டே போக வேண்டும் நிறுத்தினால் பின்னுக்கு அடித்துத் தள்ளும்.

பொது அறிவு : 

1. ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்கிய முதல் இந்தியப் பெண் யார்?.

 பி.டி உஷா

 2. இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது? 

 ஞானபீட விருது.

English words & meanings :

 Zone - an area or region distinguished from adjacent parts மண்டலம், குறிப்பிட்ட பகுதி 
Zoom in - maximize  பெரிதாக்கு

ஆரோக்ய வாழ்வு : 

புளுச்சை கீரை :புளிச்சக்கீரை ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இதை நன்றாக அரைத்து, பூசுவதால் கட்டிகள் விரைவில் கரையும்.

மார்ச் 26

லூடுவிக் வான் பேத்தோவன் அவர்களின் நினைவுநாள் 

லூடுவிக் வான் பேத்தோவன் (Ludwig van Beethoven/ˈlʊdvɪɡ væn ˈbˌtvən/ (About this soundகேட்க); 1770 - மார்ச் 26, 1827)[1] அவர்கள் செருமனியைச் சேர்ந்த ஒரு புகழ் பெற்ற மேற்கத்திய செவ்விசை இயற்றுநர் ஆவார். இவர் செருமனியில் உள்ள பான் என்னும் நகரில் பிறந்தார். பியானோ கருவிக்காகவும் பிற இசைக் கருவிகளுக்காகவும் சேர்ந்திசை நிகழ்வுகளுக்காகவும் பல செவ்விசை ஆக்கங்கள் செய்துள்ளார். மேற்கத்திய கலை இலக்கியத்தில் மரபார்ந்த மற்றும் காதல்சார் காலகட்டங்களுக்கு இடையில் ஒரு முக்கியமான இசைக் கலைஞராக இவர் கருதப்பட்டார். அனைத்து இசையமைப்பாளர்களிடமும் மிக பிரபலமான மற்றும் செல்வாக்கு மிகுந்த ஒரு நபராகவும் அறியப்பட்டார். இவர் ஒரு சிறந்த பியானோ வாசிக்கும் கலைஞரும், வயலின் வாசிக்கும் கலைஞரும் ஆவார். இவர் ஒரு சிறந்த இசையமைப்பாளராகவும் இருந்தார். இவருடைய சிம்ஃபனி என்னும் ஒத்தினி இசையில் ஐந்தாவதும் ஒன்பதாவதும் ஒரு வயலின் இசைவடிவம், 32 பியானோ தனியிசை வடிவங்கள், 16 நரம்பிசை வடிவங்கள் மிகவும் புகழ் பெற்றவையாகும். சுமார் 1801 ஆம் ஆண்டு வாக்கில் இவருக்கு சிறுகச் சிறுக காது செவிடாகத் தொடங்கியது. 1817ல் இவர் முற்றுமாய் செவிடாகிவிட்டார். எனினும் இவர் இக்காலத்தே மிகவும் சிறந்த இசை ஆக்கங்களைச் செய்துள்ளார்.

நீதிக்கதை

 இறைமாட்சி

அரசனது நற்குண நற்செய்கைகள்

கரிகாலன், சிறு வயதில் தன் மாமனாகிய இரும் பிடர்த்தலையார் என்ற புலவர் பாதுகாப்பில்

வளர்ந்து வந்தான். புலவர் இவனுக்கு வேண்டிய அறிவு நூல்களை எல்லாம் கற்பித்து இவனைக் கல்வி கேள்விகளில் வல்லவனாகச் செய்தார். இதனால் இவன் சோழ நாட்டிற்கு அரசனாக வந்ததும், மக்கள் எல்லாரிடமும் அன்பு மொழிகள் பேசி மகிழ்ந்ததோடு அவர்கள் விரும்பியதையும் கொடுத்துச் சிறந்தவனாக விளங்கினான். இவ்விதம் விளங்கியதனால் இந்த அரசன், "காவிரிக்குக் கரை கட்ட வேண்டும்" என்று விரும்பினான். இதை அறிந்த மக்கள் அரசன் கருத்துப்படி நடப்பதே நம் கடமை என்று பல ஆண்டுகள் செய்து முடிக்க வேண்டிய கரையைச் சில நாட்களில் செய்து முடித்து மன்னனுக்குப் புகழை உண்டாக்கினர். இவ்விதம் மக்கள் வேறு; அரசன் வேறு; என்று இல்லாமல் ஒற்றுமை மனப்பான்மையோடு புகழ் ஓங்கச் சோழன் ஆட்சிசெய்து வந்தான். வள்ளுவரும், இன்சொல்லோடு கொடுத்து அளிக்கும் அரசனுக்கு உலகோர் அவன் நினைத்தவற்றைக் கொடுத்துப் புகழை உண்டாக்குவர்" என்று கூறி யுள்ளார்.

இன்சொலால் ஈத்து அளிக்க வல்லாற்குத்

தான்கண்ட அனைத்து இவ்வுலகு.

இன்றைய செய்திகள்

26.03.2024


*பிரேசிலில் கடும் வெள்ள பாதிப்பு ; 20 பேர் பலி; ஏராளமான வீடுகள் இடிந்து சேதம்.

*இன்று பத்தாம் வகுப்பு பொது தேர்வு துவங்குகிறது.

*2025 பொங்கலுக்கு அலங்காநல்லூரில் மகளிர் ஜல்லிக்கட்டு; ஜல்லிக்கட்டு ஆர்வலர் வி கே டி பாலன்.

*தமிழகத்தில் நான்கு நாட்கள் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்; வானிலை ஆய்வு மையம்.

*சண்டிகர்: ஐ. டி. எப்., டென்னிஸ் ஒற்றையரில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன் இரண்டாவது இடம் பிடித்தார்.

Today's Headlines

* Severe flooding in Brazil;  20 people died;  Many houses were damaged.

 *Class 10th Public exam starts today.

 *Women's jallikattu at Alankanallur for 2025 Pongal;  Jallikattu enthusiast VK D Balan.

 *The impact of heat will increase in Tamil Nadu for four days;  Meteorological Centre.

 * Chandigarh: 
I. D. F; in tennis singles India's Ramkumar Ramanathan ranked  second .
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Sunday, March 24, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 25.03.2024

  

வில்லியம் கோல்கேட்




திருக்குறள்: 

பால்: பொருட்பால். 
இயல்: அரசியல். 
அதிகாரம்: இறைமாட்சி.

குறள்:383

தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனான் பவர்க்கு.

விளக்கம்:

காலம் தாழ்த்தாத தன்மை, கல்வியுடைமை, துணிவுடைமை இந்த மூன்று பண்புகளும் நிலத்தை ஆளும் அரசனுக்கு நீங்காமல் இருக்க வேண்டியவை.

பழமொழி :

Sadness and gladness succeed eash other

வறுமை ஒரு காலம்; வளமை ஒரு காலம்.

இரண்டொழுக்க பண்புகள் :

 1.முயற்சியும், தொடர் பயிற்சியும்   வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை நான் அறிவேன்.     
                                            
  2.எனவே நான் ஒவ்வொரு நாளும் தேர்விற்காக கடுமையாக முயற்சி செய்து படிப்பேன்

பொன்மொழி :

புத்தகம் இல்லாத வீடும், ஜன்னல் இல்லாத வீடும் ஒன்றே .
- சிங்சௌ .

பொது அறிவு : 

1. உலோகங்களின் இராஜா என்றழைக்கப்படும் உலோகம் எது? 

இரும்பு. 

2. எந்த ஒரு அமிலத்தாலும் கரைக்க முடியாத உலோகம் எது? 

பிளாட்டினம்.

English words & meanings :

 Yew - an evergreen tree; பசுமை மாறா.
Yore - long ago; வெகு காலத்திற்கு முன்பு.

ஆரோக்ய வாழ்வு : 

புளித்த கீரை :புளித்த கீரையில் கொழுப்புச் சத்தை குறைக்கும் பண்புகள் இருப்பதால், இது இருதய வாஸ்குலர் நோய்களை தடுக்கிறது. புளித்த கீரையில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன

மார்ச் 25

வில்லியம் கோல்கேட் அவர்களின் நினைவுநாள்

வில்லியம் கோல்கேட் (William Damian "Will" Colgate: ஜனவரி 25, 1783 – மார்ச்சு 25, 1857) இங்கிலாந்து நாட்டினைச் சேர்ந்த தொழிலதிபர்; அமெரிக்காவைச் சேர்ந்த கோல்கேட் என்ற (தற்போது இது புராக்டர் அன்ட் கேம்பல்) பற்பசைத் தயாரிப்பு நிறுவனத்தை 1806-ல் தொடங்கியவர்.

நீதிக்கதை

 புதையல் ரகசியம்


ஒரு ஊரில் ஒரு வயதான விவசாயி இருந்தார். அவரது மகன்களோ விவசாயத்தில் ஆர்வமின்றி இருந்தனர். தனக்குப் பிறகு அவர்கள் சம்பாத்தியம் இல்லாமல் துன்பப் படுவார்களே என அவர் கவலைப்பட்டார்.

ஒரு தந்திரம் வகுத்தார். இறக்கும் தருவாயில் இருந்த போது அவர்களை அழைத்தார். வயலில் தான் மிகம் பெரும் புதையலைப் புதைத்து வைத்திருப்பதாகச் சொன்னார்.

அவர் இறந்த பின்னர் அவர்கள் மண்வெட்டி கடப்பாரைகளை எடுத்துக் கொண்டு வயலுக்குச் சென்று ஆழமாகத் தோண்டினர். அவர்களுக்குப் புதையல் கிடைக்க வில்லை. ஆனால் மண் நன்கு பண்படுத்தப்பட்டதால் அந்த ஆண்டு நல்ல விளைச்சல் ஏற்பட்டு அதன் மூலம் நல்ல பணவரவு அவர்களுக்கு வந்தது.


நீதி: முன்னேறுவதற்கு முயற்சி செய்ய வேண்டும். முயன்றால் முடியாதது இல்லை.

இன்றைய செய்திகள்

25.03.2024

*அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 'நீட்' தேர்வு பயிற்சி இன்று முதல் தொடங்குகிறது.

*பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தேர்வை முடித்த மாணவர்கள் 100 மரக்கன்றுகள் நட்டனர்.

*தேர்தல் பறக்கும் படை: எட்டு நாள் சோதனையில் ரூபாய் 11 1/2 கோடி பிடிபட்டது மற்றும் ரூபாய் 38 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் சிக்கியது.

*ஒகேனக்கலில் நீர் வரத்து 200 கன அடியாக நீடிப்பு.

Today's Headlines

*NEET practice for government school students starts today.

 *Students who completed their Plus 2 examination at Perunthurai Government Boys Higher Secondary School planted 100 saplings.

 * Rs 11 1/2 crore  and drugs worth Rs 38 lakh seized in eight-day raid by Election Flying Squad.

 *Water flow in Okanakkal is increased to 200 cubic feet.


 Prepared by

Covai women ICT_போதிமரம்

Thursday, March 21, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 22.03.2024

     

                     உலக தண்ணீர் தினம்




திருக்குறள்: 

 பால்: பொருட்பால். இயல்: அரசியல். 
அதிகாரம்: இறைமாட்சி.

குறள்:382

அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு.

விளக்கம்:

அஞ்சாமை, ஈகை , அறிவுடைமை, ஊக்கமுடைமை இந்த நான்கு பண்புகளும் குறைவு படாமல் இருத்தலே அரசனுக்கு இயல்பாகும்.

பழமொழி :

Rome was not built in a day

ஒரே நாளில் கோட்டையை பிடிக்க முடியாது

இரண்டொழுக்க பண்புகள் :

 1. அழியாத செல்வம் கல்வியே எனவே இந்த செல்வத்தை நன்கு முயற்சி செய்து அடைவேன்.

2. என் ஆசிரியர் மற்றும் பெற்றோர் எனக்கு கொடுக்கும் பொறுப்பை திருந்த செய்வேன்


பொன்மொழி :

அனைத்தும் நம் மனதின் பிரதிபலிப்பு என்பதால், நம் மனத்தால் அனைத்தையும் மாற்ற முடியும். --கெளதம புத்தர்

பொது அறிவு : 

1. ஒரு தலைமுறை என்பது எத்தனை ஆண்டுகளை குறிக்கிறது? 

33 ஆண்டுகள். 

2. எந்த உயிரினம் அதிக மக்களை கொல்லுகிறது?

விடை: பாம்பு

English words & meanings :

 Summit - the highest point of a hill or a mountain, மலை அ‌ல்லது குன்றின் உச்சி. 

Reinforce - strengthen, சொல்ல பட்ட காரியத்தை இன்னும் உறுதி படுத்தல்

ஆரோக்ய வாழ்வு : 

காசினி கீரை :கொழுப்புகளை நீக்கி இதயத்தை பாதுகாக்கிறது. ரத்தத்தை சுத்தப்படுத்தி நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.உடலில் தேங்கியிருக்கும் தேவையற்ற நீரை அகற்றி உடல் பருமனை குறைக்கிறது. கால்சியம் நிறைந்து காணப்படுவதனால் பற்களின் உறுதியை மேம்படுத்தி பாதுகாக்கிறது

மார்ச் 22

உலக நீர் நாள் (World Water Day),

உலக நீர் நாள் (World Day for Water அல்லது World Water Day), ஐக்கிய நாடுகள் அவையின் தீர்மானத்துக்கு இணங்க ஆண்டு தோறும் மார்ச் 22 ஆம் நாள் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.

1992 ஆம் ஆண்டில் பிரேசிலில் ரியோ டி ஜனெய்ரோ நகரில் இடம்பெற்ற சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி குறித்து நடைபெற்ற ஐநா பேரவைக் கூட்டத் தொடரில் வைக்கப்பட்ட 21ம் நூற்றாண்டின் செயல் திட்டத்தின்படி 1993ஜனவரி 18 ஆம் நாள் 47வது ஐ.நா பேரவை கூட்டத் தொடர் 193ம் தீர்மானத்தை நிறைவேற்றியது. அத்துடன் 1993ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டின் மார்ச் 22ம் நாளும் உலக நீர் வள நாளாக கொண்டாடத் தீர்மானிக்கப்பட்டது. நீர் வளத்தின் ஒட்டுமொத்தத் திட்டத்தையும் நிர்வாகத்தையும் மேம்படுத்தி நீர் வள பாதுகாப்பை வலுப்படுத்தி நாள்தோறும் கடுமையாகியுள்ள நீர் பற்றாக்குறை பிரச்சினையை தீர்ப்பது என்பது தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் நோக்கமாகும். அதேவேளையில் மக்களிடையே விரிவாக பிரச்சாரம் செய்து மக்களிடையே அந்தந்த நாட்டின் நீர் வளப் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு வளர்த்தி ஏற்படுத்தவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

நீதிக்கதை

 நமக்கு வரும் கஷ்டமே நமக்கு அளிக்கப்பட்ட உதவி..!! 


அவன் மிகவும் இளகிய மனம் படைத்தவன். யாருக்கும் உதவும் உள்ளம் கொண்டவன். அன்று வீட்டின் முற்றத்தில் புத்தகம் படித்துக் கொண்டிருந்தான். வீட்டு முன் தோட்டத்தில் உள்ள ரோஜா செடிகளை எதேச்சையாகப் பார்த்த போது, ஒரு குட்டி வண்ணத்து பூச்சி அவன் கண்ணில் பட்டது . மகரயாழ் அந்த வண்ணத்து பூச்சி தனது கூட்டுப்புழு கூட்டிலிருந்து வெளி வர முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது. இந்த சின்ன வண்ணத்து பூச்சிக்கு பறந்து வர எவ்வளவு ஆசை இருக்கும் என்று நினைத்த மாத்திரத்தில் அதற்கு உதவ நினைத்தான் . ஒரு கத்தரிக்கோலை எடுத்து வந்தான். வண்ணத்து பூச்சிக்கு சுற்றி உள்ள கூட்டை ஆங்காங்கே வெட்டி விட்டான். அவன் மனதில் ஒரு பரம ஆனந்தம். வண்ணத்து பூச்சிக்கு விடுதலை அளித்ததற்காக ! நேரம் கடந்ததது. ஆனால் மகரயாழ் வண்ணத்துப்பூச்சி வெளியே வந்தபாடில்லை ! சிறிது நேரத்தில் எறும்புகள் அதை மொற்றியது. வண்ணத்துப் பூச்சி இறந்து விட்டிருந்தது.  அவன் திகைத்து நின்றான். கூட்டுப்புழு கூட்டை உடைத்து வெளிவரும் போது வண்ணத்துப் பூச்சியின் சிறகுகளுக்கு பறப்பதற்குத் தேவையான சக்தியும் சில சுரப்பிகளும் சுரக்கும். அதற்கு உதவும் நோக்கத்தில் வெட்டி விடப்பட்ட கூடு அதற்கு எமனாகி விட்டது . நமக்கு வரும் கஷ்டங்கள் நம்மை வாழ்விப்பதற்காக கொடுக்கப்படும் பயிற்சி . அதனால் அதை ஏற்றுக் கொண்டு பயிலுவோம். எனக்கு உதவ யாரும் இல்லை என்று நினைக்காதே, அந்த கஷ்டமே உனக்கு இறைவனால் அளிக்கப்பட்ட உதவி.

இன்றைய செய்திகள்

22.03.2024

*தென் தமிழகத்தில் நாளை மழைக்கு வாய்ப்பு.

*தேர்தல் நடத்தையை முன்னிட்டு, அரசு பஸ்களில் பார்சலுக்கு கட்டுப்பாடு.

*சீன ஆராய்ச்சி கப்பல்களுக்கு இலங்கை மீண்டும் அனுமதி.

*ஐஐடி -மெட்ராஸ் இன்குபேட்டட் ஸ்பேஸ் ஸ்டார்ட் அப் -
"அக்னிபான்" ராக்கெட்டில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக நாளை விண்ணில் ஏவப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

*மியாமி ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் ஆண்டி முரே வெற்றி.

Today's Headlines

*Chance of rain tomorrow in South Tamil Nadu.

 *Parcel control in government buses in view of electoral conduct.

 *Sri Lanka re-allows Chinese research vessels.

 *IIT-Madras Incubated Space Start Up -
 It has been announced that the "Agnipan" rocket will not be launched tomorrow due to a technical problem.

 *Miami Open Tennis: Andy Murray wins in first round.

 Prepared by

Covai women ICT_போதிமரம்