Monday, December 18, 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.12.2023

  

முத்தமிழ் காவலரின் நினைவு தபால்தலை

திருக்குறள்

பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : கொல்லாமை

குறள்:323

.ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று.

விளக்கம்:

 உயிர்களைக் கொல்லாத செயல், அறங்களுள் எல்லாம் சிறந்த தனி அறமாம். அதற்கு அடுத்துச் சிறந்த அறம் பொய்யாமை.


பழமொழி :

It is easier to destroy than to create

அழிப்பது சுலபம், ஆக்குவது கடினம்

இரண்டொழுக்க பண்புகள் :1

1) பேப்பர், உணவு அடைக்கப் பட்டு வந்த கவர்கள் மற்றும் குப்பைகளை குப்பை தொட்டியில் தான் போடுவேன் பள்ளி வளாகத்தில் மற்றும் தெருவில் போட மாட்டேன்.


2) ஒரு நாளைக்கு சில நிமிடங்கள் ஆவது பத்திரிகை மற்றும் புத்தகங்கள் வாசிப்பேன்

பொன்மொழி :

ஒரு கதவு மூடப்படும்
போது இன்னொரு
கதவு திறக்கிறது.
ஆனால் பல நேரங்களில்
நாம் மூடிய கதவின்
நினைவிலேயே
இருப்பதனால்..
திறந்த கதவுகள் நம்
கண்களுக்கு தெரிவதில்லை.

பொது அறிவு :

1. உலகின் மிகச் சிறிய பறவை எது?


விடை: ஹம்மிங் பறவை

2. மனிதனின் இதயம் எதனால் உருவாக்கப்பட்டிருக்கிறது?

விடை: கார்டியாக் தசை

English words & meanings :

 disaster- a sudden accident that causes great damage or lot of loss in life பேரழிவு. flood - an overflow of large amount of water பெருவெள்ளம்

ஆரோக்ய வாழ்வு : 

இலுப்பை பூ : தலைமுறைகளை கடந்தும் இலுப்பை மரங்கள் பயன்தரக்கூடியது. இலுப்பை எண்ணெய், பூக்கள் கொட்டைகள் மரபட்டைகள் என இம்மரத்தின் ஒவ்வொரு பாகமுமே, பெறும் பயன் தரக்கூடியது.

டிசம்பர் 19

கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் நினைவுநாள்

கி. ஆ. பெ. விசுவநாதம் (10 நவம்பர் 1899 - 19 திசம்பர் 1994) பரவலாக முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ, என அழைக்கப்படுபவர், தமிழகத்தின் திருச்சியைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர். இவர் எழுதியுள்ள நூல்கள் தமிழ்வளர்ச்சித்துறையால் 2007-2008 இல் நாட்டுடைமையாக்கப்பட்டு பரிவுத் தொகை 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. 

  1. 2000ஆம் ஆண்டிலிருந்து கி. ஆ. பெ. விசுவநாதம் விருது அவர்களின் பெயரில் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் தமிழ் வளர்ச்சி இயக்ககம் மூலம் தமிழ்நெறியில் தமிழ்த் தொண்டாற்றும் ஒருவருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
  2. இவரது நினைவில் ஐந்து ரூபாய் தபால் தலை இந்திய தபால் துறை சார்பில் வெளியிடப்பட்டது.[6]
  3. 1997ல் முதல்வர் கலைஞர் கருணாநிதி திருச்சியில் துவக்கிய மருத்துவக் கல்லூரிக்கு கி. ஆ. பெ.யின் பெயர் சூட்டப்பட்டது

நீதிக்கதை

 கரடி சொன்ன ரகசியம்

இரண்டு நண்பர்கள் காட்டு வழியே சென்று கொண்டிருந்தனர். அவர்களுக்கு எதிரே ஒரு கரடி வந்தது. இரண்டு நண்பர்களில் ஒருவனுக்கு மரம் ஏறத் தெரியும். மற்றவனுக்குத் தெரியாது.

கரடியைப் பார்த்தவுடன் மரம் ஏறத் தெரிந்தவன் மரத்தில் வேகமாக ஏறி ஒளிந்து கொண்டான். ஏறத் தெரியாதவன் கரடி தன்னைக் கொன்று விடும் என்று பயந்து தரையில் விழுந்து விட்டான்.

கரடி அவனருகே வந்து அவனை முகர்ந்து பார்த்தது. அவன் தன் சுவாசத்தை நிறுத்தி விட்டு பிணம் போல கிடந்தான். பிணத்தைத் தின்னும் பழக்கமில்லாத கரடி அவனை விட்டு விட்டு வேறு பக்கம் திரும்பிப் போனது.

கண் பார்வையில் இருந்து கரடி மறைந்ததும் மரத்தில் இருந்தவன் இறங்கிக் கீழே வந்தான். நண்பனிடம் சென்று "அந்தக் கரடி உன் காதில் என்னவோ சொன்னதே, என்ன சொன்னது ?" என்று கேட்டான்.

அதற்குக் கீழே கிடந்தவன், 'ஆபத்து வரும் போது , தான் மட்டும் தப்பித்தால் போதும் என்று உன்னை விட்டு விட்டு ஓடிப் போகும் நண்பனோடு ஒரு போதும் பயணம் செய்யாதே!' என்று அந்தக் கரடி எனக்குப் புத்தி சொன்னது என்றான்.

நீதி : ஆபத்தில் உதவும் நண்பனே நல்ல நண்பன். அப்படி இல்லாத சுய நலமான நட்பை, நாம் விட்டு விட வேண்டும்.

இன்றைய செய்திகள்

19.12.2023

*வெள்ள நிவாரண நிதியை அதிகரித்து வழங்க வேண்டி பிரதமரைச் சந்திக்க டெல்லிக்கு புறப்பட்டார்- முதலமைச்சர் மு க ஸ்டாலின்.

* தென் தமிழக 4 மாவட்டங்களில் - நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் வரலாறு காணாத மழை. அநேக அணைகள் நிரம்பி உபரி நீர் திறக்கப் பட்டதால் எங்கும் வெள்ளம்.

* விசா பெற இனி புதிய கட்டுப்பாடுகள்; தொழிலாளர் துறை அதிரடி.

* தென் தமிழக மழை பாதிப்பு-  கூடுதல் அமைச்சர்கள் நியமனம். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் அங்கு முகாம். ஹெலிகாப்டர் மூலம் மக்களுக்கு உணவு வழங்கப் படுகிறது 

* தமிழ்நாடு பிரீமியர் லீக்: அறிமுக போட்டியிலேயே அரை சதம் சாய் சுதர்சன் பெருமிதம்.

Today's Headlines

*Chief Minister M. K. Stalin left for Delhi to meet the Prime Minister to request an increase in the flood relief funds.

 * In 4 districts of South Tamil Nadu - Nellai, Thoothukudi, Thenkasi and Kanyakumari districts experienced unprecedented rainfall.  Many dams were full and excess water was released causing flooding everywhere.

 * New restrictions on getting visas;  Labor Department action.

 * South Tamil Nadu rain affected areas Appointment of additional ministers.  Minister Udayanidhi Stalin and others camped there.  People are being given food by helicopter

 * Tamil Nadu Premier League: Sai Sudarshan scores half-century in debut match.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Sunday, December 17, 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 18.12.2023

    

ஜெ.ஜெ.தாம்சன்


திருக்குறள்

பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : கொல்லாமை

குறள்:322

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.

விளக்கம்:

 இருப்பதைப் பகிர்ந்து உண்டு, பல உயிர்களையும் பாதுகாப்பது, நூல் எழுதியவர்கள் தொகுத்த அறங்களுள் எல்லாம் முதன்மையான அறமாகும்.


பழமொழி :

Love thy neighbour as thyself. 

உன்னைப் போலவே பிறரை நேசி.

இரண்டொழுக்க பண்புகள் :1

.1) பேப்பர், உணவு அடைக்கப் பட்டு வந்த கவர்கள் மற்றும் குப்பைகளை குப்பை தொட்டியில் தான் போடுவேன் பள்ளி வளாகத்தில் மற்றும் தெருவில் போட மாட்டேன்.


2) ஒரு நாளைக்கு சில நிமிடங்கள் ஆவது பத்திரிகை மற்றும் புத்தகங்கள் வாசிப்பேன்

பொன்மொழி :

ஒரு முட்டாள்
தன் நண்பர்களை
பயன்படுத்துவதை விட
ஒரு அறிவாளி தன்
எதிரிகளை நன்றாக
பயன்படுத்திக் கொள்வான்

பொது அறிவு :

1. தூங்க வைக்கும் ராகத்தின் பெயர் என்ன?

விடை: நீலாம்பரி

2.பாகிஸ்தான் நாட்டின் முதலாவது கவர்னர் ஜெனரல் யார்?

விடை: முகமது ஜின்னா

English words & meanings :

 In the neck of time - just in time, கடைசி நேரத்தில், 

in the dark - not aware of something, சுற்றி நடக்கும் காரியங்கள் குறித்து அறியாமல் இருப்பது

ஆரோக்ய வாழ்வு : 

இலுப்பை பூ :இலை, பூ, காய், பழம், விதை, நெய், பிண்ணாக்கு, மரப்பட்டை, வேர்ப்பட்டை ஆகியவை மருத்துவப் பயனுடையவை. இலுப்பைப் பூ நாடி நடையையும் உடல் வெப்பத்தையும் அதிகரிக்கும். பசியுண்டாக்கும்.

டிசம்பர் 18

ஜெ.ஜெ. தாம்சன்  அவர்களின் பிறந்தநாள்

ஜெ.ஜெ. தாம்சன்(Joseph John Thomson) என்று பொதுவாக அறியப்படுகின்ற சர் ஜோசப் ஜான் தாம்சன்(டிசம்பர் 181856 - ஆகஸ்ட் 301940)அணுவின் அடிப்படைப் பொருளான மின்னணு எனப்படும் எலக்ட்ரானைக் கண்டுபிடித்த ஆங்கில இயற்பியலார் ஆவார். இவர் மின்சாரவியல்காந்தவியல், ஐசோடோப்புகள் குறித்து ஆய்வுகள் செய்தவர். 'நவீன அணு இயற்பியலின் தந்தை' எனப் போற்றப்படுபவர். நிறை நிறமாலையைக் கண்டறிந்தவர்.இயற்பியல் பேராசிரியராக விளங்கியது மட்டுமல்லாமல் தனது ஆய்வுகளுக்காக 'ஆதம்சு பரிசு' மற்றும் 1906 -ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு ஆகியவற்றைப் பெற்றவர்.


நா.பார்த்தசாரதி  அவர்களின் பிறந்தநாள்






நா.பார்த்தசாரதி (Na. Parthasarathyடிசம்பர் 181932 - டிசம்பர் 131987) புகழ் பெற்ற தமிழ் நெடுங்கதை எழுத்தாளர் ஆவார். தீரன், அரவிந்தன், மணிவண்ணன், பொன்முடி, வளவன், கடலழகன், இளம்பூரணன், செங்குளம் வீரசிங்கக் கவிராயர் ஆகிய புனைப்பெயர்களிலும் அறியப்படும் இவர் தீபம் என்ற இலக்கிய இதழை நடத்தி வந்ததால் 'தீபம்' நா.பார்த்தசாரதி என்றும் அழைக்கப்படுகிறார். பெரும்பாலும் இவருடைய கதைகள் சமகால சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்கப் போராடும் கொள்கைப் பிடிப்புள்ள கதைமாந்தர்களைப் பற்றியதாய் அமைந்துள்ளது. இவருடைய புகழ் பெற்ற நெடுங்கதைகளான குறிஞ்சி மலர் மற்றும் பொன் விலங்கு தொலைக்காட்சித் தொடர்களாகவும் வந்துள்ளன. சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.இவர் எழுதிய "சாயங்கால மேகங்கள்" எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 1983 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நாவல் வகைப்பாட்டில் முதல் பரிசு பெற்றிருக்கிறது. இவர் 93 நூல்களை எழுதியிருக்கிறார்

நீதிக்கதை

 காகமும் அன்னபறவையும்


ஒரு கடற்கரையில் கோவிந்தன் என்பவன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் மிகவும் வசதி வாய்ந்தவன், அவனிடம் ஒரு காகம் இருந்தது. தினமும் அவன் அந்த காகத்திற்கு நிறைய உணவு கொடுப்பான். அவன் கொடுத்த உணவை உண்டு அந்த காகம் மிகவும் பருத்தது.

அந்த காகம் மிகவும் அகங்காரம் பிடித்தது. அது எப்பவுமே எல்லோரிடமும் கர்வமாக பேசிக்கொண்டு இருக்கும். ஒரு நாள் அந்த கடற்கரையில் சில அன்னப்பறவைகள் நிற்பதை பார்த்த காகம், அந்த அன்ன பறவைகளிடம் சென்று சொன்னது, "நீங்கள் பார்ப்பதற்கு தான் மிகவும் அழகாக இருக்கிறீர்கள், ஆனால் என்னைப்போல் உங்களால் பறக்க முடியாது" என்று கர்வமாக சொன்னது.

அப்போது ஒரு அன்னப்பறவை சொன்னது, "நண்பா! நாங்கள் இங்கு சிறிது நேரம் ஓய்வெடுக்க தான் வந்துள்ளோம், உன்னுடன் எந்த வாக்குவாதமும் செய்வதற்கு எங்களுக்கு நேரமில்லை" என்றது. உடனே அந்த காகம், "இல்லை, உங்களுக்கு தைரியம் இருந்தால் என்னுடன் போட்டி போடுங்கள்" என்றது.

அதற்கு ஒரு அன்னப்பறவை சரி என்ன போட்டி என்று கேட்டது. அதற்கு காகம் சொன்னது, "நாம் இருவரும் இந்த கடற்கரையில் இருந்து சில மைல்கள் பறந்து செல்வோம், யார் முதலில் செல்கிறார்களோ அவர்கள் தான் சிறந்தவர்கள்" என்று சொன்னது. உடனே அந்த அன்னப்பறவையும் சரி என்றது. இந்த காகம் தான் பருத்து இருப்பதை மறந்து விட்டு மிகவும் வேகமாக பறந்து சென்றது. அன்னப்பறவையும் அதனால் முடிந்த அளவிற்கு வேகமாக பறந்து சென்று கொண்டு இருந்தது.

சிறிது தூரம் சென்ற பிறகு காகம் மிகவும் சோர்வடைந்தது. அதனால் இப்போது எதுவும் செய்ய முடியவில்லை. கீழே சென்றால் கடலில் மூழ்கி இறந்து விடுவோம் என்று அதற்கு நன்றாகவே தெரியும். காகம் என்ன செய்வதென்று தெரியாமல் மிகவும் களைப்பாக பறந்து கொண்டே இருந்தது.அதை பார்த்த அன்ன பறவை, "நண்பா, நான் உன்னை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். உனக்கு என்ன ஆயிற்று மிகவும் களைப்படைந்து விட்டாயே" என்றது. அதற்கு காகம் சொன்னது, "என்னால் முடியவில்லை. இன்னும் சிறிது தூரம் சென்றால் நான் நிச்சயமாக இந்த கடலில் விழுந்து இறந்து விடுவேன்" என்றது.

உடனே அன்னப்பறவை, "சரி நீ கவலை படாதே. என் முதுகில் ஏறிக்கொள். நான் உன்னை கரையில் கொண்டு சேர்க்கிறேன்" என்றது. உடனே காகமும் அன்னப்பறவை முதுகில் ஏறி கரைக்கு பத்திரமாக சென்றது. கரைக்கு சென்ற காகம் அன்னப்பறவையிடம் "நண்பா என்னை மன்னித்துவிடு நான் மிகவும் அகங்காரம் பிடித்து உன்னிடம் பேசி விட்டேன், நான் அவ்வாறு உன்னிடம் பேசி இருக்கக் கூடாது. நீ மட்டும் எனக்கு உதவி செய்யவில்லை என்றால் நான் நிச்சயமாக இன்று இறந்து இருப்பேன்" என்று அன்னப்பறவையிடம் மன்னிப்பு கேட்டது.


நீதி: கர்வம் என்றைக்கும் உதவி செய்யாது.

இன்றைய செய்திகள்

18.12.2023

*நான்கு மாவட்டங்களில் நீடிக்கும் கனமழை எதிரொலி சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு.

* மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு.


* தற்போது புதுவகை கொரோனா எந்த விதத்தில் உருமாறி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது என்பதை ஆய்வு செய்து வருகின்றனர்-  அமைச்சர் தகவல்.

* சாய் சுதர்சன், ஸ்ரேயஸ் அரை சதம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா.

Today's Headlines

* Health department in action order due to heavy rain in four districts.

 * Postponement of Manonmaniam Sundaranar University exams scheduled to be held today.

 *  How the newly developed corona virus is getting mutated –a research is going on this virus and mutation information by Health Minister .

 * India beat South Africa with Sai Sudarsan, Shreyas half-centuries and 8 wickets.
 Prepared by


Covai women ICT_போதிமரம்

Thursday, December 14, 2023

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 15.12.23

    

வால்ட் டிஸ்னி


திருக்குறள்

பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : கொல்லாமை

குறள்:321

அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும்.

விளக்கம்:

 அறச்செயல் எது என்றால், பிற உயிர்களைக் கொலை செய்யாது இருப்பதே; கொல்வது அனைத்துப் பாவங்களையும் தரும்.



பழமொழி :

Hunger is the best source

பசி ருசி அறியாது

இரண்டொழுக்க பண்புகள் :1

.  1. நான் எனது வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் , மனதுக்கு துன்பம் தரமாட்டேன்.


2.  துன்ப படுவோருக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன் .


பொன்மொழி :

கடினமாக உழைத்தவர்கள்
எல்லாம் முன்னேறி விடவில்லை.
கவனமாகவும் நம்பிக்கையுடனும்
உழைத்தவர்களே வாழ்க்கையில்
முன்னேறி உள்ளனர்._____ அப்துல் கலாம்

பொது அறிவு :

1. உலகின் மிகப்பெரிய பாலைவனம் எது?

விடை: சகாரா

2. சிரிக்க வைக்கக்கூடிய வாயு எது?

விடை: நைட்ரஸ் ஆக்சைடு

English words & meanings :

 Draw the line - to set a limit, சில காரியங்களுக்கு எல்லைக் கோடு அமைத்தல், 

carry the can - taking the blame for the things which we didn't do, செய்யாத தவறுக்கு தண்டனை அனுபவித்தல்

ஆரோக்ய வாழ்வு : 

ஆவாரம் பூ : ஆவாரம் பூ பானம் சிறுநீர் கடுப்பு இருக்கும் போது அதை குறைக்க செய்கிறது. இதனுடைய வேரிலிருந்து தயாரிக்கப்படும் சாறு இயற்கை டையூரிடிக் ஆக செயல்பட்டு சிறுநீரகத்தை பாதுகாக்கிறது. நீரிழிவு நோய் கொண்டிருப்பவர்களுக்கு சிறுநீரகம் சேதமாகாமல் பாதுகாக்கிறது.

டிசம்பர் 15

வால்ட் டிஸ்னி அவர்களின் நினைவுநாள்


வால்ட் டிஸ்னி (/ˈdɪzni/;[3] டிசம்பர் 5 , 1901 - டிசம்பர் 151966) உலகப் புகழ் பெற்ற ஓவியர். மிக முக்கியமான கார்ட்டூன் ஓவியர். மிக்கி மவுஸ், டொனால்ட் டக் , ஸில்லி சிம்பொனிஸ் போன்றவற்றை உருவாக்கியவர். திரைப்பட இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் பணிபுரிந்தவர். வால்ட் டிஸ்னி தயாரிப்பு நிறுவத்தின் இணை-நிறுவனரான டிஸ்னி(தன் அண்ணன் ராய்.ஒ.டிஸ்னியுடன் உலகின் புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளர் ஆவார்.

நீதிக்கதை

 கர்வம் கொண்டவர் துன்பமே அடைவர்.

காட்டில் ஒரு நாள் பெரிய பூனை ஒன்றும் நரியும் சந்தித்தன. அவை இரண்டும் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தன.

அப்பொழுது நரி பூனையிடம் “நண்பரே! தந்திரத்திற்குப் பேர் போனவன் நான் எவ்விதத் தீங்கிலிருந்தும் தந்திரமாய் தப்புவேன்" என்று இறுமாப்புடன் கூறியது.

அதற்கு பூனை "நண்பரே! தங்களைப் போல் பல தந்திரங்கள் எனக்கு தெரியாது. சில தந்திரங்கள் தான் தெரியும். தங்களைப் போல் சாமர்த்தியம் எனக்குக் கிடையாது” என்று அடக்கத்துடன் பதில் கூறியது.பூனையைக் கண்டு நரி ஏளனமாய் "ஒன்றும் தெரியாத நீ எவ்வாறு ஆபத்திலிருந்து தப்புவாய்" என்று ஏளனம் செய்தது.

அச்சமயம் திடீரென்று அப்பக்கம் சிலவேட்டை நாய்கள் வந்தன. உடனே பூனை ஒரு பெரிய மரத்தின் மேல் ஏறிக்கொண்டது. ஆனால் நரியினால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அங்கிருந்து ஓட ஆரம்பித்தது. ஆனால் வேட்டை நாய்கள் வேகமாய் ஓடித் தாவி நரியைப் பிடித்துக் கொன்றன. பூனையோ தப்பிப் பிழைத்தது. கர்வம் கொண்டவர் துன்பமே அடைவர்.

இன்றைய செய்திகள்

15.12.2023

*74.1% இந்தியர்களுக்கு ஆரோக்கியமான உணவு கிடைப்பதில்லை அதிர்ச்சி தகவல்.

* 11 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்-தமிழக அரசு உத்தரவு.

*இந்தியாவில் மீண்டும் வேகம் எடுக்கும் கொரோனா... அஞ்சி நடுங்கும் மக்கள்.

*16, 17 -ஆம் தேதிகளில் டெல்டா, தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

* ஆஸ்திரேலியாவில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில், விமர்சனங்களுக்கு மத்தியில் சாதனைகள் படைத்த டேவிட் வார்னர்.

Today's Headlines

*74.1% of Indians do not have access to healthy food shocking information.

 * 11 IPS  Transfer of Officers-Tamil Govt Order.

 *Corona is picking up speed again in India...People are trembling with fear.

 * Chance of heavy rain in Delta and Southern districts on the 16th and 17th.

 * David Warner's record-breaking 3-match Test cricket series in Australia, amid criticism.
 Prepared by

Covai women ICT_போதிமரம்