Sunday, November 26, 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27.11.2023

    

சர் ஜெகதீஸ் சந்திர போஸ்


திருக்குறள் : 

பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : வெகுளாமை

குறள்:307

சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.

விளக்கம்:

நிலத்தில் அடித்தவன் கை, வேதனையில் இருந்து தப்ப முடியாதது போலக், கோபத்தைக் குணமாகக் கொண்டவனும் வேதனை அனுபவத்திலிருந்து தப்ப முடியாது.



பழமொழி :

Grasp all, lose all

பேராசை பெரு நட்டம்

இரண்டொழுக்க பண்புகள் :

1) விவசாயம் உலகின் அச்சாணி என்பதை நான் புரிந்து கொண்டேன். எனவே விவசாயத்தையும், விவசாயிகளையும் மதித்து நடப்பேன்.

2) என் பெற்றோர், உறவினர் மற்றும் நண்பர்களிடம் விவசாய பொருட்களை பேரம் பேசாமல் வாங்க வலியுறுத்துவேன்.

பொன்மொழி :

தோல்வி அடைவதற்கு
பல வழிகள் காரணங்களாக
அமையலாம்.. ஆனால்
வெற்றி பெறுவதற்கு
ஒரே காரணம் தான்
அது உன் “உழைப்பு”.

பொது அறிவு :

1. உலகில் அதிக மழைப்பொழிவை பெறும் இடம்?

விடை: மௌசின் ராம் ( மேகாலயா)

2. உயிரியல் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார்?

விடை: சர் ஜெகதீஷ் சந்திர போஸ்

English words & meanings :

 Distort-pull or twist out of shape.சிதைக்க. Dough-thick mixture of flour and other ingredients that can be kneaded, baked, and eaten.மாவை

ஆரோக்ய வாழ்வு : 

பூசணிப் பூ: பூசணிப் பூக்களில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது மற்றும் எலும்புகளை பலப்படுத்த உதவுகிறது. பூசணி பூக்கள் ஈறுகள் மற்றும் பல் இனாமல் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது.

நீதிக்கதை

 நடனமாடிய ஆட்டுக்குட்டியும் ஓநாயும் –             ஒரு காட்டுக்கு பக்கத்துல இருக்குற கிராமத்துல ஒரு ஆட்டுக்குட்டி இருந்தது.

அது எப்பவும் தன்னோட அம்மாவோடவும் தங்களோட ஆட்டு மந்தையோடேயும் சேர்ந்து அந்த காட்டுக்குள்ள போயி இரைதேடி சாப்பிடும்.

சாயந்திரம் ஆனதும் தன்னோட மந்தையோட சேர்ந்து வீட்டுக்கு வந்திடும் அந்த ஆட்டுக்குட்டி.

ஒருநாள் அதே மாதிரி காட்டுக்குள்ள இரைதேட போன அந்த ஆட்டுக்குட்டி ரொம்ப பசிச்சதால தனக்கு வேண்டிய இலை தளைகளை சாப்பிட்டுக்கிட்டு இருந்துச்சு.

அப்படி சுவாரசியமா சாப்பிட்டுகிட்டு இருந்த ஆட்டுக்குட்டி தன்னோட அம்மாவையும் தன்னோட ஆட்டு கூட்டத்தையும் மறந்துடுச்சு.

சாயந்திரம் ஆனதால அந்த ஆட்டு கூட்டம் தங்களோட கிராமத்த நோக்கி நடக்க ஆரம்பிச்சுட்டாங்க

ஆனா இது தெரியாத ஆட்டு குட்டி தன்னோட சாப்பாட்ட சாப்பிட்டுக்கிட்டே இருந்துச்சு.

அப்ப அங்க ஒரு ஓநாய் வந்துச்சு. அத பார்த்த ஆட்டுக்குட்டி ரொம்ப பயந்து போச்சு.இருந்தாலும்

கொஞ்சம் தைரியமா இருந்த ஆட்டுக்குட்டிக்கு ஒரு யோசனை வந்துச்சு.

உடனே அந்த ஓநாய்கிட்ட ஐயா நீங்க எப்படியும் என்ன சாப்பிட போறீங்க, அதனால என்னோட கடைசி ஆசைய நிறைவேத்துங்கனு சொல்லுச்சு.

அந்த ஓநாயும் உன்னோட கடைசி ஆசை என்னனு கேட்டுச்சு ,அதுக்கு அந்த ஆட்டுக்குட்டி சொல்லுச்சு, எனக்கு டான்ஸ் ஆடணும்போல இருக்கு நீங்க ஒரு பாட்டு பாடுங்கனு சொல்லுச்சு.

உடனே அந்த ஓநாய் பாட்டு பாட ஆரம்பிச்சுச்சு ,அப்பத்தான் அந்த சத்தம் கேட்ட ஆட்டு கூட்டத்தை சார்ந்த வேட்டை நாய்களுக்கு அந்த சத்தம் கேட்டுச்சு.

உடனே அந்த வேட்டை நாய்கள் எல்லாம் ஓநாய் சத்தம் வர்ற இடத்துக்கு ஓடி வந்துச்சுங்க.

வேட்டை நாய்கள பார்ததும் ஓநாய் அங்க இருந்து ஓடி போய்யிடுச்சு, அங்க வந்த அந்த ஆட்டு குட்டியோட அம்மா நடந்த எல்லாம் கேட்டு தெரிஞ்சிக்கிட்டு ,ஆட்டு குட்டியோட புத்திசாலித்தனத்தை பாராட்டுச்சு.

இன்றைய செய்திகள்

27.11.2023

*பிரதமர் மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சியில் நேற்று கோவை சூலூர் பகுதியில் சேர்ந்த லோகநாதன் என்பவரின் சேவையை பாராட்டினார்.

* உச்சநீதிமன்ற வளாகத்தில் அம்பேத்கர் சிலை திறப்பு; முதலமைச்சர் மு க ஸ்டாலின்
வாழ்த்து.

 *15 வது ஆண்டு தினம்: நேற்று மும்பை தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி.

* புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகிறது. தமிழகத்தில் 29ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு.

*சேத்தியாதோப்பு அணைக்கட்டு, வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு.  வினாடிக்கு 1200 கன அடி நீர் வெளியேற்றம்.

* 17 வது ஐபிஎல் கிரிக்கெட்: இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் திடீர் விலகல்.

Today's Headlines

* In Prime Minister Modi's Man Ki Baat program yesterday, he appreciated the service of Loganathan from Sulur area of ​​Coimbatore.

 * Inauguration of Ambedkar Statue in Supreme Court Complex;praised by  Chief Minister M.K Stalin

  *15th death Anniversary: ​​Tributes to those who lost their lives in the Mumbai attacks .

 * A new low pressure area is forming today.  Chance of heavy rain in Tamil Nadu on 29th.

 * Chethiyathoppu dam, release of water from Veeranam lake.  Release of 1200 cubic feet water per second.

 * 17th IPL Cricket: England player Joe Root makes a sudden exit.

 Prepared by

Covai women ICT_போதிமரம்

Thursday, November 23, 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 24.11.2023

 

அருந்ததி ராய் 


திருக்குறள் : 

பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : வெகுளாமை

குறள்:305

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்.

விளக்கம்:

ஒருவன் தன்னைத்தானே காத்துக் கொள்ள வேண்டுமானால், சினத்தைக் கைவிட வேண்டும். இல்லையேல் சினம், அவனை அழித்துவிடும்.


பழமொழி :

Good clothes open all door

ஆடை இல்லாதவன் அரை மனிதன்.

இரண்டொழுக்க பண்புகள் :

1) என் உடன் பயிலும் மாணவ,மாணவிகளுடன் எந்த வேறுபாடும் இன்றி அன்போடு பழகுவேன்.

2) பிற மாணவர்கள் வைத்து இருக்கும் பொருள்கள் மீது ஆசை படவோ அவற்றை எடுத்துக்கொள்ளவோ மாட்டேன்.

பொன்மொழி :

உன் இலக்கை
அடையும் வரை..
வெற்றியோ..
தோல்வியோ.. எதையும்
எதிர்பார்க்காமல்
ஓடிக் கொண்டே இரு.

பொது அறிவு :

1. தாஜ்மஹால் கட்ட எத்தனை ஆண்டுகள் ஆனது?

விடை: 20 வருடங்கள்


2. உலகத்தில் எந்த நாடு அதிக அளவில் ரப்பர் உற்பத்தி செய்கிறது?

விடை: மலேசியா

English words & meanings :

 breeches (noun) ப்ரீச்சிஸ்- short trousers அரைக்கால் சட்டை. bribery (noun) ப்ரைபெரி- act of giving or taking bribes லஞ்ச ஊழல்

ஆரோக்ய வாழ்வு : 

செம்பருத்தி பூ : செம்பருத்தி பூக்களை அரைத்து தலையில் தடவி ஊற வைத்துக் குளிக்க தலைப் பேன்கள் குறையும். 

நவம்பர் 24

அருந்ததி ராய்  அவர்களின் பிறந்தநாள்


சுசானா அருந்ததி ராய் (பி. நவம்பர் 241961) ஓர் இந்திய எழுத்தாளர் ஆவார்.

இவரது பல படைப்புகளில் சமுதாயத்திலுள்ள பெண் அடிமைத்தனம் , குழந்தைத் தொழிலாளர் பிரச்சனை , அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகள் முதலியவற்றை விமர்சனத்துக்கு உட்படுத்தினார். மேதா பட்கர் தொடங்கிய நர்மதா பச்சாவோ அந்தோலன் (en:Narmada Bachao Andolan) என்ற அமைப்பில் தீவிரமாக பங்கு கொண்டார். 
  1. 1997 ஆம் ஆண்டு தனது முதல் புதினமான த காட் ஆப் ஸ்மால் திங்ஸ்க்கு புக்கர் பரிசு பெற்றார். புக்கர் பரிசு வென்ற முதல் இந்தியர்[7] என்பது குறிப்பிடத்தக்கது.
  2. 2003ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்படவிருந்த சாகித்ய அகாதமி பரிசை இவர் மறுத்து விட்டார்[8].
  3. மே 2004-ல் சிட்னி அமைதிப் பரிசையும் வென்றார்.[9]
  4. 2015 ஆம் ஆண்டுக்கான அம்பேத்கர் சுடர் விருது பெற்றிருக்கிறார்.

நீதிக்கதை

 பிலிப் என்கின்ற மன்னனுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

ஊர்மக்களை ஓன்று திரட்டி தனது உப்பரிகை மேல்நின்று கொண்டு தங்கநாணயத்தை திரண்டு நின்று கொண்டு இருந்தமக்கள் வீது அள்ளி வீசினான்.அங்கு நின்று கொண்டு இருந்தகடைசி மனிதன் கையில் நாணயம் கிடைக்கும்வரை வீசி கொண்டே இருந்தான். அப்போது மக்கள் எல்லாம் மகிழ்ச்சி பொங்க மன்னனின் குழந்தையை வாழ்த்துவது கண்டு மனம் பூரித்தான்.

மன்னனின் அமைச்சர் ஒருவர் சொன்னார், மன்னர் ஆண் குழந்தை பிறந்த சந்தோசத்தை மக்களிடம் தங்க காசு கொடுத்து அதனை தெரிவித்து மகிழ்கிறார்,என்று சொன்னபோது மன்னன் குறுக்கிட்டு சொன்னான், இல்லை இல்லை எனக்கு ஆண் குழந்தை பிறந்ததற்காக நான் தங்ககாசு கொடுக்கவில்லை எனக்கு பாடம் நடத்தி என்னை புத்தி சாலியாக ஆக்கிய ஆசிரியர் அரிஸ்டாட்டில் இருக்கும்போது என் மகன் பிறந்து விட்டான்.

அவர் என் மகனை மிக பெரும் அறிவாளியாக இந்த உலகத்திற்கு உருவாக்கி தருவார் என்ற சந்தோசத்தில் தான் இந்த பொற் காசுகளை அள்ளி தூவுகிறேன் என்று சொல்லி மீண்டும் அள்ளி தூவினான். மன்னன் சொன்னபடி பிற்காலத்தில் மிக பெரும் அறிவாளியாக உருவெடுத்து வந்தவன் தான் பின்னாளில் பார் போற்றிய  மாவீரன் அலெக்சாண்டர்

ஒரு சிறந்த ஆசிரியரால் மட்டுமே ஒருவனை மிக சிறந்த மனிதனாக மாற்றமுடியும் என அன்றே பிலிப் மன்னன் நம்பினான்.ஆசிரியர் அரிஸ்டாட்டிலும் அவன் நம்பிக்கைக்கு பங்கம் விளைவிக்காமல் அவன் நம்பிக்கையை காப்பாற்றினார். AlwaysTeachers are Wondeful in the world. குரு அறிவுரை கேட்டு நடத்தும் வாழ்க்கை ராஜ வாழ்க்கையே........

இன்றைய செய்திகள்

24.11.2023

*தமிழகத்திற்கு டிசம்பர் இறுதி வரை தினமும் 2700 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும்; காவிரி ஒழுங்காற்று குழு.

* நீலகிரிக்கு வராதீங்க சுற்றுலா பயணிகளுக்கு கலெக்டர் வேண்டுகோள்.

* தமிழக முன்னாள் கவர்னர் பாத்திமா பீவி காலமானார்.

* ஐ ஆர் சி டி சி இணையதளம் நேற்று காலை 11 மணியிலிருந்து செயல்படவில்லை- பயணிகள் பாதிப்பு. 

*கோயம்பேடு மார்க்கெட்டில் குளிர் பதன கிடங்கை நவீனப்படுத்த திட்டம்.

*சர்வதேச பீடே செஸ் போட்டி தமிழக வீரர் ஆயூஸ் ரவிக்குமார் சாம்பியன்.

Today's Headlines

* 2700 cubic feet of water should be released daily till the end of December to Tamil Nadu;  Cauvery Management Committee.

 * Collector requests tourists not to visit Nilgiris.

 * Former Tamil Nadu Governor Fatima Bivi passed away.

 * The IRCTC website was down since 11 am yesterday - passengers affected.

 *Project for Modernization of Cold Storage in Koyambedu Market.

 * Tamil Nadu player Ayus Ravikumar is the champion of the International Pede Chess Tournament.

 Prepared by

Covai women ICT_போதிமரம்

Wednesday, November 22, 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 23.11.2023

   

கவிஞர் சுரதா

திருக்குறள் : 

பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : வெகுளாமை

குறள்:304

நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற.

விளக்கம்:

முகத்தில் சிரிப்பையும், மனத்துள் மகிழ்ச்சியையும் கொன்றுவிடும் கோபத்தை விட வேறு பகையும் உண்டோ?.


பழமொழி :

Good beginning makes a good ending

நல்ல தொடக்கம் நல்ல முடிவைத் தரும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1) என் உடன் பயிலும் மாணவ,மாணவிகளுடன் எந்த வேறுபாடும் இன்றி அன்போடு பழகுவேன்.
2) பிற மாணவர்கள் வைத்து இருக்கும் பொருள்கள் மீது ஆசை படவோ அவற்றை எடுத்துக்கொள்ளவோ மாட்டேன்.

பொன்மொழி :

வாழ்வில் நீ
வெற்றி பெறும் போதெல்லாம்
உன் முதல் தோல்வி
நினைவுக்கு வந்தால்
உன்னை யாராலும்
வெல்ல முடியாது.

பொது அறிவு :

1. இந்தியாவின் பழமையான பொது அஞ்சல் அலுவலகம் எங்கு அமைந்துள்ளது?

விடை: சென்னை

2. இந்தியாவின் முதல் 5 ஸ்டார் ஹோட்டல் எங்கு தொடங்கப்பட்டது?

விடை:  மும்பை

English words & meanings :

 Aback - surprised ஆச்சரியப்படுதல் abashment - feeling ahy வெட்கப்படுதல்

ஆரோக்ய வாழ்வு : 

செம்பருத்தி பூ : செம்பருத்தி பூ குளிர்ச்சி பொருந்தியது. சருமத்திற்கு இதமும், சுகமும் அளித்து ரத்தத்தை சுத்தம் செய்து உடலை பளபளப்பாக்கும்.

நவம்பர் 23

கவிஞர் சுரதா அவர்களின் பிறந்தநாள்


சுரதா (Suratha; 23 நவம்பர் 1921 – 29 சூன் 2006) இயற்பெயர் இராசகோபாலன் தமிழகக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். கவிஞர் பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால்‌ பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்னும் பெயரில் பல மரபுக் கவிதைத் தொகுப்புகள் தந்தவர். செய்யுள் மரபு மாறாமல் எழுதிவந்த இவர் உவமைகள் தருவதில் தனிப்புகழ் ஈட்டியவர். இதனால் இவரை உவமைக் கவிஞர் என்று சிறப்பித்துக் கூறுவர்.


சர் ஜகதீஷ் சந்திர போஸ் அவர்களின் நினைவுநாள்

சர். ஜெகதீஷ் சந்திரபோஸ்


சர் ஜகதீஷ் சந்திர போஸ் (Jagadish Chandra Bose) (1858-1937) தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையை உலகுக்கு வெளிப்படுத்திய இந்திய அறிவியலாளர்.[1] போசு வானொலி அறிவியலின் முன்னோடிகளில் ஒருவர் என ஐஇஇஇ அதிகாரப்பூர்வமாக நூறு வருடங்கள் கழித்து அறிவித்தது.[2

நீதிக்கதை

 ஒரு நாள் சுமன் என்ற மாணவன், செக்கிங்கிடம் வேணும்னா டிக்கெட்டுக்கான பணத்தை கொடுத்துடறேன் சார்” என்று கெஞ்சினான் .

“அது ஒத்து வராது தம்பி, 500 ரூபாய் பைன் கட்டு. இல்ல போலீசுக்கிட்ட ஒப்படச்சுடுவோம். என்ன சொல்ற...?

அவன் தலையைக் குனிந்து கொண்டான்.

“எந்த பள்ளிக்கூடத்துல படிக்கிற?”

பள்ளியின் பெயரைச் சொன்னான் சுமன்.

“ஏம்பா, இதைத்தான் பள்ளியில சொல்லி கொடுத்திருக்காங்களா?” செக்கிங் கோபமாகக் கேட்டார்.

அப்போது பஸ்சிலிருந்து இறங்கிய சுமனின் ஆசிரியர் வேகமாக செக்கிங்கை நோக்கி வந்தார்.

“அய்யா வணக்கமுங்க. நான் தமிழ் ஆசிரியர், வகுப்பு ஆசிரியரும் கூட. நாங்க நல்லொழுக்கத்தைத்தான் போதிக்கிறோம். பயணிக்கும் பேருந்தில் பயணச்சீட்டு வாங்க வேண்டாமென்றோ. சாப்பிடும் சிற்றுண்டிக்கு பணம் கொடுக்காதீர்கள் என்றோ போதிப்பதில்லை. உங்களிடம் மாட்டிக்கொண்ட இந்தப் பையன் ஒழுங்கீனமானவன். பள்ளிக்கு பல நாட்கள் கட்அடித்து, தகாத நண்பர்களுடன் ஊர் சுற்றித் திரிபவன். இவனுக்கு நாங்கள் கூறிய புத்திமதிகள் அனைத்தும் கடலில் பெய்த மழை போல வீணாயிற்று. இது ஆசிரியரின் குற்றமோ, பள்ளியின் குற்றமோ இல்லை. இருந்தாலும் இவன் என் மாணவன் என்பதால் இவன் செயலுக்கு வெட்கப்பட்டு, தாங்கள் கேட்கும் அபராதத்தை நானே கட்டி விடுகிறேன்” என்று கூறி தன் பர்சிலிருந்த பணத்தை எடுத்து பரிசோதகரிடம் கொடுத்தார்.

நல்லொழுக்கம் போதிக்கும் ஆசிரியருக்கும், நற்பண்புகள் வளர்க்கும் கல்விக்கூடத்துக்கும் தன்னுடைய செயலால் கெட்ட பெயர் உண்டானதற்காக மனம் வருந்தி அழுது ஆசிரியரின் கால்களில் விழுந்தான் சுமன். அன்று மாலையே தன் பெற்றவர்களிடம் நடந்ததை மறைக்காமல் கூறி அவர்களிடம் தன் செயலுக்காக மன்னிப்பு கேட்டான். அத்துடன் நிற்காமல் தன் தந்தையை விட்டே தமிழ் ஆசிரியர்  அபராதமாகச் செலுத்திய 500 ரூபாய் பணத்தையும் திருப்பிக் கொடுக்கச் செய்தான். இப்போது பஸ்சில் ஏறிய உடனே முதல் ஆளாக டிக்கெட் எடுப்பதுடன், படியில் நின்று பயணிப்பதையும் விட்டு விட்டான் சுமன்.

இன்றைய செய்திகள்

23.11.2023

*ஐ.என். எஸ் இம்பால் போர் கப்பலின் பரிசோதனை வெற்றி; இந்திய கடற்படை.


*ஆவின் பச்சை நிற பாலுக்கு பதிலாக ஊதா நிற டிலைட் பாலை முன்னிலைப்படுத்தி வருகிறோம்.–
அமைச்சர் மனோ தங்கராஜ்.

*குரூப் 2 தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. பிப்ரவரி 25ம் தேதி நடைபெற்ற குரூப் 2 பணிகளுக்கான முதன்மை தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியிடப்படும்.

*சென்னை: அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.929.37 கோடியில் 230 அடிப்படை வசதி திட்டங்களை செயல்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

*கேரள கிரிக்கெட் அணியின் தூதராக நடிகை கீர்த்தி சுரேஷ் நியமனம்.

*ஐசிசி ஒருநாள் தரவரிசை; பேட்ஸ்மேன் வரிசையில் 
சுப்மன் கில் தொடர்ந்து முதலிடம்.....விராத் கோலி முன்னேற்றம்!

Today's Headlines

* I.N. S Imphal warship Trial success ;  Indian Navy.

 *Instead of green milk we are highlighting Blue Delight milk.-
 Minister Mano Thangaraj.

 *TNPSC has announced that Group 2 exam results will be published in December.  The results of the main examination for Group 2 posts held on February 25 will be published in December.

 *Chennai: Chief Minister M. K. Stalin has ordered the implementation of 230 basic facilities projects at Rs 929.37 crore under the Amruth 2.0 project.

 *Actress Keerthy Suresh appointed as ambassador of Kerala cricket team.

 *ICC ODI Rankings;  In the batsman's line-up
 Subman Gill continues to top.....Virat Kohli's progress!
 Prepared by

Covai women ICT_போதிமரம்