Wednesday, September 20, 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 21.09.2023

  

சம இரவு நாள் 


திருக்குறள் : 

பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : தவம்

குறள் :264

ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும்.

விளக்கம்:

பகைவர்களை மாற்றவும், நண்பர்களைப் பெருக்கவும் எண்ணினால், தவத்தால் அதைச் செய்ய முடியும்.

பழமொழி :

Dead men tell no tales

குள்ள நரி தின்ற கோழி கூவுமா?

இரண்டொழுக்க பண்புகள் :

1. எனது நோட்டில் உள்ள காகிதம் அல்லது பேப்பர் கிழிக்க மாட்டேன்.

2 காகிதம் கிழித்தால் எனது இருப்பிடம் அசுத்தம் ஆவது மட்டும் அல்ல மரங்களை அழிக்கவும் அது மறைமுகமாக ஏதுவாகி விடும்.

பொன்மொழி :

எங்கே விழுந்தாய் என்று பார்க்க வேண்டியதில்லை, எங்கே வழுக்கியது என்று தான் பார்க்க வேண்டும் தந்தை பெரியார் 

பொது அறிவு :

1. உலகின் மிகப்பெரிய எரிமலைகளில் ஒன்றான லஸ்கார் எந்த நாட்டில் உள்ளது?

விடை: சிலி 

2. உலகின் மிக நீளமான மலை எது?

விடை: அந்தீஸ் மலை

English words & meanings :

 Gloria - the song praising God இறை புகழ் பாடல்: Hest- order கட்டளை

ஆரோக்ய வாழ்வு : 

கொண்டைக்கடலை : சுண்டல் எனப்படும் கொண்டைக் கடலை இரத்த கட்டுப்பாட்டு நன்மைகளை கொண்டுள்ளது. நம்மில் பலருக்கு உயர் ரத்த அழுத்தம் பிரச்சனை இருக்கிறது. உயர் ரத்த அழுத்தத்தை தினசரி போதுமான அளவில் பொட்டாசியம் உட்கொள்வதன் மூலம் நிர்வகிக்க முடியும். 

செப்டம்பர் 21

சம இரவு நாள்

சம இரவு நாள்(Equinox) என்பது சூரியன் நிலநடுக்கோட்டினை கடந்து செல்லும் நாளாகும். ஆண்டுக்கு இருமுறை சூரியன் இவ்வாறு நிலநடுக்கோட்டினைக் கடப்பது நிகழும். சம இரவு நாள் இவற்றில் எந்தவொரு நாளையும் குறிக்கும். இந்நாட்களில் இரவும் பகலும் ஒரே அளவாக (ஏறத்தாழ 12 மணி நேரம்) இருக்கும். இலத்தீனில் ஈக்வீநாக்சு என வழங்கப்படுகிறது. ஈக்வீ(equi) எனபது சமம் என்றும் நாக்சு(nox) என்பது இரவு என்றும் பொருள்படும். சம இரவு நாட்கள் என்று நிகழும் என்பது நிலநடுக்கோட்டிலிருந்து எத்தனை தொலைவு தள்ளி அளக்கப்படுகிறது என்பதைப் பொறுத்தது. சாதாரணமாக மார்ச் 20 அன்றும் செப்டம்பர் 21அன்றும் இவை நிகழும். இந்த வருடம் செப்டம்பர் 23 ஆம் தேதி சம இரவு நாள் ஆகும்.

உலக அமைதி நாள்

உலக அமைதி நாள் (International Day of Peaceஐக்கிய நாடுகளின் பொது அவையின் பிரகடனத்தின் மூலம் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 21-ஆம் நாளில் அனைத்து ஐநா உறுப்பு நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.[1]. இந்நாள் முன்னர் 1981-இல் இருந்து ஓவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் வரும் மூன்றாம் செவ்வாய்க்கிழமையிலேயே கொண்டாடப்பட்டு வந்தது.[2] ஆனாலும் 2002-இல் இருந்து ஆண்டுதோறும் செப்டம்பர் 21-இல் கொண்டாடப்படுகிறது

நீதிக்கதை

 ஒரு காட்டு பகுதியில ஒரு பெரிய மரம் இருந்துச்சு.அந்த மரத்துல நிறைய பறவைகள் கூடு கட்டி வாழ்ந்துகிட்டு வந்துச்சுங்க . அந்த பறவைங்க எப்பவும் தங்களோட கூட்ட பாதுகாப்பா வச்சிக்கிட்டே இருக்கும். பிஞ்சிபோனா கூட திரும்பி கட்டுறது , பழைய கூட்ட பாதுகாப்பான கிளைக்கு மாத்துறதுனு எப்பவும் சுறுசுறுப்பா இருக்கும். ஒருநாள் மழைக்காலம் தொடங்குச்சு அன்னைக்கு காட்டுல பெரிய மழை பெய்ய ஆரம்பிச்சுச்சு

தங்களோட கூட்ட பாதுகாப்பா கட்டியிருந்த பறவைகள் எல்லாம் பாதுகாப்பா அதுக்குள்ள இருந்துச்சுங்க

அப்ப பக்கத்துல வாழ்ந்துகிட்டு வந்த குரங்குகள் கூட்டம் மழைக்கு அந்த மரத்தோட அடியில ஒதுங்குச்சுங்க அப்ப புறா சொல்லுச்சு குரங்குகளே குரங்குகளே நீங்களும் எங்களை மாதிரி கூடு கட்டி வச்சிருந்தா இப்படி குளிர்ல நடுங்க அவசியம் வந்திருக்காதேன்னு கேட்டுச்சு

உடனே குருவி சொல்லுச்சு எங்களுக்கு உங்களை மாதிரி கைகள் இல்லை இருந்தாலும் பாதுகாப்பான கூடு கட்டியிருக்கோம்னு சொல்லுச்சு.

மழை விட்டதும் எல்லா குரங்குகளும் மரத்துமேல ஏறி அங்க இருந்த கூட்ட எல்லாத்தையும் பிச்சி பிச்சி போட்டுடுச்சுங்க

கூடுகளை இழந்த பறவைகள் ரொம்ப வறுத்த பட்டுச்சுங்க , அப்பத்தான் வயசான புறா ஒன்னு சொல்லுச்சு ,பறவைகளே நீங்க யாருக்கு யோசனை சொல்லணும்னு முதல்ல தெரிஞ்சிக்கிடனும்

எப்பவும் நம்ம யோசனையை கேட்டு புரிஞ்சிக்கிடறவாங்க கிட்டயும் , நாம சொல்ற யோசனை என்னனு தெரிஞ்சிக்கின்ற புத்திசாலிங்க கிட்டையும்தான் யோசனை சொல்லணும்னு சொன்னது. இப்ப பாருங்க நீங்க நல்லதுதான் சொல்லறீங்கன்னு புரிஞ்சிக்க முடியாத குரங்குகள் தங்களோட முட்டாள் தனத்தை நம்மகிட்ட காட்டிடுச்சுங்க ,அதனால இனிமே தேவை இல்லாம யோசனை சொல்றதுக்கு முன்னாடி யோசிங்கனு சொல்லுச்சு

இத கேட்ட பறவைகள் எல்லாம் தங்களோட தவறை நினச்சு வருத்தப்பட்டுச்சுங்க

இன்றைய செய்திகள்

21.09.2023

*ஆந்திர பிரதேச மாநிலத்தின் புதிய தலைநகர் விசாகப்பட்டினம் - ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு.

 *33 சதவிகித இட ஒதுக்கீட்டால் புதுவை சட்டசபையில் 11 பெண் எம்.எல்.ஏ.க்கள் இடம் பெறுவர் - கவர்னர் தமிழிசை தகவல்.

*தமிழக சட்டசபை அக்டோபர் 9ஆம் தேதி கூடுகிறது - சபாநாயகர் அறிவிப்பு.

*இரண்டு நாட்களில் புதிய பணிகளை தொடங்கும் "சந்திரயான் -3" : விஞ்ஞானிகள் எதிர்பார்ப்பு.

* உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி - அறிமுக போட்டியில் வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை  நிஸ்செல்.

*அங்கீகாரம் பெற்ற சங்கம் வழங்கும் சான்றிதழுக்கே விளையாட்டு ஒதுக்கீட்டில் வேலை வாய்ப்பு - எஸ்.டி.ஏ.டி. தகவல்.

Today's Headlines

*New capital of Andhra Pradesh state Visakhapatnam - Jaganmohan Reddy announced.

  * 11 women MLAs will get seat in Puduvai Assembly due to 33 percent seat reservation - Governor Tamilisai informs.

 *Tamil Assembly meets on October 9th - Speaker's announcement.

 * "Chandrayaan-3" to start new missions in two days : Expectations of scientists.

 * India's Nissel won silver in World Cup Shooting's introductory game

 *Employment in sports quota will be given only on  certificates issued by the recognized association - S.D.A.T.  Information.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Tuesday, September 19, 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 20.09.2023


நவுரு தீவு




திருக்குறள் : 

பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : தவம்

குறள் :263

துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
மற்றை யவர்கள் தவம்.

விளக்கம்:

துறவு மேற்கொண்டவர்களுக்கு உதவ எண்ணி, மற்றவர்கள் தவம் செய்வதை மறந்து இருப்பார்கள் 

பழமொழி :

The proof of the pudding is in the eating

அப்பம் வெந்தது பிட்டுப் பார்த்தால் தெரியும்

இரண்டொழுக்க பண்புகள் :

1. எனது நோட்டில் உள்ள காகிதம் அல்லது பேப்பர் கிழிக்க மாட்டேன்.

2 காகிதம் கிழித்தால் எனது இருப்பிடம் அசுத்தம் ஆவது மட்டும் அல்ல மரங்களை அழிக்கவும் அது மறைமுகமாக ஏதுவாகி விடும்.

பொன்மொழி :

தீண்டாமை ஓழிய வேண்டுமானால் சாதி ஓழிய வேண்டும். மதம், மனிதனை மிருகமாக்கும், சாதி மனிதனைச் சாக்கடையாக்கும். தந்தை பெரியார் 

பொது அறிவு :

1.உலகிலேயே மிகப்பெரிய நன்னீர் ஏரி எது?

விடை: சுப்பீரியர் ஏரி

2. உலகிலேயே மிகச்சிறிய தீவாக உள்ள நாடு எது?

விடை: நவுரு தீவு 

English words & meanings :

 panegyric -புகழுரை: disasters - பேரழிவு

ஆரோக்ய வாழ்வு : 

கொண்டைக்கடலை: இறைச்சிக்கு ஒரு அருமையான மாற்றாக கொண்டைக் கடலை உள்ளது. ஒரு கப் கொண்டைக் கடலையானது வயது வந்தவர்களின் புரத தேவையில் மூன்றில் ஒரு பங்கை அளிக்கும் திறனை கொண்டுள்ளது.

நீதிக்கதை

ஓர் ஊரில் நல்லரசன் என்பவன் வாழ்ந்து வந்தான். அவன் பெயருக்கு தகுந்தார் போல் நற்குணங்கள் பெற்றவனாக இருந்தான். ஏழை எளியவர்களிடம் அன்பு காட்டும் குணமும் மற்றவர்களுக்கு உதவும் உயர்ந்த மனப்பான்மையும் அவனிடம் இருந்தன. அந்த ஊரில் வசதியாக வாழ்ந்து வந்த சிலர் நல்லரசனின் செல்வாக்கு கண்டு அவர் மீது பொறாமை கொண்டனர். 

அவர் புகழை கெடுப்பதற்கு தங்களால் முயன்ற முயற்சிகளை எல்லாம் செய்தார்கள். ஆனால், அவர்களுடைய முயற்சிகள் யாவும் தோல்வியிலே முடிந்தன. பணக்காரர்கள் ஆகிய தங்கவேலும், கருப்பு சாமியும் இதனால் மனம் புழுங்கினர்.ஏதேனும் ஒரு செயல் செய்து நல்லரசனை அவமானப்படுத்த வேண்டும் என்று துடியாய் துடித்தனர். அந்த பணக்காரர்களுக்கு நல்லரசன் எந்த தீங்குமே செய்யவில்லை. ஆனால், கோயில் திருவிழாவாக இருந்தாலும், வேறு பொது செயல்களாக இருந்தாலும் அந்த நல்லரசனுக்கே அனைவரும் முதல் மரியாதை கொடுத்தார்கள். இதைத்தான் அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எப்படியாவது அந்த நல்லரசனை பழிவாங்க வேண்டும் என்று கங்கணம் கட்டி அவர்கள் அந்த ஊரில் வசித்து வந்தனர். முனியாண்டி என்பவனை அழைத்து பேசினார்கள். அந்த முனியாண்டிக்கு ஊர் மக்களிடம் நல்ல பெயர் இருந்தது. அவனை பகடைக்காயாய் பயன்படுத்தி அந்த நல்லரசனை வீழ்த்தி விடலாம் என்று அவர்கள் எண்ணினார்கள்அவனுக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும். அதற்கு தான் உன்னுடைய உதவி தேவை என்றனர். மேலும் அவர்கள் தங்களுடைய சதி திட்டத்தை அவனிடம் விளக்கி கூறினார்கள். “எங்களுடைய மூன்று லட்சம் ரூபாய் பணத்தை எப்படியாவது அந்த நல்லரசனின் வீட்டில் நீ வைக்க வேண்டும். போலீஸிடம் புகார்

கொடுத்து அவனை கைது செய்கிறோம். அவன் மூன்று லட்சம் ரூபாயை திருடியதற்கு நீ பொய் சாட்சி சொன்னால் போதும். மற்ற விஷயங்களை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்” என்று தங்கவேலும் கருப்புசாமியும் முனியாண்டியிடம் கூறினார்கள்.

முனியாண்டி அவர்களை பார்த்து நீங்கள் சொல்வது போலவே செய்கிறேன் என்று கூறிவிட்டான். தங்கவேலும் கருப்புசாமியும் இதை கேட்டு மகிழ்ந்தார்கள். இந்த சதி திட்டம் அவர்களின் எண்ணம் போலவே நடந்தது. தங்கள் பணம் மூன்று லட்சம் திருடு போய்விட்டதாக அந்த இருவரும் போலீசாரிம் புகார் கொடுத்தார்கள்.இந்த சதி திட்டம் அவர்களின் எண்ணம் போலவே நடந்தது. 

உங்களுக்கு யார் மீது சந்தேகம் இருக்கிறதா என்று அவர்கள் கேட்டதற்கு உடனே முனியாண்டியை அழைத்து போய் காவல் நிலையத்தில் அந்த இருவரும் ஒப்படைத்தனர். அவன் காவல்துறை அதிகாரியிடம், “இந்த ஊரில் நல்லரசன் என்று ஒருவன் இருக்கிறான்.நேற்று இரவு இவர்களுடைய வீட்டில் இருந்து பணத்தை திருடி கொண்டு வேகமாக போனது என் கண்களாலே பார்த்தேன். நீங்கள் அவனை விசாரித்தால் எல்லாம் உண்மைகளும் தெரிந்து விடும்” என்று அவன் கூசாமல் பொய் சாட்சி சொன்னான்.அவர்கள் நல்லரசனை பார்த்து, “இந்த பணம் உங்கள் வீட்டில் எப்படி வந்தது?” என்று கேட்டார்கள். நல்லரசன் நிதானத்தை இழக்காமல், “சார், இந்த பணம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இது எப்படி இங்கே வந்தது என்பதும் எனக்கு தெரியாது. இதுல ஏதோ சதி திட்டம் இருக்கிறது.அந்த முனியாண்டியை நீங்கள் கண்காணித்தால் உங்களுக்கு விஷயம் தெரிந்து விடும். உங்களோடு விசாரணைக்கு நான் முழு ஒத்துழைப்பு கொடுக்கிறேன்” என்றான். ஊர் மக்களின் நன்மதிப்புக்குரியவன் வல்லரசன் என்பதால் அவனுக்கு மதிப்பு கொடுத்து காவல் அதிகாரிகள் முனியாண்டியின் வீட்டுக்கு சென்று சோதனை இட்டனர்.

அவன் வீட்டிலிருந்து சில ரூபாய் கட்டுகளை காவல்துறையினர் கைப்பற்றினார்கள். அந்த கட்டுகளை சோதித்ததில் அவை அனைத்துமே கள்ள நோட்டுகள் என்பது தெரிந்தது. முனியாண்டி சிறையில் அடைக்கப்பட்டான். கள்ள நோட்டு வழக்கில் அவன் பெயரை சேர்த்தார்கள். அதை அறிந்த முனியாண்டி, காவல் அதிகாரியை பார்த்து, “சார், எனக்கு அது போல் புத்தி எல்லாம் கிடையாது. பணத்துக்கு ஆசைப்பட்டு உத்தமரான நல்லரசனுக்கு எதிராக பொய் சாட்சி கூறினேன். 

அதுக்கு கடவுள் எனக்கு சரியான தண்டனை கொடுத்துவிட்டார். தங்கவேலும், கருப்புசாமியும் இருவரும்  தான் என்னை இவ்வாறு செய்ய சொன்னார்கள். மற்றபடி கள்ள நோட்டுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது” என்று எல்லா உண்மையும் கூறிவிட்டான்.உடனே காவல்துறை அதிகாரிகள் தங்கவேலு மற்றும் கருப்பசாமியையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிகழ்ச்சியின் மூலம் நல்லரசன் மீது மக்களுக்கு இருந்த நன்மதிப்பு மேலும் கூடியது.


நீதி : யார் மீதும் எப்பொழுதும் பொய்சாட்சி சொல்ல கூடாது. அது ஒரு நாள் வெளிப்பட்டு பொய் சாட்சி கூறியவரையே தண்டனைக்கு உட்படுத்தி விடும். எனவே, அனைவரும் மனசாட்சிக்கு உட்பட்டு நல்லவர்களாக வாழ வேண்டு்ம்.

இன்றைய செய்திகள்

20.09.2023

*பருவமழை முன்னேற்பாடு ஆலோசனை: மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். - மு க ஸ்டாலின் உத்தரவு.

*2024 ஆம் ஆண்டிற்கான நீட் தேர்வு மே மாதம் 5ஆம் தேதி நடத்தப்படும்.
ஜே. இ. இ. முதல் தேர்வு ஜனவரி மாதம் 24 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 1ஆம் தேதி வரை நடைபெறும். ஜே. இ. இ.  2 ஆம் தேர்வு ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கி 15ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

*பழைய பாராளுமன்ற கட்டிடத்தை  'சம்விதன் சதன்' என அழைக்க வேண்டும்- பிரதமர் மோடி பரிந்துரை.

*மக்களவையில் 33% மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல்.

*ஐசிசி ஒரு நாள் தரவரிசை மீண்டும் முதலிடம் பிடித்தது பாகிஸ்தான்.

* ஆசிய விளையாட்டு கைப்பந்து:  இந்தியா- கம்போடியா இடையிலான வாலிபால் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.


Today's Headlines

*Monsoon rain precautions in advance - discussions : Rainwater drainage works should be completed quickly.  -
  CM M.K.Stalin's order.

 *The NEET exam for 2024 will be held on 5th May. J.E.E The first exam will be held from 24th January to 1st February.
 J.E.E 2nd exam will be starting from April 1St and ends on 15th. 

 * Old Parliament building should be called 'Samvithan Sadan' - PM Modi suggests.

 * 33% reservation bill for women was passed today .

 *Pakistan regain top spot in ICC ODI rankings

 * Asian cup Volleyball: India beat Cambodia.
 Prepared by

Covai women ICT_போதிமரம்


Monday, September 18, 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.09.23

  

சுனிதா வில்லியம்ஸ்

திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : தவம்

குறள் :262

தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை
அஃதிலார் மேற்கொள் வது.

விளக்கம்:

தவம் செய்வது தவம் செய்ய வல்லவருக்கு மட்டுமே இயலும் மற்றவர் முயற்சிப்பது பயன் தராது.

பழமொழி :

Cut your coat according to your cloth

வரவுக்குத் தக்க செலவு செய்

இரண்டொழுக்க பண்புகள் :

1. எனது நோட்டில் உள்ள காகிதம் அல்லது பேப்பர் கிழிக்க மாட்டேன்.

2 காகிதம் கிழித்தால் எனது இருப்பிடம் அசுத்தம் ஆவது மட்டும் அல்ல மரங்களை அழிக்கவும் அது மறைமுகமாக ஏதுவாகி விடும்.

பொன்மொழி :

மற்றவர்களிடம் பழகும் வித்தையையும், ஒழுக்கத்தையும் சிறு வயதிலேயே ஒருவன் கற்றுக்கொண்டானானால் அவனே வாழ்க்கையில் பெரிய மனிதன். தந்தை பெரியார் 

பொது அறிவு :

1. உலகிலேயே  ஆழமான ஆழி எது?

விடை: மரியானா ஆழி

2.உலகில் மிகப்பெரிய மலர் இனம் எது?

விடை: ரப்லேசியா அர்னால்டி

English words & meanings :

 revitalize -restore strength புத்துயிர் ஊட்டு. aggression -violent behaviour வலுச்சண்டைக்குப் போதல்

ஆரோக்ய வாழ்வு : 

கொண்டைக்கடலை:சாதாரணமாக இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு உணவாக கொண்டைக் கடலை உள்ளது. அதனால் அதிகப்பட்சமான மக்கள் கொண்டை கடலையை சுவைத்திருப்போம். கார்பன்சோ பீன்ஸ் என அழைக்கப்படும் கொண்டைக் கடலை புரதம், வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து ஆகியவற்றை மிகுதியாக கொண்டுள்ளது.

செப்டம்பர் 19

சுனிதா வில்லியம்ஸ் அவர்களின் பிறந்தநாள்

சுனிதா வில்லியம்ஸ் (பிறப்பு: செப்டம்பர் 191965) ஒரு அமெரிக்க விண்வெளி வீராங்கனையும் கப்பல்படை அதிகாரியும் ஆவார்[1]. இவர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 14ம் விண்வெளிப் பயணத்திற்கு உறுப்பினராக்கப்பட்டார், பின் அவர் 15ம் விண்வெளி பயணத்தில் இணைந்தார். விண்வெளியில் பயணம் செய்த பெண்களில் அதிக நேரம் விண்வெளியில் பயணம் செய்த சாதனையை (195 நாட்கள்) அவர் கொண்டிருக்கிறார்.

நீதிக்கதை

பழனியாண்டிக்கு சொந்தமாக வயல் ஒன்று இருந்தது. மற்றவர்கள் எல்லாம் வயலில் உழுகின்ற நேரம் பழனியாண்டி தன் வயலைப் பற்றி எந்த எண்ணமும் இல்லாமல் சும்மாவேயிருந்தான். இதனைக் கவனித்த பழனியாண்டியின் மனைவி வயலில் ஏர்கலப்பை பூட்டி உழும்படி கூறினாள். பழனியாண்டி அதனை ஒரு காதில் வாங்கி மறுகாதில் விட்டு விட்டான் . மற்ற விவசாயிகள் எல்லாம் வயலில் நீர் பாய்ச்சி விவசாய வேலையை ஆரம்பித்தார்கள். அதனைக் கண்ட பழனியாண்டி நமது வயலில் பின்னர் விவசாயம் செய்து கொள்ளலாம் என்று சும்மாவே இருந்து விட்டான்.அதனைக் கண்டு பழனியாண்டியின் மனைவிக்கு ஆத்திரமாக வந்தது. பழனியாண்டியை விவசாயம் செய்யும்படி வற்புறுத்தினாள்.சோம்பேறியான பழனியாண்டி அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று சும்மாவே இருந்துவிட்டான். பழனியாண்டியின் வீட்டிலிருந்த அரிசி மூட்டையில் உள்ள அரிசியெல்லாம் காலியாகத் தொடங்க, அவன் சாப்பாட்டிற்கு அரிசி வாங்க பணம் இல்லாமல் திண்டாடினான்.

அறுவடை காலம் நெருங்கியதும் மற்ற விவசாயிகள் தங்கள் வயலில் விளைந்த நெற்கதிர்களை அறுத்து, நெற்குவியல்களை மூட்டை மூட்டையாக எடுத்துச் சென்றார்கள்.அதனைப் பார்த்து பழனியாண்டியால் பொறாமைப் படத்தான் முடிந்தது. குறித்த காலத்தில் விவசாயம் செய்து முடிக்காததால் தன் குடும்பம இன்று வறுமையில் வாடுகிறதே என்று கவலையடைந்தான்.

இனிமேல் எந்த வேலையையும் காலம் பார்த்து செய்ய வேண்டுமென்று தன்னைத் திருத்திக் கொண்டான்.

நீதி:

பருவம் பார்த்து பயிர் செய்வதுபோல் எந்தச் செயலையும் காலம் பார்த்து உடனுக்குடன் செய்து முடிக்க வேண்டும்.

இன்றைய செய்திகள்

19.09.2023

*விடை பெற்றது பாராளுமன்ற பழைய கட்டிடம். புதிய கட்டிடத்தில் இன்று கோலாகல விழா.

*காலாண்டு தேர்வு இன்று தொடக்கம்: பொதுவான ஒரே வினாத்தாள் முறை மீண்டும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

*நிபா வைரஸ்: கடந்த இரண்டு நாட்கள் பாசிட்டிவ் இல்லை. கேரள மாநில சுகாதாரத்துறை மந்திரி.

*திருப்பதி ரூ. 650 கோடியில் ஆறு கிலோமீட்டர் நீள மேம்பாலம் திறப்பு:
பஸ் நிலையத்தில் இருந்து மலையடிவாரம் வரை எளிதில் செல்லலாம்.

*கரீபியன் பிரீமியர் லீக்: ஒரே ஓவரில் 32 ரன்கள் குவித்த 
சாய்ஹோப்.

*21 ரன்னுக்கு ஆறு விக்கெட் ஒரே போட்டியில் பல சாதனைகளைப் படைத்த சிராஜ்.

Today's Headlines

*Valediction was given to Parliament Old Building. Grand ceremony  will  be there in the new building,Today.

 *Quarterly Exam Starts Today: Common Single Question Paper System is being implemented again.

 * Nipah virus: No positive for last two days.  Kerala State Health Minister.

 * Reopen of Rs.  650 crore  six kilometer long flyover in Tirupathi:
Will have easy access from the bus station to the foothills.

 *Caribbean Premier League: Scored 32 runs in one over
 Saihope.

 * Six wickets in 21 runs , player Siraj who set many records in one match today.
 Prepared by

Covai women ICT_போதிமரம்