Sunday, January 25, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 26.01.2026




 






திருக்குறள்: 

பால் :அறத்துப்பால் 

இயல்:இல்லறவியல் 

அதிகாரம்: நடுவுநிலைமை

குறள் : 112

செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப்பு உடைத்து. 

பொருள்:
நீதியை உடையவனின் செல்வம் அழியாமல் அவன் வழியினர்க்குப் பாதுகாப்பாக இருக்கும்.

பழமொழி :

A calm mind solves difficult problems. 

அமைதியான மனம் கடினமான பிரச்சனைகளையும் தீர்க்கும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. கண்காணிக்க எவரும் இல்லாத போதும் கடைபிடிக்கப்படும் நேர்மையே உண்மையான ஒழுக்கம்.
2. எனவே எப்பொழுதும் ஒழுக்கத்தை கடைபிடிப்பேன்.

பொன்மொழி : 

முதலில் சிறந்த புத்தகங்களை படியுங்கள் இல்லையெனில் அவற்றைப் படிக்க உங்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகலாம் - ஹென்றி டேவிட் தோரோ

பொது அறிவு : 

01.நமது நாட்டின் 2026 குடியரசு தின அணிவகுப்புக்கான கருப்பொருள் என்ன?

" வந்தே பாரதத்தின் 150 ஆண்டுகள்"
150 Years of Vande Mataram.”

02. 2026 குடியரசு தின அணிவகுப்பில் தமிழகத்தின் சார்பில் எந்த கருப்பொருளை கொண்டு அலங்கார ஊர்தி இடம்பெறவுள்ளது?

"வளமையின் மந்திரம்: தற்சார்பு இந்தியா'
Mantra of Prosperity: Self-Reliant India

English words :

pass down -transfer tradition to the next generation

tormenting -torturing

தமிழ் இலக்கணம்: 

 சில எண்களின் பெயரை தமிழில் எழுதும் போது நாம் பேச்சு வழக்கில் தவறாக எழுதி விடுகிறோம். அவற்றை எவ்வாறு எழுத வேண்டும் என்று பார்ப்போம்
23 –இருபத்தி மூன்று 
34 –முப்பத்தி நான்கு
56 –ஐம்பத்தி ஆறு
மேல் கூறிய மூன்றும் தவறு.
இருபத்தி, முப்பத்தி, ஐம்பத்தி என்பவைகள் முறையே இரு பத்திகள், மூன்று பத்திகள், ஐந்து பத்திகள் என்று பிரிந்து வேறு பொருள் தந்து விடும். ஆனால் 
இருபத்து, முப்பத்து, ஐம்பத்து என்று எழுதும் போது இரு பத்துகள், மூன்று பத்துகள், ஐந்து பத்துகள் என்று பிரிந்து சரியான பொருள் தரும்.
இனி 
இருபத்து மூன்று 
முப்பத்து நான்கு என்று பிழையில்லாமல் எழுதுவீர்கள் தானே?
        தொடரும்

ஜனவரி 26

இந்தியக் குடியரசு நாள் 

* 1930ஆம் ஆண்டு இந்திய விடுதலை இயக்கத்தினர் பூர்ண சுவராஜ் என்ற விடுதலை அறைகூவலை நினைவுகூர சனவரி 26ஆம் நாள் விடுதலை நாளாக காந்தியடிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டது. அன்றைய நாளில் நகர்ப்புறங்களிலும் சிற்றூர்களிலும் உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் கூட்டி, காந்தியடிகள் கீழே கண்டவாறு பரிந்துரைத்த விடுதலை நாள் உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்

"பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம், ஆன்மீகம் ஆகிய நான்கு விதத்திலும் நமது தாய் நாட்டிற்குக் கேடு விளைவித்துவரும் ஓர் அரசாட்சிக்கு அடங்கி நடப்பது, மனிதனுக்கும் இறைவனுக்கும் செய்யும் துரோகம்."

    * 12ஆம் நாள் டிசம்பர் மாதம் 1946 ஆண்டு ஒரு நிரந்தர அரசியலமைப்பை உருவாக்குவதற்கான வரைவுக் குழு உருவாக்கி அதன் தலைவராக பி ஆர் அம்பேத்கர் நியமிக்கப்பட்டார். அந்தக் குழு ஒரு வரைவு அரசியலமைப்பினை 1947 நவம்பர் 4ஆம் நாள் அரசியலமைப்பு சட்டவரைவை மக்களவையில் சமர்ப்பித்தது.

     * 2 ஆண்டுகள், 11 மாதங்கள், 18 நாட்கள் எழுதி முடிக்கப்பட்டது.பொது திறந்த அமர்வுகளில், சந்தித்து அரசியலமைப்பின் ஏற்புக்கு முன்னதாக பல விவாதங்கள் நடைபெற்றன. கடைசியாக சனவரி 24ஆம் நாள் 1950 ஆம் ஆண்டு 308 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுடன் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் கையால் எழுதப்பட்ட நிரந்தர அரசியலமைப்பு கையெழுத்திடப்பட்டது.

     * அதன் பிறகு இரண்டு நாட்கள் கழித்து, 1950ஆம் ஆண்டில் சனவரி 26ஆம் நாளை, மக்களாட்சி மலர்ந்த தினமாகக் கொண்டாட நேரு அமைச்சரவை முடிவு செய்து அறிவித்து செயல்படுத்தியது. 1950 முதல் இது குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது

நீதிக்கதை

 நல்லதே செய்


ஒரு பெரிய முதலாளியிடம் பல அடிமைகள் வேலை செய்து வந்தனர். அவர்கள் பல வகையிலும் கொடுமைப் படுத்தப்பட்டு வந்தனர். துன்பத்திற்குள்ளான அவர்களில் ஒருவன் முதலாளியிடமிருந்து எப்படியோ தப்பி காட்டிற்குள் ஓடி விட்டான். 


அவன் காட்டில் ஒளிந்து திரிந்துக் கொண்டிருக்கும்போது ஒரு சிங்கம் நொண்டிக் கொண்டே அவன் அருகில் வந்தது. அது மிகுந்த வலியால் துடிப்பதை அடிமை பார்த்தான். அவன் சிறிதும் பயம் இல்லாமல் அதன் காலைத் தூக்கிப் பார்த்தான். அதன் பாதத்தில் ஒரு பெரிய முள் தைத்திருந்ததைப் பார்த்தான். சிங்கத்தின் காலில் தைத்திருந்த முள்ளை மிகவும் சிரமப்பட்டுப் பிடுங்கி எறிந்தான். அதன் காலை தடவிக் கொடுத்தான். சிங்கமானது ஆபத்தில் தனக்கு உதவிய அந்த மனிதனை நன்றியுணர்வுடன் பார்த்துவிட்டு வலி நீங்கி மகிழ்ச்சியுடன் சென்றது. 


காட்டில் அவன் இருப்பதை அறிந்த அந்த அடிமை மனிதனை முதலாளியின் ஆட்கள் பிடித்துச் சென்றனர். அந்தக் காலத்தில் தப்பியோடும் அடிமைகளுக்கு மரண தண்டனை அளிப்பது வழக்கம். அதன்படி ஒரு கூண்டிற்குள் ஒரு சிங்கத்தை அடைத்து அச்சிங்கத்தைப் பல நாட்கள் பட்டினி போட்டு வைத்து அந்த அடிமை மனிதனை அக்கூண்டிற்குள் தள்ளிவிட்டு சிங்கத்தை ஏவி விடுவர். அவ்வாறு இந்த அடிமையையும் சிங்கம் இருக்கும் கூண்டிற்குள் தள்ளிவிட்டனர். பசியோடு இருந்த அந்த சிங்கம் அந்த அடிமையை நோக்கிப் பாய்ந்து வந்தது. அவன் அருகில் வந்ததும், அந்த மனிதன் தன் காலில் முள் தைத்து அவதிப்பட்டபோது உதவியவன் என்பதை அடையாளம் கண்டு கொண்டது. மிகவும் பணிவுடன் அவன் அருகில் வந்து வாலை ஆட்டிக் கொண்டு இருந்தது. அடிமை, சிங்கத்தைத் தடவிக் கொடுத்தான். 


இந்தக் காட்சியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அரசனும், பொதுமக்களும் மிகுந்த ஆச்சரியம் அடைந்தனர். அரசன், அடிமை மனிதனிடம் விபரங்களைக் கேட்டறிந்தான். அடிமை மனிதன் சொன்ன செய்தியைக் கேட்டு அறிந்த அரசன் அடிமையை விடுதலை செய்தான். நன்றியுணர்வு மிக்க சிங்கத்தைக் காட்டில் கொண்டுபோய் விடச் செய்தான். 


நீதி :

நமக்கு நன்மை செய்தவனுக்கு நாம் நன்றி மறவாமல் நடக்க வேண்டும்.

இன்றைய செய்திகள்

26.01.2026

⭐குடியரசு தினத்தை முன்னிட்டு 44 காவல்துறை அதிகாரிகள்-பணியாளர்களுக்கு பதக்கங்கள்: முதலமைச்சர் ஆணை.

⭐தமிழக முதலமைச்சரின் மெச்சத்தக்க நுண்ணறிவுப் பதக்கம் மற்றும் மெச்சத்தக்க சிறப்பு செயலாக்கப் பதக்கம்' வழங்க மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

⭐பத்ம விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், 2026ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள்  அறிவிக்கப்பட்டுள்ளது

⭐அமெரிக்காவை முடக்கிய பனிப்புயல்- 13 ஆயிரம் விமானங்கள் ரத்து.
* பனிப்புயலால் 15 மாகாணங்களில் அவசரநிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.
பனிப்புயலால் சுமார் 14 கோடி மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀U19 உலகக் கோப்பை: நியூசிலாந்தை வீழ்த்தி சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா

🏀 ஆசிய கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு.

Today's Headlines

⭐Chief Minister ordered Medals to 44 police officers and personnel on the occasion of Republic Day

⭐ MK Stalin has ordered to award the Tamil Nadu Chief Minister's Medal for Meritorious Intelligence and the Medal for Meritorious Special Performance.

⭐The Padma Awards are usually announced every year on the occasion of Republic Day. Accordingly, the Padma Awards for the year 2026 have been announced.

⭐ America has been affected by a snowstorm that paralyzed the whole state, with 13,000 flights canceled. A state of emergency has been declared in 15 states, and about 140 million people have been affected by the snowstorm.

 SPORTS NEWS 

🏀U19 World Cup: India beats New Zealand to advance to Super Sixes 

🏀 Indian squad announced for Asia Cup.

Covai women ICT_போதிமரம்

Thursday, January 22, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 23.01.2026

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்





திருக்குறள்: 

குறள் 249: 

தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின் 
அருளாதான் செய்யும் அறம். 

விளக்க உரை: 

அருள் மேற்கொள்ளாதவன் செய்கின்ற அறச்செயலை ஆராய்ந்தால், அஃது அறிவு தெளியாதவன் ஒரு நூலின் உண்மைப் பொருளைக் கண்டாற் போன்றது.

பழமொழி :

One step each day changes everything. 

தினமும் ஒரு அடி அனைத்தையும் மாற்றும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. நான் எனது வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதுக்கும் துன்பம் தரமாட்டேன்.

2. துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன்.

பொன்மொழி : 

உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதே போல மனதுக்கு பயிற்சி புத்தக வாசிப்பு - சிக்மன்ட் பிராய்டு

பொது அறிவு : 

01.காவிரி நதி வங்காள விரிகுடாவில் எங்கு கலக்கிறது?

மயிலாடுதுறை - பூம்புகார் 
Mayiladuthurai -Poompuhar


02.இன்சுலினை சுரக்கும் உறுப்பு 
எது?

கணையம் -pancreas

English words :

plaintively-sadly

gloomy-depressing

தமிழ் இலக்கணம்: 

 பொருள்கள் –பொருட்கள் எது சரி என்று பார்ப்போமா? 
இதற்கு ஒருமை பன்மையின் இலக்கண விதியை முதலில் தெரிந்து கொள்வோம். 
குறிலுக்கு அடுத்ததாக வரும் ல்,ள் சொற்கள் பன்மைக்கு மாறும் போது ல் 'ற்' ஆகவும், ள் 'ட்' ஆகவும் மாறும் 
எ.கா –கல் –கற்கள்
சொல் –சொற்கள்
முள் –முட்கள்
புள்.  –புட்கள்
ஆனால் இரண்டு குறில் எழுத்துக்களை அடுத்து வரக்கூடிய ல், ள் ஆகிய எழுத்துக்கள் பன்மையில் எழுதும் போது கள் விகுதி மட்டும் சேர்ந்து வரும்.
எ.கா –விரல் –விரல்கள்
குறள் –குறள்கள்
எனவே பொருள்கள் என்பது தான் சரி.

ஜனவரி 23

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்நாள்



நேதாஜி (தலைவர்) என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் (Subhash Chandra Bose, சனவரி 23, 1897– இறந்ததாகக் கருதப்படும் நாள் ஆகத்து 18, 1945) இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவராவார். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது, வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி, இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி, அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர். காங்கிரஸ் சனநாயகக் கட்சியின் "பார்வர்ட்" எனும் ஆங்கில இதழில், ஆசிரியரான நேதாஜி, உணர்ச்சி ததும்பும் பல கட்டுரைகளை எழுதினார்.  இந்திய தேசிய ராணுவம் நெருக்கடியான நிலையில் இருந்த போது, ஆகத்து 15, 1945ல் அவர் இறுதியாக அறிக்கை வெளியிட்டார்.அதன் சுருக்கம் இதோ

நீதிக்கதை

 சேவலும் இரத்தினக்கல்லும்


ஒரு சேவல் தனக்குத் தேவையான உணவை குப்பையைக் கிளறித் தேடிக் கொண்டிருந்தது. அப்போது அதற்கு ஒரு விலை மதிப்பற்ற இரத்தினக்கல் கிடைத்தது. அதனை பார்த்த சேவலின் குஞ்சு ஒன்று சேவலின் அருகே வந்து ஆவலுடன் அந்தக் கல்லை திருப்பி போட்டது. உடனே சேவல் வருத்தமாக இந்தக் கல் எனக்கு கிடைத்ததனால் என்ன பயன் கிடைக்கப் போகிறது. அதுவே ஒரு இரத்தின வியாபாரியின் கைக்கு கிடைத்திருந்தால் இந்தக் கல்லின் மதிப்பு என்னவென்று அவனுக்கு தெரிந்திருக்கும். எனக்கு இந்தக் கல் கிடைத்ததைக் காட்டிலும் இந்த குப்பையிலிருந்து ஒரு தானியம் கிடைத்திருந்தால் அதுவே எனக்குக் கிடைத்த விலை மதிப்பில்லாதப் பொருள் என்று கூறியது சேவல். 


நீதி :

எந்த ஒரு பொருளும் இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால் தான் சிறப்பு.

இன்றைய செய்திகள்

23.01.2026

⭐திருவாரூர் பள்ளி மாணவிக்கு டெல்லி குடியரசு தின விழாவில் பங்கேற்க அழைப்பு. சுதந்திரப்போராட்ட காலத்தில் சுபாஷ் சந்திரபோசின் ராணுவப் படையில் சேர்ந்து பணியாற்றிய நீரா ஆர்யா என்ற பெண்மணி குறித்து கட்டுரை எழுதினார்.
மாணவி வைகயோஷனாவுக்கு பதக்கம் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் வழங்கப்பட உள்ளது.

⭐நியூசிலாந்து மலையடிவாரத்தில் பயங்கர நிலச்சரிவு.. மண்ணில் புதைந்த சுற்றுலா முகாம்கள் பலர் மாயம்.

⭐இந்தியாவில் குருகிராமில் தனது முதல் பல்கலைக்கழக வளாகத்தை அமைத்த பிரிட்டிஷ் அரசு, இந்தியாவில் மேலும் 9 கிளைகளை ஆரம்பிக்க உள்ளது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் வீரர் முஜிபுர் ரகுமான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 3 டி20 போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய 3-வது வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

Today's Headlines

⭐A Thiruvarur schoolgirl was invited to participate in the Republic Day celebrations in Delhi. She wrote an article about a woman named Neera Arya, who served in Subhas Chandra Bose's army during the freedom struggle. Vaigayoshana will be awarded a medal and Rs. 10 thousand in cash. 

⭐A terrible landslide in the foothills of New Zealand. Many people are missing from tourist camps buried in the soil.

⭐The British government, which set up its first university campus in Gurugram, India, is set to open 9 more branches in India.

 SPORTS NEWS 

🏀Afghanistan's Mujibur Rahman took 4 wickets in the 2nd T20I against West Indies. He became the 3rd player to take a hat-trick in 3 T20Is

Covai women ICT_போதிமரம்

Wednesday, January 21, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 22.01.2026




 






திருக்குறள்: 

குறள் 246: 

பொருள்நீங்கிப் பொச்சாந்தா ரென்பர் அருள்நீங்கி 
அல்லவை செய்தொழுகு வார். 

விளக்க உரை: 

அருள் இல்லாதவராய் அறமல்லாதவைகளைச் செய்து நடப்பவர்களை, உறுதிப்பொருளாகிய அறத்திலிருந்து நீங்கித் தம் வாழ்க்கையின் குறிக்கோளை மறந்தவர் என்பார்

பழமொழி :

Time spent in learning is never wasted. 

கற்றலில் செலவழித்த நேரம் எப்போதும் வீணாகாது.

இரண்டொழுக்க பண்புகள் :

1. நான் எனது வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதுக்கும் துன்பம் தரமாட்டேன்.

2. துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன்.

பொன்மொழி : 

புத்தகங்கள் காலத்தின் விதை நெல் - பாரதிதாசன்

பொது அறிவு : 

01.தென் இந்தியாவில் மிக நீளமான கடற்கரையைக் கொண்ட மாநிலம் எது?

ஆந்திரப் பிரதேசம்-Andhra pradesh

02.உலகிலேயே மிகப்பெரிய நூலகம் எங்கு உள்ளது?


அமெரிக்கா-வாஷிங்டன் D.C
Washington, D.C., USA.

English words :

inhabitants-citizens

hit the sack - go to sleep

தமிழ் இலக்கணம்: 

 ஒரு சொல் முழுதாக முடியாமல் பாதியில் நிற்பது எச்சம் எனப்படும்
இது வினையெச்சம் பெயரெச்சம் என்று இருவகைப்படும். 
பெயரெச்சம் வினையெச்சம் என்று எவ்வாறு கண்டு பிடிப்பது என்று இன்று காண்போம்
எச்சத்திற்கு பின் வினைச் சொல் வந்தால் வினையெச்சம்.
எ. கா – எழுந்து இது ஒரு எச்சம் 
இதன் பிறகு வந்தான், சென்றான், நடந்தான் போன்ற வார்த்தைகள் வரும். இவை அனைத்தும் வினைச் சொற்கள். எனவே இது வினையெச்சம்
 சென்ற என்பது ஒரு எச்சம்.
இதன் பிறகு வண்டி, குதிரை, மாணவன் போன்ற சொற்கள் வரும். இவை அனைத்தும் பெயர் சொற்கள் எனவே இது பெயரெச்சம்

ஜனவரி 22

  • 1968 – அப்பல்லோ 5 விண்கலம் முதலாவது நிலாக்கலத்தைத் தாங்கி விண்வெளிக்கு சென்றது.

நீதிக்கதை

 கற்றப் பாடம்


ஒரு நாள் காட்டில் உள்ள சிங்கம், நரி, கழுதை ஆகிய மூன்றும் சேர்ந்து வேட்டைக்குச் சென்றன. அன்று வேட்டையில் கிடைப்பதை சமமாகப் பிரித்துக் கொள்வது என்று மூன்றும் முடிவு செய்தன. வேட்டைக்கு செல்லும் வழியில் கொழுத்த கலைமான் ஒன்று அகப்பட்டது. அதனை சிங்கம் பங்கு போடச் சொல்லி கழுதைக்கு கட்டளை இட்டது. அக்கழுதையோ ஏற்கனவே மூவரும் செய்து கொண்ட ஒப்பந்தப்படி கலைமானை மூன்று சமப்பங்காக கூறு போட்டது. சிங்கமோ, தனக்கு மரியாதைக் கொடுக்காமல் சமபங்கு போட்ட கழுதையின் மேல் கோபம் கொண்டு அதன் மீது பாய்ந்து கழுதையைக் கொன்றது. 


பிறகு உடன் இருந்த நரியை பங்கு போடச் சொல்லியது சிங்கம். சிறிய பங்கை தனக்கு வைத்துக் கொண்டு மீதமுள்ள அனைத்தையும் சிங்கத்திற்கே கொடுத்தது. அதனைப் பார்த்து மகிழ்ச்சியடைந்த சிங்கம் இவ்வளவு பெருந்தன்மையையும், மரியாதையையும் எங்கே கற்றாய்? என்று கேட்டது. அதற்கு அந்த நரி, இறந்து கிடக்கும் கழுதையைச் சுட்டிக்காட்டி, இதனிடமிருந்துதான் கற்றுக் கொண்டேன் என்று கூறி விட்டு அவ்விடத்தை விட்டுச் சென்றது. 


நீதி :

கெட்டவர்கள் நியாயத்திற்கு மதிப்பு அளிக்க மாட்டார்கள்.

இன்றைய செய்திகள்

22.01.2026

⭐254 மீன்பிடிப் படகுகளும்  கைது செய்யப்பட்டவர்கள் உட்பட 90 மீனவர்களும் இலங்கை காவலில் உள்ளனர். இத்தகைய சம்பவங்கள், கடலோரப் பகுதிகளின் சமூக மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பை ஆழமாக சீர்குலைத்துள்ளது.

⭐ வட இந்திய மாநில ங்களிலிருந்து போதைப்பொருள்களை வாங்கி, விற்பனை செய்து வந்த வேலூர் காட்பாடியிலுள்ள தனியார் பல்கலைக் கழகத்தில் படிக்கும் 7 மாணவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

⭐ரஷ்யாவின் கம்சட்காவில் கடும் பனிப்புயல் வீசி வருகிறது. 2 மாடி கட்டிட உயரம் வரை பனிப்பொழிவு மூடியுள்ளது.அடுக்குமாடி குடியிருப்பை சுற்றிய பனிப்பொழிவை இடித்து சுரங்கம் தோண்டி மக்கள் வெளியேறி வருகின்றனர்.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀 ஐ.பி.எல் மார்ச் மாதம் 26-ம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

🏀இந்தியா - நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது.

Today's Headlines

⭐ 254 fishing boats and 90 fishermen, including those who were arrested and are in Sri Lankan custody.  Such incidents have deeply disrupted the social and economic structure of coastal areas.

⭐ Police have arrested 7 students studying at a private university in Vellore's Kadpadi for purchasing and selling drugs from North Indian states.

⭐ A severe snowstorm is blowing in Kamchatka, Russia. The snow has covered buildings up to 2 stories high. People are digging tunnels to come out by clearing the snow around the apartment building.

 SPORTS NEWS

🏀 IPL is expected to start on March 26. 

🏀 New Zealand won the 3-match ODI series between India and New Zealand cricket teams by a score of 2-1.

Covai women ICT_போதிமரம்

Tuesday, January 20, 2026

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 21.01.26











திருக்குறள்: 

குறள் 292

 "பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த 
நன்மை பயக்கும் எனின்"

விளக்க உரை: 

குற்றமற்ற நன்மையைக் கொடுக்கவல்லதாக இருக்குமானால், பொய்யான சொற்களும் வாய்மை என்று சொல்லப்படும் இடத்தைப் பெற்றுவிடும்".

பழமொழி :

Dream big,Start small. 

பெரிதாக கனவு காணு, சிறியதாக தொடங்கு.

இரண்டொழுக்க பண்புகள் :

1. நான் எனது வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதுக்கும் துன்பம் தரமாட்டேன்.

2. துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன்.

பொன்மொழி : 

புத்தகத்தைப் போல விசுவாசமான நண்பர் இல்லை - எர்னெஸ்ட் ஹெமிங்வே

பொது அறிவு : 

01.நவீன இயற்பியலின் தந்தை என்று  அழைக்கப்படுபவர் யார்?

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் -Albert Einstein

02. தமிழ்நாட்டின் பட்டு நகரம் என்று அழைக்கப்படும் நகரம் எது?

காஞ்சிபுரம்-Kanchipuram

English words :

prankster-joker

expedition-mission

தமிழ் இலக்கணம்: 

 இன்று எடு என்பதற்கான வினை முற்றுச் சொற்களைப் பார்ப்போம்.
1. சிறிது நேரம் ஓய்வு எடு –தவறு
  சிறிது நேரம் இளைப்பாறு
2. ஆசிரியர் பாடம் எடுத்தார் –தவறு 
    ஆசிரியர் பாடம் கற்பித்தார்
3. உறுதி மொழி எடுத்துக் கொண்டனர் –தவறு 
     உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர்
4. முடிந்த வரை முயற்சி எடுக்க வேண்டும் –தவறு 
முடிந்த வரை முயற்சி மேற்கொள்ள வேண்டும்
இனி சரியான வினை மரபுச் சொற்களை பயன்படுத்துவீர்கள் தானே மாணவர்களே.

அறிவியல் களஞ்சியம் :

பிரபஞ்சத்தின் 96 சதவிகிதம் ஆனது மனிதர்களால் கண்டறிய முடியாத இருண்ட விஷயம் (டார்க் மேட்டர்) மற்றும் இருண்ட ஆற்றலால் நிரம்பி உள்ளது. இந்த பொருள்களை உருவாக்கும் துகள்கள் ஆனது வழக்கமான விண்வெளி விடயங்கள் அல்லது ஒளியுடன் தொடர்பு கொள்ளாது என்பதால், அவைகள் என்னவென்று கண்டுபிடிக்கவே முடியவில்லை.

ஜனவரி 21

  • 1960 – மேர்க்குரி விண்கலத்தில் சாம் என்ற பெண் செம்முகக் குரங்கு விண்வெளிக்குப் பயணமானது.

நீதிக்கதை

 கழுதையின் தந்திரம்


வியாபாரி ஒருவர் உப்பு வாங்குவதற்காக கழுதையைக் கடற்கரைக்கு ஓட்டிச் சென்றார். கடற்கரைக்குச் செல்லும் வழியில் ஒரு ஓடை இருந்தது. அந்த வியாபாரி உப்பை வாங்கிக் கழுதையின் மீது ஏற்றி வைத்துக் கொண்டு அந்த ஓடையைக் கடந்து செல்ல முற்பட்டபோது கால் தவறிக் கழுதை ஓடையில் விழுந்தது. ஓடையில் விழுந்ததால் கழுதையின் மேலிருந்த உப்பு மூட்டையில் இருந்த உப்பில் பாதி அளவு தண்ணீரில் கரைந்து போயிற்று. ஓடையில் விழுந்தக் கழுதை தட்டுத்தடுமாறி எழுந்த போது மூட்டையின் கனம் மிகவும் குறைந்தது. வியாபாரி திரும்பிப்போய், இன்னும் கூடுதலாக உப்பைத் தனது கோணிகளில் நிரப்பிக் கழுதையின் மேல் பாரத்தை ஏற்றி வைத்து அழைத்து வந்தான். ஓடையை நெருங்கியதும் கழுதை வேண்டுமென்றே மீண்டும் விழுந்து தனது பாரத்தைக் குறைத்துக் கொண்டது. எனவே அது வெற்றிகரமாகக் கனைத்தது. 

வியாபாரிக்குக் கழுதையின் தந்திரம் புரிந்துபோகவே, மூன்றாம் முறையாக கடற்கரைக்கு அதை ஓட்டிச் சென்றான். அங்கே உப்புக்கு பதிலாகக் கடற்பஞ்சு மூட்டைகளை வாங்கி கழுதையின் மேல் பாரத்தை வைத்தான். ஓடையை அடைந்ததும், மீண்டும் அதே தந்திரத்தைக் கழுதை செய்தது. ஆனால் கடற்பஞ்சு தண்ணீர்ரை உறிஞ்சிக்கொண்டு மிகவும் கனத்துப் போனது. தான் செய்த தந்திரம் தன்மீதே பாயவே, கழுதை இரண்டு மடங்கு பாரத்தைச் சுமக்க வேண்டியதாயிற்று. 

நீதி :

தெரிந்தே தவறு செய்யக் கூடாது

இன்றைய செய்திகள்

21.01.2026

⭐தமிழ்நாடு முழுவதும் நோய் தடுப்பு துறை மூலம் "தொழுநோயை தடுப்பது" குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை தமிழக அரசு முன்னெடுத்துள்ளது.

⭐தமிழகத்தில் 121 தடுப்பணைகள் மற்றும் 63 அணைக்கட்டுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்

⭐மேற்கு வங்கத்தில் நிபா வைரஸ் பரவல் அதிகரித்து இருப்பதால் பறவைகள், விலங்குகள் கடித்த பழங்களை சாப்பிடக் கூடாது என்று தமிழக அரசின் பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀5 அணிகள் பங்கேற்றுள்ள 4-வது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட்டின் முதற்கட்ட ஆட்டங்கள் மும்பையில் நடந்தன. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் குவித்தது. குஜராத் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

Today's Headlines

⭐The Tamil Nadu government has launched an awareness campaign on "Prevention of Leprosy" through the Department of Disease Prevention across Tamil Nadu.

⭐The Chief Minister of Tamil Nadu has predicted that work is underway to construct 121 check dams and 63 embankments in Tamil Nadu.

⭐The Tamil Nadu government's public health department has advised against eating fruits bitten by birds and animals due to the increasing spread of the Nipah virus in West Bengal.

 SPORTS NEWS 

🏀The first leg of the 4th Women's Premier League (WPL) T20 cricket tournament, featuring 5 teams, was held in Mumbai. And first, Bengaluru scored 178 runs for the loss of 6 wickets. The Gujarat team scored only 117 runs for the loss of 8 wickets in 20 overs and lost.

Covai women ICT_போதிமரம்