Monday, January 19, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 20.01.2026

எட்வின் யூஜின் ஆல்ட்ரின்



 






திருக்குறள்: 

குறள் 291: 

வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றந் தீமை யிலாத சொலல்.         
விளக்க உரை: 

வாய்மை என்று கூறப்படுவது எது என்றால், அது மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீங்கு இல்லாத சொற்களைக் சொல்லுதல் ஆகும்.

பழமொழி :

Today's effort is tomorrow's success.  

இன்றைய முயற்சியே  நாளைய வெற்றி.

இரண்டொழுக்க பண்புகள் :

1. நான் எனது வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதுக்கும் துன்பம் தரமாட்டேன்.

2. துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன்.

பொன்மொழி : 

உங்களை சிறப்பாக செயல்பட வைக்கவே பிரச்சினைகள் ஒரு வாய்ப்பாக வருகிறது.

     டியூக் எலிங்டன்

பொது அறிவு : 

01.உலகின் மிகப்பெரிய தனிப்பட்ட மலர் இனம் எது?

ரஃப்லேசியா அர்னால்டி 

            Rafflesia  arnoldii

02.இந்தியாவின் முதல் செங்குத்து-தூக்கு கடல் பாலம் எது?

புதிய பாம்பன் பாலம் -

ராமேஸ்வரம், தமிழ்நாடு 

New Pamban Bridge -Rameshwaram Tamil Nadu.

English words :

shriveled-shrinked due to age

 fatigue-weariness

தமிழ் இலக்கணம்: 

 இன்று செய்வதற்கான வினை மரபுச் சொற்களை பார்ப்போம்
1. மாறன் சிலை செய்தான் – தவறு
    மாறன் சிலை வடித்தான்
2.குமரன் பானை செய்தார் –தவறு
குமரன் பானை வனைந்தான் 
3.வீரன் போர் செய்தான் –வீரன் போர் புரிந்தான்
4.மற்றவர்களுக்கு தீங்கு செய்யாதே – தவறு 
மற்றவர்களுக்கு தீங்கு இழைக்காதே

அறிவியல் களஞ்சியம் :

வண்ணங்களை வகைப்படுத்தி காணும் திறன் ஆனது மரபணுக்கள் எக்ஸ் குரோமோசோமில் காணப்படுகின்றன. இவ்வகை எக்ஸ் குரோமோசோம்கள் ஆனது பெண்களுக்கு இரண்டும், ஆண்களுக்கு ஒன்றும் இருக்கிறது. ஆக பெண்களால் ஆண்களை விட அதிக அளவில் வண்ணங்களை பிரித்து பார்க்க முடியும்.

ஜனவரி 20

எட்வின் யூஜின் ஆல்ட்ரின் அவர்களின் பிறந்தநாள் 

எட்வின் யூஜின் ஆல்ட்ரின், Edwin Eugene Aldrin, Jr., பிறப்பு: ஜனவரி 20, 1930) என்பவர் அமெரிக்க விண்வெளி வீரரும் விமானியும் ஆவார். இவர் முதன் முதலாக மனிதரை சந்திரனில் ஏற்றிச் சென்ற அப்பல்லோ 11 விண்கலத்தில் நீல் ஆம்ஸ்ட்ரோங் உடன் பயணம் செய்து சந்திரனில் இறங்கிய இரண்டாவது மனிதர் என்ற பெருமையைப் பெற்றார்

நீதிக்கதை

ஒரு தவளையும் ஒரு சுண்டெலியும்


ஒரு காட்டில் ஒரு தவளையும், ஒரு சுண்டெலியும் நண்பர்களாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் தவளை வாழ்ந்து வந்த குளத்தில் நீர் வற்றிவிடவே தவளை மிகவும் வருந்தியது. அதனால் எலி அங்குமிங்கும் தேடி அலைந்து ஒரு குளத்தைக் கண்டுபிடித்தது. இருவரும் சேர்ந்து குளத்தினருகில் சென்றவுடன் குளம் யாருக்குச் சொந்தம் என்பதில் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டத்தால் எலி தன் இனத்தவரை ஆதரவுக்கு அழைத்தது. 

தவளையும் அதேபோல் தன் இனத்தவர்களை உதவிக்கு அழைத்தது. சண்டையில் நிறைய எலிகளும் தவளைகளும் இறந்து போயிற்று. இதனை வானத்தில் வட்டமிட்டுக் கொண்டிருந்த பருந்துகள் பார்த்தன. பருந்துகள் கீழே வந்து சண்டையிட்டுக் கொண்டிருந்த எலிகள், தவளைகள் மீது பாய்ந்து அவைகளைத் தமக்கு இரையாக்கிக் கொண்டன. 

நீதி :

எளியவன் தனித்து இருந்தால் அவனை வலியவன் வெல்வது எளிது 

இன்றைய செய்திகள்

20.01.2026


⭐குடியரசு தின விழா - தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1 லட்சம் போலீசார். குடியரசு தின விழா கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகளை அந்தந்த மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

⭐தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கால அவகாசம் நீட்டிப்பு. நேற்றைய நிலவரப்படி 13.03 லட்சம் பேர் தங்கள் பெயர்களை சேர்க்க விண்ணப்பித்துள்ளனர்.
பிப்ரவரி 17-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று இந்திய தேர்தல் கமிஷன் அதிகாரிகள் கூறினர்.

⭐ஸ்பெயினில் 2 அதிவிரைவு ரெயில்கள் மோதிய விபத்தில் 21 பேர் உயிரிழப்பு. மாலகா மற்றும் மாட்ரிட் இடையே 300 பயணிகள் பயணித்த ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர்: மார்ஷ் தலைமையில் ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு.
3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகிறது. அடுத்த மாதம் டி20 உலக கோப்பை தொடர் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Today's Headlines

⭐Regarding Republic Day Celebrations - 1 lakh policemen on security duty across Tamilnadu. The respective state governments are making arrangements for the Republic Day celebrations.

⭐Time is extended  to add names to voter list in Tamilnadu.  As of yesterday, 13.03 lakh people have applied to include their names. The final voter list will be published on February 17, Officers of Election  Commission of India  said.

⭐ 21 killed in Spain high-speed train collision. Train carrying 300 passengers derails between Malaga and Madrid.

 *SPORTS NEWS* 

🏀T20 series against Pakistan: Australia team announced under Marsh. Pakistan and Australia teams will compete in a 3-match T20 series. The T20 World Cup is scheduled to be held next month.

Covai women ICT_போதிமரம்

Sunday, January 18, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.01.2026




 






திருக்குறள்: 

குறள் 241: 
அருட்செல்வஞ் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் 
பூரியார் கண்ணு முள.                   

விளக்க உரை: 

பொருள்களாகிய செல்வங்கள் இழிந்தவரிடத்திலும் உள்ளன; (உயர்ந்தவரிடத்தில் மட்டுமே உள்ள) அருளாகிய செல்வமே செல்வங்களில் சிறந்த செல்வமாகும்

பழமொழி :

Good things take time.        

நல்லவை நடக்க நேரம் எடுத்துக்கொள்ளும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. நான் எனது வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதுக்கும் துன்பம் தரமாட்டேன்.

2. துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன்.

பொன்மொழி : 

இந்த வருடத்தில் எல்லா நாளுமே சிறந்த நாளே; இதை உங்கள் இதயத்தில் எழுதிவைத்துக்கொள்ளுங்கள்!’’

- ரால்ஃப் வால்டோ எமர்சன் (அமெரிக்க கவிஞர், கட்டுரையாளர்)

பொது அறிவு : 

01.இந்திய தேசிய வருமானத்தில் முக்கிய பங்கு வகிக்கும் துறை எது?

  சேவைத் துறை -Tertiary Sector

2. உலக அளவில் தொழிற்புரட்சி முதல் முதலில் நடைபெற்ற நாடு எது?

     இங்கிலாந்து- England 

English words :

swoop-dive

 bifurcated-split

தமிழ் இலக்கணம்:


போடு, செய் , எடு – இவை நம் வினை மரபுச் சொற்களை எவ்வாறு மங்கி அழிந்து போகச் செய்கிறது என்பதைக் குறித்து இன்று காண்போம்.
*போடு*
1.பசு கன்று போட்டது –தவறு
பசு கன்று ஈன்றது 
2.வீட்டின் மேல் கூரை போட்டனர் – தவறு 
வீட்டின் மேல் கூரை வேய்ந்தனர் 
3.நீதி மன்றத்தில் வழக்கு போட்டார் –தவறு 
நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்
4.புதிதாக சாலை போட்டனர் – தவறு 
புதிதாக சாலை அமைத்தனர்
இன்று சில சரியான வினை முற்றுச் சொற்களை பார்த்தோம். நாளையும் தொடரும்

அறிவியல் களஞ்சியம் :

நீங்கள் சாப்பிடுகிற உணவிலிருந்து திடப்பொருட்களையும், திரவத்தையும் ஈர்த்து விட்ட பிறகு, வாயு மட்டுமே வாயிலிருந்து தப்பித்துக் கொள்ளும், அதுதான் ஏப்பம் ஆகும், இது பூமியில் சாத்தியமாகும். ஆனால் புவியீர்ப்பு இல்லாத விண்வெளி பகுதிகளில், திரவங்கள் மற்றும் திடப்பொருட்களிலிருந்து வாயுவை பிரிக்க முடியாது, எனவே அது வாந்தியாக மாறிவிடும்.

ஜனவரி 19


1986 – முதற் கணினி நச்சுநிரலான பிரெயின் பரவத் தொடங்கியது.

நீதிக்கதை

 கரடியும் இரண்டு நண்பர்களும்


ஒரு ஊரில் இரண்டு இணை பிரியாத நண்பர்கள் இருந்தார்கள். அவர்களில் ஒருவன் ராகவன் மற்றொருவன் சுந்தரன். ஒரு நாள் இருவரும் தேன் எடுப்பதற்காக காட்டுப் பகுதிக்குச் சென்றனர். செல்லும் வழியில் ராகவன், சுந்தரனிடம் நீ எதைப்பற்றியும் பயபடாமல் என்னுடன் வா. என்ன துன்பம் வந்தாலும் நான் உன்னைக் காப்பாற்றுவேன் என்று கூறினான். 

காட்டிலுள்ள பறவைகள், மரங்கள், காட்டு விலங்குகள் போன்றவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டே இருவரும் நடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது அங்கே கரடி ஒன்றின் உறுமும் சத்தம் கேட்டது. சிறிது நேரத்தில் அவர்கள் செல்லும் வழியிலேயே, அந்த கரடி வந்து கொண்டிருந்தது. கரடியைக் கண்டதுமே இருவரும் பயத்தில் ஓடத் தொடங்கினார்கள். கரடியும் அவர்களைத் துரத்தியது. சில வினாடிகள் ஓடிய பிறகு ராகவன் ஒரு மரம் இருப்பதை கண்டான். உடனடியாக அந்த மரத்தில் ராகவன் ஏறி அமர்ந்து கொண்டான். 

சுந்தரனுக்கோ மரம் ஏறத் தெரியாது என்று ராகவன் நன்கு அறிந்திருந்தும் அவனைக் கீழே விட்டு விட்டுத் தான் மட்டும் தப்பித்தால் போதும் என்ற சுய நலத்தோடு ராகவன் நடந்து கொண்டான். சுந்தரனுக்கு மரம் ஏறத் தெரியாததால் என்ன செய்வதென்று தெரியாமல் எப்படி கரடியிடமிருந்து தப்புவது என்று யோசித்தான். இறந்தவன் போல் நடித்தால் கரடி தன்னைக் கொல்லாது என்று ஒரு யோசனை தோன்ற, பின்னர் நிலத்தில் இறந்தவனைப்போல் மூச்சை அடக்கிக் கொண்டு படுத்துக் கொண்டான். 

அப்போது அங்கு வந்த கரடி கீழே விழுந்து கிடந்தவன் காதருகே சென்று நுகர்ந்து பார்த்தது. சுந்தரன் இறந்துவிட்டான் என்று நினைத்து அந்த கரடி அங்கிருந்து நகர்ந்து போய் விட்டது. சுந்தரனின் காதருகே சென்று கரடி முகர்ந்து பார்த்ததை, மேலேயிருந்து பார்த்த ராகவன் கரடி சுந்தரனிடம் ஏதோ சொல்கிறது என்று தவறுதலாக புரிந்து கொண்டான். பிறகு அவன் இறந்தவன் என்று முடிவு செய்து கரடி அங்கிருந்து நகர்ந்து போய் விட்டது. 

கரடி செல்வதை மரத்தின் மேலிருந்து பார்த்த ராகவன், கீழே இறங்கி வந்து சுந்தரனை எழுப்பினான். சுந்தரா எழுந்திரி நாம் தப்பி விட்டோம். அந்த கரடி சென்று விட்டது என்று கூறிச் சுந்தரனை எழுப்பினான். சுந்தரனும் எழுந்து தன் யோசனை வெற்றியடைந்ததை எண்ணி நிம்மதிப் பெருமூச்சு விட்டான். 

ராகவன், சுந்தரனிடம், கரடி உன் காதில் என்ன இரகசியம் சொன்னது? என்று கேட்டான். அதற்குப் சுந்தரன், ஆபத்தில் உதவாத நண்பனை என்றுமே நம்பக் கூடாது! என்று சொல்லிவிட்டுப் போனது என்றான். சுந்தரனின் பதிலைக் கேட்டு, ராகவன் தன் சுயநலப் புத்தியை எண்ணி நொந்து கொண்டான். சுந்தரனோ இனி மேல் நம் நட்பு நீடிக்க வேண்டாம் என்று கூறி விட்டுத் தனியே நடந்து சென்றான். 

நீதி :

ஆபத்தில் உதவுபவனே நல்ல நண்பன்.

இன்றைய செய்திகள்

19.01.2026

⭐வாகனங்கள் மிக நெருக்கமாக வரும்போது உடனே எச்சரிக்கை செய்யும் Vehicle-to-Vehicle (V2V) எனப்படும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை அனைத்து வாகனத்திலும் பொருத்துவதை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

⭐2024-ஆண்டுக்கான நிதி ஆயோக்கின் ஏற்றுமதி தரவரிசைப் பட்டியலில் தமிழகம் 2-ம் இடத்தை பிடித்துள்ளது.

⭐தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளத்தை இணைக்கும் வகையில் மூன்று புதிய அம்ரித் பாரத் ரயில்கள் உட்பட 9 புதிய அம்ரித் பாரத் ரயில்களின் சேவை  தொடங்கின.

⭐242 சட்டவிரோத பந்தயம் மற்றும் சூதாட்ட இணையதளங்களின் இணைப்புகளை இந்திய அரசு முடக்கியுள்ளது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀இந்திய ஓபன் பேட்மிண்டன்:  
தென் கொரிய வீராங்கனை
அன் சே-யங் ஏற்கனவே 2023 மற்றும் 2025-ல் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
தற்போது 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.

🏀ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்:
முதல் சுற்றில் சுவரேவ், ஜாஸ்மின் பாலினி வெற்றி. உலக தர வரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் அலெக்சாண்டர் சுவரேவ் உள்ளார்.

Today's Headlines

⭐The central government is planning to make it mandatory to install Vehicle-to-Vehicle (V2V) communication technology in all vehicles, which will immediately alert you when vehicles come too close.

⭐Tamilnadu has ranked 2nd in the NITI Aayog's export ranking list for the year 2024.

⭐9 new Amrit Bharat trains, including three new Amrit Bharat trains connecting Tamilnadu and West Bengal, have started service.

⭐The Indian government has blocked links to 242 illegal betting and gambling websites.

 *SPORTS NEWS* 

🏀Indian Open Badminton: South Korean player Ahn Se-young has already won the championship title in 2023 and 2025. Now she has won the championship title for the 3rd time.

🏀 In Australian Open Tennis  series, Suvarev and  Jasmine Paolini won in first round   Alexander Suvarev is ranked 3rd in the world.

Covai women ICT_போதிமரம்

Monday, January 12, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 13.01.2026




 






திருக்குறள்: 

குறள் 136: 
ஒழுக்கத்தி னொல்கார் உரவோர் இழுக்கத்தின் ஏதம் படுபாக் கறிந்து.                 
உரை: 

ஒழுக்கம் தவறுதலால் குற்றம் உண்டாவதை அறிந்து, மனவலிமை உடைய சான்றோர் ஒழுக்கத்தில் தவறாமல் காத்துக் கொள்வர்.

பழமொழி :

Actions speak louder than words.      

சொற்களை விட செயல்களே அதிகமாக பேசும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. படுத்தே இருந்தால் படுக்கையும் பகையாகும்.

 2. எழுந்து முயற்சி செய் உலகே உனது வசமாகும்.

பொன்மொழி : 

இயற்கை ,காலம், பொறுமை இவை மூன்றும் பெரும் மருத்துவர்கள். பல்வேறு பிரச்சினைகளை தீர்ப்பவர்கள் -ஹெச் ஜி பான்

பொது அறிவு : 

01.சர்வதேச அளவில்,  ""சட்டத்தின் தந்தை"" என்று அழைக்கப்படுபவர் யார்?

    ஜான் ஆஸ்டின் (John Austin) 

02. உலக நுகர்வோர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

       மார்ச் 15- March 15

English words :

Devour -consume

Whet-sharpen

தமிழ் இலக்கணம்: 

 சென்னைப்பட்டினம் 
சென்னைப்பட்டணம் 
எது சரி?
பட்டினம் என்பது கடற்கரை ஒட்டிய நகரத்தை குறிக்கும் 
பட்டணம் என்பது பெரிய நகரத்தை குறிக்கும்.
எனவே இரண்டு பெயர்களும் சரியே

அறிவியல் களஞ்சியம் :

சூரியனில் வெடிப்பு ஏற்படும் போது கிளம்பும் வெப்ப ஆற்றலை தான் சோலார் ஃபிளேர் என்பார்கள். அந்த ஆற்றலானது 100 மெகாடன் அணு குண்டுகளை ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறுவதற்கு சமமாகும். இந்த கொடூரமான கதிர்வீச்சு ஆபத்தில் இருந்து நம்மை பாதுகாக்கும் பூமியின் வளிமண்டலத்திற்கு கோடான கோடி நன்றிகள்!

நீதிக்கதை

 எறும்பும் வெட்டுக்கிளியும்


வெட்டுக்கிளி ஒன்று மதிய நேரத்தில் இங்கும் அங்கும் தாவி தாவிக் குதித்து பாட்டுப்பாடி ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தது. அப்போது அந்த வழியே வந்த எறும்பு அரிசி ஒன்றை எடுத்துக் கொண்டு தன் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தது. அதைப் பார்த்த அந்த வெட்டுக்கிளி எறும்பிடம் என்னைப் போல நீயும் என்னுடன் சிறிது நேரம் விளையாடலாமே என்றது. 

அதற்கு எறும்பு இன்னும் சில நாட்களில் மழைக்காலம் தொடங்க இருக்கிறது. மழைக்காலத்தில் யாரும் வெளியே செல்ல முடியாது. அதனால் அந்த நேரத்திற்குத் தேவையான உணவை இப்போது இருந்தே நான் என் வீட்டில் சேகரித்து வைத்துக் கொள்கிறேன் என்றது. வெட்டுக்கிளி, எறும்பிடம் மழைக்காலம் வர இன்னும் நாட்கள் இருக்கிறது என்று சொல்லிவிட்டு நான் விளையாட செல்கிறேன் என்று சிரித்துக்கொண்டே நடனமாடிச் சென்றது. 

நாட்கள் கடந்தன, மழைக்காலமும் வந்தது. அப்போது வெட்டுக்கிளிக்கு பசி ஏற்பட்டது. எறும்பு உணவு சேமித்து வைத்திருக்கும் அதனிடம் போய்க் கேட்டுபார்க்கலாம் என்று நினைத்த வெட்டுக்கிளி எறும்பின் வீட்டிற்குச் சென்றது. எறும்பின் வீட்டுக்குச் சென்று எறும்பிடம் எனக்கு மிகவும் பசிக்கிறது. ஏதாவது உணவு கிடைக்குமா? என்று கேட்டது. தான் சேமித்த உணவில் இருந்து சிறிதளவை வெட்டுக்கிளியிடம் கொடுத்தது எறும்பு. 

பிறகு எறும்பு வெட்டுக்கிளியைப் பார்த்து, அன்று என்னைப் பார்த்து சிரித்தாயே. இப்போது நான் சேகரித்த உணவு தான் இன்று நம் இருவருக்கும் உதவியுள்ளது. எனவே இனிமேலாவது நீ சோம்பலில்லாமல் வெயில் காலத்தில் மழைக்காலத்திற்கு வேண்டியதை சேமித்து வைத்துக்கொள் என்றது. எறும்பானது கால நேரம் பாராது உழைத்தால் வாழ்வு என்றும் பிரகாசமாக இருக்கும் என்று வெட்டுக்கிளிக்கு உணர்த்தியது. 

நீதி :

எதிர்காலத்திற்குத் தேவையானதை நிகழ்காலத்தில் சேமித்து வைக்க வேண்டும்.

இன்றைய செய்திகள்

13.01.2026

⭐45 சவரன் நகைகள் ஒப்படைப்பு.தூய்மை பணியாளர் பத்மாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.1 லட்சம் பரிசு!
நகை யாருடையது என விசாரித்து போலீசார் அதனை உரியவரிடம் ஒப்படைத்தனர்.

⭐16செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.
* 'கெஸ்ட்ரல் இனிஷியல் டெமான்ஸ்ட்ரேட்டர்' என்ற ஒரு சிறிய சோதனை கருவியும் பொருத்தப்பட்டுள்ளது.

⭐சென்னையில் டபுள் டக்கர் பேருந்துகள் சேவைகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்.
* முக்கிய சுற்றுலாத்தலங்களுக்கு டபுள் டக்கர் பஸ் சேவையை தொடங்க சுற்றுலாத்துறை முடிவு செய்துள்ளது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடர் பிக் பாஷ் லீக். இந்தத் தொடரின் 15-வது சீசன் நடந்து வருகிறது. இதில் மெல்போர்ன் ரெனெகேட்ஸ்- சிட்னி தண்டர் அணிகள் மோதின.

Today's Headlines

⭐45 sovereigns of jewellery handed over.   Chief Minister M.K. Stalin awards Rs. 1 lakh to the sanitation worker Padma.  The police enquired about the identity of the jewellery owner and handed it over .

⭐PSLV C-62 rocket with 16 satellites launched. A small test device called 'Kestrel Initial Demonstrator' is also attached.

⭐Chief Minister launches double decker bus services in Chennai. The tourism department has decided to launch double decker bus services to major tourist destinations.

 *SPORTS NEWS* 

🏀 Big Bash League is a domestic T20 series held in Australia. The 15th season of this series is underway. In this, Melbourne Renegades and Sydney Thunder clashed.

Covai women ICT_போதிமரம்

Sunday, January 11, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12.01.2026

சுவாமி விவேகானந்தர்

 






திருக்குறள்: 

நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி. 

விளக்கம் – 

நல்ல வழி எது என்றால், எந்த உயிரையும் கொலை செய்யாமல் அறம் காக்கும் வழிதான்.

பழமொழி :

Success is built on repeated actions.       

மீண்டும் மீண்டும் செய்யும் செயல்களில் தான் வெற்றி உருவாகிறது.

இரண்டொழுக்க பண்புகள் :

1. படுத்தே இருந்தால் படுக்கையும் பகையாகும்.

 2. எழுந்து முயற்சி செய் உலகே உனது வசமாகும்.

பொன்மொழி : 

நான் இன்று வாழ்வதற்கு என் தந்தைக்கு கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால்,  நான் நன்றாக வாழ்வதற்கு என் ஆசிரியருக்கு கடமைப்பட்டிருக்கிறேன் . - மாவீரன் அலெக்சாண்டர்

பொது அறிவு : 

01.ஐக்கிய நாடுகள் சபை எந்த நாளை சர்வதேச கல்வி நாளாக கொண்டாடுகிறது?

      ஜனவரி 24-January 24

02.பூமி கோள வடிவம் கொண்டது என்ற கருத்துக்கு முதன்முதலில் அடித்தளமிட்டவர் யார்?

 பித்தாகரஸ் -Pythagoras

English words :

ledge-ridge

 preening -grooming

தமிழ் இலக்கணம்: 

 *சுவற்றில்* விளம்பரம் செய்யாதீர். சுவற்றில் என்பது தவறு. ஏன்? எப்படி? என்று பார்ப்போம்
கிணறு + இல் = கிணற்றில்
கயிறு + இல் = கயிற்றில் 
வயிறு + இல் = வயிற்றில்
கிணறு,கயிறு, வயிறு போன்ற வார்த்தைகளுடன் *இல்* (ஐந்தாம் வேற்றுமை உருபு) சேரும் போது கடைசி சொல் மிகுந்து இணையும். 
ஆனால் *சுவறு* என்று நாம் தவறாக புரிந்து கொண்டதன் விளைவு தான் *சுவற்றில்*. 
சுவர் + இல்= சுவரில் என்பதே சரி

அறிவியல் களஞ்சியம் :

 ஹீலியமும் புவியீர்ப்புக்கு எதிராகவும் செயல்பட முடியும்

தீவிர வெப்பநிலைக்கு பிறகு ஹீலியம் ஆனது ஒரு சூப்பர்ஃப்ளூயிட் ஆக மாறும். அந்த நிலையில் ஹீலியத்தால் புவியீர்ப்புக்கு எதிராக செயல்பட முடியும்!

ஜனவரி 12

தேசிய இளைஞர் நாள்

சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான சனவரி 12 ஆம் தியதி தேசிய இளைஞர் நாள் (National Youth Day) என இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.

1984 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் இந்நாளினை "தேசிய இளைஞர் நாளாக" அறிவித்தது, அதைத்தொடர்ந்து 1985-ல் சனவரி 12-ம் திகதி முதன்முதலாக கொண்டாடப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது

நீதிக்கதை

 உள்ளதும் போச்சு

ஒரு முயல் காட்டில் உள்ள ஒரு மரத்தடியில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தது. அப்போது அங்கே ஒரு சிங்கம் மிகுந்த பசியுடன் வந்தது. அந்த சிங்கம் தூங்கிக் கொண்டிருந்த முயலைக் கொன்று பசியைத் தீர்த்துக் கொள்ள எண்ணியது. அதே நேரத்தில் அந்த வழியாக ஒரு மான் செல்வதைச் சிங்கம் பார்த்துவிட்டு முயலைவிட மான் பெரியது. அதனால் மானை சாப்பிட ஆசைப்பட்டது. அந்தச் சிங்கமானது மானைத் துரத்திப்பிடிக்க ஓடியது. ஓடிய சத்தத்தைக் கேட்டு தூங்கிய முயல் விழித்துக் கொண்டது. தனக்கு உள்ள ஆபத்தைப் புரிந்து கொண்டு ஓடி ஒளிந்து கொண்டது. 

சிங்கமானது அந்தக் கலைமானை வெகுதூரம் விரட்டிக்கொண்டு போயும் அதனைப் பிடிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி வந்தது. சரி முயலையாவது கொன்று தின்னலாம் என்று முயல் தூங்கிய இடத்திற்கு வந்துப் பார்த்தால் அங்கு முயலைக் காணவில்லை. முயலைக் காணாத சிங்கம் ஏமாற்றத்துடன் எனக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும். கைக்கு கிடைத்ததை விட்டு விட்டு பேராசையால் உள்ளதையும் இழந்துவிட்டேனே என்று எண்ணித் தன்னையே நொந்து கொண்டது. 

நீதி :

பேராசைப் பட்டால் கிடைப்பதும் கிடைக்காமல் போகும்.

இன்றைய செய்திகள்

12.01.2026

⭐தமிழ்நாட்டில் இன்று தொடங்கி 13 ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு.தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் 14ம் தேதி மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது.

⭐போகி பண்டிகை: பிளாஸ்டிக், டயர்களை எரிக்க வேண்டாம்-விமான நிலைய ஆணையம் வேண்டுகோள். ஓடுபாதையே தெரியாத அளவு, அடர்த்தியான புகை மூட்டம், பனி மூட்டம் ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

⭐ ஈரானில் ஆளும் அரசுக்கு எதிராக மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டம் 12வது நாளாக நீடித்து வரும் நிலையில் இதுவரை 45 பேர் உயிரிழந்துள்ளனர். ஈரான் முழுவதும் இணையதள சேவை முடக்கியுள்ளது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀 நியூசிலாந்தில் இந்திய அணிக்கு எதிராக களமிறங்கும் தமிழ்நாடு வம்சாவளி வீரர் ஆதித்யா அசோக்
 2023ல் சர்வதேச கிரிக்கெட்டில் ஆதித்யா அசோக் அறிமுகமானார்.
இவர் கடந்தாண்டு CSK அகாடமியில் பயிற்சி மேற்கொண்டுள்ளார்.

Today's Headlines

⭐There is a possibility of heavy rain in Tamilnadu starting today and continuing till the 13th. There is a possibility of moderate rain in Tamilnadu, Puducherry and Karaikal on the 14th.

⭐Airport Authority appealed regarding burning plastic, tires and others on Bogi Festival. There is a situation of formation of dense smoke and fog that may make the runway  unrecognizable.

⭐ Students and youth are protesting against the ruling government in Iran. The protests have entered their 12th day and 45 people have died so far. Internet services have been shut down across Iran.

 *SPORTS NEWS* 

🏀 Tamil Nadu-origin player Aditya Ashok to play against New Zealand India Aditya Ashok made his international debut in 2023. He has been training at the CSK Academy for the past year.

Covai women ICT_போதிமரம்

Thursday, January 8, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.01.2026

NRI Day - வெளிநாடுவாழ் இந்தியர் நாள்








திருக்குறள்: 

குறள் 323: 

ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன் 
பின்சாரப் பொய்யாமை நன்று. 

விளக்க உரை: 

இணையில்லாத ஓர் அறமாகக் கொல்லாமை நல்லது, அதற்கு அடுத்த நிலையில் கூறத்தக்கதாகப் பொய்யாமை நல்லது.

பழமொழி :

Questions are the seeds of knowledge. 

கேள்விகளே அறிவின் விதைகள்.

இரண்டொழுக்க பண்புகள் :

1.என் ஆசிரியர் மற்றும் பெற்றோர் எனக்கு கொடுக்கும் பொறுப்பை திருந்த செய்வேன்.

2.பெரியோர் அறிவுரையை கேட்டு நடப்பேன்.

பொன்மொழி :

என்னிடம் சிறப்பான தனித்திறமை என்று எதுவுமே இல்லை . என்னிடம் இருப்பது ஆர்வம் மட்டுமே - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

பொது அறிவு : 

01.நம்நாட்டில் முதன்முதலாக இரும்பு எஃகு தொழிற்சாலை நிறுவப்பட்ட இடம் எது? 

  ஜாம்ஷெட்பூர் -Jamshedpur

02.தங்கப் போர்வை நாடு" (Golden Fleece)எனப்படுவது  எது?

ஆஸ்திரேலியா -Australia

English words :

Slammed-banged 

generous -noble

தமிழ் இலக்கணம்: 

இன்று 500 ஐ எப்படி எழுதுவது என்று பார்ப்போம்
1. ஐநூறு ரூபாய் எனக்கு கிடைத்தது
2. ஐந்நூறு ரூபாய் எனக்கு கிடைத்தது
இதை பிரித்து எழுதுவோம்.
ஐநூறு = ஐ+ நூறு 
ஐந்நூறு = ஐந்து + நூறு 

 ஐந்நூறு ரூபாய் எனக்கு கிடைத்தது என்பதே சரி

அறிவியல் களஞ்சியம் :

 நீங்கள் சுழற்றிக்கொண்டே ஒரு பந்தை கைவிடும்போது, பலத்த காற்று வீசும் பட்சத்தில் அது பறந்து போகும் என்கிறது அறிவியல். இதை மேக்னஸ் விளைவு என்று அழைகிறார்கள். இந்த விளைவு தான் டென்னிஸ் மற்றும் கால்பந்து விளையாட்டை ஒரு தந்திரமான மற்றும் எளிமையான விளையாட்டாக மாற்றுகிறது.

ஜனவரி 09

NRI Day - வெளிநாடுவாழ் இந்தியர் நாள்


வெளிநாடுவாழ் இந்தியர் நாள், 2003 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 9 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இந்தியாவைத் தவிர்த்த பிற நாடுகளில் வாழும் இந்தியர்களின் நினைவாகக் கொண்டாடப்படுகிறது. மகாத்மா காந்தி, தென்னாப்பிரிக்காவிலிருந்து மும்பை வந்து சேர்ந்த நாளின் (ஜனவரி 9, 1915) நினைவாக இந்த நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு இந்திய நகரத்தில் இவ்விழா கொண்டாடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழாவின்போது, வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கும் விருதுகள் வழங்கப்படுகின்றன.

நீதிக்கதை

 உயிரைக் காத்த உண்மை

நரி, ஓநாய், முயல் ஆகிய மூன்றும் சேர்ந்து ஒரு விவசாயின் பயிர்களையும், விளை பொருட்களையும் நாசம் செய்து வந்தன. இதனால் மிகவும் பாதிக்கப்பட்ட விவசாயி மூன்றையும் ஒழித்துக் கட்ட முடிவு செய்தான். ஒரு நாள் அந்த விவசாயி அவைகளைப் பிடிக்கப் பந்தயங்களை வைத்தான். ஒரு நாள் நரி, ஓநாய், முயல் மூன்றும் விவசாயி வைத்த பந்தயங்களில் மாட்டிக் கொண்டன. 

அவற்றைப் பிடித்த விவசாயி முதலில் முயலிடம் என் தோட்டத்திற்கு ஏன் வந்தாய்? என்று கேட்டான். அதற்கு முயல் முள்ளங்கி இலைகளைச் சாப்பிட வந்தேன். பசியினால் தான் இந்தத் தவறைச் செய்து விட்டேன். இனி ஒருபோதும் இங்கே வரமாட்டேன். என்னை மன்னித்துவிடு என்று உண்மையைக் கூறியது. அடுத்தது நரியிடம் கேட்டான். அதற்கு நரி முயல் போன்ற பிராணிகள் வந்து உனது தோட்டத்தை அழித்துவிடக்கூடாது என்று எண்ணித் தான் வந்ததாகக் கூறியது. 

அதற்கு அடுத்தபடியாக ஓநாயிடம் கேட்டான். அதற்கு அந்த ஓநாய் நீ திருடி வைத்துள்ள எங்களுக்கு உணவாக வேண்டிய ஆட்டுக்குட்டிகளை உண்ண வந்தேன் என்று ஆணவத்துடன் கூறியது. மூன்றையும் விசாரித்த விவசாயி தன் தவறை ஒப்புக்கொண்ட முயலை மட்டும் விடுவித்து நரியையும், ஓநாயையும் கொன்றான். 

நீதி :

உண்மை நிச்சயம் வெல்லும்

இன்றைய செய்திகள்

09.01.2026

⭐ பொதுமக்களின் வசதிக்காகவும், குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யவும் பொது மற்றும் ஏசி இல்லாத ரயில் பெட்டிகளின் உற்பத்தியை அடுத்த 2 ஆண்டுகளில் 9640 பொது மற்றும் ஏசி இல்லாத பெட்டிகளைத் தயாரிக்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.

⭐சென்னை நகரில் போகி அன்று எரிக்கப்படும்  பொருட்களால் புகை மண்டலம் ஏற்படுகிறது. மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்களால் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.  எனவே புகையில்லா போகிப் பண்டிகையைக் கொண்டாட தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் வேண்டுகோள்.

⭐பிலிப்பின்ஸ் நாட்டிலுள்ள மாயோன் எரிமலையின் உச்சியிலிருந்து அவ்வப்போது பாறைகள் சரிந்து விழுவதால் அப்பகுதியில் வசிக்கும் 729 குடும்பங்களைச் சேர்ந்த 2,800-க்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான 5-வது மற்றும் கடைசி ஆஷஸ் டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்றது.
ஆஷஸ் டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடிய ஸ்டார்க் தொடர் நாயகன் விருதை வென்றார். ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்டில் ஸ்டார்க் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

Today's Headlines

⭐The Government of India plans to manufacture 9640 general and non-AC coaches in the next 2 years. Additionally, the production of public and non-AC train coaches aims to provide convenience to the public and ensure safe travel at affordable fares.

⭐In Chennai city, the burning of materials on Bhogi day creates a thick cloud of smoke. This causes health problems such as breathing difficulties and eye irritation for the general public. Therefore, the Tamil Nadu Pollution Control Board appeals to the public to celebrate a smoke-free Bhogi festival.

⭐More than 2,800 people from 729 families living in the area are being evacuated due to occasional rock falls from the summit of the Mayon volcano in the Philippines.

 SPORTS NEWS 

🏀The 5th and final Ashes Test match between Australia and England was held in Sydney. Starc won the Man of the Series award for his outstanding performance in the Ashes Test series, and Starc took 5 wickets.

Covai women ICT_போதிமரம்