Tuesday, October 14, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 15.10.2025


 






திருக்குறள்: 

குறள் 963: 
பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய 
சுருக்கத்து வேண்டும் உயர்வு.

           
 உரை: 

செல்வம் பெருகியுள்ள காலத்தில் ஒருவனுக்குப் பண்பு வேண்டும், செல்வம் குறைந்து சுருங்கும் வறுமையுள்ள காலத்தில் பணியாத உயர்வு வேண்டும்.

பழமொழி :

True friends are stars that shine in the dark. 

உண்மையான நண்பர்களே இருளில் பிரகாசிக்கும் நட்சத்திரங்கள்.

இரண்டொழுக்க பண்புகள் :

1.உழைக்கப் பழகியவர் எங்கு இருந்தாலும் உயர்ந்த நிலையை அடைவர்

2.எனவே எப்போதும் உழைப்பை நாடுவேன்.

பொன்மொழி :

வெறுப்பவர் யாராக இருந்தாலும் நேசிப்பவர் நீங்களாக இருங்கள் -அன்னை தெரசா

பொது அறிவு : 

01.உலக விஞ்ஞானிகள் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

         நவம்பர் 10   November-10

02. புதன் கோள்  சூரியனை ஒரு முறை சுற்றிவர ஆகும் காலம் எவ்வளவு?

           88 நாட்கள்- 88 days

English words :

Abstract – Theoretical

Access – Entry

தமிழ் இலக்கணம்: 

 வினைச்சொல் என்பது ஒரு செயலை அல்லது நிகழ்வை உணர்த்தும் சொல். இது ஒரு வாக்கியத்தின் இன்றியமையாத பகுதியாகும், இது பொருள் என்ன செய்கிறது என்பதைக் குறிப்பிடுகிறது.
எடுத்துக்காட்டாக, "கண்ணன் ஓடினான்" என்ற வாக்கியத்தில் 'ஓடினான்' என்பது ஒரு வினைச்சொல் ஆகும்.

அறிவியல் களஞ்சியம் :

 "மூச்சு விடும்போது வெளிவிடப்படும் கார்பன் டை ஆக்சைடு கொசுக்களைக் கவரும் ஒரு முக்கிய ஈர்ப்புப்பொருள் என்பதால் மனிதர்கள் நேரடியாக ஆய்வில் உட்படுத்தப்படவில்லை. வாசனை வீசும் பூக்கள் மலரும் செடிகளையும், பழ மரங்களையும் இல்லாமல் செய்யும் மனிதன் அந்த நறுமணத்தை செயற்கையாக உருவாக்கினால் இது போன்ற பாதிப்புகளே ஏற்படும்.

தொலைதூர விண்வெளி ஆய்வுகளிலும் ஆழமான கடற்பரப்பில் ஆராய்ச்சிகளிலும் சாதனைகள் புரியும் மனிதனால் கொசுக்கள் என்ற இந்த சின்னஞ்சிறிய உயிரினங்களைக் கட்டுப்படுத்துவதில் இன்னும் வெற்றிபெற முடியவில்லை என்பதே உண்மை."

அக்டோபர் 15

இன்று இளைஞர் எழுச்சி நாள் ,உலக கைகள் கழுவும் தினம், உலக மாணவர் தினம் மற்றும் வெண்பிரம்பு பாதுகாப்பு தினம் .

APJ அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள்

ஆவுல் பக்கிர் ஜெய்னுலாபுதீன் அப்துல் கலாம் (A. P. J. Abdul Kalam, 15 அக்டோபர் 1931 – 27 சூலை 2015) பொதுவாக ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் என்று குறிப்பிடப்படுகின்ற இவர் ஒரு இந்திய அறிவியலாளரும், நிர்வாகியும் ஆவார். இவர் இந்தியாவின் 11 ஆவது குடியரசு தலைவராக பணியாற்றினார். இவர் தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரம் என்ற இடத்தில் பிறந்து வளர்ந்தார். திருச்சிராப்பள்ளியில் உள்ள தூய வளனார் கல்லூரியில் இயற்பியலும் சென்னை தொழில்நுட்பக் கல்லூரியில் விண்வெளி பொறியியலும் படித்தார்.

இவர் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும் (DRDO), இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும் (ISRO) ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் விண்வெளி பொறியாளராக பணியாற்றினார். ஏவுகணை மற்றும் ஏவுகணை ஏவல் வாகன தொழில்நுட்ப வளர்ச்சியில் கலாமின் பங்களிப்பால், இவர் இந்திய ஏவுகணை நாயகன் என்று பிரபலமாக அறியப்படுகிறார். 1998 ஆம் ஆண்டில் நடந்த போக்ரான் - II அணு ஆயுத பரிசோதனையில் நிறுவன, தொழில்நுட்ப, மற்றும் அரசியல் ரீதியாக இவர் முக்கிய பங்காற்றினார்.

2002 ஆம் ஆண்டில், இவர் இந்தியக் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் "மக்கள் ஜனாதிபதி" என்று பரவலாகக் குறிப்பிடப்படுகின்றார். பிற்கால வாழ்வில் இவர் கல்வி, எழுத்து மற்றும் பொதுச் சேவைக்கு திரும்பினார். பல கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் வருகைப் பேராசிரியர் ஆக பணியாற்றினார்.

இவர் இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா உட்பட, பல மதிப்புமிக்க விருதுகளை பெற்றுள்ளார். கலாம் தனது இந்தியா 2020 என்ற புத்தகத்தில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற திட்டங்களை முன்மொழிந்துள்ளார். கலாம் தனது ஊக்குவிக்கும் முறையிலான பேச்சுகளுக்காகவும், இந்திய மாணவர் சமூகத்துடன் நடத்திய கலந்துரையாடல்களுக்காகவும் பெரிதும் அறியப்படுகிறார். 

நீதிக்கதை

 மீனவனின் புத்திசாலித்தனம்


மன்னருக்கு மீன் கொண்டு வந்தான் ஒரு மீனவன் அரிதான இந்த மீனை தாங்கள் வாங்குவது தான் பொருத்தமாக இருக்கும் என்றான். மன்னரும் மகிழ்ந்து அவனுக்கு ஐந்தாயிரம் பொற்காசுகள் கொடுத்தார். மகாராணி கொதித்து விட்டார். ஒரு அற்ப மீனுக்கு இவ்வளவு பணமா? அதை திரும்ப வாங்குங்கள் என்றாள். முடிந்த வியாபாரத்தை மாற்றுவது அழகல்ல என்று மன்னர் மறுத்தார். சரி அவனை கூப்பிட்டு இந்த மீன் ஆணா? பெண்ணா? என்று கேளுங்கள். ஆண் மீன் என்று அவன் சொன்னால் பெண் மீன்தான் வேண்டும் என்றும் பெண் மீன் என்று சொன்னால் ஆண் மீன் தான் வேண்டும் என்றும் கேளுங்கள்.


எப்படியும் அவனிடமிருந்து பொற்காசுகளை திரும்ப பெற்றே ஆக வேண்டும் என்றாள் மகாராணி. மீனவன் திருப்பி அழைக்கபட்டான். கேள்வி கணையை மகாராணி தொடுத்தாள். அவன் உஷாராக பதில் சொன்னான் இது ஆணுமில்லை, பெண்ணுமில்லை இரண்டின் குணங்களையும் கொண்ட அதிசய மீன். அதனால் தான் அதை மன்னருக்கு கொண்டு வந்தேன் என்றான். இந்த பதிலால் நெகிழ்ந்த மன்னர் மேலும் ஐந்தாயிரம் பொற்காசுகளை கொடுத்தார். அதிலிருந்து ஒரு காசு தரையில் விழுந்து ஓடியது. மீனவன் அதை தேடி எடுத்தான். மகாராணி கோபத்தின் உச்சிக்கே போனாள்.


பேராசைக்காரன், கீழே விழுந்த காசை யாராவது வேலைக்காரர்கள் எடுத்து போகட்டுமே என்று விடவில்லை பாருங்கள் என்றாள் மன்னரிடம். அவன் நிதானமாக திரும்பிச் சொன்னான். நான் பேராசையில் அதை எடுக்கவில்லை மகாராணி! அந்த நாணயத்தில் மன்னரின் உருவம் இருக்கிறது. யாராவது தெரியாமல் அதை மிதித்தால் கூட என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. இதனால் இன்னும் நெகிழ்ந்த மன்னர் மேலும் ஐந்தாயிரம் பொற்காசுகளை கொடுத்தார். 


நீதி : யாரிடம் எப்போது எப்படிப் பேச வேண்டும் என்று தெரிந்திருப்பவர்களே வெற்றியடைகிறார்கள்.

இன்றைய செய்திகள்

15.10.2025


⭐தீபாவளி திருடர்களை பிடிக்க டிரோன்கள் மூலம் போலீசார் தீவிர கண்காணிப்பு- அவசர உதவிக்கு செல்போன் எண்கள் அறிவிப்பு

⭐இந்தாண்டு வடகிழக்கு பருவமழை சீசனில் புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை சுமார் 3 புயல்கள் தாக்கக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

⭐மரியா கொரினாவுக்கு நோபல் பரிசு: நார்வேயில் உள்ள தனது தூதரகத்தை மூடியது வெனிசுலா

⭐2025ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு கூட்டாக அறிவிப்பு ஜோயல் மோகிர்,
பிலிப் அகியோன்
மற்றும் பீட்டர் ஹோவிட் ஆகியோருக்கு கூட்டாக வழங்கப்படுகிறது

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தி தமிழக வம்சாவளி வீரர் முத்துசாமி அசத்தல்.

Today's Headlines

⭐Police department use drones for  monitoring Diwali thieves and they have announced emergency phone numbers also.

⭐The Meteorological Department has warned that around 3 cyclones may hit Puducherry and its surrounding areas during this year's northeast monsoon season.

⭐ Venezuela closes its embassy in Norway after Nobel Prize announcement for Maria Corina.

⭐The 2025 Nobel Prize in Economics has been awarded jointly to Joel Mogir, Philip Achion, and Peter Howitt

 *SPORTS NEWS*

🏀  Batsman Muthusamy who is of Tamil Nadu ancestry, took 11 wickets in the Test against Pakistan.

Covai women ICT_போதிமரம்

Monday, October 13, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 14.10.2025


  






திருக்குறள்: 

குறள் 961: 

இன்றி அமையாச் சிறப்பின ஆயினும் 
குன்ற வருப விடல்.
                     
உரை: இன்றியமையாத சிறப்பை உடைய செயல்களே ஆயினும் குடிப்பெருமை தாழுமாறு வரும் செயல்களை ஒருவன் செய்யாமல் விட வேண்டும்.

பழமொழி :

Respect given is respect earned.   

மரியாதை கொடுத்தால், மரியாதை தானாக கிடைக்கும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1.உழைக்கப் பழகியவர் எங்கு இருந்தாலும் உயர்ந்த நிலையை அடைவர்

2.எனவே எப்போதும் உழைப்பை நாடுவேன்.

பொன்மொழி :

படைப்பாற்றலின் கதவை திறக்கக்கூடிய சாவி கல்வி -அகதா கிறிஸ்டி

பொது அறிவு : 

1.இந்தியாவில் கையால் நெய்யப்பட்ட கம்பளங்களுக்கு மிகவும் பிரபலமான நகரம் எது? 


     பதோஹி -உத்தரபிரதேசம் 

           Bhadohi - Uttar Pradesh,

2. மூளையின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகளை ஆய்வு செய்ய பயன்படும் கருவியின் பெயர் என்ன?

              என்செபலோகிராப்

                 Encephalography

English words :

Frigid - extremely cold, மிகவும் குளிர்ந்த தன்மை

Acknowledge – to accept or admit.ஒப்புக்கொள்

தமிழ் இலக்கணம்:  

 தமிழ் சொற்கள் நான்கு முக்கிய வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன: பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், மற்றும் உரிச்சொல் ஆகும். 
பெயர்ச்சொல்: இது ஒரு நபரையோ, பொருளையோ, இடத்தையோ அல்லது கருத்தையோ குறிக்கும் சொல் ஆகும். (எ.கா: மரம், சென்னை, ஓடுதல், அழகு).

அறிவியல் களஞ்சியம் :

 ஒவ்வொரு மனிதருக்கும் தனிப்பட்ட நறுமணம் இருப்பதால், வாசனை சோப்புகளால் ஏற்படும் பாதிப்புகள் மனிதருக்கு மனிதர் வேறுபடுகிறது. மனிதர்கள் தேர்ந்தெடுக்கும் சோப்புகளின் வாசனையும் அவர்களில் சிலரை மட்டும் கொசு கடிக்க ஒரு காரணமாக அமையலாம் என்று ஐசயன்ஸ் (iScience) என்ற ஆய்விதழில் வெளிவந்துள்ள இந்த கட்டுரை கூறுகிறது.

அக்டோபர் 14

அக்டோபர் 14 - உலக தர நிர்ணய நாள் (World  Standards  Day)

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 14 அன்று, ISO (தர நிர்ணயத்திற்கான சர்வதேச அமைப்பு), IEC (சர்வதேச மின்தொழில்நுட்ப ஆணையம்) மற்றும் ITU (சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம்) ஆகியவற்றின் உறுப்பினர்கள் உலக தர நிர்ணய தினத்தைக் கொண்டாடுகிறார்கள், இது சர்வதேச தரங்களாக வெளியிடப்படும் தன்னார்வ தொழில்நுட்ப ஒப்பந்தங்களை உருவாக்கும் உலகெங்கிலும் உள்ள ஆயிரக்கணக்கான நிபுணர்களின் கூட்டு முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் ஒரு தினமாக கொண்டாடப்படுகின்றது.

நீதிக்கதை

சொர்க்கமும் நகரமும்


அது ஒரு அழகிய ஏரி. அந்த ஏரியில் அழகிய ஆமை ஒன்று தனது இரண்டு வாத்து நண்பர்களுடன் வாழ்ந்து வந்தது. தினமும் அந்த இரு வாத்துகளை ஆமை சந்திப்பது வழக்கம். ஒருநாள் அந்த இரண்டு வாத்துகளும் வருத்தத்துடன் காணப்பட்டன. இதைக்கண்ட ஆமை, ஏன் இருவரும் வருத்தத்துடன் உள்ளீர்கள் என்று கேட்டது.


பல வருடங்களாக மழை பெய்யாத காரணத்தால் இந்த ஏரி வறண்டு வருகிறது. இன்னும் சில காலத்திற்கு பிறகு இங்கு முற்றிலும் நீர் வறண்டுவிடும். எனவே நாங்கள் இருவரும் பக்கத்துக்கு ஊரில் உள்ள ஏரிக்குச் செல்ல இருக்கிறோம் என்று வாத்துகள் கூறியது. என்னை விட்டு செல்வதற்கு உங்களுக்கு எப்படி மனம் வந்தது. நீர் குறைந்தால் உங்களுக்கு உணவு தான் குறையும், எனக்கோ உயிரே போய்விடும். என்மீது உங்களுக்கு அன்பு இருக்குமானால் என்னையும் அழைத்துச் செல்லுங்கள், என்றது ஆமை. உனக்கு தான் இறக்கைகள் கிடையாதே! உன்னை அழைத்துப்போக எங்களால் எப்படி முடியும்? என்றது வாத்து.


அதற்கு ஆமை ஓர் உபாயம் செய்யலாம், ஒரு நீண்ட குச்சியை எடுத்து வாருங்கள். நான் நடுவில் என்னுடைய பற்களால் கொட்டியாய் பிடித்துக் கொள்கிறேன். நீங்கள் இருபக்கமும் பிடித்து தூக்கிக் கொண்டு பறந்து செல்லுங்கள், என்றது ஆமை. நாங்கள் உயரப்பறக்கும்போது நீ வாயைத்திறந்தால் கீழே விழுந்து இறந்து விடுவாய் என்று வாத்துகள் கூறியது.


அப்படியானால் பறக்கும்போது நான் வாய் பசாமல் இருக்கின்றேன் என்று ஆமை கூறியது. இரு வாத்துகளும் இருபக்கமும் குச்சியை பிடித்து பறக்க நடுவில் ஆமை வாயில் பற்றிக்கொண்டு பறந்தன. சிறிது தூரம் பறந்தவுடன் ஆமை சந்தோஷத்தில் துள்ளிகுதிக்க ஆரம்பித்தது. இரு வாத்துகளும் ஆமையிடம் சிறிது நேரம் அமைதியாய் இரு. இல்லாவிடில் நீ கீழே விழுந்து விடுவாய், என்று கூறியது.


செல்லும் வழியில் வாத்துகள் ஆமையுடன் பறந்து சொல்வதைப் பார்த்த மக்கள் வாத்துகள் எதையோ தூக்கிக்கொண்டு கொண்டு போகின்றன என கூச்சலிட்டனர். ஆமையின் கெட்ட நேரம் அந்த வார்த்தைகள் அதன் காதில் விழுந்தது. இந்த மக்கள் ஏன் இப்படி கூச்சலிடுகின்றனர் என வாய்திறந்து பேச அது பிடித்திருந்த பிடி விட்டுவிட கீழே விழத்தொடங்கியது. கீழே விழுந்த ஆமை உடல் சிதறி இறந்தது.


நீதி: வருமுன் காப்போனும், சமயோசித புத்தியுடையவனும் சுகம் பெறுவார்கள். 

இன்றைய செய்திகள்

14.10.2025

⭐2025ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு கூட்டாக அறிவிப்பு ஜோயல் மோகிர்,
பிலிப் அகியோன்
மற்றும் பீட்டர் ஹோவிட் ஆகியோருக்கு கூட்டாக வழங்கப்படுகிறது

⭐ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை - அமைச்சர் சிவசங்கர்

⭐ அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் போன்று பேசி 'டிஜிட்டல் கைது' மூலம் ரூ.100 கோடி அளவுக்கு மோசடி செய்த 4 பேரை குஜராத்தின் சூரத்தில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

⭐இரண்டு கட்டங்களாக 20 பிணைக்கைதிகளையும் விடுவித்தது ஹமாஸ்: இஸ்ரேலில் உறவினர்கள் மகிழ்ச்சி

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀ஜப்பான் ஸ்குவாஷ் ஓபன்: இந்திய வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா சாம்பியன்.

எகிப்தை சேர்ந்த 3ஆம் நிலை வீராங்கனையை வீழ்த்தினார்.
38 நிமிடத்தில் வீழ்த்திய ஜோஷ்னாவுக்கு 15 ஆயிரம் அமெரிக்க டாலர் பரிசு வழங்கப்பட்டது.

Today's Headlines

⭐Nobel Prize announced for 3 people Joel Mogir, Philip Achion and Peter Howitt are awarded jointly.

⭐Strict action will be taken if additional fares are charged on Omni buses said  Minister Sivashankar

⭐ Enforcement Directorate officials have arrested 4 people in Surat, Gujarat, for allegedly defrauding the public of Rs 100 crore through 'digital arrest' by impersonating Enforcement Directorate officials.

⭐Hamas releases 20 hostages in two phases: Relatives in Israel rejoice.


 *SPORTS NEWS* 

🏀Japan Squash Open: Indian player Joshna Chinappa is the champion. She defeated the 3rd seeded player from Egypt. Joshna, who defeated her in 38 minutes, was awarded a prize of 15 thousand US dollars.

Covai women ICT_போதிமரம்

Sunday, October 12, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 13.10.2025

கிரீன்விச்சில் உள்ள ராயல் ஆய்வகம், எண்கோண அறையின் மேல் நேரப் பந்து பொருத்தப்பட்டுள்ளது.

  






திருக்குறள்: 

குறள் 782: 

நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப் 
பின்னீர பேதையார் நட்பு       

விளக்க உரை: 

அறிவுடையவரின் நட்பு பிறை நிறைந்து வருதல் போன்ற தன்மையுடையது, அறிவில்லாதவரின் நட்பு முழுமதி தேய்ந்து பின் செல்லுதல் போன்ற தன்மையுடையன.

பழமொழி :

Teamwork makes the dream work.    

குழு முயற்சி தான் கனவுகளை நிறைவேற்றும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1.உழைக்கப் பழகியவர் எங்கு இருந்தாலும் உயர்ந்த நிலையை அடைவர்

2.எனவே எப்போதும் உழைப்பை நாடுவேன்.

பொன்மொழி :

எல்லா மக்களிடமும் குறைபாடுகள் மட்டுமல்ல, சிறப்பான ஆற்றலும் இருக்கத்தான் செய்யும்- கர்மவீரர் காமராஜர்

பொது அறிவு : 

01.பெங்களூர் நகரை 

வடிவமைத்தவர் யார்?

கெம்பே கவுடா (1526–1574) 

Kempe Gowda  (1526-1574)

02.இந்தியாவின் யூனியன் பிரதேசமான லட்சத்தீவுகளின் தலைநகரம் எது?

            கவரட்டி - Kavaratti

English words :

Allowed -permitted

Aloud- clearly heard

Grammar Tips: 

 வன் தொடர் குற்றியலுகரம்/ மென் தொடர் குற்றியலுகரம் – ஒற்றெழுத்து மிகுதல் வேறுபாடு 
எ.கா 
எடுத்துச் சென்றான், எழுந்து சென்றான். இந்த எடுத்துக்காட்டுகளைப் பாருங்கள். இவை இரண்டும் வினைச்சொற்கள். எடுத்து-க்கு வலிமிகுந்தது. எழுந்து-க்கு வலி மிகவில்லை.

இலக்கணத்தில் குற்றியலுகரம் பற்றி அறிந்திருப்போம். எடுத்து, எழுந்து ஆகியன உகரத்தில் (து) முடிவதால் இவை குற்றியலுகரச் சொற்கள்.

எடுத்து என்பதில் கடைசி எழுத்துக்கு முன்னுள்ள எழுத்து வல்லின மெய் என்பதால், அது வன்தொடர்க் குற்றியலுகரம். எழுந்து என்பதில் கடைசிக்கு முன்னெழுத்து மெல்லின மெய் என்பதால் மென்தொடர்க் குற்றியலுகரம்.

வன் தொடர்க் குற்றியலுகரத்திற்கு வலிமிகும். 'எடுத்துச் சென்றான்' என்று வந்தது. மென் தொடர்க் குற்றியலுகரத்திற்கு வலிமிகாது.

'எழுந்து சென்றான்' என்றானது.

அறிவியல் களஞ்சியம் :

 பல நறுமணம் வீசும் மலர்கள், பழங்களின் வாசனையுடன் இன்று பல பன்னாட்டு நிறுவனங்கள் சோப்புகளை உற்பத்தி செய்கின்றன. இந்த வாசனை சோப்புகளைப் பயன்படுத்தும் மனிதர்களிடம் அதே போன்ற வாசனை வீசுகிறது. இரத்தம் குடிக்காமல் அதை ஈடு செய்ய அவதிப்படும் கொசுக்கள் அதற்கு ஈடாக இந்த நறுமணத்தை அறிந்து தேன் கிடைக்கும் என்று கருதி வாசனையுடன் இருக்கும் மனிதர்களைக் கடிக்கின்றன என்று வெர்ஜீனியா பாலிடெக்னிக் கழகம் மற்றும் ஸ்டேட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளரும், ஆய்வுக்குழுவின் தலைவருமான க்ளெமெண்ட் வினோஜர் (Clement Vinauger) கூறுகிறார்.

அக்டோபர் 13

  • 1884 – அனைத்துலக நேரம் கணிக்கும் இடமாக இலண்டனில் உள்ள கிரீன்விச் (Greenwich) தெரிவு செய்யப்பட்டது.

நீதிக்கதை

நாளைய உணவு


சில வெள்ளாடுகளும், செம்மறி ஆடுகளும் தன் குட்டிகளுடன் புல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது செம்மறி ஆட்டுக்குட்டிகள் நுனிக் கொழுந்துகளாகப் பார்த்து மேய்ந்து கொண்டிருந்தன. அதைக்கண்ட வெள்ளாடு, என் அருமை செம்மறிக்குட்டிகளே, இப்படி நுனிக்கொழுந்தாக மேய்ந்தால் நாளை நமக்கு உணவு கிடைக்காது. அதனால் கூடுமானவரை, நுனிக்கொழுந்தைக் கடிக்காதீர்கள். இன்று ஒருவருக்கு மட்டுமே உணவாகும் அது, தழைத்து வளர்ந்தால் நாளை நம் அனைவருக்கும் உணவாகும் என்றது.

அதைக்கேட்ட செம்மறி ஆடு, நீ உன் வேலையைப்பார். என் குட்டிகளுக்கு எது இஷ்டமோ, அதைத்தான் உண்ணும். நீ ஒன்றும் அதைச்சாப்பிடு, இதைச்சாப்பிடாதே என கட்டளையிட வேண்டாம் என்றது காட்டமாய். ஆனால் வெள்ளாடு, தன் குட்டிகள் நுனிக் கொழுந்தை கடிக்கவிடாமல் கவனமாய் பார்த்துக்கொண்டது. 

சில நாட்கள் சென்றன. செம்மறி ஆடுகள் மேய்ந்த இடத்தில் ஒரு இலை தழைக்கூட காணவில்லை. நுனிக்கொழுந்து கடிபட்ட செடிகள் தழைக்க நாளாகும் அல்லவா? ஆனால், வெள்ளாடுகள் மேய்ந்த இடங்களில் பசுமை தெரிந்தது. நுனிக்கொழுந்துகள் காக்கப்பட்டதால், இப்பொழுது அவைகள் சாப்பிடும் பக்குவத்தில் தழைத்து வளர்ந்திருந்தன. வெள்ளாடுகள் வழக்கம்போல் எந்தத் தடையுமியின்றி மேயத்தொடங்கின. ஆனால், செம்மறி ஆடுகள் செய்வது அறியாது திகைத்து நின்றன.

அடுத்தவர் பேச்சைக் கேட்பதா...? என நினைத்த செம்மறி ஆடுகள், தங்களுடைய அடங்காத குணத்தால் இப்பொழுது திண்டாடுவதை உணர்ந்தன. அருகில் கிடைத்த உணவை பாதுகாக்கத் தெரியாததால், அவைகள் வேறு இடம் தேடிச் சென்றன. இன்றைக்கு நிறைய உணவு கிடைக்கிறது என்பதற்காக, அவற்றை வீணாக்கக் கூடாது. அது நம்முடைய நாளைய உணவாகக் கூட இருக்கலாம் என்பதை செம்மறி ஆடுகள் உணர்ந்து கொண்டன.


நீதி :

சேமிக்க பழக வேண்டும். 

இன்றைய செய்திகள்

13.10.2025

⭐பள்ளிகளில் யு.பி.ஐ. மூலம் கல்வி கட்டணம் வசூல்- மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

⭐குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் காலை உணவு திட்டம்- முதலமைச்சர் பெருமிதம்.

⭐அமெரிக்கா - எகிப்து இணைந்து நடந்தும் காசா போர் நிறுத்த உச்சிமாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 80 ரன் குவிப்பு: இரண்டு முக்கிய சாதனைகள் நிகழ்த்திய ஸ்மிரிதி மந்தனா. ஒரே வருடத்தில் ஆயிரம் ரன்களை கடந்துள்ளார்.மேலும், இந்தப் போட்டியில் அவர் 58 ரன்களைக் கடந்த போது, மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் 5000 ரன்களைக் கடந்த ஐந்தாவது வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார். அதிலும், 5000 ரன்களை குறைந்த போட்டிகளில் எட்டிய வீராங்கனை என்ற உலக சாதனை படைத்தார்.

Today's Headlines

TODAY'S HEADLINES*

⭐Collection of tuition fees through UPI in schools - Central Government instructs states 

⭐Breakfast program to improve children's health - Chief Minister is proud.

⭐US-Egypt joint summit to ceasefire Gaza war invites PM Modi to participate in that  summit.

 *SPORTS NEWS* 

🏀 Smriti Mandhana scores 80 runs against Australia. She made two important achievements 
* She crossed 1000 runs 
* with 58 runs she crossed 5000 runs.

Covai women ICT_போதிமரம்

Thursday, October 9, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.10.2025

உலக மனநல நாள்

  






திருக்குறள்: 

குறள் 781: 

செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் 
வினைக்கரிய யாவுள காப்பு. 

விளக்க உரை: 

நட்பைப்போல் செய்து கொள்வதற்கு அருமையானவை எவை உள்ளன, அதுபோல் தொழிலுக்கு அரிய காவலாக இருப்பவை எவை உள்ளன.

பழமொழி :

One good deed teaches more than a hundred words. 

ஒரு நல்ல செயல் நூறு வார்த்தைகளை விட அதிகம் கற்பிக்கும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1.மின்சாரம் போன்ற எரி பொருட்கள் வீணாக்காமல் சிக்கனமாக உபயோகிப்பேன்.

2.சூரிய சக்தியை பயன்படுத்த முயற்சிப்பேன்.

பொன்மொழி :

பயத்தை வெல்ல விரும்பினால், வீட்டில் உட்கார்ந்து கொண்டு அதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தால் மட்டும் போதாது.வெளியில் வந்து செயலில் இறங்க வேண்டும்- டேல் கார்னகி

பொது அறிவு : 

01.உலகின் மிகப்பெரிய விதை எது?

இரட்டைத் தேங்காய் double coconut எனப்படும் "கோகோ-டி-மெர்
(Coco de Mer)

02.ஒளியின் செல்லும் வேகத்தை முதன்முதலில் கண்டுப்பிடித்த
விஞ்ஞானி யார்?


ஓலே ரோமர் (Ole Rømer) 

English words :

Kind - friendly and helpful.

Music - organised sound.

தமிழ் இலக்கணம் :

 இரண்டு பெயர்ச்
சொற்களுக்கிடையில் ஒற்று  பெரும்பாலும் தோன்றும்
எ. கா. தண்ணீர்க் குடம். பள்ளிக் கூடம். இந்த எடுத்துக்காட்டுகளைக் கவனியுங்கள். தண்ணீர், குடம் - இரண்டும் பெயர்ச்சொற்கள். 
பள்ளி, கூடம் - இரண்டும் பெயர்ச்சொற்கள். 
இவை தொடராய் ஆகும்பொழுது இரண்டாம் சொல் எந்த வல்லின மெய்யில் தொடங்குகிறதோ அந்த ஒற்றெழுத்து மிகுந்தது. கூடுதலாய்த் தோன்றியது.

அறிவியல் களஞ்சியம் :

 உணவைச் சேகரித்து வைப்பது எறும்பின் வேலைகளில் மிக முக்கியமானது. ஆனால் இப்படி சேகரித்துவைக்கும் உணவு, மழைக்காலத்தில் பூசனம் பூத்து கெட்டுப்போய் விடாமல் இருக்க அவை ஒரு வேதிப்பொருளை பயன்படுத்துகின்றன. அந்த வேதிப்பொருளும், அதன் இயல்பும் தற்போது கண்டறியப்பட்டு மருந்து தயாரிப்பில், அது பயன்படுத்தப்படுகிறது.

அக்டோபர் 10

உலக மனநல நாள்

உலக மனநல நாள் (World Mental Health Day) ஆண்டுதோறும் அக்டோபர் 10 அன்று உலகளாவிய மனநலக் கல்வி, விழிப்புணர்வு மற்றும் சமூக மனப்பான்மைக்கு எதிராக வாதிடும் நாளாக கடைப்பிடிக்கப்படுகின்றது. இந்நாள் முதன் முதலாக 1992 ஆம் ஆண்டில் உலக மனநல மையத்தின் முன்னெடுப்பில் கொண்டாடப்பட்டது. இவ்வமைப்பில் 150 இற்கும் மேற்பட்ட நாடுகள் உறுப்புரிமை வகிக்கின்றன. ஆத்திரேலியா போன்ற சில நாடுகளில் இந்நாள் மனநல வாரமாக ஒரு கிழமைக்கு கொண்டாடப்படுகிறது.

நீதிக்கதை

 அழகிய ரோஜா செடி


அது ஒரு வசந்த காலம். பூங்காவில் எண்ணற்ற மரம் செடி கொடிகள் இருந்தன. அதில் ஒரு ரோஜாச் செடியும், கள்ளிச்செடியும், சவுக்கு மரமும் அருகருகே இருந்தன. வசந்த கால காலை நேரம். அந்த ரோஜாச்செடி அழகாகப் பூத்திருந்தது. அதைக் கடந்து சென்ற அனைவரும் ஒரு நொடி நின்று பார்த்து சென்றனர். அந்தச் சவுக்கு மரம் ரோஜாச் செடியிடம் நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய். பூங்காவிற்கு வரும் அனைவரும் உன்னைப் பார்த்து மகிழ்ந்து செல்கின்றனர் என்றது. ரோஜாச் செடி வெட்கத்தில் நாணி அதன் இதழ்கள் மேலும் சிவந்தன. கர்வமும் தலைக்கு ஏற தொடங்கியது.


அருகே இருந்த கள்ளிச்செடியை பார்த்து இவ்வளவு கோரமான தோற்றத்தைக் கொண்ட நீ என்னருகே இருப்பது எனக்கு அவமானமாக உள்ளது என்று கூறி தள்ளிப்போக முயன்றது. ஆனால் ரோஜா செடியால் தள்ளிப்போக முடியவில்லை. இவ்வாறு தினசரி அந்த கள்ளிச்செடியை குறை கூறிக்கொண்டே இருந்தது ரோஜா செடி. ஆனால் இதற்கு அந்த கள்ளிச்செடி எந்த முக சுளிப்பும் கோவமும் படாமல் இருந்தது.

நாட்கள் ஓடின. கோடைக்காலம் சுட்டெரிக்க தொடங்கியது. கோடைக்காலத்தில் வெட்பத்தினால் பூங்காவில் பார்வையாளர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. தண்ணீர் பற்றாக்குறையும் வந்தது. பூங்கா நிறுவனத்தினரால் ஒழுங்காகத் தண்ணீர் ஊற்றிப் பராமரிக்க முடியவில்லை. ரோஜா செடியும் வாட தொடங்கியது. ஆனால் கள்ளிச்செடி எப்போதும் போல இருந்தது. குருவிகள் பல வந்து கள்ளிச்செடி மீது அமர்ந்து அதைக் கொற்றி நீர் குடித்தன. இதைக்கண்ட ரோஜா செடி சவுக்கு மரத்திடம் குருவிகள் கொற்றுவதால் கள்ளிச்செடிக்கு வலிக்காதா? என்று கேட்டது. 

சவுக்கு மரமோ கள்ளிச்செடிக்கு வலிக்கத் தான் செய்யும் இருந்தாலும் அதைத் தாங்கி கொண்டு தாகத்தில் தவிக்கும் குருவிகளுக்கு தண்ணீர் கொடுப்பது தனக்குக் கிடைத்த வரமாகக் கருதுகிறது. நீயும் கேட்டுப்பார். கள்ளிச்செடி சம்மதித்தால் குருவிகளின் உதவியினால் உனக்குத் தண்ணீர் கிடைக்க வாய்ப்புள்ளது என்று கூறியது. கேட்க முகமில்லாமல் ஆனால் உயிர் வாழ நீர் இல்லாததால் அந்த ரோஜா செடி. கள்ளிச்செடியிடம் நீர் கேட்டது. கள்ளிச்செடியும் குருவியின் உதவியால் ரோஜா செடிக்கு நீர் கொடுத்து உதவியது. தோற்றத்தை வைத்து யாரையும் மதிப்பிடக்கூடாது என ரோஜா செடி புரிந்துகொண்டது.

இன்றைய செய்திகள்

10.10.2025

⭐இலங்கை சிறையில் இருந்து மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்- முதலமைச்சர் வலியுறுத்தல்

⭐ குடியிருப்புகள், தெருக்கள், சாலைகளில் உள்ள ஜாதிப் பெயர்களை நீக்கும் பணிகளை நவம்பர் 11-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

⭐ குழந்தைகளின் மனநலனைக் காக்கும் விதமாக, 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த டென்மார்க் அரசு தடை விதித்துள்ளது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀மதுரையில் கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்தார் தோனி.
ரூ.325 கோடி செலவில் இந்த ஸ்டேடியம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த மைதானத்தில் டி.என்.பி.எல்., ஐ.பி.எல்., ரஞ்சி கிரிக்கெட் போன்ற போட்டிகள் நடக்க வாய்ப்புள்ளது.

Today's Headlines

⭐The Chief Minister has urged that steps have to be taken to rescue fishermen from Sri Lankan prisons.

⭐ The Tamil Nadu government has issued an order stating that the removal of caste names from residential areas, streets, and roads is to be completed by November 11th.

⭐ To protect children's mental health, the Danish government has banned children under the age of 15 from using social media.

 SPORTS NEWS 

🏀Dhoni inaugurated the cricket stadium in Madurai, which was built at a cost of Rs. 325 crores and is likely to host matches like TNPL, IPL, and Ranji cricket.

Covai women ICT_போதிமரம்