Wednesday, September 10, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 11.09.2025

மகாகவி பாரதி







திருக்குறள்: 

குறள் 541: 

ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந் தியார்மாட்டும் 
தேர்ந்துசெய் வஃதே முறை. 

விளக்க உரை: 

யாரிடத்திலும் (குற்றம் இன்னதென்று) ஆராய்ந்து, கண்ணோட்டம் செய்யாமல் நடுவுநிலைமைப் பொருந்தி (செய்யத்தக்கதை) ஆராய்ந்து செய்வதே நீதிமுறையாகும்.

பழமொழி :

Hope is the anchor of the soul. 

நம்பிக்கையை ஆன்மாவின் நங்கூரம்.

இரண்டொழுக்க பண்புகள் :

1 என்னால் இயன்ற அளவு மரக்கன்றுகள் நட்டு வளர்ப்பேன்.

2 இயற்கை சமநிலை காப்பேன்.

பொன்மொழி :

தொல்லைகளும்,பிரச்சனைகளும் இல்லை என்றால் உழைப்பும் வெற்றியும் நம்மை நெருங்காது...

டாக்டர். கலாம்

பொது அறிவு : 

01.எந்த ஆண்டு சென்னை மாகாணம் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது?

1969

02. பாலைவனம் இல்லாத கண்டம் எது?

ஐரோப்பா- Europe

English words :

set up - arrange, establish,அமைத்தல், நிறுவுதல், அல்லது கட்டமைப்பு

Grammar Tips: 

A modal verb is an auxiliary (or "helping") verb that adds meaning to another verb in a sentence

Ex: I CAN play.

Here can and play both are verbs. Can is the modal verb.

 After a modal verb, the main verb stays in the basic form; it does not change with subject or time.

அறிவியல் களஞ்சியம் :

 வெப்பநிலை உயர்வால் கடல் வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. மனிதர்களின் நடவடிக்கையால் 2050க்குள் இது இரண்டு மடங்காக அதிகரிக்கும் என ஆய்வு எச்சரித்துள்ளது. 90 சதவீத உலக வர்த்தகம் கடல் வழியாகவே நடைபெறுகிறது. கடலில் மீன்வளம் குறைவு, கடல் மட்ட உயர்வு, அமிலமயமாக்கல், மாசுபாடு குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். இதில் குறையும் பவளப்பாறைகள், நன்னீர் - கடல் நீர் சமநிலையின்மை, இனப்பெருக்க இடங்களின் இழப்பு, அழியும் சதுப்புநிலங்கள் ஆகிய பாதிப்பால் கடல்வாழ் உயிரினங்களுக்கு அச்சுறுத்தல் உருவாகியுள்ளது.

செப்டம்பர் 11

மகாகவி பாரதியின் நினைவுநாள்

சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, திசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921) கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர்.

பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீன தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.தமிழ்தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். எட்டப்ப நாயக்கர் மன்னர் இவருடைய கவித்திறனை மெச்சி, கலைமகள் எனப் பாெருள்படும் பாரதி என்ற பட்டம் வழங்கினார்.பாரதியாரின் நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949-ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமை ஆக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும். இவரை சிந்துக்குத் தந்தைசெந்தமிழ்த் தேனீபுதிய அறம் பாட வந்த அறிஞர்மறம் பாட வந்த மறவன் என்றெல்லாம் பாரதிதாசன் இவரைப் புகழ்ந்துள்ளார். இவர் இந்தியாவிஜயா முதலான இதழ்களை நடத்தி, விடுதலைப் போருக்கு வித்திட்டவர்.

உலக வர்த்தக மையம் தாக்குதல் 

2001 – செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள்நியூயார்க் நகரின் உலக வர்த்தக மையம் மற்றும் பெண்டகன் மீது அல் காயிதா தீவிரவாதிகளினால் நடத்தப்பட்ட வான் தாக்குதல்களில் மொத்தம் 2,974 பேர் கொல்லப்பட்டனர்

நீதிக்கதை

 ஜெகனின் புதுசட்டை

பிரபு என்பவன் ஆறாம் வகுப்பு படித்து வந்தான். அவனுக்கு கொஞ்சம் முரட்டு சுபாவம். கோபம் அதிகம் உள்ளவன். யாராவது ஒருவரிடம் வம்பு செய்துகொண்டே இருப்பான். அவன் ஆசிரியர் ரவி. பிரபுவை பெஞ்சின் மீது ஏறி நிற்கச் சொன்னார். பிரபு முணுமுணுத்துக் கொண்டே நின்றான். 

ஜெகன் என்பவன் கிளாஸ் லீடர். அவன்தான் என்னைப் பற்றி ஆசிரியரிடம் சொல்லியிருப்பான் என்று அவன்மீது கோபமாக இருந்தான். 

பள்ளிக் கூடம் விட்டதும் வெளியே வந்த ஜெகனிடம் டேய் வாத்தியார் கிட்ட என்னைப்பத்தி என்னா சொன்ன என்று கோபமாய் கேட்டு அவன் சட்டையைப் பிடித்து ஓங்கி அவன் முகத்தில் ஒரு குத்து விட்டான். ஜெகன் கீழே விழுந்தான். மீண்டும் அவனைத் தாக்க முயன்றான். 

ஜெகனின் எண்ணம் எல்லாம் கிழிந்து போன தனது ஒரே சட்டையைப் பற்றியே இருந்தது. ஜெகன் செத்துப்போன தனது அப்பாவையும், கட்டிட வேலைக்குப் போய் சம்பாதித்து தன்னை படிக்க வைக்கும் தனது அம்மாவையும் நினைத்தான். 

ஜெகன் வெற்று உடம்போடு புத்தகமும் கையுமாய் நடந்து போனது பிரபு மனசுக்கு என்னவோ போல் இருந்தது. 

ஜெகன் ஒருவாரம் பள்ளிக்கு வரவே இல்லை. ஒரு சின்ன குடிசையில் ஜெகனும், அவன் அம்மாவும் வசித்து வந்தனர். அன்று மாலை பிரபு பள்ளியிலிருந்து வீட்டுக்கு செல்லும் வழியில் ஜெகன் கட்டிட வேலைக்கு செங்கல் துக்கி செல்வதைப் பார்த்தான். மெதுவாக அந்த இடத்திற்குச் சென்றான் பிரபு. 

என்னடா ராஜா பள்ளிக்கூடம் போகலையா..... ? வேலைக்கு வந்திட்டே... என்று அங்கு வேலை செய்யும் ஒருவர் கேட்டார். போட்டுக்கறதுக்கு சட்டை இல்லை. புதுசா எடுக்கணும். பணம் வேணும். என்றான் ஜெகன். 

ஓஹோ புது சட்டைய போட்டுக்கிட்டு அப்புறம் பள்ளிக்கூடம் போகப் போறீயா? என்று சிரித்தபடி போனார் அவர். இருந்த ஒரே சட்டையையும் நான் கிழித்து விட்டேன். அவன் எப்படி பள்ளிக்கு வருவான்? என்று மனதுக்குள் நினைத்தான் பிரபு. 

அவனது கோபம். அவனுக்கே பிடிக்காமல் போனது. பிரபு தனது பிறந்த நாளுக்காக அப்பா வாங்கி வைத்திருந்த சட்டையை எடுத்துக்கொண்டு ஜெகன் வீட்டிற்குச் சென்றான். 

உள்ள வாடா என்று அன்புடன் அவனை வரவேற்றான் ஜெகன். என் மீது உனக்கு கோபம் இல்லையா என்றான் பிரபு. வீட்டிற்கு வந்தவர்களிடம் யாராவது கோபப்படுவார்களா? என்றான் ஜெகன். 

கோபத்தில் நான் தவறு செய்துவிட்டேன். என்னை மன்னித்துவிடு என்று சொல்லி தனது பிறந்தநாள் சட்டையை அவனிடம் கொடுத்தான். 

எனக்கு புதுச்சட்டை ரெடியாகிவிட்டது. உன் அன்புக்கு நன்றி என்றான். பிரபு எவ்வளவோ வற்புறுத்தியும் ஜெகன் வாங்கவில்லை. அடுத்தநாள் புதுச்சட்டையுடன் பள்ளிக்கு வந்த ஜெகனை வைத்த கண் வாங்காமல் பார்த்தான் பிரபு. 

நீதி :
முட்டாள்தனமான கோபம் ஆபத்தானது.

இன்றைய செய்திகள்

11.09.2025

⭐கொலோன் பல்கலைக்கழகம் வழங்கிய பழங்கால ஓலைச்சுவடிகளை நூலகத்திற்கு வழங்கினார் மு.க.ஸ்டாலின்

⭐பள்ளி மற்றும் கல்லூரி கட்டணங்களுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.போட்டித் தேர்வு, நுழைவுத் தேர்வு பயிற்சி நிறுவன கட்டணங்களுக்கு 18% வரி விதிக்கப்பட்டுள்ளது.

⭐மியான்மரில் நடந்து வரும் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடிய 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். 14,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

🏀விளையாட்டுச் செய்திகள்

🏀2025 ஆசிய கோப்பை T20| தொடர்  இந்தியாவின் தொடக்க போட்டியாக, இந்திய அணியும் யூ.ஏ.இ அணியும் எதிர்கொள்கின்றன. 

🏀பெண்களுக்கான ஆசிய கோப்பை ஹாக்கி: சூப்பர் 4 சுற்றில் கொரியாவை 4-2 என வீழ்த்தியது இந்தியா

Today's Headlines

⭐M.K. Stalin presented ancient manuscripts donated by the University of Cologne to the library.

⭐School and college fees are exempted from GST. Competitive exam and entrance exam coaching institute fees are taxed at 18%.

⭐More than 2,000 people have died in Myanmar while protesting against the ongoing military rule, and 14,000 have been arrested.

 SPORTS NEWS 

🏀2025 Asia Cup T20| India will face the UAE in the opening match of the series.

 🏀Women's Asia Cup Hockey, India beat Korea 4-2 in the Super 4 round.


Covai women ICT_போதிமரம்

Tuesday, September 9, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.09.2025








திருக்குறள்: 

குறள் 535: 
முன்னுறக் காவா திழுக்கியான் தன்பிழை 
பின்னூ றிரங்கி விடும்.         

விளக்க உரை: 

வரும் இடையூறுகளை முன்னே அறிந்துக் காக்காமல் மறந்து சோர்ந்தவன், பின்பு அவை வந்துற்றபோது தன் பிழையை நினைத்து இரங்குவான்.

பழமொழி :

The river cuts rock not by the power, but by persistence.       

ஆறு கல்லை உடைப்பது வலிமையால் அல்ல, தொடர்ச்சியால் தான்.

இரண்டொழுக்க பண்புகள் :

1 என்னால் இயன்ற அளவு மரக்கன்றுகள் நட்டு வளர்ப்பேன்.

2 இயற்கை சமநிலை காப்பேன்.

பொன்மொழி :

அழகைப் பற்றி கனவு காணாதீர்கள், அது உங்கள் கடமையை பாழாக்கி விடும். உங்கள் கடமையைப் பற்றி கனவு காணுங்கள். அது ,உங்கள் வாழ்க்கையை அழகாக்கி விடும்- டாக்டர் ஏபிஜெ அப்துல் கலாம்

பொது அறிவு : 

"01.திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து எது?

      

                         'ஒள'


02. இந்தியாவின் முதல் பெண் ரயில்வே அமைச்சர் யார்?


              மம்தா பானர்ஜி

Mamata  Banerjee

"

English words :

Set off - start a journey 

பயணம் தொடங்குதல்

Grammar Tips: 

 4 different spelling patterns  of F Sound
as in 
1. Friend, Fun and Fish - F Sound 
2. When the word has two ff's at the last as in Floss rule 
Puff, Cliff, Huff
3. In 'ph' as 
      Phone, Photo    Elephant, 

4. Right after au or ou as in Cough, Rough, Laugh, Enough 

F, FF, PH, GH these makes F sound

அறிவியல் களஞ்சியம் :

 உலகில் கடந்த 30 ஆண்டுகளில் சராசரி கடல் நீர்மட்டம் 2.5 செ.மீ., உயர்ந்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ், சான்டிகோ உள்ளிட்ட கடலோர நகரங்கள், கடல் நீர்மட்ட உயர்வால் பாதிப்பை சந்திக்கும். லட்சக்கணக்கானோர் பாதிக்கப்படுவர் என 'நாசா' ஆய்வு எச்சரித்துள்ளது. 2015 - 2023ல் செயற்கைக்கோள் தரவுகளை ஆய்வு செய்ததில் இது கண்டறியப்பட்டது.

நீதிக்கதை

 இரண்டு தேவதைகள்!


நயாகரா நீர்வீழ்ச்சி தொடர்ந்து பாய்ந்து கொண்டிருந்தது. நீர்வீழ்ச்சியின் அழகை, இரண்டு தேவதைகள் ரசித்துக்கொண்டிருந்தனர். 

அப்போது, அனீலஸ் என்ற பறவை, அந்த நீர்வீழ்ச்சிக்கு வந்தது. தேவதைகள் இருவரும் அந்தப் பறவையைப் பார்த்து அனீலஸ் பறவை நீர்வீழ்ச்சியில் குளிக்க வந்துள்ளது, பன்னிரண்டு வருடத்திற்கு ஒருமுறை தான் நீராடும் என்று இரு தேவதைகள் பேசிக்கொண்டனர். 

அது நீராடுகிற காட்சியைப் பார்ப்பதற்கு யோகம் செய்தவர்களாக இருக்கிறோம், என்று பெருமைப்பட்டு கொண்டனர். 

அனீலஸ் பறவையோ, தன் அருகே இரண்டு தேவதைகள் இருப்பதைப் பார்த்து நீர்வீழ்ச்சியில் இன்பமாக குளித்தது. 

அந்த நேரத்தில், நீர்வீழ்ச்சியின் வேகம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. நீர் வேகமாகத்தை தாங்காமல் அனீலஸ் பறவை, தடுமாறியபடி நீரில் சிக்கிக்கொண்டது. அதைக் கண்ட தேவதைகள் இருவரும் பயந்தனர். 

அதில் ஒரு தேவதை, அனீலஸ் பறவை ஆபத்தில் சிக்கிவிட்டது. நான் சென்று உடனே காப்பாற்றுகிறேன்! என்றாள். உடனே மற்றொரு தேவதை, வேண்டாம். அனீலஸ்ஸை நானே சென்று காப்பாற்றுகிறேன். அந்த பாக்கியம் எனக்கே கிடைக்க வேண்டும் என்றாள். அதைக் கேட்ட மற்றொரு தேவதையோ, நானே அனீலஸ்ஸைக் காப்பாற்றப் போகிறேன். எக்காரணம் கொண்டும் உன்னை அனீலஸ்ஸைக் காப்பாற்றும்படி விட்டுக்கொடுக்க மாட்டேன்! என்று பிடிவாதமாகக் கூறியது. 

இப்படியே இரண்டு தேவதையும் வாக்குவாதம் செய்துகொண்டிருந்த நேரத்தில், கீச்... கீச்... என்ற கீச் குரல் கேட்டது. இரண்டு தேவதைகளும் திடுக்கிட்டு பார்த்தன. அவர்கள் பக்கத்தில் அனீலஸ் பறவை நின்று கொண்டிருந்தது. 

தேவதைகளே! உங்களுக்குள் சண்டை எதற்கு? நான் உயிர் பிழைத்து விட்டேன். நீங்கள் என்னைக் காப்பாற்றுவீர்கள் என்று நம்பிக் கொண்டிருந்தால், என் உயிரை இழந்திருப்பேன். நானே முயற்சி செய்து உயிர் பிழைத்து உங்கள் முன்னே நின்று கொண்டிருக்கிறேன்! என்றது. 

அதைக் கேட்ட இரண்டு தேவதைகளும், வெட்கத்தில் தலை குனிந்தனர். நமக்குள் போட்டியிட்டு தற்பெருமைப்பட்டுக் கொண்டோமே! இந்தப் பறவைக்கு இருக்கிற அறிவு கூட தேவதைகளான நமக்கு இல்லையே! என்று வருத்தப்பட்டனர். 

நீதி :

பிறரை நம்புவதை விட நாம் நம்மை நம்பினால் வாழ்க்கையில் முன்னேரலாம்.

இன்றைய செய்திகள்

10.09.2025

⭐ இந்தியக் குடியரசு துணைத் தலைவராக சி்.பி்.இராதாகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

⭐ சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் செயல்படும் குடிநீர் ஆலைகளில் தர ஆய்வு மேற்கொள்ள உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.

⭐தமிழ்நாட்டில் முதலீடு செய்ய 10 புதிய நிறுவனங்கள் விருப்பம்; ஓசூரில் விரைவில் முதலீட்டாளர்கள் மாநாடு என சென்னை திரும்பிய முதல்வர் அறிவிப்பு.

⭐நேபாள போராட்டம் எதிரொலியாக பிரதமர் சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
பிரதமரை தொடர்ந்து ஜனாதிபதியும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

⭐சியாச்ச்சினில் பனிச்சரிவு: 3 ராணுவ வீரர்கள் மரணம்

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀ஆசிய கோப்பை அறிமுகம்: 
 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன் அணிகள் இடம்பிடித்தன.
'பி' பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் அணிகள் இடம் பெற்றுள்ளன.

Today's Headlines

⭐ C.P. Radhakrishnan has been elected as the Vice President of the Republic of India.

⭐ The Food Safety Department has ordered a quality inspection of drinking water plants operating in major cities including Chennai.

⭐10 new companies are interested in investing in Tamil Nadu; The Chief Minister, who returned to Chennai, announced that an investors' conference will be held soon in Hosur.

⭐Prime Minister Sharma Oli resigned from his post in response to the Nepali protests. Following the Prime Minister, the President has also resigned from his post. 

⭐Avalanche in Siachen: 3 soldiers killed.

 *SPORTS NEWS* 

🏀Asia Cup Introduction: India, Pakistan, United Arab Emirates, Oman have been drawn in Group 'A'. Sri Lanka, Bangladesh, Afghanistan, and Hong Kong have been drawn in Group 'B'.

Covai women ICT_போதிமரம்

Monday, September 8, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.09.2025

மா சே துங்







திருக்குறள்: 

குறள் 503: 

அரியகற் றாசற்றார் கண்ணுந் தெரியுங்கால் 
இன்மை அரிதே வெளிறு.  

விளக்க உரை: 

அரிய நூல்களைத் கற்றுத் தேர்ந்து குற்றம் அற்றவரிடத்திலும் ஆராய்ந்துப் பார்க்குமிடத்தில் அறியாமை இல்லாதிருப்பது அருமையாகும்.

பழமொழி :

A journey of kindness never ends.    

அன்பின் பயணம் ஒரு போதும் முடிவதில்லை.

இரண்டொழுக்க பண்புகள் :

1 என்னால் இயன்ற அளவு மரக்கன்றுகள் நட்டு வளர்ப்பேன்.

2 இயற்கை சமநிலை காப்பேன்.

பொன்மொழி :

ஒரு மதிப்பு வாய்ந்த இலக்கை படிப்படியாக அடைதலே வெற்றியாகும் -  நைட்டிங்கேல்

பொது அறிவு : 

01. தமிழ்நாட்டின் முதல் பெண் ஆளுநர் யார்?

             எம். பாத்திமா பீவி

M. Fathima Beevi,

02.மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்? 

      ஹிப்போகிரேட்டஸ் -Hippocrates

English words :

Run out off – nothing left, எல்லாம் காலி ஆகி விட்டது

Grammar Tips: 

 If You ,third person singular and I comes as subject we have to follow as 
2nd person+3rd person singular+I

Example 
You,Ramu and I got this book

அறிவியல் களஞ்சியம் :

 உலகில் புதிதாக ஒரு நீல மண்டலத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். நீல மண்டலம் என்பது உலகின் மற்ற பகுதிகளின் சராசரி ஆயுட்காலத்தை விட அதிகம் இருக்கும் பகுதி. இங்கு 100 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிகளவில் இருப்பர். உலகில் ஏற்கனவே லோமா லின்டா - அமெரிக்கா, நிகோயா - கோஸ்டாரிகா, சர்டின்யா - இத்தாலி, இகரியா - கிரீஸ், ஒகினவா - ஜப்பான் ஆகிய ஐந்து இடங்கள் நீல மண்டலமாக வரையறுக்கப்பட்டு உள்ளன. தற்போது இந்த வரிசையில் பின்லாந்தின் அஸ்ட்ரோபோதின்யா பகுதி இடம் பெற்றுள்ளது என தெரிவித்துள்ளனர்.

செப்டம்பர் 09

மா சே துங்  அவர்களின் நினைவுநாள்

மா சே துங் (About this soundMao Zedong Mao Zedongடிசம்பர் 261893 – செப்டம்பர் 91976) சீன மார்க்சியக் கொள்கையாளர், போர் வீரர், கவிஞர் மற்றும் ராஜதந்திரி ஆவார். இவர் எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். இளமையில் ஆறு மாத காலம் ராணுவ அனுபவம் பெற்றார். இவர், பல நூற்றாண்டு கால அன்னிய ஆக்கிரமிப்புக்கு பின், இருபதாம் நூற்றாண்டில் சீனாவில் நிகழ்ந்த 
கம்யூனிசப் புரட்சியையும் அதனைத் தொடர்ந்த உள்நாட்டுப் போரையும் முன்னின்று நடத்தினார். சீன உள்நாட்டுப் போரில், குவோமின்டாங்கை எதிர்த்து சீனப் பொதுவுடமைக் கட்சி வெற்றி கண்டது. இதன் பின், அக்டோபர் 11949 அன்று பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த பெய்ஜிங் தியனெமன் சதுக்கத்தில் இருந்து, சீன மக்கள் குடியரசு நிறுவப்படுவதை மாவ் அறிவித்தார்

நீதிக்கதை

 மகா கஞ்சனின் கதை


கந்தன் என்ற ஒரு மகா கஞ்சன், ஆலங்குடி என்ற ஊரில் வசித்து வந்தான். ஒரு நாள், விமான நிலையத்தைப் பார்ப்பதற்காக தன் மனைவியோடு சென்றார். 


விமானம் மேலே கிளம்புவதையும், வானில் வட்டமிடுவதையும், கீழே இறங்குவதையும், இருவரும் ஆர்வத்துடன் வேடிக்கை பார்த்தனர். 


அவர்களின் ஆர்வத்தைப் பார்த்த விமானி ஒருவர், நீங்கள் இருவரும் வாருங்கள் ஆளுக்கு நூறு ரூபாய் தான் வானத்தில் ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு வரலாம் என்றார். கஞ்சனுக்கு ஆர்வம் தான். ஆனால் செலவுக்கு பயந்து நாங்கள் வரவில்லை, என்றான். 


அவர்களிடம் பணம் பெற நினைத்த விமானி, நீங்கள் எந்தக் கட்டணமும் இல்லாமல், உங்களை இனாமாகவே விமானத்தில் ஏற்றிச் செல்கிறேன். வானத்தில் விமானம் பறக்கும்போது, என்ன நடந்தாலும், நீங்கள் சிறு சத்தம் கூடப் போடக் கூடாது. அப்படி சத்தம் போட்டால், இருநூறு ரூபாயை நீங்கள் கொடுத்துவிட வேண்டும் என்றார். 


கஞ்சன் தன் மனைவியுடன், விமானத்தில் ஏறி அமர்ந்தான். விமானம் தலை கீழாகப் பறந்தது. சீறிப் பாய்ந்தது. உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு இருந்த கஞ்சன், சத்தம் போடாமல் இருந்தான். விமானத்தைத் தரை இறக்கினார் விமானி. 


கஞ்சனுக்கு கை கொடுத்து, நான் பயமுறுத்தும் விமான விளையாட்டுகளை நான் வானத்தில் செய்யும்போது, வேறு யாராக இருந்தாலும் சத்தம் போட்டுருப்பார்கள். ஆனால், நீங்கள் சிறு சத்தம் எழுப்பவில்லை. எப்படி இது உங்களால் முடிந்தது? என்று கேட்டார் விமானி. 


நான் கூட, ஒரே ஒரு சமயம், என் மனைவி, விமானத்தில் இருந்து கீழே விழுந்தபோது! கத்த நினைத்தேன். நல்லவேலை கத்தாமல் இருந்தேன். கத்தியிருந்தால் கட்டணம் செலுத்த வேண்டிருக்கும் என்றான் கஞ்சன். அதை கேட்ட விமானி மயங்கி விழுந்தார். 


நீதி :

சிக்கனம் இருக்கலாம் ஆனால், கஞ்சத்தனம் இருத்தல் கூடாது.

இன்றைய செய்திகள்

09.09.2025

⭐TET தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.

⭐ குளங்களைத் தூர்வாரி, தண்ணீர் கொள்ளளவை அதிகரிக்கும் பணிகளை சென்னை மாநகராட்சி துவங்கியுள்ளது.

⭐ கேரளாவில் அமீபிக் மூளைக் காய்ச்சலுக்கு 5 பேர் இறந்திருப்பது கேரள மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியின் துணைக் கேப்டனாக சுப்மன் கில் நியமனம்.

🏀இந்தியா- பாகிஸ்தான் போட்டி வருகிற 14ஆம் தேதி நடக்கிறது.

Today's Headlines

⭐Extension of the deadline to apply for Tn TET exam. 

⭐The Chennai corporation has started the work of dredging the ponds and increasing the water capacity.

⭐ The death of 5 people due to amoebic encephalitis in Kerala has created fear among the people of Kerala. 

 *SPORTS NEWS* 

🏀 Shubman Gill appointed as the vice-captain of the Indian team for the Asia Cup series.

🏀The India-Pakistan match will be held on the 14th.

Covai women ICT_போதிமரம்