Sunday, September 7, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 08.09.2025

உலக எழுத்தறிவு தினம்







திருக்குறள்: 

குறள் 502: 

குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும் 
நாணுடையான் கட்டே தெளிவு. 

விளக்க உரை: 

நல்ல குடும்பத்தில் பிறந்து குற்றம் ஏதும் இல்லாதவனாய்ப் பழிக்கு அஞ்சி, வெட்கப்படுபவனையே பதவிக்குத் தெரிவு செய்யவேண்டும்.

பழமொழி :

Every sunrise is an invitation to try again. 

ஒவ்வொரு சூரியோதயமும் மீண்டும் முயற்சிக்கான அழைப்பு.

இரண்டொழுக்க பண்புகள் :

1 என்னால் இயன்ற அளவு மரக்கன்றுகள் நட்டு வளர்ப்பேன்.

2 இயற்கை சமநிலை காப்பேன்.

பொன்மொழி :

வாய்ப்புக்காக காத்திருக்காதே உனக்கான வாய்ப்பை நீயே ஏற்படுத்திக் கொள் - டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம்

பொது அறிவு : 

01.அட்லாண்டிக் பெருங்கடலும், பசிபிக் பெருங்கடலும் சந்திக்கும் இடம் எது?

கேப் ஹார்ன்- தென்அமெரிக்கா
Cape ஹார்ன் -South America

02. உலகின் காபி கோப்பை (Coffee Pot) என்று அழைக்கப்படும் நாடு எது?

பிரேசில்- Brazil

English words :

Run into – meet by chance. to drive a vehicle into an object or vehicle. எதிர்பாராமல் சந்தித்தல், ஒரு பொருள் அல்லது வண்டியின் மீது ஒரு வண்டி கொண்டு மோதுதல்

Grammar Tips: 

 Two sounds of C
'C' sound with e, i, and y
Ex: Rice, dice, face, cereal, cent, nice
'K' sound with other letters 
Ex: cake, cup, cold, cap, camel, clip

அறிவியல் களஞ்சியம் :

 நமது உடலில் இருக்கும் டி என் ஏ வானது தற்போது இருக்கும் சூப்பர் கம்ப்யூட்டர்களின் சக்தியை விட பல மடங்கு மெமரியை கொண்டுள்ளது. அதாவது  நமது உடலில் இருக்கும் ஒரே ஒரு டி என் ஏ பற்றி மட்டுமே இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.

செப்டம்பர் 08

அனைத்துலக எழுத்தறிவு நாள் 

அனைத்துலக எழுத்தறிவு நாள் உலகெங்கும் செப்டம்பர் 8ம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளை யுனெஸ்கோ நிறுவனம் நவம்பர் 17, 1965 இல் உலக எழுத்தறிவு நாளாகப் பிரகடனம் செய்தது. இது 1966ம் ஆண்டு தொடக்கம் கொண்டாடப்படுக்கிறது. எழுத்தறிவின் முக்கியத்துவத்தை தனிப்பட்ட மக்களுக்கும், சமூகத்துக்கும், அமைப்புக்களுக்கும் அறியவைப்பது இதன் முக்கிய நோக்கம் ஆகும்..

நீதிக்கதை

 குருவி கொடுத்த விதை


ஓர் ஊரில் பண்ணையார் ஒருவருக்கு அந்த ஊரில் இருந்த அனைத்து நிலங்களும் சொந்தமாக இருந்தது. அவரிடம் முனியன் என்ற உழவன் வேலை பார்த்தான். அவனுக்கு சிறிய குடிசையும், கொஞ்ச நிலமும் இருந்தது. 

பண்ணையாரிடம் முனியன், ஐயா! உங்கள் அனைத்து நிலங்களில் உழுது விதை நட்டுவிட்டார்கள். என் நிலம் மட்டும் காலியாக உள்ளது. என் நிலத்தில் விதைப்பதற்கு சிறிது தானியம் தாருங்கள் என்றான். 

சொந்தமாகப் பயிரிட வேண்டாம், என் நிலத்திலேயே உழுது பயிரிடு. அரை வயிற்றுக் கஞ்சியாவது கிடைக்கும் என்று கோபத்துடன் சொன்னார் அவர். சோகத்துடன் வீட்டுக்கு சென்று தன் மனைவியிடம், நமக்கு தானியம் தரவில்லை. நீயும் நம் குழந்தைகளும் எப்போதும் போலப் பட்டினி கிடக்க வேண்டியதுதான். இதுதான் நம் தலைவிதி என்று சொல்லி வருத்தப்பட்டான். 

அவர்கள் குடிசையில் குருவி ஒன்று கூடு கட்டியதை முனியனும், அவன் மனைவியும் பார்த்தனர். பாவம்! வாய் பேச முடியாத உயிர் அது. நாம் அதற்குத் தொல்லை செய்யக்கூடாது என்றான் முனியன். கூட்டில் அந்தக் குருவி நான்கு குஞ்சுகள் பொறித்தது. 

திடீரென்று அந்தக் குருவிக்கூட்டுக்குள் ஒரு பாம்பு நுழைந்ததை பார்த்த குருவிக்குஞ்சுகள் கத்தியது, அதைக்கேட்ட உழவன் பாம்பை பிடித்துக் கொல்வதற்குள் அது மூன்று குஞ்சுகளைத் தின்று விட்டது. தரையில் விழுந்த ஒரு குஞ்சு மட்டும் கால் ஒடிந்து இருந்தது. அதை அன்போடு எடுத்து அதற்குக் கட்டுப்போட்டான். அதை மீண்டும் கூட்டில் வைத்து உணவு கொடுத்து நன்கு பார்த்துக்கொண்டான். 

அந்தக் குருவியின் கால்கள் சரியானதும், அது பறந்து சென்றது. உழவனும் குடும்பத்தினரும் வறுமையில் இருந்தனர். அச்சமயம் அவர்கள் வீட்டுக்கு அவன் வளர்த்த குருவி வந்தது. அவன் கையில் 3 விதையை கொடுத்து இதை உன் வீட்டுத் தோட்டத்தில் ஒன்றும், வீட்டின் முன்புறத்தில் ஒரு விதையையும், மற்றொரு விதையை வீட்டின் ஜன்னல் ஓரத்திலும் நட்டு வை. என் மீது காட்டிய அன்பிற்கு நன்றி என்று சொல்லிவிட்டுப் பறந்தது. குருவி சொன்னபடியே மூன்று விதைகளையும் நட்டான். 

மறுநாள் காலையில் அங்கே மூன்று பெரிய பூசணிக்காய்கள் காய்த்தன. இதைப் பார்த்து ஆச்சரியப்பட்டான். பின்பு, அந்த பூசணிக்காயை இரண்டு துண்டாக வெட்டிப்பார்த்தான். அதனுள் இருந்து விதவிதமான உணவுப் பொருள்கள் வந்தன. சுவையான அவற்றை எல்லோரும் மகிழ்ச்சியாக உண்டனர். மீண்டும் அந்தப் பூசணிக்காயை ஒன்று சேர்த்ததும். பழையபடி அது முழுப் பூசணிக்காய் ஆனது. 

இது மந்திரப் பூசணிக்காய். நமக்கு உணவு வேண்டும் என்றால் பிளந்தால் உணவு கிடைக்கும் என்றான். இதேபோல், மீதமுள்ள 2 பூசணிக்காயையும் பிளந்து பார்த்தனர். அதில், ஒன்றில் அழகான ஆடைகள், விலை உயர்ந்த மணிகளும், மற்றொன்றில் பொற்காசுகளும் இருந்தன. 

அதன் பிறகு முனியன் குடும்பம் பெரும் வசதியான வாழ்க்கை வாழ்ந்தனர். இதனை அறிந்த பண்ணையார், உழவனிடம் முனியா! உனக்கு எங்கிருந்து இவ்வளவு செல்வம் கிடைத்தது? உண்மையைச் சொல் என்று கேட்டார். 

அவனும் நடந்ததை எல்லாம் அப்படியே சொன்னான். அதை கேட்ட அவர் வீட்டில் மேல் பகுதியில் குருவிக்கூடு ஒன்றை அவரே செய்தார். ஒரு குருவி வந்து அந்தக் கூட்டில் தங்கி நான்கு குஞ்சுகள் பொறித்தது. பாம்பு வரவே இல்லை. அதனால் அவரே, அந்த குருவிக்கூட்டை கலைத்து மூன்று குஞ்சுகளை கொன்றார். ஒரு குருவியின் காலை உடைத்துக் கீழே எறிந்தார். 

பிறகு கால் உடைந்த குருவியிடம் அன்பு காட்டுவது போல் நடித்து வேளை தவறாமல் உணவு அளித்தார். கால் சரியான அந்தக் குருவி கூட்டைவிட்டுப் பறந்து போனது. அவர் குருவி விதை கொடுக்கும் என்று எதிர்பார்த்தபோது, கதவைத் தட்டியது குருவி. அவரிடம் மூன்று விதைகளைத் தந்தது. ஒன்றை வீட்டின் பின்புறமும், இரண்டாவதை வீட்டின் முன்புறமும், மூன்றாவதைக் கிணற்றோரமும் நடு என்று சொல்லிவிட்டுப் பறந்து சென்றது. மூன்று தானியங்களையும் நட்டார். 

மறுநாளே மூன்று பெரிய பூசணிக்காய்கள் காய்த்து இருந்தன. மூன்று பூசணிக்காயையும் வெட்டினார். அதில் ஒன்றில் இருந்து எண்ணற்ற பூச்சிகள் வயலில் விளைந்திருந்த பயிர்களை எல்லாம் ஒரு நொடிக்குள் வீணாக்கியது. பின்பு இரண்டாவதில் இருந்து தீ வெளிப்பட்டு அவரையும் அந்த மாளிகையையும் ஒரு நொடிக்குள் சாம்பல் ஆக்கியது. மூன்றாவதில் பாம்பு, தேள், பூரான் போன்றவை இருந்தன. அதன்பிறகு, தனது பேராசை தவறு என உணர்ந்தார் பண்ணையார். 

நீதி :
பொறாமை குணம் இருத்தல் கூடாது.

இன்றைய செய்திகள்

08.09.2025

⭐அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கு செப்.30 வரை இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்!

⭐காசாவில் குடியிருப்பு கட்டிடங்கள் மீது குண்டுவீசி இஸ்ரேல் தாக்குதல் 41 பேர் உயிரிழப்பு

⭐பிரிட்டனின் முதல் முஸ்லிம் பெண் உள்துறை செயலாளராக பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த ஷபானா மஹ்மூத் நியமனம்

⭐சீனா, ரஷியாவுடன் வர்த்தகத்தை அதிகரிக்க இந்தியா முடிவு செய்துள்ளது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀2வது டி20 போட்டி: இலங்கையை வீழ்த்தி ஜிம்பாப்வே அபார வெற்றி

🏀கடந்த 5 ஆண்டுகளில் கிரிக்கெட் வாரியத்தின் வருவாய் ரூ.14,627 கோடி அதிகரிப்பு

Today's Headlines

⭐Students can apply for admission to vacant seats in government arts and science colleges online till September 30

⭐Israeli airstrikes on residential buildings in Gaza killed  41 people.

⭐ Pakistani-origin Shabana Mahmood appointed as Britain's first Muslim female Home Secretary 

⭐India has decided to increase trade with China and Russia.

 SPORTS NEWS 

🏀 2nd T20, Zimbabwe beats Sri Lanka in a stunning 

🏀Cricket Board's revenue increases by Rs. 14,627 crore in the last 5 years


Covai women ICT_போதிமரம்

Wednesday, September 3, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 04.09.2025


      






திருக்குறள்: 

குறள் 501: 

அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின் 
திறந்தெரிந்து தேறப் படும். 

விளக்க உரை: 

அறம், பொருள், இன்பம், உயிர்காக அஞ்சும் அச்சம் ஆகிய நான்கு வகையாலும் ஆராயப்பட்ட பிறகே ஒருவன் (ஒரு தொழிலுக்கு உரியவனாகத்) தெளியப்படுவான்

பழமொழி :

A calm sea never made a skilled sailor. 

அமைதியான கடல் திறமையான மாலுமியை உருவாக்காது.

இரண்டொழுக்க பண்புகள் :

1 ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.

2 எனவே அறிவைப் பாதிக்கும் வகையில் ஆத்திரப் பட மாட்டேன்.

பொன்மொழி :

அறிவியலின் அடிப்படை கேள்வி கேட்கின்ற மனப்பான்மை தான் . கேள்வி கேட்கும் ஒவ்வொரு குழந்தையும் விஞ்ஞானிதான். எனவே குழந்தைகள் கேள்வி கேட்க வேண்டும் - அப்துல் கலாம்

பொது அறிவு : 

01.இந்தியாவின் ஐந்தாண்டு திட்டங்கள் எந்த நாட்டின் மாதிரியை பின்பற்றி உருவாக்கப்பட்டது?

சோவியத் ரஷ்யா
Soviet Russia

02. உலக வளர்ச்சி அறிக்கையை
(World development Report) ஆண்டுதோறும் வெளியிடும் அமைப்பு எது?

உலக வங்கி- World Bank

English words :

Run across – find unexpectedly. எதிர்பாராத விதமாக யாரையாவது சந்திப்பது

Grammar Tips: 

 The words "there," "their," and "they're" are confusing because they are homophones (words that sound the same but have different meanings). 
There:
Use "there" to indicate a place or a location. 
Example: "We will meet you there". 
Their:
Use "their" to show that something belongs to them. 
They're is a contraction (a shortened form) of the words "they are".
Ex:  "They're going to the library" (They are going to the library).

அறிவியல் களஞ்சியம் :

 ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி அதீத தொலைவில் உள்ள புதிய கோள்கள், நட்சத்திரங்களைக் கண்டுபிடித்து வருகிறது. தற்போது புதிதாக உருவாகிக் கொண்டிருக்கும் மூன்று கேலக்ஸிகளை இது படமெடுத்துள்ளது. இது உலகெங்கும் உள்ள விஞ்ஞானிகள், வானியல் ஆர்வலர்களிடையே மிகுந்த ஆர்வத்தைத் துாண்டியுள்ளது.

நீதிக்கதை

 நேரம் தவறாமை


சுனில், ஒரு பள்ளி பருவ மாணவன். ஒரு நாள் கா... கா.... என்று கத்திக்கொண்டு ஒரு காகம் பறந்து வந்து, அவன் வீட்டின் அருகிலுள்ள மரக்கிளையில் அமர்ந்தது.


சுனில், அந்தக் காகத்தைப் பிடிக்க ஆசைப்பட்டு ஓடினான். உடனே அது பறந்து சென்றது. சுனில் திரும்பி வந்து காத்திருந்தான். அந்தக் காகம் மீண்டும் அங்கு வந்து அங்கும் இங்கும் நடந்தது. சுனில் தான் சாப்பிட்டு கொண்டிருந்த வடையைப் பிய்த்துக் காகத்திற்குப் போட்டான். காகம் வேகமாக ஓடி வந்தது.


வடையைக் கொத்திக் கொண்டு பறந்தோடியது. சுனில்க்கு அந்தக் காகத்தைப் பிடிக்க வேண்டும் என்ற ஆசை எழுந்தது. வெகுநேரம் காத்திருந்தான். அந்தக் காகம் மீண்டும் வரவேயில்லை.


இரண்டாம் நாள் அந்த இடத்திற்கு, அதே நேரத்திற்கு அந்தக் காகம் வந்தது. அங்கும் இங்கும் நடந்தது. இன்று அந்தக் காகம் கைக்கு எட்டும் தொலைவிற்குள் நடந்து வந்தது. சுனில் தன்னிடம் இருந்த நிலக்கடலையை காகத்தின் முன் வீசினான்.

காகம் தலையைச் சாய்த்துச் சாய்த்துப் பார்த்துக் கொண்டே ஒவ்வொரு கடலையாகக் கொத்தித் தின்றது. சுனில் அருகில் சென்றதும் உடனே பறந்தோடியது. மூன்றாம் நாளும் அந்தக் காகம் அந்த இடத்துக்கு, அதே நேரத்துக்கு வந்தது. இன்று அச்சப்படாமல் காகம் சுனிலின் அருகில் வந்தது. சுனிலின் கையை ஆவலோடு பார்த்தது.

சுனில் வீட்டிற்குள் சென்று அரிசியை எடுத்து வந்து போட்டான். காகம் பொறுமையாக ஒவ்வொரு அரிசியாகப் பொறுக்கித் தின்றது. சுனில் காகத்தைப் பிடிக்க எழுந்தான். காகம் பறந்தோடியது. ஒவ்வொரு நாளும் காகம் சரியான நேரத்துக்கு வந்தது.

சுனிலும் காகமும் நண்பர்களானார்கள். சுனில் சொல்வதைக் கேட்டுக் காகம் புரிந்து கொண்டது போலத் தலையை ஆட்டும். சரியான நேரத்துக்கு வரும் காகத்தைக் கண்டு சுனில் வியந்தான். காகத்தால் எப்படி முடிகிறது? மணிக்கூடு இல்லை, பேசத் தெரியாது, எழுதத் தெரியாது, ஆனால் சரியான நேரத்துக்கு அந்தக் காகம் எப்படி வந்து போகிறது.

சுனில் வியந்தான். தனது நண்பனான காகத்தைப் போல, தானும் சரியான நேரத்துக்குப் பள்ளிக்குச் செல்வது, அனைத்து வேலைகளையும் சரியான நேரத்தில் தொடங்குவது என முடிவு எடுத்துக் கொண்டான். சரியான நேரத்துக்குப் பள்ளிக்கு வந்து அனைத்தையும் முறையாகச் செய்யும் சுனிலை அனைவரும் பாராட்டினார்கள்.

இன்றைய செய்திகள்

04.09.2025

⭐இமயமலையில் விரிவடையும் பனிப்பாறை ஏரிகள் - திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்

⭐நேபாளம்- பூடானில் இருந்து இந்தியாவுக்கு வர பாஸ்போர்ட் தேவையில்லை: மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

⭐நிலநடுக்கத்தால் பாதிப்பு: இந்தியா அனுப்பிய 21 டன் நிவாரணப் பொருட்கள் ஆப்கானிஸ்தான் சென்றடைந்தது

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀US Open 2025 4ஆம் தரநிலை ஜோடியை வீழ்த்தி இரட்டையர் பிரிவில் காலிறுதிக்கு முன்னேறியது யுகி பாம்ப்ரி ஜோடி


🏀சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் (CSKCL) சேர்மனாக  என்.சீனிவாசன்  நியமிக்கப்பட்டுள்ளார்.


Today's Headlines

⭐Glacier lakes expanding in the Himalayas pose a risk of flash floods 

⭐Union Home Ministry announced that no passport is required to enter India from Nepal-Bhutan 

⭐ 21 tonnes of relief supplies sent by India reach Afghanistan due to Earthquake damage.

 SPORTS NEWS

🏀 US Open 2025 Yuki Bhambri pair advances to doubles quarterfinals by defeating 4th 4th-seeded pair.

 🏀N. Srinivasan appointed as Chennai Super Kings Cricket Limited (CSKCL) chairman

Covai women ICT_போதிமரம்

Tuesday, September 2, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 03.09.2025

சாக்சி மாலிக்







திருக்குறள்: 

அதிகாரம்-நீத்தார் பெருமை. 

குறள்: 

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் 
செயற்கரிய செயகலா தார். 

பொருள் :முடியாத செயல்களையும் முடித்து காட்டுபவர் பெரியோர் .முடியாது என்று முயற்சி செய்யாமல் ஒதுங்குவோர் சிறியோர் என கூறப்படுவர் 

பழமொழி :

United we stand,divided we fall. 

ஒன்று சேர்ந்தால் நிலைப்போம், பிரிந்தால் வீழ்வோம்.

இரண்டொழுக்க பண்புகள் :

1 ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.

2 எனவே அறிவைப் பாதிக்கும் வகையில் ஆத்திரப் பட மாட்டேன்.

பொன்மொழி :

வாழ்வின் பாடத்தை கற்றுக் கொள்ள பெற்றோர்கள் கடந்து வந்த பாதையை அறிந்து கொண்டாலே போதும்.


---கண்ணதாசன்

பொது அறிவு : 

01.பூண்டி நீர் தேக்கத்தை வடிவமைத்தவர் யார்?

திரு.S.சத்தியமூர்த்தி
Thiru. S. Sathyamoorthi

02. வாயுக்களின் அழுத்தத்தை அளவிட உதவும் கருவி எது?

அழுத்தமானி Manometer

English words :

put up with – tolerate, பொறுத்துக் கொள்ளுதல்


Grammar Tips: 

 Where to use 'tial' and 'cial' both have the same sound. 
If the word ends with t, use tial

Ex: Part - partial
Substant- substantial 
Initiate - initial ( last e removed)

When the word ends with c or ce, use 'cial' 

Ex: commerce - commercial 
Face - facial 
Office - official

அறிவியல் களஞ்சியம் :

 மூளையில் குருதி ஓட்டத்தைக் கண்காணிப்பது சுலபமல்ல. அஞ்சல்தலை அளவே உள்ள ஒரு புதிய கருவியை அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலை வடிவமைத்துள்ளது. மூளையில் அல்ட்ரா சவுண்ட் தொழில்நுட்பம் வாயிலாக இந்தக் கருவி ரத்த ஓட்டத்தை அறிய உதவுகிறது.

செப்டம்பர் 03

சாக்சி மாலிக் அவர்களின் பிறந்தநாள்

சாக்சி மாலிக் (Sakshi Malik, செப்டம்பர் 3, 1992) இந்திய மற்போர் வீராங்கனையாவார்.[1] இவர் கிளாஸ்கோவில் நடந்த 2014 பொதுநலவாய விளையாட்டுக்களில் பெண்கள் கட்டற்றவகை மற்போர் 58 கிலோ வகுப்பில் இந்தியா சார்பாக பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்றார்.[2] 2014இல் தாஷ்கந்தில் நடந்த உலக மற்போர் போட்டிகளிலும் 60 கிலோ வகுப்பில் பங்கேற்றார்.2016 ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தின் 58 கிலோ எடைப் பிரிவில், கிர்கிஸ்தான் வீராங்கனை ஐசுலு டைனிபிகோவா உடன் மோதி 8-5 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று சாக்சி வெண்கலப் பதக்கம் வென்றார்.

நீதிக்கதை

 வழிபோக்கனும் வைரகல்லும்


ஆற்றங்கரை ஓரமாக வந்துகொண்டிருந்த வழிப்போக்கன் ஒருவனுக்கு வைரக்கல் ஒன்று கண்ணில் பட்டது. அது வைரம் என்று அறியாமல், விலை போகுமா? என்ற சந்தேகத்துடன் கடைத்தெருவுக்கு எடுத்து வந்தான். அவன் கையில் வைரம் இருப்பதைப் பார்த்த வியாபாரி ஒருவன், இருபது ரூபாய்க்கு தன்னிடம் அதை விற்குமாறு கேட்டான்.

ஆனால் வழிபோக்கனோ பேரம் பேசித்தான் பார்ப்போமே என்ற எண்ணத்துடன் 25 ரூபாய் கேட்டான். ஐந்து ரூபாய் அதிகம் கொடுக்க விரும்பாத அந்த வியாபாரியும் 20 ரூபாய்க்கு பேரம் பேசினான். இதைக் கவனித்த மற்றொரு வியாபாரி 25 ரூபாய் கொடுத்து அந்த வைரைத்தை வாங்கிக்கொண்டு சென்றான்.

ஆத்திரமடைந்த வியாபாரி, அந்த வழிப்போக்கனை பார்த்து, அட முட்டாளே! அதன் மதிப்பு பல ஆயிரம் பெறும். அறிவில்லாமல் விற்றுவிட்டாயே! என்று திட்டினான். அதற்கு அவன், அந்தக் கல்லுக்கு என்னுடைய மதிப்பு அவ்வளவுதான். ஆனால் அது வைரம், அதன் மதிப்பு தெரிந்தும் அதைத் தவறவிட்ட நீ தான் மிகப்பெரிய முட்டாள் என்றான்.


இன்றைய செய்திகள்

03.09.2025

⭐வரும் ஜூன் 15ம் தேதி நடைபெற இருந்த முதுகலை நீட் தேர்வு ஒத்திவைப்பு

⭐பூந்தமல்லி- பரந்தூர் மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல்

⭐டெல்லியில் கனமழை: யமுனை நதியில் வெள்ளப்பெருக்கு பொதுமக்களுக்கு எச்சரிக்கை

⭐ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 1400 ஆக அதிகரிப்பு


🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀உலக சாம்பியனை வீழ்த்திய தமிழக வீரர் குகேஷ்-க்கு முதலமைச்சர் வாழ்த்து

🏀பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் பங்கேற்கும் மகளிர் டி20 உலகக்கோப்பை அட்டவணை அறிவிப்பு

🏀 ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி கடந்த மாதம் 27-ந் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது.
 இந்த போட்டியில் சீனா 26 பதக்கங்களுடன் முதலிடத்திலும் இந்தியா 24 பதக்கங்களுடன் 2-வது இடத்தையும் பிடித்தது.


Today's Headlines

⭐Postgraduate NEET exam scheduled for June 15 is postponed 

⭐ Tamil Nadu government approved the Poontamalli-Paranthur Metro Rail project 

⭐ Heavy rains in Delhi. Flooding in the Yamuna River. The public is warned.

⭐Afghanistan earthquake: Death toll rises to 1400.

 SPORTS NEWS 

🏀Chief Minister congratulates Tamil Nadu player Kukesh for defeating the world champion 

🏀 Women's T20 World Cup schedule announced, with 8 teams including Pakistan participating.

🏀 The Asian Athletics Championships began on the 27th of last month and concluded yesterday. China topped the medal tally with 26 medals, and India came in second with 24.

Covai women ICT_போதிமரம்

Monday, September 1, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.09.2025

உலக தேங்காய் தினம்







திருக்குறள்: 

குறள் 688: 

தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின் 
வாய்மை வழியுரைப்பான் பண்பு. 

     விளக்க உரை: 

தூய ஒழுக்கம் உடையவனாதல், துணை உடையவனாதல், துணிவு உடையவனாதல் இந்த மூன்றும் வாய்த்திருத்தலே தூது உரைப்பவனுடைய தகுதியாகும்.

பழமொழி :

A clear mind makes a bright future.    

தெளிவான மனம் பிரகாசமான எதிர்காலத்தை தரும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1 ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.

2 எனவே அறிவைப் பாதிக்கும் வகையில் ஆத்திரப் பட மாட்டேன்.

பொன்மொழி :

மூடனை நூறு அடி அடிப்பதை பார்க்கிலும், புத்திமானை வாயினால் கண்டிப்பதே அதிகமாய் உரைக்கும்

     –சாலமோன் ஞானி

பொது அறிவு : 

" 01.இந்தியாவின் மிகப்பெரிய இரும்பு பாலம்  எங்குள்ளது?


    மகாத்மா காந்தி சேது பாலம்        

கங்கை-பீகார் 

Mahatma Gandhi sethu bridge

Ganga- Bihar

02.மிர் (Mir) என்பது என்ன?

         ரஷ்ய விண்வெளி நிலையம்

Russian space station"

English words :

put on – wear, அணிதல். put out –extinquish, (தீயை) அணைப்பது

Grammar Tips: 

 Doubling Rule 
Immediate After vowels if a letter comes it will be doubled while writing suffixes 
Ex: RUn - Running 
HOp –Hopped
BIg - Bigger 
But here
JUmp –Jumped
m after U so it is not doubled
Help –helping
Milk –milking

அறிவியல் களஞ்சியம் :

 மனிதர்களின் மேல் தோல் கீழ் மல்பீஜியன் அடுக்குகள் (Malphigian Layers) உள்ளன. இவ்வடுக்குகளில் நிறமித் துணுக்குகள் (Pigment Granules) காணப்படுகின்றன. இவை மனிதனின் தோலின் நிறத்தை நிர்ணயிக்கின்றன. இந்நிறமித் துணுக்குகளில் உள்ள இரசாயனப் பொருள்களின் தன்மை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக அமைவதால், நிறமும் வெவ்வேறு விதத்தில் அமைகிறது.

செப்டம்பர் 02

உலகத் தேங்காய் நாள் (world coconut day) செப்டம்பர் 2 ஆம் நாளன்று கொண்டாடப்படுகிறது.[1] 1998ஆம் ஆண்டு வியட்நாமில் நடைபெற்ற இந்தோனேசியாவின் ஜகார்த்தாவைத் தலைமையகமாகக் கொண்ட ஆசிய பசிபிக் தெங்கு குழும மாநாட்டில் செப்டம்பர் 2 ஆம் தேதி உலக தேங்காய் நாளாக அறிவிக்கப்பட்டது.[2]

வறுமைக் குறைப்பில் உயிர்நாடியாக விளங்குகின்ற தெங்குப் பயிரின் முக்கியத்துவம் தொடர்பாக மக்களிடையே அதிக விழிப்புணர்வினை ஏற்படுத்துவதனை நோக்கமாகக் கொண்டு இந்நாள் அறிவிக்கப்பட்டது

நீதிக்கதை

 தங்கத்தூண்டில்


ஒரு ஊருல ரமேஷ், சுரேஷ் அண்ணன், தம்பிகள் இருந்தாங்க. அவங்க ரெண்டு பேரும் மீன் பிடிச்சு வாழ்க்கை நடத்துனாங்க. ஒரு நாள் மதியம் அவங்க சாப்பிட்டுக்கிட்டு இருக்கும்போது பிச்சைக்காரன் ஒருத்தன் அங்கே வந்தான். எலும்பும் தோலுமாக இருந்த அவனைப் பார்க்கவே பரிதாபமாக இருந்துச்சாம். 


அந்த பிச்சைக்காரன் அவங்ககிட்ட சாப்பிட்டு நாலு நாளாச்சு. பசிக்குது... எதாவது தாங்கன்னு கேட்டான். ரமேஷ் அவனுக்கு கொஞ்சம் சாப்பாட்டை எடுத்து தந்தான். , இதை பார்த்த சுரேஷ். , அண்ணா! இதுப்போல சோம்பேறிங்ககிட்ட இரக்கம் காடாதனு, தடுத்தான். 


அதை கேக்காம ரமேஷ் சாப்பாட்டை குடுத்தான். அடுத்த நாளும் அதே போல சாப்பிடுற நேரத்துல பிச்சைக்காரன் வந்தான். திரும்பவும் வந்ததுனால சுரேஷ்க்கு கோவம் வந்து டேய்! சோம்பேறி பையா! அடுத்த முறை உன்னை இங்க பார்த்தா தொலைச்சுடுவேன்னு கத்தினான். மூணாவது நாளும் பிச்சை கேட்டு அங்க வந்தான். அவனப்பாத்த கோபத்துல சுரேஷ் அங்கிருந்த தூண்டில் ஒன்றை எடுத்துக்கிட்டு அவனைத் ஏரிக்கரைக்கு கூட்டி வந்தான். 


இப்படி பிச்சை எடுக்குறியே! இதெல்லாம் ஒரு பிழைப்பா? உனக்கு மீன் பிடிக்க கத்துத்தரேன். இந்த தூண்டிலை வச்சு பொழைச்சுக்கோனு சொல்லி மீன் பிடிக்குறது எப்படின்னு கத்துக்கொடுத்ட்டு போய்ட்டான். 


பல நாளாக அந்த பிச்சைக்காரன் வரவே இல்ல. அவனை மறந்து போய்ட்டாங்க. ஒரு நாள் ரமேசும், சுரேசும் டிவி பார்த்துக்கிட்டு இருந்தப்போ, ஒரு அழகான குதிரை வண்டில ஒருத்தர் வந்தார். அவர் கையில தங்கத்தால் செஞ்ச தூண்டில் ஒண்ணு இருந்துச்சு. ரமேசும், சுரேசும் அவரைப் பார்த்தாங்க. தங்கத் தூண்டிலை எனது பரிசாக வச்சுக்கோனு சுரேஷிடம் குடுத்தாரு. 


தன் வீட்டுக்கு வந்த பிச்சைக்காரன்தான் இவன் என்று ரமேஷ்க்கு தெரிஞ்சுது. அவனுக்கு சரியான கோவம். நீ சாகப் பிழைக்க இருந்தப்போ உனக்கு சாப்பாடு குடுத்து காப்பாத்தியது நான். எனக்குத்தான் இந்தத் தங்கத் தூண்டிலை தரனும். எனக்குத் தா என்று கத்தினான். ஆனால், அவரோ, இது உங்க தம்பிக்குத்தான் சேரனும்ன்னு சொன்னார். இதை ரமேஷ் கேட்காம வழக்கை கோர்டுக்கு கொண்டு போனான். நடந்ததை எல்லாம் விசாரிச்சார் ஜட்ஜ். 


ரமேஷ்யை பார்த்து, நீ இவருக்கு சாப்பாடு குடுத்து உயிரை காப்பாத்தியது உண்மைதான். ஆனா, உன் தம்பியோ இவர் வாழ்வதற்கு வழி காட்டினார். அதைப் பயன்படுத்தி இவர் பெரிய பணக்காரராயிட்டார். நிலையான உதவி செய்த சுரேஷ்க்கு இவர் தூண்டிலை பரிசா குடுத்தது சரிதான். இந்தத் தங்கத் தூண்டில் சுரேஷ்க்குத்தான்னு தீர்ப்பு! வழங்கப்பட்டது. 


நீதி :

நாம் செய்யும் உதவி அப்போதைக்கு கஷ்டம் தீர்ந்தால் மட்டும் போதாது, எப்போதும் கஷ்டம் வராதபடி உதவி செய்தல் வேண்டும்.

இன்றைய செய்திகள்

02.09.2025


⭐இலவச கல்வி உரிமைச் சட்டம் நிதி: 4 வாரங்களில் பதில் அளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.

⭐தமிழகத்தில் தொழில் தொடங்க ஜெர்மனிவாழ் தமிழர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு.

⭐வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்தது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது.
இதில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் 4-வது சுற்றில் வெற்றி பெற்றார்.

🏀2வது போட்டியிலும் வெற்றி: ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியது இலங்கை

Today's Headlines: 

⭐Free Education Act funding: Supreme Court has orders central government to respond within 4 weeks.

⭐Chief Minister M.K. Stalin has  invited Tamil people residing in Germany, to start businesses in Tamilnadu.

⭐Cylinder prices for commercial uses has been reduced.

 *SPORTS NEWS*

🏀 The US Open tennis tournament is underway in New York. In this, Spain's Carlos Alcaraz won the 4th round. 

🏀Winning in the 2nd match: Sri Lanka won the ODI series against Zimbabwe.

Covai women ICT_போதிமரம்