Thursday, July 10, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 11.07.2025


  






திருக்குறள்: 

குறள் 101: 

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் 
வானகமும் ஆற்றல் அரிது.      

  விளக்கம்: தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.

பழமொழி :

Winners never quit, and quitters never win.

 வெற்றி பெறுவோர் ஒரு போதும் கைவிட மாட்டார்கள்.  கைவிடுவோர் வெற்றி பெற மாட்டார்கள். 

இரண்டொழுக்க பண்புகள் :

1. வார்த்தையால் பேசுவதை விட..வாழ்ந்து காட்டுவதே சிறப்பு எனவே சிறப்பான வாழ்க்கை வாழ முயற்சிப்பேன் 

2. எல்லோருக்கும் உதவி செய்வது உன்னதமான வாழ்க்கை எனவே என்னால் இயன்ற அளவு உதவி செய்வேன்.

பொன்மொழி :

அன்புள்ள மனிதன் தான் எதிலும் வெற்றியைப் பெறுகின்றான் - ரமணர்

பொது அறிவு : 

01.உலகின் கூரை என்று அழைக்கப்படும் பீடபூமி எது? 

         திபெத் பீடபூமி(Tibetan plateau)

02..தமிழ்நாட்டின் தலைமை தேர்தல்  ஆணையர் யார்?

  திருமதி. அர்ச்சனா பட்நாயக் I.A.S 

Tmt. Archana patnaik, I.A.S

English words :

variants–a slightly different form of a thing. திரிபு வடிவம் அல்லது உருவம்

Grammar Tips: 

Small –not big
Tiny - smaller than small 
Small: A general term for something of limited size
Ex. "She had a small cup of coffee.
"Tiny: Implies a very, very small size.
Ex: "He took a tiny sip of his coffee." 

அறிவியல் களஞ்சியம் :

 மூளையின் அடிப் பகுதியில் இருக்கும் பிட்யூட்டரி சுரப்பி தான் உடல் வளர்ச்சியையும், பாலின தன்மையையும் கட்டுப்படுத்துகிறது. ஒரு சிறு பட்டாணி அளவே உள்ள இது, உடலின் பல்வேறு பகுதிகளுடன் 50 ஆயிரம் நரம்புகளால் தொடர்பு கொண்டுள்ளது. 

ஜூலை 11

உலக மக்கள் தொகை நாள்

உலக மக்கள் தொகை நாள் (World Population Day) என்பது ஆண்டுதோறும் ஜூலை 11 மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை உலகளாவிய ரீதியில் மக்களுக்கு எடுத்துச் செல்லும் ஒரு முயற்சியாக ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தினால் கொண்டாடப்பட்டு வருகிறது. 1987 ஆம் ஆண்டில் இதே நாளிலேயே உலக மக்கள் தொகை ஐந்து பில்லியனைத் தாண்டியது.

நீதிக்கதை

 ஒரு ஊரில் ஒரு எலி இருந்தது. ஒருநாள் அதற்கு உணவு எதுவும் கிடைக்கவில்லை.‌ பசியோட அலைந்த எலி ஓரிடத்தில் ஒரு ஓட்டை தெரிவதை பார்த்தது. அதன் உள்ளே சென்றது. அங்கு பார்த்தால் நிறைய தானியங்கள் வைக்கப்பட்டு இருந்தது. அதைக் கண்ட எலி மிகுந்த மகிழ்ச்சி அடைந்தது. அங்கே இருந்து அந்த தானியங்களை உண்ண ஆரம்பித்தது. அதிக ஆசையால் சோம்பேறித்தனத்தால் அங்கேயே தங்கியிருந்து எல்லா தானியங்களையும் தானே சாப்பிட்டு முடிக்க முடிவு செய்தது.‌ உணவுத் தேடி எங்கும் அலைய வேண்டாம் என்று நினைத்து சந்தோஷப்பட்டது.‌ சில நாட்களுக்குப் பின்பு வெளியில் வந்து வெளி உலகப் பார்க்க நினைத்தது. ஆனால் வேலை செய்யாமல் இருந்து சாப்பிட்டதினால் உடம்பு மிகவும் பெருத்து விட்டது. இப்போது அதனால் அந்த ஓட்டை வழியாக வெளியே வர முடியவில்லை. அங்கேயே முட்டி மோதி இறந்து போனது 

நீதி:  பேராசை பெருநஷ்டம்

இன்றைய செய்திகள்

11.07.2025

⭐தமிழகத்தில் தொழில்துறை தலைநிமிர்ந்து நிற்கிறது மு.க.ஸ்டாலின்

⭐ கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே மக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

⭐டெல்லியில் நிலநடுக்கம் - பீதியில் மக்கள்

⭐எலான் மஸ்க்கின் Starlink செயற்கைகோள்களுக்கு இந்திய விண்வெளி ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி

⭐டிரம்ப் உத்தரவு எதிரொலி: 2,000 மூத்த அதிகாரிகளை பணிநீக்கம் செய்யும் நாசா

🏀 விளையாட்டுச் செய்திகள்🥳

🏀லார்ட்ஸ் டெஸ்ட்: ஒரே ஓவரில் இங்கிலாந்தின் தொடக்க வீரர்களை வீழ்த்திய நிதிஷ் ரெட்டி..!

🏀ஆசிய கோப்பை தகுதிச்சுற்று ரவுண்ட் போட்டியில் ஹாங்காங்கிற்கு எதிராக இந்தியா 0-1 எனத் தோல்வியடைந்தது.

Today's Headlines

✏️ Tamil nadu CM M.K. Stalin noticed our Industry in Tamil Nadu is standing High

✏️ Coimbatore District Collector has advised people to be cautious. Because, Nipah virus has been reported in the state of Kerala. Therefore, the 

✏️ Earthquake in Delhi ,so that the  People in panic 

✏️Indian Space Regulatory Authority approves Elon Musk's Starlink satellites 

✏️Echo of Trump's order: NASA to lay off 2,000 senior officials

 *SPORTS NEWS* 

🏀 Lord's Test: Nitish Reddy bowls out England openers in one over.

🏀 India lost 0-1 to Hong Kong in the Asia Cup qualifiers.

Covai women ICT_போதிமரம்

Wednesday, July 9, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.07.2025

பர்த்தலோமியஸ் சீகன்பால்கு

  




திருக்குறள்: 

குறள் 94: 

துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும் 
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.  

விளக்க உரை: யாரிடத்திலும் இன்புறத்தக்க இன்சொல் வழங்குவோர்க்குத் துன்பத்தை மிகுதிபடுத்தும் வறுமை என்பது இல்லையாகும்.

பழமொழி :

kindness costs nothing.  

நற்குணத்திற்கு செலவு கிடையாது.

இரண்டொழுக்க பண்புகள் :

1. வார்த்தையால் பேசுவதை விட..வாழ்ந்து காட்டுவதே சிறப்பு எனவே சிறப்பான வாழ்க்கை வாழ முயற்சிப்பேன் 

2. எல்லோருக்கும் உதவி செய்வது உன்னதமான வாழ்க்கை எனவே என்னால் இயன்ற அளவு உதவி செய்வேன்.

பொன்மொழி :

உண்மையான வாழ்க்கை என்பது மற்றவர்களுக்காக வாழ்வதாகும் 

     –புரூஸ்லீ

பொது அறிவு : 

01.' தமிழ்நாட்டின் கடல் நுழைவாயில்""  எது?

                 தூத்துக்குடி(Tuticorin)

02. இந்தியாவின் வர்த்தக தலைநகரம் எது?

                   மும்பை (Mumbai)

English words :

enchanted – pleased or very interested,மகிழ்ச்சியுற்ற, கவரப்பட்ட

Grammar Tips: 

Raj's and simran's house 

Joint possession 

When two nouns are closely connected and show joint ownership 
Apostrophe+ s 's is added only to the second noun 

Raj and simran's house

Separate possession 

When two  or more nouns imply separate ownership each noun must take its own apostrophe+s 

Raj's and simran's house 

அறிவியல் களஞ்சியம் :

இதயம் 24 மணிநேரத்தில் 14 ஆயிரம் லிட்டர் ரத்தத்தை 1.68 கோடி மைல் நீள ரத்தகுழாய்களின் வழியே பரவச்செய்கிறது. இது உண்டாகும் சக்தி 80 ஆயிரம் கிலோ எடை உள்ள பொருளை பூமியில் இருந்து ஓரடி உயரம் தூக்க போதுமானது. இதயம் ஒரு நாளில் லட்சம் தடவை சுருங்கி விரிகிறது.  

ஜூலை 10

சீகன் பால்க் அவர்களின் பிறந்தநாள்

சீகன் பால்க் (Bartholomäus Ziegenbalg, ஜூலை 10, 1682 - பிப்ரவரி 23, 1719) என்பவர் செருமனியைச் சேர்ந்த லூத்தரன் பாதிரியார். தமிழ்நாட்டிற்குச் சென்ற முதலாவது புரட்டஸ்தாந்து கிறிஸ்தவ மத போதகர் ஆவர். 1714 ஆம் ஆண்டு பர்த்தலோமேயு சீகன்பால்குவினால் முதன்முதலில் தமிழில் பைபிள் மொழியாக்கம் செய்யப்பட்டது. இந்திய மொழிகளில் தமிழில்தான் விவிலியம் முதன்முதலில் மொழிபெயர்க்கப்பட்டு அச்சேறியது. முதன் முதல் இந்தியாவில் அச்சகத்தை ஆரம்பித்தவர். முதன் முதல் இந்தியாவில் காகித ஆலையை ஆரம்பித்தவர். முதன் முதல் தமிழ் நாள்காட்டியை அச்சிட்டு வெளியிட்டவர். முதன் முதல் தமிழ் உரைநடையை அறிமுகப்படுத்தியவர். முதன் முதல் பெண்கள் பள்ளியை ஆரம்பித்தவர்.முதன் முதல் ஏழை பிள்ளைகளுக்கு காப்பகத்தை துவங்கியவர். முதன் முதல் பெண்களுக்கு தையல் கூடம் ஆரம்பித்தவர். முதன் முதல் மதிய உணவு வழங்குவதை துவங்கியவர். முதன் முதல் பள்ளி பிள்ளைகளுக்கு பாடநூலை அச்சிட்டவர்.  முதன் முதல் தமிழ் புரோட்டஸ்டன்ட் ஆலயத்தை கட்டினவர். முதன் முதல் பல் சமய உரையாடலை துவங்கினவர்.முதன் முதல் தமிழ் அகராதியை உருவாக்கினவர். முதன் முதல் தென்னிந்திய கடவுள்களின் வரலாற்றை எழுதியவர்.

நீதிக்கதை

 பொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு

தொடர்ந்து சில ஆண்டுகளாக மழையே பெய்யவில்லை. அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது. மக்கள் பசியால் வாடினர். நல்ல உள்ளம் படைத்த செல்வந்தர் ஒருவரிடம் அந்த ஊர் மக்கள் சென்றனர்.

“”ஐயா! பெரியவர்களாகிய நாங்கள் எப்படியோ பசியைப் பொறுத்துக் கொள்கிறோம். சிறுவர், சிறுமியர்கள் என்ன செய்வர்? இந்த நிலையில் நீங்கள் கட்டாயம் உதவி செய்ய வேண்டும்…” என்று வேண்டினர்.


இளகிய உள்ளம் படைத்திருந்த அவர்,”இந்த ஊரில் குழந்தைகள் யாரும் பசியால் வாட வேண்டாம். ஆளுக்கொரு மோதகம் கிடைக்குமாறு செய்கிறேன். என் வீட்டிற்கு வந்து மோதகத்தை எடுத்துச் செல்லச் சொல்லுங்கள்!” என்றார்.


மாளிகை திரும்பிய அவர், தன் வேலைக்காரனை அழைத்தார். ”இந்த ஊரில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுத்துக் கொள். ஆளுக்கொரு மோதகம் கிடைக்க வேண்டும். கூடவும் கூடாது, குறையவும் கூடாது. நாளையிலிருந்து மோதகங்களைக் கூடையில் சரியான எண்ணிக்கையில் வைத்துக்கொண்டு வீட்டிற்கு வெளியே இரு…” என்றார்.


மறுநாள், வேலைக்காரன் மோதகக் கூடையுடன் வெளியே வந்தான். அங்கே காத்திருந்த சிறுவர், சிறுமியர் அவனைச் சூழ்ந்து கொண்டனர். கூடையை அவர்கள் முன் வைத்தான் அவன்.


பெரிய மோதகத்தை எடுப்பதில் ஒவ்வொருவரும் போட்டி போட்டனர். ஆனால், ஒரே ஒரு சிறுமி மட்டும் அமைதியாக இருந்தாள். எல்லோரும் எடுத்துச் சென்றது போக, மிஞ்சி இருந்த சிறிய மோதகத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து மகிழ்ச்சியுடன் சென்றாள் அவள்.


இப்படியே தொடர்ந்து நான்கு நாட்கள் நிகழ்ந்தது. எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தார் செல்வந்தர். ஐந்தாம் நாளும் அப்படியே நடந்தது. எஞ்சியிருந்த சிறிய மோதகத்தை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள் அந்த சிறுமி. தன் வீட்டிற்கு வந்தவள், தன் தாயிடம் அதைத் தந்தாள். அந்த மோதகத்தைப் பிய்த்தாள் தாய். அதற்குள் இருந்து ஒரு தங்கக்காசு கீழே விழுந்தது.


அந்தத் தங்கக் காசை எடுத்துக் கொண்டு செல்வந்தரின் வீட்டிற்கு வந்தாள் சிறுமி. “ஐயா! இது உங்கள் தங்கக் காசு. ரொட்டிக்குள் இருந்தது. பெற்றுக் கொள்ளுங்கள்!” என்றாள். அவள். ”மகளே! உன் பெயர் என்ன என்று கேட்டார் செல்வந்தர். சிறுமி தன் பெயர் கிருசாம்பாள் எனக் கூறினாள். மகளே உன் பொறுமைக்கும், நற்பண்பிற்கும் நான் அளித்த பரிசே இந்தத் தங்கக் காசு. மகிழ்ச்சியுடன் இதை எடுத்துக் கொண்டு வீட்டிற்குச் செல்  என்றார் செல்வர். துள்ளிக் குதித்தபடி ஓடி வந்த அவள், நடந்ததை தன் தாயிடம் சொன்னாள்.

இன்றைய செய்திகள்

10.07.2025


⭐20 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் லேப்டாப் வழங்கப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

⭐ஆகஸ்ட் 1 முதல் புதிய வரிவிதிப்பு 
முறை நடைமுறைக்கு வரும் - அமெரிக்க அதிபர் டிரம்ப் உறுதி

⭐அடுத்த 5 ஆண்டுகளில் ஆப்கானிஸ்தானின் தலைநகரமான காபூல் குடிநீர் இல்லாத முதல் பெரிய நகரமாக மாறக்கூடும் என மெர்சி கார்ப்ஸ் அமைப்பு எச்சரித்துள்ளது.

⭐பி.எட். மாணவர்கள் சேர்க்கை: இணையதள விண்ணப்பப் பதிவுக்கான காலஅவகாசம் நீட்டிப்பு.

🏀விளையாட்டுச் செய்திகள்

🏀இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.

Today's Headlines

✏Tamilnadu Chief Minister M.K. Stalin  has announced 20 lakhs of  students to be provided laptops soon.

✏US President Trump confirms that  announced    New tax system will come into effect from August 1st.

✏Mercy Corps has warned that Kabul, the capital of Afghanistan, could become the first major city to run out of drinking water in the next 5 years. 

✏ B.Ed. Admissions: Deadline for online application registration extended.


 SPORTS NEWS 

🏀The Indian cricket team has gone to England to participate in a 5-match Test series. England won the first Test and India won the second Test. As a result, the series is tied 1-1.
Covai women ICT_போதிமரம்

Tuesday, July 8, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.07.2025

மும்பை பங்குச் சந்தை







திருக்குறள்: 

குறள் 92: 

அகன்அமர்ந் தீதலின் நன்றே முகனமர்ந்து 
இன்சொலன் ஆகப் பெறின்             

விளக்கம் : முகம் மலர்ந்து இன்சொல் உடையவனாக இருக்கப்பெற்றால், மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும் ஈகையைவிட நல்லதாகும்.

பழமொழி :

A journey of a thousand miles begins with a single step. 

ஆயிரம் மலை பயணம் ஒரு அடியில் தான் தொடங்குகிறது.

இரண்டொழுக்க பண்புகள் :

1. வார்த்தையால் பேசுவதை விட..வாழ்ந்து காட்டுவதே சிறப்பு எனவே சிறப்பான வாழ்க்கை வாழ முயற்சிப்பேன் 

2. எல்லோருக்கும் உதவி செய்வது உன்னதமான வாழ்க்கை எனவே என்னால் இயன்ற அளவு உதவி செய்வேன்.

பொன்மொழி :

ஒருவரது பேச்சு அவரது நடத்தையை எடுத்துக் காட்டும் ஒரு கோணமாகும். - ஜேம்ஸ் பார்ஸன்.

பொது அறிவு : 

01.தமிழ்நாட்டில் மாமல்லபுரம் நகரை உருவாக்கிய மன்னன் யார்?

முதலாம்  நரசிம்மவர்ம பல்லவன்(Narasimhavarma pallava I)

02. இந்தியாவில் நறுமணப் பொருட்களின் தொட்டில் என்று அழைக்கப்படும் மாநிலம் எது?             

       கேரளா( Kerala)

English words :

Riddle – a difficult question which has a clever or amusing answer. புதிர் 

Grammar Tips: 

The radius of both the circles are equal 

In this sentence radius should be replaced by radii.

அறிவியல் களஞ்சியம் :

 மனித உடலில் 60 சதவிதம் நீர் தான் உள்ளது. இது சுமார் 50 லிட்டர் இருக்கும். அதாவது நூறு கிலோ மனிதனின் உடலில் 60 லிட்டர் தண்ணீர் தான் இருக்கிறது.  

ஜூலை 09

9 ஜூலை 1875 - இந்தியாவின் முதல் பங்குச் சந்தையான மும்பை பங்குச் சந்தை இந்த நாளில் நிறுவப்பட்டது.

நீதிக்கதை

பிறரை வஞ்சித்தால் நீயும் வஞ்சிக்கப் படுவாய்

ஒரு காட்டில் நரி ஒன்று வசித்து வந்தது. அதற்கு எப்போதும் யாரையாவது ஏமாற்றி…அவர்கள் ஏமாறுவதைக் கண்டு ..மனம் மகிழ்வது பொழுது போக்காக இருந்தது.

ஒரு நாள், கொக்கு ஒன்றை நரி சந்தித்தது. அதனுடன் நட்புக் கொண்டு…அந்த கொக்கை நரி தன் வீட்டிற்கு விருந்துக்கு அழைத்தது.

கொக்கும் …நரியை நண்பன் என நினைத்து அதனுடைய வீட்டிற்குச் சென்றது.

கொக்கைக் கண்ட நரி..ஒரு தட்டில் கஞ்சியை எடுத்து வந்து கொக்குக்கு உண்ணக் கொடுத்தது. கொக்கு அதன் நீண்ட அலகால்..தட்டிலிருந்த கஞ்சியை சாப்பிட முடியவில்லை…ஒரு வாயகன்ற ஜாடி போன்ற பாத்திரங்களில் இருந்தால் மட்டுமே …கொக்கு தன் அலகை அதனுள் விட்டு கஞ்சியை உறிஞ்சி குடிக்க முடியும்.

கொக்கு படும் துன்பத்தைக் கண்டு நரி சிரித்து மகிழ்ந்தது…அவமானம் அடைந்த கொக்கு..நரிக்கு பாடம் புகட்டத் தீர்மானித்தது.

நரியை ஒரு நாள் கொக்கு விருந்துக்கு அழைத்தது..வந்த நரியை நன்கு உபசரித்த கொக்கு..ஒரு வாய் குறுகிய ஜாடியில்..கஞ்சியைக் கொண்டு வந்து வைத்தது.

நரியால்..நாக்கால் நக்கி கஞ்சியை குடிக்க முடியவில்லை..

அதைக் கண்ட கொக்கு ..’நரியாரே..இப்பொழுது எப்படி உங்களால் கஞ்சியை குடிக்க முடியவில்லையோ..அதே போல தட்டில் இருந்தால் …என்னால் குடிக்க முடியாது என தெரிந்தும் எனக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி ..மனம் மகிழ்ந்தீர்கள்.ஆனால் நான் அப்படியில்லை..உங்களுக்கு பாடம் புகட்டவே ஜாடியில் கஞ்சியை வைத்தேன்…என்று கூறியபடியயே ..கஞ்சியை தட்டில் ஊற்றிக் கொடுத்தது.

தன்னை ஏமாற்றிய நரிக்கு கொக்கு நல்லதே செய்தது.

நரி தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்து விட்டு ..கஞ்சியைக் குடித்தது.

அது முதல் திருந்திய நரி. பிறகு யாரையும் ஏமாற்றுவதில்லை.

பிறரை வஞ்சித்து அவர் படும் துன்பம் கண்டு மகிழ்ச்சியடையாது. மற்றவர்களுக்கு நாமும் எம்மாலான உதவிகளைச் செய்ய வேண்டும். 

இன்றைய செய்திகள்

09.07.2025

 ⭐தமிழகத்தின் கிராம பகுதிகளில் உள்ள ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளில் 100 உயர்மட்ட பாலங்கள் அமைக்க ரூ.505 கோடி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

⭐ ஜப்பானிலிருந்து வாகனங்கள் மற்றும் அரிசியை அதிகளவில் இறக்குமதி செய்து வரும் அமெரிக்கா ஜப்பானிய பொருள்களுக்கு 35 சதவீதம் வரை வரி விதிப்பதாக அறிவித்துள்ளது.

⭐தமிழகத்தில் காலியாக உள்ள 2,299 கிராம உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

⭐கடலூர் தனியார் பள்ளி வாகனம் மீது ரெயில் மோதி மாணவர்கள் உயிரிழப்பு.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀எகிறிய ஐபிஎல் பிராண்ட் மதிப்பு.. சிஎஸ்கே அணியை பின்னுக்கு தள்ளிய RCB, MI

🏀குரோஷியா சர்வதேச செஸ் போட்டி: நார்வே வீரர் கார்ல்சென் 'சாம்பியன்'.

Today's Headlines


 ✏️The Tamil Nadu government has issued an order allocating Rs. 505 crore for the construction of 100 high-level bridges on panchayat and panchayat union roads in rural areas of Tamil Nadu.

✏️The Tamil Nadu government has ordered the immediate filling of 2,299 vacant village assistant posts in Tamil Nadu.

✏️ Students killed after train hits the private school vehicle in Cuddalore.

✏️The United States, which imports a large amount of vehicles and rice from Japan, has announced that it will impose a tax of up to 35 percent on Japanese goods. 

 *SPORTS NEWS* 

🏀 IPL brand value soars.. RCB, MI overtake CSK 

🏀 Croatia International Chess Tournament: Norwegian Carlsen 'champion'.

Covai women ICT_போதிமரம்

Monday, July 7, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 08.07.2025

செளரவ் கங்குலி

  






திருக்குறள்: 

குறள் 91: 

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம் 
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்          
விளக்கம் : அன்பு கலந்து வஞ்சம் அற்றவைகளாகிய சொற்கள், மெய்ப்பொருள் கண்டவர்களின் வாய்ச்சொற்கள் இன்சொற்களாகும்.

பழமொழி :

Every cloud has a silver lining. 

துன்பத்திற்குப் பிறகு நன்மை வரும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. வார்த்தையால் பேசுவதை விட..வாழ்ந்து காட்டுவதே சிறப்பு எனவே சிறப்பான வாழ்க்கை வாழ முயற்சிப்பேன் 

2. எல்லோருக்கும் உதவி செய்வது உன்னதமான வாழ்க்கை எனவே என்னால் இயன்ற அளவு உதவி செய்வேன்.

பொன்மொழி :

ஆண்களும்,பெண்களும் ஒழுக்கத்தில் நம்பிக்கை கொள்வது, குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படுவதற்கு அடிப்படை - லாண்டார்.

பொது அறிவு : 

1. இந்தியாவிலிருந்து முதன் முதலில் அண்டார்டிகாவிற்கு சென்ற  இரு பெண் விஞ்ஞானிகள் யாவர்?

அதிதி பந்த்(Aditi pant)       Dr.சுதிப்தாசென்குப்தா (Sudipta Sengupta)

02. உலகின் மிக நீளமான தொங்கு பாலம் எங்கு உள்ளது?

கானாக்கலே பாலம் -துருக்கி 

Canakkale Bridge- Turkey

English words :

broadcast – to send out radio or television programmes. ஒலிபரப்பு அல்லது ஒளிபரப்பு.

Grammar Tips: 

Very, so
Very a common intensifier means highlight the adjectives and adverbs 

Ex. It is a very good book 

'So' high degree of intensifier 

Ex. The view is so beautiful 

2. Very can be used before superlative adjectives 
     Ex. The very best

So" is used with "much" and "many" to emphasize a large quantity. 

There were so many people at the party."

அறிவியல் களஞ்சியம் :

 ஒரு வருடத்தில் ஒரு மனிதனின் கல்லீரல் 23 தண்ணீர் லாரியில் நிரப்பக்கூடிய அளவுக்கு ரத்தத்தை வடிகட்டுகிறது. 

ஜூலை 08

செளரவ் கங்குலி அவர்களின் பிறந்தநாள்

சௌரவ் சந்திதாஸ் கங்குலி (Sourav Chandidas Ganguly; ஒலிப்புⓘ; பிறப்பு: சூலை 8, 1972) தாதா என அன்பாக அழைக்கப்படுகிறார். அதற்கு வங்காள மொழியில் மூத்த சகோதரர் என்பது அர்த்தமாகும். இவர் இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரரும் அணித்தலைவரும் ஆவார். தற்போது இவர் வங்காளத் துடுப்பாட்ட அவையின் தலைவராக உள்ளார்.[1] சர்வதேச துடுப்பாட்ட அரங்கில் மிகச் சிறந்த அணித் தலைவராகவும் மட்டையாளராகவும் விளங்கினார்.வலது புறங்களில் பந்துகளை அடிப்பதில் சிறந்தவர் எனவே இவர் காட் ஆஃப் தெ ஆஃப் சைட் (வலது புறத்தின் கடவுள்) என அழைக்கப்படுகிறார்

நீதிக்கதை

 ஒற்றுமையே பலமாம்

ஒரு காலத்துல ஒரு வியாபாரி வாழ்ந்துகிட்டு வந்தாரு.

அவருக்கு மூணு மகன்கள்.

அவுங்க மூணுபேரும் எப்பவும் சண்டை போட்டுக்கிட்டே இருப்பாங்க.

அந்த வியாபாரி எவ்வளவு முயர்ச்சி செஞ்சும் அவுங்கள ஒன்னு சேக்க முடியல.

ஒருநாள் அந்த வியாபாரி மூணு மகன்களையும் கூப்பிட்டாரு.

உங்களுக்கு ஒரு போட்டி இந்த கரும்பு கட்ட பிரிச்சி எல்லா கரும்பையும் ரெண்டா உடைக்கணும்னு சொன்னாரு.

இதைக்கேட்ட மூணுபேரும் வேக வேகமா உடைக்க ஆரம்பிச்சாங்க.

மூணுபேரும் ரொம்ப சுலபமா அந்த கரும்புங்கள உடைச்சாங்க.

உடைச்சு முடிச்சு அவுங்களுக்குள்ள யார் பலசாலின்னு மீண்டும் சண்டை வந்துச்சு.

இத பாத்த அந்த வியாபாரி போட்டி இன்னும் முடியல.

இப்ப அந்த கரும்பு கட்ட பிரிக்காம யாரு முழுசா உடைக்க முடியும்னு கேட்டாரு.

மூணு மகன்களும் முயற்சி பண்ணி பாத்தாங்க.

கரும்பு பிரிச்சி உடைக்க வேகமா உடைக்க முடிஞ்சது.

ஆனா இப்போ முடியலன்னு ரொம்ப வறுத்த பட்டாங்க.

அப்பத்தான் அந்த வியாபாரி பேச ஆரம்பிச்சாரு.

பாத்திங்களா நீங்களும் இந்த கரும்பு மாதிரிதான்,

தனி தனியா இருந்தீங்கன்னா உடைஞ்சி போயிடுவீங்க.

ஆனா மொத்தமா கட்டா இருந்தீங்கன்னா உடையாம பலமா இருப்பீங்க.

ஒற்றுமையே பலம்னு சொல்லி மூணு மகன் களையும் ஒண்ணா நட்பா இருக்க சொன்னாரு.

இதைக்கேட்ட அந்த மூணு பேரும் இத்தனை நாளா தனி தனியா இருந்தத.

நினைச்சு வருத்தப்பட்டாங்க.

பழமொழி : ஒற்றுமையே பலமாம் .

இன்றைய செய்திகள்

08.07.2025


⭐அரசு கலை கல்லூரிகளில் 20 சதவீத கூடுதல் மாணவர் சேர்க்கை - அமைச்சர் தகவல்.

⭐அமெரிக்காவின் டெக்சாஸில் வரலாறு காணாத கனமழை உயிரிழந்தோர் எண்ணிக்கை 81 ஆக உயர்வு.

⭐திருவாரூர் மாவட்டத்தில் 2 நாள் சுற்றுப்பயணம்- கள ஆய்வு மேற்கொள்ளும் முதலமைச்சர்.

⭐ தமிழக அரசின் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் கீழ் நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 1,01,973 மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀 367-ல் ஆட்டமிழக்காமல் இருந்தும் லாரா சாதனையை முறியடிக்காமல் டிக்ளேர் அறிவித்த முல்டர்.

🏀சிமர்ஜித் சிங் இதுவரை இல்லாத அளவிற்கு 39 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

Today's Headlines

Today's News

⭐ 20 % Additional Student Admissions in Government Arts Colleges - Minister Information.

⭐ Due to unprecedented  heavy rains in Texas of the United States the number of people who lost their lives rises to 81.

⭐ Chief Minister is having 2 Day Tour- Field Survey in Thiruvarur District.

⭐ 1,01,973 students have been provided with employment through campus conducted under the Department of Special Planning of the Government of Tamil Nadu.

🏀 Sports News

🏀 Mulder announced the Dicker without breaking the  Laura's record despite being  unbeaten in 367 runs.

🏀 Simarjit Singh has been auctioned for Rs 39 lakh.

Covai women ICT_போதிமரம்