Sunday, June 22, 2025

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 23.06.25

  


 






திருக்குறள்: 

குறள் 13:

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.

விளக்கம் : மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்.

பழமொழி :

Hitch your wagon to a star. 

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்.

இரண்டொழுக்க பண்புகள் :

1.கல்வியும் ஒழுக்கமும் என் வாழ்வை மேம்படுத்தும்.

2. எனவே இரண்டையும் தேடி நாடி பெற்றுக் கொள்வேன்.

பொன்மொழி :

உங்கள் எதிர்காலத்தை உங்களால் மாற்ற முடியாது . பழக்க வழக்கங்களை மாற்றலாம் . உங்கள் பழக்கவழக்கங்கள் நிச்சயம் எதிர்காலத்தை மாற்றும்- ஏ பி ஜே அப்துல் கலாம்.

பொது அறிவு : 

01.இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் பல்கலைக்கழகம் எது?

நாளந்தா பல்கலைக்கழகம்
பீகார்(Nalanda university- Bihar)

02. இந்தியாவின் கேப் கென்னடி என்று அழைக்கப்படும் இடம் எது?

ஸ்ரீஹரிகோட்டா-ஆந்திரபிரதேசம்
Sriharikota-Andarapradesh

English words & Tips :

 alone     -      தனிமை
 
  ability    -       திறமை

Grammar Tips:

"At" and "in" are prepositions used to indicate location, but they differ in their specificity. 
"In" is used for enclosed spaces or larger areas, like rooms, cities, or countries.
"at" is used for specific points or locations, like addresses or specific places like a bus stop or particular house

அறிவியல் களஞ்சியம் :


செவ்வாய் கோளில் உள்ள 'அர்சியா மான்ஸ்' என்ற உயரமான எரிமலையை விஞ்ஞானிகள் புகைப்படம் எடுத்துள்ளனர். 2001ல் அமெரிக்காவின் நாசா அனுப்பிய 'மார்ஸ் ஒடிசிய் ஆர்பிட்டர்' கடந்த மே 2ல், தெர்மல் எமிசன் இமேஜிங் சிஸ்டம் தொழில்நுட்பம் மூலம் இந்த புகைப் படத்தை எடுத்துள்ளது. இதன் உயரம் 20 கி.மீ. அகலம் 120 கி.மீ. இது பூமியின் உயரமான எரிமலையான ஹவாய் தீவிலுள்ள 'மவுனா லாவ்' எரிமலையை (9 கி.மீ.,) விட இரண்டு மடங்கு உயரமானது. மேலும் 'அர்சிய மான்ஸ்' பகுதியில் மேகத்தின் தடிமன், பூமியில் மவுனா லாவ் பகுதி மேகத்தை விட அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

ஜூன் 23

கிஜூபாய் பதேக்கா அவர்களின் நினைவுநாள்


கிஜூபாய் பதேக்கா (Gijubhai Badheka, 15 நவம்பர் 1885 – 23 ஜூன் 1939) சித்தல் நகரில் பிறந்த இவர், இந்தியாவில் மாண்டிசோரி கல்வி முறையை அறிமுகப்படுத்துவதில் பெரும் பங்கு வகித்தார். இவர் “மீசை உள்ள அம்மா“ எனவும் அறியப்படுகிறார். முதலில் அவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். 1923 – ல் அவருடைய மகன் பிறந்த பிறகு, அவர் குழந்தை வளர்ச்சி மற்றும் கல்வியில் தனது ஆர்வத்தை செலுத்தினார். 1920-ல் பதேகா “ பால மந்திர்” என்னும் முன் தொடக்கப் பள்ளியை  நிறுவினார். “ பகல் கனவு“ போன்ற பல கல்விசார் நூல்களை வெளியிட்டுள்ளார்.

நீதிக்கதை

 விட்டுக் கொடுத்து நடந்தால் ஒற்றுமை வளரும், நஸ்டம் ஏற்படாது

ஒரு வீட்டில் இரண்டு பூனைகள் நண்பர்களாயிருந்தன….ஆனால் அவைகள் இரண்டும் ஒற்றுமையில்லாது அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டிருந்தன.

ஒரு நாள் அப்பூனைகளுக்கு ஒரு அப்பம் கிடைத்தது. அவை இரண்டும் அதை சாப்பிட முனைந்த போது அதை சரிசமமாக பிரிப்பதில் அவைகளுக்குள் பிரச்சனை ஏற்பட்டது.

அதனால் பூனைகள் இரண்டும் யாரிடமாவது சென்று அப்பத்தை சரிசமமாக பங்கிட்டு தரச்சொல்லலாம் என எண்ணி வீட்டிற்கு வெளியே வந்தன. அப்போது ஒரு குரங்கு அங்கு வந்தது.

குரங்கிடம் அப்பத்தை கொடுத்து  அதைச் சமமாக பிரித்துத் தரும்படி கேட்டன. குரங்கும் மிக மகிழ்வுடன் அதற்கு சம்மதித்து ஒரு தராசு கொண்டு வந்து, அப்பத்தை இரண்டாக பிய்த்து தராசின் ஒவ்வொரு தட்டிலும் ஒவ்வொரு அப்பத்துண்டை வைத்து வைத்தது.

அப்போது ஒரு அப்பத் துண்டு சிறிது பெரிதாக இருந்ததினால் அந்தத் துண்டு இருந்த தட்டு சற்று கீழே பதிந்தது. உடனே அந்தக் குரங்கு அந்த அப்பத் துண்டை எடுத்து ஒரு கடி கடித்து சாப்பிட்டு விட்டு மீதியை தட்டில் போட்டது . இப்போது மற்றத் தட்டு கீழே தாழ்ந்தது. அப்போதும் அந்த தட்டில் இருந்த அப்பத்துண்டை எடுத்து சிறிது  கடித்து விட்டு மீண்டும் போட்டது.

இப்படியே மாறி மாறி தட்டுகள் தாழ…குரங்கும் மாறி மாறி அப்பத்துண்டுகளை கடித்துச் சாப்பிட்டது.

அப்பம் குறைவதைக் கண்ட பூனைகள் இனி நீங்கள் அப்பத்தை பிரிக்க வேண்டாம் நாங்களே பார்த்துக்கொள்கிறோம்” என மீத முள்ள அப்பத்தைத் தரும்படி கேட்டன.

ஆனால் குரங்கோ, மீதமிருந்த அப்பம் ‘நான் இது வரை செய்த வேலைக்கு கூலி’ என்று சொல்லிவிட்டு அதையும் வாயில் போட்டுக்கொண்டது.

பூனைகள் ஒன்றுக்கொன்று விட்டுக்கொடுத்து ஒற்றுமையாக இருந்திருந்தால்…அப்பத்தை சாப்பிட்டு இருக்கலாம். ஒற்றுமையில்லாததால் நஷ்டம் அடைந்தன.

நாமும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து அன்பாக இருந்தால், உள்ளதையும் இழக்காமல் ஒற்றுமையுடனும் இருக்கலாம்

இன்றைய செய்திகள்

23.06.2025

⭐புதிய மினி பஸ் சேவை திட்டத்தின் மூலம் 3,103 வழித்தடங்களில் போக்குவரத்து வசதி; தற்போது வரை 90,000 கிராமங்களை சேர்ந்த 1 கோடி பேர் பயன்பெற்றுள்ளனர். தமிழக அரசு தகவல்.

⭐ ஈரானிய அணுசக்தி நிலையங்கள் உட்பட மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.

⭐டெல்லியில் வீடுகள் இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர் குடும்பங்களுக்கு வங்கிக் கணக்கில் தலா ரூ.8000 நிதியுதவி வழங்கினார் அமைச்சர் ஆவடி நாசர்.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀கிளாட்பெக் களிமண் போட்டியில் நடந்த இறுதிப் போட்டியில் சுவிட்சர்லாந்தின் நோலியா மந்தாவை 6-2, 6-4 என்ற கணக்கில் தோற்கடித்து டீன் ஏஜ் வீராங்கனை மாயா ராஜேஷ்வரன் தனது முதல் ITF ஜூனியர் பட்டத்தை வென்றார்.

🏀FIH ஹாக்கி புரோ லீக்கில் இன்று இந்தியாவின் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் பெல்ஜியத்தை எதிர்கொள்கின்றன.

🏀பாரீஸ் டைமண்ட் போட்டியில்
 88.16 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து சாம்பியன் பட்டம் வென்றார் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா.


Today's Headlines

⭐ By new mini bus service project transport facilities are afforded to 3,103 routes till date. Up to 90,000 villages and  1 crore people are benefitted information by Tamil Nadu Government.

⭐In three nuclear power stations including  Iranian nuclear power stations    United States did the air strike. 

⭐ Minister Avadi Nasar has  donated Rs.8000 in the bank accounts of people who were affected by Delhi house demolition.

⭐Maya Rajeshwaran, the first junior to defeat Switzerland's Noliya Manta by 6-2, 6-4 in the Gladbeck Kaliman competition and won her first IFT junior title.

⭐In FIH Hockey Pro League today Indian men and women facing the Belgium team.
Indian player Neeraj Chopra won the championship by throwing 88.16 meters in Javelin throw

Covai women ICT_போதிமரம்

Thursday, June 19, 2025

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 20.06.25

கவிஞர் சுரதா

   






திருக்குறள்: 

குறள் 12:

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.

விளக்கம் : உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்.

பழமொழி :

 Kindness makes even intelligence beautiful.

 நற்குணம் இருந்தால் அறிவும் அழகாகிறது.

இரண்டொழுக்க பண்புகள் :

1. காகம் ஒற்றுமையையும், தேனீயும் எறும்புகளும் சுறுசுறுப்பையும் போதிக்கின்றன.

2. இயற்கையை காப்பதோடு மட்டும் அல்லாது அவற்றில் இருந்து பாடமும் கற்றுக் கொள்வேன்.

பொன்மொழி :

படைப்பில் பிரம்மாண்டமான படைப்பு நமது மனதுதான் . மனதை அழகுபடுத்துங்கள் , வாழ்க்கை அழகாகும். - புத்தர்

பொது அறிவு : 

01.உலக அஞ்சலக தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
அக்டோபர் 9(October 9)

02. அடையாறு புற்றுநோய் மையத்தை ஏற்படுத்தியவர் யார்?
டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி
Dr.Muthulakshmi Reddy

English words & Tips :

 awful     -     மிக மோசமான 
 

converse      -     உரையாடு

Grammar Tips : 

Fish (one  fish)

Fish ( 3or more when they are same type) 

Fishes ( 3or more fish when they are different type of fish)

அறிவியல் களஞ்சியம் :

மைக்ரோசாப்ட் உருவாக்கிய அரோரா AI, சூறாவளி மற்றும் மணல் புயல் உட்பட பல வானிலை நிகழ்வுகளை 91% துல்லியத்துடன் கணித்துள்ளது. 

ஜூன் 20

கவிஞர் சுரதா அவர்களின் நினைவுநாள்

சுரதா (Suratha; 23 நவம்பர் 1921 – 20 சூன் 2006) இயற்பெயர் இராசகோபாலன் தமிழகக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். கவிஞர் பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால்‌ பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்னும் பெயரில் பல மரபுக் கவிதைத் தொகுப்புகள் தந்தவர். செய்யுள் மரபு மாறாமல் எழுதிவந்த இவர் உவமைகள் தருவதில் தனிப்புகழ் ஈட்டியவர். இதனால் இவரை உவமைக் கவிஞர் என்று சிறப்பித்துக் கூறுவர்.

நீதிக்கதை

 துஷ்ட்டருக்கு அறிவுரை கூறக் கூடாது



ஒரு காட்டில் ஒரு நாள் அடை மழை பெய்துக் கொண்டிருந்தது. அப்போது அந்தக் காட்டில் இருந்த ஒரு குரங்கு மழையில் நனைந்து நடுங்கியவாறு ஒரு மரத்தடியில் ஒதுங்கி நின்றது.

அந்த மரத்தில் இருந்த பறவை ஒன்று கூடு கட்டி தன் குஞ்சுகளுடன் மழைக்கு நனையாது பாதுகாப்பாக உட்கார்ந்து கொண்டிருந்தது.

மரத்தடியில் குரங்கு நனைந்து நடுங்குவதைப் பார்த்ததும் பறவைக்கு குரங்கு மீது இரக்கம் வந்தது.  மனம் பொறுக்காமல் ‘ குரங்காரே..என்னைப்பாரும்…வெய்யில் மழையிலிருந்து என்னையும் என் குஞ்சுகளையும் காப்பாற்றிக்கொள்ள கூடு கட்டியிருக்கிறேன்.  அதனால் தான் இந்த மழையிலும் நாங்கள் சந்தோஷமாக இருக்கிறறோம். நீரும் அப்படி ஒரு பாதுகாப்பான கூடு செய்திருக்கலாமே. கூடு இருந்தால் நீர் இப்படி நனைய மாட்டீர் அல்லவா? என்று புத்தி சொன்னது. இதனைக் கேட்ட குரங்காருக்கு கோபம் சீறிக் கொண்டு வந்தது. உன்னைவிட நான் எவ்வளவு வலுவானவன். எனக்கு நீ புத்தி சொல்கிறாயா?….

இப்போ உன்னையும் உன் குஞ்சுகளையும் என்ன செய்கிறேன் பார்’ என மரத்தில் விடுவிடு என ஏறி பறவையின் கூட்டை பிய்த்து எறிந்தது.

பறவைக்கு அப்போதுதான் புரிந்தது’ அறிவுரைகளைக்கூட…..அதைக்கேட்டு நடப்பவர்களுக்குத்தான் சொல்லவேண்டும்  என்று.

துஷ்டனுக்கு நல்லது சொல்லப் போய் தனக்கும் தன் குஞ்சுகளுக்கும் பாதுகாப்பாக இருந்த கூட்டை இழந்து நனைகின்றோமே என மனம் வருந்தியது.

நாமும்…ஒருவருக்கு அறிவுரை வழங்குமுன் அவர் அதனை ஏற்று நடப்பாரா என்று புரிந்துகொண்ட பின்னரே அறிவுரை வழங்கவேண்டும்.


இன்றைய செய்திகள்

20.06.2025


⭐தமிழகத்தில் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும்: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை.

⭐ தமிழ்நாடு அரசு வீடு தேடி சென்று, ரேஷன் பொருட்களை விநியோகிக்க திட்டமிட்டுள்ளது.

⭐ மத்திய கிழக்கு நாடுகள் உற்பத்தி செய்யும் எண்ணெயை உலகச் சந்தைகளுக்கு கொண்டு செல்லும் முக்கிய நீர்வழி பாதையான 'ஹார்மோஸ் நீரிணை'யை மூடப்போவதாக ஈரான் அறிவித்துள்ளது.

⭐பொதுமக்களுக்கு இலவசமாக சுத்தமான  குடிநீர் வழங்கும் வகையில் சென்னையில் ரூ.6.04 கோடியில் 50 குடிநீர் ஏடிஎம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀லீட்ஸ் டெஸ்டுக்கு முன்னதாக எம்எஸ் தோனியின் சாதனையை ரிஷப் பந்த் எதிர்நோக்குகிறார்.

🏀ஹாக்கிக்கு ஒரு பெரிய ஊக்கமாக, 2025 ஆம் ஆண்டு FIH ஆண்கள் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கியை நடத்துவதற்காக ஹாக்கி இந்தியா தமிழ்நாடு அரசாங்கத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.


Today's Headlines


✏ Temperatures in Tamil Nadu to be above normal: Chennai Meteorological Department warns. 

✏ Tamil Nadu government plans to go door to door and distribute ration items.

✏ Iran has announced that it will close the Strait of Hormuz, a key waterway that carries oil produced by Middle Eastern countries to world markets.

✏ Chief Minister M.K. Stalin inaugurated 50 drinking water ATMs in Chennai at a cost of Rs. 6.04 crore to provide free clean drinking water to the public.

 SPORTS NEWS 

🏀 Rishabh Pant looks forward to matching MS Dhoni's record ahead of Leeds Test.

🏀 In a major boost for hockey, Hockey India has signed a Memorandum of Understanding with the Tamil Nadu government to host the FIH Men's Junior World Cup Hockey in 2025.

Covai women ICT_போதிமரம்

Wednesday, June 18, 2025

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 19.06.25

 

ஆங் சான் சூசி

  






திருக்குறள்: 

குறள் 11:

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.
      
விளக்கம் : மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் Secunderabad அமிழ்தம் என்று 
உணரத்தக்கதாகும்.

பழமொழி :

Small rudders guide great ships. 

சிறு துரும்பும் பல் குத்த உதவும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. காகம் ஒற்றுமையையும், தேனீயும் எறும்புகளும் சுறுசுறுப்பையும் போதிக்கின்றன.

2. இயற்கையை காப்பதோடு மட்டும் அல்லாது அவற்றில் இருந்து பாடமும் கற்றுக் கொள்வேன்.

பொன்மொழி :

செய்து முடிக்கும் வரை செய்ய முடியாதது போலத்தான் இருக்கும் . முயன்றால் முடியும். - நெல்சன் மண்டேலா.

பொது அறிவு : 

" 01.பனாமா கால்வாய் இணைக்கும் இரு  பெருங்கடல்கள் எவை?


    அட்லாண்டிக் மற்றும் பசுபிக்       பெருங்கடல்கள்

 (Atlantic and Pacific oceans)


02. இந்திய காடுகளின் ராஜா என்று அழைக்கப்படும் மரம் எது?


               ஆலமரம்(Banyan tree)"

English words & Tips :

 pamper   -       செல்லம் கொடு,

 virtue        -      நல்லொழுக்கம்

Grammar Tips

K rule 
We all know that letter K is silent in some words but most of the children got confused.There is a small trick ,when it is silent and when it is not.

K  is not silent in King kite and kettle whereas 

K is silent in knot,knit,knot,knight, from this we can conclude that when k comes before n then K is silent .

அறிவியல் களஞ்சியம் :

 விஞ்ஞானிகள் இருண்ட பொருளைத் தேட ஒரு லெவிட்டேட்டட் காந்தத்தைப் பயன்படுத்தினர், இது பிரபஞ்சம் முழுவதும் இருப்பதாக நம்பப்படும் அடையாளம் காணப்படாத பொருள். இருண்ட பொருள் அல்ட்ராலைட் துகள்களால் ஆனது என்றால், அது காந்தத்தை நுட்பமாகத் தள்ளும் அலை போல நடந்து கொள்ளக்கூடும்.

ஜூன் 19

ஆங் சான் சூச்சி அவர்களின் பிறந்தநாள்

ஆங் சான் சூச்சி (Aung San Suu Kyi, பிறப்பு: சூன் 191945) என்பவர் மியான்மர் நாட்டைச் சேர்ந்த பெண் அரசியல்வாதியும் மக்களாட்சி ஆதரவாளரும் ஆவார். இவர் மியான்மரின் அரச ஆலோசகராக பதவி வகிக்கிறார். இவர் மக்களாட்சிக்கான தேசிய அமைப்பு என்ற கட்சியின் தலைவராக உள்ளார். தன் நாட்டில் மக்களாட்சியை ஏற்படுத்த அறவழிப் போராட்டத்தை நடத்தி வரும் இவர் தனது 21 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் 15 ஆண்டுகள் வீட்டுக்காவலில் கழித்தார். 1991 இல் அமைதிக்கான நோபல் பரிசினை ஆங்சான் சூச்சி பெற்றார்.

நீதிக்கதை

 பிறரை வஞ்சித்தால் நீயும் வஞ்சிக்கப் படுவாய்

ஒரு காட்டில் நரி ஒன்று வசித்து வந்தது. அதற்கு எப்போதும் யாரையாவது ஏமாற்றி…அவர்கள் ஏமாறுவதைக் கண்டு ..மனம் மகிழ்வது பொழுது போக்காக இருந்தது.

ஒரு நாள், கொக்கு ஒன்றை நரி சந்தித்தது. அதனுடன் நட்புக் கொண்டு…அந்த கொக்கை நரி தன் வீட்டிற்கு விருந்துக்கு அழைத்தது.

கொக்கும் …நரியை நண்பன் என நினைத்து அதனுடைய வீட்டிற்குச் சென்றது.

கொக்கைக் கண்ட நரி..ஒரு தட்டில் கஞ்சியை எடுத்து வந்து கொக்குக்கு உண்ணக் கொடுத்தது. கொக்கு அதன் நீண்ட அலகால்..தட்டிலிருந்த கஞ்சியை சாப்பிட முடியவில்லை…ஒரு வாயகன்ற ஜாடி போன்ற பாத்திரங்களில் இருந்தால் மட்டுமே …கொக்கு தன் அலகை அதனுள் விட்டு கஞ்சியை உறிஞ்சி குடிக்க முடியும்.

கொக்கு படும் துன்பத்தைக் கண்டு நரி சிரித்து மகிழ்ந்தது…அவமானம் அடைந்த கொக்கு..நரிக்கு பாடம் புகட்டத் தீர்மானித்தது.

நரியை ஒரு நாள் கொக்கு விருந்துக்கு அழைத்தது..வந்த நரியை நன்கு உபசரித்த கொக்கு..ஒரு வாய் குறுகிய ஜாடியில்..கஞ்சியைக் கொண்டு வந்து வைத்தது.

நரியால்..நாக்கால் நக்கி கஞ்சியை குடிக்க முடியவில்லை..

அதைக் கண்ட கொக்கு ..’நரியாரே..இப்பொழுது எப்படி உங்களால் கஞ்சியை குடிக்க முடியவில்லையோ..அதே போல தட்டில் இருந்தால் …என்னால் குடிக்க முடியாது என தெரிந்தும் எனக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி ..மனம் மகிழ்ந்தீர்கள்.ஆனால் நான் அப்படியில்லை..உங்களுக்கு பாடம் புகட்டவே ஜாடியில் கஞ்சியை வைத்தேன்…என்று கூறியபடியயே ..கஞ்சியை தட்டில் ஊற்றிக் கொடுத்தது.

தன்னை ஏமாற்றிய நரிக்கு கொக்கு நல்லதே செய்தது.

நரி தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்து விட்டு ..கஞ்சியைக் குடித்தது.

அது முதல் திருந்திய நரி. பிறகு யாரையும் ஏமாற்றுவதில்லை.

பிறரை வஞ்சித்து அவர் படும் துன்பம் கண்டு மகிழ்ச்சியடையாது. மற்றவர்களுக்கு நாமும் நம்மாலான உதவிகளைச் செய்ய வேண்டும்.

இன்றைய செய்திகள்

19.06.2025

இன்றைய செய்திகள் 

பாகிஸ்தானை விட இந்தியாவிடம் அணு ஆயுதங்கள் அதிகம்; சீனாவை விட 3 மடங்கு குறைவு: சர்வதேச ஆராய்ச்சி நிறுவனம் தகவல்.

⭐ உக்ரைனின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் 6,000 க்கும் மேற்பட்ட வடகொரியா வீரர்கள் பலியானதாக இங்கிலாந்து உளவுத்துறை அறிக்கை தெரிவித்துள்ளது.

⭐ தமிழ் நாடெங்கும் 10,000 இடங்களில் தமிழக மக்களின் நலத்திட்ட உதவிகள் சம்பந்தமாக சிறப்பு முகாம்களை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀இந்திய மகளிர் ஹாக்கி அணி தற்போது நடந்து வரும் FIH புரோ லீக்கில் அர்ஜென்டினாவை எதிர்கொள்கிறது.

🏀இந்திய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி அணி வரவிருக்கும் நான்கு நாடுகள் போட்டியில் பங்கேற்க  பெர்லினுக்கு புறப்பட்டுள்ளது.

Today's Headlines

*TODAY'S HEADLINES*

✏️ India has more nuclear weapons than Pakistan; 3 times fewer than China,  report by  International research institute

✏️ A British intelligence report says more than 6,000 North Korean soldiers were killed after being unable to withstand the Ukrainian offensive.

✏️ Theஆங் சான் சூச்சி அவர்களின் பிறந்தநாள்

ஆங் சான் சூச்சி (Aung San Suu Kyi, பிறப்பு: சூன் 19, 1945) என்பவர் மியான்மர் நாட்டைச் சேர்ந்த பெண் அரசியல்வாதியும் மக்களாட்சி ஆதரவாளரும் ஆவார். இவர் மியான்மரின் அரச ஆலோசகராக பதவி வகிக்கிறார். இவர் மக்களாட்சிக்கான தேசிய அமைப்பு என்ற கட்சியின் தலைவராக உள்ளார். தன் நாட்டில் மக்களாட்சியை ஏற்படுத்த அறவழிப் போராட்டத்தை நடத்தி வரும் இவர் தனது 21 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் 15 ஆண்டுகள் வீட்டுக்காவலில் கழித்தார். 1991 இல் அமைதிக்கான நோபல் பரிசினை ஆங்சான் சூச்சி பெற்றார். Tamil Nadu government is planning to hold special camps related to welfare schemes for the people of Tamil Nadu at 10,000 locations acrosஆங் சான் சூச்சி அவர்களின் பிறந்தநாள்

ஆங் சான் சூச்சி (Aung San Suu Kyi, பிறப்பு: சூன் 19, 1945) என்பவர் மியான்மர் நாட்டைச் சேர்ந்த பெண் அரசியல்வாதியும் மக்களாட்சி ஆதரவாளரும் ஆவார். இவர் மியான்மரின் அரச ஆலோசகராக பதவி வகிக்கிறார். இவர் மக்களாட்சிக்கான தேசிய அமைப்பு என்ற கட்சியின் தலைவராக உள்ளார். தன் நாட்டில் மக்களாட்சியை ஏற்படுத்த அறவழிப் போராட்டத்தை நடத்தி வரும் இவர் தனது 21 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் 15 ஆண்டுகள் வீட்டுக்காவலில் கழித்தார். 1991 இல் அமைதிக்கான நோபல் பரிசினை ஆங்சான் சூச்சி பெற்றார்.s Tamil Nadu.

 *SPORTS NEWS* 

🏀 The Indian women's hockey team is currently facing Argentina in the ongoing FIH Pro League. 

🏀 The Indian junior men's hockey team has left for Berlin to participate in the upcoming Four Nations Tournament.

Covai women ICT_போதிமரம்

Tuesday, June 17, 2025

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 18.06.25

மாக்சிம் கார்க்கி




திருக்குறள்: 

குறள் 7:

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.

விளக்கம் : தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது

பழமொழி :

Do well what you have to do. 

செய்வன திருந்தச் செய்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. காகம் ஒற்றுமையையும், தேனீயும் எறும்புகளும் சுறுசுறுப்பையும் போதிக்கின்றன.

2. இயற்கையை காப்பதோடு மட்டும் அல்லாது அவற்றில் இருந்து பாடமும் கற்றுக் கொள்வேன்.

பொன்மொழி :

உங்களின் பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம் ஆனால் உங்களின் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்- அப்துல் கலாம்

பொது அறிவு : 

01.இந்தியாவில் தேசிய வன ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இடம் எது?

டேராடூன்(Dehradun)

02. உலக வங்கியின் தலைமையகம் எங்கு உள்ளது?

வாஷிங்டன்(Washington)

English words & Tips :

 insolent     -     திமிரான
 
 innate    -       உடன் பிறந்த

Grammar Tips :

* The most simple way to find that a given word is a noun is if it follows an article like "the" or "a." Examples: The Apple is red in colour.

* Nouns can also follow possessives or numbers. Examples: There are four pillows on my bed.

அறிவியல் களஞ்சியம் :

 பூமியும் வெள்ளியும் ஒன்று போலவே இருப்பதால் இவற்றை ‘இரட்டைக்கோள்கள்’ என்று அழைக்கிறோம். பூமியைப் போலவே வெள்ளியிலும் கண்ட நகர்வு நடப்பதை அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகளும் மேரிலாண்டு பல்கலை. ஆய்வாளர்களும் உறுதி செய்துள்ளனர்..

ஜூன் 18

மாக்சிம் கார்க்கி அவர்களின் நினைவுநாள்

மாக்சிம் கார்க்கி (Maxim Gorky) என அறியப்படும் அலெக்சி மாக்சிகொவிச் பெசுகோவ் (உருசியம்Алексе́й Макси́мович Пешко́в; 28 மார்ச் [யூ.நா. 16 மார்ச்] 1868 – 18 சூன் 1936) உருசியா நாட்டை சேர்ந்த பிரபல எழுத்தாளர் மற்றும் அரசியல்வாதி. இவர் உலகின் மிகச் சிறந்த புதினங்களில் ஒன்றாகக் கருதப்படும் தாய் என்ற புதினத்தை எழுதினார்.

1898-ல் ‘ஸ்கெட்சஸ் அண்ட் ஸ்டோரீஸ்’ வெளிவந்தது. 1899-ல் முதல் நாவலும், 1902-ல் ‘தி லோயர் டெப்த்ஸ்’ என்ற நாடகமும் வெளிவந்தன. இவரது உலகப் புகழ்பெற்ற ‘மதர்’ (தாய்) புதினம் 1906-ல் வெளிவந்தது. 1906ஆம் ஆண்டு டிசம்பரில் நியூயார்க்கிலிருந்து வெளியாகும் 'ஆப்பிள்டன்' இதழில் தாய் முதற்பகுதியின் முன்பாகமும் 1907ஆம் ஆண்டு தாய் முழுவதும் வெளிவந்தன. இந்நூல் முதலில் வெளிவந்தது அமெரிக்காவில்தான். கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக மக்களைக் கிளர்ந்தெழச் செய்வது, அதிகார வர்க்கத்துக்கு எச்சரிக்கை விடுப்பது, வீரம் ஆகியவை இவரது எழுத்துகளின் அடிநாதமாகத் திகழ்ந்தன. இதனால் அரசின் கோபத்துக்கு ஆளானார். பலமுறை கைது செய்யப்பட்டார். இவரது படைப்புகள் கடும் தணிக்கையை எதிர்கொண்டன.

பல கவிதைகள் எழுதினார். ஏராளமான நூல்களைப் படித்தார். அபார நினைவாற்றல் படைத்தவர். எழுதுவதற்கு பென்சில்களையே பயன்படுத்தினார். சிறிய சிற்பங்கள் மீது அலாதி பிரியம் கொண்டவர்.

பாட்டாளி வர்க்க இலக்கியத்தின் பிதாமகர் என்று போற்றப்பட்டார். இவர் படைத்த தாய் (புதினம்) ’ (மதர்) நாவல், இன்றுவரை புரட்சிகரத் தொழிலாளி வர்க்கத்துக்கு ஊக்கமும் உற்சாகமும் தந்து வீரத்தை ஊட்டிவருகிறது. இது 200 முறைக்கு மேல் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது. உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.


கக்கன் அவர்களின் பிறந்தநாள்

திரு. கக்கன்


பி. கக்கன் (P. Kakkan, 18 சூன் 1908 – 23 திசம்பர் 1981), விடுதலைப் போராட்ட வீரர், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் குழுத் (கமிட்டித்) தலைவர், இன்னும் இதர பல பொறுப்புகளை 1957 முதல் 1967 வரை நடைபெற்ற காங்கிரசு அரசாங்கத்தில் வகித்த, அரசியல்வாதி ஆவார். 

நீதிக்கதை

 ஒரு கா‌ட்டி‌ல் பல ‌வில‌ங்குக‌ள் வா‌ழ்‌ந்து வ‌ந்தன. அ‌தி‌ல் ஒரு ‌சி‌ங்கமு‌ம், ந‌ரியு‌ம் வெகு நாளாக உண‌வி‌ன்‌றி அலை‌ந்து ‌தி‌ரி‌ந்து கொ‌‌ண்டிரு‌ந்தன. ஒரு நா‌ள் இர‌ண்டு‌ம் நேரு‌க்கு நே‌ர் ச‌ந்‌தி‌த்து த‌த்தமது ‌நிலைமையை புல‌ம்‌பி‌க் கொ‌ண்டன.

இறு‌தியாக இர‌ண்டு‌ம் சே‌ர்‌ந்து வே‌ட்டையாடுவது எ‌ன்ற முடிவு‌க்கு வ‌ந்தன. அத‌ற்கு ‌சி‌ங்க‌ம் ஒரு ‌தி‌ட்ட‌ம் வகு‌த்து‌க் கொடு‌த்தது. அதாவது, ந‌ரி பலமாக ச‌த்த‌ம் போ‌ட்டு க‌த்த வே‌ண்டு‌ம். அ‌ந்த ச‌த்த‌த்தை‌க் கே‌ட்டது‌ம் கா‌ட்டு ‌வில‌ங்குக‌ள் ‌மிர‌ண்டு அ‌ங்கு‌ம் இ‌ங்கு‌ம் ஓடு‌ம். அ‌ப்படி ஓடு‌ம் ‌மிருக‌ங்களை ‌சி‌ங்க‌ம் அடி‌த்து‌க் கொ‌‌ல்ல வே‌ண்டு‌ம்.

இ‌ந்த யோசனை ந‌ரி‌க்கு ‌மிகவு‌ம் ‌பிடி‌த்‌திரு‌ந்தது. அதனா‌ல் உடனே ஒ‌ப்பு‌க் கொ‌ண்டது. அத‌ன்படி, ந‌ரி தனது பய‌ங்கரமான குர‌லி‌ல் க‌த்த‌த் துவ‌ங்‌கியது. அத‌ன் ‌வி‌சி‌த்‌திரமான ச‌த்த‌த்தை‌க் கே‌ட்ட கா‌ட்டு ‌வில‌ங்குக‌ள் அ‌ங்கு‌ம் இ‌ங்கு‌ம் வேகமாக ஓடின. அ‌‌ந்த சமய‌த்‌தி‌ல் ‌சி‌ங்க‌ம் ‌நி‌ன்‌றிரு‌ந்த ப‌க்க‌ம் வ‌ந்த ‌வில‌ங்குகளை எ‌ல்லா‌ம் ‌சி‌ங்க‌ம் வே‌ட்டையாடி‌க் கொ‌‌ன்றது.

ஒரு க‌ட்ட‌த்‌தி‌ல் ந‌ரி க‌த்துவதை ‌நிறு‌த்தி ‌வி‌ட்டு ‌சி‌ங்க‌த்‌தி‌ன் ப‌க்க‌ம் வ‌ந்தது. அ‌ங்கு வ‌‌ந்தது‌ம் ‌ந‌ரி‌க்கு ஏக‌ப்ப‌ட்ட ச‌ந்தோஷ‌ம். ஏனெ‌னி‌ல் ‌‌நிறைய ‌மிருக‌ங்க‌‌ள் அ‌ங்கு இற‌ந்து ‌கிட‌‌‌ந்தன. அதை‌ப் பா‌ர்‌த்தது‌ம் ந‌ரி, தா‌ன் அகோரமாக‌க் க‌த்‌தியதா‌ல்தா‌ன் இ‌ந்த ‌மிருக‌ங்க‌ள் இற‌ந்து‌வி‌ட்டன எ‌ன்று ‌க‌ர்வ‌ம் கொ‌ண்டது.

சி‌ங்க‌த்‌தி‌ன் அரு‌கி‌ல் வ‌ந்து, எ‌ன்னுடைய வேலையை‌ப் ப‌ற்‌றி எ‌ன்ன ‌நினை‌க்‌கிறா‌ய்.. நா‌ன் க‌த்‌தியே இ‌த்தனை ‌மிருக‌ங்களை கொ‌ன்று‌வி‌ட்டே‌ன் பா‌ர்‌த்தாயா எ‌ன்று க‌ர்வ‌த்துட‌ன் கே‌ட்டது.

அத‌ற்கு ‌சி‌ங்க‌ம்.. ஆமா‌ம்.. உ‌ன் வேலையை‌ப் ப‌ற்‌றி சொ‌ல்ல வே‌ண்டுமா எ‌ன்ன? ‌நீதா‌ன் க‌த்து‌கிறா‌ய் எ‌ன்று தெ‌ரியாம‌ல் இரு‌ந்‌திரு‌ந்தா‌ல் ஒரு வேளை நானு‌ம் ப‌ய‌த்‌திலேயே செத்து‌ப் போ‌‌யிரு‌ப்பே‌ன் எ‌‌ன்று பாரா‌ட்டியது.

இன்றைய செய்திகள்

18.06.2025

⭐ தமிழ்நாட்டில் புதிதாக 3,103 வழித்தடங்களில் மினிபஸ் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

⭐இஸ்ரேல் - ஈரான் மோதல் காரணமாக கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதால் அரபு நாடுகளில் பணியாற்றி வரும் 92 லட்சம் இந்தியர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

⭐சென்னையிலிருந்து ,,
திருநெல்வேலிக்கு பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்க கூடுதல் இரயில்கள் இயக்கப்படும் - தெற்கு இரயில்வே அறிவிப்பு.

⭐நீட் மறுக் கூட்டல் அறிவிப்பு தேதி ஒத்திவைப்பு-


🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀 பாரிஸ் டயமண்ட் லீக்கிற்கு நீரஜ் சோப்ரா உறுதி செய்யப்பட்டார்.
இந்தியாவின் ஒலிம்பிக் ஈட்டி எறிதல் சாம்பியன் நீரஜ் சோப்ரா பாரிஸ் டயமண்ட் லீக் தொடக்கப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.

🏀U-23 & சீனியர் பெண்கள் கால்பந்து அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


Today's Headlines

✏ The minibus scheme has been introduced on 3,103 new routes in Tamil Nadu.

✏ Additional trains will be run from Chennai to Tirunelveli to avoid passenger congestion - Southern Railway announcement

✏ NEET re-valuation  announcement date postponed

✏ The Israel-Iran conflict has disrupted crude oil production, putting 9.2 million Indians working in Arab countries at risk of losing their jobs.

 SPORTS NEWS 

🏀 Neeraj Chopra confirmed for Paris Diamond League. India's Olympic javelin champion Neeraj Chopra has been included in the starting list for the Paris Diamond League.

🏀 U-23 & Infront Women's Football Teams Announced


Covai women ICT_போதிமரம்