Tuesday, June 10, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 11.06.2025

 


  






திருக்குறள்: 

குறள் 4:

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

விளக்கம் :
விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை.

பழமொழி :

A good when lost is valued most. 

நிழலின் அருமை வெயிலில் தெரியும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. அழியாத செல்வம் கல்வியே எனவே இந்த செல்வத்தை நன்கு முயற்சி செய்து அடைவேன்.

2. என் ஆசிரியர் மற்றும் பெற்றோர் எனக்கு கொடுக்கும் பொறுப்பை திருந்த செய்வேன்.

பொன்மொழி :

ஒரு சிறந்த தாய் நூறு ஆசிரியர்களுக்கு சமமாவார் - ஜார்ஜ் ஹெர்பெர்ட்

பொது அறிவு : 

01.கணிதத்தில் வடிவியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?

         யூக்ளிட் (Euclid)

02.  ஐரோப்பா மற்றும் ஆசியா ஆகிய இரு கண்டங்களில் அமைந்துள்ள நகரம் எது?

  இஸ்தான்புல்- துருக்கி 

   Istanbul- Turkey

English words :

 opportunity    -    வாய்ப்பு

 experience      -     அனுபவம்

Grammar Tips :

Simple rule to decide when to use 'C' or 'K' at the beginning of a word 

C ' comes before the vowels a,o,u (cat,cot,cut)

K  comes before the vowels e,i & semi vowel - y (kit,kite,key)

அறிவியல் களஞ்சியம் :

 நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்கு மிகப் பெரிய இடைஞ்சலாக இருப்பவை, நிலவில் உள்ள தூசுகள் தான். இவை எல்லா பொருட்கள் மீதும் படிந்து சேதம் விளைவிக்கின்றன. இவற்றிலிருந்து விண்கலங்களைக் காக்க, அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் Electrodynamic Dust Shield எனும் புதிய தொழில் நுட்பத்தை உருவாக்கி உள்ளது.

நீதிக்கதை

 பொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு


தொடர்ந்து சில ஆண்டுகளாக மழையே பெய்யவில்லை. அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது. மக்கள் பசியால் வாடினர். நல்ல உள்ளம் படைத்த செல்வந்தர் ஒருவரிடம் அந்த ஊர் மக்கள் சென்றனர்.

“”ஐயா! பெரியவர்களாகிய நாங்கள் எப்படியோ பசியைப் பொறுத்துக் கொள்கிறோம். சிறுவர், சிறுமியர்கள் என்ன செய்வர்? இந்த நிலையில் நீங்கள் கட்டாயம் உதவி செய்ய வேண்டும்…” என்று வேண்டினர்.

இளகிய உள்ளம் படைத்திருந்த அவர்,”இந்த ஊரில் குழந்தைகள் யாரும் பசியால் வாட வேண்டாம். ஆளுக்கொரு மோதகம் கிடைக்குமாறு செய்கிறேன். என் வீட்டிற்கு வந்து மோதகத்தை எடுத்துச் செல்லச் சொல்லுங்கள்!” என்றார்.

மாளிகை திரும்பிய அவர், தன் வேலைக்காரனை அழைத்தார். ”இந்த ஊரில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுத்துக் கொள். ஆளுக்கொரு மோதகம் கிடைக்க வேண்டும். கூடவும் கூடாது, குறையவும் கூடாது. நாளையிலிருந்து மோதகங்களைக் கூடையில் சரியான எண்ணிக்கையில் வைத்துக்கொண்டு வீட்டிற்கு வெளியே இரு…” என்றார்.

மறுநாள், வேலைக்காரன் மோதகக் கூடையுடன் வெளியே வந்தான். அங்கே காத்திருந்த சிறுவர், சிறுமியர் அவனைச் சூழ்ந்து கொண்டனர். கூடையை அவர்கள் முன் வைத்தான் அவன்.

பெரிய மோதகத்தை எடுப்பதில் ஒவ்வொருவரும் போட்டி போட்டனர். ஆனால், ஒரே ஒரு சிறுமி மட்டும் அமைதியாக இருந்தாள். எல்லோரும் எடுத்துச் சென்றது போக, மிஞ்சி இருந்த சிறிய மோதகத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து மகிழ்ச்சியுடன் சென்றாள் அவள்.

இப்படியே தொடர்ந்து நான்கு நாட்கள் நிகழ்ந்தது. எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தார் செல்வந்தர். ஐந்தாம் நாளும் அப்படியே நடந்தது. எஞ்சியிருந்த சிறிய மோதகத்தை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள் அந்த சிறுமி. தன் வீட்டிற்கு வந்தவள், தன் தாயிடம் அதைத் தந்தாள். அந்த மோதகத்தைப் பிய்த்தாள் தாய். அதற்குள் இருந்து ஒரு தங்கக்காசு கீழே விழுந்தது.

அந்தத் தங்கக் காசை எடுத்துக் கொண்டு செல்வந்தரின் வீட்டிற்கு வந்தாள் சிறுமி. “ஐயா! இது உங்கள் தங்கக் காசு. ரொட்டிக்குள் இருந்தது. பெற்றுக் கொள்ளுங்கள்!” என்றாள். அவள். ”மகளே! உன் பெயர் என்ன என்று கேட்டார் செல்வந்தர். சிறுமி தன் பெயர் கிருசாம்பாள் எனக் கூறினாள். மகளே உன் பொறுமைக்கும், நற்பண்பிற்கும் நான் அளித்த பரிசே இந்தத் தங்கக் காசு. மகிழ்ச்சியுடன் இதை எடுத்துக் கொண்டு வீட்டிற்குச் செல்  என்றார் செல்வர். துள்ளிக் குதித்தபடி ஓடி வந்த அவள், நடந்ததை தன் தாயிடம் சொன்னாள்.

இன்றைய செய்திகள்

11.06.2025

இன்றைய செய்திகள் 

⭐ தனுஷ்கோடி கடற்கரையில் ஒதுங்கிய 50 மூட்டை ரசாயன பிளாஸ்டிக் மூலப்பொருட்களை அகற்றும் பணியில் 150-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள்.

⭐ சென்னை ஜி.எஸ்.டி சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக கிளாம்பாக்கம் -மஹிந்த்ரா சிட்டி இடையே 18.4 கி.மீ தொலைவுக்கு சுமார் ₹3500 கோடி மதிப்பீட்டில் ஆறு வழி உயர்மட்ட சாலை அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) திட்டமிட்டுள்ளது.

⭐ அசாமில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்பால் 21 மாவட்டங்களில் 7 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

⭐மோசமான வானிலை காரணமாக  சர்வதேச       விண்வெளி மையத்துக்கு வீரர்கள் செல்லும் நாள் நேரம் மாற்றம்: இஸ்ரோ

🏀 விளையாட்டுச் செய்திகள்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸில் நடப்பு சாம்பியனான ஸ்பெயின் வீரர் அல்காரஸ் வெற்றிவாகை. இத்தாலியைச் சேர்ந்த முதல் நிலை வீரர் ஜானிக் சின்னரை வீழ்த்தி அபாரம்.

🏀"இந்திய டெஸ்ட் அணிக்கு சுப்மன் கில்லை புதிய கேப்டனாக நியமித்துள்ளது.

Today's Headlines

TODAY'S HEADLINES*
✏️In Dhanushkodi beach more than 150 sanitation workers are working to remove 50 bags of chemical plastic materials that have washed ashore.

✏️ The National Highways Authority of India (NHAI) is planning to construct a six-lane elevated road between GST Road in Chennai, covering a distance of 18.4 km between Glampakkam and Mahindra City, at an estimated cost of around ₹3,500 crore.

✏️ In Assam ,7 lakh people were in 21 districts affected by rain and floods 

✏️ ISRO anounced The Astronauts departure time to International Space Station changed due to bad weather conditions.

 *SPORTS NEWS*

🏀 The current champion Alcaraz of Spain won the French Open tennis tournament. He defeated top player Janic Sinner from Italy. 

🏀 Shubman Gill has been appointed as the new captain of the Indian cricket Test team

Covai women ICT_போதிமரம்

Monday, June 9, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.06.2025

சுந்தர் பிச்சை

 






திருக்குறள்: 

குறள் 2:

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

விளக்கம்: தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்?      ஒன்றுமில்லை
பழமொழி :

Nothing ventured, nothing gained.

 துணிந்தாலன்றி எதுவும் கிட்டாது.

இரண்டொழுக்க பண்புகள் :

1. அழியாத செல்வம் கல்வியே எனவே இந்த செல்வத்தை நன்கு முயற்சி செய்து அடைவேன்.

2. என் ஆசிரியர் மற்றும் பெற்றோர் எனக்கு கொடுக்கும் பொறுப்பை திருந்த செய்வேன்.

பொன்மொழி :

ஒரு குழந்தையின் பிறவித் திறமையை வளர்ப்பதற்காகவே கல்வியறிவு பயன்பட வேண்டும் - அறிஞர் பிளேட்டோ

பொது அறிவு : 

01.இந்தியா முதல் அணுகுண்டு சோதனை நடத்திய இடம் இது           

                பொக்ரான் (ராஜஸ்தான்) 

                 Pokhran(Rajasthan)

02. இந்தியாவின் மிக உயரிய இலக்கிய விருது எது? 

                 ஞானபீட விருது

                 (Jnanpith   Award)

English words  :

 size     -     அளவு
 
rope        -    கயிறு

Grammar tips :

Simple tip to pronounce 'wh' words
Pronouncing 'which' and 'who' are different 

Whenever vowel ' O' appears near wh word ' w' is silent 

Whenever vowel e, i, u ,a appears near wh word 'h' is silent 

Example 
1 Which ,what, when, will whale etc
2 who ,whom, whose, who,whole etc

அறிவியல் களஞ்சியம் :

  ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி அதீத தொலைவில் உள்ள புதிய கோள்கள், நட்சத்திரங்களைக் கண்டுபிடித்து வருகிறது. தற்போது புதிதாக உருவாகிக் கொண்டிருக்கும் மூன்று கேலக்ஸிகளை இது படமெடுத்துள்ளது. இது உலகெங்கும் உள்ள விஞ்ஞானிகள், வானியல் ஆர்வலர்களிடையே மிகுந்த ஆர்வத்தைத் துாண்டியுள்ளது.

ஜூன் 10

சுந்தர் பிச்சை அவர்களின் பிறந்தநாள்

சுந்தர் பிச்சை என்று அறியப்படும் பிச்சை சுந்தரராசன்(பிறப்பு: சூன் 10, 1972), இந்திய அமெரிக்க வாழ் கணினி தொழில் நுட்ப மேலாளர் ஆவார். இவர் அல்பபெட் (Alphabet Inc.) மற்றும் அதன் துணை நிறுவனமான கூகுள் முதன்மை செயல் அலுவலர் ஆவார்.
சுந்தர் பிச்சை 2004 ஆம் ஆண்டு கூகுள்இல் இணைந்தார். இவர் கூகிள் வாடிக்கையாளர் மென்பொருள் தயாரிப்புகள் தொகுப்பில் முக்கிய பங்கு வகித்தார். தற்போது கூகிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றுகிறார். 2013 ஆம் ஆண்டு மார்ச் 13 ஆம் நாள் ஆன்டி ரூபின் பதவி விலகிய பிறகு ஆண்ட்ராய்டு பிரிவிற்கும் சேர்த்து தலைவரானார். கூகுள் வரைபடம், ஆய்வு, வணிகம், விளம்பரம், ஆண்ட்ராய்டு, குரோம், உள்கட்டமைப்பு, கூகுள் ஆப்ஸ் ஆகியவற்றின் தலைவராக இருந்த இவர், கூகுள் உறவு நிறுவனங்களின் புதிய கூட்டு நிறுவனமான ஆல்பாபெட்டு உருவாக்கம் நிறைவுற்ற பிறகு, கூகுளின் முதன்மைச் செயல் அலுவலராகப் பொறுப்பேற்க உள்ளார். 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் திகதி முதல் ஆல்பாபெட்டு என்ற நிறுவனத்தின் தலைவர்களாக இருந்த லாரி பேஜ் மற்றும் சேர்ஜி பிரின் ஆகியோர் விலகி இவரை இரண்டு நிறுவனங்களுக்கும் ஒரே தலைமை செயல் அதிகாரியாக நியமித்துள்ளார்கள்

நீதிக்கதை

 நடப்பது எல்லாம் நன்மைக்கே!

காட்டு ராஜா சிங்கத்தின் குகை வாசலில், ஏகப்பட்ட மிருகங்களின் கூட்டம். காட்டு ராஜா, வேட்டையாடச் சென்றபோது, கால்விரலில் அடிபட்டு, விரல் துண்டாகி விட்டதென்று அறிந்து துக்கம் விசாரிக்கத்தான் காட்டுப் பிரஜைகளான மிருகங்கள் கூடியிருந்தன. ஒவ்வொரு மிருகமாக வரிசையில் நின்று, குகையின் உள்ளே சென்று, சிங்க ராஜாவைப் பார்த்து விட்டுத் திரும்பின.

சிங்கராஜா காலில் பலமான கட்டுடன், கட்டிலில் படுத்துக் கிடந்தது. அருகே சிங்கராணி, வழியும் கண்­ரும் சிந்திய மூக்குமாக அமர்ந்து இருந்தது.

ஒவ்வொரு மிருகமாக வரிசையாகச் சென்று கொண்டிருந்தபோது, வரிசையின் இடையே வந்து, புகுந்து கொண்ட குள்ளநரி, சிங்கராஜாவின் அருகே சென்றதும் பெருமூச்சு விட்டபடி “ஊம் நடப்பது எல்லாம் நன்மைக்கே” என்றது. சிங்கராஜாவுக்கு கடுங்கோபம் வந்துவிட்டது.

நமது காலிலுள்ள ஒரு விரலே போய்விட்டது. இந்தக் குள்ளநரி, நடப்பதெல்லாம் நன்மைக்கே, என்று கூறுகிறதே. “பிடி அதை அடைத்துவை, குகைச்சிறையில்!” எனக் கட்டளை இட்டது சிங்கராஜா.

சிப்பாய்க் குரங்குகள் பாய்ந்து, நரியைப் பிடித்து இழுத்துச் சென்றன.

“ஒவ்வொரு காரியமும் நமது நன்மைக்குத்தான் நடக்கிறது என்ற உண்மையைத்தானே சொன்னேன்” என்று புலம்பியபடி சென்றது குள்ளநரி.

சிங்கராஜாவின் காலிலுள்ள புண் குணமாவதற்கு, மூன்று மாதகாலம் கடந்தது. காலில் ஒருவிரல் இல்லாமையால், சிங்கராஜா கம்பீரமாக நடக்க இயலாமல், நொண்டி நொண்டி நடந்தது. அதனால் மிருகங்கள் எல்லாம் மறைமுகமாக “நொண்டி ராஜா” என அழைத்தன.

இப்படிச் சிங்கராஜாவை எல்லாரும் கேலி செய்வதைக் கேட்டு, சிங்கராணிக்கு மிகுந்த வருத்தம். என்ன செய்வது? இந்தப் பட்டத்தைச் சூட்டியது எந்த மிருகம் என்பது தெரிந்தால், இளவரசன் சிங்கக்குட்டியிடம் தண்டனை கொடுக்கச் சொல்லலாமே என நினைத்தது.

உண்மையில் இப்படி பெயர் வைத்தது, குறும்புக்கார முயல் என்பது எவருக்கும் தெரியாது.

சிறையில் அடைபட்டிருந்த குள்ளநரிக்கு, சைவ உணவே தினசரி ஒரு வேளை தரப்பட்டது. காட்டுக்கிழங்கையும், கனிகளையும், பார்த்தாலே குள்ளநரிக்கு குமட்டிக் கொண்டு வரும், என்ன செய்வது? வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்காமல், வார்த்தையைக் கொட்டிவிட்டு, வாழ்க்கையைக் கெடுத்துக் கொண்டோமே, என ஏக்கப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தது குள்ளநரி.

வெகுநாட்களாகியும் குணமாகாமல் காலை நொண்டிக் கொண்டே ஒரு நாள் காட்டில், வெகுதூரம் வேட்டைக்கு வந்துவிட்ட சிங்கம், ஒரு இடத்தில் திறந்து வைக்கப்பட்டிருந்த ஒரு கூண்டுக்குள், ஆட்டுக்குட்டி ஒன்று இருந்ததைக் கண்டது. ஆவலுடன் ஆட்டுக்குட்டியின் மீது பாய்ந்து, கடித்துக் குதறித் தின்றது.

தின்று முடிந்து, ஏப்பம் விட்டபடி திரும்பிய சிங்கம் அந்த இரும்புக் கூண்டில் கம்பிக்கதவால் மூடப்பட்டிருந்ததைக் கண்டு, திகைத்தது. மடத்தனமாக கூண்டுக்குள் அகப்பட்டுக் கொண்டோமே என்று நினைத்து வேதனைப்பட்டது. ஆத்திரத்தில் கர்ஜனை செய்தது. அப்போது கூண்டில் அடைப்பட்ட சிங்கத்தை, தங்கள் வண்டியில் கட்டி இழுத்துச் சென்ற காவலர்கள், “நம் இளவரசர் கேட்டபடி அவர் விளையாடுவதற்கு ஒரு சிங்கம் கிடைத்துவிட்டது. இதைப் பார்த்தால் மிகவும் மகிழ்ச்சியடைவார். இளவரசரின் மகிழ்ச்சியைக் கண்டு மன்னர் நமக்குப் பரிசுகள் கொடுப்பார்”, என்றெல்லாம் பேசிக்கொண்டே அரண்மனையை அடைந்தனர்.

கூண்டிலிருந்த சிங்கத்தை இறக்கியபோதுதான் அது நொண்டி நொண்டி நடந்ததை அறிந்தனர்.

இதைக்கண்டு வருந்திய அவர்கள், “இது ஊனமுற்ற சிங்கம். இதை நம் இளவரசர் விளையாடப் பழக்கப்படுத்த முடியாது. “எனவே, இதைக் காட்டில் கொண்டு போய் விட்டுவிடுவதே நல்லது” என்று கூறியபடி சிங்கத்தை மீண்டும் காட்டுக்குள் கொண்டு சென்று விட்டுவிட்டுத் திரும்பினர் காவலர்கள். சிங்கத்திற்கு மகிழ்ச்சி பொங்கியது.

“நமது கால் விரல், இல்லாததால்தான் நம்மை விட்டு விட்டார்கள். “நடப்பது எல்லாம் நன்மைக்கே” என்று அன்றைக்கு நரி சொன்னபோது, ஆத்திரப்பட்டு அதைக் கூண்டில் அடைத்தோம். ஆனால் அது சொன்னது சரியென்று இப்போதுதான் உணர முடிகிறது” என்றெல்லாம் நினைத்தபடி தனது குகைக்குச் சென்ற சிங்கம், தனது மனைவியிடமும் குட்டிகளிடமும் நடந்ததைச் சொன்னது.

உடனடியாக, சிப்பாய்க் குரங்குகளை அழைத்து, “சிறையைத் திறந்து குள்ளநரியை வெளியில் அனுப்புங்கள்” என்று உத்தரவிட்டது. அதன்படி சிறையை விட்டு, வெளிவந்த குள்ளநரியை வரவேற்ற சிங்கராஜா, “அறிவுக் கடலே, இன்று முதல் நீங்கள்தான் எனது மந்திரி, நடப்பது எல்லாம் நன்மைக்கே என்று அன்று நீங்கள் சொன்னது உண்மையாகி விட்டது. யார் எதைச் சொன்னாலும் அவசரப்படாமல் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டேன் என்று மகிழ்ந்தது.

இன்றைய செய்திகள்

10.06.2025


⭐தேசிய திறனாய்வுத் தேர்வு உதவித்தொகைக்கான ஆன்லைன் பதிவில் இந்த ஆண்டு புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படுகிறது.

⭐உயர் கல்வி பயிலும் மாணவர்கள் ஒரே நேரத்தில் இரு வேறு படிப்புகளைப் பயில்வது தொடர்பாக திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை UGC தற்போது வெளியிட்டுள்ளது.
 
⭐2026 அதிபர் தேர்தல் கொலம்பியா அதிபர்  தேர்தல் வேட்பாளர் யூரிப் டார்பே மீது துப்பாக்கி சூடு: உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை.
 
⭐ரஷ்யப் படைகள் ஒரே இரவில் 479 ட்ரோன்களை ஏவியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. 

🏀விளையாட்டுச் செய்திகள்

🏀"வருங்கால இந்தியாவின் செஸ்-ன் அடையாளம்" குகேஷ்க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து. 

🏀FIH புரோ லீக்கில் இந்திய ஹாக்கி அணி நெதர்லாந்திடம் தோல்வியடைந்தது.

Today's Headlines

*TODAY'S HEADLINES*

✏️A new procedure is being introduced this year in  online registration for(NAS)  National Aptitude Test Scholarship.

✏️ UGC has now issued revised guidelines regarding students pursuing two different courses simultaneously in higher education.

✏️ Presidential Election 2026- Colombian Presidential Candidate  Uribe Darbe was attacked by gun shooting. He is in critical condition and is undergoing treatment.

✏️ Ukraine reported that Russian forces launched 479 drones overnight.

 *SPORTS NEWS* 

🏀Tamilnadu Chief Minister MK.Stalin congratulated  the  chess champion Kukesh and said he is "The symbol of   India's future chess" 
🏀 Indian hockey team loses to Netherlands in FIH Pro League

Covai women ICT_போதிமரம்

Sunday, June 8, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.06.2025

Charles Dickens

  






திருக்குறள்: 

குறள் 400:

கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.

விளக்கம் : ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும், கல்வியைத் தவிர மற்றப் பொருள்கள் (அத்தகைய சிறப்புடைய) செல்வம் அல்ல.

பழமொழி :

Wanted deeds only,not words. 

செயல்களே தேவை ; சொற்களல்ல.

இரண்டொழுக்க பண்புகள் :

1. அழியாத செல்வம் கல்வியே எனவே இந்த செல்வத்தை நன்கு முயற்சி செய்து அடைவேன்.

2. என் ஆசிரியர் மற்றும் பெற்றோர் எனக்கு கொடுக்கும் பொறுப்பை திருந்த செய்வேன்.

பொன்மொழி :

தீய பழக்கங்களை நீக்குவதற்கு ஒரே வழி நல்ல பழக்கங்களை தொடர்ந்து செய்து வருவதே  ஆகும். - விவேகானந்தர் 

பொது அறிவு : 

 01.தென்னிந்திய நதிகளில் மிக நீளமான நதி எது? 

            கோதாவரி(Godavari)

02.  தமிழில் புதுக்கவிதையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?

      நா. பிச்சமூர்த்தி(N.Pichaimurthi)

English words :

crowd    -     கூட்டம் 

hide        -      மறை 

Grammar tips :

Situation of using question word

* Who -is used to ask about person 

* Where -Is used to ask about place

* When -time

* Why -reason

* What -things

* How-method

* Which -choice

* How many -quantity

* How often -frequency

அறிவியல் களஞ்சியம் :

 ச‌ராச‌ரியாக‌ ஒரு ம‌னித‌ன் 4850 வார்த்தைக‌ளை 24 ம‌ணி நேர‌த்தில் ப‌ய‌ன்ப‌டுத்துகின்றான்.

ஜூன் 09

சார்லஸ் டிக்கென்ஸ் அவர்களின் நினைவுநாள்

சார்லஸ் ஜான் ஹஃபாம் டிக்கென்ஸ் (Charles Dickens, 7 பெப்ரவரி 1812 - 9 ஜூன் 1870) விக்டோரியா காலத்தைச் சேர்ந்த மிகவும் புகழ் பெற்ற ஆங்கிலப் புதின எழுத்தாளர்களில் ஒருவரும், தீவிரமான சமூகப் பரப்புரையாளரும் ஆவார். மிகவும் வறியவராக வாழ்க்கையைத் தொடங்கியவர். அது அவரது எழுத்துக்களிலும் எதிரொலித்தது. இவரது டேவிட் காப்பர்ஃபீல்டுஆலிவர் டுவிஸ்ட் போன்ற புதினங்கள் (நாவல்கள்) உலகப் புகழ் பெற்றவை.

நீதிக்கதை

 குரங்கு அறிஞர்

ஒரு அறிஞர் ஆராய்ச்சி நூல் ஒன்று எழுதுவதற்காக அமைதியான இடத்தைத் தேடிக் கொண்டிருந்தார். அவர் அறியாமல், அரக்கர்கள் இருந்த பள்ளத்தாக்கை தன் இடமாகத் தேர்ந்தெடுத்தார். கோபமடைந்த ஒரு அரக்கன் அவரைப் பார்த்துக் கேட்டான்.

“”யார் நீ? இந்த அமைதியான பள்ளத்தாக்கை கெடுக்க வந்தாயா?” என்றான்.

“”தயவு செய்து என்னை மன்னித்து விடு. நான் ஒரு அறிஞன். அமைதியான இடத்தைத் தேடிக் கொண்டிருந்தேன். அதனால், இங்கு வந்தேன்!” என்றார்.

“”இதற்கு ஒரு விலை நீ கொடுக்க வேண்டும். நான் உன்னைக் குரங்காக மாற்றி விடுவேன். அதுதான் உனக்குத் தண்டனை!” என்று அந்த அரக்கன் கூறினான்.

அடுத்த கணம், அந்தக் அறிஞர் குரங்காக மாறிவிட்டார். அவர் விம்மி விம்மி அழுதார். ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்குத் தாவிக் கொண்டிருந்தார். குரங்குகளைப் போல் பழங்களைத் தின்று வந்தார்.

அவர் நகரத்தை அடைந்தார். அங்கு ஒரு கப்பல் பாக்தாத் பட்டணத்திற்குப் புறப்பட இருந்தது. அவர் அதில் தாவி ஏறினார். அதிலிருந்த பயணிகள் கூச்சலிட ஆரம்பித்தனர்.

“”குரங்கை வெளியே அனுப்புங்கள்; கொன்றுவிடுங்கள்!” என்று கத்தினர்.

கப்பலின் தலைவன் அந்த விலங்கிற்காக வருத்தப்பட்டுச் சொன்னார்.

“”வேண்டாம். அதுவும் நம்முடன் வரட்டும். யாருக்கும் அது தொந்தரவு தராதவாறு நான் பார்த்துக் கொள்கிறேன்!”

அந்தக் குரங்கு கப்பல் தலைவனுக்கு நன்றி உடையவனாய் இருந்தது. பாக்தாத்தில் ஒரு செய்தி பரவி இருந்தது. அரசருக்கு ஆலோசனை கூறுபவர் இறந்துவிட்டதாகவும், அரசர் அந்த இடத்திற்குத் தகுந்த ஆளைத் தேர்ந்தெடுக்க விரும்புவதாகவும் அறிவித்திருந்தார். இப்பதவியை விரும்புவோர் ஏதேனும் ஒரு செய்தியைத் தகுந்த முறையில் எழுதி அனுப்பலாம். அவற்றுள் எது மிகவும் நன்றாக உள்ளதோ, அதை எழுதியவர் ஆலோசகராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டது.

அந்தக் குரங்கு அறிஞரும் செய்தியை எழுதினார். அரசருடைய சேவகர்களும், மற்றவர்களும் நகைத்தனர். “”இங்கே வேடிக்கையைப் பார். இந்தக் குரங்கு அரசருக்கு ஆலோசகராகப் போகிறதாம்!” என்று கேலி செய்தனர். ஆனால், எல்லாச் செய்திகளும் அரசரிடம் எடுத்துச் செல்லப்பட்டன. அரசர் எல்லாவற்றையும் படித்தார். அந்தக் குரங்கின் செய்தி மிகவும் நன்றாக இருந்தது.

அந்தக் குரங்கை நேர்முகத் தேர்விற்காக அரசர் வரச் சொன்னார். அக்குரங்கு நல்ல கம்பீரமாக உடையணிந்து குதிரைமேல் ஏறி, பாக்தாத் தெருக்களில் ஊர்வலமாக வந்து அரசரைச் சந்தித்தது. அரசவையில் அதனிடம் நிறைய கேள்விகள் கேட்கப்பட்டன. அது எல்லாக் கேள்விகளுக்கும் அறிவுப்பூர்வமான சரியான விடைகளைக் கூறியது. அரசருக்கு அதை மிகவும் பிடித்து விட்டது. ஆனால், மந்திரிகள் தடுத்தனர்.

“”எப்போதும் அதனால் பேச முடியாது. எப்படி ஒரு குரங்கு தலைமை ஆலோசகர் ஆகமுடியும்?” என்றனர்.

அரசர் தீர்மானமாக இருந்ததால் அவர் குரங்கையே தலைமை ஆலோசகராக நியமித்தார். அவருடைய புதல்வி, இளவரசி இந்தக் குரங்கு உண்மையில் குரங்கு அன்று. ஏதோ அரக்கர்களின் மாயத்தால் இவ்வாறு மாற்றப்பட்டுள்ளது என்பதை அறிந்தாள். அரக்கர்கள், அவர்களின் மந்திர வித்தைகள் போன்றவற்றை அவள் படித்துள்ளாள். அந்த மந்திரத்தால் குரங்குத்தன்மை மாறும்படி செய்தாள். அறிஞர் தன் பழைய நிலையை அடைந்தார்.

அவர் இளவரசிக்கு நன்றி கூறினார். பல ஆண்டுகள் அங்குத் தங்கி நன்றியறிதலோடு அரசருக்குத் தகுந்த ஆலோசனைகளை வழங்கினார்.

இன்றைய செய்திகள்

09.06.2025

இன்றைய செய்திகள்
 
⭐கொரோனா பரவல் - கர்ப்பிணிகள் மாஸ்க் அணிய அறிவுறுத்தல்.
"அதிக காய்ச்சல், இருமல், உடல் வலி இருந்தால் மருத்துவமனைக்கு செல்லுங்கள்"

⭐ மணிப்பூர் மாநிலத்தில் போராட்டங்கள் காரணமாக இணைய சேவை நிறுத்தப்பட்டது.

⭐லாஸ் ஏஞ்சல்ஸில், ICE நாடுகடத்தல் சோதனைகளுக்கு எதிரான போராட்டங்கள் மோதல்களாக அதிகரித்துள்ளன.

🏀 விளையாட்டுச் செய்திகள்


🏀 WTC இறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலியாவின் ஆல்-ரவுண்டர் பியூ வெப்ஸ்டர் முயற்சிக்கிறார், இங்கிலாந்தில் வலுவான கவுண்டி சீசனுக்குப் பிறகு, தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இடம் பெற ஆஸ்திரேலியாவின் ஆல்-ரவுண்டர் பியூ வெப்ஸ்டர் பணியாற்றி வருகிறார்.

🏀 ஹாக்கியில் நெதர்லாந்திடம் இந்தியா 2-1 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.

Today's Headlines


✏️ Corona is spreading fast . Pregnant women are advised to wear masks. "If anyone has high fever, cough  and body ache they have to move to hospital immediately" 

✏️In Manipur ,Internet services suspended  due to protests.

✏️ In Los Angeles, protests against ICE deportation raids have escalated into clashes.

 *SPORTS NEWS*


🏀 After a strong county season in England, Australia all-rounder Beau Webster is working towards to secure a place in the World Test Championship final against South Africa.

🏀 India lost  to Netherlands in hockey  by 2-1

Thursday, June 5, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 06.06.2025

 


    






திருக்குறள்: 

குறள் 399:

தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.

விளக்கம்:தாம் இன்புறுவதற்குக் காரணமான கல்வியால் உலகமும் இன்புறுவதைக் கண்டு, கற்றறிந்த அறிஞர் மேன்மேலும் (அக் கல்வியையே) விரும்புவர்.

பழமொழி :

All things comes to those who wait. 

பொறுத்தார் பூமி ஆள்வார்.

இரண்டொழுக்க பண்புகள் :

1.புதிய கல்வியாண்டில் அனைவரிடமும் அன்புடன் நடந்து கொள்வேன்.

2.எனது கடமைகளை சரிவர செய்து அனைவரிடமும் நற்பெயர் எடுப்பேன்.

பொன்மொழி :

நல்ல விதை விதைத்தால் செடி நன்கு வளர்ந்து நல்ல பலன் கொடுக்கும். அதுபோல நல்ல எண்ணங்கள் இருந்தால் வாழ்க்கை பிரகாசிக்கும். - சாகர்

பொது அறிவு : 

01. சந்திராயன்-1 எந்த நாளில் நிலவுக்கு ஏவப்பட்டது?


2008 அக்டோபர் 22

02. சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் தலைமையிடம் எங்குள்ளது?


லாசான்( ஸ்விட்சர்லாந்து)
Lausanne (Switzerland)

English words & Tips :

 habit    -      பழக்கம்

 dirty     -       அழுக்கு

TIPS

Changing a Singular Noun to a Plural Noun

* Adding ‘oes’ to nouns ending with an ‘o’ -      tomato - tomatoes.

* Adding ‘ies’ to words ending with a ‘y’ preceded by a consonant -      Baby - Babies

* Adding ‘s’ to words ending with a ‘y’ preceded by a vowel -      key - keys


அறிவியல் களஞ்சியம் :

 மூளையில் குருதி ஓட்டத்தைக் கண்காணிப்பது சுலபமல்ல. அஞ்சல்தலை அளவே உள்ள ஒரு புதிய கருவியை அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலை வடிவமைத்துள்ளது. மூளையில் அல்ட்ரா சவுண்ட் தொழில்நுட்பம் வாயிலாக இந்தக் கருவி ரத்த ஓட்டத்தை அறிய உதவுகிறது.

நீதிக்கதை

 சமயோசித யுக்தியால் உயிர் தப்பிய நாய்



ஒரு காட்டில் காட்டுநாய் ஒன்று சுற்றித் திரிந்து கொண்டு இருந்தது. அப்போது ஒரு சிறுத்தைப்புலி தன்னை நோக்கி வேகமாக வந்துகொண்டிருந்ததை அந்த காட்டுநாய் பார்த்தது.


நாயை பிடித்து தின்ன வேண்டும் என்பதுதான் சிறுத்தைப்புலியின் நோக்கம். எப்படி அதனிடம் இருந்து தப்பி செல்வது என்பது காட்டு நாயின் கவலை.


ஓடிச்செல்வதால் பயனில்லை. ஏனென்றால் எவ்வளவு வேகமாக ஓடினாலும் சிறுத்தைப்புலியின் அளவுக்கு காட்டு நாயால் வேகமாக ஓட முடியாது.


எனவே காட்டு நாய் உடனே மிக வேகமாக யோசிக்க தொடங்கியது. அருகில் சில எலும்புகள் கிடந்தன. அவற்றை பார்த்தும் உடனே அந்த காட்டு நாய்க்கு ஒரு யோசனை பிறந்தது.


சிறுத்தைப்புலியின் பக்கம் தன் முதுகை திருப்பிக்கொண்டு கீழே அமர்ந்து அந்த எலும்புகளை மென்று தின்பதுபோல் கடிக்க ஆரம்பித்தது. சிறுத்தைப்புலி அருகில் வந்து தன் மீது பாய்வதற்கு தயாரானபோது காட்டு நாய் உரத்த குரலில் சொன்னது….


”இப்போது நான் தின்று முடித்த சிறுத்தைப்புலி மிகவும் சுவையாக இருந்தது. அக்கம் பக்கத்தில் வேறு சிறுத்தைப்புலி கிடைக்குமா? என்று தேடிபார்க்க வேண்டும்” என்றது.


இதைக் கேட்டதும் பயந்து போய் சிறுத்தைப்புலி அப்படியே ஸ்தம்பித்து சிலைபோல் நின்று விட்டது.


இந்த காட்டு நாய் சிறுத்தைப்புலிகளையே கொன்று தின்று விடுகிறதே. அப்படியானால் எவ்வளவு பலம் வாய்ந்ததாய் இருக்க வேண்டும். இதனிடம் அகப்படாமல் தப்பி சென்றுவிட வேண்டும் என்று நினைத்து ஓசைப்படாமல் பின்னோக்கி சென்று அந்த சிறுத்தைப்புலி புதருக்குள் மறைந்துவிட்டது.


அருகில் இருந்த ஒரு மரத்தின் மீது உட்கார்ந்து இருந்த ஒரு குரங்கு நடந்ததை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்தது. தனக்கு தெரிந்த தகவலை சிறுத்தைப்புலியுடன் பகிர்ந்து கொண்டு சிறுத்தைப்புலியுடன் பேரம் பேசி தனக்கு பாதுகாப்பு தேடிக்கொள்ளலாம் என்று அந்தக் குரங்கு கருதியது.


எனவே சிறுத்தைப்புலியை பின் தொடர்ந்து அந்தக்குரங்கு வேகமாக ஓடிச்சென்றது. காட்டு நாயும் இதை கவனித்தது. ஏதோ சதி நடக்கிறது என்பதை புரிந்துக்கொண்டது.


குரங்கு, சிறுத்தைப்புலியிடம் சென்று காட்டு நாய், சிறுத்தைப்புலியை எப்படி ஏமாற்றியது என்ற முழு விவரத்தையும் சொன்னது. சிறுத்தைப்புலிக்கு தாங்க முடியாத கோபமும், ஆத்திரமும் வந்தது.


அந்த காட்டு நாய் என்னையே ஏமாற்றலாம் என்று நினைக்கிறதா? அதற்கு மறக்க முடியாத பாடத்தை புகட்டுகிறேன்.


”இந்த காட்டில் யார் யாரை கொன்று தின்பார்கள் என்பதை காட்டுகிறேன்” என்று சொல்லிவிட்டு, “”குரங்கே வா. என் முதுகில் ஏறி உட்கார். 2 பேரும் அந்த காட்டு நாயை பிடிக்கலாம்” என்றது. குரங்கு, சிறுத்தைப்புலியின் முதுகில் ஏறி உட்கார்ந்தது.


இரண்டும் நாயை நோக்கி சென்றன. சிறுத்தையும், குரங்கும் சேர்ந்து வருவதை காட்டு நாய் பார்த்தது. இந்த திருட்டு குரங்கு என்னை இப்படி ஆபத்தில் மாட்டி விட்டதே இப்போது என்ன செய்வது? என்று அந்த காட்டு நாய் யோசித்தது. அப்படி யோசித்ததே தவிர, அதற்காக அந்த காட்டு நாய் பயந்து ஓடவில்லை.


அந்த சிறுத்தையையும், குரங்கையும் பார்க்காத மாதிரி நடித்து அவைகளுக்கு தன் முதுகை காட்டிக்கொண்டு தரையில் அமர்ந்தது. அவை அருகில் நெருங்கியதும் அந்த காட்டு நாய் உரத்த குரலில் சொன்னது.


”அந்த போக்கிரி குரங்கு எங்கேபோய் தொலைந்தது. அதனை நம்பவே முடியாது. நான் இன்னொரு சிறுத்தைப்புலியை சாப்பிடுவதற்கு பிடித்துக்கொண்டுவா என்று சொல்லி அனுப்பி அரை மணிநேரத்துக்கு மேல் ஆகிவிட்டது. இன்னும் அந்த குரங்கை காணோமே?” என்றது.


காட்டு நாய் சொன்னதை கேட்ட சிறுத்தைப்புலி தன் கோபம் முழுவதையும் குரங்கின் மீது திருப்பியது. அதனை கடித்துக் குதறி கொன்று தின்றுவிட்டது.


இன்றைய செய்திகள்

06.06.2025

இன்றைய செய்திகள் 

⭐ JEE தேர்வில்  மாநிலத்திலேயே முதலிடம் பெற்ற சேலம் மாணவி ராஜேஸ்வரிக்கு , முதல்வர் மற்றும் அரசியல் தலைவர்கள் வாழ்த்து.

⭐ நெகிலி மாசு ஒழிப்பது தான் இந்த ஆண்டின் கருப்பொருள் - சுற்றுச் சூழல் தின  அறிக்கை - தமிழக முதல்வர்.

⭐ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்த தமிழக அரசு கொண்டுவந்த கட்டுப்பாடுகள் செல்லும் - சென்னை உயர்நீதிமன்றம்.

⭐உலகின் மிக உயரமான ரயில் பாலமாக ஜம்மு காஷ்மீரில் அமைக்கப்பட்டுள்ள செனாப் பாலத்தை  ஜூன் 6ஆம் தேதி திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி. கத்ரா-ஸ்ரீநகர் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையையும் தொடங்கி வைக்கவுள்ளார்.

🏀விளையாட்டுச் செய்திகள்

🏀TNPL கிரிக்கெட் இன்று தொடக்கம் .

🏀கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள வந்த சிறு குழந்தை ஒன்றும் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை 11 தாண்டியது.


Today's Headlines

TODAY'S HEADLINES

✏ Salem student Rajeshwari, who topped the state in the JEE exam, Congratulations from the Chief Minister and political leaders. 

✏ Eradicating Pladtic Pollution is this year's theme - Environment Day Report - Tamil Nadu Chief Minister

✏ The restrictions brought by the Tamil Nadu government to regulate online games will be lifted - Madras High Court. 

✏ Prime Minister Modi will inaugurate  the world's highest railway bridge named Chenab Bridge in Jammu and Kashmir,  on June 6. He will also launch the Vande Bharat train service between Katra and Srinagar too.

 SPORTS NEWS

🏀 TNPL  series cricket starts today.

🏀 RCB's victory celebration in Bengaluru, Karnataka, few people got stuck in the crowd by stampede. The death toll has crossed 11.

Covai women ICT_போதிமரம்