Monday, January 27, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.01.2025

 

லாலா லஜபதி ராய்

  






திருக்குறள்: 

பால் : பொருட்பால் 

அதிகாரம் குடிமை

குறள் எண்:957 

குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மதிக்கண மறுப்போல் உயர்ந்து.

பொருள்: விண்நிலவு களங்கம் போல், உயர்குடி பிறந்தோர் குற்றம் ஊருக்குத் தெரிந்துவிடும்.

பழமொழி :

செய்வன திருந்தச் செய்.  

Do well what you have to do.

இரண்டொழுக்க பண்புகள் :   

 *எனது பெற்றோர் பெருமைப்படக்கூடிய வகையில் நான் நன்கு படிப்பேன். 

*எனது பெற்றோரும் ஆசிரியரர்களும் தரக்கூடிய ஆலோசனைகளை கேட்டு நடப்பேன்.

பொன்மொழி :

வசந்தம் ஒரே நாளில் மலர்ந்து விடுவதில்லை. அது போலத்தான் நாம் உயர்வதும்--அரிஸ்டாட்டில்

பொது அறிவு : 

1. திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் எது? 

விடை:  நெருஞ்சிப் பழம்.    

 2. திருக்குறளில் இடம்பெறும் இரு மலர்கள்______,________ 

விடை: அனிச்சம் , குவளை

English words & meanings :

 Dam.        -      அணை

Desert.      -     பாலைவனம்

வேளாண்மையும் வாழ்வும் : 

பல நகர்ப்புறங்களில் ஏற்பட்டுள்ள வருவாய் பெருக்கம் மற்றும் மக்கள் தொகை பெருக்கம் உணவு தேவையை அதிகப் படுத்தி உள்ளது. விளைவு வேளாண்மை உற்பத்தி அதிகரிக்க வேண்டும்: அதற்கு நீர் தேவையும் அதிகரிக்கும்.

ஜனவரி 28


லாலா லஜபதி ராய் அவர்களின் பிறந்தநாள்

லாலா லஜபதி ராய் ஒரு எழுத்தாளரும் அரசியல் தலைவரும் ஆவார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் இவரது பங்குக்காக இவர் பெரிதும் மதிக்கப்படுகிறார். இவரை மக்கள் பஞ்சாப் சிங்கம் எனவும் அழைப்பதுண்டு. லால்-பால்-பால் என்று அழைக்கப்படும் மூன்று முக்கியத் தலைவர்களுள் இவரும் ஒருவராவார். மற்ற இருவர் பால கங்காதர திலகர் மற்றும் பிபின் சந்திர பால் ஆவர். 'லாலா லஜபத் ராய்' பஞ்சாப் தேசிய வங்கி மற்றும் "லட்சுமி காப்புறுதி கம்பெனி" ஆகியவற்றை நிறுவியவரும் ஆவார்

நீதிக்கதை

 கிணற்றைத்தானே விற்றேன்


ஒருவன் தனது கிணற்றை ஒரு விவசாயிக்கு விற்றான்.வாங்கிய விவசாயி அடுத்த நாள் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்க ஆவலுடன் கிணற்றுக்கு வந்தான்.

அப்போது விற்றவன் அங்கே நின்று கொண்டிருந்தான். விவசாயியை தண்ணீர் எடுக்க விடாமல் தடுத்தான்.

விவசாயிக்குக் கோபம் வந்தது."எனக்குக் கிணற்றை விற்று விட்டு அதிலிருந்து தண்ணீர் எடுக்க விடாமல் செய்கிறாயே?" என்று விற்றவனை கோபத்துடன் கேட்டான்.

விற்றவன் "ஐயா! உமக்கு நான் கிணற்றை மட்டும்தான் விற்றேன். அதிலிருக்கும் தண்ணீரை அல்லவே!!" என்று தர்க்கம் செய்தான்.

விவசாயி குழப்பத்துடனும் கோபத்துடனும் நீதிபதியிடம் சென்று முறையிட்டான்.

நீதிபதி இருவரையும் அழைத்து இருவர் பக்கத்து நியாயத்தையும் விசாரித்தார். பின்னர் கிணற்றை விற்றவனிடம் "நீ கிணற்றை விற்றுவிட்ட படியால் அது உன்னுடையதல்ல. அதில் உனது தண்ணீரை இன்னமும் வைத்திருப்பது தவறு. உனக்கு அதில்தான் தண்ணீரை சேமித்து வைக்க வேண்டுமென்றால் விவசாயிக்கு அதற்கான வாடகையை தினமும் கொடுத்து விடு. இல்லையென்றால்கிணற்றிலிருந்து உனது தண்ணீரை எடுத்துக் கொண்டு உடனே வெளியேறு" என்று தீர்ப்புக் கூறினார்.

விற்றவன் தலையைக் குனிந்து கொண்டே, தனது தவறுக்கு மன்னிப்புக் கோரி விட்டு, விவசாயியை கிணற்றின் முழுப் பலனையும் அனுபவிக்கச் சொல்லிவிட்டு, அங்கிருந்து சென்று விட்டான்.

இன்றைய செய்திகள்

28.01.2025

*தமிழகத்தில் பொது இடங்கள், சாலைகளில் உள்ள கட்சிக் கொடிக் கம்பங்களை 12 வாரத்தில் அகற்ற ஐகோர்ட் உத்தரவு.

* 'திறன்மிகு வகுப்பறை’ திட்டத்தின்கீழ் 7 மாதங்களில் 22,931 ஸ்மார்ட் போர்டுகளை அமைத்து பள்ளிக் கல்வித்துறை சாதனை.

* தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்தின்போது உயிரிழப்புகளைத் தவிர்க்க, மூங்கில் கழியால் உருவாக்கப்படும் சாலையோரத் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

* உத்தராகண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்தது.

* அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடன், இஸ்ரேலுக்கு வெடி குண்டுகள் வழங்குவதற்கு விதித்த தடையை நீக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

* மகளிர் ஹாக்கி இந்தியா லீக்: ஒடிசா வாரியர்ஸ் சாம்பியன்.

* பிக்பாஷ் இறுதிப்போட்டி: சிட்னி தண்டரை வீழ்த்தி ஹோபார்ட் ஹரிகேன்ஸ் சாம்பியன்.

Today's Headlines

* Under the 'Efficient Classroom' program, 22,931 smart boards were set up in 7 months, a great achievement in record time in the school education department.

* Court order to remove party flag poles from public places and roads in Tamil Nadu within 12 weeks.

* Roadside barriers made of bamboo cuttings are being erected on national highways to avoid casualties during accidents.

* The General Civil Code came into force in the state of Uttarakhand from yesterday.

* President Donald Trump ordered to lift the embargo  on the supply of explosives to Israel by Former US President Joe Biden

* Women's Hockey India League: Odisha Warriors are champions.

* Big Bash Final: Hobart Hurricanes beat Sydney Thunder to become champions.

Covai women ICT_போதிமரம்

Sunday, January 26, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27.01.2025

 


  






திருக்குறள்: 

பால்: பொருட்பால்

குறள் எண்:956

அதிகாரம்: குடிமை

சலம்பற்றிச் சால்புஇல செய்யார்மாக அற்ற 
குலம்பற்றி வாழ்தும்என் பார்.

பொருள்:
நற்குடி ஒழுக்கத்திற்கேற்ப வாழ்வோம் என்போர், பகை அல்லது வஞ்சனையின் பொருட்டு இழி செயல் செய்யார்.

பழமொழி :

சூரியன் எழு முன் காரியம் ஆடு.   

Form your plans before sunrise.

இரண்டொழுக்க பண்புகள் :   

 *எனது பெற்றோர் பெருமைப்படக்கூடிய வகையில் நான் நன்கு படிப்பேன். 

*எனது பெற்றோரும் ஆசிரியரர்களும் தரக்கூடிய ஆலோசனைகளை கேட்டு நடப்பேன்.

பொன்மொழி :

பிரியமான வேலை எதுவும் கஷ்டமானதே அல்ல -- ஹென்றி போர்ட்

பொது அறிவு : 

1. இந்தியாவில் தேன் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது?

 பஞ்சாப்.

2.குருதிக் கொடை தருபவர்களுக்கு அக்குருதி மீண்டும் சுரக்க எத்தனை நாட்கள் ஆகும்?

 21 நாட்கள்.

English words & meanings :

 Cave.   -     குகை
 
Coast.    -   கடற்கரை

ஜனவரி 27

பன்னாட்டு பெரும் இன அழிப்பு நினைவு நாள் (International Holocaust Remembrance Day

நீதிக்கதை

 விருப்பப் பட்டியல்


பேரரசன் நெப்போலியன் பெருங்களிப்பில் இருந்தார். போரில் பெற்ற மாபெரும் வெற்றிதான் அதற்குக் காரணம். அந்த வெற்றிக்குப் பேருதவியாக இருந்த அவரது நான்கு தளபதிகளையும் அழைத்து "உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் கேளுங்கள்" என்று கூறினார் .

முதல் தளபதி ஜெர்மனியைச் சேர்ந்தவன். அவன் "மன்னா! எனக்கு பாரிஸ் நகரத்தில் ஒரு வீடு கட்டிக் கொள்ள வெகுநாளாக ஆசை" என்றான்.

"உனக்கு பாரிஸ் நகரத்தில் பெரிய மாளிகையே கட்டித் தரச் சொல்கிறேன்" என்றார்  நெப்போலியன்.

அடுத்தவன் பாரிஸ் நகரத்தைச் சேர்ந்தவன். தனக்கு சொந்தமாக ஒரு தங்கும் விடுதி (Hotel) நடத்த ஆசை என்று மன்னனிடம் கூறினான்.

மாமன்னன் நெப்போலியன் சிரித்துக் கொண்டே மகிழ்ச்சியுடன் ஏற்பாடுசெய்வதாகக் கூறினார்.

மூன்றாம் தளபதி போலந்துக் காரன். அவன் "தனக்கு திராட்சை  தோட்டம்வேண்டும்" என்று கேட்டான். அதற்கும் நெப்போலியன் அதே பதில்தான் சொன்னார் .

கடைசி தளபதி ஒரு யூதன். அவன் நெப்போலியனிடம் இரண்டு வார விடுப்பு பரிசாக வேண்டும் என்றுகேட்டான். அதற்கு மன்னன் நெப்போலியன் "உன் விடுப்பு நாளை முதல் தொடங்கும்" என்றார் .

அவன்  வெளியே வந்தவுடன், தளபதிகளில் முதல் மூவரும் யூதனைப்பார்த்து "சரியான முட்டாளாக இருக்கிறாயே! ஏதாவது விலைமதிப்புள்ளதாகக் கேட்காமல் விடுப்பைப் போய் கேட்டாயே?" என்றுஏளனம் செய்தார்கள்.

அதற்கு அவன் "நண்பர்களே! நீங்கள் கேட்டதையெல்லாம் மன்னன் ஏற்பாடு செய்து தருவதாகத்தான் கூறியிருக்கிறார்.இன்னும் அவை உங்கள் கையில் கிடைக்கவில்லை. மன்னன் அவர்  கொடுத்த வாக்குகளை நேரடியாகச் செயல்படுத்த அவருக்கு நேரமிருக்கப் போவதில்லை. அவரது காரியதரிசியைத்தான் பணிக்கப் போகிறார். காரியதரிசியோ ஆயிரம் வேலை செய்பவன். அவனும் அவனுக்குக் கீழ்வேலை செய்பவர்களுக்குததான் இந்த வேலைகளைக்கொடுப்பான். உங்களுக்கு அளிக்கப் பட்ட பரிசுகளுக்கான வாக்குறுதிகளின்முக்கியத்துவம் இப்படி கீழே ஆணைகள் செல்லச் செல்ல கரைந்து கொண்டே போய் மறக்கப் படும் வாய்ப்புகள் அதிகம்" என்றான்.

மற்ற தளபதிகள் "அப்படி நடந்தால் மன்னனிடம் போய் முறையிடலாம்தானே" என்றார்கள்.

யூதத் தளபதி சொன்னான் "நண்பர்களே. மன்னனுக்கு இன்றைக்கு இருக்கும் வெற்றிக் களிப்பு வெகுநேரம் நிலைக்காது. போரில் பெற்ற வெற்றியின் மதிப்பு நாளடைவில் மற்ற பிரச்சினைகளுக்கு இடையே ஒளியிழந்து போகும். அதோடல்லாமல் இந்தக் கணத்தின் உங்கள் துறையின் வெற்றி மட்டுமே அவர்  கண் முன் நிற்கிறது. நாளை உங்கள் துறையில் ஏதாவது தவறு நடந்தால் நீங்கள் தலை நிமிர்ந்து அவர் முன் நின்று உங்கள் பரிசை உரிமையுடன் நினைவுறுத்த இயலாது. 

ஆனால் நான் கேட்ட பரிசோஇப்போது என் கையில்"இதைக் கேட்ட மற்றவர்கள் பேச்சடைத்துப் போனார்கள். யூதத் தளபதி தன் விடுமுறையைத் திட்டமிடக் கிளம்பினான்.


நீதி:அரிதான இடத்தில் உடனே கிடைக்கக் கூடிய ஒரு ரூபாய் பின்னால் கிடைக்கப் போகும் நூறு ரூபாய்களை விட மேலானது.

இன்றைய செய்திகள்

27.01.2025

* சிறப்பாக பணியாற்றிய 2 ஐஜி-க்கள் உட்பட தமிழக காவல் துறையைச் சேர்ந்த 23 பேருக்கு குடியரசுத் தலைவர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

* தமிழ்நாடு இந்தியாவில் இரண்டாவது பொருளாதார மாநிலமாக வளர்ந்துள்ளது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

   
* பிரதமர் மோடியுடன் இந்தோனேசிய அதிபர் சந்திப்பு: கடல்சார் பாதுகாப்பு உட்பட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.


* உலகளாவிய உதவி திட்டங்களுக்காக வழங்கப்பட்டு வரும் நிதியை நிறுத்தி வைக்க அமெரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

* ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இத்தாலியின் ஜானிக் சினெர் சாம்பியன் பட்டம் வென்றார்.

Today's Headlines

* 23 people from the Tamil Nadu Police Department, including 2 IGs, have been awarded the President's Medal for their outstanding service.

* Tamil Nadu has emerged as the second-largest economic state in India, says Tamil Nadu Chief Minister M.K. Stalin.

* Indonesian President meets Prime Minister Modi: Various agreements including maritime security signed.

* The US government has decided to suspend funding for global aid programs.

* Australian Open Tennis: Italy's Gianni Cener wins the championship.

Covai women ICT_போதிமரம்

Saturday, January 25, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 26.01.2025

 


       






திருக்குறள்: 

பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : துறவு

குறள்:342

வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின்
ஈண்டுஇயற் பால பல.

விளக்கம்:

 பொருள்களின் மீதுள்ள பற்றைத் துறந்தபின் வந்து சேரும் இன்பங்கள் பல; இன்பங்களை விரும்பினால் துறவு கொள்ள வேண்டும்.

பழமொழி :

சுதந்திரமே வளர்ச்சிக்கு முதல் நிபந்தனை .

இரண்டொழுக்க பண்புகள் :   

*உலகில் தோன்றிய மூத்த மொழிகளில் ஒன்று தமிழ் மொழி என்பதை அறிவேன். எனவே , எனது தாய் மொழியை சிறப்பாக கற்று தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்ப்பேன்.    

*விளையாட்டு உடலுக்கு வலிமை சேர்க்கும் .எனவே, செல்பேசியில் மூழ்காமல் ஏதாவது ஒரு  விளையாட்டிலாவது எனது திறமையை வெளிப்படுத்துவேன்.

பொன்மொழி :

அன்பு தான் உன் பலவீனம் என்றால் இந்த உலகின் மிகச் சிறந்த பலசாலி நீ தான் - அன்னை தெரசா

பொது அறிவு : 

1. உலகில் அதிக விலை கொண்ட விலங்கு எது? 

விடை: பந்தய குதிரை

English words & meanings :

 Beach.  -    கடற்கரை
 
 Bridge.    -     பாலம்

ஜனவரி 26

இந்தியக் குடியரசு நாள் 

* 1930ஆம் ஆண்டு இந்திய விடுதலை இயக்கத்தினர் பூர்ண சுவராஜ் என்ற விடுதலை அறைகூவலை நினைவுகூர சனவரி 26ஆம் நாள் விடுதலை நாளாக காந்தியடிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டது. அன்றைய நாளில் நகர்ப்புறங்களிலும் சிற்றூர்களிலும் உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் கூட்டி, காந்தியடிகள் கீழே கண்டவாறு பரிந்துரைத்த விடுதலை நாள் உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்

"பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம், ஆன்மீகம் ஆகிய நான்கு விதத்திலும் நமது தாய் நாட்டிற்குக் கேடு விளைவித்துவரும் ஓர் அரசாட்சிக்கு அடங்கி நடப்பது, மனிதனுக்கும் இறைவனுக்கும் செய்யும் துரோகம்."

    * 12ஆம் நாள் டிசம்பர் மாதம் 1946 ஆண்டு ஒரு நிரந்தர அரசியலமைப்பை உருவாக்குவதற்கான வரைவுக் குழு உருவாக்கி அதன் தலைவராக பி ஆர் அம்பேத்கர் நியமிக்கப்பட்டார். அந்தக் குழு ஒரு வரைவு அரசியலமைப்பினை 1947 நவம்பர் 4ஆம் நாள் அரசியலமைப்பு சட்டவரைவை மக்களவையில் சமர்ப்பித்தது.

     * 2 ஆண்டுகள், 11 மாதங்கள், 18 நாட்கள் எழுதி முடிக்கப்பட்டது.பொது திறந்த அமர்வுகளில், சந்தித்து அரசியலமைப்பின் ஏற்புக்கு முன்னதாக பல விவாதங்கள் நடைபெற்றன. கடைசியாக சனவரி 24ஆம் நாள் 1950 ஆம் ஆண்டு 308 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுடன் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் கையால் எழுதப்பட்ட நிரந்தர அரசியலமைப்பு கையெழுத்திடப்பட்டது.

     * அதன் பிறகு இரண்டு நாட்கள் கழித்து, 1950ஆம் ஆண்டில் சனவரி 26ஆம் நாளை, மக்களாட்சி மலர்ந்த தினமாகக் கொண்டாட நேரு அமைச்சரவை முடிவு செய்து அறிவித்து செயல்படுத்தியது. 1950 முதல் இது குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது

இன்றைய செய்திகள்

26.01.2025

🌸நமது இந்திய திருநாட்டில் 76 வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது.   

🌸93 ஆயுதப்படை வீரர்களுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்கள் இன்று வீரதீர விருதுகள் வழங்குகிறார்.  


🌸தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இரண்டு நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என வானிலை ஆய்வு 
மையம் தகவல். 


🌸சர்வதேச T20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அதிக விக்கெட் வீழ்த்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையை  அர்ஷ்தீப் சிங் படைத்துள்ளார்.

Today's Headlines

🌸 The 76th Republic Day is celebrated today in our country.

🌸President Draupadi Murmu presents the Veerathira awards today to the 93  Armed Forces.  


🌸The weather forecast for two days in Tamil Nadu and Puducherry 
Center information. 


🌸Arshdeep Singh holds the record for the highest wicket -taker for India in T20 cricket.

Covai women ICT_போதிமரம்

Friday, January 24, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 25.01.2025

 

தேசிய வாக்காளர் தினம்

      






திருக்குறள்: 

பால்: பொருட்பால்

அதிகாரம்: குடிமை

குறள் எண்:955

வழங்குவது உள்விழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பில் தலைப்பிரிதல் இன்று.

பொருள்:
கொடுப்பதற்கு செல்வம் வற்றிய காலத்தும் நற்குடியில் பிறந்த பழங்குடி மக்கள் கொடைத்தன்மையை விடார்.

பழமொழி :

The bearer knows the burden.

சுமப்பவனுக்கு தெரியும் பாரம்.

இரண்டொழுக்க பண்புகள் :   

*உலகில் தோன்றிய மூத்த மொழிகளில் ஒன்று தமிழ் மொழி என்பதை அறிவேன். எனவே , எனது தாய் மொழியை சிறப்பாக கற்று தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்ப்பேன்.    

*விளையாட்டு உடலுக்கு வலிமை சேர்க்கும் .எனவே, செல்பேசியில் மூழ்காமல் ஏதாவது ஒரு  விளையாட்டிலாவது எனது திறமையை வெளிப்படுத்துவேன்.

பொன்மொழி :

கல்வியின் வேர்களோ கசப்பானவை, ஆனால் கனியோ இனிப்பானது-- அரிஸ்டாட்டில்

பொது அறிவு : 

1. பறவை தீவு என அழைக்கப்படுவது எது? 

விடை: நியூசிலாந்து. 

2. முதுகெலும்புடன் தோன்றிய முதல் உயிரினம் எது? 

விடை :மீன்

English words & meanings :

 Air     -       காற்று
 
Bay       -     விரிகுடா

ஜனவரி 25

தேசிய வாக்காளர் தினம்

இந்திய அரசாங்கத்தால் இளம் வாக்காளர்களை ஊக்கப்படுத்துவதற்காக சனவரி 25-ஆம் தேதி தேசிய வாக்காளர் நாளாக (National Voters' Day) கடைபிடிக்கப்படுகிறது. வாக்களிப்பதை மக்கள் தங்கள் கடமையாகக் கருத வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவது இந் நாளின் நோக்கமாகும்.

18 வயது நிரம்பிய இந்தியக் குடிமக்கள் அனைவரும் வாக்களிக்கத் தகுதி வாய்ந்தவர். தேர்தல் என்பது பொதுவாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருகிறது. சாதி, மதம், இனம் என்ற வேறுபாடுகளைக் களைந்து 18 வயது நிரம்பிய இந்திய குடியுரிமை பெற்ற மக்கள் அனைவரும் வாக்களிக்கத் தகுதி உள்ளவர்கள். வாக்காளர் அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை ஒன்று தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படுகின்றது.

நீதிக்கதை

 மகிழ்ச்சியான பணி 


ஒரு ஊரில் ஒரு குயவனும் ஒரு வைரம் தீட்டுபவனும் அருகருகே வாழ்ந்து வந்தார்கள். இருவரும் தத்தம் தொழிலில் சிறந்தவர்கள். அவர்கள் செய்யும் பொருட்களை பல ஊர்களிலும் உள்ள மக்கள் விரும்பி வந்து வாங்கிச் சென்றனர்.


குயவனிடம், வைரம் தீட்டுபவன் ஒரு நாள் "எப்படி இருக்கிறாய்? உன் வேலை எப்படிப் போகிறது?" என்று கேட்டான்.


குயவன் "அட போப்பா! எனக்குக் களிமண்ணில் வேலை.. நாளெல்லாம் சகதியை மேலே அப்பிக்கொண்டு கையெல்லாம் அழுக்காக்கிக் கொண்டு வேலை செய்ய வேண்டியிருக்கிறது. உன்னைப் போலவெள்ளையும் சள்ளையுமாகவா இருக்க முடிகிறது? அலுப்புத் தட்டுகிறது போ!" என்று கொட்டாவி விட்டான்.


அதற்கு வைர வியாபாரி சொன்னான் "உனக்கு என்ன தெரியும் என் வேலையைப் பற்றி நாளெல்லாம் வைரத்தைத் தீட்டுகிறேன் என்று எத்தனை முறை நான் என் கையை அறுத்து ரத்த காயப்படுத்திக் கொள்கிறேன் தெரியுமா உனக்கு? உன் வேலையில் இந்த ஆபத்தெல்லாம் கிடையாதே. வேலை செய்து கையெல்லாம் புண்ணாகிப் போனதுதான் மிச்சம். இன்றும் நாள் முழுவதும் இந்த வேலையைத்தான் ஆபத்து என்று தெரிந்தே செய்ய வேண்டும்..." என்று அலுத்துக் கொண்டே புண்ணாகிப் போன தன் கைகளைக் காட்டினான்.


எல்லோருக்கும் அவரவர் வேலையில் மகிழ்ச்சி இல்லையா? மகிழ்ச்சியான வேலைதான் எது? என்று இருவரும் சிந்தித்தார்கள். அவர்களுக்கு எதுவும் பிடிபடவில்லை.


ஊரில் எல்லோரும் மதித்து நடக்கும் சிந்தனையில் சிறந்த பெரியவர் ஒருவர் இருந்தார். இருவரும் அவரிடம் சென்று "ஐயா எங்கள் வேலையில் அலுப்பும் ஆபத்தும்தான் தெரிகிறது? எப்போதும் மகிழ்ச்சியாகச் செய்யக் கூடிய வேலை ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்" என்று கேட்டார்கள்.


பெரியவர் புன்னகைத்துக் கொண்டே "உங்கள் இருவருக்கும் நீங்கள் செய்வதைத் தவிர வேறு வேலை ஏதாவது தெரியுமா?" என்று கேட்டார்.


அவர்கள் தத்தம் வேலைகளை மட்டுமே தமக்குச் செய்யத் தெரியும் என்று பதில் கூறினார்கள்.


"உலகிலே மண்பாண்டங்களும், தீட்டிய வைரங்களும் இயற்கையாகவே கிடைத்தால் என்ன நடக்கும்?" என்று அவர்களிடம் கேட்டார்.


"எங்கள் வேலைக்கே மதிப்பில்லாமல் போய்விடும்!" பயத்துடன் பதில் சொன்னார்கள்.


"அப்படியானால், உலகில் குறைகள் இருப்பதால்தான் உங்கள் இருவருக்கும் வேலை இருக்கிறது. அந்தக் குறைகளை நிறைவு செய்யும் திறமை உங்களுக்கு இருப்பதால் உங்களை மக்கள் மதிக்கிறார்கள். நீங்கள் அதைப் பெரிதாக நினைக்காமல், குறைகளால் ஏற்படும் வருத்தங்களைப் பெரிதாக நினைக்கிறீர்கள். மகிழ்ச்சியும்மகிழ்ச்சியின்மையும் உங்கள் நோக்கிலேயே இருக்கிறது. செய்யும் வேலையில் இல்லை" என்று முடித்தார்.

இன்றைய செய்திகள்

25.01.2025

* குடியரசு தின விழா: சென்னை​யில் 2 நாட்கள் ட்ரோன்கள் பறக்க தடை.

* இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் போட்டியை காண வரும் பார்வையாளர்களின் வசதிக்காக, சென்னையில் மெட்ரோ ரயில் சேவை இன்றும் நீட்டிக்கப்பட உள்ளது.

* இந்தியாவில் வாக்காளர் எண்ணிக்கை 100 கோடியை நெருங்கியது. மத்திய தேர்தல் ஆணையம் தகவல்.

* அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புடன் தொலைபேசியில் பேச ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தயாராக உள்ளதாக  அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

* ஹாக்கி இந்தியா லீக்: ஐதராபாத் அணியை வீழ்த்தி தமிழ்நாடு டிராகன்ஸ் வெற்றி.

* ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இத்தாலி வீரர்  ஜானிக் சினெர் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்.

Today's Headlines

* Republic Day: Drones banned in Chennai for 2 days

* For the convenience of the spectators coming to watch the India-England cricket match, the metro train service in Chennai will also be extended today.

* The number of voters in India is nearing 100 crores. Central Election Commission Information.

* Russian President Vladimir Putin is ready to talk to US President Donald Trump on the phone, the country's government has said.

* Hockey India League: Tamil Nadu Dragons beat Hyderabad.

* Australian Open Tennis: Italian Janic Ciner advances to final

Covai women ICT_போதிமரம்