Thursday, January 23, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 24.01.2025

 

தேசிய பெண் குழந்தை தினம்

     






திருக்குறள்: 

பால்: பொருட்பால்

 அதிகாரம் :குடிமை 

குறள் எண்:954

 அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
 குன்றுவ செய்தல் இலர்.

பொருள்:
கோடி கோடி பொருளைப் பெற்றாலும் நற்குடியில் பிறந்தவர் இழிவான சிறுசெயல்களை செய்யார்.

பழமொழி :

சிறு வயதில் கல்வி, சிலையில் எழுத்து. 

  Learning acquired in youth , is an inscription on stone.

இரண்டொழுக்க பண்புகள் :   

*உலகில் தோன்றிய மூத்த மொழிகளில் ஒன்று தமிழ் மொழி என்பதை அறிவேன். எனவே , எனது தாய் மொழியை சிறப்பாக கற்று தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்ப்பேன்.    

*விளையாட்டு உடலுக்கு வலிமை சேர்க்கும் .எனவே, செல்பேசியில் மூழ்காமல் ஏதாவது ஒரு  விளையாட்டிலாவது எனது திறமையை வெளிப்படுத்துவேன்.

பொன்மொழி :

என்னிடம் இருந்து எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளுங்கள்; என் நம்பிக்கை மட்டும் எனக்குப் போதும் நான் வெற்றியடைய-- நெப்போலியன்

பொது அறிவு : 

1. உலகின் மிகப்பெரிய தீபகற்பம் எது?

 விடை:  அரேபியா.       

  2. எந்த அமிலத்தாலும் கரைக்க முடியாத உலோகம் எது? 

விடை:  பிளாட்டினம் 

English words & meanings :

 Voice.     -    குரல்

 Whistle.      -    சீட்டி

வேளாண்மையும் வாழ்வும் : 

வேளாண் துறைக்கும் தொழில் மற்றும் நகர்ப்புற நுகர்வோருக்கும் இடையிலான நீர்வள ஆதாரங்களுக்கான போட்டி முக்கியத்துவம் பெறுகிறது.  

ஜனவரி 24

தேசிய பெண் குழந்தை தினம்


தேசிய பெண் குழந்தை நாள் (National Girl Child Day) இந்தியாவில் 2009 ஆண்டு முதல் ஜனவரி 24 ஆண்டு தோறும் அன்று கொண்டாடப்படுகிறது.. இந்நாள் கொண்டாடுவதின் மூலம் பாலின சமத்துவம், சமவேலைக்கு சமஊதியம் போன்ற கருத்துக்கள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த இது பெரிதும் உதவும்.மேலும் பெண்கள் மேம்பாட்டிற்கான திட்டங்கள் பற்றியும் பொதுமக்களுக்கு ஊடகம், செய்தித்தாள், வானொலி மற்றும் தொலைக்காட்சி வழியாக தகவல் அரசாங்கத்தால் அளிக்கப்படுகிறது.

நீதிக்கதை

 வித்தியாசமான உதவி


ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டு இருந்தான். அவனுக்குப் பசியெடுத்தது. ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக்கண்டான். மரத்தின் மேல் சரசரவென்றுஏறி அவற்றில் சில பழங்களைப் பறித்துத் தின்றான். மிகக் கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன. அவற்றை எட்டிப் பறிக்கக் கிளையின் மேல் நகர்ந்து சென்ற போது அவனது பாரம் தாங்காமல் ஒரு கிளை முறிந்து விட்டது.


சட்டென்று சுதாரித்த அவன் கீழே இருந்த ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்க ஆரம்பித்தான். குனிந்து பார்த்தால் தரை வெகு கீழே இருந்தது. ஏற்கெனவே பயந்து போயிருந்த அவன் மேலும் பயந்து கண்ணை மூடிக் கொண்டு "யாராவது காப்பாற்றுங்கள்' என்று திரும்பத் திரும்ப அலற ஆரம்பித்தான். உள்ளங்கை வியர்த்து வழுக்க ஆரம்பிக்கும் நிலை வந்து விட்டது.


தற்செயலாக அப்போது அந்தப்பக்கம் ஒரு முதியவர் வந்தார். மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்தார். அவன் மேல் ஒரு சிறிய கல்லை விட்டு எறிந்தார். கல் பட்டவுடன் வலியில் கீழே பார்த்தவனுக்கு ஆத்திரம் வந்தது. "பெரியவரே, உதவச் சொன்னால் கல்லால் அடிக்கிறீரே. அறிவில்லையா உமக்கு" என்று கோபத்துடன் கேட்டான்.


பெரியவர் பதில் பேசாமல் மற்றொரு சிறிய கல்லை எடுத்து அவன் மேல் எறிந்தார். மேலும் கோபமுற்ற இளைஞன் பெருமுயற்சி எடுத்து கையை வீசி மேலிருந்த கிளை ஒன்றை பலமாக பற்றிக் கொண்டு "நான் கீழே வந்தால் உம்மைச் சும்மா விட மாட்டேன்" என்று எச்சரித்தான்.


பெரியவர் மேலும் ஒரு கல்லைஅவன் மேல் வீசினார். இளைஞன் இப்போது இன்னொரு பெருமுயற்சி எடுத்து கிளைமேல் ஏறி விட்டான்.விடுவிடுவென இறங்கி வந்த அவன் நேராகப் பெரியவரிடம் வந்தான். அவரை சரமாரியாகத் திட்டினான்."ஏன் அப்படிச் செய்தீர்? உம்மை நான் உதவிதானே கேட்டேன்?" என்றான்.


பெரியவர் அமைதியாக சிரித்துக் கொண்டே "தம்பி.. நான் உனக்கு உதவிதான் செய்தேன்" என்றார். இளைஞன் திருதிருவென முழித்தான்.


பெரியவர் விளக்கினார். "நான் உன்னை முதலில் பார்த்த போது நீ பயத்தால் உறைந்து போயிருந்தாய்.உன் மூளை வேலை செய்யவில்லை. நான்கல்லை விட்டு எறிந்ததும் பயம் மறைய ஆரம்பித்து நீ என்னை எப்படிப் பிடிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாய். யோசிக்க ஆரம்பித்தவுடன் நீயாகவே உன்னைக் காப்பாற்றிக் கொண்டு கீழே இறங்கி விட்டாய். உன்னை உன்னாலேயே காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று உன் அறிவுக்கு முதலில் புலப்படவில்லை. உன் பயம் உன் கண்ணை மறைத்துக் கொண்டிருந்தது. அதிலிருந்து உன்னை நான் திசை திருப்பினேன்" என்று சொல்லி விட்டுத் தன் வழியே அவர் போய் விட்டார்.


அவனும் அவர் செய்த வித்தியாசமான உதவியை நினைத்து, ஆச்சரியப்பட்டான்.

இன்றைய செய்திகள்

24.01.2025

* மயிலாடும்பாறை அகழ்வாய்வில் தமிழகத்தில் இரும்பின் பயன்பாடு என்பது 4,200 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என கண்டறியப்பட்ட ஆய்வு அறிக்கையை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்

* பல்லுயிர் பாரம்பரிய தளத்தின் முக்கியத்துவத்தையும், பாரம்பரிய உரிமைகளைப் பாதுகாப்பதில் பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் மத்திய அரசின் உறுதிப்பாட்டையும் கருத்தில் கொண்டு, டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய மத்திய சுரங்கத் துறை அமைச்சகம் அறிவிப்பு.

* பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை: சட்டத்திருத்த மசோதாவுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல்.

* தேசிய சுகாதார திட்டத்தை மேலும் 5 ஆண்டுகள் தொடரவும், சணலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தவும் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று ஒப்புதல் அளித்தது.

* உலகப் பொருளாதார மன்ற வருடாந்திர கூட்டம்: ஏஐ சீர்திருத்தங்களுக்கு நாடுகளின் தலைவர்கள் அழைப்பு.

* ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி: அரினா சபலென்கா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்.

* இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி: லட்சயா சென் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்.

Today's Headlines

* Chief Minister Stalin released a research report that found that the use of iron in Tamil Nadu dates back 4,200 years in the Mayiladumbarai excavations

* Considering the importance of the biodiversity heritage site and the commitment of the Central Government under the leadership of Prime Minister Modi to protect traditional rights, the Union Ministry of Mines announced the cancellation of the tungsten mining auction.

* Strict punishment for sexual offences: Governor Ravi approves the amendment bill.

* The Union Cabinet meeting yesterday approved the continuation of the National Health Scheme for another 5 years and an increase in the minimum support price for jute.

* World Economic Forum Annual Meeting: Leaders call for AI reforms.

* Australian Open Tennis Tournament: Aryna Sabalenka advances to the final.

* Indonesia Masters Badminton Tournament: Lakshya Sen wins and advances to the next round.

Covai women ICT_போதிமரம்

Wednesday, January 22, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 23.01.2025

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

     






திருக்குறள்: 

பால்: பொருட்பால்

 அதிகாரம்: குடிமை 

குறள் எண்:953

நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
 வகைஎன்ப வாய்மைக் குடிக்கு.

பொருள்: முகமலர்ச்சி, கொடைத்தன்மை, இனியசொல், பிறரை இகழாமை, இந்நான்கும் நல்குடியின் இயல்புகள்.

பழமொழி :

சிறியோர் எல்லாம் சிறியர் அல்ல. 

All that are little are not inferiors.

இரண்டொழுக்க பண்புகள் :   

*உலகில் தோன்றிய மூத்த மொழிகளில் ஒன்று தமிழ் மொழி என்பதை அறிவேன். எனவே , எனது தாய் மொழியை சிறப்பாக கற்று தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்ப்பேன்.    

*விளையாட்டு உடலுக்கு வலிமை சேர்க்கும் .எனவே, செல்பேசியில் மூழ்காமல் ஏதாவது ஒரு  விளையாட்டிலாவது எனது திறமையை வெளிப்படுத்துவேன்.

பொன்மொழி :

எண்ணத்தைக் கொண்டே செயல்கள் தீர்மானிக்கப்படும் -நபிகள் நாயகம்

பொது அறிவு : 

1. Vermiculture என்பது

விடை: மண்புழு வளர்த்தல்.          

2.தேநீரில் அடங்கியுள்ள கரிம அமிலம் எது?

விடை :  டானிக் அமிலம்

English words & meanings :

 Poet.    -     கவிஞர்
 
Singer.   -        பாடகர்

வேளாண்மையும் வாழ்வும் : 

 வரலாறு நெடுகிலும், தண்ணீரைச் சேகரித்து, சேமித்து / இருப்புவைத்துக் கொள்ளும் தன்னுடைய திறனை மனிதன் வளர்த்துக்கொண்டுள்ளான்

ஜனவரி 23

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்நாள்



நேதாஜி (தலைவர்) என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் (Subhash Chandra Bose, சனவரி 23, 1897– இறந்ததாகக் கருதப்படும் நாள் ஆகத்து 18, 1945) இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவராவார். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது, வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி, இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி, அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர். காங்கிரஸ் சனநாயகக் கட்சியின் "பார்வர்ட்" எனும் ஆங்கில இதழில், ஆசிரியரான நேதாஜி, உணர்ச்சி ததும்பும் பல கட்டுரைகளை எழுதினார்.  இந்திய தேசிய ராணுவம் நெருக்கடியான நிலையில் இருந்த போது, ஆகத்து 15, 1945ல் அவர் இறுதியாக அறிக்கை வெளியிட்டார்.அதன்படி இந்தியா

நீதிக்கதை

 வல்லவர் யார்?



தரையில் எறும்பு மெல்ல ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. அப்போது பூரான் அதன் அருகே வந்தது.


"நண்பா! நான் வருவதைக் கூடக் கவனிக்காமல் எங்கே சென்று கொண்டிருக்கிறாய்?" என்று எறும்பிடம் கேட்டது.


எறும்பு "பூரான் நண்பா! உன்னைக் கவனித்துக் கொண்டிருந்தால் என் கடமையை நான் சரிவரச் செய்ய முடியாதே" என்று ஊர்ந்து கொண்டே சொன்னது.


"அப்படியென்ன முக்கியமான கடமை?" என்று பூரான் கேட்டது.


எறும்பும் ஊர்வதை நிறுத்தாமல்"மழைக்காலத்திற்குத் தேவையான உணவை வெயில் காலத்திலேயே தேடிச் சேர்த்து வைப்பது என் கடமை. உன்னிடம் பேசிக் கொண்டிருந்தால் என் கடமையைச் செய்ய முடியாது" என்று கூறிச் சென்று விட்டது.


பூரான், எறும்பு தன்னை ஏமாற்றி விட்டதாகக் கருதியது. எறும்பை மட்டம் தட்டியே தீர வேண்டும் என்று நினைத்துக் கொண்டது.


அடுத்த நாள் எறும்பு வரும் வழியில் நின்று அதை வழி மறித்தது. "எறும்பே, கடமையை சரிவரச் செய்வதால் மட்டும் நீ வல்லவனாக முடியாது!. உன்னால் என்னைப் போல வேகமாக ஊர்ந்து வர முடியுமா? அப்படி வந்தால் நீ என்னை விட வல்லவன் என்று ஒத்துக் கொள்கிறேன்" என்று கேட்டது.


அதற்கு எறும்பு "வீண் பேச்சு வேண்டாமே. நான் என் கடமைச் செய்ய விடேன்" என்று பணிவாகக் கேட்டது.


பூரான் "தப்பித்து ஓடப் பார்க்காதே!" என்று கேலி செய்தது.


அதற்கு எறும்பு மிக அமைதியுடன்"பூரானே. உன் அளவுக்கு வேகமாக என்னால் ஊர முடியாது.அந்த தைரியத்தில் நீ பேசுகிறாய்ஆனால், நான் செய்யும் சில காரியங்களை உன்னாலும் செய்ய முடியாது. அதனால் யார் வலியவன் என்ற பரிட்சைஎல்லாம் வேண்டாம்" என்று திரும்பவும் கூறியது.


பூரானோ "அப்படி என்ன சாகசத்தை நீ செய்து விடப்  போகிறாய். சாதூரியமாகப் பேச மட்டும் கற்று  வைத்திருக்கிறாய்" என்று கூறியது.


எறும்பு பூரானை பதில் பேசாமல் ஒரு தண்ணீர் தொட்டியின் அருகில் அழைத்துச் சென்றது. பூரானை வேடிக்கை பார்க்கச் சொல்லி விட்டு கரையின் அருகில் இருந்த ஒரு துரும்பில் தொற்றிக்கொண்டு தண்ணீரில் விழுந்து அந்த துரும்பைப் பற்றிக் கொண்டு தண்ணீரில் மிதந்தது.


பூரானைப் பார்த்து "உன்னால் இப்படிச் செய்து காட்ட முடியுமா?" என்று கேட்டது.


பூரானுக்கு அப்போதுதான் எல்லோருக்கும் சில வல்லமைகளும் சில இயலாமைகளும் இயற்கையிலேயே உண்டுஎன்று புரிந்தது. எறும்பிடம் மன்னிப்புக் கேட்டது.


அன்றிலிருந்து பூரான் எறும்பின் கருத்துகளை மதித்து நடந்து அதற்குச் சிறந்த நண்பனாகத் திகழ்ந்து வந்தது.

இன்றைய செய்திகள்

23.01.2025

* வானில் ஒரே நேரத்தில் 6 கோள்கள் அணிவகுக்கும் அரிய நிகழ்வை வெறும் கண்களால் பார்க்கலாம். இதற்காக சென்னை பிர்லா கோளரங்கத்தில் ஜனவரி 22- முதல் 25-ம் தேதி வரை சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

* ஆன்லைன் வாயிலாக பதிவுக்கு வரும் பத்திரங்களை உரிய காரணம் இல்லாமல் திருப்பியனுப்பக் கூடாது என்று சார்பதிவாளர்களுக்கு பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவுறுத்தியுள்ளார்.

* டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக விமான சேவை பாதிப்பு.

* ரஷ்ய அதிபர் புதின் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என்றால் ரஷ்யா மீது பொருளாதார தடை - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிரடி.


* ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர்: போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் அரையிறுதிக்கு முன்னேற்றம்.

* ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்: சென்னை - மோகன் பகான் ஆட்டம் 'டிரா'.

Today's Headlines

* A rare event where 6 planets line up in the sky at the same time can be seen with the naked eye. Special arrangements have been made at the Birla Planetarium in Chennai from January 22 to 25 for this.

* Dinesh Ponraj Oliver, Head of the Registration Department, has advised the sub-registrars not to return the documents received for registration online without proper reason.

* Air services affected due to heavy fog in Delhi.

* If Russian President Putin does not come for talks, economic sanctions on Russia - US President Trump takes action.

* Australian Open Tennis Series: Polish player Ika Swiatek advances to the semi-finals.

* ISL. Football Series: Chennai - Mohun Bagan match 'draw'.

Covai women ICT_போதிமரம்

Tuesday, January 21, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 22.01.2025

 

அம்மோனியம் நைட்ரேட்

   






திருக்குறள்: 

பால்: பொருட்பால்

அதிகாரம்: குடிமை

குறள் எண்:952

ஒழுக்கமும் வாய்மையும் காணும்இம் மூன்றும்
 இழுக்கார் குடிப்பிறந் தார்.

பொருள்:
உயர்குடி பிறந்தார், ஒழுக்கம், உண்மை, மானத்திற்கு அஞ்சுதல் ஆகியவற்றில் நிலை தவற மாட்டார்கள்.

பழமொழி :

சிங்கத்துக்கு பங்கம் இல்லை.   

A lion knows no danger.

இரண்டொழுக்க பண்புகள் :   

*உலகில் தோன்றிய மூத்த மொழிகளில் ஒன்று தமிழ் மொழி என்பதை அறிவேன். எனவே , எனது தாய் மொழியை சிறப்பாக கற்று தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்ப்பேன்.    

*விளையாட்டு உடலுக்கு வலிமை சேர்க்கும் .எனவே, செல்பேசியில் மூழ்காமல் ஏதாவது ஒரு  விளையாட்டிலாவது எனது திறமையை வெளிப்படுத்துவேன்.

பொன்மொழி :

எவ்வளவு அலட்சியப்படுத்தப்பட்டாலும், அவமானங்களுக்கு ஆளாக்கப்பட்டாலும் ,எடுத்த காரியத்தை முடித்தே தீருவது என்ற திடமான கொள்கையும் விடாமுயற்சியும் இருந்தால் வெற்றி கிடைத்தே தீரும் ---அறிஞர் அண்ணா

பொது அறிவு : 

1. சர்க்கரை உற்பத்தியில் முதலாவதாக உள்ள மாநிலம்

விடை:உத்திரப்பிரதேசம்.   

 2 நைட்ரஜனை எளிதில் வழங்கும் ஒரு சிறந்த உரம் எது?

விடை: அம்மோனியம் நைட்ரேட்

English words & meanings :

 Play.    -    நாடகம்

 Poem.      -    கவிதை

வேளாண்மையும் வாழ்வும் : 

 ஆசியாவில் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் தொழில்மயமாதல் காரண மாக நகர்களின் எல்லை விரிவடைவதால் விளைநிலங்கள் இழக்கப்படுகின்றன, நீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.

நீதிக்கதை

 கை மேல் பலன் கிடைத்தது !

அரசன் ஒருவர்  சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவர். அரண்மணை சோதிடர் இந்த நம்பிக்கையை வைத்து தினமும் ஏதாவது ஒரு சகுனம் நல்லது என்று கூறி தனது புகழை நிலைநாட்டுவார். 


ஒரு நாள் இப்படித்தான்'அரசே, அதிகாலை எழுந்தவுடன் இரண்டு காக்கைகளை ஒன்றாகப் பார்த்தால் நாள் சிறக்கும்' என்று நம்பிக்கை ஊட்டினார்.


மன்னன் சேவகனை அழைத்தான்காலையில் எங்காவது இரண்டு காக்கைகள் தென்பட்டால் உடனே தனக்குத் தெரிவிக்க வேண்டும் என்று கட்டளையிட்டார்.


அதன் பின் தினமும் பொழுது விடியும் முன்பே சேவகன் தெருவில் அலையத் தொடங்கி விடுவான்.


ஒரு நாள் அரண்மனக்குப் பக்கத்துத் தெருவில் இரண்டு காக்கைகள் ஒன்றாக அமர்ந்திருப்பதைக் கண்டான். "அடடா! நல்ல சகுனம், இன்று மன்னர் நமக்கு நிச்சயம் பதவி உயர்வு கொடுப்பார் என்று மகிழ்ச்சி மிகுதியுடன் மூச்சிரைக்க ஓடி வந்து மன்னரிடம் விபரம் சொன்னான்.


இதைக் கேட்டு துள்ளி எழுந்த மன்னன் சேவகனுடன் அந்த இடத்திற்கு சென்றார். 


அதற்குள் ஒரு காக்காய் 'வாக்கிங்' போய் விட்டது.மன்னனுக்கு மூக்கின் மேல் கோபம் வந்து விட்டது. தளபதியை அழைத்து'இந்தப் பொறுப்பற்ற சேவகனுக்குப் பத்து கசையடி கொடு' என்று உத்தரவிட்டான்.


சேவகன் சிரிக்க ஆரம்பித்து விட்டான்.'இடுக்கண் வருங்கால் நகுக' என்று படித்துப் புரிந்து வைத்திருந்தவன் போலும். 

மன்னனுக்கு ஆத்திரம் இன்னமும் அதிகமானது.'நீ சிரித்ததற்கு சரியான காரணம் சொல்லாவிட்டால் இன்னமும் பத்து கசையடி' என்று உறுமினார்.


சேவகன் சொன்னான். 'மகா மன்னரே. இன்று நான்மட்டும்தான் அதிகாலையில் இரட்டைக் காக்கைகளைப் பார்த்தேன். கை மேல் பலன்கிடைத்து விட்டது அல்லவா?'என்றான்.


மன்னருக்கு சுருக்கென்று ஏதோ உரைத்தது. தனது தவற்றை புரிந்து கொண்டார்.சேவகனை பாராட்டி அனுப்பினார்.

இன்றைய செய்திகள்

22.01.2025

* சிறு தொழில்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட தாழ்வழுத்த மின்இணைப்புகளில் உச்சநேர மின்பயன்பாட்டைக் கணக்கெடுக்க டிஓடி மீட்டர் பொருத்தும்படி, பொறியாளர்களுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

* சங்க இலக்கியங்கள் உள்பட 1 லட்சம் புத்தகங்கள் அடங்கிய தமிழ் டிஜிட்டல் மின்னூலகத்தை 12 கோடி பேர் பார்வையிட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

* விருதுநகர் அருகே வெம்பக்கோட்டை 3ம் கட்ட அகழாய்வில் சுடுமண் குடுவை, சுடுமண் முத்திரை, சங்கு வளையல் போன்றவை கண்டெடுப்பு. இதுவரை 3,210 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுப்பு.

* இந்த நிதியாண்டில் ராணுவத்துக்கு ரூ.10,200 கோடிக்கு பினாகா வகை ராக்கெட்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளதாக ராணுவ தளபதி தகவல்.

* உலக சுகாதார நிறுவனம் மற்றும் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவது உள்ளிட்ட பல அதிரடி உத்தரவுகளை அந்நாட்டு அதிபராக பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப் பிறப்பித்துள்ளார்.

* இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி: இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி 2வது சுற்றுக்கு முன்னேற்றம்.

* ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறினார் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா.

Today's Headlines

* The Electricity Board has ordered engineers to install DoD meters to measure peak-time electricity consumption in low-voltage power connections, including small businesses and educational institutions.

* Information Technology Minister Palanivel Thiagarajan has said that 12 crore people have visited the Tamil digital library, which contains 1 lakh books, including Sangam literature.

* A clay jar, a clay seal, a conch bracelet, etc. were found in the 3rd phase of excavation at Vembakottai near Virudhunagar. 3,210 items have been found so far.

* The Army Commander informed that Pinaka-type rockets will be purchased for the army for Rs. 10,200 crore this financial year.

* Donald Trump, who took office as the country's president, has issued several drastic orders, including the US's withdrawal from the World Health Organization and the Paris Climate Agreement.

* Indonesia Masters badminton tournament: India's Satwik-Chirag pair advance to 2nd round.

* Belarusian Aryna Sabalenka advances to semifinals at Australian Open.

Covai women ICT_போதிமரம்

Monday, January 20, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 21.01.2025


Snow White and seven dwarfs(1937)

  






திருக்குறள்: 

பால் :பொருட்பால்

அதிகாரம்: குடிமை

குறள் எண்:951

இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்
செப்பமும் நானும் ஒருங்கு.

பொருள்: நல்குடியில் பிறந்தாரன்றி மற்றவரிடம் ஒழுக்கமும், பாவங்களுக்கு அஞ்சும் நாணமும் இயல்பாக அமைவதில்லை.

பழமொழி :

சாது மிரண்டால் காடு இடம் கொள்ளாது. 

  When the meek are enraged, even a forest will not hold their wrath.

இரண்டொழுக்க பண்புகள் :   

*உலகில் தோன்றிய மூத்த மொழிகளில் ஒன்று தமிழ் மொழி என்பதை அறிவேன். எனவே , எனது தாய் மொழியை சிறப்பாக கற்று தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்ப்பேன்.    

*விளையாட்டு உடலுக்கு வலிமை சேர்க்கும் .எனவே, செல்பேசியில் மூழ்காமல் ஏதாவது ஒரு  விளையாட்டிலாவது எனது திறமையை வெளிப்படுத்துவேன்.

பொன்மொழி :

கல்வி அறிவும், சுயமரியாதையும், பகுத்தறிவுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும் ---தந்தை பெரியார்

பொது அறிவு : 

1. முதன்முதலில் வெளிவந்த கார்ட்டூன் படம் இது?

Snow White and seven dwarfs(1937)

2. கோள்களின் இயக்கத்தை கண்டுபிடித்தவர் யார்?

 கெப்ளர்

English words & meanings :

 Movie    -      திரைப்படம்
 
 Music     -      இசை

வேளாண்மையும் வாழ்வும் : 

 பசுமைப் புரட்சிக் காலத்தில் உணவு உற்பத்தியின் பிரமாண்டமான வளர்ச்சியில் மிக முக்கியமான காரணியாக பாசன வசதிகளின் விரிவாக்கம் இருந்தது.

நீதிக்கதை

 குறையா நிறையா?


ஒரு ஏழை ஒரு கிராமத்தில் வாழ்ந்து வந்தான். அவன் தன் வீட்டுத் தேவைக்காகத் தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.


தண்ணீர் எடுத்து வர அவன் இரண்டு பானைகளை வைத்திருந்தான். அந்தப் பானைகளை ஒரு நீளமான கழியின் இரண்டு முனைகளிலும் தொங்க விட்டு, கழியைத் தோளில் சுமந்து செல்வான்.


இரண்டு பானைகளில் ஒன்றில் சிறிய ஓட்டை இருந்தது. அதனால் ஒவ்வொரு  நாளும் வீட்டிற்கு வரும் பொழுது, குறையுள்ள பானையில் பாதியளவு நீரே இருக்கும்.


குறையில்லாத பானைக்குத் தன் திறன் பற்றி பெருமை. குறையுள்ள பானையைப் பார்த்து எப்பொழுதும் அதன் குறையைக் கிண்டலும் கேலியும் செய்து கொண்டே இருக்கும்.


இப்படியே இரண்டு வருடங்கள் கழிந்து விட்டன. கேலி பொறுக்க முடியாத பானை அதன் எஜமானனைப் பார்த்துப் பின் வருமாறு கேட்டது.


"ஐயா! என் குறையை நினைத்து நான் மிகவும் கேவலமாக உணர்கிறேன். உங்களுக்கும் தினமும் என் குறையால், வரும் வழியெல்லாம் தண்ணீர் சிந்தி, உங்கள் வேலைப் பளு மிகவும் அதிகரிக்கிறது. என் குறையை நீங்கள் தயவு கூர்ந்து சரி செய்யுங்களேன்"


அதன் எஜமானன் கூறினான்.


"பானையே!நாம் வரும் பாதையில், உன் பக்கம் இருக்கும் அழகான பூச்செடிகள் வரிசையை கவனித்தாயா? உன்னிடமிருந்து தண்ணீர் சிந்துவது எனக்குமுன்னமே தெரியும். அதனால் தான் வழி நெடுக பூச்செடி விதைகளை விதைத்து வைத்தேன். அவை நீ தினமும் சிந்திய தண்ணீரில் இன்று பெரிதாக வளர்ந்து எனக்கு தினமும் அழகான பூக்களை அளிக்கின்றன. அவற்றை வைத்து நான் வீட்டை அலங்கரிக்கிறேன். மீதமுள்ள பூக்களை விற்றுப் பணம் சம்பாதிக்கிறேன்"


இதைக் கேட்ட பானை கேவலமாக உணர்வதை நிறுத்தி விட்டது. அடுத்தவர் பேச்சைப் பற்றிக்கவலைப்படாமல் தன் வேலையைக் கருத்துடன் செய்யத் தொடங்கியது.

இன்றைய செய்திகள்

21.01.2025

* புதிய பாம்பன் ரயில் பாலப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், 111 ஆண்டுகள் பழமையான பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தை கடலிருந்து அகற்ற ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

* தமிழக அரசின் மொழிப்பெயர்ப்பு மானியத் திட்டத்தின் கீழ் 136 தமிழ் நூல்கள் பிற மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டு வருவதாக பாடநூல் கழகம் தகவல் தெரிவித்துள்ளது.

* ஆயுர்வேத, ஹோமியோபதி மருத்துவர்கள் ஆங்கில மருந்துகளை பரிந்துரை செய்வது ஆபத்தானது என்று ஐஎம்ஏ புதிய தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

* மக்களின் நம்பிக்கையை பெற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா ஓர் இடம் பின்னடவைக் கண்டு 3-வது இடத்தை பிடித்துள்ளது.

* ஹாக்கி இந்தியா லீக் போட்டி: டெல்லி அணியை வீழ்த்தி கலிங்கா லான்சர்ஸ் வெற்றி.

* கோ கோ உலக கோப்பை போட்டி: ஆடவர், மகளிர் என 2 பிரிவுகளிலும் சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா.

Today's Headlines

🌸With the completion of the new Pampan railway bridge, the railway administration has decided to remove the 111-year-old Pampan railway suspension bridge from the sea.

🌸According to the Tamil Nadu government's translation subsidy scheme, 136 Tamil books are being translated into other languages.

🌸IMA's new president has warned that Ayurvedic and homeopathic doctors prescribing English medicines is dangerous.

🌸In the list of countries that have gained people's trust, India has fallen one place and is ranked 3rd.

🌸Hockey India League: Kalinga Lancers beat Delhi

🌸Kho Kho World Cup: India won the champion title in both men's and women's categories.

Covai women ICT_போதிமரம்