Tuesday, September 10, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 11.09.2024

 

மகாகவி சுப்பிரமணிய பாரதியார்

  




திருக்குறள்: 

பால் :பொருட்பால்

அதிகாரம்: நட்பு

குறள் எண்:782

நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்நீர பேதையார் நட்பு.

பொருள்: அறிவுடையவரின் நட்பு பிறை நிறைந்துவருதல் போன்ற தன்மையுடையன; அறிவில்லாதவரின் நட்பு முழுமதி தேய்ந்து பின் செல்லுதல் போன்ற தன்மையுடையன.

பழமொழி :

Eagles don't catch flies.

 புலி பசித்தாலும் புலலைத் தின்னாது

இரண்டொழுக்க பண்புகள் :  

 1. வார்த்தையால் பேசுவதை விட வாழ்ந்து காட்டுவதே சிறப்பு எனவே சிறப்பான வாழ்க்கை வாழ முயற்சிப்பேன் 

2. எல்லோருக்கும் உதவி செய்வது உன்னதமான வாழ்க்கை எனவே என்னால் இயன்ற அளவு உதவி செய்வேன்.

பொன்மொழி :

தன்னைத்தானே அறிவதற்குச் சிறந்த வழி
தியானம் செய்வது அல்ல;
செயல்தான்.
உங்கள் கடமையை முழு ஈடுபாட்டுடன் முடியுங்கள்;
உங்களின் தகுதியும் தரமும் என்ன என்பதை
நீங்களே கண்டுபிடித்து விடுவீர்கள்.

- கதே

பொது அறிவு : 

1) 24 மணி நேரத்தில் 3 அடி உயரம் வரை வளரக் கூடிய தாவரம் எது?

விடை: மூங்கில்


2. பொதுமக்களுக்கு தேவையான தகவல்களை வழங்கும் நாட்டுப்புறக் கலை

விடை: வில்லுப்பாட்டு

English words & meanings :

 worship-வழிபாடு,

  worth-மதிப்பு

வேளாண்மையும் வாழ்வும் : 

கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்

மாறாநீர் வையக்கு அணி.

(குறள் 701).வள்ளுவர் ‘மாறாநீர்’ எனக் குறிப்பிடுவது நீரின் அளவைத்தான் 

செப்டம்பர் 11

மகாகவி பாரதியின் நினைவுநாள்

சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, திசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921) கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர்.

பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீன தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.தமிழ்தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். எட்டப்ப நாயக்கர் மன்னர் இவருடைய கவித்திறனை மெச்சி, கலைமகள் எனப் பாெருள்படும் பாரதி என்ற பட்டம் வழங்கினார்.பாரதியாரின் நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949-ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமை ஆக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும். இவரை சிந்துக்குத் தந்தைசெந்தமிழ்த் தேனீபுதிய அறம் பாட வந்த அறிஞர்மறம் பாட வந்த மறவன் என்றெல்லாம் பாரதிதாசன் இவரைப் புகழ்ந்துள்ளார். இவர் இந்தியாவிஜயா முதலான இதழ்களை நடத்தி, விடுதலைப் போருக்கு வித்திட்டவர்.


2001 – செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள்நியூயார்க் நகரின் உலக வர்த்தக மையம் மற்றும் பெண்டகன் மீது அல் காயிதா தீவிரவாதிகளினால் நடத்தப்பட்ட வான் தாக்குதல்களில் மொத்தம் 2,974 பேர் கொல்லப்பட்டனர்

நீதிக்கதை

Story 

ஒரு பெரிய கோதுமை தோட்டம் ஒன்று இருந்தது. அங்கு விவசாயி ஒருவன் ஒவ்வொரு வருடமும் கோதுமை சாகுபடி செய்து கொண்டிருந்தான். சாகுபடி செய்யும் இடங்களில் பொதுவாகவே பூச்சிகள், குருவிகள் நிறையவே நீங்கள் பார்க்கலாம். அந்த தோட்டத்தில் கோதுமை அறுவடை நாட்கள் நெருங்க ஆரம்பித்தன.அறுவடை தொடங்கிய நாளில் இருந்து எறும்புகள் தங்கள் கூட்டத்துடன் வந்து கோதுமைகளை எடுத்து சென்றன. தோட்டத்தில் ஒரு வெட்டுக்கிளி படுத்துக்கொண்டு பாட்டு பாடி கொண்டே இருந்தது. அதுமட்டுமில்லாமல் அங்கு கூட்டமாக சென்று கொண்டிருந்த எறும்புகளை கேலி செய்தது.அந்த கூட்டத்தை பார்த்து கேலி செய்து பாட்டு பாடியது வெட்டுக்கிளி. ஆனால் அதை காதில் வாங்கி கொள்ளாமல் கோதுமையை தூக்கி கொண்டு நடந்து சென்றன. ஆனாலும் விடாமல் தினமும் எறும்பு கூட்டத்தை வம்பிழுத்து கொண்டே இருந்தது வெட்டுக்கிளி.இப்படி தினமும் எடுத்துட்டு போய் என்ன செய்ய போறீங்க லூசுகளா என வெட்டுக்கிளி கேட்க, அதற்கு பதில் எதுவும் சொல்லாமல் வரிசையாக சென்றன. அறுவடை நாளும் முடிந்தது. வெட்டுக்கிளி அன்றாடம் தோட்டத்தில் இருந்து கோதுமையை சாப்பிட்ட நிலையில் தோட்டம் எதுவும் இல்லாமல் வெறிசோடியது.வெயில்காலம் முடிந்து மழைக்காலம் தொடங்க ஆரம்பித்தது. எறும்புகளால் வெளியில் இறங்கி உணவை தேடி செல்ல முடியாததால் சேர்த்து வைத்த உணவை எடுத்து உண்டன. அதே சமயம் வெட்டுக்கிளியால் உணவை தேடி செல்ல முடியவில்லை. சேமிக்க வேண்டிய நேரத்தில் எறும்புகளை கேலி செய்து பாட்டு பாடி வம்பிழுத்த வெட்டுக்கிளியால் இரையை தேடி மழையில் செல்ல முடியாமல் அவதிப்பட்டது.

தங்கள் கூட்டத்தையே கேலி செய்திருந்தாலும் எறும்பு வெட்டுக்கிளி படும் கஷ்டத்தை பார்த்து பரிதாபம் கொண்டன. தாங்கள் சேமித்து வைத்த உணவில் இருந்து வெட்டுக்கிளிக்கு உணவை பகிர்ந்து கொண்டன. மழைக்காலம் முடியும் வரை வெட்டுக்கிளியையும் தங்களில் ஒருவராக பார்த்து கொண்டன. 

நீதி: சோம்பலின் அப்பம் அழிவைத் தந்து விடும்

நன்மக்கள் தங்களை எள்ளி நகையாடும் மக்களுக்கும் நன்மையே செய்வர். 

இன்றைய செய்திகள்

11.09.2024

* 3D பிரிண்டில் பஸ்ஸ்டாப்! - அசத்தும் சென்னை மாநகராட்சி!

* சிறுவர்கள் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை விதிக்கிறது ஆஸ்திரேலியா! 16 வயதுக்கு உட்பட்டோர் Facebook, tik tok, Instagram போன்ற சமூக வலைத் தளங்களை பயன்படுத்த தடை விதிக்க முடிவு.

* காஞ்சிபுரத்தில் உள்ள தனது தொழிற்சாலையை ₹666 கோடியில் விரிவாக்கம் செய்கிறது Rockwell Automation நிறுவனம்!

* நாகர்கோவில்: கன்னியாகுமரி அருகே இன்று கடல் சீற்றத்தால் 4-வது படகையும் மீனவர்களுடன் கடல் அலை இழுத்துச் சென்றது.

* கோவையில் கலைஞர் நூலகம் மற்றும் அறிவியல் மையம். கட்டுமான பணிகளுக்கான டெண்டர் வெளியீடு.

* உலக பிரசித்திப் பெற்ற ஆப்பிள் அலைபேசி நிறுவனம் தனது i16 அலைபேசியை சென்னையில் தயாரிக்கிறது.

* புனித ஹஜ் பயணிகள், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் கடைசி தேதியினை 23.09.2024 (செப்டம்பர் 23ஆம் தேதி) வரை நீட்டித்துள்ளது இந்திய ஹஜ் குழு.

* பாரா ஒலிம்பிக்ஸ் விளையாட்டு போட்டிகளில் தங்கம் வென்றோருக்கு ₹75 லட்சம், வெள்ளி வென்றோருக்கு ₹50 லட்சம், வெண்கலம் வென்றோருக்கு ₹25 லட்சம் பரிசாக அறிவித்துள்ளது மத்திய அரசு.

Today's Headlines

* 3D Print Bus stop! -stunning work by Chennai Corporation! * Australia bans children from using social networking sites! The Australian government decided  to ban the use of social networking sites such as Facebook, tik tok, Instagram by those under 16 years of age. 

*  Rockwell Automation expands its factory in Kanchipuram at a cost of ₹666 crore! 

*  Nagercoil: Near Kanyakumari today due to the rough sea,  the 4th boat was also swept away by the tide along with the fishermen. 

* Artist Library and Science Center in Coimbatore. Issue of tender for construction works. 

*  The world famous Apple mobile phone company manufactures its i16 mobile phone in Chennai. 

* The Haj Committee of India has extended the last date for online application of Haj pilgrims till 23.09.2024 (September 23). 

* In Para Olympics the central government has announced a prize of ₹75 lakh for gold winners, ₹50 lakh for silver winners and ₹25 lakh for bronze winners.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Monday, September 9, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.09.2024

 

ஐவகை நிலங்கள்


 




திருக்குறள்: 

பால் :பொருட்பால்

அதிகாரம்: நட்பு

குறள் எண்:781

செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு

பொருள்: நட்பைப் போல் செய்து கொள்வதற்கு அருமையானவை எவை உள்ளன? அதுபோல் தொழிலுக்கு அரிய காவலாக இருப்பவை எவை உள்ளன?

பழமொழி :

An old man's sayings are seldom untrue.

மூத்தோர் சொல் பொய்ப்பது அரிது.

இரண்டொழுக்க பண்புகள் :  

 1. வார்த்தையால் பேசுவதை விட வாழ்ந்து காட்டுவதே சிறப்பு எனவே சிறப்பான வாழ்க்கை வாழ முயற்சிப்பேன் 

2. எல்லோருக்கும் உதவி செய்வது உன்னதமான வாழ்க்கை எனவே என்னால் இயன்ற அளவு உதவி செய்வேன்.

பொன்மொழி :

பிறக்கும் போது உன்னோடு இல்லாத பெயர், நீ இறக்கும் போது உன்னோடு தான் இருக்கும் . அதை உன் சாவிற்கு கொடுக்காமல் சரித்திரத்திற்கு கொடு"----ஹிட்லர்

பொது அறிவு : 

1. சோழ நாடு உள்ளடக்கிய முதன்மை பகுதிகள் எவை?

விடை: திருச்சி, தஞ்சாவூர் 

2. சங்க காலத்தில் நிலம் எத்தனை வகைகளாக இருந்தது?

விடை: 5

English words & meanings :

shame-அவமானம்,,

envy-பொறாமை 

வேளாண்மையும் வாழ்வும் : 

இந்த உலகம் தோன்றியபோது எவ்வளவு நீர் இருந்ததோ அதில் ஒரு துளிக்கூடக் குறையவும் இல்லை கூடவும் இல்லை என்பதை நாம் ஏற்கனவே அறிந்தோம். அதாவது உலகில் இதுவரையுள்ள நீர், நிலையானது, அளவு மாறாதது என்கிறார்.

நீதிக்கதை

 திருடர்களை ஏற்றமிறைக்க வைத்த தெனாலிராமன்

தெனாலிராமனின் வீட்டைச் சுற்றியிருந்த ஒரு பெரிய தோட்டம் கோடை காலத்தில் வறட்சி கண்டிருந்தது. தோட்டத்திலிருந்த ஆழமான கிணற்றில் இருந்து தண்ணீர் இறைப்பது தெனாலிராமனுக்குச் சிரமமாகவும், அதிக செலவை உண்டாக்கக் கூடியதாகவும் தோன்றியது. 

 நள்ளிரவு  ஆறு திருடர்கள் தெனாலி ராமனின் வீட்டில் திருடுவதற்காக கொல்லைப்புற தோட்டத்தில் மறைந்திருந்தார்கள். அதைத் தெனாலிராமன் ஜாடையாகக் கண்டதும்,அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் வீட்டின் உள்ளே போனார்.

தன் மனைவியிடம் “ இந்தப் பஞ்சகாலத்தில் திருடர்கள் நம் வீட்டில் புகுந்து திருட வருவார்கள் ஆதலால் நம் வீட்டிலுள்ள பொன் பொருளையெல்லாம் பழைய பெட்டிகளில் வைத்து நம் தோட்டத்திலுள்ள ஆழமான கிணற்றில் போட்டு வைத்தால் பத்திரமாயிருக்கும்” என்று திருடர்களின் காதில் விழும்படி உரத்த குரலில் கூறிவிட்டு, பெட்டிகளில் கல்லையும் மண்ணையும் அள்ளிப்போட்டு மனைவியும் தானும் சிறு மகனுமாக அப்பெட்டிகளைத் தூக்கிச்சென்று கிணற்றுக்குள் தொப்பென்று போட்டான்.

அவன் வீட்டினுள் போனதும் திருடர்கள் ஆனந்தப்பட்டு பெட்டிகளை எடுப்பதற்காக கிணற்றிலுள்ள ஏற்றத்தில் பொழுது விடியும் வரை தண்ணீரை இறைத்து வெளியே விட்டுக் கொண்டிருந்தார்கள்.

தெனாலிராமன் தந்திரமாகத் தோட்டத்திற்குள் சிறு மண்வெட்டியுடன் ஓசைப்படாமல் வந்து திருடர்கள் இறைக்கும் தண்ணீரையெல்லாம் தோட்டத்திலுள்ள மரங்களுக்குப் பாத்திகளில் செல்லும்படி வெட்டிவிட்டான்.

பொழுது விடிந்து மக்கள் நடமாட்டம் தொடங்கும் நேரத்தில் தெனாலி ராமன் திடீரென்று, “ஐயா! நல்லவர்களே நீங்கள் தண்ணீயிறைத்தது போதும்! மரங்களுக்கெல்லாம் தண்ணீர் பாய்ந்து விட்டது!  பொழுது விடியப் போகிறது 

ஆகையால் பத்திரமாகப்  வீட்டுக்குச் போய்ச் சேருங்கள்!” என்று கூவிச் சிரித்தான். 

அதைக்கேட்ட திருடர்கள் திடுக்கிட்டு, மன்னரிடம் பிடித்து கொடுத்து விடுவாரோ என்று பயந்து ஓடிவிட்டார்கள்.

இன்றைய செய்திகள்

10.09.2024

* தமிழகத்தில் மாவட்டத்துக்கு ஒரு முதியோர் இல்லம் அமைக்கும் பணியை 6 மாதத்தில் தொடங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

* ஐஏஎஸ் பயிற்சி முடித்த அதிகாரிகள் 10 பேருக்கு தமிழகத்தில் பணி: தலைமை செயலர் முருகானந்தம் உத்தரவு.

* சாகித்திய அகாதமி விருது பெற்ற மொழி பெயர்ப்பாளர் பேராசிரியர் கா. செல்லப்பன் மறைவு. முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் இரங்கல்.

* மத்திய அரசின் குடியிருப்பு கல்வி திட்டத்துக்கான ‘சிரஸ்தா’ நுழைவுத் தேர்வு குறித்து பெருமளவில் விளம்பரப்படுத்த வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

* வெள்ளம் பாதித்த பகுதிகளில் வறட்சி; வறட்சி பகுதிகளில் வெள்ளம் என பருவநிலை மாற்றத்தால் இந்தியாவில் தலைகீழ் மாற்றம்: ஐபிஇ குளோபல் மற்றும் எஸ்ரி- இந்தியா என்ற அமைப்பு ஆய்வில் தகவல்.

* அல்ஜீரிய நாட்டின் அதிபராக டெபோன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

* ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் தலைவராக இந்தியாவின் ரந்தீர் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

* ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: ஜப்பானை பந்தாடி 2-வது வெற்றியை பதிவு செய்தது இந்தியா.

* மகளிர் கிரிக்கெட்: மாபெரும் சாதனை பட்டியலில் 3-வது இடம் பிடித்தார் இங்கிலாந்தின் பியூமண்ட்.

Today's Headlines

* The Madurai branch of the High Court has directed the Tamil Nadu government to start the construction of an old age home per district in 6 months. 

* Chief Secretary Muruganandam orders 10 IAS officers to work in Tamil Nadu 

* Sahitya Akademi award winning translator Prof. Chellappan passed away. Chief Minister Mr. M.K. Stalin gave his obituary for him. 

*  The Madurai branch of the High Court has ordered that the  'Chirastha' entrance examination for Central Govt's  residential education program should be widely advertised.

 * Drought in flood affected areas; floods in drought areas:Reversal of climate change in India as per  IPE Global and Esri- India organization's report on study.

* Debon re-elected as Algerian president. 

* India's Randhir Singh has been elected as the President of the Olympic Council of Asia. 

* Asian Champions Cup Hockey: India beat Japan and made its 2nd win.

* Women's Cricket: England's Beaumont ranks 3rd in the massive record list.
 Prepared by

Covai women ICT_போதிமரம்