Sunday, September 8, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.09.2024

 

மா சே துங்

 




திருக்குறள்: 

பால்: பொருட்பால்

அதிகாரம்: இடுக்கண் அழியாமை

குறள் எண்:630

இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகு
ந்தன்
ஒன்னார் விழையும் சிறப்பு.

பொருள் :ஒருவன் துன்பத்தையே தனக்கு இன்பமாக் கருதி்க் கொள்வானானால் அவனுடைய பகைவரும் விரும்பத்தக்க சிறப்பு உண்டாகும்.


பழமொழி :

அரைகுறை படிப்பு ஆபத்தானது. 

A little learning is a dangerous thing.

இரண்டொழுக்க பண்புகள் :  

 1. வார்த்தையால் பேசுவதை விட வாழ்ந்து காட்டுவதே சிறப்பு எனவே சிறப்பான வாழ்க்கை வாழ முயற்சிப்பேன் 

2. எல்லோருக்கும் உதவி செய்வது உன்னதமான வாழ்க்கை எனவே என்னால் இயன்ற அளவு உதவி செய்வேன்.

பொன்மொழி :

முயற்சி செய்யத் துணிபவர்களுக்கு மட்டுமே வெற்றி கிடைக்கும்." – மல்லிகா திரிபாதி

பொது அறிவு : 

1.“ரேபிஸ்” நோய் உண்டாவதற்குக் காரணம்?

விடை: நாய்க்கடி

2. கடற்கரை கோவிலும், குகை கோவிலும் காணப்படும் இடம் எது?

விடை: மாமல்லபுரம் 

English words & meanings :

 gluttony-பெருந்தீனி,
 
  slander-அவதூறு

வேளாண்மையும் வாழ்வும் : 

மழையைப் பற்றித் திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே "மாறாநீர்" என குறிப்பிட்டிருக்கிறார்.

செப்டம்பர் 09

மா சே துங்  அவர்களின் நினைவுநாள்

மா சே துங் (About this soundMao Zedong Mao Zedongடிசம்பர் 261893 – செப்டம்பர் 91976) சீன மார்க்சியக் கொள்கையாளர், போர் வீரர், கவிஞர் மற்றும் ராஜதந்திரி ஆவார். இவர் எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். இளமையில் ஆறு மாத காலம் ராணுவ அனுபவம் பெற்றார். இவர், பல நூற்றாண்டு கால அன்னிய ஆக்கிரமிப்புக்கு பின், இருபதாம் நூற்றாண்டில் சீனாவில் நிகழ்ந்த கம்யூனிசப் புரட்சியையும் அதனைத் தொடர்ந்த உள்நாட்டுப் போரையும் முன்னின்று நடத்தினார். சீன உள்நாட்டுப் போரில், குவோமின்டாங்கை எதிர்த்து சீனப் பொதுவுடமைக் கட்சி வெற்றி கண்டது. இதன் பின், அக்டோபர் 11949 அன்று பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த பெய்ஜிங் தியனெமன் சதுக்கத்தில் இருந்து, சீன மக்கள் குடியரசு நிறுவப்படுவதை மாவ் அறிவித்தார்

நீதிக்கதை

 எருமை மற்றும் குறும்புக்கார குரங்கு 


ஒரு காட்டிற்குள் நிறைய விலங்குகள் ஒன்றாக வசித்து வந்தன. அதில் எருமை ஒன்றும் இருந்தது, அது பார்க்க மிகவும் பெரிதாக இருக்கும். எனவே, அந்த எருமையை பார்த்து மற்ற எல்லா விலங்குகளும் பயப்படும். ஆனால் இந்த எருமை மிகவும் சாதுவானது யாரையும் அது கஷ்டப்படுத்தியதில்லை.


அந்தக் காட்டில் ஒரு குரங்கு மரத்தில் வசித்து வந்தது. அந்தக் குரங்கு இந்த எருமையை எப்போதும் கேலி செய்து கொண்டும், தொந்தரவு செய்து கொண்டும் இருக்கும். இதை ஒரு சிட்டுக்குருவி பார்த்துக்கொண்டு எருமையிடம் கேட்டது,” அது உன்னை இவ்வளவு தொந்தரவு செய்கிறதே நீ அதை பதிலுக்கு எதுவும் செய்யாமல் இப்படி அமைதியாக இருந்தால் மீண்டும் மீண்டும் குரங்கு தன் வேலையை காட்டிக் கொண்டுதான் இருக்கும், எனவே ஏதாவது செய்” என்றது.


ஆனால் அந்த எருமை சொன்னது,”என்னால் யாரையும் கஷ்டப்படுத்த முடியாது அது செய்யும் தவறுக்கு அதுவே ஒரு நாள் வருத்தப்படும்” என்றது. சில நாட்களுக்குப் பிறகு இந்த எருமை மாடு ஒரு இடத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது. அப்போது அதனுடைய சகோதரன் வருவதை கண்டு மிகவும் சந்தோஷமடைந்தது. அந்த இரண்டு சகோதரர்களும் பார்க்க ஒரே மாதிரி தான் இருப்பார்கள்.


அப்போது இந்த எருமை மாடு சொன்னது,” அண்ணா நீ இங்கேயே ஓய்வெடு நான் உனக்கு சாப்பிட ஏதாவது கொண்டு வருகிறேன்” என்று சொல்லிக் கொண்டு சென்றது. அப்போது இந்த குரங்கு அங்கே வந்து  ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த அண்ணன் எருமை மாடை தொந்தரவு செய்ய ஆரம்பித்தது.அண்ணன் எருமைகாரனோ ரொம்பவே கோவக்காரன் தம்பியை போல் சாது ஆனவன் இல்லை.


அந்த குரங்கிற்கோ இது வேற எருமை மாடு என்று தெரியாது. அதன் மேலே ஏறி குதித்து அதன் வாலை பிடித்து இழுத்துக்கொண்டு "நீ ஒரு முட்டாள் உன்னால் என்னை எதுவும் செய்ய முடியாது" என்று சொல்லி சிரித்துக் கொண்டே இருந்தது. அப்போது அந்த எருமைக்கு மிகவும் கோபம் வந்தது. 


எனவே கோவத்தில் அந்த குரங்கிடம் "உனக்கு என்ன தைரியம் இருந்தால் என்னை முட்டாள் என்று கூறுவாய்", என்று கூறிக்கொண்டு தன் வாலை வைத்து அந்த குரங்கை அடித்து, தன் கொம்பால் முட்டியது. அந்தக் குரங்கும் வலியில் துடித்துக் கொண்டே ஓடியது. அப்போதுதான் அது தன் தவறை புரிந்து கொண்டது.


அதன் பிறகு அந்தக் குரங்கு மற்ற விலங்குகளிடம் குறும்பு செய்வதை நிறுத்தியது. அனைவரிடம் அன்பாக பழக ஆரம்பித்தது.

இன்றைய செய்திகள்

09.09.2024

* டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளுக்கு விண்ணப்பம் விநியோகம் - அரசு அறிவிப்பு.

* தமிழகத்தில் உள்ளாட்சித்தேர்தலை நடத்தும் வகையில், வாக்குப்பெட்டிகளை பழுது நீக்கி தயார் நிலையில் வைக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

* வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் - தமிழகத்தில் 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு.

* குரங்கு அம்மை நோய் பாதிப்பு உள்ள நாட்டிலிருந்து சமீபத்தில் இந்தியாவுக்கு வந்த ஒருவருக்கு அந்த நோய்க்கான அறிகுறி இருப்பதாக சந்தேகிக்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

* அமெரிக்காவில் 21-ம் தேதி குவாட் அமைப்பு மாநாடு: பிரதமர் மோடி  பங்கேற்பு.

* பாராஒலிம்பிக்ஸ்போட்டி : 29 பதக்கங்களுடன் தொடரை நிறைவு செய்தது இந்தியா.

* ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி: சீனாவை வீழ்த்தி வெற்றியுடன் போட்டியைத் தொடங்கிய இந்தியா.

* அமெரிக்க ஓபன் டென்னிஸ்: பெலாரசின் அரினா சபலென்கா சாம்பியன் பட்டத்தை வென்றார்.

Today's Headlines

* Application Distribution for Free Coaching Courses for TNPSC, SSC Competitive Exams - Government Notification.

* The State Election Commission has ordered the repair and preparation of the ballot boxes for holding local body elections in Tamil Nadu. 

* Depression over the Bay of Bengal - Chance of moderate rain in Tamil Nadu for 2 days. 

From a country where monkey measles is endemic A person who recently arrived in India is suspected of having disease symptoms, the central health department said. 

* 21st Quad Conference in the USA: PM Modi will attend.

 * Paralympics: India finished the series with 29 medals. 

* Asian Champions Cup Hockey Tournament: India starts the tournament with a win against China. 

* US OpenTennis: Arina Sabalenka of Belarus won the title.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Thursday, September 5, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 06.09.2024

ஜான் டால்ட்டன்

  




திருக்குறள்: 

பால் :பொருட்பால்

அதிகாரம்: இடுக்கண் அழியாமை

குறள் எண்:629

இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன் .

பொருள் :இன்பம் வந்த காலத்தில் அந்த இன்பத்தை விரும்பி்ப் போற்றாதவன், துன்பம் வந்த காலத்தில் அந்த துன்பத்தை அடைவதும் இல்லை.

பழமொழி :

வலுவான உடலில் தெளிவான மனம். 

 A sound mind in a sound body.

இரண்டொழுக்க பண்புகள் :  

 *எனது பள்ளியின் வளர்ச்சிக்கான பணிகளில் எனது பெற்றோர்களும் ஈடுபட வலியுறுத்துவேன்.       

*ஊர் கூடி செய்யும் செயல்கள் அதிக நன்மை பயக்கும் என்பதால் அனைவரோடு சேர்ந்து எங்கள் பள்ளியின் வளர்ச்சிக்கு  பாடுபடுவேன்.

பொன்மொழி :

எதிர்காலம் அவர்களின் கனவுகளின் அழகை நம்புபவர்களுக்கு சொந்தமானது." - எலினோர் ரூஸ்வெல்ட்

பொது அறிவு : 

1. இளைஞர் தினம் யாருடன் தொடர்புடையது?

விடை: விவேகானந்தர்

2. புத்த சமயத்தினர் கொண்டாடும் விழா?

விடை: புத்த பூர்ணிமா

English words & meanings :

 greed-பேராசை,

  vanity-வீண்பெருமை

வேளாண்மையும் வாழ்வும் : 

4-6 மி.மீட்டருக்கு மேல் துளியின்விட்டம் இருக்குமானால் அது கனமழையாகும்.

செப்டம்பர் 06

ஜான் டால்ட்டன் (John Dalton) FRS (/ˈdɔːltən/; 6 September 1766 – 27 July 1844) ஒரு ஆங்கிலேய வேதியலாளரும், இயற்பியலாளரும், வானிலை அறிஞரும் ஆவார். அவர் நவீன அணுக் கோட்பாட்டை முன்வைத்ததற்கும், நிறக்குருடு பற்றிய ஆய்வினாலும், வளிமங்கள், நீர்மங்கள் பற்றிய ஆய்வினாலும் நன்கு அறியப்படுபவர். அணு எடை குறித்த பட்டியலை முதன்முதலில் வெளியிட்டவரும் இவரே.

நீதிக்கதை

 இரண்டு கிளிகள் 


முன்பு ஒரு காலத்தில் ஒரு மரத்தில்  கிளி ஒன்று வசித்து வந்தது. அதற்கு ஒரே போல் இருக்கும் அழகான இரண்டு குஞ்சுகள் இருந்தது. ஒருநாள் தாய் கிளி தன் குஞ்சுகளுக்கு உணவு தேடி சென்ற போது, ஒரு வேடன் அங்கே வந்து அந்த மரத்தில் ஏறி அந்த இரண்டு குஞ்களையும் எடுத்து தன் பைக்குள் போட்டான்.


ஆனால் ஒரு குஞ்சு சாமர்த்தியமாக தப்பித்து விட்டது. அந்த வழியாக வந்த முனிவர் ஒருவர் வேடனிடம் இருந்து தப்பிய குஞ்சை பார்த்து அதை தன் ஆசிரமத்திற்கு எடுத்துச் சென்றார். இவ்வாறு அந்த இரண்டு கிளி குஞ்சுகளுள் ஒன்று  வேடனுடமும், மற்றொன்று முனிவரிடமும் வளர்ந்தது.


ஒரு நாள் அந்த நாட்டினுடைய மன்னர் தன்னுடைய குதிரையில் காட்டுக்கு வந்தார். அங்கே வேடனின் வீடு  இருந்தது. மன்னர் அவன் வீட்டின் அருகே குதிரையில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென்று, “எஜமானே எவனோ ஒருவன் குதிரையில் வந்து கொண்டிருக்கிறான். சீக்கிரம் வில்லை எடுத்து எய்து அவனை கொல்லுங்கள்” என்று ஒரு கூண்டிற்குள் இருந்த கிளி சத்தம் போட்டது. அதைக் கண்ட மன்னர்  திரும்பிக்கூடப் பார்க்காமல் தன்னுடைய குதிரையை ஓட்டி சென்றார். வழியில் ஒரு ஆசிரமம் இருப்பதை பார்த்தார்.


அந்த ஆசிரமத்தில்  தண்ணீர் குடிக்க அவருடைய குதிரையை நிறுத்தினார். ஆசிரமத்திற்கு அருகில் சென்ற போது அங்கேயும் கூண்டுக்குள் ஒரு கிளி இருந்தது. அதை பார்த்ததும் “இங்கேயும் ஒரு முரட்டுத்தனமான கிளி உள்ளது” என்று அவர் எண்ணினார்.


ஆனால் அவர் ஆச்சரியப்படும் விதத்தில் அந்த கிளி பாட தொடங்கியது, “வருக வருக மன்னரே மிக்க மகிழ்ச்சியுடன் உங்களை எங்கள் வீட்டிற்கு வரவேற்கின்றோம்” என்று பாடியது.


 உருவத்தில் அந்த வேடனின் வீட்டில் இருந்த கிளி போல இருந்தாலும். குணத்தில் சாந்தமும், நட்புடனும் இருக்கிறது என்று மன்னர் நினைத்தார்.  


“உன்னைப்போல ஒரு நல்ல குணமுடைய  கிளியை பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். “கொஞ்சம் முன்பு தான் உன்னை போல தோற்றமுள்ள ஒரு முரட்டுத்தனமான கிளியை பார்த்தேன்” என்றார் மன்னர்.

 

“அந்தக் கிளி வேடனிடம் உள்ளதா..?” என்று ஆசிரமத்தில் இருந்த கிளி கேட்டது. “ஆமாம்! ஆனால் அது உனக்கு எப்படி தெரியும்” என்று அரசர் கேட்டார்.


அந்தக் கிளி சொன்னது, “மன்னரே அவன் என்னுடைய சகோதரன் தான். நாங்கள் இருவரும் ஒரு கூட்டில் தான் வசித்து வந்தோம். ஒருநாள் அந்த வேடன் வந்து என்னையும், என் சகோதரனை பிடித்துச் சென்றான். நான் எப்படியோ தப்பித்து விட்டேன். அந்த வேடனுடைய கெட்ட குணம் தான் என்னுடைய சகோதரனுக்கு வந்துள்ளது. ஆனால் என்னுடைய எஜமானரோ ரொம்பவே நல்லவர் அவருடைய நற்குணம் தான் எனக்கு கிடைத்துள்ளது” என்றது அந்த கிளி. அதைக் கேட்டு மன்னர் மிகவும் ஆச்சரியமுற்றார்.


நீதி: வளரும் சூழ்நிலைக்கு ஏற்ப குணங்கள் மாறுபடும்.

இன்றைய செய்திகள்

06.09.2024

* ஆந்திராவில் வெள்ளம் உள்துறை கூடுதல் செயலாளர் திரு. சிவகுமார் ஜிண்டால் தலைமையிலான மத்தியக் குழு ஆய்வு.

* சுனிதா வில்லியம்ஸையும், புட்ச் வில்மோரையும் மீண்டும் பூமிக்கு அழைத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. எனவே அவர்கள் இன்றி நாளை பூமிக்கு திரும்புகிறது ஸ்டார்லைனர். இது மெக்ஸிகோவில் உள்ள ஒயிட் சாண்ட்ஸ் விண்வெளி துறைமுகத்தில் தரையிறங்கும்.

* முதல் திருவள்ளுவர் சர்வதேச கலாச்சார மையம்.. செமி கண்டக்டர் துறைகளில் முக்கிய ஒப்பந்தம்.. சிங்கப்பூர் அரசுடன் பிரதமர் மோடி கையெழுத்து.

* பாரா ஒலிம்பிக்: ஜூடோவில் இந்திய வீரர் கபில் பர்மார் வெண்கலம் வென்றதை அடுத்து இந்தியா தனது 25 ஆவது பதக்கத்தை பெற்றது.

* பாரா ஒலிம்பிக் : பெண்கள் 100 மீட்டர் டி-12 அரையிறுதி ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் சிம்ரன் 2-வது இடம்பிடித்தார். இதன்மூலம் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

Today's Headlines

 * Floods in Andhra, under the leadership of Home Additional Secretary Mr. Sivakumar Jindal,  A central committee study the situation there.

* There is trouble bringing Sunita Williams and Butch Wilmore back to Earth. So the Starliner returns to Earth tomorrow without them. It will land at the White Sands Spaceport in Mexico.

* First Thiruvalluvar International Cultural Centre.. Major Agreement in Semi Conductor Sectors.. Prime Minister Modi signs with Singapore Government.

* Para Olympics: India bagged its 25th medal in judo after Kapil Parmar won bronze.

* Para Olympics: India's Simran finished 2nd in women's 100m T-12 semi-final race. Through this, he advanced to the finals.
 Prepared by

Covai women ICT_போதிமரம்