Sunday, August 4, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.08.2024

  

நீல் ஆல்டன் ஆம்ஸ்ட்ராங் 




திருக்குறள்: 

பால்: பொருட்பால்

அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல்

குறள் எண்:443

அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்.

பொருள்: பெரியாரைப் போற்றித் தமக்குச் சுற்றத்தாராக்கிக் கொள்ளுதல், பெறத்தக்க அரிய பேறுகள் எல்லாவற்றிலும் அருமையானதாகும்.

பழமொழி :

அரசன் அன்றே கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்

Justice stays long, but strikes at last

இரண்டொழுக்க பண்புகள் : 

*ஆபத்தில் இருப்பவர்களுக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்வேன். 

*துன்பப்படுபவர்களைக் கண்டால் அவர்களுக்கு ஆறுதல் கூறுவேன்.

பொன்மொழி :

தலை குனிந்து என்னை பார். தலை நிமிர்ந்து உன்னை நடக்க வைக்கிறேன்.----புத்தகம்.

பொது அறிவு : 

1. ஆப்பிள் பழத்தில் உள்ள அமிலம்?

விடை: மாலிக்

2. பொதுமக்களுக்கு தேவையான தகவல்களை வழங்கும் நாட்டுப்புறக் கலை 

விடை: வில்லுப்பாட்டு

English words & meanings :

 review-விமர்சனம்,

 analyse-பகுப்பாய்வு

வேளாண்மையும் வாழ்வும் : 

இனி விதைக்க உகந்த மாதங்கள் குறித்து பார்ப்போம். பழமொழியே உண்டு. “ஆடி பட்டம் தேடி விதை!” என்பதே ஆகும் .

ஆகஸ்ட் 05

நீல் ஆல்டன் ஆம்ஸ்ட்ராங்  அவர்களின் பிறந்தநாள்


நீல் ஆல்டன் ஆம்ஸ்ட்ராங் (Neil Armstrongநீல் ஆம்ஸ்ட்ரோங்ஆகத்து 51930 – ஆகத்து 252012) ஓர் அமெரிக்க விண்வெளி வீரரும் சந்திரனில் தரையிறங்கிய முதல் மனிதரும் ஆவார். அத்தோடு இவர் வான்வெளிப் பொறியியலாளர், கப்பல்படை விமானி, வெள்ளோட்ட விமானி, மற்றும் பல்கலைக்கழகப் பேராசியர் போன்ற பதவிகளையும் வகித்துள்ளார். ஆம்ஸ்ட்ரோங், விண்வெளி வீரராக வருவதற்கு முன்னர் ஐக்கிய அமெரிக்கக் கடற்படையில் அதிகாரியாக இருந்து கொரியப் போரில் பணியாற்றினார். போரின் பின்னர் பெர்டூ பல்கலைக்கழகத்தில் தனது இளங்கலைப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டு தேசிய வானூர்தியியல் ஆலோசனை செயற்குழுவின் அதிவேக விமானம் நிலையத்தில் வெள்ளோட்ட விமானியாகப் பணி புரிந்தார். தேசிய வானூர்தியியல் ஆலோசனை செயற்குழுவே தற்பொழுது டிரைடன் விமான ஆராய்ச்சி மையம் என்று அழைக்கப்படுகின்றது. 

நீதிக்கதை

 சிங்கமும் தந்திரமான முயலும்

 

முன்னொரு காலத்தில், காட்டுக்குள்ளே எல்லா விலங்குகளும் ஒன்று கூடி சிங்கராஜா பத்தி பேசிட்டு இருந்தாங்க. அதில் கரடி சொல்லிச்சு, “நம்ம எல்லாரும் இங்கே எதுக்காக ஒன்று கூடி இருக்கோம்னா, சிங்கராஜாவை எப்படி  காட்டில் இருந்து விரட்டி அடிக்கலாம் என்று யோசிக்க தான்”. “அவர் நமக்கு நிறையவே பிரச்சனையை கொடுக்குறாரு, அவருக்கு பசி எடுக்கும் போதெல்லாம் நம் உறவினர்களையும் நண்பர்களையும் பிடித்து சாப்பிடுகிறார்”.

அதற்கு  முயல் சொல்லுச்சாம் நம்ம, “நம்மளோட நண்பர்களை அடிக்கடி இழந்திட்டே வரோம். அதனால எப்படியாச்சும் இந்த சிங்கத்தை காட்டை விட்டு விரட்டி ஆகணும், ஆனால் அது எப்படி நம்மளால முடியும்”.

முயல் ஒரு திட்டம் போட்டிச்சு, எல்லோர் கிட்டயும் தன் திட்டத்தை சொல்லிச்சு. தங்களோட திட்டப்படியே சிங்க ராஜாவை எல்லோரும் சந்திக்க போனாங்க. அந்த சிங்கமோ மகாராஜா அரியணையில் அமர்ந்திருப்பது போல அமர்ந்திருந்தது. மற்ற எல்லா விலங்குகளும் தலையைத் தாழ்த்தியபடி அந்த சிங்கத்துக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுத்தாங்க.

“எதுக்காக எல்லாரும் சேர்ந்து இங்கே என்ன பார்க்க வந்திருக்கீங்க”  என்று சிங்கம் கேட்டது. அதற்கு கரடி சொன்னது “நாங்க எல்லாரும் ஒரு திட்டம் போட்டிருக்கிறோம் அதன்படி நீங்க எப்பவுமே இங்கு அமர்ந்து இருந்தா போதும், உங்களுக்கு தேவையான உணவை நாங்களே கொண்டு வருவோம்” என்று சொன்னது. சிங்கராஜா ரொம்பவே சந்தோஷமா அந்தத் திட்டத்தை ஏத்துகிட்டாரு.

மறுநாள் அவங்க திட்டப்படி முயல் அந்த சிங்கத்துக்கு உணவாக போச்சு. முயல் ரொம்பவே தாமதமாக  சென்றது. அந்த சிங்கம் முயலிடம் மிகவும் கடினமாக நடந்து கொண்டது, “ஏன் இவ்வளவு தாமதம், அதுமட்டுமல்ல உன்னை  மட்டும் உண்பதால் என்னுடைய பசி எப்படி தீரும்” என்று அந்த சிங்கம் மிகவும் கோபமாக கேட்டது. 

அதற்கு முயல் சொன்னது, “என்னை மன்னித்துவிடுங்கள் சிங்கராஜா நானும் என் குடும்பத்தாரும் மொத்தம் பத்து பேர்தான் உங்களுக்கு உணவாக வந்து கொண்டிருந்தோம், ஆனால் வரும் வழியில் இன்னொரு பெரிய சிங்கம் என் குடும்பத்தார் அனைவரையும் கொன்று சாப்பிட்டது, நான் மட்டும் எப்படியோ தப்பித்து இங்கே உங்களுக்கு உணவாக வந்தேன்” என்றது.

அதைக் கேட்ட சிங்கம் மிகவும் கோபம் பட்டது, “என்ன! என்னை விட வலிமையான வேறு சிங்கம் இங்கே எப்படி இருக்கமுடியும், அவன் எங்கே?”என்று கேட்டது. அதற்கு முயல், “நான் உங்களுக்கு அவனை காட்டித் தருகிறேன்” என்று சிங்க ராஜாவை கூட்டிக்கொண்டு ஒரு கிணற்றுக்கு அருகே சென்றது. 

“கிணற்றுக்குள்ளே அந்த வலிமையான சிங்கம் இருப்பதாக  முயல் சொன்னது”. அதைக்கேட்ட சிங்கராஜா கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தது தன்னுடைய உருவம் அங்கே தெரிந்ததை பார்த்து ஏமாந்து போன சிங்கராஜா அந்த கிணற்றுக்குள்ளே இருக்கும் இன்னொரு சிங்கத்தை தாக்கப் போவதாக சொல்லி அந்த கிணற்றுக்குள்ளே குதித்தது. சிங்கராஜா கிணற்றில் இருந்து வெளியே வர முடியாமல் உள்ளே தண்ணீரில் மூழ்கி விட்டது.

முயல் சந்தோஷத்தில் மிகவும் சத்தமாக கத்த தொடங்கியது. மற்ற எல்லா விலங்குகளும் ஓடிவந்து சிங்கராஜா தண்ணிக்குள் மூழ்கியதைக் கண்டு மிகச் சந்தோஷம் அடைந்தனர்.


நீதி : உடல் வலிமையை விட அறிவுதான் வலிமையானது.

இன்றைய செய்திகள்

05.08.2024

⚡மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் 58 தாழ்தள பேருந்துகள் உள்ளிட்ட 100 புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட பேருந்துகளின் இயக்கத்தை விளையாட்டுத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

⚡தமிழகம் முழுவதும் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: நெல்லைக்கு புதிய காவல் ஆணையர் நியமனம்.

⚡தமிழகத்தில் இன்றும், நாளையும் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள்து.

⚡வயநாடு நிலச்சரிவு பலி 361 ஆக அதிகரிப்பு: சூரல்மலா, முண்டக்கை, அட்டமலாவில் இனியும் மக்கள் வாழ முடியுமா என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

⚡தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அமைச்சரவை  ரூ.50,655 கோடி மதிப்பிலான 8 திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

⚡அமெரிக்க போர் கப்பல்கள், விமானங்கள் விரைவதால் மத்திய கிழக்கு நாடுகளில் திடீர் போர் பதற்றம்.

⚡பாரீஸ் ஒலிம்பிக்: ஹாக்கி போட்டியில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்.

⚡பாரீஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன்: இந்திய வீரர் லக்சயா சென் அரையிறுதிக்கு முன்னேற்றம்.

Today's Headlines

⚡The Sports Minister inaugurated the operation of 100 new and refurbished buses including 58 low-floor buses for the benefit of disabled persons.

 ⚡Transfer of 17 IPS officers across Tamil Nadu: New Police Commissioner appointed for Nellai.

 ⚡The Chennai Meteorological Department has said that there is a possibility of heavy rain at a few places in Tamil Nadu today and tomorrow.

 ⚡Wayanad landslide death toll rises to 361: Sooralmala, Mundakai, Attamala are in a state of survival.

 ⚡The Union Cabinet has approved 8 projects worth Rs.50,655 crore to improve the national highway infrastructure.

 ⚡Sudden war tension in Middle East countries as US warships and planes rush.

 ⚡Paris Olympics: Indian team advances to the Hockey semi-finals 

 ⚡Paris Olympics Badminton: India's Lakshya Sen  looses to victor  axelson.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Thursday, August 1, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.08.2024

    

ஆபிரகாம் பண்டிதர்




திருக்குறள்: 

பால்: பொருட்பால்

அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல்

குறள் எண்:442

உற்ற நோய் நீக்கி உறாஅமை முன் காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்.

பொருள்: வந்துள்ள துன்பத்தை நீக்கி, இனி்த் துன்பம் வராதபடி முன்னதாகவே காக்கவல்ல தன்மை யுடையவரைப் போற்றி நட்புக் கொள்ள வேண்டும்.

பழமொழி :

போனால் வாராது, பொழுது விடிந்தால் கிடைக்காது

Christmas comes but once a year 

இரண்டொழுக்க பண்புகள் : 

 *  நான் எப்போதும் அழகாகவும், தெளிவாகவும் எழுதுவேன்.                   

 *என் வாசித்தலை மேம்படுத்த தினமும் ஐந்து பக்கங்களாவது வாசிப்பேன்.

பொன்மொழி :

யாரையும் வெற்றுக் காகிதம் என எண்ணாதே. ஒரு நாள் அவன் பட்டமாய் பறப்பான்.நீயும் அண்ணாந்து தான் பார்க்க வேண்டும்.----மாகாகவி பாரதியார்

பொது அறிவு : 

1. கருப்பு நிற மட்பாண்டங்கள் கிடைக்கும் மாவட்டம் எது?

விடை: திருநெல்வேலி

2. இந்தியாவில் காடுகளின் நிலப்பரப்பு சதவீதம் எத்தனை?

விடை: 23 சதவீதம் 

English words & meanings :

 scrutinize-ஆராய்வு,
 
survey-கணக்கெடுப்பு

வேளாண்மையும் வாழ்வும் : 

மூங்கில் அரிசியில் Low Glycemic Index காரணமாக, சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவாகும். உடலிற்கு தேவையான சத்துக்களை பெற உதவும். வைட்டமின் B6, பாஸ்பரஸ், கால்சியம் பொட்டாசியம் சத்துக்கள் உள்ளது

ஆகஸ்ட் 02

ஆபிரகாம் பண்டிதர்    அவர்களின் பிறந்தநாள்

ராவ் சாகேப் ஆபிரகாம் பண்டிதர் (Abraham Panditharஆகஸ்ட் 21859 - 1919 ) புகழ்பெற்ற தமிழிசைக் கலைஞர், சித்த மருத்துவர் மற்றும் தமிழ் கிறித்தவ கவிஞர். ஆரம்ப காலத்தில் ஆசிரியராகப் பணியாற்றிய ஆபிரகாம் பண்டிதர், பின் தமிழ் இலக்கியத்திலும், தமிழ் மருத்துவத்திலும் கொண்ட ஆர்வத்தினால், முழுநேர மருத்துவராகப் பயிற்சி பெற்றுப் பணியாற்றலானார். ஆபிரகாம் பண்டிதர் தமிழிசைக்கு ஆற்றிய பணி சிறப்பானது. அக்கால இந்திய இசை வல்லுநர்களிலேயே நன்கு அறியப்பட்ட பண்டிதர், மற்ற இசை வடிவங்களிலேயும் ஆர்வம் கொண்டிருந்தார். தனது இசையுலகத் தொடர்புகளை நன்கு பயன்படுத்திய ஆபிரகாம் பண்டிதர், முதன்முதலாக அகில இந்திய இசை மாநாட்டைத் தஞ்சாவூரில் நடத்தினார்.[4] அதனைத் தொடர்ந்து ஆறு மாநாடுகளை அவர் கூட்டினார். பல்லாண்டு தமிழிசை ஆராய்ச்சி முடிவுகளை 1917-இல் பெரும் இசை நூலாகக் கருணாமிர்த சாகரம் என்ற பெயரில் வெளியிட்டார்.இந்நூல் 1395 பக்கங்கள் உடையது. இன்றுவரை தமிழிசை ஆய்வுகளுக்கு இதுவே மூலநூலாக விளங்கி வருகிறது.

பிரபுல்லா சந்திர ராய்  அவர்களின் பிறந்தநாள்


பிரபுல்லா சந்திர ராய் (Acharya Prafulla Chandra Ray -  ஆகத்து 2, 1861 - சூன் 16, 1944) ஒரு வங்கக் கல்வியாளர்வேதியியலாளர், வணிகர். சமூக சேவையாளர், ஆயுர்வேத மருத்துவம் பற்றி ஆய்வுகள் செய்தவர். லண்டனில் அறிவியல் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியர். இந்திய வேதியியல் கழகத்தைத் தொடங்கியவர். இந்திய விடுதலைப் போரில் பங்கு கொண்டவர். பாதரச நைட்ரைட்டு என்ற அதிக நிலைத்தன்மை கொண்ட சேர்மத்தைக் கண்டு பிடித்தவர். இந்திய வேதியல் வளர்ச்சிக்காக மிகக் கடுமையாக உழைத்த பிரபுல்ல சந்திர ரே யின் சேவையை மதித்து, 1989-ல் இருந்து அவர் பெயரில் "பி. சி. ராய் விருது" என்ற விருது இந்தியாவில் சிறந்த விஞ்ஞானிகளுக்கு இந்திய அறிவியல் கழகத்தால் வழங்கிச் சிறப்பு செய்யப்படுகிறது.

பிங்கலி வெங்கைய்யா அவர்களின் பிறந்தநாள்




பிங்கலி வெங்கைய்யா(Pingali Venkayya) (தெலுங்கு: పింగళి వెంకయ్య) (ஆகத்து 2, 1876 - சூலை 4, 1963) என்பவர் (2 ஓர் இந்திய சுதந்திர போராட்ட வீரராவார். மகாத்மா காந்தியின் தீவிர ஆதரவாளரான இவர், இந்தியாவின் தேசியக் கொடியை வடிவமைத்தார்.[1] வெங்கையா ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மச்சிலிப்பட்டணத்தின் பத்லபெனுமரு என்னும் ஊரில் பிறந்தார்.

நீதிக்கதை

 தவளைகளின் சரியான முடிவு 


ஒரு காட்டில் இரு தவளைகள்  சந்தோஷமாக வாழ்ந்து வந்தன. சில நாட்களுக்கு பிறகு வெயில் அதிகமானதால் காட்டில் வெப்பம் அதிகமானது.


அதோடு கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் வாழ்ந்து வந்த குளத்திலும் தண்ணீர் வற்ற ஆரம்பித்தது. அப்போது ஒரு தவளை சொன்னது அக்கா, “வெப்பத்தினால் குளத்திலிருந்த எல்லாத் தண்ணீரும் வற்றிவிட்டது. நாம் இருவரும் உயிரோடு இருக்க வேண்டுமென்றால் தண்ணீர் இருக்கும் இன்னொரு இடத்திற்கு சென்று தான் ஆக வேண்டும்” என்றது.


மற்றொரு தவளையும், “ஆம் நீ சொல்வது சரிதான் நாம் தண்ணீர் இருக்கும் இன்னொரு இடத்திற்கு செல்ல வேண்டும்” என்றது. அவர்கள் இருவரும் வேறு இடத்தை தேடி பயணித்தார்கள். 


செல்லும் வழியில் ஒரு தவளை அங்கே ஒரு கிணறு இருப்பதைக் கண்டு சந்தோஷப்பட்டது. “இங்க பாருங்க அக்கா நம்ம ஒரு தண்ணீர் இருக்கும் கிணற்றை கண்டுபிடித்து விட்டோம்” என்றது.


அந்தக் கிணறு மிகவும் ஆழமாக இருந்தது. அப்போது அந்தத் தவளை மற்றொரு தவளையிடம், “என்ன பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள்? நாம் தண்ணீர் இருக்கும் பெரிய கிணற்றை கண்டுபிடித்து உள்ளோம். இருவரும் அந்த கிணற்றுக்குள்ளே குதிக்கலாம்” என்றது.


அதற்கு மற்றொரு தவளை, “இல்லை நாம் அவசரப்படவேண்டாம் இந்த கிணறு மிகவும் ஆழமாக உள்ளது. நாம் வாழ்ந்து கொண்டிருந்த அவ்வளவு பெரிய குளமே வெப்பத்தில் வற்றி உள்ளது .இந்த ஆழமான கிணறு வற்றி விட்டால் நம்மால் அதில் இருந்து வெளியே வர முடியாது, எனவே சிறிது தூரம் பயணிக்கலாம் கண்டிப்பாக இன்னொரு குளத்தை நம்மால் கண்டுபிடிக்க இயலும்” என்றது.


அவர்கள் இருவரும் மீண்டும் தங்கள் பயணத்தைத் தொடங்கினர். சிறிது தூரம் சென்ற பிறகு ஒரு அழகான பெரிய குளத்தை கண்டனர். இருவரும் மகிழ்ச்சியில் அந்த குளத்திற்குள் குதித்தனர், சந்தோஷமாக பாடி மகிழ்ந்தனர். இருவரும் அந்த குளத்தை தங்கள் வீடாக நினைத்து வாழ ஆரம்பித்தனர்.


சில நாட்களுக்கு பிறகு  ஒரு மான் அந்த குளத்திற்கு தண்ணீர் குடிக்க வந்தது. அப்போது அது வருத்தத்துடன் சொல்லிக் கொண்டிருந்தது. “எல்லா இடத்திலும் தண்ணீர் வற்றி விட்டன. அருகிலுள்ள பெரிய கிணற்றில் இருந்த தண்ணீர் கூட வற்றி விட்டது” என்றது.


இதைக் கேட்ட தவளைகள் நல்லவேளை நாம் அந்தக் கிணற்றுக்குள் குதிக்காமல் விட்டோம் என்றன.


நீத: ஒரு செயலை செய்வதற்கு முன்பு நன்றாக யோசித்து செய்ய வேண்டும்.

இன்றைய செய்திகள்

02.08.2024

☘️தமிழகத்தில் ரேஷன் பொருட்களை பாக்கெட்டில் விநியோகிக்கும் திட்டம் - சோதனை அடிப்படையில் தொடக்கம்.

☘️மாணவர்களுக்கு மாதம் தோறும் ரூ.1,000 வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம் ஆக.9-ம் தேதி தொடக்கம்: முதல்வர் ஸ்டாலின் தகவல்.

☘️இந்தியில் பெயரிடப்பட்டுள்ள 3 குற்றவியல் சட்டங்களுக்கும் ஆங்கிலத்தில் பெயர் சூட்டக் கோரிய வழக்கில் மத்திய அரசு 4 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

☘️தண்ணீர் சேமிப்பு, பாதுகாப்பு தொடர்பான புதிய வழிமுறைகள், புத்தாக்க நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு உயர்கல்வி நிறுவனங்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு அறிவுறுத்தல்.

☘️பட்டியலின மக்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.

☘️வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில்  2-ம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்டது போல் ‘பெய்லி’ எனப்படும் தற்காலிக பாலங்களை அமைத்து மீட்பு பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

☘️ராணுவ மருத்துவ சேவைகள் பிரிவின் முதல் பெண் தலைமை இயக்குநராக லெப்டினன்ட் ஜெனரல் சாதனா சக்சேனா நாயர் பொறுப்பேற்றுள்ளார்.

☘️பாரீஸ் ஒலிம்பிக்: துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே.

☘️பாரீஸ் ஒலிம்பிக் டென்னிஸ்: ஜோகோவிச் காலிறுதிக்கு முன்னேற்றம்.

☘️ஐ.சி.சி. டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை: ஜோ ரூட் முதலிடம். ரோகித் சர்மா 6  வது இடத்திற்கு முன்னேற்றம்.

Today's Headlines

☘️Scheme for distribution of ration items in packets in Tamil Nadu - started on trial basis.

☘️ ``Tamil Puthalavan'' scheme to give Rs.1,000 to students every month will start on August 9: Chief Minister Stalin informed.

 ☘️The Madras High Court has ordered the central government to respond within 4 weeks in the case where 3 criminal laws in Hindi to be translated in English.

 ☘️University Grants Commission instructs higher education institutions to take up innovative measures related to water conservation and safety.

☘️ No bar to grant internal quota to Scheduled Tribes: Supreme Court verdict

 ☘️In the landslide areas in Wayanad, the army is engaged in rescue operations by constructing temporary bridges called 'Bailey' as used during World War 2.

 ☘️Lt Gen Sadhana Saxena Nair has taken charge as the first woman Director General of Army Medical Services.

☘️ Paris Olympics: Indian shooter Swapnil Kusale won bronze in shooting event.

☘️ Paris Olympics Tennis: Djokovic advances to quarter-finals

 ☘️ICC  Test batsmen rankings: Joe Root tops.  Rohit Sharma advances to 6th position.
 Prepared by

Covai women ICT_போதிமரம்