![]() |
| ஆபிரகாம் பண்டிதர் |
பால்: பொருட்பால்
அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல்
குறள் எண்:442
உற்ற நோய் நீக்கி உறாஅமை முன் காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்.
பொருள்: வந்துள்ள துன்பத்தை நீக்கி, இனி்த் துன்பம் வராதபடி முன்னதாகவே காக்கவல்ல தன்மை யுடையவரைப் போற்றி நட்புக் கொள்ள வேண்டும்.
போனால் வாராது, பொழுது விடிந்தால் கிடைக்காது
Christmas comes but once a year
இரண்டொழுக்க பண்புகள் :
* நான் எப்போதும் அழகாகவும், தெளிவாகவும் எழுதுவேன்.
*என் வாசித்தலை மேம்படுத்த தினமும் ஐந்து பக்கங்களாவது வாசிப்பேன்.
பொன்மொழி :
யாரையும் வெற்றுக் காகிதம் என எண்ணாதே. ஒரு நாள் அவன் பட்டமாய் பறப்பான்.நீயும் அண்ணாந்து தான் பார்க்க வேண்டும்.----மாகாகவி பாரதியார்
பொது அறிவு :
1. கருப்பு நிற மட்பாண்டங்கள் கிடைக்கும் மாவட்டம் எது?
2. இந்தியாவில் காடுகளின் நிலப்பரப்பு சதவீதம் எத்தனை?
English words & meanings :
வேளாண்மையும் வாழ்வும் :
மூங்கில் அரிசியில் Low Glycemic Index காரணமாக, சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவாகும். உடலிற்கு தேவையான சத்துக்களை பெற உதவும். வைட்டமின் B6, பாஸ்பரஸ், கால்சியம் பொட்டாசியம் சத்துக்கள் உள்ளது
ஆகஸ்ட் 02
நீதிக்கதை
தவளைகளின் சரியான முடிவு
ஒரு காட்டில் இரு தவளைகள் சந்தோஷமாக வாழ்ந்து வந்தன. சில நாட்களுக்கு பிறகு வெயில் அதிகமானதால் காட்டில் வெப்பம் அதிகமானது.
அதோடு கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் வாழ்ந்து வந்த குளத்திலும் தண்ணீர் வற்ற ஆரம்பித்தது. அப்போது ஒரு தவளை சொன்னது அக்கா, “வெப்பத்தினால் குளத்திலிருந்த எல்லாத் தண்ணீரும் வற்றிவிட்டது. நாம் இருவரும் உயிரோடு இருக்க வேண்டுமென்றால் தண்ணீர் இருக்கும் இன்னொரு இடத்திற்கு சென்று தான் ஆக வேண்டும்” என்றது.
மற்றொரு தவளையும், “ஆம் நீ சொல்வது சரிதான் நாம் தண்ணீர் இருக்கும் இன்னொரு இடத்திற்கு செல்ல வேண்டும்” என்றது. அவர்கள் இருவரும் வேறு இடத்தை தேடி பயணித்தார்கள்.
செல்லும் வழியில் ஒரு தவளை அங்கே ஒரு கிணறு இருப்பதைக் கண்டு சந்தோஷப்பட்டது. “இங்க பாருங்க அக்கா நம்ம ஒரு தண்ணீர் இருக்கும் கிணற்றை கண்டுபிடித்து விட்டோம்” என்றது.
அந்தக் கிணறு மிகவும் ஆழமாக இருந்தது. அப்போது அந்தத் தவளை மற்றொரு தவளையிடம், “என்ன பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள்? நாம் தண்ணீர் இருக்கும் பெரிய கிணற்றை கண்டுபிடித்து உள்ளோம். இருவரும் அந்த கிணற்றுக்குள்ளே குதிக்கலாம்” என்றது.
அதற்கு மற்றொரு தவளை, “இல்லை நாம் அவசரப்படவேண்டாம் இந்த கிணறு மிகவும் ஆழமாக உள்ளது. நாம் வாழ்ந்து கொண்டிருந்த அவ்வளவு பெரிய குளமே வெப்பத்தில் வற்றி உள்ளது .இந்த ஆழமான கிணறு வற்றி விட்டால் நம்மால் அதில் இருந்து வெளியே வர முடியாது, எனவே சிறிது தூரம் பயணிக்கலாம் கண்டிப்பாக இன்னொரு குளத்தை நம்மால் கண்டுபிடிக்க இயலும்” என்றது.
அவர்கள் இருவரும் மீண்டும் தங்கள் பயணத்தைத் தொடங்கினர். சிறிது தூரம் சென்ற பிறகு ஒரு அழகான பெரிய குளத்தை கண்டனர். இருவரும் மகிழ்ச்சியில் அந்த குளத்திற்குள் குதித்தனர், சந்தோஷமாக பாடி மகிழ்ந்தனர். இருவரும் அந்த குளத்தை தங்கள் வீடாக நினைத்து வாழ ஆரம்பித்தனர்.
சில நாட்களுக்கு பிறகு ஒரு மான் அந்த குளத்திற்கு தண்ணீர் குடிக்க வந்தது. அப்போது அது வருத்தத்துடன் சொல்லிக் கொண்டிருந்தது. “எல்லா இடத்திலும் தண்ணீர் வற்றி விட்டன. அருகிலுள்ள பெரிய கிணற்றில் இருந்த தண்ணீர் கூட வற்றி விட்டது” என்றது.
இதைக் கேட்ட தவளைகள் நல்லவேளை நாம் அந்தக் கிணற்றுக்குள் குதிக்காமல் விட்டோம் என்றன.
நீத: ஒரு செயலை செய்வதற்கு முன்பு நன்றாக யோசித்து செய்ய வேண்டும்.
இன்றைய செய்திகள்


