Tuesday, June 11, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12.06.2024

 


  




திருக்குறள்: 

பால்:பொருட்பால்

அதிகாரம்:கல்வி

குறள் எண்:393

கண்ணுடையர் என்பவர் கற்றோர்; முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்.

பொருள்: கண்ணுடையவர் என்று உயர்வாகக் கூறப்படுகின்றவர் கற்றவரே; கல்லாதவர் முகத்தில் இரண்டு புண் உடையவர் ஆவர்.

பழமொழி :

Don't measure the worth of a person by their size.

 கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது

இரண்டொழுக்க பண்புகள் :

*புதிய வகுப்பில் புதிய நண்பர்களோடு நன்கு பழகுவேன்.

*கல்வி ஒன்றே என்னை  உயர்த்தும். எனவே நன்கு படிப்பேன்.

பொன்மொழி :

கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்.

சுவாமி விவேகானந்தர்

பொது அறிவு : 

1. பூமியில் இருந்து பார்க்கக்கூடிய பிரகாசமான கிரகம் எது?

விடை: வீனஸ் (வெள்ளி)

2. தொட்டவுடன் இறக்கும் பறவை எது?

விடை: டைட்டோனி பறவை

English words & meanings :

 Persistent-விடாபிடியான

Contentment-மனநிறைவு

வேளாண்மையும் வாழ்வும்: 

நிலையான இடத்தில் மனிதன் வாழ ஆரம்பித்த பின் மனித நாகரிகத்தின் எழுச்சியில் வேளாண்மை ஒரு முக்கிய பங்கு வகித்துள்ளது.

ஜூன் - 12

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள் (World Day Against Child Labour) உலகம் முழுவதும் ஆண்டுதோறும் சூன் 12 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் ஓர் அங்கமான பன்னாட்டு தொழிலாளர் அமைப்பினால் (ஐ.எல்.ஓ) அங்கீகரிக்கப்பட்ட இந்த நாள் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த 2002ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படுகிறது. ஐ.எல்.ஓ வின் 138 மற்றும் 182வது உடன்படிக்கைகளின் ஏற்பினால் தூண்டப்பட்டு இந்த நாள் உருவாக்கப்பட்டது.

நீதிக்கதை

 ஆனந்தாவும் புத்தரும் ஒரு வழியில் நடந்து சென்றார்கள். அப்போது எதிரே வந்த ஒருவன் மிகுந்த

கோபத்துடன் புத்தர் முகத்தில் காறி எச்சிலை துப்பினான்..

 புத்தர் தன் மேல்துண்டால்அதை 

துடைத்து விட்டு.. "இன்னும் எதாவது சொல்ல விரும்புகிறாயா..?" என்றார்.

 அருகில் நின்ற ஆனந்தாவுக்கு கோபம் வந்தது. புத்தர் ஆனந்தாவை

பார்த்து சொன்னார் "ஆனந்தா.. இவர் ஏதோ சொல்ல விரும்புகிறார்.. ஆனால் அவருக்கு வார்த்தைகள் இல்லாததால் இந்த செயலை செய்து விட்டார்.. வார்த்தைகள்

பலவீனமானவை .இவர் என்ன செய்ய முடியும்..?" என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.

துப்பியவனுக்கு அன்று முழுவதும் குற்றஉணர்வால் நித்திரையே வரவில்லை. அடுத்த நாள் காலை புத்தரை தேடியலைந்து கண்டு அவரது காலில் விழுந்து அழுதான்..

 அப்போதும் புத்தர் ஆனந்தாவை பார்த்து சென்னார்."இன்றும் இவர் ஏதோ சொல்ல விரும்புகிறார் ஆனந்தா..! ஆனால் வார்த்தைகள்

பலவீனமானதால் இச்செயலை செய்துவிட்டார்..!" என்றார். 

அவன் எழுந்து கேட்டான் "நான் துப்பிய போது நீங்கள் ஏன் திருப்பி ஒரு வார்த்தைகூட ஏசவில்லை..?"என்று. 

அப்போது புத்தர் அழகான பதில் சொன்னார்.. " எண்ணியது போல் நடக்கநான் என்ன உன் அடிமையா.. ?" என்றார்...


 *_நீதி_* 

நாம் நினைப்பவைகளே நடக்க வேண்டும் என்பது பேராசை தான் .

இன்றைய செய்திகள்

12.06.2024

* ஜூன் 20-ல் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை: 4 நாள் முன்பே கூட்டத் தொடர் தொடக்கம்.

* கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் கல்விக்கடன் ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு.

* நீட் தேர்வு முடிவுகள் அடிப்படையிலான இளங்கலை மருத்துவ கல்விக்கான கலந்தாய்வை தொடங்க எவ்வித தடையும் இல்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

* அசோக் எல்லுசாமி இல்லையென்றால் டெஸ்லா நிறுவனம் இல்லை: தமிழக பொறியாளருக்கு எலன் மஸ்க் புகழாரம்.

* ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய டென்னிஸ் வீரர் சுமித் நாகல்.

Today's Headlines

* Tamil Nadu Legislative Assembly meets on June 20: Sessions begin 4 days earlier.

* Education loan through co-operatives increased from Rs 1 lakh to Rs 5 lakh: Tamil Nadu government declared.

 * The Supreme Court has said that there is no bar to start counseling for undergraduate medical education based on NEET results.

 * If it is not  Ashok Ellusamy, there would be no Tesla: Elon Musk praises the Tamil Nadu engineer.

 * Indian tennis player Sumit Nagal qualified for Olympics.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Monday, June 10, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 11.06.2024

பெஞ.சமின் ஃபிராங்களின்

   




திருக்குறள்: 

பால்:பொருட்பால்

அதிகாரம்: கல்வி

குறள் எண்:392

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.

பொருள்: எண் என்று சொல்லப்படுவன, எழுத்து என்று சொல்லப்படுவன ஆகிய இருவகைக் கலைகளையும் வாழும் மக்களுக்குக் கண்கள் என்று கூறுவர்.

பழமொழி :

Humility is the best virtue 

 அடக்கமுடைமை சிறந்த பண்பாகும்.

இரண்டொழுக்க பண்புகள் :

*புதிய வகுப்பில் புதிய நண்பர்களோடு நன்கு பழகுவேன்.

*கல்வி ஒன்றே என்னை  உயர்த்தும். எனவே நன்கு படிப்பேன்.

பொன்மொழி :

சிந்திக்கத் தெரிந்தவனுக்கு ஆலோசனைத் தேவையில்லை!
அப்துல் கலாம்

பொது அறிவு : 

1)நிலத்தில் வேகமாக செல்லும் விலங்கு எது?

 சிறுத்தை

2) மின்சாரத்தை கண்டுபிடித்தவர் யார்? 

பெஞ்சமின் பிராங்க்ளின்

English words & meanings :

 Adamant - பிடிவாதம், 

Obstinate - வளைந்து கொடுக்காத

வேளாண்மையும் வாழ்வும்: 

உழவு அல்லது வேளாண்மை அல்லது விவசாயம் என்பது உணவு பொருட்களுக்காக பயிர் உற்பத்தி செய்வது ஆகும். கால்நடை பெருக்கமும் இதில் அடங்கும்

நீதிக்கதை

 *மன்னனும் கடல் அலையும்!*


இங்கிலாந்தில் வாழ்ந்த மன்னன் கானுட். இவர் பல நாடுகளை வென்று ஒரு பெரிய ராஜாங்கத்தையே தனக்கு கீழ் நிறுவினார். அதனால் இவருக்கு பெரிய அரியாசனம் கொடுத்து இவரை பெருமையாக பேச ஆரம்பித்தார்கள்.

இவர் அரியாசனம் செல்லும் இடங்கள் எல்லாம் மன்னரை எதிர்க்க ஆள் இல்லாமல் போக ஆரம்பித்தது. அரசரை எதிர்க்க ஆளில்லை என்று பெயர் ஊரெல்லாம் பரவ ஆரம்பித்தது. இந்த பெயரால் அரசரின் உடன் இருந்தவர்கள் அவரின் புகழை பாட பாட  மன்னனுக்கு தலைக்கனம் ஏற ஆரம்பித்தது.

தன்னை எதிர்க்க யாராலும் முடியாது என்ற எண்ணம் அதிகமான  மன்னன் ஒருநாள் திரண்டு வரும் கடல் அலை கூட என் அரியாசனத்தை பார்த்தால் நின்று விடும் என சொல்ல சிலர் அவரை உங்களால் முடியும் என்று உசுப்பேத்த அவரும் அரியாசனத்தை தூக்கி கொண்டு கடலுக்கு சென்றார்.


கடல் அலை முன்னால் தனது அரியணையை எடுத்து வைத்தார். கடலுக்கும் அவர் அரியணைக்கும் இடைவெளி இருக்க, அவர் கடல் அலையை பார்த்து நில் என சத்தமாக கத்தினார். கடல் அலை மெதுவாக அடிக்கவும், அரசரும் அவர் அருகில் இருந்தவர்கள் முகத்தில் சந்தோசம் பொங்கியது

உடனே குஷியான மன்னன் இன்னும் சத்தமாக கடல் அலையே நில் என்று சொல்ல கடலும் அதே போல அமைதியாக வீச இப்போது நின்று விடும் என நம்பினார் மன்னர். கடல் அலை சொன்னது போல நிக்குமா, என யோசித்து கொண்டே  மன்னனை பார்த்தார்கள். அவர் அகோரக்ஷமாக இன்னும் கடலை பார்த்து கத்த கடல் அலை அடிக்கவில்லை.


அவ்வளவுதான் எல்லோரும் சந்தோஷத்தில் குதிக்க, மன்னரின் புகழை பாட ஆரம்பித்தார்கள். மன்னனுக்கும் தன்னால் தான் கடல் அலை வீசவில்லை என்று தோன்ற ஆரம்பித்தது. சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் கடல் அலை சுழட்டி பெரிய அலையாக அடிக்க மன்னரின் அரியனையோடு தூக்கி வீசியது. யாரும் இதை எதிர்பார்க்கவில்லை

அரசரின் தலையில் இருந்த தங்க க்ரீடம் அலையில் அடித்து கீழே விழ, அவரால் அதை மற்றவர்கள் முன்னாள் நிமிர்ந்து பார்க்க முடியாமல் போனது. இப்போது தான்  மன்னனுக்கு புரிந்தது. நம்மால் எதையுமே நிறுத்த முடியாது, முக்கியமாக இயற்கையை எதிர்த்து எதுவுமே செய்ய முடியாது என்பதை உணர்ந்தார். அதன் பிறகு அவரால் அரியணையில் ஏறி அமர மனம் வரவில்லை.

மக்களுக்கும் மற்ற ராஜ்ஜியத்திற்கும் அவர் செய்த செயல்கள் அவரை அரியணையில் மீண்டும் அமர விடாமல் தடுத்தது. இவர் செய்த செயல் நாடெங்கும் பரவியது. மன்னனின் தலைக்கனம் நீங்கியது. மீண்டும் அரியணை என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் மனம் மாறினான். இருந்தாலும் இவன் கடல் அலையை நிறுத்த போவதாக கூறியது *சரித்திரத்தில்* இடம் பிடித்தது.

இன்றைய செய்திகள்

11.06.2024

* தமிழக அரசு திட்டங்கள்: மாவட்ட ஆட்சியர்கள் உடன் தலைமைச் செயலர் 3 நாள் ஆலோசனை.

* ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியில் சேராத 193 மருத்துவர்களின் நியமன ஆணையை தமிழ்நாடு அரசின் பொதுசுகாதாரத்துறை ரத்து செய்தது.

* காசாவில் 80%-ஐ நெருங்கும் வேலையின்மை: மக்கள் நிதி நெருக்கடியில் தவிப்பு.

* நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் ‘குரூப் - ஏ’ ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள்  விளையாடின. இதில் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 * தமிழகத்தில் வரும் 16-ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Today's Headlines

* Tamil Nadu Government Schemes: Chief Secretary was consulting with District Collectors for 3 days.

*  The Public Health Department of the Tamil Nadu Government cancelled the appointment order of 193 doctors who did not join the primary health centers.

 * Unemployment nears 80% in Gaza: People are distressed with financial crisis

*  India and Pakistan teams played in the 'Group-A' match of the ongoing T20 World Cup series.  India won by 6 runs.

 * Tamil Nadu is likely to receive light to moderate rains till  16th, according to the Chennai Meteorological Department.

 Prepared by

Covai women ICT_போதிமரம்