Wednesday, April 3, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 04.04.2024

   

மார்டின் லூதர் கிங் 

 




திருக்குறள்: 

"பால்: பொருட்பால். இயல்: அரசியல். 
அதிகாரம்: இறைமாட்சி.

குறள்:390

கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி.

விளக்கம்:
நலவாழ்வுக்கு வேண்டியவற்றை வழங்கியும், நிலையுணர்ந்து கருணை காட்டியும், நடுநிலை தவறாமல் ஆட்சி நடத்தியும், மக்களைப் பேணிக் காப்பதே ஓர் அரசுக்குப் புகழொளி சேர்ப்பதாகும். 

பழமொழி :

Soare the rod and spoil the child

அடியாத மாடு படியாது.

இரண்டொழுக்க பண்புகள் :

 1. வாழ்க்கையில் ஒரு செயலை ஆரம்பிப்பதற்கு முன், எவ்வாறு செய்து முடிக்க போகிறோம் என்று திட்டமிட்டு கொள்ள வேண்டும். 

2. திட்டமிடுதல் மிக முக்கியம். திட்டமிடுவோம் செயல்படுவோம்.

பொன்மொழி :

ஒருவர் தனது அறிவின் வரம்புகளை அறிந்து கொள்வதே உண்மையான அறிவு." ___ சீனப் பழமொழி

பொது அறிவு : 

1. தமிழில் கலைக்களஞ்சியம் அடிப்படையில் அமைந்த நூல் எது?

விடை: அபிதான கோசம் 

2. நம் நாட்டில் முதன்முதலாக இரும்பு எஃகு தொழிற்சாலை நிறுவப்பட்ட இடம் எது?

விடை: ஜாம்ஷெட்பூர்(jamshedpur)

English words & meanings :

 
Artificial - which is not natural, செயற்கையான, 

adhesives - objects used for sticking, ஓட்டும் பொருள்

ஆரோக்ய வாழ்வு : 

பருப்புகீரை :
மலச்சிக்கலைப் போக்குகிறது, குடற்புழுக்களை அகற்றுகிறது. இரைப்பையில் மிகுதியாக சுரக்கும் அமிலம் காரணமாக ஏற்படும்  நெஞ்செரிச்சலை போக்குகிறது.

ஏப்ரல் 04

மனோன்மணீயம் பெ. சுந்தரனார் அவர்களின் பிறந்தநாள்

மனோன்மணீயம் பெ. சுந்தரனார் (Manonmaniyam P. Sundaranarஏப்ரல் 41855 - ஏப்ரல் 261897) என்பவர் மனோன்மணீயம் என்ற புகழ்பெற்ற நாடக நூலைப் படைத்தவர். ஒப்பற்ற நாடக நூலான மனோன்மணீயம் இவரால் 1891 ஆம் ஆண்டில் எழுதி வெளியிடப்பட்டது.[4] சுந்தரனாரின் ஞான ஆசிரியராக இருந்தவர் கோடக நல்லூர் சுந்தர சுவாமிகள் ஆவர்.இத்தொடர்பே மனோன்மணீயத்தில் சுந்தர முனிவர் என்னும் பாத்திரப் படைப்பிற்குக் காரணமாக இருந்தது.

கல்வெட்டு ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு திருஞானசம்பந்தர் காலவாராய்ச்சி செய்து அவ்வாராய்ச்சியினை 1894 ஆம் ஆண்டில் வெளியிட்டார். பத்துப்பாட்டு பற்றிய திறனாய்வினை ஆங்கிலத்தில் எழுதிச் சென்னைக் கிறித்துவக் கல்லூரி இதழில் வெளியிட்டார்.  மனோன்மணீயத்தில் இடம்பெற்ற தமிழ்த் தாய் வணக்கப் பாடலான நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் என்ற பாடல் தமிழ் நாடு அரசினரால் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக சூன் 1970 இல் அறிவிக்கப்பட்டது.


மார்டின் லூதர் கிங் அவர்களின் நினைவுநாள்



மார்டின் லூதர் கிங், இளையவர் (Martin Luther King, Jr.ஜனவரி 151929 - ஏப்ரல் 41968)[1] ஐக்கிய அமெரிக்காவில் சமூக உரிமைக்காக போராடிய மாபெரும் ஆபிரிக்க-அமெரிக்கத் தலைவராவார். அமெரிக்க குருமார்களில் ஒருவர்; ஆர்வலர், மற்றும் ஆபிரிக்க அமெரிக்க மனித உரிமை இயக்கத்தில் தலைவராக இருந்தார். அவர் காந்தியவழியில் சிறந்த வன்முறையற்ற அறப்போராட்டத்தைப் பயன்படுத்தியவர். மார்ட்டின் லூதர் கிங் அமெரிக்க முற்போக்கு வரலாற்றில் ஒரு தேசிய சின்னமாகக் கருதப்படுகிறார்.[2] பாப்திசுதப் போதகராக இருந்த கிங் தனது இளமைக்காலத்திலேயே சமூக உரிமைவாதியாக இனங்காணப்பட்டார். 1955 இல் மாண்ட்கோமரி பேருந்து புறக்கணிப்புப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கினார். 1955 இல் தெற்குக் கிழக்காசியத் தலைவர்கள் மாநாடு நிகழவும் உதவினார். அம்மாநாட்டின் முதல் தலைவராகவும் ஆனார். இவ்வமைப்பு கிங் தலைமையில் ஜார்ஜியாவில் அல்பேனி எனுமிடத்தில் 1957 இல் நிறப்பாகுபாட்டிற்கு எதிராக நடத்திய போராட்டம் தோல்வியடைந்தது. 1962 இல் அலபாமாவில் நடந்த வன்முறையற்ற வழியில் இவர் நடத்திய அறப்போராட்டம் பலரது கவனத்தை ஈர்த்ததுடன் தேசிய அளவில் புகழ்பெற்றது. கிங் 1963 இல் 'வேலையும் சுதந்திரமும் வேண்டி வாஷிங்டனுக்கு பேரணி' என்ற மிகப் பெரிய பேரணிக்கு ஏற்பாடு செய்தார். பெருமளவில் மக்கள் திரண்டனர். இங்குதான் அவர் தனது புகழ்பெற்ற 'எனக்கொரு கனவு' என்ற புகழ்பெற்ற சொற்பொழிவினை ஆற்றினார். அமெரிக்க வரலாற்றில் இது ஒரு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதன் பிறகு அமெரிக்க உளவுதுறை (FBI)இவரைக் கண்காணித்து அரசுக்கு தகவல்களை அனுப்பத் தொடங்கியது. மேலும் தற்கொலை செய்து கொள்ளுமாறு ஒரு அநாமதேய மிரட்டல் கடிதமும் விடுத்தது. அடுத்த ஆண்டு அதாவது அக்டோபர் 14, 1964 ஆம் ஆண்டில் வன்முறையற்ற வகையில் நிறவெறிக்கெதிராக பாடுபட்டதற்காக மார்ட்டின் லூதர் கிங்குக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவர் 1968 ஏப்ரல் 4 ஆம் நாள் டென்னசி மாநிலத்தில் மெம்ஃபிஸ் நகரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

நீதிக்கதை

 விதியையும் மதி கொண்டு வெல்லலாம்


பொதுவாகவே வௌவால்கள் இரவில் தான் இரை தேடும். காரணம் அவைகளுக்கு இரவில் தான் நன்றாகக் கண் தெரியும். அதே சமயத்தில் பகலில் அவைகளால் சரியாகப் பார்க்கக் கூட முடியாது. அதனால், பெரும் பாலும் வௌவால்கள் பகலில் நன்றாகத் தூங்கி விடும்.


அப்படித் தான் ஒரு மரத்தில் இருந்த வௌவால் உட்கார்ந்த படி தூங்கிக் கொண்டு இருந்தது. ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த வௌவால் கால்பிடி நழுவி மரத்தில் இருந்து கீழே விழுந்து விட்டது. அந்த மரத்தடியில் வாழ்ந்து வந்த கீரி ஒன்று ஓடிச் சென்று அந்த வௌவாலை 'லபக்' என பிடித்துக் கொண்டது.


அந்தக் கீரி வௌவாலை திங்கப் போகும் நேரம். வௌவால் கண் விளித்தது, "கீரியாரே! நான் உங்களை என்ன செய்தேன்? ஏன் என்னைத் தின்னப் பார்க்கின்றீர்!" என்று கேட்டது.


அதற்கு அந்தக் கீரி, "உன்னைப் போன்ற பறவைகள் என்றால் எனக்குப் பிடிக்கவே பிடிக்காது. இன்னும் சொல்லப் போனால்

பறவைகள் தான் எனது முதல் விரோதிகள். அதனால், உன்னைக் கொன்று ஆசை தீர உன்னப் போகிறேன்" என்றது.


"கீரியாரே, தாங்கள் நினைப்பது மிகவும் தவறு. நான் ஒரு பறவையே அல்ல. பறவைகள் என்றால் முட்டை போடும். அடை காக்கும். ஆனால், நானோ குட்டிப் போட்டு பால் கொடுத்து வருகிறேன். அதனால், நான் பறவையும் அல்ல, அதன்படிப் பார்த்தால் உங்கள் எதிரியும் அல்ல. அதனால் தாங்கள் என்னைத் தாரளமாக விட்டு விடலாம்" என்றது.

உடனே அந்தக் கீரி யோசித்தது, "வௌவால் சொல்வது சரி தான். இது ஒரு விலங்கு, நாம் நினைத்தது தான் தவறு" என்ற முடிவுக்கு வந்தது. உடனே வெளவ்வாலை விட்டு விட்டது. அந்த வௌவ்வாலும் நிம்மதியாகச் சென்று பழைய படி மரத்தில் அமர்ந்தது.

பிறகு, சில நாட்கள் மீண்டும் நகர்ந்தது. அன்றும் வௌவால் மரத்தின் மேல் தூங்கிக் கொண்டு இருக்கையில் பிடி தவறிக் கீழே விழுந்து விட்டது. இந்த முறையும் வெளவாலை அந்தக் கீரி பிடித்துக் கொண்டு விட்டது. அந்தக் கீரி வௌவாலை தின்னப் போகும்

நேரத்தில்

 வெளவால்," கீரியாரே! நான் தான் உங்கள் எதிரி இல்லை என்று அன்றே சொன்னனே! பிறகு இன்றும் ஏன் என்னைப் பிடித்துக் கொண்டு விட்டீர்கள்" என்று கேட்டது.

அதற்கு அந்தக் கீரி சொன்னது, "வௌவாலே! நான் பறவைகளுடன் ஒரு உடன்படிக்கையை செய்து கொண்டேன். இப்போது விலங்குகள் தான் எனக்கு விரோதிகள். அதனால் நான் உன்னைத் தின்னப் போகிறேன்" என்றது.


உடனே அந்த வௌவால் மீண்டும் கீரியிடம், "கீரியாரே! கீரீயாரே! ஒரு நிமிடம் நான் சொல்வதைக் கேளுங்கள். நான் இது வரையில் என்னை விலங்கு என்று தவறாக நினைத்துக் கொண்டு இருந்தேன். நேற்று தான் எனக்கே தெரிந்தது நான் விலங்கு அல்ல ஒரு பறவை என்று. வேண்டும் என்றால் எனது இறக்கைகளை நீங்களே பாருங்கள். நானும் கூடத் தரையில் இருப்பதைக் காட்டிலும், பறவைகளைப் போல வானத்தில் தான் அதிகம் பறக்கிறேன். அதனால், பறவைகளிடம் தாங்கள் செய்து கொண்ட நட்பு உடன்படிக்கையின் படி நான் உங்கள் நண்பன் அதன் படிப் பார்த்தால் தாங்கள் என்னை தாரளமாக விட்டு விடலாம்" என்றது.

வௌவாலின் வார்த்தைகளைக் கேட்டு அந்தக் கீரி மீண்டும் யோசித்தது. அதற்கு வௌவால் சொல்வது சரி தான் எனப்பட்டது. அதனால், கீரி வௌவாலைப் பார்த்து, "நீ சொல்வது உண்மை தான். பிழைத்துப் போ" என்று கூறி, வௌவாலை விட்டு விட்டது.


நீதி : சிலர் எதற்கு எடுத்தாலும் விதி, விதி என்று நொந்து கொள்வார்கள். ஆனால், அந்த விதியைக் கூட மதியால் வெற்றி கொண்டு விடலாம். அப்படிப் பட்டவனே திறமைசாலி. அவனால் எப்படிப் பட்ட ஆபத்துக்களில் இருந்தும் விடு பட்டு விட முடியும். இதற்கு இந்தக் கதையில் வரும் வௌவால் தான் உதாரணம்.

இன்றைய செய்திகள்

04.04.2024

*வாஷிங்டன் 
போர்ப்சின் நாளிதழ்: கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம் பிடித்த இந்திய பெண் ரேணுகா ஜக்தியானி.

*தைவானில் நேற்று 7.4 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. நான்கு பேர் பலி 99 பேர் காயம்.

*கனடாவிலும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் துவங்கியது.

*கேரள மாநிலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி தியா, வாகனங்களை பழுது பார்க்கும் திறனை பார்த்து வேலைக்கு அழைத்தது சென்னை ராயல் என்ஃபீல்டு தொழிற்சாலை.

*உலகக்கோப்பை பழுதூக்குதலில் இந்தியாவின் பிந்தியா ராணி வெண்கலம் வென்றார்.

Today's Headlines

*Washington
 Forbes Daily: Indian woman Renuka Jagthiani has made it to the list of billionaires.

 A 7.4-magnitude earthquake hit Taiwan yesterday.  Four killed and 99 injured.

 *School breakfast program started in Canada too.

 *Diya, a college student from Kerala state, was invited to work by the Royal Enfield factory in Chennai due to her ability to repair vehicles.

 * India's Pindia Rani wins bronze in World Cup weightlifting.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Tuesday, April 2, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 03.04.2024

    

இளங்கோவடிகள்




திருக்குறள்: 

"பால்: பொருட்பால். இயல்: அரசியல். 
அதிகாரம்: இறைமாட்சி.

குறள்:389

செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு.

விளக்கம்:
தன் செவி வெறுக்கும் படியான நிலையிலும்
குறை கூறுவோறின் சொற்களை பொறுக்கின்ற பண்பு உடைய அரசனது குடைநிழலில் உலகம் தங்கும்.

பழமொழி :

Everything comes to him who waits. 

காக்கத் தெரிந்தவனுக்கு காரியம் கைகூடும். 

இரண்டொழுக்க பண்புகள் :

 1. வாழ்க்கையில் ஒரு செயலை ஆரம்பிப்பதற்கு முன், எவ்வாறு செய்து முடிக்க போகிறோம் என்று திட்டமிட்டு கொள்ள வேண்டும். 

2. திட்டமிடுதல் மிக முக்கியம். திட்டமிடுவோம் செயல்படுவோம்.

பொன்மொழி :

Everything comes to him who waits. 

காக்கத் தெரிந்தவனுக்கு காரியம் கைகூடும். 

பொது அறிவு : 

1. சர்க்கரை உற்பத்தியில் முதலாவதாக உள்ள மாநிலம் எது?

விடை: உத்திரப்பிரதேசம்

2. சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகளின் அண்ணன் யார்?

விடை: செங்குட்டுவன் 

English words & meanings :

 Ebullient - full of excitement ;உவகையில் திளைக்கிற.
 eclat - general applause;மகிழ்ச்சி ஆரவாரம்.

ஆரோக்ய வாழ்வு : 

பருப்புகீரை :
பருப்புக்கீரையில் அபரிமிதமான அளவில் வைட்டமின் ஏ, சி மற்றும் பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் உள்ளன. இவை நுரையீரல் பாதிப்புகளில்  இருந்து காக்கக்கூடியவை.

நீதிக்கதை

 சிங்கமும் பன்றியும்

ஒரு காட்டில் நிறைய மிருகங்கள் இருந்தன. அவை தமக்கு ஒரு தலைவனை ஏற்படுத்த நினைத்தன.

எல்லா மிருகங்களும் ஓரிடத்தில் ஒரு நாள் கூடின. உடல் வலிமை, வீரம், பெருந்தன்மை முதலிய பல குணங்கள் பொருந்திய சிங்கத்தைத் தமது தலைவனாகத் தேர்ந்தெடுத்தன.

அங்கு கூடியிருந்த காட்டுப் பன்றி ஒன்று மாத்திரம் சிங்கம் தலைவனாக இருப்பதை விரும்பவில்லை. சிங்கத்தினிடம் வெறுப்புடன் இருந்தது. சில நாட்கள் கழித்து ஒரு நாள் அப்பன்றியும் தலைவன் சிங்கமும் சந்தித்தன. இரண்டும் வெகுநேரம் பேசிக் கொண்டன.

பன்றி சிங்கத்தைப் பார்த்து. எனது குடும்பம் எவ்வளவு பெரியது பார்த்தீரா? எனக்கு எத்தனை குட்டிகள் ஆனால் உமக்கு இருப்பது ஒரே ஒரு குட்டி தான் என்று ஏளனம் செய்தது.

அதற்குச் சிங்கம், தாங்கள் பல குட்டிகள் பெற்று என்ன நன்மை எனது ஒரு குட்டிக்கு இணையாகுமா? சிங்கக் குட்டியல்லவா?

அதனுடைய பலமும் வீரமும் உனது குட்டிகளுக்கு வருமா? எனது குட்டி கர்ஜித்தால் உனது குட்டிகள் ஓடி ஒளியும் என்று பதில் கூறிற்று. பன்றியும் ஒன்றும் பதில் பேச முடியாமல் அவ்விடம்; விட்டுச் சென்றது.

ஞானம் விளங்க பேச வேண்டும்.

இன்றைய செய்திகள்

03.04.2024

*உலகத்துக்கே முன்னோடியாக உள்ளது காலை உணவு திட்டம் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்.

*மிச்சாங் புயலால் பாதிப்படைந்த 24 லட்சம் குடும்பங்களுக்கு ரூபாய் 1,487 கோடி நிவாரண தொகை தமிழக அரசு.

*சென்னையில் பிரமிக்க வைக்கும் சவாலான பணி- கிண்டியில் 30 மீட்டர் உயரத்தில் மேம்பாலம் மீது மெட்ரோ ரயில் பாதை.

*அடுத்த மூன்று வாரங்கள் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்: தனியார் வானிலை ஆய்வாளர் தகவல்.

*அமோல் முஜும்தாரை பேட்டிங் பயிற்சியாளராக நியமித்தது தென்னாப்பிரிக்கா.


Today's Headlines

* Our breakfast scheme is the leading one in the world –CM Stalin's proud moment.

 * Tamil Nadu government has given Rs 1,487 crore relief to 24 lakh families affected by Cyclone Michong.

 *Stunning and challenging task in Chennai- Metro rail track on flyover at 30 meters height in Guindy.

 *There will be an increase in heat for the next three weeks: private meteorologist's information.

 *South Africa appointed Amol Mujumdar as batting coach.

 Prepared by

Covai women ICT_போதிமரம்

Monday, April 1, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.04.2024

பண்டைய சோழர்களின் சின்னம்

   




திருக்குறள்: 

"பால்: பொருட்பால். இயல்: அரசியல். 
அதிகாரம்: இறைமாட்சி.

குறள்:388

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்.

விளக்கம்:

நீதிவழங்கி மக்களைக் காக்கும் அரசு மக்களைக் காக்கும் கடவுள் என்று கருதப்படும்.

பழமொழி :

Small rudders guide great ships

அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது

இரண்டொழுக்க பண்புகள் :

 1. வாழ்க்கையில் ஒரு செயலை ஆரம்பிப்பதற்கு முன், எவ்வாறு செய்து முடிக்க போகிறோம் என்று திட்டமிட்டு கொள்ள வேண்டும். 

2. திட்டமிடுதல் மிக முக்கியம். திட்டமிடுவோம் செயல்படுவோம்.

பொன்மொழி :

பகைவனை அடக்குபவனைவிட ஆசைகளை அடக்குபவனே மாவீரன்.

பொது அறிவு : 

1. பண்டைய சோழர்களின் சின்னம் எது?

விடை: புலி 

2 ”ஓடி கூடி” இச்சொற்களில் அமைந்துள்ள யாப்பிலக்கணம்?

விடை: எதுகை 

English words & meanings :

 Debut(n) - first public appearance as a  performer அரங்கேற்றம்
Decency(n) - respectable behaviour
நல்லொழுக்கமுள்ள நடத்தை

ஆரோக்ய வாழ்வு : 

பருப்புகீரை:
பருப்புக் கீரையை நன்கு அரைத்து அக்கி வந்த இடங்களில் மேல்பூச்சாகத் தடவி வந்தால், கொப்புலங்கள்மறைந்து உடல் குளுமையடையும்.

நீதிக்கதை

 .நரியும் ஆடும்


வயதான நரி ஒன்று ஒரு நாள் இரை தேடி வெகு நேரம் காட்டில் அலைந்தது. இரை எதுவும் கிடைக்காததால் பசியால் மிகச் சோர்வுற்று களைப்புடன் தள்ளாடி நடந்து சென்றது, வழியில் பெரிய பாழுங்கிணறு ஒன்று இருந்தது. அதற்குக் கைபிடிச் சுவர் இல்லாததால் தள்ளாடி நடந்து சென்ற நரி தவறி கிணற்றினுள் விழுந்து விட்டது.


கிணறு வெகு ஆழமாக இருந்ததால் பலவாறு முயன்றும் நரியால் தப்பி வெளியே வர முடியவில்லை. அதனால் அயர்வுற்றது.அதற்கு ஆடு ஆசையுடன் "நானும் அங்கு வரலாமா? நாம் இருவரும் சேர்ந்து புல் தின்னலாமா?" என்று கேட்டது. நரி, "இங்கு நிறையப் புல் இருப்பதால் நாம் இருவரும் புசிக்கலாம் தாங்கள் இங்கே இறங்கி வாருங்கள்" என்றது.


ஆடு சிறிதும் யோசிக்காமல் கிணற்றினுள் குதித்தது. சமயம் எதிர்பார்த்திருந்த நரி ஆட்டின் தலையின் மேல் காலை வைத்துத் தாவி வெளியே குதித்துத் தப்பி ஓடியது.


ஆடு, நரியின் செயலைக் கண்டு திகைத்து அச்சமுற்றது. பல முறை முயன்றும் அதனால் வெளியே வர முடியவில்லை. தனது அறியாமையை நினைத்து வருந்தியது.


பொழுது கடந்து வெகுநேரம் ஆகியும் ஆட்டைக் காணாத குடியானவன் அதைத் தேடி அலைந்தான். தற்செயலாய் அக் கிணற்றினருகில் வந்து எட்டிப் பார்த்தான். தனது ஆட்டைக் கண்டான். உடனே கிணற்றில் இறங்கி ஆட்டை வெளியேற்றினான். தப்பிய ஆடு குடியானவனுடன் வீடு திரும்பியது.


யார் எதை சொன்னாலும் யோசித்து செயல்பட வேண்டும்.

இன்றைய செய்திகள்

02.04.2024


*சென்னை மாநகராட்சிக்கு சொத்துவரி மூலம் ரூபாய் 1800 கோடி கிடைத்தது.

*தமிழ்நாட்டின் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி 7.4 பில்லியன் டாலராக உயர்வு; முதல்வர் மு க ஸ்டாலின்.

*கோடை வெயில் கொளுத்துவதால் சென்னையில் கண் நோய் பாதிப்பு அதிகரிப்பு.

*தமிழகம் முழுவதும் 83 மையங்களில் +2 விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்கியது.

*டி20 கிரிக்கெட்டில் 300 விக்கெட் புதிய சாதனை படைத்த எம்எஸ் தோனி; விராட் கோலி சாதனையை முறியடித்த தோனி.

Today's Headlines

*Chennai Corporation got Rs 1800 crore through property tax.

 *Tamil Nadu's electronics exports rise to $7.4 billion;  CM Stalin.

 * Increase of 'eye disease' in Chennai due to scorching heat.

 *Correction of +2 answer sheet started today in 83 centers across Tamil Nadu.

 *MS Dhoni  made a new record by taken 300 wickets in T20 cricket;
 Dhoni broke Virat Kohli's record.
 Prepared by

Covai women ICT_போதிமரம்