Tuesday, January 23, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 24.01.2024

   




திருக்குறள்

பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : துறவு

குறள்:341
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.

விளக்கம்:

 எந்த எந்தப் பொருள்களின் மேல் விருப்பம் இல்லாதவனாய் விலகுகிறானோ அவன் அந்த அந்த பொருள்களால் துன்பப்படமாட்டான்.


பழமொழி :

Man proposes and God disposes

மனிதன் ஒன்று நினைக்க, கடவுள் ஒன்று நினைக்கும்

இரண்டொழுக்க பண்புகள் :1

1.முயற்சியும், தொடர் பயிற்சியும்   வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை நான் அறிவேன்.    

2.எனவே நான் ஒவ்வொரு நாளும் தேர்விற்காக கடுமையாக முயற்சி செய்து படிப்பேன்

பொன்மொழி :

மனிதர்களாகிய நமது மிகப்பெரிய திறமை இந்த உலகை மாற்றுவது அல்ல, மாறாக நம்மை நாமே மாற்றிக் கொள்வது. மகாத்மா காந்தி 

பொது அறிவு :

1. உலகின் மிகப்பெரிய ராணுவத்தை கொண்ட நாடு எது?

விடை: சீனா 

2. உலகின் மிகப்பெரிய உப்பு ஏரி எந்த நாட்டில் உள்ளது?

விடை: ரஷ்யா 

English words & meanings :

 oust - removing from a position or offce

ஆரோக்ய வாழ்வு : 

மணத்தக்காளி :மணத்தக்காளிக் கீரையின் சாறு காய்ச்சல் மற்றும் காய்ச்சலால் ஏற்படும் கை, கால் வலிகளை குணப்படுத்தும் தன்மை கொண்டது.

ஜனவரி 24

தேசிய பெண் குழந்தை நாள்


தேசிய பெண் குழந்தை நாள் (National Girl Child Day) இந்தியாவில் 2009 ஆண்டு முதல் ஜனவரி 24 ஆண்டு தோறும் அன்று கொண்டாடப்படுகிறது.. இந்நாள் கொண்டாடுவதின் மூலம் பாலின சமத்துவம், சமவேலைக்கு சமஊதியம் போன்ற கருத்துக்கள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த இது பெரிதும் உதவும்.[1] மேலும் பெண்கள் மேம்பாட்டிற்கான திட்டங்கள் பற்றியும் பொதுமக்களுக்கு ஊடகம், செய்தித்தாள், வானொலி மற்றும் தொலைக்காட்சி வழியாக தகவல் அரசாங்கத்தால் அளிக்கப்படுகிறது

நீதிக்கதை

 பேராசையின் ஆபத்து


 காட்டில் இரண்டு நரிகள் நண்பர்கள் இருந்தன.எங்கு சென்றாலும் இரண்டும் சேர்ந்தே செல்லும். இணை பிரியாத தோழர்கள். எதையும் சாப்பிட்டாலும் ஒன்றாகத் தான் சாப்பிடும். தூங்கினாலும் ஒன்றாகத் தான் தூங்கும்.

ஒருநாள் இரண்டும் காடு முழுவதும் அலைந்தன. அதற்குத் தேவையான உணவு கிடைக்கவே இல்லை. இதற்கு மேல் பசியைப் பொறுத்துக் கொள்ள முடியாது என முடிவு செய்தன.

கிராமத்தின் எல்லைக்குச் சென்று பார்ப்போம். எதாவது ஆடு, கோழி கிடைக்கும் வாய்ப்பு இருக்கும் என்றபடி கிளம்பின.

கிராமத்தின் எல்லையில் கோழிப் பண்ணை ஒன்று இருக்கக் கண்டு மிகவும் மகிழ்ந்தன. உள்ளே நிறைய கோழிகளும், கோழிக் குஞ்சுகளும் கொக். கொக்..கென குரல் கொடுத்து, மகிழ்ச்சியாக தானியத்தைக் கொத்திச் சாப்பிட்டுக் கொண்டு இருந்தன.

அதைப் பார்த்ததும் ஒரு நரிக்கு வாயில் நீர் ஊறியது. "வா உடனே சென்று அனைத்தையும் அடித்து சாப்பிட்டு விடுவோம்" என்றபடி வேகமானது.

"சற்றுப் பொறு தோழா" என அதன் வேகத்தை நிறுத்தியது மற்றொரு நரி. "என் நிலைமை புரியாமல் இப்படி தடுக்கின்றாயே" என அவசரப்பட்டது நண்பன் நரி.

"நிலைமை புரியாமல் தான் தடுமாறுகிறாய்"

"என்ன சொல்கிறாய்"

"பண்ணையில் மனிதர்கள் யாரும் இருந்தால், நம் நிலைமை என்ன ஆகும் என்பதை உணர்ந்தாயா"

"ஆமாம்... ஆமாம்... நீ சொல்வது தான் சரி, நான் தான் புரியாமல் அவசரப்பட்டு விட்டேன், நல்ல வேளை!"

இரண்டு நரிகளும் வேலி ஓரம் பதுங்கி நின்று நோட்டமிட்டன. சற்று முற்றும் பார்த்தன. கண்களுக்கெட்டிய தூரம் வரை மனித நடமாட்டம் இல்லாமல் இருந்தது. நிம்மதியடைந்து மகிழ்ச்சி அடைந்தன.

மெதுவாக அடியெடுத்து கோழிப் பண்ணைக்குள் வந்தன. அங்கு கோழிகள் அடைத்து வைத்திருந்த, பெரிய கூண்டின் கதவைத் திறந்து உள்ளே சென்றன.

நரிகள் உள்ளே சென்றதும், அதைக் கண்ட கோழிகள் பயந்து சிறகுகளை அடித்துக் கொண்டன. கொக்... கொக்... கென பலமாகக் கத்தின. பெரிய கூண்டுக்குள்ளேயே கோழிகள் அங்கும் இங்குமாகப் பறந்தன.

அவைகளைப் பார்த்த நரிகளுக்கு கொண்டாட்டம் தான். நரிகள் தன்னிடம் சிக்கிய கோழிகளை பிடித்துக் கொன்று தின்றன.

ஒரு நரி தன் தேவைக்கு மட்டும் கோழிகளைப் பிடித்து உண்டது.

மற்றொரு நரி கண்டபடி தின்றது.

''ஏன் இப்படி அளவுக்கு அதிகமாக சாப்பிடுகிறாய்  போதும் கிளம்பு."

அவசரப்படுத்தியது ஒரு நரி

"சற்று பொறு இன்னும் எனக்கு வேண்டிய அளவு தான் சாப்பிட்டு விட்டு வருவேன். உனக்குப் போதும் என்றால் நீ போகலாம்" என்று கூறவே, அளவுடன் சாப்பிட்ட நரி நாளை மீண்டும் வரலாம் என நினைத்துக் கிளம்பியது.

"சரி, நான் போய் வருகிறேன். இங்கேயே இருந்து விடாமல் விரைவில் காட்டுக்கு வந்து விடு. மனிதர்கள் வந்து விட்டால் உன்னைக் கொன்று விடுவார்கள்."

அந்த நரி காட்டிற்குள் சென்று விட்டது.

கோழிகளை அதிகம் சாப்பிட்ட நரி, உண்ட மயக்கத்தால் வெளியே செல்லாமல் அப்படியே படுத்து விட்டது.

அளவுக்கு அதிகமாக உண்டதால் மயங்கி விட்டது. அப்படியே தூங்கி விட்டது.சிறிது நேரத்தில் கோழிப் பண்ணையின் உரிமை யாளரும், வேலைக்காரர்களும் வந்தனர்.

பெரிய கூடாரத்தினுள் எங்கு பார்த்தாலும் கோழிகளின் இரத்தமும், சிறகுகளுமாகக் கிடந்தன. மனிதர்களைக் கண்ட கோழிகள் கொக்... கொக் கென கத்த ஆரம்பித்தன.

அவர்கள் சுற்றும் முற்றும் பார்த்தனர். ஒரு மூலையில் நரி தூங்கிக் கொண்டு இருப்பதைப் பார்த்தார்கள்.

நரியின் செயல் கண்டு ஆத்திரம் அடைந்தனர். நரியைப் பிடித்து கொன்று விட்டனர்.

மறுநாள் ஏதாவது நரி வரலாம் என வேலைக் காரர்கள் பதுங்கி இருந்தனர். மற்றொரு நரி, இந்த நரியைத் தேடியும் கோழியைப் பிடிக்கவும் உள்ளே நுழைந்தது. உடனே காவலர்கள் அந்த நரியையும் விரட்டிப் பிடித்துக் கொன்றனர்.

அதிக ஆசையினால் இரண்டும் இறந்தது.


நீதி : பேராசை பெரும் நஷ்டம். அளவுக்கு மீறி ஆசைப்படுபவர்கள் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. தகுதிக்கு மீறிய ஆசையை விட்டு விடுங்கள். அது துன்பத்தையே தரும்.

இன்றைய செய்திகள்

24.01.2024

*உலக சுகாதார அமைப்பு: தென்கிழக்கு ஆசியாவின் மண்டல இயக்குனராக சைமா வஜேத் நியமனம்.

*பீகார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு.

*சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவானது. மூன்று பேர் உயிரிழப்பு.

*ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை அறிவிப்பு.

*இந்திய கிரிக்கெட் அணியின் மூத்தவீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பிசிசிஐ விருதுகள் விழாவில் இரண்டு முக்கிய விருதுகளை வென்று அசத்தியிருக்கிறார்.

Today's Headlines

*World Health Organization: Saima Wajed is appointed as Regional Director for South-East Asia.

 * Bharat Ratna award to former Bihar Chief Minister Karpuri Thakur.

 * Powerful earthquake in China recorded at 7.2 on the Richter scale.  Three people died.

 *Incentive Notification for Ration Shop Employees.

 * Veteran Indian cricketer Ravichandran Ashwin won two major awards at the BCCI Awards.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Monday, January 22, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 23.01.2024

   

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்


திருக்குறள்

பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் :  நிலையாமை

குறள்:340

புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு.

விளக்கம்:

 உடலுடன் தங்கியுள்ள உயிருக்கு அதனைப் பிரிந்தால் வேறு புகலிடம் கிடையாது.


பழமொழி :

Make hay while the sun shines

காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்

இரண்டொழுக்க பண்புகள் :1

1.முயற்சியும், தொடர் பயிற்சியும்   வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை நான் அறிவேன்.    

2.எனவே நான் ஒவ்வொரு நாளும் தேர்விற்காக கடுமையாக முயற்சி செய்து படிப்பேன்

பொன்மொழி :

கவலைகளை நினைத்து கண்ணீர் சிந்துவதை விட...இலட்சியத்தை நினைத்து உதிரம் சிந்துவது மேலானது . பகத்சிங்.

பொது அறிவு :

1. தொட்டவுடன் இறக்கும் பறவை எது?

விடை: டைட்டோனி பறவை 

2.இந்தியாவில் எந்த மாநிலத்தில் நிலக்கரி அதிகமாக உற்பத்தி  செய்யப்படுகிறது?

விடை: ஜார்கண்ட் 

English words & meanings :

 Waltzing - to dance a waltz. சுழற்சி நடனமாடுகிற.

Weeded - to remove weeds, களை எடுக்கப் பட்ட.

ஆரோக்ய வாழ்வு : 

மணத்தக்காளி : மணத்தக்காளிக் கீரையில் பாஸ்பரஸ், அயர்ன், கால்சியம் ஏ, சி மற்றும் பி, வைட்டமின், தாதுக்கள் போன்றவை அதிக அளவில் உள்ளன.

ஜனவரி 23

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்நாள்



நேதாஜி (தலைவர்) என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் (Subhash Chandra Bose, சனவரி 23, 1897[4] – இறந்ததாகக் கருதப்படும் நாள் ஆகத்து 18, 1945)[1] இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவராவார். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது, வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி, இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி, அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர். காங்கிரஸ் சனநாயகக் கட்சியின் "பார்வர்ட்" எனும் ஆங்கில இதழில், ஆசிரியரான நேதாஜி, உணர்ச்சி ததும்பும் பல கட்டுரைகளை எழுதினார்.  இந்திய தேசிய ராணுவம் நெருக்கடியான நிலையில் இருந்த போது, ஆகத்து 15, 1945ல் அவர் இறுதியாக அறிக்கை வெளியிட்டார்.[46] அதன்படி இந்தியா

நீதிக்கதை

 பகைவனுக்கு அருள்வாய்

ஒரு கழுகைப் பிடித்த ஒரு வேடன் அதன் இறகுகளை வெட்டி விட்டுக் கூண்டில் பிற பறவைகளுடன் அடைத்து வளர்த்து வந்தான். அதனால் அந்தக் கழுகு மிக வருந்திக் கொண்டிருந்தது.

அடுத்த வீட்டுக்காரன் அந்தக் கழுகை விலை கொடுத்து வாங்கினான். அவன் இறகுகளை வெட்டாமல் வளர விட்டான். அதனால் அது பறக்க முடிந்தது.

அப்படிப் பறந்து சென்ற அந்தக் கழுகு ஒரு முயலின் மீது பாய்ந்து அதைத் தன்னை வளர்ப்பவனிடம் தூக்கிக் கொண்டு வந்தது. அதைப் பார்த்து ஒரு நரி, "நீ அதை இந்த ஆளுக்குக் கொடுப்பதால் உனக்கு ஒரு புண்ணியமும் இல்லை. நீ இதை, முதலில் உன்னைப் பிடித்து இறகுகளை வெட்டினானே, அந்த ஆளுக்குக் கொடுக்க வேண்டும். அப்போது தான் அவன் உன் மேல் கோபப்படாமல் இருப்பான். இல்லையென்றால் மீண்டும் அவன் உன்னைப் பிடித்து இரண்டாவது முறையாக உன்

இறகுகளை வெட்டி விடுவான்" என்றது.

நீதி : நமக்கு நல்லது செய்த நண்பர்களுக்குத் திரும்ப நல்லது செய்து நட்பை வளர்த்துக் கொள்வதைக் காட்டிலும் நமது பகைவர்களுக்கு நல்லது செய்து அவர்களை நண்பர்களாக்கிக் கொள்வதில் கவனம் காட்ட வேண்டும்.

இன்றைய செய்திகள்

23.01.2024

*27 ஆயிரம் அரசு பள்ளிகளை நவீனமாக மாற்ற புதிய திட்டம். கற்பித்தல் தரத்தை உயர்த்த நடவடிக்கை.

*தமிழக சட்டசபை அடுத்த மாதம் கூடுகிறது பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகளுக்கு வாய்ப்பு.

*உத்திரபிரதேசம் பட்டாசு கடையில் தீ விபத்து; இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு.

*அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது இதில் கர்நாடகாவை சேர்ந்த அருண் யோகி ராஜ் வடிவமைத்த ராமர் சிலை தேர்ந்தெடுக்கப்பட்டது.

*இங்கிலாந்துக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விராட் கோலி விலகல்.

Today's Headlines

*New scheme to modernize 27 thousand government schools.  Government planned to take steps to improve the quality of teaching.

 *Tamil Nadu Assembly will meet next month likely to make new announcements in budget

 *Fire incident at firecracker shop in Uttar Pradesh;  Two boys  died

*Kumbabhishekam of Ram Temple in Ayodhya was celebrated yesterday with much fanfare, in which the Rama's statue designed by Arun Yogi Raj from Karnataka was selected.

 *Virat Kohli ruled out of two Test matches against England.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Sunday, January 21, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 22.01.2024

   

Venus - வெள்ளி


திருக்குறள்


பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் :  நிலையாமை

குறள்:339

உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.

விளக்கம்:

 உறங்குவது போன்றது சாவு; உறங்கி விழிப்பது போன்றது பிறப்பு.


பழமொழி :

Love your neighbour as your self.

தன்னைப் போல் பிறரை நேசி

இரண்டொழுக்க பண்புகள் :1

1.முயற்சியும், தொடர் பயிற்சியும்   வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை நான் அறிவேன்.   

2.எனவே நான் ஒவ்வொரு நாளும் தேர்விற்காக கடுமையாக முயற்சி செய்து படிப்பேன்

பொன்மொழி :

அறிவை தேடி ஓடுங்கள். நாளைய வரலாறு உங்கள் நிழலாக தேடி ஓடி வரும். அம்பேத்கர் 

பொது அறிவு :

1. எந்த நாட்டு மக்கள் அதிகமாக தேனீர் அருந்துகிறார்கள்?

விடை: இந்தியா 

2. பூமியில் இருந்து பார்க்கக்கூடிய பிரகாசமான கிரகம் எது?

விடை: வீனஸ் (வெள்ளி)

English words & meanings :

 Vitrics –  study of glassware and glassy materials.

Velvety -  having a smooth and soft appearance and feel. மென்மையான, மெத்தென்ற

ஆரோக்ய வாழ்வு : 

மணத்தக்காளி : இயற்கை நமக்கு அளித்த மருத்துவ மூலிகைகளில் ஒன்றான மணத்தக்காளி கீரை பல நோய்களுக்கு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. மேலும் மணத்தக்காளி கீரையின் பழம், வேர் போன்றவை நமது உடல் நலப்பிரச்சனைகள் பலவற்றிற்கு சிறந்த மருந்தாகும்.

நீதிக்கதை

 யானைக்குட்டியும்நணபர்களும்.   


குறும்புக்கார  யானைகுட்டிக்கு தான் மற்றவர்களிலும் பார்க்க பெரியவன் என்ற கர்வம். எல்லோரையும் ஏளனமாகப் பார்க்கும். கர்வம் காரணமாக யானைக்குட்டி தனியாக அங்கும் இங்கும் சென்று வந்தது.

தாய் யானை தனியாக எங்கும் செல்ல வேண்டாம் என்று குட்டியானைக்கு சொல்லியது.

ஒருநாள் காகம் அடைவதற்காக மரக்கிளையில் கூடு ஒன்றை கட்டிக் கொண்டு இருந்தது. அவ்வழியாக தனியாக வந்த குறும்புக்கார யானைக்குட்டி அதைக் கண்டது. தனது தும்பிக்கையினால் மரக்கிளையினை முறித்தது. காகத்தின் கூடு கீழே விழுந்தது. காகம் கவலையுடன் பறந்து சென்றது.

யானைக் குட்டி கவலையுடன் சென்ற காகத்தைப் பார்த்து சந்தோஷம் கொண்டது. குரங்குக் குட்டியையும் விரட்டியது. குரங்கு மரத்திற்கு மரம் தாவித் தப்பியது. இப்படியாக பறவைகளையும், மிருகங்களையும் துன்புறுத்து அதில் மகிழ்ச்சி கண்டது யானைக் குட்டி.

மரத்தில் இருந்து பழங்களைச் சுவைத்து சாப்பிட்டுக்கொண்டிருந்த அணிலை மரத்தினை ஆட்டிப் பயம் காட்டியது. அணில் பயத்தில் கீழே விழுந்து ஓடியது. யானைக்குட்டியின் இந்த செயல்கண்டு எல்லா மிருகங்களும் யானைக்குட்டியை விட்டு விலகிச் சென்றன.ஒருநாள் யானைக்குட்டி குளத்தில் இறங்கி நீராடியது. தண்ணீரில் துள்ளி குதித்து விளையாடியது. அப்பொழுது யானைக் குட்டியின் கால் சேற்றில் புதைய தொடங்கியது. யானைக் குட்டியால் காலை வெளியில் இழுக்க முடிய வில்லை. யானைக் குட்டி  சத்தமாக பிளிறியது.

குச்சிகளைச் சேகரித்துக்கொண்டிருந்த காகத்திற்கு யானைக் குட்டி பிளிறுவது கேட்டது.

பிளிறும் யானை சத்தம் வந்த திசையை நோக்கி விரைவாகச் சென்றது.

யானைக்குட்டி சேற்றில் புதைத்திருப்பதை கண்ட காகம் குரங்கினது உதவியுடன் கயிறு கொண்டு யானையை இழுத்தது.இழுக்க முடியவில்லை. என்ன செய்வது என்று காகம் யோசித்தது.

மீண்டும் விரைவாகப் பறந்து சென்றது.யானைக்குட்டியின் அம்மாவை அழைத்து வந்தது. அம்மா யானை தும்பிக்கையால் குட்டியானையைத் தூக்கி வெளியில் எடுத்தது.

பயத்தினால் யானைக்குட்டி அம்மாவினை அணைத்துக்கொண்டது. அம்மா யானை எல்லோருடனும் நட்புடன் பழகவேண்டும்.

ஆபத்தில் உதவிய நண்பர்களை என்றும் மறக்கக்கூடாது என்று சொல்லியது.அதனை கேட்டு குறும்புக்கார யானைக்குட்டி தன்னுடைய முதுகில் தனது நணபர்களை ஏற்றிக்கொண்டு மகிழ்ச்சியுடன் சென்றது.

இன்றைய செய்திகள்

22.01.2024

* இன்றுடன் நிறைவடைகிறது 47வது சென்னை புத்தகக் கண்காட்சி!

* விழாக்கோலத்தில் அயோத்தி.. இன்று ராமர் கோயில் திறப்பு விழா

* மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை இன்று வெளியிடுகிறார்- தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு.

* 16 வருட பேச்சுவார்த்தைக்குப் பிறகு சுவிட்சர்லாந்தும் இந்தியாவும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் ஒருமித்த கருத்தை எட்டியுள்ளதாக சுவிஸ் பொருளாதார அமைச்சர் கை பார்மெலின் தெரிவித்தார்.

* பன்னர்கட்டா தேசிய பூங்கா பகுதியில் யானைகள் கூட்டம் சாலையை கடக்க முயன்றதால், பெங்களூரு நைஸ் சாலையில் சனிக்கிழமை அதிகாலை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

* ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை 2024 ஜூன் 1ஆம் தேதி தொடங்கும். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 29 நாள் மார்கியூ நிகழ்வுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது.

Today's Headlines

* The 47th Chennai Book Fair ends today!
Ayodhya in festival mood.. Ram temple opening ceremony tomorrow.

 * Tamil Nadu Chief Electoral Officer Satya Pratha Chagu will release the final voter list tomorrow as the Lok Sabha elections are soon to be held.

* Switzerland and India have reached consensus on a free-trade agreement after 16 years of negotiations, Swiss Economy Minister Guy Parmelin said.

* Traffic congestion on Bengaluru's Nice Road was observed in the early hours of Saturday after a herd of elephants tried crossing the road around the Bannerghatta National Park area

* ICC T20 World Cup 2024: The highly-anticipated ICC Men's T20 World Cup 2024 will commence on June 1. International Cricket Council has released the schedule for the 29-day marquee event.
 Prepared by

Covai women ICT_போதிமரம்