Friday, January 19, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 20.01.2024

    

எட்வின் யூஜின் ஆல்ட்ரின்




திருக்குறள்

பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் :  நிலையாமை

குறள்:338

குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு.

விளக்கம்:

 உடலுக்கும் உயிருக்கும் உள்ள உறவு முட்டைக்கும் பறவைக் குஞ்சுக்கும் உண்டான உறவு போன்றதுதான்.


பழமொழி :

Love well, whip well

அடிக்கிற கைதான் அணைக்கும்.

இரண்டொழுக்க பண்புகள் :1

1. பெரியோர் , பெற்றோர்,  ஆசிரியர்களை மதித்து நடப்பேன்.

2. அவர்கள் மனம் புண்படும் படி பேசவோ நடந்து கொள்ளவோ மாட்டேன்.

பொன்மொழி :

படித்தல் என்பது ஒரு சிறந்த வாழ்க்கை வாழ அடிப்படை கருவி – ஜோசப் அடிசன்

பொது அறிவு :

1. கால்குலேட்டரை கண்டுபிடித்தவர் யார்? 

விடை: பாஸ்கல்

2. இந்தியாவில் மட்டும் காணப்படும் விலங்கு எது? 

விடை: நீலகிரி தாஹ்ர் மான்


English words & meanings :

 loyalty: faithfulness towards a person or to his responsibility, விசுவாசம். legacy – inheritance from the ancestors or a great amount of money gifted, பரம்பரை சொத்து அல்லது பிறரால் அன்பளிப்பாக கொடுக்கப்பட்ட பணம்

ஆரோக்ய வாழ்வு : 

அயோடின் நமது உடலுக்கு தேவையான ஒரு தாது உப்பு. இது குறைபாட்டை எவ்வாறு கண்டறியலாம்? உடல் எடை கூடும். சோர்வு ஏற்படும். ஆற்றலின்மை. முடி உதிர்தல். சருமம் வறண்டு போதல். இதை சரி செய்ய மீன் ஒரு சிறந்த உணவு. முழு தானியங்கள், நார் சத்து மிக்க உணவுப் பொருட்கள் அயோடின் குறைபாடு நீக்க சிறந்த உணவு

ஜனவரி 20

எட்வின் யூஜின் ஆல்ட்ரின் அவர்களின் பிறந்தநாள் 

எட்வின் யூஜின் ஆல்ட்ரின்Edwin Eugene Aldrin, Jr., பிறப்பு: ஜனவரி 201930) என்பவர் அமெரிக்க விண்வெளி வீரரும் விமானியும் ஆவார். இவர் முதன் முதலாக மனிதரை சந்திரனில் ஏற்றிச் சென்ற அப்பல்லோ 11 விண்கலத்தில் நீல் ஆம்ஸ்ட்ரோங் உடன் பயணம் செய்து சந்திரனில் இறங்கிய இரண்டாவது மனிதர் என்ற பெருமையைப் பெற்றார்

நீதிக்கதை

 ஒட்டுண்ணிகள்

"ஒரு ஈ தேரின் அச்சு மரத்தில் உட்கார்ந்திருந்தது. அது, அந்தத் தேரை இழுத்துச் செல்லும் கோவேறு கழுதையைப் பார்த்து, என்ன இப்படி அசமந்தமாக நடக்கிறாய். உன் கழுத்தில் கொட்டாமல் இருக்க வேண்டும் என்றால் வேகமாக ஓடு" என்றது.

அதனிடம் கோவேறு கழுதை "நான் உனது பூச்சாண்டிகளுக்கெல்லாம் பயப்பட வேண்டியதில்லை. உனக்கு மேலே பீடத்தில் உட்கார்ந்திருக்கிறான் பார் ஒரு ஆள், அவனுக்குத் தான் நான் கட்டுப்பட்டவன்.

அவன் சாட்டையால் சுண்டினால் "நான் வேகமாக ஓடுவேன். கடிவாளத்தை இறுக்கிப் பிடித்தால் மெல்லப் போவேன். ஆகவே எப்போது வேகமாகப் போக வேண்டும். எப்போது மெதுவாக போக வேண்டும் என்பது எனக்குத் தெரியும் நீ உன் வேலையைப் பார்" என்றது.

நீதி : ''வாய் இல்லாவிட்டால் நாய் கூடச் சட்டை செய்யாது" என்ற பழமொழிக்கு ஏற்ப நாம் பேச வேண்டிய இடங்களில் பேச வேண்டியது அவசியம்.

இன்றைய செய்திகள்

20.01.2024

*ஸ்விஸ் ரயில் சேவை தரத்திற்கு மாறும் இந்திய ரயில்வே.

*அண்ணா சாலையில் புதிய மேம்பாலம் கட்டும் பணியை தொடங்கி வைத்தார் முதல்வர் மு க ஸ்டாலின்.

*போக்குவரத்து தொழிற்சங்கத்தினருடன் பிப்ரவரி 7ஆம் தேதி மீண்டும் பேச்சு வார்த்தை.

*இந்தியாவில் ஒலிம்பிக் போட்டி நடத்த முயற்சி - அனுராக் தாக்கூர்

*விளையாட்டுகளின் தலைநகராக தமிழ்நாட்டை உயர்த்துவதே அரசின் குறிக்கோள் முதல்வர் மு க ஸ்டாலின்.

Today's Headlines

*Indian Railways are transforming into Swiss train service standards.

*Chief Minister M. K. Stalin inaugurated the new flyover construction team on Anna Road.

* There will be a Re-talk with transport unions on 7th February.

*Trying to hold Olympics in India - Anurag Thakur

* CM Stalin said the goal of TN government is to promote Tamil Nadu as a sports capital.

 Prepared by

Covai women ICT_போதிமரம்

Thursday, January 18, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.01.2024

   

சேரர்


திருக்குறள்

பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : நிலையாமை

குறள்:337

ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல.

விளக்கம்:

 ஒரு பொழுதுகூட வாழ்க்கையைப் பற்றி உண்மையைச் சிந்தித்து அறியாதவர்களே, ஆசைக்கோர் அளவின்றி மனக் கோட்டைகள் கட்டுவார்கள்.

பழமொழி :

Look before you leap

ஆழம் தெரியாமல் காலை விடாதே

இரண்டொழுக்க பண்புகள் :1

1. பெரியோர் , பெற்றோர்,  ஆசிரியர்களை மதித்து நடப்பேன்.

2. அவர்கள் மனம் புண் படும் படி பேசவோ நடந்து கொள்ளவோ மாட்டேன்.

பொன்மொழி :

மகிழ்ச்சியாக இருக்கும்போது நீங்கள் அழகாக இருக்கிறீர்கள். --ஆஸ்கார் வைல்ட்

பொது அறிவு :

1. இந்தியாவில் வைர (diamond) சுரங்கங்கள் எங்குள்ளன?

விடை: பன்னா 

2. பனம் பூ மாலையை அணிந்தவர்கள் யார்?

விடை: சேர அரசர்கள் 

English words & meanings :

 knack - an acquired or natural skill for doing something. சாமர்த்தியம். kayak – a different type of boat used mainly by Inuit people or Eskimos. . வட துருவ எஸ்கிமோக்களால் பயன்படுத்தப்படும் பனிப் படகு

ஆரோக்ய வாழ்வு : 

முருங்கை கீரை : சத்தில்லாத குழந்தைகள், முருங்கை சூப் தினமும் அருந்தினால் பலம் பெற்று ஆரோக்கியம் பெறுவது உறுதி.

நீதிக்கதை

 செல்வந்தர்க்கு ஒரு நண்பர் இருந்தார். அவர் பேனா வைக்கும் இடத்தை அடிக்கடி மறந்து விடுவார். இதனால் விலை மலிவாக நிறைய பேனா வாங்கி, தொலைத்து விடுவார். இந்த கவனக் குறைவை நினைத்து மிகவும் மனம் வருந்தினார். அப்போது செல்வந்தர் தன் நண்பருக்கு ஒரு ஆலோசனை வழங்கினார். மிகவும் விலை உயர்ந்த பேனா ஒன்று வாங்க சொன்னார். அதன் படியே 22 காரட் தங்கத்தால் ஆன பேனா ஒன்றை வாங்கினார். பிறகு ஆறு மாதம் கழித்து செல்வந்தர் அந்த நண்பரை சந்தித்தார். பேனா மறதியை பற்றி விசாரித்தார். அந்த தங்க பேனாவை தான் மிகவும் கவனமாக வைத்துக் கொள்வதாகவும், முன்பு இருந்ததை விட தன்னுடைய செயல்பாடுகளில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் தெரிவித்தார். இதுதான் நம்முடைய வாழ்க்கையிலும் நடந்து கொண்டிருக்கிறது. நாம் மதிப்பாக உணரும் ஒவ்வொன்றையும் கவனத்துடன் பார்த்துக் கொள்கிறோம்.

இன்றைய செய்திகள்

19.01.2024

*இந்திய அளவில் 25 சதவீதம் இளைஞர்களால் சரளமாக இரண்டாம் வகுப்பு பாடத்தை கூட படிக்க முடிவதில்லை - ஆய்வறிக்கையில் தகவல்.

* ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் சேர்க்கப்படும் 
போக்சோ சட்டம் : அடுத்த கல்வியாண்டில் அமல்.

* பிரதமர் மோடி இன்று சென்னை - நேரு விளையாட்டு அரங்கில் கேலோ இந்தியா யூத் கேம்ஸ் 2023 விளையாட்டுப் போட்டியை துவங்கி வைக்கிறார்.

* சென்னை மெட்ரோ ரயில் 2வது கட்ட திட்டத்தில் கலங்கரை விளக்கம் - போட் கிளப் வரை சுரங்கம் அமைக்கும் பணியை தொடங்கியது ‘கழுகு’ என பெயரிடப்பட்ட இயந்திரம்.

*புரோ லீக் கபடி: ஹைதராபாத்தில் இன்று நான்கு அணிகள் மோதல்.

Today's Headlines

*25 percent of India's youth are unable to read even a second-grade subject fluently - reports from research.

 *  POCSO Act will be included in Class 7 Social Science
  : it comes into effect from next academic year.

 * Prime Minister Modi will inaugurate the Kalo India Youth Games 2023 at the Nehru Sports Arena in Chennai today.

 * An engine named 'Eagle' started the tunneling work for Chennai Metro Rail Phase 2 project from  Lighthouse - Boat Club.

 *Pro League Kabaddi: Four teams clash in Hyderabad today.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Wednesday, January 17, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 18.01.2024

   

சோழர் கொடி


திருக்குறள்

பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : நிலையாமை

குறள்:336

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு.

விளக்கம்:

 இந்த உலகமானது, நேற்று உயிருடன் இருந்தவரை இன்று இல்லாமல் செய்து விட்டோம் என்ற அகந்தையைப் பெருமையாகப் கொண்டதாகும்.


பழமொழி :

Live with in your means

வரவுக் கேற்ற செலவு செய்

இரண்டொழுக்க பண்புகள் :1

1. பெரியோர் , பெற்றோர்,  ஆசிரியர்களை மதித்து நடப்பேன்.

2. அவர்கள் மனம் புண் படும் படி பேசவோ நடந்து கொள்ளவோ மாட்டேன்.

பொன்மொழி :

இந்த வாழ்க்கையில் ஒரே ஒரு மகிழ்ச்சி மட்டுமே உள்ளது, நேசிப்பது மற்றும் நேசிக்கப்படுவது. --ஜார்ஜ் சாண்ட்.

பொது அறிவு :

1. ஃபிராஷ் முறை மூலம் சேகரிக்கப்படும் தனிமம் எது?

விடை: கந்தகம் (சல்ஃபர்)

2. உறையூர் யாருடைய தலைநகரம்?

விடை: சோழர்கள் 

English words & meanings :

 jaunt- a short journey for pleasure(சுற்றுலா). javeline- a spear (ஈட்டி).

ஆரோக்ய வாழ்வு : 

முருங்கை கீரை : கால்சியம், இரும்புச் சத்து, வைட்டமின் பி, பி2, வைட்டமின் சி சத்துகள் மிகுதியாக உள்ளன.

நீதிக்கதை

 ஒரு நாள் மாலை ஒரு தாத்தா தன் பேரனுக்கு நீதிக்கதைகள் சொல்லிக் கொண்டிருந்தார். அதாவது, நம்மிடையே எப்பொழுதும் இரு விலங்கு போன்ற குணங்களுடன் சண்டை நடந்து கொண்டிருக்கிறது. ஒன்று மிகவும் நல்ல பண்பு, பாசம், நேசம், மனிதத்தன்மை, உண்மை போன்ற குணங்கள். மற்றொன்று கோபம், பொறாமை, பொய், தான் மட்டுமே எல்லாமும் எனப்படும் ஈகோ போன்ற குணங்கள் என்று கூறினார். அப்போ இதில் எந்த விலங்கு ஜெயிக்கும் என்று கேட்டான் சிறுவன். தாத்தா... நீ எதற்கு உணவு கொடுக்கிறாயோ அதுவே ஜெயிக்கும் என்றார். நாம் எப்போதும் நல்லவற்றையே நினைப்போம், செய்வோம், நல்லதே நடக்கும்.

இன்றைய செய்திகள்

18.01.2024

*நாடு முழுக்க 1200 ஐ கடந்த கொரோனா ஜே.என். 1 தொற்று.  1.1% பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி.

*மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் விமான ஓடுபாதையில் பயணிகள் உணவருந்திய விவகாரத்தில் இண்டிகோ நிறுவனத்திற்கு ரூபாய் 1.50 கோடி அபராதம்.

* தமிழரின் வீர விளையாட்டை ஊக்குவிப்போம்! பண்பாட்டை காப்போம்! - ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து. 

*பூரணம் அம்மாளுக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் நிலத்தை மதுரை கொடிக்குளம் அரசு நடுநிலை பள்ளிக்கு கொடையாக வழங்கினார். அச்செயலைப் பாராட்டி உதயநிதி அமைச்சர் பூரணம் அம்மாளை நேரில் சந்தித்து வாழ்த்தினார்.

*டி20 யில் ஐந்தாவது சதம் ஒரே போட்டியில் இரண்டு பேரின் சாதனைகளை முறியடித்த ரோகித்.

Today's Headlines

*Corona J.N. 1 Infection has crossed 1200 in the whole country.   1.1% of patients are in intensive care unit.

 * Let's promote Tamil's heroic game!  Let's preserve the culture of Tamilnadu!  -  Minister Mr. Udhayanithi Stalin wished the Jallikattu Players.

* INDIGO fined Rs 1.50 crore for passengers eating on the runway in Mumbai, Maharashtra.

 *Pooranam Ammal donated one and a half acres of land to Kodikulam Government Middle School, Madurai.
 Appreciating this act, minister Udhayanidhi met Poornam  Ammal in person and congratulated her.

 * Rohit's fifth T20 century broke the records of two person in one match.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Thursday, January 11, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12.01.2024

    


திருக்குறள்

பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : நிலையாமை

குறள்:335

நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்.

விளக்கம்:

 வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்து நம் உயிர் இருக்கும் போதே உயர்ந்த நற்பணிகளை ஆற்றிட முனைய வேண்டும்.

பழமொழி :

Live not to eat, but eat to live

உண்ண வாழாதே, வாழ்வதற்காக உண்

இரண்டொழுக்க பண்புகள் :1

1. பெரியோர் , பெற்றோர்,  ஆசிரியர்களை மதித்து நடப்பேன்.

2. அவர்கள் மனம் புண் படும் படி பேசவோ நடந்து கொள்ளவோ மாட்டேன்.

பொன்மொழி :

உங்கள் வாழ்க்கையின் மகிழ்ச்சி உங்கள் எண்ணங்களின் தரத்தைப் பொறுத்தது. --மார்கஸ் ஆரேலியஸ்

பொது அறிவு :

1.ஜம்மு காஷ்மீரின் அரசாங்க மொழி எது?

விடை: உருது

2. இந்தியாவின் தென்கிழக்கு கடற்கரை கிராமம் எது?

விடை: தனுஷ்கோடி 

English words & meanings :

 Intermittent-periodic (இடைப்பட்ட). Insane-crazy(பைத்தியக்காரன்).

ஆரோக்ய வாழ்வு : 

முருங்கை கீரை : முருங்கை இலையினுடைய பொடியானது மூளையின் ஆரோக்கியத்துக்கு மிக்ப பெரிய அளவில் உதவுகின்றது. இது அல்சைமர் நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இதில் உள்ள வைட்டமின் இ மற்றும் வைட்டமின் சி ஆகியவை மன வளம், நியாபக சக்தி  ஆகியவற்றைப் பாதுகாக்க உதவுகிறது

ஜனவரி 12

தேசிய இளைஞர் நாள்


சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான சனவரி 12 ஆம் தியதி தேசிய இளைஞர் நாள் (National Youth Day) என இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.

1984 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் இந்நாளினை "தேசிய இளைஞர் நாளாக" அறிவித்தது, அதைத்தொடர்ந்து 1985-ல் சனவரி 12-ம் திகதி முதன்முதலாக கொண்டாடப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது

நீதிக்கதை

 தவறான வழிகாட்டி


ஒரு ஊரில் ஒரு இளைஞன் இருந்தான். அவன் மிகவும் ஊதாரியாக இருந்தான். தனது மூதாதையர் சேர்த்து வைத்திருந்த சொத்தையெல்லாம் விற்று வாழ்ந்து வந்தான். கடைசியில் அவனிடம் ஒரே ஒரு அழகான போர்வை மட்டும் எஞ்சியிருந்தது.

அவன் கோடை காலத்தில் மட்டுமே வெளியே வரும் தூக்கணாங்குருவி வகைப் பறவையை ஒருநாள் கண்டான்.

அவன் கோடை காலத்தில் மட்டுமே வெளியே வரும் தூக்கணாங்குருவி வகைப் பறவையை ஒருநாள் கண்டான்.

குளிர்காலம் முடிந்து விட்டது என்று எண்ணி வெளியே வந்திருந்த அந்தப் பறவை குளத்து நீரின் மேல் தத்தி விளையாடிய படி ஆனந்தமாக கீச்கீச் என்று பாட்டுப் பாடிக் கொண்டிருந்தது. அதைக் கண்ட அவன் கோடை காலம் வந்து விட்டது. ஆகவே இனி போர்வைக்கு வேலை இல்லை என்று எண்ணி அதையும் விற்றுத் தின்றான்.

ஆனால் குளிர்காலம் மீண்டும் வந்து விட்டது. குளிர் அதிகமாக இருந்தது. உறைபனி கொட்ட ஆரம்பித்தது. போர்த்திக் கொள்ளப் போர்வை இல்லாமல் அவன் வாடினான்.

ஒருநாள், அவன் சாலையில் அந்தப் பறவை இறந்து கிடப்பதைப் பார்த்தான். அவன் அதனிடம் சென்று, "அட, கேடு கெட்ட பறவையே... வசந்தம் வருவதற்கு முன்னதாக

வெளியே வந்து குளிரில் மாட்டிக் கொண்டு நீ இறந்ததும் அல்லாமல் என்னையும் இப்படி போர்வை இல்லாமல் குளிரில் வாடச் செய்து விட்டாயே” என்று புலம்பினான்.


நீதி : 'சும்மா கிடந்த சங்கை ஊதித் கெடுத்தானாம் ஆண்டி' என்பது பழமொழி. அதுபோல சும்மா இருந்தவனை கெடுத்தது அந்தப் பறவை. எனினும் நாம் நல்ல விஷயங்களை மட்டுமே முன் மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

இன்றைய செய்திகள்

12.01.2024

*உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்டுகள்: முதல் இடத்தில் 6 நாடுகள்: பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் ஸ்பெயின். இந்தியாவின் பாஸ்போர்ட் 80வது இடத்தைப் பிடித்துள்ளது.

*அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை- அரசாணை வெளியீடு.

*'ஸ்வச் சர்வேஷன் விருதுகள் 2023' இல் 'சிறந்த செயல் திறன் கொண்ட மாநிலங்கள்' பிரிவில் மகாராஷ்டிரா முதல் இடத்தை பிடித்தது - ஜனாதிபதி திரௌபதி முர்மு விருதுகளை வழங்கினார்.

*ஆப்கானிஸ்தானில் கடும் நிலநடுக்கம்: 6.1 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.

*பொங்கல் சிறப்பு சந்தை தொடக்கம்: கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனைக்கு குவிந்த கரும்பு, மஞ்சள்.

* இலங்கையில் சில ஐபிஎல் போட்டிகளை நடத்துங்கள் - இலங்கை விளையாட்டு துறை அமைச்சர் கோரிக்கை.

Today's Headlines

*World's most powerful passports: Top 6 countries: France, Germany, Italy, Japan, Singapore and Spain.  Passport of India is ranked 80th.

 *Incentives for Govt Transport Employees- Promulgation of Ordinance.

 *Maharashtra stands first in 'Best Performing States' category at 'Swachhservation Awards 2023' - President Draupadi Murmu presented the awards.

 * Severe earthquake in Afghanistan: 6.1 Richter scale reported.

 *Pongal Special Market Opened Sugarcane, Turmeric piled up for sale at Koyambedu Market.

 * Hold some IPL matches in Sri Lanka requested  by Sri Lanka Sports Minister
 Prepared by

Covai women ICT_போதிமரம்