Wednesday, January 10, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 11.01.2024

   

திருப்பூர் குமரன்

 

திருக்குறள்

பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : நிலையாமை

குறள்:334

நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின்.

விளக்கம்:

 வாழ்க்கையைப் பற்றி உணர்ந்தவர்கள், நாள் என்பது ஒருவரின் ஆயுளை அறுத்துக் குறைத்துக் கொண்டேயிருக்கும் வாள் என்று அறிவார்கள்.


பழமொழி :

Live and let live

வாழு, வாழ விடு

இரண்டொழுக்க பண்புகள் :1

1. பெரியோர் , பெற்றோர்,  ஆசிரியர்களை மதித்து நடப்பேன்.

2. அவர்கள் மனம் புண் படும் படி பேசவோ நடந்து கொள்ளவோ மாட்டேன்.

பொன்மொழி :

மற்றவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை ஏற்படுத்த முயற்சிப்பதே மிகவும் மதிப்புமிக்க விடயம். --ராபர்ட் பேடன் பவல்

பொது அறிவு :

1. "அஞ்சுகம்” என்ற சொல் எதைக் குறிக்கும்?

விடை: கிளி 

2. சருமத்தின் மீதுள்ள நிறத்தின் காரணம் எது?

விடை: மெலானின்

English words & meanings :

 humiliate-embrass(அவமானப்படுத்துகின்றன). Haggard - looking tired or worried.(தளர்வுற்றுக் காணப்படுகிற).

ஆரோக்ய வாழ்வு : 

முருங்கை கீரை: பற்களின் உறுதி, நீளமான முடியின் வளர்ச்சி, நரை முடி, தோல் நோய், வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய நோய்களுக்கு முருங்கைக்கீரை நல்ல மருந்தாக உதவுகிறது

ஜனவரி 11


நீதிக்கதை

 உயிரை இழந்த ஓநாய்


வயதின் காரணமாக தளர்ச்சி அடைந்த சிங்கம் நோய் வாய்ப்பட்டு எங்கும் செல்ல முடியாமல் குகைக்குள் அடைந்து கிடந்தது. தங்கள் அரசனான அதை எல்லா மிருகங்களும் வந்து பார்த்து நலம் விசாரித்துச் சென்றன. நரி மட்டும் அந்தக் குகைப் பக்கம் எட்டிப் பார்க்காமல் இருந்தது.

அந்த நரிக்கும் ஒரு ஓநாய்க்கும் ஆகவே ஆகாது. அந்த ஓநாய் 'இதுதான் தக்க சமயம்; நரியைச் சிங்கத்திடம் மாட்டிவிட வேண்டும்' என்று எண்ணிக் கொண்டு சிங்கத்திடம் சென்றது.

"அரசே.... தாங்கள் யார் ? இந்தக் காட்டிலுள்ள எல்லா மிருகங்களுக்கும் அரசன். எல்லா மிருகங்களும் உங்களைப் பார்த்து நலம் விசாரித்துச் செல்கின்றன. ஆனால் இந்த நரி மட்டும் இந்தப் பக்கம் வரவே இல்லை, பார்த்தீங்களா. அந்த அளவுக்கு அதற்குத் திமிர். அரசே. அதை நீங்கள் தண்டிக்க வேண்டும்" என்று அந்த ஓநாய் சிங்கத்திடம் சொல்லிக் கொண்டிருந்தது.

அப்போது அங்கே வந்த நரியின் காதுகளில் ஓநாயின் வார்த்தைகள் விழுந்தன. "ஓஹோ... ஓநாய், என்னை மாட்டிவிடப் பார்க்கிறாயா? நான் உன் கதையையே முடிக்கிறேன்” என்று கறுவிக் கொண்டது.

ஆனால் எதுவுமே தெரியாதது போல் குகைக்குள் நுழைந்து சிங்கத்திற்கு வணக்கம் சொன்னது.சிங்கம் "என்ன நரியே, இப்போது தான் உனக்கு என்னைப் பார்க்க வர நேரம் கிடைத்ததாக்கும் ? என நரியிடம் உறுமியது.

உடனே நரி, "கோபிக்க வேண்டாம் அரசே. அவர்கள் எல்லாம் உங்களைப் பார்த்து நலம் விசாரித்து விட்டுத்தான் சென்றார்கள். அப்படி வாயால் நலம் விசாரித்துத் தங்களுக்கு ஆகப் போவது என்ன? ஆனால் நானோ என்ன செய்தேன் தெரியுமா?"

உங்கள் நோயைக் குணப்படுத்தக் கூடிய மருத்துவரைத் தேடி எட்டுத் திசையும் சென்று தங்கள் நோய்க்கு மருந்து என்ன ? என்று விசாரித்துக் கொண்டு வந்திருக்கிறேன். அதனால் தான் அரசே, இவ்வளவு தாமதமாகத் தங்களைப் பார்க்க வந்துள்ளேன் என்று போலி அடக்கத்துடன் சொன்னது.

சிங்கம், அவர்கள் என்ன மருந்து சொன்னார்கள்? என்று கேட்டது.

நரி, "ஒரு உயிருள்ள ஓநாயின் தோலை உரித்து, அதை உங்கள் உடம்பைச் சுற்றிப் போர்த்திக் கொள்ள வேண்டுமாம். அப்போது தான் உங்கள் நோய் குணமாகும் என்று மருத்துவர்கள் சொன்னார்கள் அரசே" என்று சொன்னது.

உடனே சிங்கம் ஓநாயின் மீது பாய்ந்து தோலை உரிக்க ஆரம்பித்தது. வேதனையால் கதறிய ஓநாயிடம் நரி புன்னகைத்த படி "எஜமானனைக் கெடுக்கிற வேலையைப்

பார்க்காமல், நல்லது செய்கிற வழியைப் பார்க்க வேண்டும் என்றது.


நீதி : "கெடுவான் கேடு நினைப்பான்" என்ற பழமொழிக்கு ஏற்ப

பிறருக்கு கேடு செய்ய நினைத்தாலே அது அவர்களுக்கே கேட்டை விளைவித்து விடும்.

இன்றைய செய்திகள்

11.01.2024

*பொருளாதார நெருக்கடி காரணமாக பிப்ரவரி 1 முதல் கியூபாவில் எரிபொருள் விலை 500 சதவீதம் உயர்வு.

*இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான நட்பும் வர்த்தகமும் தொடர்ந்து வளர்ந்து வருகிறது - ஐக்கிய அரபு அமீரக அதிபர்.

*வரும் 19ஆம் தேதி போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் மீண்டும் முத்தரப்பு பேச்சு வார்த்தை - அமைச்சர் சிவசங்கர்.

*பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நெல்லை, தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில்கள்...!

*ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக பொதுமக்களிடம் ஆலோசனை கேட்கப்பட்டது. இதுவரை 5000 ஆலோசனைகள் வந்துள்ளது. ஆலோசனைகளை வரும் 15-ம் தேதிக்குள் தெரிவிக்கலாம்.-  உயர் மட்ட குழு அறிவிப்பு.

*ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ்; தகுதிச்சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் ஸ்மித் நாகல் வெற்றி...!

Today's Headlines

*Fuel prices in Cuba increase 500 percent since February 1 due to economic crisis.

 *India-UAE friendship and trade continue to grow - UAE President

 *On coming 19th  again there will be threesome talk with transport unions - Minister Sivashankar.

 *Special trains to Nellai, Tuticorin on the occasion of Pongal...!

 * The public was asked for advice regarding one country, one election.  So far 5000 suggestions have been received.  Suggestions can be made by next 15th.- High Level Committee Notification.

 *Australia Open Tennis;  Indian player Smith Nagal won the qualifying match...!
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Tuesday, January 9, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.01.2024

    

பத்தமடை பாய்

திருக்குறள்

பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : நிலையாமை

குறள்:333

அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல்.

விளக்கம்:

 நம்மை வந்தடையும் செல்வம் நிலையற்றது என்பதை உணர்ந்து அதைக் கொண்டு அப்பொழுதே நிலையான நற்செயல்களில் ஈடுபட வேண்டும்.

பழமொழி :

Little strokes fell great oaks

அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்

இரண்டொழுக்க பண்புகள் :1

1. பெரியோர் , பெற்றோர்,  ஆசிரியர்களை மதித்து நடப்பேன்.

2. அவர்கள் மனம் புண் படும் படி பேசவோ நடந்து கொள்ளவோ மாட்டேன்.

பொன்மொழி :

உண்மையான மகிழ்ச்சி என்பது, எதிர்காலத்தைப் பற்றிய கவலையில்லாமல் நிகழ்காலத்தை அனுபவிப்பதே. --செனிக்கா

பொது அறிவு :

திராவிட மொழி பற்றி ஆராய்ந்த அமெரிக்கர்?

விடை: எமனோ 

 பத்தமடை அமைந்துள்ள மாவட்டம் எது?

விடை: திருநெல்வவேலி 

English words & meanings :

 gloomy- depressing(இருண்ட). gaunt-skinny(மெலிந்த).

ஆரோக்ய வாழ்வு : 

முருங்கை கீரை: ஆஸ்துமா, மார்புச் சளி, போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை கீரையை சூப் செய்து குடிக்க வேண்டும்.

நீதிக்கதை

 சிக்கிக் கொண்ட குரங்கு


ஒருமுறை விலங்குகளின் சபையில் ஒரு குரங்கு நடனமாடியது. அதன் நடனத்தில் மகிழ்ந்து போன விலங்குகள் அந்தக் குரங்கைத் தமது அரசனாக ஏற்றுக் கொண்டன.'

ஒரு நரி அந்தக் குரங்கின் மீது பொறாமை கொண்டது. எப்படியாவது அந்தக் குரங்கை மட்டம் தட்ட வேண்டும் என அது விரும்பியது.

ஒரு நாள் அந்த நரி ஒரு வலையில் இறைச்சித் துண்டு இருப்பதைக் கண்டது. குரங்கை அந்த இடத்திற்கு அழைத்து வந்து வலையில் சிக்க வைக்கத் திட்டம் போட்டது.

அது குரங்கிடம் வந்து, "அரசே, வணக்கம். ஓரிடத்தில் ஒரு புதையல் இருப்பதைப் பார்த்தேன். அது நமது அரசுக்குச் சொந்தம் என்பதால் நான் அதைத் தொடவே இல்லை. அரசரான தாங்கள் வந்து அதை எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன்” என்று பவ்வியமாகச் சொன்னது.

மிகக் கம்பீரமாகக் கிளம்பிய குரங்கு முன் எச்சரிக்கை இல்லாமல் அந்த வலையில் சிக்கிக் கொண்டது. நரி தன்னை ஏமாற்றி மோசம் செய்து விட்டதாகப் புலம்பியது.

அதற்கு நரி, இப்படி முன்பின் யோசனை செய்யத் தெரியாத புத்தி இல்லாத நீயெல்லாம் விலங்குகளின் அரசனாக்கும். அரசனைப் பார் அரசனை எனக் கேலி பேசியது.


நீதி : "நுண்ணிய கருமமும் எண்ணித் துணி" என்ற ஒளவையார் கூற்றுப்படி ''சிறிய காரியமாக இருந்தாலும் முன்னெச்சரிக்கையோடு செய்ய வேண்டும்."

இன்றைய செய்திகள்

10.01.2024

*லண்டனில் ராஜ்நாத் சிங்குக்கு ராணுவ மரியாதை உடன் உற்சாக வரவேற்பு.

*முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நான்கு மாதங்களுக்கு ஒத்திவைப்பு.

*உலக தரத்தில் பிரம்மாண்ட ஜல்லிகட்டு போட்டி:  அமைச்சர் எ. வ. வேலு.

*தொடர்மழை!  திண்டுக்கல் மாவட்டத்தில் 39.2 செ.மீ  மழை பதிவு.

* ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம் 6 ரிக்டர் அளவில் பதிவு. 

*மலேசியா ஓபன் பேட்மிண்டன் முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிடாம்பி வெற்றி.

Today's Headlines

*Rajnath Singh was happily welcomed with military honors in London.

* Postponement of NEET examination for postgraduate medical courses by four months.

*  Jallikattu competition in World-class level: Minister A. W. Velu.

* Continuous rain! Dindigul district recorded 39.2 cm rainfall.

* Another 6 Richter scale magnitude of earthquake recorded in Japan.

*India's Srikanth Kidambi wins first round of Malaysia Open Badminton.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Monday, January 8, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.01.2024

    







திருக்குறள்

பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : நிலையாமை

குறள்:332

கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று.

விளக்கம்:

 
சேர்த்து வைத்த பணமும் சொத்தும் ஒருவரை விட்டுப் போவது, கூத்து முடிந்ததும் மக்கள் அரங்கத்தை விட்டுக் கலைந்து செல்வதைப் போன்றதாகும்.


பழமொழி :

Little drops of water make the mighty ocean

சிறு துளி பெரு வெள்ளம்

இரண்டொழுக்க பண்புகள் :1

1. பெரியோர் , பெற்றோர்,  ஆசிரியர்களை மதித்து நடப்பேன்.

2. அவர்கள் மனம் புண் படும் படி பேசவோ நடந்து கொள்ளவோ மாட்டேன்.

பொன்மொழி :

மகிழ்ச்சிக்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது, அது நம் சக்திற்கு அப்பாற்பட்ட விடயங்களைப் பற்றி கவலைப்படுவதை நிறுத்துவதாகும். --எபிக்டெட்டஸ்

பொது அறிவு :

1.தமிழகத்தின் நெற்களஞ்சியம் எது?

தஞ்சாவூர்

2. தமிழகத்தின் ஏரி மாவட்டம் எது?

செங்கல்பட்டு

English words & meanings :

 ferocious -savage(மூர்க்கமான). frivolous - silly(அற்பமான).

ஆரோக்ய வாழ்வு : 

முருங்கை கீரை: முருங்கை இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால், ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் அதிகரிக்கும்.

ஜனவரி 09

வெளிநாடுவாழ் இந்தியர் நாள், 2003 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 9 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இந்தியாவைத் தவிர்த்த பிற நாடுகளில் வாழும் இந்தியர்களின் நினைவாகக் கொண்டாடப்படுகிறது. மகாத்மா காந்தி, தென்னாப்பிரிக்காவிலிருந்து மும்பை வந்து சேர்ந்த நாளின் (ஜனவரி 9, 1915) நினைவாக இந்த நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு இந்திய நகரத்தில் இவ்விழா கொண்டாடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழாவின்போது, வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கும் விருதுகள் வழங்கப்படுகின்றன.

நீதிக்கதை

 புதையல் ரகசியம்


ஒரு ஊரில் ஒரு வயதான விவசாயி இருந்தார். அவரது மகன்களோ விவசாயத்தில் ஆர்வமின்றி இருந்தனர். தனக்குப் பிறகு அவர்கள் சம்பாத்தியம்  இல்லாமல் துன்பப் படுவார்களே என அவர் கவலைப்பட்டார்.

அவர்களை விவசாயத்தில் ஈடுபடுத்துவதற்காக அவர் ஒரு தந்திரம் வகுத்தார். இறக்கும் தருவாயில் இருந்த போது அவர்களை அழைத்தார். வயலில் ஓரிடத்தில் தான் மிகப் பெரும் புதையலைப் புதைத்து வைத்திருப்பதாகச் சொன்னார்.

அவர் இறந்த பின்னர் அவர்கள் மண்வெட்டி, கடப்பாரைகளை எடுத்துக் கொண்டு வயலுக்குச் சென்று ஆழமாகத் தோண்டினர். அவர்களுக்குப் புதையல் கிடைக்க வில்லை. ஆனால் மண் நன்கு பண்படுத்தப்பட்டதால் அந்த ஆண்டு நல்ல விளைச்சல் ஏற்பட்டு அதன் மூலம் நல்ல பணவரவு அவர்களுக்கு வந்தது.


நீதி : முன்னேறுவதற்கு முயற்சி செய்ய வேண்டும். முயன்றால் முடியாதது இல்லை.

இன்றைய செய்திகள்

09.01.2024

*பூண்டி ஏரி தண்ணீர் திறப்பு அதிகரிப்பு. இதன் மொத்த கொள்ளளவு 3231 மில்லியன் கன அடி ஆகும். 3073 மி. கன அடி தண்ணீர் தற்போது உள்ளது.

*திட்டமிட்டபடி இன்று முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.

*தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உணவுக்குழாய் புற்று நோய்க்கு முதல் முறையாக நவீன அறுவை சிகிச்சையில் வெற்றி.

*வரும் வருகிற 12-ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் பொங்கலுக்கு 16932 சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு அமைச்சர் சிவசங்கர்.

*பாகிஸ்தான் டி20 அணியின் துணை கேப்டனாக ரிஸ்வான் நியமனம்.

*கிரிக்கெட்: புதிய விதிமுறைப்படி முந்தைய ஓவர் முடிந்து 60 வினாடிகளுக்குள் பந்துவீச்சு அணி அடுத்த ஓவரை வீச தயாராக வேண்டும். மூன்று முறை தாமதம் நிகழும் போது 5 ரன்கள் பந்துவீச்சு அணிக்கு அபராதம் விதிக்கப்படும்- ஐசிசி அறிவிப்பு.

Today's Headlines

*Increase in release of water from Poondi Lake.  Its total capacity is 3231 million cubic feet. At present there is 3073 m.cubic feet of water in the dam.

 *Transport workers have announced that they will go on an indefinite strike from today as planned.

 *Success in modern surgery procedure for esophageal cancer at Theni Government Medical College Hospital for the first time.

 *Minister Sivashankar said that it has been decided to run 16932 special buses for Pongal across Tamil Nadu from 12th to 14th.

 *Rizwan appointed as vice-captain of Pakistan T20 team.

 *Cricket: According to the new rule, the bowling team should be ready to bowl the next over within 60 seconds of the previous over.  5 runs to penalize to the bowling team for three delays - ICC Notification
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Sunday, January 7, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 08.01.2024

    

ஸ்டீபன் ஹாக்கிங்

திருக்குறள்

பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : நிலையாமை

குறள்:331

நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை.

விளக்கம்:

 நிலையற்றவைகளை நிலையானவை என நம்புகின்ற அறியாமை மிக இழிவானதாகும்.


பழமொழி :

Like father like son

தந்தை எவ்வழி, தமையன் அவ்வழி

இரண்டொழுக்க பண்புகள் :1

1. பெரியோர் , பெற்றோர்,  ஆசிரியர்களை மதித்து நடப்பேன்.

2. அவர்கள் மனம் புண் படும் படி பேசவோ நடந்து கொள்ளவோ மாட்டேன்.ன்.

பொன்மொழி :

மகிழ்ச்சியின் ரகசியம் சுதந்திரம், சுதந்திரத்தின் ரகசியம் தைரியம். --கேரி ஜோன்ஸ்

பொது அறிவு :

1. தமிழகத்தில் முதன்முதலில் தொடங்கப்பட்ட இரயில் நிலையம்?

ராயபுரம்

2. தமிழகத்தின் ஆக்ஸ்போர்ட் எது?

பாளையங்கோட்டை

English words & meanings :

 Desalination -the process of removing salt from seawater, கடல் நீரில் இருந்து உப்பு அகற்றுதல். 
revitalize –restore something to life or give it new life. புத்துயிர் பெறுதல்/கொடுத்தல்

ஆரோக்ய வாழ்வு : 

முருங்கை கீரை : முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணிவதுடன், மலச்சிக்கல் நீங்கும்.

ஜனவரி 08

ஸ்டீவன் வில்லியம் ஹாக்கிங்


ஸ்டீவன் வில்லியம் ஹாக்கிங் (Stephen William Hawking, ஜனவரி 8 , 1942 -14 மார்ச்சு 2018)[3] ஆங்கிலேய கோட்பாட்டு அறிவியலாளரும்அண்டவியலாளரும், நூலாசிரியரும் ஆவார். இவர் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தின் கோட்பாட்டு அண்டவியல் மையத்தின் இயக்குநராகப் பணியாற்றினார்.[4][5] இவர் உரோசர் பென்ரோசுடன் இணைந்து பொதுச் சார்புக் கோட்பாட்டில் புவியீர்ப்பு அருநிலைத் தேற்றங்களை நிறுவியமை, ஆக்கிங்கு கதிரியக்கம் என அழைக்கப்படும் கருந்துளைகளின் கதிர்வீச்சு உமிழ்தலை எதிர்வுகூறியமை போன்ற அறிவியல் ஆய்வுகளுக்காகப் பெரிதும் அறியப்படுகிறார். இவரே முதன் முதலில் அண்டவியலுக்கான கோட்பாட்டை உருவாக்கி, பொதுச் சார்புக் கோட்பாடு, குவாண்டம் இயங்கியல் ஆகியவற்றின் மூலம் விளங்கப்படுத்தினார். குவாண்டம் இயங்கியலின் பல-உலகங்களுக்கான விளக்கத்திற்குத் தீவிர ஆதரவாளராக விளங்கினார்.

நீதிக்கதை

 ஐந்தில் வளைக்காதது...


ஒரு சிறுவன் பள்ளியில் படிக்கும் போது அருகில் இருந்த ஒருவனின் பாடப் புத்தகத்தைத் திருடினான். அதை வீட்டிற்குக் கொண்டு வந்து அம்மாவிடம் கொடுத்தான். அம்மா அவனை அடித்துத் திருத்தாமல் இந்த மாதிரித் திருடுமாறு ஊக்கப்படுத்த வேறு செய்தாள்.

அடுத்த முறை அவன் ஒரு கடிகாரத்தைத் திருடிக் கொண்டு வந்தான். அம்மாவிடம் கொடுத்தான். அம்மா இம்முறையும் அவனை ஊக்கப்படுத்தினாள்.

இளைஞனானதும் அவன் ஒரு பண்ணைக்குச் சென்று அங்கிருந்த மதிப்பு மிக்க பொருள்களைத் திருடினான். ஆனால் கடைசியில் பிடிபட்டான். கைகள் பின்னால் கட்டப்பட்டு அவன் ஊர்ப் பொது இடத்திற்கு அழைத்து வரப்பட்டான்.

அங்கே அவன் காவலர்களால் தண்டிக்கப்பட்டான். அதை அறிந்த அம்மா அங்கே அலறிக் கொண்டு ஓடி வந்தாள். மார்பில் அடித்துக் கொண்டு அழுதாள்.

அவன் "அம்மா, நான் உன் காதில் ஒரு விஷயம் சொல்ல வேண்டும். அருகே வா," என்றான்.

அவள் அவன் அருகே போனதும் அவள் காதுகளைக் கடித்துத் துப்பினான். "என்னடா இப்படிச் செய்கிறாய், உனக்குப் பேய் பிடித்து விட்டதா ?" என அம்மா கேட்ட போது "அம்மா நான் முதன் முதலாகப் பாடப் புத்தகத்தைத் திருடி வந்து உன்னிடம் கொடுத்த போது நீ என்னை அடித்துத் திருத்தி இருந்தால்.... இப்போது ஊரார் என்னை இப்படி அடித்திருக்க மாட்டார்கள். இப்படி ஒரு இழிவான மரணமும் எனக்கு வந்திருக்காது" எனச் சொல்லி விட்டு அவன் இறந்தது போனான்.

நீதி: தவறு சிறியதாய் இருக்கையிலே திருத்திக் கொள்ள வேண்டும். அது போல சிறுவர்கள் சிறு சிறு குற்றங்கள் செய்கிற போது கண்டித்துத் திருத்த வேண்டும்.

இன்றைய செய்திகள்

08.01.2024
*உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல் நாளிலேயே ரூபாய் 5.5 லட்சம் கோடி என நினைக்கப்பட்டு இருந்த இலக்கை எட்டி தமிழக அரசு சாதனை. 

*ஜியோ நிறுவனம் தமிழகத்தில் ரூபாய் 35 ஆயிரம் கோடி முதலீடு முகேஷ் அம்பானி.

*சென்னையில் இரண்டு நாட்கள் கனமழை பெய்யும்; வானிலை ஆய்வு மையம்.

*ரூ. 1000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வினியோகம் தொடங்கியது.

*உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்தியாவை முந்தியது ஆஸ்திரேலியா.

*கூடலூர் பகுதியில் மக்களை அச்சுறுதி வந்த சிறுத்தை சிக்கியது.

Today's Headlines

* Tamil Nadu government achieved the target of Rs 5.5 lakh crore on the first day of the World Investors Conference.

 * Mukesh Ambani invested 35 thousand crore rupees in Jio company in Tamil Nadu.

 *Chennai will experience heavy rain for two days;  Meteorological Centre.

 *Token for Rs.1000 Cash along with Pongal Gift Set  distribution has started.

 * Australia overtook India in World Test Championship's rating  table .

 *The leopard that was threatening people was caught in Kudalur area.
 Prepared by

Covai women ICT_போதிமரம்