Sunday, October 15, 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 16.10.2023

   

உலக உணவு நாள்



திருக்குறள் : 

பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : கூடா ஒழுக்கம்

குறள் :278

மனத்தது மாசாக மாண்டார் நீராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர்.


விளக்கம்:

நீருக்குள் மூழ்கியோர் தம்மை மறைத்துக் கொள்வது போல, மாண்புடையோர் எனும் பெயருக்குள் தம்மை மறைத்துக்கொண்டு மனத்தில் மாசுடையோர் பலர் உலவுகின்றனர்.


பழமொழி :

The double charge will break even a cannon

அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.

இரண்டொழுக்க பண்புகள் :


1. ஊக்கமுடன் உழைத்தால் ஆக்கம் தானாக வரும். எனவே எனது செயல்களை ஊக்கமுடன் செய்வேன். 

2. முயன்றால் பட்டாம்பூச்சி முயலாவிட்டால் கம்பளிப்பூச்சி. எனவே சோர்ந்து போகாமல் முயற்சி செய்வேன்.

பொன்மொழி :

உலகின் முதல் மருந்து சுத்தமான தண்ணீரே. -- செக்கோஸ்லோவேக்கியா நாட்டு பொன்மொழி

பொது அறிவு :

1. அதிக மக்கள் அடர்த்தியை கொண்ட கண்டம் எது?

விடை: ஐரோப்பா


2. உலகிலேயே மிகப் பெரிய நூலகம் எங்கு உள்ளது?

விடை: வாஷிங்டன் D.C. (அமெரிக்கா)


English words & meanings :

 fusion - the process or result of joining two or more things, இணைவு spark-a small fiery particle from a fire, தீப்பொறி

ஆரோக்ய வாழ்வு : 

சங்குப்பூ: தலை நோய், கண் நோய்கள், மந்தம் ஆகியவற்றையும் கட்டுப்படுத்தும். சங்குப்பூ மலர்ச்சாறு, கல்லீரலை பலப்படுத்தும். தேமல் மற்றும் கரும்புள்ளிகளைக் குணமாக்கும்

அக்டோபர் 16

உலக உணவு நாள் (World Food Day)

உலக உணவு நாள் (World Food Day) ஆண்டு தோறும் அக்டோபர் 16 ஆம் நாளன்று உலக நாடுகளில் கொண்டாடப்படுகிறது. 1945 ஆம் ஆண்டில் இதே நாளில் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதை நினைவு கூர ஐநா இந்நாளைச் சிறப்பு நாளாக அறிவித்தது. நவம்பர் 1979 ஆம் ஆண்டில் இவ்வமைப்பின் 20வது பொது மாநாட்டில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஹங்கேரியின் முன்னாள் வெளிநாட்டமைச்சர் பால் ரொமானி என்பவரின் முன்முயற்சியினால் இத்தீர்மானம் ஏகமனதாக ஏற்கப்பட்டு தற்போது 150ற்கும் அதிகமான நாடுகளில் இந்நாள் கொண்டாடப்படுகிறது.

2008 ஆம் ஆண்டிற்கான உலக உணவு நாளின் கருப்பொருள் "உலக உணவுப் பாதுகாப்பு: காலநிலை மாற்றம் மற்றும் உயிரியல் ஆற்றலுக்கான சவால்கள்" என்பதாகும்.

நீதிக்கதை

 The Monkeys And The Bell –        

 மணி அடித்த குரங்குகள் :- ஒரு காட்டு பகுதிக்கு பக்கத்துல இருக்குற ஒரு கிராமத்துல ஒரு திருடன் இருந்தான்.

அந்த திருடன் எத பார்த்தாலும் திருடிட்டு போயி காட்டுக்கு அடுத்து இருக்குற ஊருல வித்து வாழ்க்கை நடத்திக்கிட்டு இருந்தான்.

ஒரு நாள் அவன் கோவில் பக்கம் போனான் . அப்ப மணி அடிக்கிற சத்தம் கேட்டுச்சு அவனுக்கு உடனே கோவிலுக்கு போனான் அந்த திருடன்.

அங்க ஒரு பெரிய மணி தொங்கிகிட்டு இருக்குறத பார்த்தான் . அடடா இந்த மணிய திருடி வித்தா ஒரு வாரம் நாம திருட போக வேணாம்னு நினைச்ச அந்த திருடன் அந்த மணிய திருடிட்டு காட்டுவழியா அடுத்த ஊருக்கு நடந்து போக ஆரம்பிச்சான்.

அவன் நடக்க நடக்க அந்த மணி டிங் டாங்குனு சத்தம் கொடுக்க ஆரம்பிச்சுச்சு,அந்த மணியோட சத்தம் காட்டுக்குள்ள ஒரு தூங்கிட்டிருந்த ஒரு புலியோட தூக்கத்த கெடுத்துச்சு.

யாரு மணி அடிச்சு தன்னை எழுப்பிவிட்டானு ரொம்ப கோபத்தோட பார்த்துச்சு அந்த புலி.

புலிய பார்த்ததும் அந்த திருடன் ரொம்ப பயந்து போனான் ,அந்த புலி அவன ஒரு அடி அடிச்சது.

உடனே அந்த திருடனுக்கு ஒரே ரெத்தமா வந்துச்சு ,இந்த மணிய தூக்கிகிட்டு இந்த புலிகிட்ட இருந்து தப்பிக்க முடியாதுனு அந்த மணிய அங்கேயே போட்டுட்டு வேகமா ஓட ஆரம்பிச்சான் திருடன்.

அந்த புலியும் அவன தொரத்திக்கிட்டே போக ஆரம்பிச்சுச்சு அப்பதான் ஒரு குரங்கு கூட்டம் அந்த பக்கமா வந்துச்சுங்க.

அந்த குரங்கு கூட்டம் அந்த மணிய பார்த்ததும் அத எடுத்து அடிச்சி சத்தம் வர வச்சு பாத்துச்சுங்க.

அந்த மணி எழுப்புனா டிங் டாங் சத்தம் கேட்டதும் அந்த குரங்குகளுக்கு ரொம்ப பிடிச்சி போச்சு.

அதனால அதுங்க எல்லாம் ஒண்ணா சேர்ந்து அந்த மணிய எடுத்துக்கிட்டு தாங்க வாழுற பெரிய மரத்துக்கு போச்சுங்க.

அந்த மரம் ஊருக்கு பக்கத்துல இருக்குற காட்டு பகுதியில இருந்ததால , ஒவ்வொரு தடவ அந்த மணிய அடிக்கும் போதும் அது ஊர்காரங்களுக்கு கேட்டுச்சு.

திடீர்னு காட்டுக்குள்ள இருந்து மணி சத்தம் தொடர்ந்து கேட்டதால, ஊர்மக்கள் எல்லாம் ரொம்ப பயந்து போனாங்க.

இரவு பகல்னு தொடர்ந்து மணி சத்தம் கேட்டதால, ஊர்மக்கள் அந்த நாட்ட ஆண்ட ராஜாகிட்ட போயி சொன்னாங்க.

அந்த ராஜா சொன்னாரு இந்த பிரச்சனைக்கு யார் காரணம்னு கண்டுபிடிச்சி ,அந்த மணி சத்தத்தை நிறுத்துறவங்களுக்கு நிறய பரிசு கொடுக்குறேனு எல்லாருகிட்டயும் சொன்னாரு.

இத கேட்ட ஒரு பாட்டி தைரியத்தோட காட்டுக்குள்ள போனாங்க ,அங்க குரங்குகள் மணிய வச்சு விளையாண்டுக்கிட்டு இருந்தத பார்த்தாங்க.

அடடா இது , குரங்குகளோட வேலையானு சொன்ன அந்த பாட்டி ,அந்த மணிய குரங்குங்க கிட்ட இருந்து எப்படி பிடுங்குறதுனு ஒரு திட்டம் போட்டாங்க.

உடனே நேரா சந்தைக்கு போயி நிறைய பழங்கள் காய் கறிகள் எல்லாம் வாங்கி ஒரு கூடையில் போட்டு எடுத்துக்கிட்டு திரும்ப அந்த காட்டுக்கு போனாங்க.

காட்டுக்கு போன அந்த பாட்டி குரங்குகளுக்கு தெரியிற மாதிரி அந்த கூடைய வச்சிட்டு தூங்குறமாதிரி நடிக்க ஆரம்பிச்சாங்க

அந்த கூடைய பார்த்த குரங்குகள் மெதுவா மரத்துல இருந்து ஒவ்வொண்ணா இறங்கி வந்து பார்த்துச்சுங்க.

மெதுவா ஒவ்வொரு குரங்கா அந்த கூடையில் இருந்த பழங்களையும் காய்கறிகளையும் எடுத்து திங்க ஆரம்பிச்சுச்சுங்க 

அப்ப மணி வச்சிருந்த குரங்கும் மெதுவா கீழ இறங்கி வந்துச்சு , கீழ வந்த அந்த குரங்கு மணிய கீழ போட்டுட்டு ஒரு பழத்தை எடுத்து திங்க ஆரம்பிச்சுச்சு

இத எல்லாம் ஒர காண்ணால பார்த்துகிட்டு இருந்த அந்த பாட்டி டக்குனு அந்த மணிய எடுத்துகிட்டாங்க

மணிய எடுத்த பாட்டி நேரா அரசர்கிட்ட போயி நடந்தது எல்லாம் சொன்னாங்க , தைரியத்தோடவும் புத்திசாலித்தனத்தோடவும் மணிய எடுத்துட்டு வந்து பிரச்னையை தீர்த்த அந்த.    பாட்டிக்கு நிறைய பரிசு கொடுத்தாரு அந்த ராஜா.       நீதி: துணிவுடன் செயல்படுவோம்.வெற்றியினை பெறுவோம்.

இன்றைய செய்திகள்

16.10.2023

*தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை கனமழைக்கு வாய்ப்பு.

*அமெரிக்காவில் அம்பேத்கரின்  19 அடி உயர சிலை திறப்பு.

* அண்ணா பல்கலைக்கழகத்தில் அப்துல் கலாம் முழு உருவச் சிலை: முதலமைச்சர் திறந்து வைத்தார்.

* அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு மராத்தான் போட்டிகள்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் தொடங்கி வைத்தார்.

* உலகக் கோப்பை கிரிக்கெட்- இலங்கை கேப்டன் தசுன் ஷனகா காயத்தால் விலகல்.

* பாகிஸ்தானை பந்தாடிய இந்தியா: பந்துவீச்சாளர்களை பாராட்டிய ரோகித் சர்மா.


Today's Headlines

* Heavy rain is likely in 14 districts of Tamil Nadu today and tomorrow.

*19-feet-tall statue of Ambedkar inaugurated in USA.

* Full-length statue of Abdul Kalam at Anna University: Chief Minister inaugurates.

* Marathon competitions on Abdul Kalam's birthday: ISRO chief Somnath inaugurated.

* Cricket World Cup- Sri Lanka captain Dasun Shanaka withdraws due to injury.

* India beat Pakistan: Rohit Sharma praised the bowlers.
 Prepared by

Covai women ICT_போதிமரம்





Thursday, October 12, 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 13.10.2023

   

சிறிய கண்டம் - ஆஸ்திரேலியா

திருக்குறள் : 


பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : கூடா ஒழுக்கம்

குறள் :277

புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி
முக்கிற் கரியார் உடைத்து.

விளக்கம்:

வெளித்தோற்றத்துக்குக் குன்றிமணி போல் சிவப்பாக இருந்தாலும், குன்றிமணியின் முனைபோலக் கறுத்த மனம் படைத்தவர்களும் உலகில் உண்டு.



பழமொழி :

Do what you can with what you have where you are

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்

இரண்டொழுக்க பண்புகள் :


1. போதும் என்னும் மனமே பொன் செய்யும் மருந்து என்பதால் எனக்கு இருப்பது போதும் என்று இருப்பேன்.
 

2. என் ஆசிரியரையும் பெற்றோரையும் கஷ்டப் படுத்தும் எந்த காரியத்தையும் செய்ய மாட்டேன்.

பொன்மொழி :

நாங்கள் எப்போதும் ஒரு சிறந்த பெண்ணைக் கொண்டாடுகிறோம். ஆனால், , பெண் குழந்தைகளை சிறுவயதிலிருந்தே சிறந்து விளங்க ஊக்குவிக்க வேண்டும்” என்றார். - பரிசு குகு மோனா

பொது அறிவு :

1. உலகின் மிகப்பெரிய தீவு எது?

விடை: கிரீன்லாந்து


பெரிய தீவு - கிரீன்லாந்து



2. உலகின் மிகச்சிறிய கண்டம் எது?

விடை: ஆஸ்திரேலியா

English words & meanings :

 formidable (adj)- dangerous வலிமையான, பயங்கரமான. confounded (adj.) - confused குழப்பமடைந்த

ஆரோக்ய வாழ்வு : 

வாழைப்பூ: உடல் வெப்பநிலையை குறைக்கும் தன்மை கொண்டது. வாழைப்பூவில் உள்ள நரம்பை நீக்கிவிட்டு வாழைப்பூவை நன்றாக வேகவைத்து சாப்பிட வேண்டும். 

நீதிக்கதை

 ஆபத்து வேளையில் உதவியவர் யார்?

ஒரு சிறிய நகரத்தில் அந்தணர் ஒருவர் வாழ்ந்து வந்தார்.

அவர் பலருக்குக் கல்வி கற்றுக் கொடுத்து, அதனால் கிடைக்கும் பொருளில் வாழ்க்கை நடத்தினார்.

அவருக்கு இரண்டு மகன்கள். மூத்தவன் சோமன். இளையவன் காமன்.

மூத்தவன் சோமன், உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற வேறுபாடு இல்லாமல், அனைவரையும் சமமாகக் கருதி பழகுவது அவன் வழக்கம்.

இளையவன் கல்வியில் ஆர்வம் கொண்டிருந்தான். கல்வி போதித்து வந்தான். அந்தணரான தந்தை இறக்கவே, இருந்த சிறிது நிலத்தை அண்ணனும் தம்பியும் பகிர்ந்து கொண்டனர்.

மூத்தவனான சோமன் விவசாயத்தில் ஈடுபட்டு உழைக்கலானான். ஒரு நாள், சோமன் தாழ்த்தப்பட்ட இனத்து இளைஞர்களோடு உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தான்

அதைக் கண்டு வெறுப்படைந்த அந்தணப் பெரியவர் ஒருவர், சோமனிடம் “நீ அந்தண குலத்தில் பிறந்தவன் அல்லவா? தாழ்த்தப்பட்ட இனத்தவர்களுடன் பழகலாமா?” என்று கண்டித்து அவனை ஏசினார்.

பெரியவரின் பேச்சு அவனுக்குக் கோபத்தைத் தூண்டியது, “கடவுளின் படைப்பில் உயர்வு தாழ்வு எப்படி இருக்க முடியும்? பிறப்பு என்பது எல்லோருக்கும் சமம். அதில் வேறுபாடு காண்பது முட்டாள்தனமானது. மேலும், அந்த தாழ்த்தப்பட்ட இனத்தவர், உழுது பயிர் செய்து தருவதைத்தானே அனைவரும் சாப்பிடுகிறோம். அதில் வேறுபாடு காண்கிறோமா? மக்களின் பிறப்பில் உயர்வு தாழ்வு கற்பிப்பது முட்டாள் தனமானது.” என்று கூறினான்.

பெரியவர் பேசாமல் சென்று விட்டார்.

சில நாட்களுக்குப் பிறகு, அந்த அந்தணப் பெரியவர் சாலையில் சென்று கொண்டிருந்த போது, மயக்கமுற்றுக் கீழே விழுந்துவிட்டார். அதைப் பார்த்த தாழ்த்தப்பட்ட இனத்தவன் ஒருவன், ஓடி வந்து, அவர் முகத்தில் தண்ணீர் தெளித்து, சிறிது தண்ணீர் குடிக்கச் செய்து, அருகில்இருந்த, தன் குடிசைக்குத் தூக்கிச் சென்று மயக்கத்தை தெளியவைத்து உதவினான்.

பெரியவர் எழுந்து புறப்படும் போது எதிர்பாராமல் அங்கே வந்த சோமன், “அந்தணப் பெரியவர்! மயக்கமுற்று கீழே விழுந்த உங்களைக் காப்பாற்றி உயிர்பிழைக்கச் செய்தவன் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவன் என்பதை நினைத்துப் பாருங்கள் உங்கள் இனத்தவர் வரும்வரை காத்திருந்தால் நீங்கள் செத்துப் போயிருப்பீர்கள்” என்று இடித்துக் காட்டினான். பெரியர் தலைகவிழ்ந்து, எதுவும் பேசாமல் நடக்கலானார்.

இன்றைய செய்திகள்

13.10.2023

*மாற்றுத்திறனாளிகள் அருங்காட்சியகத்துக்கு டெல்லியில் "உலகளாவிய வடிவமைப்பு" விருது கிடைத்தது; முதலமைச்சரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

* தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வராததால் தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்குவதில் தாமதம்.

*தரைவழி தாக்குதலை தொடங்க இஸ்ரேல் ராணுவம் தயாராகிறது. காசாவிலிருந்து நான்கு லட்சம் பேர் வெளியேறினர்.

* மதுரை - சிங்கப்பூர் இடையே வருகிற 22ஆம் தேதி முதல் தினசரி விமான சேவை- ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவிப்பு.

*செம்மஞ்சேரியில் அதிநவீன உலகளாவிய விளையாட்டு நகரம் அமைக்கப்படவுள்ளது.

 *உலகக்கோப்பை கிரிக்கெட்: சேப்பாக்கத்தில் இன்று 2வது போட்டி நியூசிலாந்து- வங்காளதேசம் மோதல்.

Today's Headlines

*Museum for Persons with Disabilities received "Global Design" award in Delhi;  They showed it to the Chief Minister and CM congradulated them. 

 * Delay in onset of North East Monsoon in Tamil Nadu as South West Monsoon has not ended.

 *Israeli army prepares to launch ground attack.  Four lakhs people left Gaza.

*There will be daily flight service between Madurai and Singapore from 22nd onwards- Announced by Air India Express.

 * A state-of-the-art global sports city will be set up at Semmanchery.

  *World Cup Cricket: 2nd Match today in Chepak between New Zealand-Bangladesh.
 Prepared by

Covai women ICT_போதிமரம்



Wednesday, October 11, 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12.10.2023

   

ஆரியபட்டா செயற்கைகோள்


திருக்குறள் : 


பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : கூடா ஒழுக்கம்

குறள் :276

நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல்.

விளக்கம்:

மனத்துள் எதையும் வெறுக்காமல், வெளியே வெறுத்தவர் போல் ஏமாற்றி வாழும் மனிதரைக் காட்டிலும் கொடியவர், இவ்வுலகத்தில் இல்லை.



பழமொழி :

Do i Rome as Romans do

ஊரோடு ஒத்து வாழ்

இரண்டொழுக்க பண்புகள் :


1. போதும் என்னும் மனமே பொன் செய்யும் மருந்து என்பதால் எனக்கு இருப்பது போதும் என்று இருப்பேன்.
 

2. என் ஆசிரியரையும் பெற்றோரையும் கஷ்டப் படுத்தும் எந்த காரியத்தையும் செய்ய மாட்டேன்.

பொன்மொழி :

ஒரு மகள் இந்த உலகம் கொடுக்க வேண்டிய மிக அழகான பரிசுகளில் ஒன்றாகும்." - லாரல் அதர்டன்

பொது அறிவு :

1. "பஞ்சாப் கேசரி ” என்றழைக்கப்பட்ட தேசிய தலைவர் யார்?

விடை: லாலா லஜபதிராய்

2. இந்தியாவின் முதல் செயற்கைக் கோள் எது?

விடை: ஆரியபட்டா

English words & meanings :

 centuries(n)(செஞ்சுரீஸ் )- a period of several hundred years நூற்றாண்டுகள். crinkly (adj)(க்ரிங்க்லி)- with many folds or lines சுருக்கங்கள் நிறைந்த.

ஆரோக்ய வாழ்வு : 

வாழைப்பூ: ரத்த அழுத்தம், ரத்த சோகை உள்ளவர்கள் சாப்பிடலாம்வாரத்திற்கு இருமுறை சாப்பிடலாம்.  

நீதிக்கதை

 வாரணாசியை ஆட்சி செய்த பிரம்ம தத்தரின் அமைச்சர் போதிசத்துவர்; கூர்மதி கொண்டவர்.

பிரம்ம தத்தரின் பட்டத்து யானை மகிலா முகன். இயல்பிலேயே மென்மையான குணம் கொண்டது. மகிலா முகன், எல்லோரிடமும் அன்பாக பழகி வந்தது.ஒரு நாள்… நள்ளிரவில், திருடர்கள் சிலர் யானைக் கொட்டடி அருகே வந்து நின்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.

”நாம் இரக்கமற்றவர்களாக இருக்க வேண்டும். நமக்கு இடையூறு தருபவர்களை தயவுதாட்சண்யம் இன்றி கொல்ல வேண்டும்” என்ற அவர்களது பேச்சு, மகிலா முகனின் காதுகளிலும் விழுந்தது. இப்படி, திருடர்கள் யானைக் கொட்டடியில் பதுங்கி, தங்களுக்குள் பேசிக் கொள்வது அடுத்தடுத்த நாட்களும் தொடர்ந்தது.

தினமும், திருடர்களின் பேச்சைக் கேட்டு வந்த மகிலா முகன் யானை, ‘இவர்கள் நமக்காகவே போதிக்கின்றனர் போலும்!’ என்று எண்ணிக் கொண்டது.

ஒரு நாள், பாகன் ஒருவன் தன்னருகே வர… அவனை துதிக்கையால் தூக்கி தரையில் அடித்துக் கொன்றது மகிலாமுகன். பாகனின் உறவினர்கள், பிரம்ம தத்தரிடம் வந்து முறையிட்டனர்.

மன்னருக்கு அதிர்ச்சி! ‘சாதுவாக இருந்த மகிலாமுகன், திடீரென்று முரட்டுத்தனமாக நடந்து கொள்வது ஏன்?’ என்று குழம்பினார். முடிவில், அமைச்சர் போதிசத்துவரை வரவழைத்த மன்னர், அவரிடம் நடந்ததை விவரித்து, தகுந்த தீர்வு காணும்படி பணிந்தார்.

யானைக் கொட்டடிக்கு வந்த போதிசத்துவர் மகிலா முகன் யானையைக் கூர்ந்து கவனித்தார். வியாதிக்குரிய அடையாளம் எதுவும் தென்படவில்லை.

உடனே அங்கிருந்த பாகர்களிடம், ”இங்கே புதிய ஆசாமிகள் எவரும் வந்தார்களா?” என்று கேட்டார்.

அவர்கள், ”ஆமாம் ஐயா! சில தினங்களாக நள்ளிரவில் சிலர், கொட்டடிக்கு அருகே நின்று பேசிக் கொண்டிருந்தனர்!” என்றார்கள்.

‘நள்ளிரவில் கூடுபவர்கள் தீயவர்களாகவே இருக்க வேண்டும்!’ என்று எண்ணிய போதிசத்துவர், மன்னரிடம் விவரங்களைக் கூறினார்.  அத்துடன், ”ஒழுக்கத்தில் சிறந்த சான்றோர்களை வரவழைத்து, கொட்டடிக்கு அருகில் அமர்ந்து நல்ல விஷயங்களைப் பற்றி பேசச் சொல்லலாம்!” என்றார். மன்னரும் சம்மதித்தார்.

அதன்படி நல்லோர்களும் அந்தணர்களும் யானைக் கொட்டடியில் கூடிப் பேசுவதற்கு ஏற்பாடுகள் செய்யப் பட்டன. நாள்தோறும் அவர்கள் நன்னடத்தைகள்- நீதிநெறிகள் பற்றி உரையாடினர்.

‘எவரையும் துன்புறுத்தவோ, கொல்லவோ கூடாது. எல்லோரிடமும் அன்புடன் பழக வேண்டும்’ என்பன போன்ற அவர்களது பேச்சுகளும் மகிலாமுகன் யானையின் காதில் விழுந்தன. ‘நமக்காகவே போதிக்கின்றனர்’ என்று கருதிய யானை, படிப்படியாக பழைய நிலைக்குத் திரும்பியது. மன்னருக்கு ஆச்சரியம்! ”யானை மாறியது ஏன்? அது, பழைய நிலைக்குத் திரும்பியது எப்படி?” என்று போதிசத்துவரிடமே கேட்டார்.

”அரசே! எப்போதும் எல்லோரும் நல்ல கருத்துகளையே பேச வேண்டும் என்று பெரியோர் கூறுவது இதற்காகவே! திருடர்களது தீய பேச்சுகளைக் கேட்ட யானை, அவற்றை ஏற்று அவ்விதமே செயல்பட்டது. பிறகு அந்தணர்களது நல்லுரைகளைக் கேட்டு, சாதுவாகவும் அன்பாகவும் மாறிவிட்டது” என்று விளக்கினார் போதிசத்துவர்.

அவரது சாதுர்யத்தைப் பாராட்டிய மன்னர், அவருக்குப் பரிசுகள் வழங்கி கௌரவித்தார்.

இன்றைய செய்திகள்

12.10.2023

*சட்டசபை கூட்டம் இன்றுடன் முடிந்தது 13 சட்ட மசோதாக்கள் நிறைவேறியது.

*தஞ்சை வேளாண் கல்லூரிக்கு எம்எஸ் சுவாமிநாதன் பெயர் சூட்டப்படும். மேலும் இவர் பெயரில் ஆண்டுதோறும் விருது வழங்கப்படும்-  முதல்வர் 
மு. க. ஸ்டாலின் அறிவிப்பு.

*இந்தியாவில் 22 பெண்களில் ஒருவருக்கு மார்பக புற்றுநோய் : சி எம் சி டாக்டர்கள் எச்சரிக்கை.

*இந்திய கோடீஸ்வரர்களில் அம்பானி மீண்டும் முதலிடம். சொத்து மதிப்பு ரூபாய் 8 லட்சம் கோடி.

*உலகக் கோப்பை கிரிக்கெட்: ரோஹித் சர்மா சாதனை படைத்தார். கெயில் ரெக்கார்ட் முறியடிப்பு.

*ஐசிசி தரவரிசை பட்டியல்: விராட் கோலி தற்போது தரவரிசை பட்டியலில் ஏழாவது இடத்தை பிடித்துள்ளார்.

Today's Headlines

*Assembly meeting ended today and 13 Bills were passed.

 * Tanjore College of Agriculture will be named after MS Swaminathan.  And an annual award will be given in his name - Chief Minister
 M. K.  Stalin.

 *One in 22 women in India has breast cancer: CMC doctors' warning.

 *Ambani again tops Indian billionaires list.  The property value is Rs 8 lakh crore.

 *World Cup Cricket: Rohit Sharma sets record.  Gayle record breaking.

 *ICC Rankings: Virat Kohli is currently ranked seventh in the rankings.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Tuesday, October 10, 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 11.10.2023

   

சர்வதேச பெண் குழந்தைகள் தினம்

திருக்குறள் : 


பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : கூடா ஒழுக்கம்

குறள் :275

பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று
ஏதம் பலவுந் தரும்.

விளக்கம்:


எத்தகைய பற்றுகளும் இல்லாதவர் என்று வாயால் சொல்லிச் செயலால் தவறாக வாழ்பவரின் வாழ்க்கை, பிறகு ஏன் அப்படிச் செய்தோம் ஏன் அப்படிச் செய்தோம் என்று வருந்தும்படி பல துன்பங்களையும் தரும்.


பழமொழி :

Do good and have good

நன்மை செய்து நன்மை பெற வேண்டும்

இரண்டொழுக்க பண்புகள் :


1. போதும் என்னும் மனமே பொன் செய்யும் மருந்து என்பதால் எனக்கு இருப்பது போதும் என்று இருப்பேன்.
 

2. என் ஆசிரியரையும் பெற்றோரையும் கஷ்டப் படுத்தும் எந்த காரியத்தையும் செய்ய மாட்டேன்.

பொன்மொழி :

பூமியில் உள்ள மனித இனத்தை நாம் பாதுகாக்க கடவுள் நமக்கு பெண் குழந்தைகளை கொடுத்துள்ளார்” - அமித் ஆபிரகாம்

பொது அறிவு :

1. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் யார்?

விடை: பி.டி. உஷா

2. இந்தியாவிற்கு வந்த முதல் அமெரிக்க ஜனாதிபதி யார்?

விடை: டேவிட் ஜசன் ஹோவர்

English words & meanings :

 altimeter - an instrument use to measure the height from ground level உயரமானி. fathometer - depth finder using ultra sound waves ஆழம் அறிய உதவும் ஒரு வகையான எதிரொலி ஒலிப்பான்

ஆரோக்ய வாழ்வு : 

வாழைப்பூ: நீரிழிவு நோயாளிகளுக்கும் சிறந்த மருந்து என்று சொல்லலாம். ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது. 

அக்டோபர் 11

பன்னாட்டுப் பெண் குழந்தைகள் நாள்

பன்னாட்டுப் பெண் குழந்தைகள் நாள் (International Day of the Girl ChildDay of the GirlInternational Day of the Girl) என்பது ஐக்கிய நாடுகள் சபை அறிவித்த ஒரு பன்னாட்டு நினைவு நாள் ஆகும். பெண் குழந்தைகளுக்கான உரிமைகளையும் சுதந்திரத்தையும் பாதுகாக்கப்பட வேண்டிய அவசியத்தை உணர்த்த அக்டோபர் 11 ஆம் நாளை பன்னாட்டு பெண் குழந்தைகள் தினமாக ஐநா 2011 ஆம் ஆண்டில் அறிவித்தது.[1][2] இந்த நாள் கனடாவினால் தீர்மானிக்கப்பட்டு பிற நாடுகளால் முன்மொழியப்பட்டு உலகமே ஏற்றுக்கொண்டது. இந்நாளில் உலகமெங்கும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தான விழிப்புணர்வு பரப்புரைகள் மேற்கொள்ளப்படுகிறது.

பாலின சமத்துவம், சகல துறைகளிலும் சமத்துவமான வாய்ப்பு, கல்வி உரிமை, பாதுகாப்பு, அங்கீகாரம், வளர்ச்சியை அதிகரித்தல், வன்முறைகளை களைதல் போன்றனவற்றிற்கு சமூகம் ஒத்துழைப்புக் கொடுத்து இந்தப்பெண் குழந்தைகள் நினைத்ததை சாதிக்க உறுதுணையாக நின்று, இவர்கள் பின்னாளில் சாதனைப்பெண்களாக மிளிர வைக்கும் அவசியத்தை நினைவுகூரும் நாள்.

நீதிக்கதை

 உயிரைக் காப்பாற்றிய கை.         

                                             ஒரு ஊரில்  ஒரு  பெண்மணி இருந்தார். அவளுடைய வலது கை முழங்கையிலிருந்து விரல்கள் வரை வெண்மையும், கருமையும் கலந்து பார்ப்பதற்கு அருவருப்பாக இருந்தது.

ஒரு நாள் அந்த பெண்மணியின் மகள் எட்டு வயதுச் சிறுமி, “அம்மா! நீ அழகாக இருக்கிறாய். ஆனால், உன்னுடைய வலதுகை பார்ப்பதற்கு விகாரமாய் இருக்கிறதே ஏன்?” என்று கேட்டாள்.

“அருமை மகளே! ஒரு பொருள் அல்லது உடல் உறுப்பு எவ்வாறு பயன்படுகிறது என்பதைக் கொண்டே அதன் அழகையும், விகாரத்தையும் மதிப்பிடவேண்டும்” என்றாள் தாய்.

“எனக்குப்புரிய வில்லை, புரியும்படி சொல்” என்று கேட்டாள் சிறுமி.

“நீ கைக் குழந்தையாக இருந்தபோது தொட்டிலில் துங்கிக் கொண்டு இருந்தாய் திடீரென்று, ஒரு நாள் நம் வீட்டில் தீப்பற்றி எரிந்தது. அடுத்த வீட்டுக்காரர்கள் ‘குழந்தை, குழந்தை’ என்று கத்தினார்களே தவிர, ஒருவரும் வீட்டினுள் சென்று, குழந்தையைக் காப்பாற்றத் துணியவில்லை.

“என் உயிரைப் பற்றி கவலை கொள்ளாமல், உள்ளே ஓடி, தொட்டியில் கிடந்த உன்னை தூக்கிக் கொண்டு வெளியேறும் போது, தீக்கொள்ளி ஒன்று என் வலதுகையில் விழுந்துவிட்டது. அது கொப்பளமாகி, வெண்மையும், கருமையுமாக இப்படி ஆகிவிட்டது.

“இந்தக் கை ஒரு உயிரைக் காப்பாற்றியதே என்ற நினைப்பில் வெண்மை, கருமை விகாரம் எதுவும் எனக்குத் தோன்றவில்லை” என்றாள் தாய்.

“அம்மா! என்னைக் காப்பாற்றிய இந்தக் கை எப்படி இருந்தால் என்ன?” என்று தாயின் கையை முத்தமிட்டாள் சிறுமி.

இன்றைய செய்திகள்

11.10.2023

*சென்னை உள்நாட்டு முனையத்தில் விமானங்களில் மாறி செல்லும் பயணிகளுக்கு புதிய வசதி.

*காவிரி ஒழுங்காற்று குழு இன்று கூடுகிறது. 13,000 கன அடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க தமிழகம் கோரிக்கை வைக்க முடிவு செய்துள்ளது.

* அஸ்தினாபுரத்தில் மர்ம காய்ச்சல் பரவுவதால் மக்கள் பீதி: குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு.

 ரூ.50, 000 க்கு கீழ் உள்ள வணிகவரி -வட்டி தள்ளுபடி: முதல்வர் 
மு. க. ஸ்டாலின் அறிவிப்பு. 

*உலகக் கோப்பை கிரிக்கெட் : இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.

*உலகக்கோப்பை கிரிக்கெட் :
இந்தியா ஆப்கானிஸ்தான் இன்று மோதல்.

Today's Headlines

*New facility for passengers changing flights at Chennai domestic terminal.

 *The Cauvery Committee meets today.  Tamil Nadu has decided to request to release water at the rate of 13,000 cubic feet for 15 days.

 * People panic due to mysterious fever in Astinapuram: Sanitation disorder  due to piled up garbages.

 * Business Tax-Interest  below Rs.50,000 will be Rebated: CM
 M. K.  Stalin's announcement.

 *World Cup Cricket: Security arrangements are intense for the India-Pakistan match.

 *World Cup Cricket:
 India Afghanistan conflict today.

 Prepared by

Covai women ICT_போதிமரம்