Thursday, March 16, 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 17.03.2023

திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்: பொறை உடைமை

குறள் எண்: 158
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தந்
தகுதியான் வென்று விடல்.

பொருள்:
ஆணவங் கொண்டு அநீதி விளைவிப்பவர்களை, நாம் நம் பொறுமைக் குணத்தால் வென்று விடலாம்

பழமொழி :

Do not count your chickens before they are hatched

கைக்கு வராததைக் கணக்குப் பார்க்காதே.

இரண்டொழுக்க பண்புகள் :

1. கண் எனது உடம்புக்கும் மனதிற்கும் வெளிச்சம். 

2. எனவே என் கண் தெளிவானவைகளையும் சரியானவைகளையும் பார்க்க முயற்சிப்பேன்

பொன்மொழி :

பதிலை கண்டறிவதை நோக்கி, முன்னோக்கி நகர்வதில் உங்கள் ஆற்றலை செலவிடுங்கள்.

பொது அறிவு :

1. அடர்த்தி குறைவான கோள் எது? 

 சனி . 

 2. ஈராக்கின் பழைய பெயர் என்ன? 

 மெசபடோமியா

ஆரோக்ய வாழ்வு :

கொலஸ்ட்ரால் குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள், மாதவிடாய் பிரச்சனை இருக்கும் பெண்களும் காலையில் கொத்தமல்லி நீரை பருகலாம். அவர்களுக்கு இந்தப் பிரச்சசனையில் இருந்து விடுபடு வழி கிடைக்கும். மேலும், கொத்தமல்லி நீர் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகிறது.

கணினி யுகம்

Ctrl+Tab : Switch between open tabs in browsers or other tabbed ... Ctrl+End : Its use is to move the cursor to the last of the document.  

மார்ச் 17


சாய்னா நேவால் 




சாய்னா நேவால் (Saina Nehwal, பிறப்பு: 17 மார்ச் 1990) ஓர் இந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை. இறகுப்பந்தாட்ட உலகப் பேரவையின் நடப்பு உலகத் தரவரிசையில் முதலாவதாக உள்ளார்,[3][4] உலக இளநிலை இறகுப்பந்தாட்ட வாகையர் போட்டியில் வென்ற முதல் இந்தியப் பெண்ணும், ஒலிம்பிக் இறகுப்பந்தாட்டப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியரும் இவரே.[5] 2012 ஆகத்து மாதத்தில் நடந்த லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இவர் வெண்கலப் பதக்கம் பெற்றார்.[6] பிரகாஷ் பதுகோனேக்குப் பின்னர் உலகத் தர வரிசையில் முதலிடம் பெற்ற முதல் இந்தியரும், உலகத் தர வரிசையில் முதன் முதலாக முதலிடம் இந்தியப் பெண்ணும் இவரே. சூன் 21, 2009ஆம் நாள் ஜாகர்தாவில் நடந்த இந்தோனேசிய ஓப்பன் போட்டியில் தரவரிசையில் முன்னிற்கும் சீனாவின் லின் வாங்கை அதிரடியாக வென்று பட்டத்தைப் பெற்று வரலாறு படைத்தார். இந்த போட்டியை வென்ற முதல் இந்தியப் பெண் இவர்.

நீதிக்கதை

புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா?

ஒரு சமயம் அரபுநாட்டு அரசர் கிருஷ்ணதேவராயருக்கு ஒரு அதிசய ரோஜா செடி ஒன்றை பரிசாக அளித்தார். அதை மன்னர் தனது தோட்டத்தில் நட்டு வைத்தார். சிறிது காலத்திற்கு பிறகு அந்த செடியில் இருந்து ரோஜா மலர்கள் மலர்ந்தன. அங்கு வந்த தெனாலிராமனின் மகன் அதை பறித்து தனது தாய்க்கு பரிசாக கொடுக்க நினைத்து பூக்களை பறிக்க தொடங்கினான். பூக்களைப் பறித்துக்கொண்டு இருக்கும்போது அரண்மனைக் காவலர்கள் பார்த்துவிட்டனர்.

அரண்மனைக் காவலர்கள் தெனாலிராமனின் மகனை அரசர் கிருஷ்ணதேவராயரிடம் காண்பிக்க அழைத்துச் சென்றனர். செல்லும் வழியில் தெனாலிராமன் காவலர்களை பார்த்து என் மகனை எங்கே அழைத்துக்கொண்டு செல்கிறிர்கள்? என்று கேட்டான். அவர்களோ! உங்கள் மகன் ரோஜா பூக்களை திருடியபோது அவனை நாங்கள் பிடித்துவிட்டோம். இப்போது அவனை மன்னரின் பார்வைக்காக அழைத்துச் செல்கிறோம். வேண்டுமென்றால் அவன் கைகளில் உள்ள திருடிய ரோஜா பூக்களை பார் என்று அவன் கைகளை காண்பிக்கச் செய்தனர்.

தெனாலிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. இருந்தாலும் தன் மகனை காப்பாற்ற விரும்பிய தெனாலி சிறுது நேரம் யோசித்து தான் அணிந்திருந்த மேலாடையை கழற்றி மகன் மேல் போர்த்திவிட்டான். இன்று வெயில் அதிகமாக உள்ளது. இந்த துணி என் மகனை காப்பாற்றும் என்று கூறிவிட்டுச் சென்றார். புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா? தெனாலி மகன் தந்தை கூறியதை யோசிக்க தொடங்கினான். உடனே ஒவ்வொரு பூக்களாக சாப்பிட ஆரம்பித்தான். துண்டு முடி இருப்பதனால் அவன் பூக்களை சாப்பிடுவதை காவலர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அரண்மனைக் காவலர்கள் தெனாலிராமனின் மகனை அரசர் கிருஷ்ணதேவராயர் முன்னால் அழைத்துச்சென்றனர். 

காவலர்கள் மன்னரை பார்த்து, அரசே! தெனாலிராமனின் மகன் பூக்களை திருடியபோது அவனை நாங்கள் பிடித்துவிட்டோம். இந்த குற்றத்திற்கு நீங்கள் தண்டனை வழங்க வேண்டும், என்று கூறினர். மன்னரும் எல்லாவற்றையும் கேட்டறிந்து, பின்னர் அரசர் காவலர்களை பார்த்து, திருடிய பூக்கள் எங்கே? என்று கேட்டார். காவலர்கள் மன்னரை பார்த்து, பூக்கள் அனைத்தும் அவன் கைகளில் தான் அரசே உள்ளது என்று காவலர்கள் கூறினர்.

அரசர் தெனாலி மகனை பார்த்து, உன் கைகளை காட்டு என்று கூறினார். அவனும் வெறும் கைகளை காண்பித்தான். அவன் கைகளில் எதுவும் இல்லை. மன்னர் தெனாலி மகனை பார்த்து, நீ பறித்த பூக்கள் எங்கே? என்று கேட்டார். அவனோ! மன்னரைப் பார்த்து, நான் பூக்கள் எதுவும் பறிக்கவில்லை. என் தந்தைக்கு அவமானம் ஏற்படுத்தவே இந்த இரண்டு காவலர்களும் இப்படி செய்தார்கள்! என்று கூறினான். மன்னரும் அந்த இரண்டு காவலர்களையும் திட்டி அனுப்பிவிட்டார். தெனாலியும் அவன் மகனும் எப்படியோ தப்பித்தோம் என்று சிரித்துக்கொண்டே வீட்டிற்கு புறப்பட்டனர்.

இன்றைய செய்திகள்

17.03. 2023

🌸பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு நடத்தும் திட்டம் இல்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.


🌸சென்னை ராணி மேரி கல்லூரியில் "பப்ளிக் போலீஸ்" என்ற தன்னார்வ அமைப்பின் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதி பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்தனர்.


🌸பொதுத் தேர்வில் 49000 மாணவ, மாணவிகள் ஆங்கில தேர்விற்கு ஆப்சென்ட் : அதிர்ச்சியான பள்ளிக்கல்வித்துறை!


🌸புதிய கோவிட் வைரஸ்.‌ இஸ்ரேல் அடையாளம் தெரியாத இரண்டு புது வைரஸ்களை கண்டு பிடித்துள்ளது.


🌸சேப்பாக்கத்தில் கலைஞர் கருணாநிதி ஸ்டாண்ட்.. ஒரே மேடையில் ஸ்டாலின், தோனி, உதயநிதி.. நாளை திறப்பு!


🌸தென் ஆப்ரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவு அணிகள் ஒரு பந்து கூட போடாத நிலையில் மழை காரணமாக போட்டி ரத்தானதால் விரக்தியில் உள்ளனர்

Today's Headlines


 🌸Minister Anbil Mahesh has said that there is no plan to conduct a special examination for students who have not written the 12th standard general examination.


🌸A seminar on "Public Police", a voluntary organization, was held at Queen Mary College, Chennai.  School Education Minister Anbil Mahesh and retired Justice Balakrishnan inaugurated the seminar.


🌸49000 students are absent for the English subject in the general exam : School education department was shocked.


🌸 New covid variant: Israel discovers two unidentified viruses.


🌸Kalaignar Karunanidhi Stand in Chepakkam.. Stalin, Dhoni and Udhayanidhi join together and opens tomorrow.


🌸South Africa and West Indies were frustrated because of the ODI was abandoned without a ball being bowled by the rain.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Wednesday, March 15, 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 16.03.2023

 திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்: பொறை உடைமை

குறள் எண்: 157
திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்
தறனல்ல செய்யாமை நன்று.

பொருள்:
பிறர் செய்திடும் இழிவான காரியங்களுக்காகத் துன்பமுற்று வருந்தி, பதிலுக்கு அதே காரியங்களைச் செய்து பழி வாங்காமலிருப்பதுதான் சிறந்த பண்பாகும்.

பழமொழி :


The true success is to labour

உண்மை வெற்றி உழைப்பிற்கே.

இரண்டொழுக்க பண்புகள் :

1. கண் எனது உடம்புக்கும் மனதிற்கும் வெளிச்சம். 

2. எனவே என் கண் தெளிவானவைகளையும் சரியானவைகளையும் பார்க்க முயற்சிப்பேன்

பொன்மொழி :

மன வலிமையுடன் இருந்தால் மட்டும் போதாது. அவற்றை நல்லவிதமாகப் பயன் படுத்தவும் வேண்டும்.

பொது அறிவு :

1. தேசிய ஒருமைப்பாட்டு தினம் யாருடைய பிறந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது ? 

 இந்திரா காந்தி . 

 2. செயற்கைப் பட்டு எனப்படும் பாலிமர் எது ? 

 ரேயான்.

ஆரோக்ய வாழ்வு :

கொத்தமல்லி தண்ணீர் வயிற்றுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. ஏனெனில் இதில் நார்ச்சத்து உள்ளது. எனவே, தினமும் காலையில் வெறும் வயிற்றில் கொத்தமல்லி தண்ணீரை உட்கொள்வது செரிமானத்தை பலப்படுத்துகிறது. மலச்சிக்கல் நீங்கும்.

கணினி யுகம்

Alt + F4 : Closes a note and its Journal window. Ctrl+Esc: Open the Windows Start Menu.

மார்ச் 16


அழ. வள்ளியப்பா



அழ. வள்ளியப்பா (நவம்பர் 71922மார்ச் 161989) குழந்தை இலக்கியங்கள் படைத்த மிக முக்கியமான கவிஞர். 2,000 க்கும் மேலான குழந்தைகளுக்கான பாடல்கள் எழுதியுள்ளார். குழந்தை எழுத்தாளர்கள் பலரைத் திரட்டி 1950 -ல் குழந்தை எழுத்தாளர்கள் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினார். சக்தி வை.கோவிந்தன் இச்சங்கத்தின் முதல் தலைவராக இருந்தார். அவரைத் தொடர்ந்து வள்ளியப்பா இந்த அமைப்பின் காரியதரிசியாகவும், தலைவராகவும், வழிகாட்டியாகவும் பல பொறுப்புகளை ஏற்றுச் செயல்பட்டார். காரைக்குடி குழந்தை எழுத்தாளர் சங்கத் தலைவராகப் பொறுப்புவகித்தார்.

அழ. வள்ளியப்பா 11 பாடல் தொகுதிகள், 12 புதினங்கள், 9 கட்டுரை நூல்கள், 1 நாடகம், 1 ஆய்வு நூல், 2 மொழிபெயர்ப்பு நூல்கள், 1 தொகுப்பு நூல் ஆகியவற்றை வெளியிட்டுள்ளார். இவற்றில், 2 நூல்கள் இந்திய நடுவண் அரசின் பரிசும், 6 நூல்கள் தமிழக அரசின் பரிசும் பெற்றன.

நீதிக்கதை

பிறந்தநாள் பரிசு

அன்று மன்னர் கிருஷ்ணதேவராயருக்குப் பிறந்தநாள் விழா. நகரமெல்லாம் கோலகாலமாக இருந்தது. மக்கள் தங்கள் பிறந்தநாள் போல, மன்னரின் பிறந்த நாளை மகிழ்ச்சியோடு கொண்டாடினார்கள். 

மறுநாள் சபையில் அரசருக்கு மரியாதை செலுத்துதல் நடந்தது. முதலில் வெளிநாடுகளிலிருந்து வந்த அரசப் பிரதானிகள், தங்கள் நாட்டு மன்னர்கள் அனுப்பிய பரிசுகளைத் தந்தனர். 

பிறகு அரசரின் நெருங்கிய நண்பர்கள் தங்கள் பரிசுகளை அளித்தனர். அப்போதுதான் பெரியதொரு பொட்டலத்துடன் தெனாலிராமன் உள்ளே நுழைந்தார். அவரை எல்லோரும் வியப்போடு பார்த்தனர். 

தெனாலிராமன் கொண்டு வந்த பரிசுப் பொட்டலம் மிகப் பெரிதாக இருந்ததால், அவையிலுள்ளவர்கள் ஆவலோடு என்ன பரிசு என்று எதிர்பார்த்ததால், அந்தப் பொட்டலத்தைப் பிரிக்கும்படி தெனாலிராமனிடம் கூறினார் அரசர். 

தெனாலிராமன் தயங்காமல் பொட்டலத்தைப் பிரித்தார். பிரிக்கப் பிரிக்கத் தாழைமடல்கள் காலடியில் சேர்ந்தனவே தவிர பரிசுப் பொருள் என்னவென்று தெரியவில்லை. 

அதனால் எல்லோரும் ஆவலுடன் கவனித்தனர். கடைசியில் மிகச்சிறிய பொட்டலமாக இருந்ததைப் பிரித்தார். அதில் நன்றாகப் பழுத்துக் காய்ந்த புளியம்பழம் ஒன்று இருந்தது. 

அவையினர் கேலியாகச் சிரித்தனர். அரசர் கையமர்த்தி சிரிப்பை அடங்கியவுடன், தெனாலிராமன் கொடுத்த பரிசு சிறிதாக இருக்கலாம். அதற்கு அவர் தரும் விளக்கம் பெரிதாக இருக்கும் என்றார். உடனே ராமா இந்த சிறிய பொருளைத் தேர்ந்தெடுத்ததின் காரணம் என்ன? 

அரசே, ஒரு நாட்டை ஆளும் மன்னர் எப்படி இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை விளக்கும் பழம் புளியம்பழம் ஒன்று தான். மன்னராக இருப்பவர் உலகம் என்ற புளிய மரத்தில் காய்க்கும் பழத்தைப் போன்றவர். 

அவர் பழத்தின் சுவையைப் போல் இனிமையானவராகவும், அதே நேரத்தில் ஆசாபாசங்கள் என்னும் புளியம்பழ ஓட்டில் ஒட்டாமலும் இருக்க வேண்டும் என்றார். அதற்காக தான் இந்த புளியம்பழத்தைப் பரிசாகக் கொண்டு வந்தேன் என்றார். 

அவையினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மன்னர் எழுந்து தெனாலிராமனைத் தழுவி, ராமா எனக்குச் சரியான புத்தி புகட்டினாய். ஒரு பிறந்தநாள் விழாவிற்கு இத்தனை ஆடம்பரம் தேவையில்லை. 

இனி என் பிறந்தநாளன்று கோயில்களில் மட்டுமே அர்ச்சனை ஆராதனை செய்யப்பட வேண்டும். பணத்தை ஆடம்பரமாகச் செலவு செய்யக்கூடாது, என உத்தரவிட்டார். 

அரசர் தனக்கு வந்த பரிசுப் பொருள்களில் விலை உயர்ந்தவற்றை எடுத்து தெனாலிராமனுக்குப் பரிசாகத் தந்தார்.

இன்றைய செய்திகள்

16.03. 2023

* வெப்ப அலையை எதிர்கொள்ள மாவட்ட அளவில் செயல் திட்டங்களை தயார் செய்ய வேண்டும் என்று துணை இயக்குநர்களுக்கு தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

* பொதுத் தேர்வு நேரத்தில், கோயில் திருவிழாக்களின்போது ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

* தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடும் அளவுக்கு ஹெச்3என்2 பாதிப்பு இல்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

* போட்டித் தேர்வுகளை எழுத SC மற்றம் OBC மாணவர்களுக்கு மத்திய அரசு இலவச பயிற்சி அளித்து வரும் நிலையில், இதன் மூலம் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்துள்ளதாக மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

* ஆயுத இறக்குமதியில் இந்தியாவுக்கு முதலிடம் - ஸ்வீடன் ஆய்வு நிறுவனம் தகவல்.

* அதிகம் மாசடைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 8 ஆம் இடம் கிடைத்துள்ளது.

* ஐசிசி டெஸ்ட் தரவரிசை : முதலிடத்தில் அஸ்வின்.

* இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்: ஸ்பெயின் வீரர் அல்காரஸ் 3-வது சுற்றுக்கு தகுதி.

* 74 நாடுகளை சேர்ந்த வீராங்கனைகள் பங்கேற்கும் பெண்கள் உலக குத்துச்சண்டை போட்டி டெல்லியில் இன்று தொடக்கம்.

Today's Headlines

* The Tamil Nadu Health Department has directed the deputy directors to prepare action plans at the district level to deal with the heat wave.

 * The Madras High Court has directed that the use of loudspeakers during public examinations and temple festivals should be avoided.

* Minister M. Subramanian has said that H3N2 is not affected that much to close schools in Tamil Nadu.

* While the central government is providing free coaching to SC and OBC students to write competitive exams, more than 8 thousand students have benefited from this, Union Minister Ramdas Atwale said in Parliament.

 * India tops in arms imports - Swedish research institute informs.

*  India is ranked 8th in the list of most polluted countries.

 * ICC Test Rankings: Ashwin tops.

 * Indian Wells Tennis: Spain's Algarz qualifies for 3rd round

 * The Women's World Boxing Championship in which players from 74 countries will participate will begin in Delhi today.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Tuesday, March 14, 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 15.03.2023

   திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்: பொறை உடைமை

குறள் : 156
ஒறுத்தார்க் கொருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்.

பொருள்:
தமக்குக் கேடு செய்தவரை மன்னித்திடாமல் தண்டிப்பவர்க்கு அந்த ஒரு நாள் மட்டுமே இன்பமாக அமையும். மறப்போம் மன்னிப்போம் என பொறுமை கடைப் பிடிப்போருக்கோ, வாழ்நாள் முழுதும் புகழ்மிக்கதாக அமையும்.

பழமொழி :

He who eats crumbs will live a hundred years.

நொறுங்கத் தின்பவன் நூறாண்டு வாழ்வான். 

இரண்டொழுக்க பண்புகள் :

1. கண் எனது உடம்புக்கும் மனதிற்கும் வெளிச்சம். 

2. எனவே என் கண் தெளிவானவைகளையும் சரியானவைகளையும் பார்க்க முயற்சிப்பேன்

பொன்மொழி :

ஆர்வம் இல்லாமல் உங்களுக்கு ஆற்றல் இல்லை; ஆற்றல் இல்லாமல் எதுவுமேயில்லை.

பொது அறிவு :

1. கப்பல் படைத்தலைவர் நம் நாட்டில் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?

 அட்மிரல்




 2. இராணுவ பதக்கம் பெற்ற முதல் பெண் யார்?

 பமீலா தேவி.

English words & meanings :

hammock – a hanging bed between two trees. noun. when I called him he was sleeping in the hammock. வழியிலான தொங்கு மஞ்சம். பெயர்ச் சொல் 

ஆரோக்ய வாழ்வு :

கொத்தமல்லி தண்ணீரில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்துள்ளன. எனவே, அதன் நுகர்வு நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. இது எந்த வகையான வைரஸ் தொற்றையும் தவிர்க்க உதவும்.

 எடை இழப்புக்கு கொத்தமல்லி தண்ணீர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த நீரில் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தும் பல கூறுகள் உள்ளன. இதன் விளைவாக, உடலில் கொழுப்பு குறையத் தொடங்குகிறது.

கணினி யுகம்

Ctrl+Z: It is used to get back the deleted item. For example, if you have deleted the data by mistake, you can press Ctrl+Z to retrieve (Undo) the deleted data. Ctrl + P: Prints a note. 

மார்ச் 15


ஒவ்வொரு ஆண்டும் மார்ச்சு 15 ஆம் திகதி உலக நுகர்வோர் உரிமைகள் நாள் (World consumer rights day) ஆகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச்சு மாதம் 15 ஆம் திகதியை தேசிய நுகர்வோர் உரிமைகள் நாள் (National consumer rights day) ஆகப் பிரகடனப்படுத்தியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜோன். எப். கென்னடி, அமெரிக்க பாராளுமன்றத்தில் நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பாகவும், நுகர்வோர் உரிமைகள் சட்டம் தொடர்பாகவும் ஆற்றிய முக்கிய உரை 1962 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 15 ஆம் திகதி இடம்பெற்றது. அவ்வுரையே உலக அளவில் ஒரு நாட்டுத் தலைவர் நுகர்வோர் பாதுகாப்புத் தொடர்பாக ஆற்றிய முக்கிய உரையாகக் கணிக்கப்படுகின்றது. 

நீதிக்கதை

கருப்பங்கழி!

விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயர் தெனாலிராமனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். இதைப் பார்த்த மற்ற அரசவையினருக்கு தெனாலி மீது பொறாமை ஏற்பட்டது. அவர்கள் அடிக்கடி, அரசே! எங்களிடம் என்ன குறை? நீங்கள் ஏன் எங்களை விடத் தெனாலிக்கு அதிக முக்கியத்துவம் தருகிறீர்கள்? என்று கேட்டனர். இதற்கு பதில் அரசரின் சிரிப்புத்தான்.

ஒருநாள், தெனாலி விடுப்பில் சென்றிருந்தார். அரசர், அமைச்சர், சேனாதிபதி முதலானோர் மாறுவேடத்தில் நகர்வலம் சென்றனர். பேசிக் கொண்டே ஒரு கிராமத்தை அடைந்தனர். ஓரிடத்தில் விவசாயிகள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்தார் அரசர். அவர்களிடம் சென்று, நாங்கள் வெளிநாட்டினர், உங்களை இந்நாட்டு அரசர் சரியாகக் கவனித்துக் கொள்கிறாரா? என்றார்.

உடனே அனைவரும் அரசரைப் புகழ்ந்தனர். பிறகு அரசர் ஒரு முதிய விவசாயியிடம் அதே கேள்வியைக் கேட்டார். உடனே அவர் சட்டென்று அங்கிருந்து எழுந்து எங்கோ போய்விட்டுப் பிறகு திரும்பி வந்தார். அவர் கையில் ஒரு கருப்பங்கழி! வந்ததும் அதை அவர் இரு கையாலும் உடைத்தவாறு, சகோதரா! எங்கள் அரசர் இதைப் போன்றவர் என்றார். அவரது பதில் அரசருக்கு ஆச்சரியத்தைத் தந்தது. அமைச்சரைத் திரும்பிப் பார்த்தார். அமைச்சரோ அரசே! அவர் உங்களை அவமானப்படுத்துகிறார். அவர், எங்கள் அரசர் பலவீனமானவர். எவரும் அவரை எளிதில் வீழ்த்தி விடலாம் என்பதைக் குறிக்கக் கரும்பை ஒடித்துக் காட்டினார் என்றார்.

இதைக்கேட்டதும், அரசருக்கு ஆத்திரம் வந்தது. அவர் ஏதோ கூற வந்தார். அப்போது பின்னாலிருந்து தலைப்பாகை கட்டிய ஒருவர் எழுந்து, கோபப்படாதீர்கள் தயாநிதியே! இப்போது கிழவர் கரும்பை உடைத்து, அரசர் கரும்பு போல் மேலிருந்து கசப்பும், இடையில் இனிப்பும் உடையவர் என்பதை உணர்த்தத்தான் இப்படி செய்தார் என்று கூறிக் கொண்டே தனது பொய்த் தாடியை எடுத்தார். அது வேறு யாருமல்ல! தெனாலிராமன்தான். 

அரசே! என்னைக் கண்டுபிடிக்க முடியாவிட்டாலும், நான் உங்களது பணியாள். என்னால் உங்களை விட்டு எப்படி இருக்க முடியும்? என்றார். அதைக் கண்ட அரசர் சிரித்துவிட்டார். தெனாலியை வாரி அணைத்துக்கொண்டு, நான் உன்னிடம் பிரியம் வைத்திருப்பதற்குக் காரணமே இதுதான் என்று புகழ்ந்தார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த அமைச்சர், ராஜகுரு மற்றும் சேனாதிபதிக்கு அவமானமாகப் போய்விட்டது. அதன்பிறகு அரசவையில் தெனாலியின் மதிப்பு மேலும் அதிகரித்து விட்டது.

இன்றைய செய்திகள்

15.03. 2023

* முன்னாள் மாணவர்களை இணைந்து பள்ளியின் மேம்பாட்டிற்கான செயல்பாடுகள் மேற்கொள்வது தொடர்பாக கருத்துகளை பகிர்ந்து கொள்ளுமாறு தலைமை ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

* தமிழகத்தில் மின்பயன்பாடு அதிகரிப்பு காரணமாக, தினசரி மின்தேவை 17,647 மெகாவாட் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. வரும் நாட்களில் இது மேலும் அதிகரிக்கும் எதிர்பார்க்கப்படுகிறது.

* கரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதால் முகக்கவசம் அணிவது மற்றும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.

* டெல்லியில் மீண்டும் விவசாயிகள் போராட்டம் - மார்ச் 20ம் தேதி தொடங்குகிறது.

* ரூ.15,000 கோடியில் 200 பிரம்மோஸ் ஏவுகணை தயாரிப்பு: மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் இறுதிக் கட்ட பரிசீலனை.

* மீண்டும் ஏவுகணை சோதனை - தென் கொரியாவை அச்சுறுத்தும் வடகொரியா.

* சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் ஒரு தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் 20 வருடம் கழித்து மோத உள்ளன.

* இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் - இந்திய வீரர் பிரனாய் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்.

* புரோ ஆக்கி லீக்: ஜெர்மனி அணியை மீண்டும் வீழ்த்தியது இந்தியா.

Today's Headlines

* Education Minister Anbil Mahes has appealed to the headmasters to share their views on carrying out activities for the development of the school along with the former students.

 * Due to the increase in power consumption in Tamil Nadu, the daily power demand has reached a new high of 17,647 MW.  It is expected to increase further in the coming days.

 * Due to the increase in the spread of corona infection, it is necessary to wear face mask and observe personal distance: Information of Minister M. Subramanian.

 * Farmers strike again in Delhi - March 20 begins.

 * Rs 15,000 crore production of 200 BrahMos missiles: Ministry of Defense finalizes final phase

 * Missile Test Again - North Korea Threatens South Korea.

 * After 20 years, India and Australia will meet in the final of a series organized by the International Cricket Council.

 England Open Badminton - Indian player Pranai advances to next round.

 Pro Hockey League: India beat Germany again.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்