Wednesday, March 8, 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.03.2023

  திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்: பொறை உடைமை

குறள் எண்: 151
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.

பொருள்:
தன்னையே தோண்டினாலும் தோண்டுபவர் விழுந்துவிடாதபடி தாங்கும் நிலம் போலத், தன்னை வார்த்தைகளால் அவமதிப்பவரையும் மதித்துப் பொறுப்பது முதன்மை அறம்

பழமொழி :

An old mans sayings are seldom untrue.

முதியோர் வாக்கு பொய்ப்பது அரிது.

இரண்டொழுக்க பண்புகள் :

1. என் கண் இவ்வுலகை கண்டு கற்றுக் கொள்ள உதவும் ஒரு சன்னல். 

2. எனவே என் சன்னலை பாதுகாப்பேன்.

பொன்மொழி :

முட்டாள்களின் மிகவும் கெட்ட குணமாக இருப்பது தன் குறையை மறந்து விட்டு பிறர் குறையை காண்பதே.

பொது அறிவு :

1. சித்தன்னவாசல் ஓவியங்கள் எந்த மாவட்டத்தில் உள்ளது ? 

 புதுக்கோட்டை

 2. நமது உடலில் ஒரு நாள் பொட்டாசியத் தேவை எவ்வளவு ? 

 4 கிராம்.

English words & meanings :

Fenugreek - a plant it's seeds are used in Indian kitchen for flavours the food. noun.வெந்தயம். பெயர்ச் சொல் 

ஆரோக்ய வாழ்வு :

சளி பிடிக்கும் போது தொண்டை வலியை ஈரப்படுத்தி தற்காலிக நிவாரணம் அளிக்க வாய் கொப்புளிப்பது நன்மை தரும். 8 அவுன்ஸ் வெதுவெதுப்பான நீரில் அரை டீஸ்பூன் உப்பு கரைத்து தினமும் நான்கு முறை வாய் கொப்புளிக்கவும்.



நீதிக்கதை

வைத்திய செலவு

ஒரு சமயம் தெனாலிராமனுக்கு உடல் நலம் மோசமாகி விட்டது. ஆனால் வைத்திய செலவுக்கு தெனாலிராமனிடம் பணம் இல்லை. அதனால் வட்டிக்கு பணம் கொடுக்கும் சேட்டை அணுகினான். சேட்டும் பணத்தை எப்போது திருப்பிக்கொடுப்பாய் என்று கேட்டான். 

என் உடல் நலம் தேறியதும், என்னுடைய உயர் ஜாதி அரேபியக் குதிரையை நல்ல விலைக்கு விற்றுப் பணம் தருவதாகச் சொன்னான். சேட்டும் நம்பிக்கையோடு பணம் கொடுத்தார். பணத்தைப் பெற்றுக் கொண்ட தெனாலிராமன் சிகிச்சையை ஆரம்பித்தார். 

பல மாதங்கள் ஆயின. தெனாலிராமனிடமிருந்து பணம் வருவதாகத் தெரியவில்லை. அதனால் சேட் தெனாலிராமனை சந்தித்தார். அவரிடம், உடல் குணமானதும் குதிரையை விற்றுப்பணம் தருவதாக சொன்னாயே! இன்னும் தரவில்லையே என்றார். 

ஆனால் யோசித்த ராமன், அநியாய வட்டி வாங்கும் சேட்டுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என, சரி குதிரையை விற்றுப் பணம் தருகிறேன். என்னுடன் நீயும் வா என்று அவரையும் அழைத்துக் கொண்டு சந்தைக்குப் புறப்பட்டனர். 

போகும் போது குதிரையின் கூடவே ஒரு பூனையையும் அழைத்துச் சென்றான். சந்தையில் ஒருவன், தெனாலிராமனைப் பார்த்து உன் குதிரையின் விலை என்ன? என்றார். 

குதிரையின் விலை 1 பவுன்தான். ஆனால் இந்த பூனையின் விலை 500 பவுன். ஆனால் இந்த பூனையையும் சேர்த்து வாங்கினால்தான் இந்த குதிரையைக் கொடுப்பேன் என்றார். அதன்பின் 501 பவுன் கொடுத்து குதிரையையும் பூனையையும் வாங்கிச் சென்றார். 

பின் சேட்டிடம் ஒரு பவுனை மட்டும் கொடுத்தார். ஆனால் ஒரு பவுனை வாங்க மறுத்து விட்ட சேட். குதிரை அதிக விலைக்குப் போகுமென்று நினைத்து தானே உனக்குப் பணம் கொடுத்தேன். என்றார். 

அதற்கு தெனாலிராமன் ஐயா குதிரையை விற்றுத்தான் உமக்குப்பணம் தருகிறேன் என்று சொன்னேன். அதன்படியே குதிரையை 1 பவுனுக்கு விற்று அந்த 1 பவுனையும் உனக்கே கொடுத்து விட்டேன். நீ வாங்க மாட்டேன் என்கிறாயே... இது என்ன நியாயம் என்றான். 

இறுதியில் இவர்கள் வழக்கு மன்னரிடம் சென்றது. மன்னர் இவ்வழக்கை நன்கு விசாரித்து. பின் தெனாலிராமன் செய்தது சரியே என்று தீர்ப்புக் வழங்கினார். 

நீதி :
அளவுக்கு அதிகமாக ஆசைப்பட்டால் ஏமாற்றம் தான் மிஞ்சும்.

இன்றைய செய்திகள்

09.03. 2023

* "வீடு - வணிகம் - சொத்து ஆகிய பிரிவுகளில் பல்வேறு தொழில் முனைவுகளுக்காகக் கடன் வாங்கும் பெண்கள் பட்டியலில், தமிழ்நாட்டுப் பெண்கள் இரண்டாம் இடத்திலும், தனிநபர் கடனில் முதலிடத்திலும் உள்ளனர் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

* ஆசிய பசிபிக் நாடுகளில் சிறந்த விமானநிலையமாக திருச்சி விமானநிலையம் தேர்வு: சர்வதேச விமானநிலைய கவுன்சில் அறிவிப்பு.

* பயிற்சி போர் விமானம், கப்பல்கள் வாங்க எச்ஏஎல், எல்&டி நிறுவனங்களுடன் ரூ.9,900 கோடிக்கு மத்திய அரசு ஒப்பந்தம்.

* தரையிலிருந்து வான் இலக்கை தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றி.

* வங்கதேசத் தலைநகர் டாக்காவிலுள்ள 7 மாடிக் கட்டிடத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

* பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருது: இந்திய வீரர் ஜடேஜா பெயர் பரிந்துரை.

Today's Headlines

Tamil Nadu Chief Minister M. K. Stalin has said that in the list of women taking loans for various business ventures in the categories of home - business - property, Tamil Nadu women are second and first in personal loans.

 * Trichy Airport selected as the best airport in Asia Pacific: Airports Council International announcement.

 * The central government signed an agreement with HAL, L&D for Rs 9,900 crore to buy training fighter jets and ships.

 * Surface-to-air missile test-fired successfully 

* 14 people died in an explosion in a 7-storey building in Dhaka, the capital of Bangladesh.  More than 100 people were injured.

 * Player of the Month Award for February: Indian player Jadeja had been nominated.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Tuesday, March 7, 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 08.03.2023

   திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

 இயல்:இல்லறவியல் 

அதிகாரம்: ஒழுக்கம் உடைமை

குறள் : 140
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.

பொருள்:
உலகத்து உயர்ந்தவரோடு பொருந்த ஒழுகும் முறையைக் கற்காதவர் பல நூல்களைக் கற்றிருந்த போதிலும் அறிவில்லாதவரே ஆவர்.

பழமொழி :

Better to give than to take.

கொள்வதைவிடக் கொடுப்பது மேல்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. என் கண் இவ்வுலகை கண்டு கற்றுக் கொள்ள உதவும் ஒரு சன்னல். 

2. எனவே என் சன்னலை பாதுகாப்பேன்.

பொன்மொழி :

ஒரு நூலகத்தையும், ஒரு தோட்டத்தையும் வைத்திருக்கும் ஒருவருக்கு வேறெதுவும் தேவையில்லை

பொது அறிவு :

1. மஞ்சள் காமாலை எந்த உறுப்பை பாதிக்கிறது ?

 கல்லீரல்

 2. புற ஊதாக்கதிர்கள் தரும் வைட்டமின் எது?

 " டி " வைட்டமின்.

English words & meanings :

Elite - a select group of people they are superior, "These are the elite group in Indian army" noun. ஒரு சிறந்த நடத்தை திறமை கொண்ட குழு. பெயர்ச் சொல் 

ஆரோக்ய வாழ்வு :

காய்ச்சலின் போது போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். தேவைப்பட்டால், மருத்துவரின் ஆலோசனையின் படி வாய்வழி திரவங்களை எடுத்துக் கொள்ளுங்கள். இது திரவம் மற்றும் எலக்ட்ரோலைட் இழப்பை ஈடுசெய்ய உதவும்.


மார்ச் 08


அனைத்துலக பெண்கள் நாள்



அனைத்துலக பெண்கள் நாள் (International Women's Day) ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் திகதியன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.[1] ஐக்கிய நாடுகள் அவையால் அறிவிக்கப்பட்ட இந்த நாளில் பல நாடுகளில் பொது விடுமுறை நாளாகும். 
அமெரிக்காவின் தொழிற்புரட்சி நகர் நியூயோர்க், இங்கு நெசவுத் தொழிலில் பெருமளவு பெண்கள் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் பதினாறு மணிநேரம் வேலை செய்து மிகக் குறைவான ஊதியத்தைப் பெற்றனர். அந்த ஊதியத்தைப் பெறுவதற்குக் கூட நிர்வாகத்தில் உள்ளவர்களின் உடற்பசிக்கு இணங்கினால் தான் கிடைக்கும் என்ற நிலை இருந்தது. 1857 இல் நியூயோர்க் நகரில் உழைக்கும் பெண்கள் கூடி குரல் எழுப்பினர். தொடர்ந்து போராட்டங்கள், பெண்கள் அமைப்புகள் தோன்றின.[2] 1908 இல் வாக்குரிமை கேட்டுக் கொதித்து எழுந்தனர். ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட்டே போராட்டத்தின் தாக்கம் கண்டு குலைந்து போனார். போராடினால்தான் உரிமைகள் கிடைக்கும் என்ற சிந்தனை உலகெங்கும் கிளர்ந்தெழுந்தது. அதன் விளைவு 1910 இல் ஹேகனில் அனைத்துலகப் பெண்கள் நாள் மாநாடு கிளாரா ஜெட்கின் தலைமையில் கூடியது. அதன் தொடர்பாக சர்வதேச மகளிர் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. இந்த அமைப்பின் சார்பில் 1911 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் திகதி ஜேர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்து கலந்து கொண்ட மகளிர் பிரதிநிதிகளின் முதல் சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடினர். இந்தக் கூட்டத்தில் தான், அரசன் லூயிஸ் பிளாங்க் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க ஒப்புதல் அளித்த நாளான மார்ச் 8 ஐ நினைவு கூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் நாளை சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாட முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றினர்.

நீதிக்கதை

தென்னை மரம்!

அரசர் கிருஷ்ணதேவராயரின் அவைக்கு ஒரு நபர் வந்தார். அவர் அரசரிடம், அரசே! என்னுடைய வயலும் பக்கத்து வீட்டுக்காரர் வயலும் அருகருகில் உள்ளன. இரண்டுக்கும் இடையில் உள்ள வரப்பில், ஒரு தென்னை மரம் உள்ளது. பக்கத்து வீட்டுக்காரர் அதை எனக்கு விற்றுவிட்டார். நான்தான் அதை நன்றாகப் பராமரித்து வருகிறேன். இன்று அவர் என்னைத் தேங்காய் பறிக்கக் கூடாது என்றார். இப்போது அவர் தன் முடிவை மாற்றிக் கொண்டு விட்டாராம். மரம் திரும்ப அவருக்கு வேண்டுமாம்... என்று முறையிட்டார்.

அதைக் கேட்டு அவையினர் அனைவரும் திடுக்கிட்டனர். அமைச்சர் சொன்னார். அந்த மனிதாபிமானம் அற்ற மனிதரைக் கைது செய்து வந்து சிறையில் அடைக்க வேண்டும் என்றார். அதற்குள் சேனாதிபதி, அந்த நபரைக் கைது செய்து வரத் தயாராகி விட்டார். அப்போது அரசர் என்ன செய்யலாம்? என்று கேட்பதைப் போல் தெனாலிராமனைப் பார்த்தார். தெனாலிராமன் புரிந்து கொண்டு, தாங்கள் அனுமதி தந்தால், இதற்கான தீர்வை நாளைக்குத் தள்ளி வைத்துக் கொள்ளலாம்... என்றார்.

அரசர், சரி என்றார். தெனாலி அந்த நபரிடம், நாளைக்கு உன் பக்கத்து வீட்டுக்காரனையும் அழைத்து வா... என்று அவனை அனுப்பி விட்டார். மறுநாள் அந்த நபரும், பக்கத்து வீட்டுக்காரனும் சபைக்கு வந்தனர். இருவரிடமும் நன்கு விசாரித்த பிறகு தெனாலிராமன் சொன்னார். அப்படியானால் நீ உன் மரத்தைத் திரும்ப எடுத்துக் கொள்ள விரும்புகிறாய் இல்லையா? என்றார். அதற்கு அவன், ஆம் ஐயா! என்றான். சரி, நீ அவனுடைய பணத்தைத் திரும்பக் கொடுத்துவிடு... என்றார் தெனாலிராமன்.

அவனும் பணத்தை எடுத்துக் கொடுத்து விட்டான். சபையினருக்கு ஒன்றும் புரியவில்லை. தெனாலி ஏன் இப்படியெல்லாம் செய்கிறார்? என்று திகைத்தார். பிறகு தெனாலி, மரத்தை வாங்கியவரிடம், சரி... இன்றிலிருந்து அந்த மரம் உன்னுடையது இல்லை... என்றார். அந்த மனிதருக்கு ஏமாற்றம். அப்போது தெனாலிராமன் தொடர்ந்து, இன்னொரு விஷயம்... அந்த மரம் நீ வாங்கும்போது எப்படி இருந்ததோ அப்படியே அதை நீ திரும்பக் கொடுத்து விட வேண்டும்... என்று கூறி விளக்கினார். 

அதாவது நீ மரத்தை அவரிடம் வாங்கும்போது அம்மரம் காய்க்கத் தொடங்கவில்லை. ஆகவே, அதைத் திரும்ப ஒப்படைப்பதற்கு முன்பு எல்லாக் காய்களையும் பறித்துக் கொண்டுவிடு... என்றார் வாங்கியவரிடம். திரும்பப் பெற்றவரிடம், காய் இல்லாத மரத்தைத்தானே நீ விற்றாய்...? ஆகவே, என்றைக்கும் காயில்லாத மரம்தான் உன்னுடையது. அதில் இனிமேல் காய்க்கும் காய்கள் எல்லாம் மரத்தைத் திரும்பக் கொடுத்தவரையே சேரும்... அதை அவர் பறித்துக்கொள்ள அவ்வப்போது நீ அனுமதிக்க வேண்டும் தடுக்கக்கூடாது. நீயும் பறித்துக் கொள்ளக்கூடாது... என்றார்.

தெனாலியின் இத்தீர்ப்பை அரசர் ஆமோதித்தார். திரும்பப் பெற்றவன் முகத்தில் ஏமாற்றம். புகார் கொடுத்த நபர் மகிழ்ச்சியுடன் எல்லாரையும் குறிப்பாக, தெனாலிராமனை வணங்கி விட்டு விடைபெற்று சென்றார்.

இன்றைய செய்திகள்

08.03. 2023

* தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருகே விண்வெளி தொழில் பூங்கா அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

* பணி நிரந்தரம் செய்யக் கோரி சென்னை டிபிஐ வளாகத்தில் பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

* அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் மாதாந்திர உதவிதொகைக்கு விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு.

* சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு,   தெலங்கானாவில் பெண் அரசு ஊழியர்களுக்கு நாளை அரசு விடுமுறை.

* பெரும் பின்னடைவில் சீன பொருளாதாரம் - 50 ஆண்டுகளில் இல்லாத பின்னடைவு என தகவல்.

* 350 கிலோ மீட்டர் மாரத்தான் பந்தயத்தை 102 மணி நேரத்தில் இந்தியாவைச் சேர்ந்த சுகந்த் சிங் சுகி நிறைவு செய்துள்ளார்.

* சர்வதேச மகளிர் தினத்தையொட்டி  10 நகரங்களில் 12-ம் தேதி நீச்சல் போட்டி நடத்தப்பட உள்ளது.

* ஏடிஎக்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் உக்ரைனின் மார்டா கோஸ்ட்யுக் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

Today's Headlines

* The Tamil Nadu government is planning to set up an aerospace industrial park near Kulasekaranpatnam in Thoothukudi district.

* Part-time special teachers staged an attention demonstration at TBI campus, Chennai, demanding permanent job tenure.

 * Tamil Nadu government invites applications for monthly allowance for senior Tamil scholars.

* On the occasion of International Women's Day, tomorrow is a public holiday for women government employees in Telangana.

* China's economy in deep recession - reported worst in 50 years

* India's Sukanth Singh Suki completed the 350 km marathon in 102 hours.

 * A swimming competition will be held on 12th in 10 cities on the occasion of International Women's Day.

* Ukraine's Marta Kostyuk has won the ATX Open tennis title.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Monday, March 6, 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.03.2023

  திருக்குறள் :

பால் :அறத்துப்பால் 

இயல்:இல்லறவியல் 

அதிகாரம்: ஒழுக்கம் உடைமை

குறள் : 139
ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்.

பொருள்:
தவறியும்கூடத் தம் வாயால் தகாத சொற்களைச் சொல்வது ஒழுக்கம் உடையவர்களிடம் இல்லாத பண்பாகும்

பழமொழி :

Welcome is the best dish.

முகமலர்ந்து உபசரிப்பதே நல்விருந்து.

இரண்டொழுக்க பண்புகள் :

1. என் கண் இவ்வுலகை கண்டு கற்றுக் கொள்ள உதவும் ஒரு சன்னல். 

2. எனவே என் சன்னலை பாதுகாப்பேன்.

பொன்மொழி :

நல்ல வாழ்க்கை நடத்துவதற்கு நல்ல பண்புகளை முறையாகப் பெற்றிருக்க வேண்டும்.

பொது அறிவு :

1. தமிழ்நாட்டில் மின்சார வாரியம் எப்போது தொடங்கப்பட்டது ? 

1957ஆம் ஆண்டு . 

2.முதுகு தண்டில் உள்ள எலும்புகள் எத்தனை?

 33.

English words & meanings :

Elegant -graceful and stylish in appearance or manner. adjective. She is elegant. நேர்த்தியான. பெயரடை

ஆரோக்ய வாழ்வு :

காய்ச்சல் வந்ததும் பலர் நமக்கு கூறும் அறிவுரைகளில் ஒன்று ஆவி பிடிப்பது. இது உடலுக்கும் நாம் இருக்கும் அறையை ஈரப்பதத்துடன் வைக்கவும் உதவும். எனவே காய்ச்சல் வந்தால் சிறிது நிமிடம் ஆவி பிடியுங்கள் மற்றும் சுடு நீரில் குளியுங்கள்.




நீதிக்கதை

உலகிலேயே வெண்மையான பொருள் எது?

ஒருசமயம், தெனாலிராமன் அரசவையில் இருந்தபோது, தூக்கம் கண்ணைச் செருகியது. அதைக் கண்டு உறுப்பினர்கள் சிரித்து விட்டனர். அப்போது அமைச்சர், அரசே! தெனாலிக்கு வயதாகி விட்டது. ஓய்வு கொடுங்கள் என்றார். அரசரிடம் பதில் இல்லை. மறுநாள் அரசர், என் மனதில் ஒரு கேள்வி, உலகிலேயே வெண்மையான பொருள் எது? இதற்குச் சரியான பதிலை நீங்கள் சொல்லி விட்டால், தெனாலியை ஓய்வு கொடுத்து அனுப்பி விடுவேன் என்றார். 

அமைச்சர், வெள்ளி நகை தான்... என்றார். அரசகுரு, பால் தான்! என்றார். சிலர், சம்பா மலர்! என்றனர். வேறு சிலர், மல்லிகை தான் என்றனர். இன்னும் சிலர் சுண்ணாம்பு தான்! என்றனர். அரசர் திருப்தி அடையவில்லை. தெனாலியிடம் கேட்டார். நாளைக்குக் கூறுகிறேன் என்றார் தெனாலி. மறுநாள் தெனாலி வெள்ளி நகை, கொஞ்சம் பால், சம்பா மலர், மல்லிகை மலர்கள் ஆகியவற்றை வரவழைத்தார். சுண்ணாம்பும் வந்தது. பிறகு ஒரு பெரிய அறையில் தரை விரிப்பின் மீது அவற்றை வைத்து, கதவு மற்றும் ஜன்னல்களைச் சாத்தித் திரையிட்டார்.

வெளியில் வந்து, அரசே! இவர்களிடம் உள்ளே போய் அவரவர்கள் வெண்மை என்று கருதும் பொருளை எடுத்து வரச் சொல்லுங்கள்... என்றார். அனைவரும் உள்ளே போயினர். அவர்களுக்கு உள்ளே இருட்டில் எதுவும் தெரியவில்லை. ஒருவருக்குப் பால் பாத்திரம் காலில் இடறி, பால் தரையில் கொட்டியது. இன்னொருவர் காலில் நகைகள் இடறின. வேறொருவர் பூக்களை மிதித்து விட்டார். ஒரு பாத்திரத்தில் இருந்த சுண்ணாம்பு கவிழ்ந்தது. மூவரும் பதறி, ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டனர். அதே சமயம் தெனாலிராமன் அறையில் மேற்புறக் கதவைத் திறந்தார். அறையில் ஒளி பரவியது. அப்போது அங்கிருந்த பொருட்கள் பளிச்சென்று தெரிந்தன. அச்சமயம், அரசர் கிருஷ்ணதேவராயர் உள்ளே வந்தார்.

உடனே தெனாலிராமன், அரசே! என்னுடைய பதில் இப்போது உங்களுக்கு விளங்கியிருக்குமே! உலகில் எல்லாவற்றையும் விட வெண்மையான பொருள் பாலோ, வெள்ளி நகையோ, சுண்ணாம்போ அல்லது மலர்களோ அல்ல. அப்படியிருந்தால், இருட்டறையில் அவை பளிச்சிட்டிருக்க வேண்டுமே! ஏன் கண்ணுக்குத் தெரியவில்லை? எனவே, உலகில் வெண்மையான பொருள் சூரியனின் பிரகாசம் மட்டும்தான். அதனால்தான் உலகின் மற்ற எல்லாப் பொருள்களும் பிரகாசிக்கின்றன என்றார். அதைக் கேட்ட அரசர், மகிழ்ச்சியடைந்து, தெனாலியை வாரி அணைத்துக் கொண்டார்.

சபையினரிடம் அரசர், தெனாலிராமன் நமக்கு ஏன் இத்தனை பிரியமானவனாக இருக்கிறான் என்பதை இப்போது நீங்கள் அறிந்து கொண்டிருப்பீர்களே...? என்றார். தெனாலிக்கு ஓய்வு கொடுத்து அனுப்புங்கள் என்று யோசனை கூறியவர்கள் எல்லாம் வாயடைத்துப் போயினர்.

இன்றைய செய்திகள்

07.03. 2023

* கரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றினாலே H3N2  இன்புளுயன்சா வைரஸ் பாதிப்புகளில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

* ''மக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை அவசியம்'' - மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்.

* முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்காக நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வில் 2 லட்சம் மருத்துவர்கள் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள் வரும் 31-ம் தேதி வெளியாகின்றன.

* உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் ஸ்க்ரப் டைபஸ் காய்ச்சலுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சையை இந்திய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

* உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள உத்தரகாசி மாவட்டத்தில் 3 முறை நிலநலடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதியில் வீட்டை விட்டு வெளியேறினர்.

* இந்தோனேஷியா எரிபொருள் கிடங்கில் பயங்கர தீ விபத்து: 19 பேர் உயிரிழப்பு; 3 பேர் மாயம்.

* மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்: டெல்லி கேபிடல்ஸ் வெற்றி.

* இராணி கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது.

Today's Headlines

* Minister M. Subramanian has said that by following the rules of corona prevention, we can protect ourselves from the effects of the H3N2 influenza virus.

 * "Immediate action is necessary on the petitions given by the people" - CM Stalin's insistence to the District Collectors.

 * 2 lakh doctors appeared in the NEET exam held across the country for postgraduate medical courses.  The exam results will be released on the 31st.

 * Indian researchers have discovered a better medical treatment for life-threatening scrub typhus fever.

 * 3 earthquakes occurred in the Uttarakhand district of Uttarakhand state.  As a result, people ran out of the house in a panic.

 * Indonesia fuel depot fire: 19 dead;  3 people are missing.

 * Women's Premier League Cricket: Delhi Capitals won.

 * The rest of India won the Irani Cup Cricket Championship.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்