Monday, December 5, 2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 06.12.2022

 திருக்குறள் :

பால் :அறத்துப்பால் 

இயல்:இல்லறவியல் 

அதிகாரம்: அன்புடைமை

குறள் : 76
அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.

பொருள்:
வீரச் செயல்களுக்கும் அன்பு துணையாகத் திகழ்கிறது என்பதை அறியாதவர்களே, அறச் செயல்களுக்கு மட்டுமே அன்பு துணையாக இருப்பதாகக் கூறுவார்கள்.

பழமொழி :

Who hath a good trade though all waters may wade.
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு .

இரண்டொழுக்க பண்புகள் :

1. உலகின் மிக சிறந்த வைரம் நல் எண்ணங்கள்.

 2. வைரம் நமக்கு போதிப்பது உறுதியாக இருந்தால் மட்டுமே ஒளிர முடியும். எனவே எந்த சூழ்நிலையிலும் உறுதியாக இருப்பேன்

பொன்மொழி :

படித்ததை பிரதிபலிக்காமல் படித்துக்கொண்டே இருப்பது, ஜீரணிக்காமல் சாப்பிட்டுக்கொண்டே இருப்பதைப் போன்றது. --எட்மண்ட் பர்க்

பொது அறிவு :

1. பாலாறு எந்த இடத்தில் உற்பத்தியாகிறது? 

சிந்தாமணி. 

2. களிமண்ணை போல் கையால் பிசையக்கூடிய உலோகம் எது? 

சுத்த தங்கம்.

English words & meanings :

creak -squeak, high pitched sound. both noun and verb. சுண்டெலி போல் கீச்சிடு. பெயர்ச் சொல், வினைச் சொல். creek - stream of water. சிறிய உப நதி. noun. பெயர்ச் சொல்.

ஆரோக்ய வாழ்வு :

ஒரு வேகவைத்த முட்டையில் ஆரோக்கியமான நல்ல கொழுப்பு உள்ளது. இது உங்கள் உடல் உறுப்புகளைப் பாதுகாக்கிறது மற்றும் உடலை சூடாக வைத்திருக்க உதவுகிறது. மேலும் வேகவைத்த முட்டை உங்கள் உடலை குளிர்காலத்திற்கு ஏற்றதாக ஆக்குகிறது. வேகவைத்த முட்டையில் நல்ல கொழுப்பு உள்ளது. இதை மிதமாக எடுத்துக் கொண்டால், உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

NMMS Q

A26, B25, .........., ___?____. a) Z1. b) Y1. c) Z. d) Z26 

 விடை: Z1 

டிசம்பர் 06


பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் அவர்களின் நினைவுநாள்




பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (ஆங்கில மொழி: Bhimrao Ramji Ambedkarமராத்திभीमराव रामजी आंबेडकर14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956) என்றும் பாபாசாகேப் அம்பேத்கர் (பொருள்: தந்தை) என்றும் அழைக்கப்படுபவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர் ஆவார். உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார். பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர். பரோடா மன்னருடன் இணைந்து தீண்டாமை ஒழியப் போராடியவர். பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் தேர்ந்தவர்; ஆசிரியராகவும், இதழாளராகவும், எழுத்தாளராகவும் சமூகநீதிப் புரட்சியாளராகவும் விளங்கியவர். 'திராவிட புத்தம்' என்ற பெயரில் பல ஆயிரக்கணக்கான பட்டியல் சாதி மக்களை புத்தசமயத்தைத் தழுவச்செய்தவர்; இவை யாவற்றுக்கும் மேலாக இந்திய அரசியலமைப்புச் சாசனத்தை வரைவதற்கான குழுவின் தலைவராகவும் பொறுப்பேற்றவர். 2012 ஆம் ஆண்டில் வரலாற்றுத் தொலைக்காட்சியும், சி.என்.என்- ஐ.பி.என் தொலைக்காட்சியும் நடத்திய வாக்கெடுப்பில் மிகச்சிறந்த இந்தியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] இந்தியாவின் மிகச்சிறந்த உயரிய விருதான 'பாரத ரத்னா' விருது இவரது இறப்புக்குப் பின் 1990இல் இவருக்கு வழங்கப்பட்டது.[3]

நீதிக்கதை

குருவி கொடுத்த விதை

ஓர் ஊரில் பண்ணையார் ஒருவருக்கு அந்த ஊரில் இருந்த அனைத்து நிலங்களும் சொந்தமாக இருந்தது. அவரிடம் முனியன் என்ற உழவன் வேலை பார்த்தான். அவனுக்கு சிறிய குடிசையும், கொஞ்ச நிலமும் இருந்தது. 

பண்ணையாரிடம் முனியன், ஐயா! உங்கள் அனைத்து நிலங்களில் உழுது விதை நட்டுவிட்டார்கள். என் நிலம் மட்டும் காலியாக உள்ளது. என் நிலத்தில் விதைப்பதற்கு சிறிது தானியம் தாருங்கள் என்றான். 

சொந்தமாகப் பயிரிட வேண்டாம், என் நிலத்திலேயே உழுது பயிரிடு. அரை வயிற்றுக் கஞ்சியாவது கிடைக்கும் என்று கோபத்துடன் சொன்னார் அவர். சோகத்துடன் வீட்டுக்கு சென்று தன் மனைவியிடம், நமக்கு தானியம் தரவில்லை. நீயும் நம் குழந்தைகளும் எப்போதும் போலப் பட்டினி கிடக்க வேண்டியதுதான். இதுதான் நம் தலைவிதி என்று சொல்லி வருத்தப்பட்டான். 

அவர்கள் குடிசையில் குருவி ஒன்று கூடு கட்டியதை முனியனும், அவன் மனைவியும் பார்த்தனர். பாவம்! வாய் பேச முடியாத உயிர் அது. நாம் அதற்குத் தொல்லை செய்யக்கூடாது என்றான் முனியன். கூட்டில் அந்தக் குருவி நான்கு குஞ்சுகள் பொறித்தது. 

திடீரென்று அந்தக் குருவிக்கூட்டுக்குள் ஒரு பாம்பு நுழைந்ததை பார்த்த குருவிக்குஞ்சுகள் கத்தியது, அதைக்கேட்ட உழவன் பாம்பை பிடித்துக் கொல்வதற்குள் அது மூன்று குஞ்சுகளைத் தின்று விட்டது. தரையில் விழுந்த ஒரு குஞ்சு மட்டும் கால் ஒடிந்து இருந்தது. அதை அன்போடு எடுத்து அதற்குக் கட்டுப்போட்டான். அதை மீண்டும் கூட்டில் வைத்து உணவு கொடுத்து நன்கு பார்த்துக்கொண்டான். 

அந்தக் குருவியின் கால்கள் சரியானதும், அது பறந்து சென்றது. உழவனும் குடும்பத்தினரும் வறுமையில் இருந்தனர். அச்சமயம் அவர்கள் வீட்டுக்கு அவன் வளர்த்த குருவி வந்தது. அவன் கையில் 3 விதையை கொடுத்து இதை உன் வீட்டுத் தோட்டத்தில் ஒன்றும், வீட்டின் முன்புறத்தில் ஒரு விதையையும், மற்றொரு விதையை வீட்டின் ஜன்னல் ஓரத்திலும் நட்டு வை. என் மீது காட்டிய அன்பிற்கு நன்றி என்று சொல்லிவிட்டுப் பறந்தது. குருவி சொன்னபடியே மூன்று விதைகளையும் நட்டான். 

மறுநாள் காலையில் அங்கே மூன்று பெரிய பூசணிக்காய்கள் காய்த்தன. இதைப் பார்த்து ஆச்சரியப்பட்டான். பின்பு, அந்த பூசணிக்காயை இரண்டு துண்டாக வெட்டிப்பார்த்தான். அதனுள் இருந்து விதவிதமான உணவுப் பொருள்கள் வந்தன. சுவையான அவற்றை எல்லோரும் மகிழ்ச்சியாக உண்டனர். மீண்டும் அந்தப் பூசணிக்காயை ஒன்று சேர்த்ததும். பழையபடி அது முழுப் பூசணிக்காய் ஆனது. 

இது மந்திரப் பூசணிக்காய். நமக்கு உணவு வேண்டும் என்றால் பிளந்தால் உணவு கிடைக்கும் என்றான். இதேபோல், மீதமுள்ள 2 பூசணிக்காயையும் பிளந்து பார்த்தனர். அதில், ஒன்றில் அழகான ஆடைகள், விலை உயர்ந்த மணிகளும், மற்றொன்றில் பொற்காசுகளும் இருந்தன. 

அதன் பிறகு முனியன் குடும்பம் பெரும் வசதியான வாழ்க்கை வாழ்ந்தனர். இதனை அறிந்த பண்ணையார், உழவனிடம் முனியா! உனக்கு எங்கிருந்து இவ்வளவு செல்வம் கிடைத்தது? உண்மையைச் சொல் என்று கேட்டார். 

அவனும் நடந்ததை எல்லாம் அப்படியே சொன்னான். அதை கேட்ட அவர் வீட்டில் மேல் பகுதியில் குருவிக்கூடு ஒன்றை அவரே செய்தார். ஒரு குருவி வந்து அந்தக் கூட்டில் தங்கி நான்கு குஞ்சுகள் பொறித்தது. பாம்பு வரவே இல்லை. அதனால் அவரே, அந்த குருவிக்கூட்டை கலைத்து மூன்று குஞ்சுகளை கொன்றார். ஒரு குருவியின் காலை உடைத்துக் கீழே எறிந்தார். 

பிறகு கால் உடைந்த குருவியிடம் அன்பு காட்டுவது போல் நடித்து வேளை தவறாமல் உணவு அளித்தார். கால் சரியான அந்தக் குருவி கூட்டைவிட்டுப் பறந்து போனது. அவர் குருவி விதை கொடுக்கும் என்று எதிர்பார்த்தபோது, கதவைத் தட்டியது குருவி. அவரிடம் மூன்று விதைகளைத் தந்தது. ஒன்றை வீட்டின் பின்புறமும், இரண்டாவதை வீட்டின் முன்புறமும், மூன்றாவதைக் கிணற்றோரமும் நடு என்று சொல்லிவிட்டுப் பறந்து சென்றது. மூன்று தானியங்களையும் நட்டார். 

மறுநாளே மூன்று பெரிய பூசணிக்காய்கள் காய்த்து இருந்தன. மூன்று பூசணிக்காயையும் வெட்டினார். அதில் ஒன்றில் இருந்து எண்ணற்ற பூச்சிகள் வயலில் விளைந்திருந்த பயிர்களை எல்லாம் ஒரு நொடிக்குள் வீணாக்கியது. பின்பு இரண்டாவதில் இருந்து தீ வெளிப்பட்டு அவரையும் அந்த மாளிகையையும் ஒரு நொடிக்குள் சாம்பல் ஆக்கியது. மூன்றாவதில் பாம்பு, தேள், பூரான் போன்றவை இருந்தன. அதன்பிறகு, தனது பேராசை தவறு என உணர்ந்தார் பண்ணையார். 

நீதி :
பொறாமை குணம் இருத்தல் கூடாது.

இன்றைய செய்திகள்1

06.12.22

* சென்னை காலநிலை மாற்ற செயல் திட்டத்தின் இறுதி வரைவு அறிக்கை இரண்டு மாதங்களில் வெளியாகும் என்று சென்னை ஸ்மார்ட் சிட்டி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

* காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக 8-ம் தேதி தமிழகத்தின் சில இடங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

* ஆதிதிராவிட, பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த சிறு, குறு, விவசாயிகள், அரசின் வேளாண் திட்டங்களில் கூடுதலாக 20 சதவீதம் மானியத்தைப் பெற விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

* வில்லிவாக்கம் ஏரியில் ரூ.8 கோடி செலவில் கண்ணாடி தொங்கு பாலம்: அடுத்த ஆண்டு மே மாதம் பயன்பாட்டுக்கு வருகிறது.

* பஞ்சாபில் வானில் பறக்க ஆசைப்பட்டு விமான மாடல்களை உருவாக்கி மாணவர்களுக்கு தொழில்நுட்பத்தை கற்றுத் தரும் விவசாயி.

* உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரும் பேச்சுவார்த்தைக்கு அதிபர் புதின் ஒப்புக் கொண்டால், ரஷ்ய பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்குவது குறித்து மேற்கத்திய நாடுகள் பரிசீலிக்க வேண்டும் என பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் கூறியுள்ளார்.

* உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ் அணி கால்இறுதிக்குள் நுழைந்தது.

* 19 வயதுக்கு உட்பட்ட பெண்கள் டி20 உலகக்கோப்பை: இந்திய அணிக்கு தலைமை தாங்குகிறார் ஷபாலி வர்மா.

Today's Headlines

* Chennai Smart City officials have said that the final draft report of the Chennai Climate Change Action Plan will be out in two months.

* Chennai Meteorological Department has issued a red alert warning in some places of Tamil Nadu on the 8th due to low-pressure areas.

*  Minister MRK. Panneerselvam has said that small farmers belonging to Adi Dravida and tribal classes can apply for an additional 20 percent subsidy in the government's agricultural schemes.

* Glass suspension bridge at Villivakkam Lake at a cost of Rs 8 crore: It will be commissioned in May next year.

* A farmer in Punjab who aspires to fly in the sky builds model airplanes and teaches technology to students.

* French President Emmanuel Macron has said the West should consider guaranteeing Russian security if President Putin agrees to talks to end the war in Ukraine.

* France entered the quarter-finals of the World Cup football tournament.

 *Women's Under-19 T20 World Cup: Shabali Verma to lead the Indian team
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Sunday, December 4, 2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.12.2022

திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

 இயல்:இல்லறவியல் 

அதிகாரம்: அன்புடைமை

குறள் : 74
அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்புஎன்னும் நாடாச் சிறப்பு.

பொருள்:
அன்பு பிறரிடம் விருப்பம் உடையவராக வாழும் தன்மையைத் தரும்: அஃது எல்லாரிடத்தும் நட்பு என்றுசொல்லப்படும் அளவற்ற சிறப்பைத் தரும்

பழமொழி :

A rolling stone gathers no moss

அலைபாயும் மனத்தால் எதையும் செய்ய முடியாது

இரண்டொழுக்க பண்புகள் :

1. உலகின் மிக சிறந்த வைரம் நல் எண்ணங்கள். 

2. வைரம் நமக்கு போதிப்பது உறுதியாக இருந்தால் மட்டுமே ஒளிர முடியும். எனவே எந்த சூழ்நிலையிலும் உறுதியாக இருப்பேன் 

பொன்மொழி :

ஒரு தேசத்தின் முதன்மையான நம்பிக்கை அதன் இளைஞர்களின் சரியான கல்வியில் உள்ளது. --டிசிடெரியஸ் எராஸ்மஸ்

பொது அறிவு :

1. கண்ணாடியை கண்டுபிடித்தவர் யார்?

 ஆக்ஸ்பர்க், 1080 . (ஜெர்மனி ).

 2.குளோரினை கண்டுபிடித்தவர் யார்?

 கே. ஷீல்லி, 1774.

English words & meanings :

scent -odor, perfume.noun வாசனை. பெயர்ச் சொல். cent - Penny coin. least money value. noun. குறைந்த பணமதிப்பு. பெயர்ச் சொல் 

ஆரோக்ய வாழ்வு :

ஒரு முட்டையில் வைட்டமின் ஏ, ஃபோலேட், வைட்டமின் பி 5, வைட்டமின் பி 12, வைட்டமின் டி, இரும்பு, கரோட்டினாய்டுகள், பாஸ்பரஸ், செலினியம் மற்றும் துத்தநாகம் உள்ளன. இதுபோல பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த உணவு எதுவும் இல்லை. மேலும், ஒரு வேகவைத்த முட்டையில் 78 கிலோ கலோரி, ஒரு கிராம் கார்போஹைட்ரேட், 6 கிராம் புரதம், 9 கிராம் கொழுப்பு மற்றும் 187 மில்லிகிராம் கொழுப்பு உள்ளது

NMMS Q

36, 4, 18, 8, 9, 16, ? a)18. b) 32. c) 8. d) 9/2. 

 விடை: 9/2. 

விளக்கம்: 36÷2 =18; 18÷2 = 9; 9÷2= 9/2

டிசம்பர் 05


கல்கி அவர்களின் நினைவுநாள்




கல்கி (9 செப்டம்பர் 1899 – 5 திசம்பர் 1954) புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இரா. கிருஷ்ணமூர்த்தி என்ற இயற்பெயர் கொண்ட இவர் 35 சிறுகதைத் தொகுதிகள், புதினங்கள், கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். எனினும், மிகச் சிறந்த சமூக மற்றும் வரலாற்றுப் புதினங்களை எழுதியதற்காக பரவலாக அறியப்படுகிறார். இவர் எழுதிய பொன்னியின் செல்வன் புதினம் மிகப் புகழ் பெற்றதாகும். தன் படைப்புகள் மூலம் இந்திய தேசிய விடுதலை போராட்டத்திற்கும் பங்களித்திருக்கிறார். தியாகபூமி புதினம் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது.

நெல்சன் மண்டேலா அவர்களின் நினைவுநாள்




நெல்சன் மண்டேலா (Nelson Rolihlahla Mandela, 18 சூலை 1918 – 5 திசம்பர் 2013), தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் ஆவார். அதற்கு முன்னர் நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவராக இருந்தார். தொடக்கத்தில் அறப்போர் (வன்முறையற்ற) வழியில் நம்பிக்கை கொண்டிருந்த இவர், பிறகு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் இராணுவப் பிரிவுக்கு தலைமை தாங்கினார். இவர்கள் மரபுசாரா கொரில்லாப் போர்முறைத் தாக்குதலை நிறவெறி அரசுக்கு எதிராக நடத்தினர். மண்டேலாவின் 27 ஆண்டு சிறைவாசம், நிறவெறிக் கொடுமையின் பரவலாக அறியப்பட்ட சாட்சியமாக விளங்குகிறது. சிறையின் பெரும்பாலான காலத்தை இவர் ராபன் தீவில் சிறிய சிறை அறையில் கழித்தார். 1990 இல் அவரது விடுதலைக்கு பிறகு அமைதியான முறையில் புதிய தென்னாப்பிரிக்கக் குடியரசு மலர்ந்தது. மண்டேலா, உலகில் அதிகம் மதிக்கப்படும் தலைவர்களில் ஒருவராக விளங்கினார்

நீதிக்கதை

வல்லவர் யார்?

ஒரு நாள் எறும்பு தரையில் மெல்ல ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. அப்போது பூரான் அதன் அருகே வந்தது. நண்பா! நான் வருவதைக் கூடக் கவனிக்காமல் எங்கே சென்று கொண்டிருக்கிறாய்? என்று கேட்டது. எறும்பு பூரான் நண்பா! உன்னைக் கவனித்துக் கொண்டிருந்தால் என் கடமையை நான் சரிவரச் செய்ய முடியாதே என்று சொன்னது. அப்படியென்ன முக்கியமான கடமை? என்று பூரான் கேட்டது. 

மழைக்காலத்திற்குத் தேவையான உணவை வெயில் காலத்திலேயே தேடிச் சேர்த்து வைப்பது என் கடமை என்றது எறும்பு. உன்னிடம் பேசிக்கொண்டிருந்தால் என் கடமையைச் செய்ய முடியாது என்று கூறி எறும்பு சென்றுவிட்டது. பூரானுக்கு எறும்பின் மேல் வருத்தம். அதனால் எறும்பை மட்டம் தட்டியே தீர வேண்டும் என்று நினைத்துக்கொண்டது. 

அடுத்த நாள் எறும்பு வரும் வழியில் நின்று எறும்பே, கடமையை சரிவரச் செய்வதால் மட்டும் நீ வல்லவனாக முடியாது!. உன்னால் என்னைப்போல வேகமாக ஊர்ந்து வர முடியுமா? அப்படி வந்தால் நீ என்னை விட வல்லவன் என்று ஒத்துக்கொள்கிறேன் என்றது. அதற்கு எறும்பு மிக அமைதியுடன் பூரானே, உன் அளவுக்கு வேகமாக என்னால் ஊர முடியாது. அந்த தைரியத்தில் நீ பேசுகிறாய். ஆனால், நான் செய்யும் சில காரியங்களை உன்னாலும் செய்ய முடியாது. அதனால் யார் வலியவன் என்ற பரிட்சையெல்லாம் வேண்டாம் என்று திரும்பவும் கூறியது. பூரானோ அப்படி என்ன சாகசத்தை நீ செய்வாய் என்று கேட்டது. 

எறும்பு பூரானை ஒரு தண்ணீர் தொட்டியின் மேல் அமர்ந்து வேடிக்கை பார்க்கச் சொல்லிவிட்டு, கரையின் அருகில் இருந்த ஒரு துரும்பில் ஏறி தண்ணிரில் விழுந்து அந்த துரும்பைப் பிடித்துக்கொண்டு தண்ணீரில் மிதந்தது. பூரானைப் பார்த்து உன்னால் இப்படிச் செய்து காட்ட முடியுமா? என்று கேட்டது. பூரான் அப்போதுதான் தனது தவறினை உணர்ந்தது. பின்பு, பூரான் எறும்பிடம் மன்னிப்புக் கேட்டு சிறந்த நண்பனாகத் திகழ்ந்து வந்தது. 

நீதி :
எல்லோருக்கும் சில வல்லமைகளும் சில இயலாமைகளும் இயற்கையிலேயே உண்டு.

இன்றைய செய்திகள்1

05.12.22

* ஜி-20 மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நாளை நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்வதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் நாளை டெல்லி செல்கிறார்.

* பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட 4 லட்சத்து 39,315 பேருக்கான ஓய்வூதியம் ரூ.1,000-ல் இருந்து ரூ.1,500-ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

* அந்தமான் அருகே உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் வரும் 7-ம் தேதி முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* ரேஷன் அட்டையுடன் வங்கிக் கணக்கை குடும்ப அட்டைதாரர்கள் இணைக்காவிட்டாலும் பொருட்கள் வழங்குவது நிறுத்தப்படாது என்று கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

* வீரர்கள் மற்றும் பொருட்களை ஏற்றிச் செல்வதற்கு பயன்படுத்தப்படும் பழைய ஏஎன்-32 ரக விமானங்களுக்கு மாற்றாக நவீனசி-295 ரக விமானங்களை வாங்குவது குறித்து இந்திய விமானப்படை பரிசீலித்து வருகிறது.

* கரோனா கட்டுப்பாட்டை நீக்கினால் 20 லட்சம் பேர் உயிரிழப்பர் - சீன மருத்துவ நிபுணர்கள் கணிப்பு.

* சுற்றுச்சூழல் பங்களிப்புக்காக வழங்கப்படும் மதிப்புமிக்க எர்த்ஷாட் பரிசை, இந்த ஆண்டு இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனம் வென்றுள்ளது.

* தென் மண்டல சீனியர் நீச்சல் போட்டி: தமிழக வீராங்கனை தீக்‌ஷா 2 தங்கம் வென்றார்.

* இந்தியாவுக்கு எதிரான ஹாக்கி தொடர் : 4-1 என வென்றது ஆஸ்திரேலியா.

Today's Headlines

* A consultative meeting regarding the G-20 summit will be held tomorrow under the chairmanship of Prime Minister Modi.  Tamil Nadu Chief Minister Stalin is going to Delhi tomorrow to participate in it.

 * Tamil Nadu Chief Minister Stalin has announced that the pension for 4 lakh 39,315 people, including the blind and differently abled, will be increased from Rs.1,000 to Rs.1,500.

 *According to the Meteorological Department, there is a possibility of heavy rain in Tamil Nadu from the 7th due to a new low pressure area forming near the Andamans.

 *Cooperatives, Food and Consumer Protection Department Secretary J. Radhakrishnan said that even if the family card holders do not link the bank account with the ration card, the supply of goods will not be stopped.

* The Indian Air Force is considering purchasing the modern C-295s to replace the aging AN-32s used to transport personnel and supplies.

* 20 lakh people will die if Corona safety measures removed - Chinese medical experts predict.

 *An Indian startup has won the prestigious Earthshot Prize for environmental contribution this year.

 * South Zone Senior Swimming Competition: Tamil Nadu's Deeksha wins 2 golds.

 *Hockey series against India: Australia won 4-1.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Thursday, December 1, 2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.12.2022

திருக்குறள் :

பால் :அறத்துப்பால் 

இயல்:இல்லறவியல் 

அதிகாரம்: அன்புடைமை

குறள் : 73
அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு.

பொருள்:
உயிரும் உடலும்போல் அன்பும் செயலும் இணைந்திருப்பதே உயர்ந்த பொருத்தமாகும்.

பழமொழி :

When one door shuts another open.
ஒரு வாசல் மூட, மறு வாசல் திறக்கும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. செல்லும் இடமெல்லாம் ஒழுக்கம், நேர்மை, அன்பு எனும் விதைகளை விதைத்து செல்வேன்.

 2. அதன் மூலம் இவ்வுலகை நாம் நன்கு வாழக் கூடிய இடமாக மாற்ற முயற்சி செய்வேன்.

பொன்மொழி :

ஒரு பள்ளிக்கூடத்தின் கதவைத் திறப்பவன், ஒரு சிறைச்சாலையை மூடுகிறான். --விக்டர் ஹ்யூகோ

பொது அறிவு :

1. சிலோன் எப்போது ஸ்ரீலங்கா ஆனது ? 

மே 1972ல். 

2. மிகக் குறைந்த வயதில் அமெரிக்க அதிபர் ஆகியவர் யார் ? 

தியோடர் ரூஸ்வெல்ட்.

English words & meanings :

cell - compartment. noun. அறை. பெயர்ச் சொல். sell - vend. verb.விற்பது. வினைச் சொல்

ஆரோக்ய வாழ்வு :

அன்னாசிப்பழம் நார்ச்சத்துக்கான நல்ல மூலமாகும். இது உங்களை நிரப்புகிறது மற்றும் இறுதியில் திருப்தியைத் தூண்டுகிறது. இதனால், நீங்கள் அதிகம் சாப்பிடுவது தவிர்க்கப்படுகிறது. மேலும், அன்னாசிப்பழத்தில் அழற்சி எதிர்ப்பு என்சைம் ப்ரோமெலைன் உள்ளது. இந்த நொதி புரதங்களின் வளர்சிதை மாற்றத்தில் உதவுகிறது. இது தொப்பை கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.


டிசம்பர் 02


சர்வதேச அடிமைத்தளை ஒழிப்பு தினம்

சர்வதேச அடிமைத்தளை ஒழிப்பு தினம் (International Day for the Abolition of Slavery) ஐக்கிய நாடுகள் பொது சபையால் அறிவிக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 2 ம் தேதி கொண்டாடப்படும் தினம் ஆகும். இந்த தினம் முதன் முதலில் 1986 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது.

நீதிக்கதை

புத்திசாலி அம்மா

ஓர் ஊரில் பெண் ஒருத்தி இருந்தாள். அவளுக்கு இரண்டு குழந்தைகள் இருந்தன. அவள் கணவன் வெளியூரில் வேலை செய்து கொண்டிருந்தான். 

பல நாட்களுக்குப் பிறகு கணவனிடமிருந்து, நீயும் குழந்தைகளும் இங்கு வந்து சேருங்கள், என்ற கடிதம் வந்தது. தன் குழந்தைகளுடன் மாட்டு வண்டியில் ஊருக்கு புறப்பட்டாள், போகும் வழியில் அடர்ந்த காட்டு வழியாக வண்டி சென்றது, ஆபத்து வரப்போவதை அறிந்த மாடுகள் கயிற்றை அறுத்துக் கொண்டு ஓடிவிட்டது. 

நடுக்காட்டில் குழந்தைகளுடன் சிக்கிக்கொண்ட அவள் இங்கே புலி இருக்குமே என்று நடுங்கினாள். அருகிலிருந்த மரத்தின் கிளையில் குழந்தைகளுடன் அமர்ந்து கொண்டாள். 

சிறிது நேரத்தில் அங்கு புலி ஒன்று வருவதை பார்த்த அவள் அதனிடமிருந்து தப்பிப்பதற்காக இரண்டு குழந்தைகளின் தொடையிலும் அழுத்திக் கிள்ளி இருவரையும் அழ வைத்தாள். பின் குழந்தைகளே! அழாதீர்கள், இப்படி நீங்கள் அடம் பிடித்தால் நான் என்ன செய்வேன். 

நீங்கள் உண்பதற்கு ஆளுக்கொரு புலி பிடித்துக்கொடுத்தேன். இன்றும் அதே போல ஆளுக்கொரு புலி வேண்டும் என்கிறீர்களே. இந்தக் காட்டில் புலி இருக்கும். இன்று மாலைக்குள் நீங்கள் சாப்பிட ஆளுக்கொரு புலி தருகிறேன். அதுவரை பொறுமையாக இருங்கள், என்று உரத்த குரலில் சொன்னாள். 

இதைக்கேட்ட புலி நடுங்கி, ஒரே பாய்ச்சலாக அங்கிருந்து ஓட்டம் பிடித்தது. பயந்து ஓடும் புலியை வழியில் பார்த்த நரி காட்டுக்கு அரசே! ஏன் இப்படி ஓடுகிறீர்கள்? என்ன நடந்தது என்று கேட்டது. 

நரியே! நம் காட்டுக்கு ஒரு அரக்கி வந்துள்ளாள். இரண்டு குழந்தைகள் அவளிடம் உள்ளன. அந்தக் குழந்தைகள் உண்ண நாள்தோறும் ஆளுக்கொரு புலியைத் தருகிறாளாம். அதை கேட்டுத்தான் நான் ஓடிவந்தேன் என்றது. 

இதைக் கேட்ட நரியால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அவள் உங்களை ஏமாற்றி இருக்கிறாள். எங்கேயாவது மனிதக் குழந்தைகள் புலியைத் தின்னுமா? வாருங்கள், அவளையும் குழந்தைகளையும் கொன்று தின்போம் என்றது நரி. நான் அங்கு வர மாட்டேன், என்று உறுதியுடன் சொன்னது புலி. 

அவள் சாதாரண பெண்தான். நீங்கள் நம்பவில்லை என்றால் உங்கள் வாலையும் என் வாலையும் சேர்த்து முடிச்சுப் போடுவோம். பிறகு இருவரும் அங்கே சென்று பார்ப்போம். நம் இருவர் பசியும் தீர்ந்து விடும், என்றது நரி. நரி முன்னால் நடந்தது. புலி தயங்கித் தயங்கிப் பின்னால் வந்தது. 

மரத்தில் இருந்த அவள் நரியின் வாலும், புலியின் வாலும் ஒன்றாகக் கட்டிருப்பதை பார்த்து என்ன நடந்திருக்கும் என்பதை உணர்ந்தாள். கோபமான குரலில், நரியே! நான் உன்னிடம் என் குழந்தைகளுக்கு இரண்டு புலிகளை இழுத்து வரச்சொன்னால் நீ ஒரே ஒரு புலியுடன் வருகிறாய் எங்களை ஏமாற்ற நினைக்கிறாயா? புலியுடன் உன்னையும் கொன்று தின்கிறேன், என்று கத்தினாள். 

புலி பயந்துபோனது, நரியோ, புலியாரே! அவள் நம்மை ஏமாற்றுவதற்காக இப்படிப் பேசுகிறாள் என்றது. நரியே, என்னை ஏமாற்றி கூட்டிவந்து விட்டாயே என்று புலி திட்டியது. அதன்பிறகு வாலில் கட்டப்பட்டு இருந்த நரியை இழுத்துக்கொண்டு ஓடத்தொடங்கியது. 

வாலில் கட்டப்பட்டிருந்த நரி பாறை, மரம், முள்செடி போன்றவற்றில் மோதி படுகாயம் ஆனது. புலியோ எதைப் பற்றியும் சிந்திக்காமல் நரியை இழுத்துக்கொண்டு ஓடியது. வழியில் நரியின் வால் அறுந்து மயக்கம் அடைந்து விழுந்தது. புலி எங்கோ, ஓடியே போனது. பிறகு அந்தப் பெண் தன் குழந்தைகளுடன் பாதுகாப்பாகக் கணவனின் ஊருக்குச் சென்றாள். 

நீதி :
எந்த ஒரு நிலையிலும் தைரியத்தை கைவிடக்கூடாது.

இன்றைய செய்திகள்

02.12.22

 மேற்கு தொடர்ச்சி மலையில் செயற்கை அருவிகள் உருவாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சுற்றுலாத் துறை இயக்குநர் தலைமையில் 10 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்ற கிளையில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

* பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் குளிர்கால ராபி பருவப் பயிர்களை காப்பீடு செய்யுமாறு தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை தெரிவித்துள்ளது.

* சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 30 ஆயிரம் சதுரஅடிபரப்பில் தகவல் தொழில்நுட்ப மையம் அமைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

* தமிழக அரசு போக்குவரத்து கழகங்களுக்கு 1,000 புதிய பேருந்துகளை வாங்குவதற்காக ரூ.420 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

* ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலுடன் போர் விமானம் இணைப்பு: கடற்படை தளபதி ஹரி குமார் தகவல்.

*பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் குளிர்கால ராபி பருவப் பயிர்களை காப்பீடு செய்யுமாறு தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை தெரிவித்துள்ளது.

*சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 30 ஆயிரம் சதுரஅடிபரப்பில் தகவல் தொழில்நுட்ப மையம் அமைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

*தமிழக அரசு போக்குவரத்து கழகங்களுக்கு 1,000 புதிய பேருந்துகளை வாங்குவதற்காக ரூ.420 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

*ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலுடன் போர் விமானம் இணைப்பு: கடற்படை தளபதி ஹரி குமார் தகவல்.

*இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ )  கிரிக்கெட் ஆலோசனைக் குழுவை நியமித்துள்ளது .

*3-வது ஹாக்கி போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளித்து இந்தியா முதல் வெற்றியை பதிவு செய்தது.

Today's Headlines

* The TN government informed the High court that a 10 people group is organised under the director of Tourism to investigate and punish the people who made artificial falls in western ghats

* In PM's Crop Insurance scheme farmers are requested to insure the winter crops by TN Agricultural and Farmers Welfare Department

* In Chennai Anna University the TN government planned to construct a Information Technology Center - by Information and Technology Minister Mano Thangaraj. 

* To buy 1,000 new buses for TN Transport Corporation government issued a GO to allocate 420 crore rupees. 

* In INS Vikrant Ship a war craft is joined information by Naval Marshall Hari Kumar

* The Board of Control for Cricket in India appointed a council for Cricket. 

* In 3rd Hockey tournament India won its first victory by that gave a shock wave to Australia
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்