Sunday, December 12, 2021

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 13.12.21

  திருக்குறள் :

பால்: அறத்துப்பால் 

இயல்: துறவறவியல் 

அதிகாரம்: நிலையாமை 

குறள் எண்: 333 

குறள்:
அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால் 
அற்குப ஆங்கே செயல். 

பொருள்: செல்வம் நிலையில்லாதது. ஆகவே,செல்வம் உள்ளபோதே நிலையான அறச் செயல்களைச் செய்தல் வேண்டும்.

பழமொழி :

As is the father, so is the son


தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை

இரண்டொழுக்க பண்புகள் :

1. பொய்யுரைத்தால் புகழும் கெடும் எனவே ஒரு போதும் பொய் கூற மாட்டேன்.

2. சோம்பினால் வளர்ச்சி கெடும் எனவே எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க முயல்வேன்.

பொன்மொழி :

சோதனைகளை சாதனையாக்க
முயல்பவனுக்கே வேதனைகளும்
போதனைகளாக அமையும்.
சோதனைகளை கண்டு
பயந்து துவண்டு விடாமல்
அடுத்த அடியை
எடுத்து வையுங்கள்.____ அன்னை தெரேசா


பொது அறிவு :

1. பென்குயின்கள் வாழாத துருவப்பகுதி எது? 

வட துருவம். 

2 . உலக பென்குயின் தினம் எப்போது? 

ஏப்ரல் 25.

English words & meanings :

Adorable - very cute, அழகிய, 

in a nutshell - describing things in very few words, நிகழ்வுகளை ஒரு சில வார்த்தைகளில் கூறுபவர்

ஆரோக்ய வாழ்வு


கொய்யாவில் உள்ள ஆண்டியாக்ஸிடண்ட்கள் கட்டி
வளர்ச்சிகளை தடுக்கிறது. இது பெருங்குடல், மார்பகம்,
வாய் குழி மற்றும் நுரையீரல் புற்று நோய்களில் இருந்து
பாதுகாக்க பயனுள்ளதாக இருக்கும்.


கணினி யுகம் :

Alt+0174 - ®

 Alt+0128 - €  (Euro currency)

டிசம்பர் 13

நா.பார்த்தசாரதி அவர்களின் நினைவுநாள்




நா.பார்த்தசாரதி (டிசம்பர் 181932 - டிசம்பர் 131987) புகழ் பெற்ற தமிழ் நெடுங்கதை எழுத்தாளர் ஆவார். தீரன், அரவிந்தன், மணிவண்ணன், பொன்முடி, வளவன், கடலழகன், இளம்பூரணன், செங்குளம் வீரசிங்கக் கவிராயர் ஆகிய புனைப்பெயர்களிலும் அறியப்படும் இவர் தீபம் என்ற இலக்கிய இதழை நடத்தி வந்ததால் 'தீபம்' நா.பார்த்தசாரதி என்றும் அழைக்கப்படுகிறார். பெரும்பாலும் இவருடைய கதைகள் சமகால சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்கப் போராடும் கொள்கைப் பிடிப்புள்ள கதைமாந்தர்களைப் பற்றியதாய் அமைந்துள்ளது. இவருடைய புகழ் பெற்ற நெடுங்கதைகளான குறிஞ்சி மலர் மற்றும் பொன் விலங்கு தொலைக்காட்சித் தொடர்களாகவும் வந்துள்ளன. சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.இவர் எழுதிய "சாயங்கால மேகங்கள்" எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 1983 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நாவல் வகைப்பாட்டில் முதல் பரிசு பெற்றிருக்கிறது. இவர் 93 நூல்களை எழுதியிருக்கிறார்.[1]


நீதிக்கதை


சிலந்தி கற்றுக் கொடுத்த பாடம்

போரில் தோல்வி அடைந்த அரசன் ஒருவன் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடி ஒளிந்தான். தோல்வியுற்ற அரசனை கொலை செய்யுமாறு அவனை வென்ற அரசன் கட்டளை பிறப்பித்தான். அதனால் அவன் காட்டிற்குள் சென்று ஒரு குகையில் ஒளிந்து கொண்டான். 

ஒருநாள் சோம்பலுடன் அரசன் குகையில் படுத்திருந்தான். அந்தக் குகையினுள் ஒரு சிலந்தி வாழ்ந்து வந்தது. குகையின் ஒரு பகுதியில் ஒரு வலையைப் பின்ன முயற்சி செய்து கொண்டிருந்ததைப் பார்த்தான். சிலந்தி சுவரின் மீது ஊர்ந்து செல்லும் போது வலையில் பின்னிய நூல் அறுந்து கீழே விழுந்து விட்டது. 

இவ்வாறு பலமுறை நடந்தது. ஆனாலும், அது தன் முயற்சியைக் கடைவிடாமல் மறுபடியும் மறுபடியும் முயன்றது. கடைசியில் வெற்றிகரமாக வலையைப் பின்னி முடித்தது. அரசன் இச்சிறு சிலந்தியே பல முறை தோல்வியடைந்தும் தன் முயற்சியைக் கைவிடவில்லை. நான் ஏன் சோம்பலடைய வேண்டும்?

நானும் மீண்டும் முயற்சி செய்வேன் என்று மனதிற்குள் எண்ணினான். உடனே அரசன் தான் வசித்த காட்டிற்கு வெளியே சென்று தன் நம்பிக்கையான ஆட்களைச் சந்தித்தான். 

தன் நாட்டில் உள்ள வீரர்களை ஒன்று சேர்த்து பலம் மிகுந்த ஒரு படையை உருவாக்கினான். தன் எதிரிகளுடன் தீவிரமாகப் போர் புரிந்தான். கடைசியில் போரில் வெற்றியும் பெற்றான். அதனால் தன் அரசைத் திரும்பப் பெற்றான். தனக்கு அறிவுரை போதித்த அந்த சிலந்தியை அவன் என்றுமே மறக்கவில்லை. 

நீதி :
தொடர்ந்து முயற்சி செய்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

இன்றைய செய்திகள்

13.12.21


◆விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் பாகங்கள் சேகரிக்கும் பணி தீவிரம்: நஞ்சப்ப சத்திரம் பகுதிக்கு சீல்.

◆தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

◆பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு; தொலைதூரங்களில் தேர்வு மையம் ஒதுக்கீடு: தேர்வெழுத முடியாமல் விண்ணப்பதாரர்கள் பாதிப்பு.

◆ஒமைக்ரான் வைரஸை 2 மணிநேரத்தில் கண்டறியும் புதிய பரிசோதனை  கருவி: ஐசிஎம்ஆர் ஆய்வாளர்கள் வடிவமைப்பு.

◆விண்வெளி சுற்றுலாவின் 3-வது குழு பயணத்தை நிறைவு செய்தது ஜெப் பெசோஸ் நிறுவனம்.

◆ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5 ஆக பதிவு.

பிக்பாஷ் 20 ஓவர் கிரிக்கெட்: மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி வெற்றி.

◆ஆசிய துடுப்புப்படகு போட்டியில் இந்தியா இரண்டு தங்கம் மற்றும் நான்கு வெள்ளிப் பதக்கங்கள் வென்றுள்ளது.

◆பிரீமியர் லீக் கால்பந்து : மான்செஸ்டர் யுனைடெட் அணி வெற்றி.

Today's Headlines

 🌸 The work to collect parts of the crashed helicopter is speed up: The area of Nanjappa Chaththiram is Sealed. 

🌸 Chennai: The Chennai Meteorological Department has forecast moderate rains for five days in Tamil Nadu.

 🌸Polytechnic Lecturer Selection;  Examination Centers are allocated in far away places.  Applicants are not able to appear for the examination.

🌸 New testing tool to detect omegran virus in 2 hours: Designed by ICMR researchers.

 🌸 Jep Bezos completes 3rd group voyage of space travel.

 🌸Earthquake in Japan:Register as 5 on the Richter scale.

 🌸Big Bash 20 Over Cricket: Melbourne Stars won

 🌸India won two gold and four silver medals at the Asian paddle boat Championships.

 🌸Premier League football: Manchester United won .

 Prepared by

Covai women ICT_போதிமரம்

Friday, December 10, 2021

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 11.12.21

திருக்குறள் :

பால்: அறத்துப்பால்

இயல்: பாயிரம்

அதிகாரம்: வான்சிறப்பு

குறள் எண்:11
குறள்: வான் நின்று உலகம் வழங்கி வருதலால்
தான் அமிழ்தம் என்றுணரற்பாற்று.

பொருள்: மழைபருவம் தவறாது பெய்வதனால் தான் உலகம்
வளத்தோடு வாழ்கின்றது. எனவே அதை அமுதத்திற்கு
நிகராக என்ன வேண்டும்.

பழமொழி :

You may know by a hand full of the whole sack


ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்

இரண்டொழுக்க பண்புகள் :

1. ஓதாத கல்வி கெடும், ஒழுக்கமில்லா வாழ்வு கெடும். எனவே ஆசிரியர் கொடுக்கும் கல்வி பயின்று ஆசிரியரும் பெற்றோரும் கற்றுக் கொடுக்கும் ஒழுக்க வாழ்வினை வாழ்வேன். 

2. பணத்தால் அமைதி கெடும், கடன் பட்டால் வாழ்வு கெடும் எனவே பண ஆசை இல்லாமல் சரியான முறையில் செலவு செய்து வாழ்வேன்.

பொன்மொழி :

தன்னம்பிக்கை மிக தேவையான ஒன்றாகும். நம் வாழ்வில் என்னதான் பல ஏமாற்றங்கள், தோல்விகள், சோகங்களை எதிர்கொண்டாலும் எந்த சூழ்நிலையிலும் தன்னமிக்கையை இழக்க கூடாது......அம்பேத்கர்

பொது அறிவு :

1. புல்லாங்குழலில் எத்தனை துளைகள் உள்ளன? 

9 துளைகள். 

2 .தமிழக கடற்கரையின் மொத்த நீளம் எவ்வளவு? 

1076 கி.மீ.

English words & meanings :

Cat nap - a small sleep in the afternoon, கோழித் தூக்கம், 

I am spent - I am very tired, அதிக சோர்பு

ஆரோக்ய வாழ்வு :

பாய் உடல் சூட்டை உள்வாங்க கூடிய தன்மையுடையது.

பிறந்த குழந்தையை பாயில் உறங்க வைப்பதால் கழுத்தில் சுளுக்கு பிடிக்காது. குழந்தையின் முதுகெலும்பு சீர்படும்.

கணினி யுகம் :

Ctrl + 1 - Single-space lines. 

Ctrl + 2 - Double-space lines

டிசம்பர் 11


சுப்பிரமணிய பாரதி  அவர்களின் பிறந்தநாள்



சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, திசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921) கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர்.

பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.[2] தமிழ்தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். எட்டப்ப நாயக்கர் மன்னர் இவருடைய கவித்திறனை மெச்சி, கலைமகள் எனப் பாெருள்படும் பாரதி என்ற பட்டம் வழங்கினார். பாரதியாரின் நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949-ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமை ஆக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும்.[3] இவரை சிந்துக்குத் தந்தைசெந்தமிழ்த் தேனீபுதிய அறம் பாட வந்த அறிஞர்மறம் பாட வந்த மறவன் என்றெல்லாம் பாரதிதாசன் இவரைப் புகழ்ந்துள்ளார். இவர் இந்தியாவிஜயா முதலான இதழ்களை நடத்தி, விடுதலைப் போருக்கு வித்திட்டவர்.

பாரதி, இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். பால கங்காதர திலகர்உ. வே. சாமிநாதையர்வ. உ. சிதம்பரம் பிள்ளை, மகான் அரவிந்தர் முதலியோர் இவரின் சமகாலத்தைய மனிதர்கள் ஆவர். இவர் விவேகானந்தரின் சீடரான, சகோதரி நிவேதிதையைத் தமது குருவாகக் கருதினார்.


பிரணப் குமார் முகர்ஜி அவர்களின் பிறந்தநாள்





பிரணப் குமார் முகர்ஜி (Pranab Mukherjeeவங்காளপ্রণব কুমার মুখার্জী, 11 திசம்பர் 1935 - 31 ஆகத்து 2020) (சுருக்கமாக பிரணாப் முகர்ஜி), இந்திய அரசியல்வாதி. 13 ஆவது இந்தியக் குடியரசுத் தலைவராக 2012 முதல் 2017 வரை பதவி வகித்தவர். மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மூத்த காங்கிரசு அரசியல்வாதியான பிரணப், குடியரசுத் தலைவர் ஆகும் முன்னர் மன்மோகன் சிங் அரசில் நிதி அமைச்சர் ஆக இருந்தார்.2012ஆம் ஆண்டு சூலையில் நடந்த இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில் பதியப்பட்ட 10,29,750 வாக்குகளில் 69.3% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.[5] சூலை 25, 2012 அன்று இந்தியக் குடியரசின் பதினான்காவது குடியரசுத் தலைவராகப் (பதின்மூன்றாவது நபராக) பொறுப்பேற்றார்.


பன்னாட்டு மலை நாள்


பன்னாட்டு மலை நாள் (International Mountain Day) ஆண்டுதோறும் டிசம்பர் 11 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. பன்னாட்டு மலைகள் நாளை ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு முன்னின்று நடத்து வருகிறது.[1]

மலைகளைப் பாதுகாக்கவும், மலைப்பிரதேசங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தவும், மலையின் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், 2002ஆம் ஆண்டில் மலைகளின் கூட்டாளி என்கிற அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு உலகம் முழுவதும் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. இவ்வமைப்பின் முயற்சியால் 2002 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அவை டிசம்பர் 11 ஆம் நாளை பன்னாட்டு மலைகள் நாளாக அறிவித்தது.[2]

நீதிக்கதை

ஆப்பைப் பிடுங்கிய குரங்கு

மகத நாட்டில் சிவா எனும் தச்சன் வாழ்ந்து வந்தான். அவன் அவ்வூர் கோயில் வேலைக்காக மரங்களை அறுத்து கொண்டிருந்தான். 

மாலை வேளை நெருங்கவும் சிவா தான் பாதியில் அறுத்து கொண்டிருந்த மரத்தில் ஆப்பு ஒன்றை சொருகி வைத்து விட்டு வீட்டிற்கு சென்றான். 

அருகில் இருந்த மரத்தில் ஏராளமான குரங்குகள் விளையாடிக் கொண்டிருந்தன. அவற்றில் ஒரு குரங்கு சிவா பாதி அறுத்து விட்டு சென்ற மரத்தின் மீது விளையாடியது. 

சும்மா இல்லாமல் அம்மரத்தின் மீதே அமர்ந்து கொண்டு அங்கே சொருகி வைத்திருந்த ஆப்பை அசைத்து ஆட்டிப் பிடுங்கியது. 

அச்சமயத்தில் அக்குரங்கின் கால்கள் ஆப்பு வைத்திருந்த பிளவில் மாட்டிக் கொண்டது. இரவு நெருங்கும் நேரம் ஆகவே ஒருவரும் உதவி செய்ய இல்லாமல் மாட்டிகொண்டு இறந்துபோனது. 

நீதி :
தனக்கு தகாத காரியங்களை செய்தல் ஆகாது!

இன்றைய செய்திகள்

11.12.21

★தமிழக தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மூலம் ஏற்றுமதி, இறக்குமதி வழிமுறைகள், சட்டதிட்டங்கள் குறித்த இணையவழிக் கருத்தரங்கப் பயிற்சி நடைபெறுவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

★தமிழ்நாட்டுக்கான கல்விக் கொள்கை விரைவில் உருவாக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

★தமிழில் பெயர் எழுதும் போது முன் எழுத்தையும் தமிழிலேயே எழுதும் நடைமுறையைப் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு ஆவணங்களில் கொண்டுவர அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

★உ.பி.யில் ககாரா, சரயு, ரப்தி, பங்கங்கா ரோகினி ஆகிய ஐந்து நதிகளை இணைக்கும் பிரமாண்ட நீர்பாசன திட்டத்தை பிரதமர் இன்று தொடங்கி வைக்கிறார்.

★ஒமைக்ரான் பரவல்அச்சம்: சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்துக்கு தடை நீட்டிப்பு: டிஜிசிஏ அறிவிப்பு.

★ஒமைக்ரானை அழிக்கும் தடுப்பூசி: ஃபைஸர்-பயோ என்டெக் ஆய்வில் நம்பிக்கையூட்டும் தகவல்.

★நிலவுக்கு செல்லும் நாசா திட்டத்துக்காக இந்திய வம்சாவளி மருத்துவர் உட்பட 10 பேர் தேர்வு.

★பிக்பாஷ் 20 ஓவர் கிரிக்கெட்: மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி வெற்றி.

★விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மராட்டிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் சத்தீஷ்கரை வென்றது.


Today's Headlines

 🌸 The Government of Tamil Nadu has announced that an online seminar on Export, Import Procedures, and Bills will be conducted by the Tamil Nadu Entrepreneurship Development and Innovation Agency.

 🌸Education policy for Tamil Nadu will be formulated soon, said the Minister of School Education Anbil Mages Poyamozhi.

 🌸The government issued an order to write the initials also in Tamil while signing in school, college, and government documents.

 🌸 The Prime Minister today inaugurated a massive irrigation project connecting five rivers in UP, namely Kakara, Sarayu, Rapti, and Panganga Rohini.

 🌸Omegron spread fear: Extension of the ban on international passenger air traffic: DGCA announcement.

 🌸 Omegran Destroyer Vaccine: Promising Information in the Pfizer-Bio Endech Study.

 🌸 10 people, including a doctor of Indian descent, have been selected for the NASA mission to the moon.

 🌸Big Bash 20 Over Cricket: Melbourne Stars win.

 🌸Maratha team beat Chhattisgarh by 8 wickets in Vijay Hazare Cup ODI.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Thursday, December 9, 2021

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 10.12.21

திருக்குறள் :

பால்: அறத்துப்பால்

இயல்: பாயிரம்

அதிகாரம்: கடவுள் வாழ்த்து

குறள் எண்: 2

கற்றதனா லாயபயனென் கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

பொருள்: கடவுளின் புனிதமான திருவடிகளை வணங்காதவன்,
கற்ற கல்வியினால் ஒரு பயனும் இல்லை.

பழமொழி :

Yourself first, others afterward.


 தனக்கு மிஞ்சித் தான் தானமும் தருமமும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. ஓதாத கல்வி கெடும், ஒழுக்கமில்லா வாழ்வு கெடும். எனவே ஆசிரியர் கொடுக்கும் கல்வி பயின்று ஆசிரியரும் பெற்றோரும் கற்றுக் கொடுக்கும் ஒழுக்க வாழ்வினை வாழ்வேன். 

2. பணத்தால் அமைதி கெடும், கடன் பட்டால் வாழ்வு கெடும் எனவே பண ஆசை இல்லாமல் சரியான முறையில் செலவு செய்து வாழ்வேன்.

பொன்மொழி :

குறிக்கோளை மட்டும் கருதாமல், அதை அடையும் வழியையும் சிந்திக்கவேண்டும். இதில் தான் வெற்றியின் ரகசியமே அடங்கி கிடக்கிறது.____விவேகானந்தர்

பொது அறிவு :

1. உலகின் மிகவும் நீளமான நதி எது? 

நைல் நதி. 

2. பகவத் கீதையில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன? 

18 அதிகாரங்கள்.

English words & meanings :

You are jammy - you are lucky, அதிர்ஷ்டமான நபர்,

 she is loaded - she is having lots of money, அதிகம் பணம் வைத்து இருப்பவர்

ஆரோக்ய வாழ்வு :

இளம் சூடான நீரில் 3 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை கலந்து அதில் கால்களை 10 முதல் 15 நிமிடங்கள் வரை ஊற வைக்க வேண்டும். பின்பு பாதங்களில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்கிவிட்டு மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். இதன் மூலம் பாதங்களில் ரத்த ஓட்டம் சீராகி வெடிப்பு மறையும்.

கணினி யுகம் :

Ctrl + ] - Increase selected font +1. 

Ctrl + [ - Decrease selected font -1

டிசம்பர் 10

மனித உரிமைகள் நாள்




ஐக்கிய நாடுகள் அவை 1948 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் நாள் உலக மனித உரிமைப் பேரறிக்கை என உலக மக்கள் அனைவருக்குமான வாழ்வுரிமைகளை பிரகடனப்படுத்தியது. அந்த நாளைக் குறிக்கும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 10 ஆம் தேதி உலக நாடுகள் அனைத்தாலும் ”மனித உரிமை நாள்” கொண்டாடப்படுகிறது.

1948 டிசம்பர் 10ஆம் நாள் ஒன்றுக்கூடிய ஐக்கிய நாடுகளின் பொது அவையால் அனைத்துலக மனித உரிமைகள் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டதை பெருமைப்படுத்தும் பொருட்டு இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஐ.நா.வின் பொது அவை நாடுகளுக்கும் தன்னார்வ நிறுவனங்களுக்கும் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க 1950 முதல், டிசம்பர் 10 ஆம் நாள் மனித உரிமைகள் நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் அவையின் நிகழ்வுகளில் முதன்மையான இந்நாளில், நியூயார்கில் அமைந்துள்ள அதன் தலைமைப்பீடத்தில் முக்கிய நிகழ்வுகள் இடம்பெறுவது வழக்கமாகும். இந்நாளில் ஐந்தாண்டுக்கு ஒரு முறை வழங்கப்படும் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் பரிசு வழங்கப்படும். மேலும் பல அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களும் இந்நாளில் பல முக்கிய நிகழ்வுகளை நடத்துவது வழக்கமாகும்.


நீதிக்கதை

முரசு சத்தம்

ஒரு நாள் நரி ஒன்று மிகுந்த பசியோடு இருந்தது. போர்க்களத்துப் பக்கமாக சென்ற போது திடீரென பயங்கர சத்தம் ஒன்று கேட்டது. ஏதோ ஒரு பெரிய விலங்கிற்கு நாம் இன்று இரையாகப் போகிறோம் என்று எண்ணி பயந்து கொண்டிருந்தது. ஆனால் சற்று நேரம் கழித்து அருகில் இருந்த ஒரு பாறையின் மேல் ஏறி சுற்றும் முற்றும் பார்த்தது. 

பிறகு தான் தெரிந்தது அது ஒரு போர் முரசு என்று. அதன் அருகில் மெல்ல சென்று சுற்றிப் பார்த்தது. பசியில் இருந்த நரி அந்த முரசினுள் இருந்து சத்தம் வருகிறது என்பதை அறிந்து கொண்டது. அந்த முரசினுள் ஏதோ ஒரு விலங்கு உள்ளே இருந்து கொண்டு தான் ஒலி எழுப்புகிறது என்று எண்ணி தன் கூரிய பற்கள் மற்றும் நகங்களை கொண்டு அம்முரசினை கிழித்து உள்ளே இருக்கும் மிருகத்தினை தின்ன எண்ணியது. உள்ளே சென்று பார்த்தால் முரசுக்குள் ஒன்றும் இல்லை. ஏமாற்றம் அடைந்த நரி உடல் சோர்வால் மயக்கமுற்று கீழே விழுந்தது. 

நீதி :
ஆசையே துன்பத்திற்குக் காரணம்.

இன்றைய செய்திகள்

10.12.21

★குன்னூரில் இருந்து சூலூர் விமானப்படைதளத்துக்கு ஆம்புலன்ஸ்களில் எடுத்துவரப்பட்ட முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 13 பேரின் உடல்களுக்கு வழிநெடுகிலும் திரளான மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.

★முப்படைத் தலைமைத் தளபதி விபத்தில் மரணமடைந்ததை அடுத்து ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியதற்கான காரணங்களை ஆராய தடயவியல் குழு குன்னூர் வருகை தந்துள்ளது.

★தேசியக் கல்வி கொள்கையில் உள்ள திட்டங்களில் நல்லவைகள் மட்டும் எடுத்துக் கொள்ளப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

★ஆசியா பசிபிக் பிராந்தியத்தில் அதிகாரம் மிக்க நாடுகளில் இந்தியாவுக்கு 4-ம் இடம்.

★குழந்தைகள் முன்னேற்றத்தில் கரோனா 75 ஆண்டுகளில் இல்லாத பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது: யுனிசெப்.

★சாம்பியன் லீக் கால்பந்து : மான்செஸ்டர் யுனைடெட் - யங் பாய்ஸ் அணிகள் மோதிய ஆட்டம் 'டிரா'.

★விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட்: தமிழக அணி வெற்றி.


Today's Headlines

 ★ A large number of people gathered along the way to pay their homage to the bodies of 13 people, including Commander-in-Chief of the 3rd Brigade Bipin Rawat,  brought in ambulances from Coonoor to Sulur Air Force Base.

 ★ A forensic team has visited Coonoor to investigate the cause of the crash of the military plane following the death of the Commander-in-Chief.

 ★ Minister Anbil Mages has said that only the good schemes will be taken from the National Education Policy.

 ★ India is the 4th powerful country in the Asia Pacific region.

 ★ Corona causes a setback in child development never seen in the period of 75 years.

 ★ Champions League Football: Manchester United - Young Boys clash clash 'Draw'.

 ★ Vijay Hazare Cup ODI Cricket: Tamil Nadu team wins.
 Prepared by

Covai women ICT_போதிமரம்